வண்டியை விட்டு இறங்கும்போதே அதிர்ச்சி. அத்தனை படிகள். மருத்துவ சாலை மாடியில் இருந்தது. பையர் என்னிடம் டாக்டர் சொல்லலையானு கேட்க நான் திரு திரு. இதை அவர் சொன்னதாக நினைவில் இல்லை. வந்தாச்சு, நான் மட்டும் மேலே போய்க் கேட்டுட்டு வரேன்னு பையர் போனார். டாக்டர் அவரிடம் நான் தான் அவங்களை வர வேண்டாம்னு சொல்லி இருந்தேனே எனக் கேட்கப் பையர் அவங்க சரியாப் புரிஞ்சுக்கலைனு சொல்லி இருக்கார். சரி கீழே வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு மருத்துவர் கீழே வந்தார். அங்கிருந்த நரசை ஒரு நாற்காலி கொண்டு வந்து கீழே போடச் சொல்லிட்டு மருத்துவர் என்னை அதில் உட்காரச் சொல்லிட்டுப் பார்த்தார்.. ஒண்ணும் சொல்லலை. பையர் பின் தொடர மேலே சென்றார். மேலே போனதும் ஒரு வாரத்துக்கான மாத்திரைகள் நான்கு விதங்கள் எழுதிட்டுக் கூடவே பத்தாவது க்ராஸில் இருக்கும் ஸ்கேன் சென்டருக்குப் போய் ஒரு ஸ்கேன் எடுக்கச் சொல்லிக் கொண்டு காட்டச் சொல்லி இருக்கார். பையர் கீழே வந்து வண்டி பிடித்துக் கொண்டு என்னையும் மெதுவாக வண்டியில் ஏற்றிக் கொண்டு ஸ்கேன் சென்டருக்குப் போனோம். அங்கே கூட்டமெல்லாம் இல்லை. போன உடனே நகைகளைக் கழட்டிட்டு ஸ்கேனுக்கு வரச் சொல்லிட்டாங்க. ஸ்கேன் எடுத்து முடித்ததும் சிறிது நேரத்தில் ரிப்போர்ட் கொடுக்க மறுபடி டாக்டரிடம் போனோம். நான் வண்டியிலேயே உட்கார்ந்திருக்கப் பையர் மட்டும் மேலே சென்று டாக்டரிடம் காட்டிவிட்டுக் கேட்டுக் கொண்டு வந்தார். அவர் சொன்னது விஸ்டம் பல் தான் பிரச்னை அதை எடுப்பது கஷ்டம், முடிஞ்சால் எடுக்கலாம் அல்லது ரூட் கானல் போட்டுக் காப் வைக்கலாம்னு சொல்லி இருக்கார். சரினு மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தோம்.
சாயந்;திரமெல்லாம் ஒண்ணுமே இல்லை. ரன்க்ஸுக்கு தோசை கூட வார்த்துக் கொடுத்தேன். நானும் சாப்பிட்டுவிட்டு ஏழேகால் மணிக்கெல்லாம் மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு படுத்தால் படுக்கை கொள்ளவில்லை. எழுவதும் உடகாருவதும் படுப்பதுமாக அவதிப் பட்டேன். திடீரென வலி அதிகமாகிக் கண்ணுக்கும் கீழிருந்து தாடை வரை வீக்கம் பெரிசாக ஆகி ஒரு ஆப்பிள் பழம் அளவுக்குச் சிவந்து தொங்கியது. உதடெல்லாம் கோணிக்கொண்டு விட்டது. முகப் பக்கவாதமோ எனச் சோதனைகள் செய்து பார்த்தேன். வாயெல்லாம் நேராகவே இருந்தது. எதிர் வீட்டு மாமி சிஎம்சியில் ஸ்டாஃப் நர்சாக இருந்தவ்ர். அவரிடம் காட்டினேன். அவரும் முகப்பக்கவாதமோ, பொன்னுக்கு வீங்கி என்னும் மம்ப்ஸோ இல்லைனு சொல்லிட்டார். அதுக்குள்ளே பையர் வந்து என்ன ஆச்சுனு கேட்டுவிட்டு முகத்தைப் பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்து போய் விட்டார். மணியோ ஒன்பதுக்கு மேல் ஆகிக் கொண்டிருந்தது. வலி பொறுக்க முடியலை, த்லையைக் கீழேயே போட முடியலை. நான் வழக்கமாய் மருந்துகள் வாங்கும் மெடிகல் ஷாப்காரரான பார்மசிஸ்டை அழைத்து நிலைமையைச் சொன்னேன். அவர் உடனே நான் வலி குறைந்து ;தூங்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வரேன், உங்க பையரைக் கீழே செக்யூரிடி இருக்கும் இடத்துக்கு வரச் சொல்லுங்கனு சொன்னார். பையர் கிளம்புவதற்குள்ளாக அவரே வந்துட்டு என்னையும் பார்த்துட்டு மாத்திரைகளைக் கொடுத்துட்டு பல் மருத்துவர் கொடுத்திருக்கும் மாத்திரைகளில் சிலவற்றைச் சாப்பிடாதே என்றார்.
அவர் கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு படுத்தேன், அரைமணியில் வலி குறைய ஆரம்பித்தது. ஆனால் வீக்கம் வடியலை. என்றாலும் தூங்கினேன்னு தான் சொல்லணும் காலையில் எல்லோரும் பார்த்துட்டு வேறே மருத்துவர் கிட்டேப் போகச் சொல்ல எங்க வீட்டில் உதவிகள் செய்யும் பெண் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தின் அருகேயே ஒரு மருத்துவமனையைச் சொன்னார். சரினு சாப்பாடு வந்ததும் ரங்க்ஸைச் சாப்பிடச் சொல்லிட்டு நாங்க மருத்துவமனை போனோம். அரை மணி நேரத்தில் மருத்துவர் பார்க்க அழைக்க, அவர் ஸ்கேன் ரிப்போர்ட்டையும் என்னையும் மாற்றி மாற்றிப் பல்வேறு கோணங்களில் பார்த்துவிட்டு என்ன நடந்ததுனு கேட்டார். நான் ஏற்கெனவே ஒரு பல் உடைந்திருந்ததையும் உடைந்த பாகத்தை ஒரு மருத்துவர் எடுத்துட்டார்னும் சொன்னார். உடனே இந்த மருத்துவர் அதில் தான் பிரச்னையே. அந்தப் பல் ஏற்கெனவே இன்ஃபெக்ஷன் ஆகி உடைஞ்சிருக்கு. ஆகவே மொத்தப் பல்லையும் எடுத்திருக்கணும் அப்படி எடுக்காததால் பக்கத்தில் உள்ள பல்லும்/பற்களும் பாதிப்படைஞ்சிருக்குனு சொல்லிட்டு விஸ்டம் பல்லைத் தவிர்த்து மற்ற இரு பற்களை உடனே எடுக்கணும்னு சொல்லிட்டு அவரே செவ்வாய்க்கிழமை சாயங்காலமா வாங்கனு சொல்லிட்டார். எனக்குச் செவ்வாய்க்கிழமை ஒத்துக்கொள்ளாதே என்னும் கவலையில் நான் புதனன்று வரேனேனு சொன்னதைக் காதிலேயே போட்டுக்கலை. செவ்வாய்க்கிழமை சாயங்காலம் ஐந்தரைக்கு வந்துடுங்கனு சொல்லிட்டார்.
வலி வீக்கம் குறைய இந்தப் புது மருத்துவர் கொடுத்த மாத்திரைகளைப் போட்டுக் கொண்டு வந்தேன்,. வலி குறைந்தாலும் வீக்கம் கொஞ்சம் இருக்கத் தான் செய்தது. செவ்வாயன்று காலையிலிருந்தே திக் திக், திக் தான். மதியம் நெருங்க, நெருங்கக் கவலையும் பயமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதற்கு முன்னால் பல்லைப் பிடுங்கிக் கொண்டிருக்கேன் என்றாலும் அவை எல்லாம் ஆடிய பற்கள். இதுவோ ஸ்திரமாக கெட்டியாக ஊன்றி இருக்கு. வலி எப்படி இருக்குமோனு கவலை. ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கெல்லாம் கிளம்பிப் போனோம். அரை மணி நேரத்தில் மருத்துவர் அழைத்துப் பல் பிடுங்கும் ஆபரேஷன் தியேட்டரில் உட்கார வைத்து விட்டு மறுபடி பற்களை ஆய்வு செய்தார்,. விஸ்டம் பல்லுக்கு முந்தைய பற்களையே பிடுங்கணும்னு மறுபடி காட்டினார். பின்னர் என்னையும் சம்மதம் கேட்டுக் கொண்டு ரூட் கானல் வேண்டாம் என நான் உறுதியாகச் சொன்னதும் ஈறுகள் மரத்துப் போக ஊசியைச் செலுத்தினார். அந்த வீக்கம் இருக்கும் ஈறிலேயே ஊசியைச் செலுத்தியதால் அப்போவே வலி தாங்கலை. டாக்டர் ஒரு மாதிரி பேசி என்னைச் சமாதானம் செய்து கொண்டு ஊசியைப்போட்டுவிட்டுச் சற்று நேரம் உட்கார்ந்திருக்கும்படி சொல்லிப் போனார்.
இதற்கு நடுவில் நர்ஸ் வந்து என்னென்ன மாத்திரைகள் சாப்பிடுகிறேன் எனக் கேட்க நினைவிலிருந்தவற்றைச் சொன்னேன். மருத்துவர் முக்கியமாய் ஆர்த்தோ பிரச்னைக்கு என்ன சாப்பிடறேன்னு சொல்லச் சொன்னார். நினைவில் இருந்தவற்றைச் சொன்னேன். பின்னர் பையர் வீட்டில் ரங்க்ஸைக் கூப்பிட்டு என்னோட மருந்துகள் லிஸ்டை அனுப்பச் சொல்ல அவரும் மருமகள் உதவியோடு அதை அனுப்பி வைத்தார். அதைப் பார்த்த மருத்துவர் முன்னாடியே பார்த்திருக்கணும் என்றார். யாரும் என்னிடம் கேட்கலை என்றேன். இதுக்குள்ளே மரத்துப் போயிருக்கும்னு பல்லைப் பிடுங்க ஆயத்தமானார். என்ன செய்யப் போறோம் என்பதை மறுபடி ஒரு தரம் எனக்குச் சொல்லிட்டுப் பல்லைப் பிடுங்க ஆரம்பித்தார். அதான் தெரியும். அடுத்த நிமிடம் நான் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எப்படியோ ஒரு பல்லைப் பிடுங்கிட்டார். என்றாலும் திரும்ப ஒரு தரம் ஊசி செலுத்தப்பட்டிருந்தது, இப்போது மூன்றாவது முறையாக மறுபடி கதறக் கதற ஊசி செலுத்திட்டு இன்னொரு பல்லைப் பிடுங்க ஆரம்பித்தார். லேசில் வருவேனா என்றது அது. ஆழமாக வேரூன்றி இருந்திருக்கு. நான் கத்தவும் பிடுங்குவதை நிறுத்திட்டு இதோடு விட்டுடவா? இன்னொரு நாள் பிடுங்கலாமா என என்னிடம் கேட்டார். வேண்டாம், வேண்டாம் இன்னிக்கே ஒரு வழியா முடிச்சுடுங்கனு சொல்லிட்டு அடுத்த கத்தலுக்கு ஆயத்தமானேன். கதறக் கதறப் பல்லைப் பிடுங்கிட்டார். ரொம்பக் கஷ்டப்பட்டுத் தான் எடுக்க முடிஞ்சது. பல்லில் சீக்கோர்த்துக் கொண்டு வலியைக் கொடுத்த பாகத்தைக் காட்டினார். மற்றபடி பல் நன்றாகவே இருந்திருக்கு. முதலில் போன மருத்துவர் முறையாகச் செய்திருந்தால் இத்தனை கஷ்டம் இல்லை.
பல்லை ஒரு மாதிரி பிடுங்கிட்டாலும் அடுத்தடுத்து நான்கைந்து முறை மயக்க ஊசி போட்டதால் என்னால் எழுந்திருக்க முடியலை. அங்கேயே அப்படியே படுத்துட்டேன். மருத்துவரும் அரை மணி படுத்திருக்கட்டும். பின்னர் அழைத்துப் போங்க. நாளை வரை சூடு, காரம் இல்லாமல் திரவ உணவு தான். ஜூஸ், இளநீர் நிறையக் கொடுங்கனு சொல்லிட்டு அடுத்த பேஷன்டைப் பார்க்கப் போனார். பின்னர் கொஞ்சம் மயக்கம் சரியானதும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தோம். இன்னிக்குத் தான் வலி, வீக்கம் இல்லாமல் சாப்பிட முடிஞ்சது. பேசவும் முடிஞ்சது.
ஆனாலும் உங்களுக்கு பயங்கர மன உறுதி அக்கா. வேண்டாம் இன்றைக்கே பிடுங்கி விடுவோம் என்று சொல்லிவிட்டு அடுத்த கடத்தலுக்கு ஆயத்தமானேன் என்று படித்ததும் சிரிப்பும் வந்தது. பாவமாகவும் இருந்தது.
ReplyDeleteஉண்மையில் மன உறுதி இல்லைனா இத்தனை வலியோடு பல்லைப் பிடுங்கி இருக்க முடியாது. கத்தினாலும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டி இருந்தது.
Deleteபல் டாக்டர் வாசலில் வைத்திருக்கும் மெனுவில் என்னென்ன இருக்கிறதோ எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேன். அதில் ஒன்று மட்டும் என் மகனுக்கு செய்தேன்.
ReplyDeleteநான் ஆரம்பத்திலேயே பலைப்பிடுங்கணும் என்பதில் உறுதியாய் இருந்தேன். ஆகவே வலியையும் மீறிப் பற்களைப்பிடுங்கியாச்சு.
Deleteஅங்கு பற்கள் போன்ற ஏதோ ஒன்று இருந்தால் பின்னாட்களில் மெல்லுவதற்கு கொஞ்சமாவது உதவும். கன்னங்களில் டொக்கு விழாமல் பார்த்துக் கொள்ளலாம். எடுத்து விட்டால் சிரமம்தான் என்று தோன்றும்.
Deleteஎனக்கும் இப்போது மறுபடி பல் படுத்துகிறது. பல் மருத்துவரிடம் போவதற்கு தயக்கமாக இருக்கிறது. இரண்டு காரணங்கள். ஒன்று, வலி, பயம்.
ReplyDeleteஇன்னொன்று முன்பு இருந்த வீட்டின் அருகில் அந்த புகழ்பெற்ற மருத்துவர் இருந்தார். இப்போது தள்ளி வந்து விட்டதால் அவரையே பார்க்க போகலாம் என்றால் ஏன் இவ்வளவு தூரம் வருகிறீர்கள் என்று அவரே கேட்கிறார் அருகில் உள்ள மருத்துவமனை போகலாமே என்கிறார் எனக்கு தான் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.
நானா இருந்தால் உங்களிடம் தான் நம்பிக்கை. ஆகவேVஏறே மருத்துவரிடம் போக இஷ்டமில்லைனு சொல்லி இருப்பேன்.
Deleteநான் அவரிடம் சென்றால் மருத்துவம் பார்க்க மாட்டேன் என்று சொல்ல போகிறாரா என்ன..
Deleteநமக்குதான் தூரம், நேரம்...
முகம் அந்த அளவுக்கு வீங்கி இருக்கிறது என்பதை படித்தால் பதட்டமாக இருக்கிறது, பயமாகவும் இருக்கிறது. இப்போது வீக்கம் முற்றிலும் வடிந்து விட்டதா?
ReplyDeleteவீக்கம் வடிஞ்சிருக்கு. ஆனாலும் பற்களைப் பிடுங்கிய இடைவெளியில் அவ்வப்போது கொஞ்சம் வலி எட்டிப் பார்க்கும். காரமெல்லாம் நேத்திலிருந்து தான் சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன். காரம் என்பதால் இன்னிக்குக் குழம்பே விட்டுக்காமல் கீரை சாதம், ரசம், மோர் சாப்பிட்டேன். காலில் கல் விழுந்த பக்கம் தான் அவ்வப்போது வீக்கம் வந்து வ்ந்து போகிறது. காலை ஊன்றி நடந்தால் வலியும் இருக்கு. பார்ப்போம்.
Deleteகாலில் கல் விழுந்ததற்கும் பல் அந்தப் பக்கம் வலிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
Deleteபாருங்க அதான் வரவேண்டாம்னு சொல்லிருக்கார் நான் சொல்லியிருந்தேனே அடிகள் இருக்கோ மாடியில் மருத்துவர்நு கெஸ் பண்ணியதுதான் வேறென்ன?
ReplyDeleteஅவர் வர வேண்டாம்னு சொன்னதும் கூட ஒரு விதத்தில் சமிக்ஞையோ....வந்தா கஷ்டப்படுவீங்கன்னு? அவர் சரியா பார்க்கலையே. என்னவோ ம்ம்ம்ம்
நான் குட்டிக் குஞ்சுலு ஒயாசிஸ்னேன் கடைசில உங்களுக்கு வலியும் பல்லு பிடுங்கலுமாயிருக்கே.
பாருங்க ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு மாதிரி ம்ம்ம்ம் என்ன சொல்ல? என்ன மருத்துவம் படிக்கறாங்களோ. கடைசில மாட்டிக்கறது நாம் தான்
எப்படியோ இப்ப சரியாகி சாப்பிட பேச முடிகிறதே. நன்றி அந்த சக்திக்கு
கஷ்டமாகிவிட்டது வாசிக்கும் போது
கீதா
பல்லு ஸ்ட்ராங்கா இருந்திருக்கு பாருங்க. வேர்லதான் பிரச்சனை போல. அப்படினா பல்லுல தெரிஞ்சுருக்கணும் இல்லையோ? பல்லு ஆட்டம்னு...எப்படி எல்லாம் பிரச்சனைகள் வருது பாருங்க.
ReplyDeleteஎன்னென்ன மாத்திரை எதெதுக்கு எடுத்துக்கறீங்கன்னு கேட்க மாட்டாங்களோ? வேற எனென்ன பிரச்சனைகள் இருக்குன்னும் கேட்கலை பாருங்க ஆச்சரியம்.
நாம மருத்துவரிடம் போனதுமெ நம் அப்போதைய ப்ரச்சனையோடு உடனே வேறு என்னென்ன இருக்கு அதுக்கு என்னென்ன மாத்திரைகள்ன்றத நாமே சொல்லிடறது பெட்டர்னு நினைப்பேன். கேஸ் ஹிஸ்டரில வந்திடுமே.
கீதா
பல்லு ஸ்ட்ராங்கா இருந்திருக்கு பாருங்க. வேர்லதான் பிரச்சனை போல. அப்படினா பல்லுல தெரிஞ்சுருக்கணும் இல்லையோ? பல்லு ஆட்டம்னு...எப்படி எல்லாம் பிரச்சனைகள் வருது பாருங்க.
ReplyDeleteஎன்னென்ன மாத்திரை எதெதுக்கு எடுத்துக்கறீங்கன்னு கேட்க மாட்டாங்களோ? வேற எனென்ன பிரச்சனைகள் இருக்குன்னும் கேட்கலை பாருங்க ஆச்சரியம்.
நாம மருத்துவரிடம் போனதுமெ நம் அப்போதைய ப்ரச்சனையோடு உடனே வேறு என்னென்ன இருக்கு அதுக்கு என்னென்ன மாத்திரைகள்ன்றத நாமே சொல்லிடறது பெட்டர்னு நினைப்பேன். கேஸ் ஹிஸ்டரில வந்திடுமே.
கீதா
மருத்துவர்களுக்கு மருந்துகள் பற்றிய அறிவும் நிறைய வேண்டும் இல்லையாக்கா. எதைக் கொடுத்தா எது பாதிக்கும்ன்றதுஎல்லாம்.
ReplyDeleteஆனா மருத்துவச் செலவு அதுவும் பல் எல்லாம் ரொம்ப ஜாஸ்திதான்.
எல்லாம் நலமாகிடப் பிரார்த்தனைகள் அக்கா
கீதா
ஆரம்பத்தில் இருந்தே நம்ம ரங்க்ஸுக்கு அந்த மருத்துவரைப்பிடிக்கலை. போகட்டும். பிரச்னை எப்படியோ முடிஞ்சது இல்லையா? குஞ்சுலு மடிப்பாக்கம் போயிருக்கு. நாளை தோஹாவுக்குப் போகிறது. தோஹா வீட்டு வாசலில் இருக்கும் ஈச்சமரங்களை அப்படியே படியெடுத்தாற்போல் வரைஞ்சிருக்கு. தன்னைத் தானேயும் வரைஞ்சு கொண்டு துர்கா எனப் போட்டிருக்கு. எங்கே பார்த்ததுனு தெரியலை. குளம், தாமரை, (குலதெய்வம் கோயிலுக்குப் போறச்சே பார்த்ததோ என்னமோ) குளக்கரை மரங்கள்னு வரைஞ்சிருக்கு. நிறச் சேர்க்கையில் அபாரமான திறமை இருக்கு. நல்லபடியாய் படிச்சும் முன்னுக்கு வரணும். இறைவன் தான் காப்பாத்த வேண்டும்.
ReplyDeleteகுஞ்சுலுவின் திறமைகள் வியக்க வைக்கின்றன. இன்னும் நல்லபடியாக வளர, முன்னேற வாழ்த்துவோம்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவை படித்ததும் மனது வேதனையுற்றது. ஆனாலும், நீங்கள் மிகுந்த மனதைரியத்துடன் சென்று மருத்துவரை சந்தித்து தொந்தரவு தந்த பல்லை எப்படியோ அகற்றி விட்டீர்கள். உங்களது மனதைரியத்திற்கு பாராட்டுக்கள்.
எனக்கும் இந்த மாதிரி பலதடவை இடது, வலது கன்னங்கள் வீங்கி தொங்கி வலிகள் பின்னி எடுக்க நிறைய தொந்தரவுகளைத் அனுபவித்திருக்கிறேன். ஆனால், ஒருதடவை வந்த தாங்க முடியாத கடுமையான வலி காரணமாக டாக்டரிடம் ஒரு தடவைதான் சென்றேன். அவர் ஆண்டியாடிபக் மருந்தை தந்து அது வலி, வீக்கம் போனாலும், அது உடலுக்கு வேறு பல தொந்தரவை தந்தது. பல்லை எடுக்கவில்லை. இப்போதும் நீங்கள் கூறிய அந்த ஞானப்ற்கள் தொந்தரவு தந்தபடிதான் உள்ளது. உங்கள் பதிவை படிக்க மனவருத்தம் வருகிறது. கடவுளே..! எத்தனை சிரமங்கள் இந்த பற்களுடன் என்ற வேதனைகள் எழுகின்றன. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்..நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
அடடா! படிக்கும்போதே மனசு கஷ்டமாக இருக்கிறது. உங்களுக்கும், மாமாவுக்கும் மாற்றி,மாற்றி ஏதாவது வந்து கொண்டே இருக்கிறது. பல்லை பிடுங்குவது கஷ்டமாக இருந்தால் ஈறை கிழித்து பல்லை எடுத்துவிட்டு தையல் போட்டு விடுவார்கள். உங்களுக்கு அப்படி செய்யவில்லையா? பிறக்கப் போகும் புது ஆண்டிலாவது உங்கள் இருவரின் ஆரோக்கியமும் மேம்பட வேண்டுகிறேன்.
ReplyDelete