எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Sunday, June 15, 2008
மன்னிப்பு வேண்டுகின்றேன்!
பின்னூட்டப் பெட்டி தாற்காலிகமாய் மூடப் பட்டிருக்கின்றது. நண்பர்களுக்கு ஏமாற்றம் தருவதற்கு மன்னிக்க வேண்டும். பின்னர் திறக்கப் படும் தேதி அறிவிக்கப் படும். அனைவருக்கும் நன்றி.
Friday, June 13, 2008
கதை, கதையாம், காரணமாம் ராமாயணம் பகுதி 60
கருடன் செவ்வொளி வீசப் பறந்து வருவதைக் கண்ட வானரர்கள் மனம் மகிழ்ந்தனர். ராம, லட்சுமணர்களைக் கட்டி இருந்த அம்புகளின் உருவில் இருந்த பாம்புகள் பயந்து ஓடிப் போயின. அதைக் கண்ட வானரகள் மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்ப, ராம, லட்சுமணர்கள் இருவரும் எழுந்தனர். புத்துயிர் பெற்று எழுந்த அவர்களைக் கண்ட வானரர்கள் ஆரவாரம் எழுப்பினார்கள். அவர்கள் முகத்தைத் தன் கையால் கருடன் துடைத்தான். அவர்களின் பலம், தேஜஸ், அனைத்தும் மீண்டும் இரு மடங்காய்ப் பெருகிவிட்டது போல் ஒரு தோற்றம் எழுந்தது.இருவரையும் கட்டி அணைத்தான் கருடன். ராமர் அவனிடம், "இத்தனை அன்புடன் என்னையும் என் சகோதரனையும் காத்த நீ யாரோ?? உன்னைக் கண்டதுமே என் மனதில் அன்பு வெள்ளமாய் ஓடுகின்றதே? எனக்கு மிக நெருங்கியவன் நீ என்ற எண்ணம் உண்டாகின்றதே? நீ யார்??" என்று கேட்க, கருடனோ, " நான் கருடன், உனக்கும், எனக்கும் உள்ள பிணைப்பு அசைக்க முடியாதது. எவராலும் நினைத்துப் பார்க்க முடியாத வல்லமை கொண்ட இந்திரஜித்தால் நீ தாக்கப் பட்ட போது தேவர்களே எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர். அந்த அம்பு உருக் கொண்ட பாம்புகள் என் ஒருவனால் மட்டுமே விரட்ட முடியும். இந்தச் செய்தியை அறிந்ததுமே, நம்மிருவரின் நட்பின் பிணைப்பையும், அன்பின் உறுதியையும் மனதில் கொண்டு உன்னைக் காக்க வேண்டி இங்கே வந்தேன். இப்போது அந்தப் பாம்புகள் ஓடி விட்டன. ஆனாலும் இந்த ராட்சதர்கள் மாயத் தன்மை கொண்டவர்கள். அதிலும் இந்திரஜித்திடம் நீ மிகக் கவனமாய் இருக்கவேண்டும். "
"நான் யார் என்பதெல்லாம் இருக்கட்டும். நம் நட்பு பற்றியும் நீ இப்போது சிந்திக்கவேண்டியதில்லை. உன் கடமை இப்போது சீதையை மீட்பதே. இலங்கையின் இளைஞர்களையும், வயோதிகர்களையும் விடுத்து மற்றவர்களையும், ராவணனையும் அழித்து, சீதையை மீட்பது ஒன்றே உன் இப்போதைய கடமை. பின்னால் நீயே தெரிந்து கொள்வாய், நம் நட்பின் பிணைப்புப் பற்றி. இப்போது நான் சென்று வருகின்றேன். உனக்கு மங்களம் உண்டாகட்டும்." என்று வாழ்த்திவிட்டு, என்ன தான் மகாவிஷ்ணுவே மனித உருவில் இருந்தாலும், மனித உருக் கொண்டவனிடம் தான் யார் என்றும், அவன் தான் விஷ்ணு என்பதையும் தான் சொல்லுவது தகாது என்ற உணர்வோடு கருடன் திரும்புகின்றான். புதுப் பலம் எய்திய வானர வீரர்களின் ஆரவாரம் ராவணன் காதை எட்டுகின்றது. ராவணன் என்ன விஷயம் என்று பார்த்து வரச் சொல்ல, ராட்சதர்கள் அவ்வாறே பார்த்துச் சென்று ராம, லட்சுமணர்கள் இந்திரஜித்தின் கட்டில் இருந்து விடுபட்டுவிட்டனர் என்று சொல்கின்றார்கள். உடனேயே ராவணன் தன் தளபதியான தூம்ராக்ஷனை அனுப்ப, வானரப் படைக்குப் பெரும்நாசத்தை உண்டு பண்ணிய தூம்ராக்ஷனை அனுமன் வீழ்த்துகின்றான். பின்னர் ராவணன் வஜ்ரத்ம்ஷ்ட்ரனன், அகம்பனன் ஆகியோரை அனுப்ப அவர்களை முறையே அங்கதனும், அனுமனும் வீழ்த்துகின்றனர்.
பின்னர் தலை கவிழ்ந்து யோசனையில் ஆழ்ந்த ராவணன், பிரஹஸ்தனை அழைத்து ஆலோசனை செய்கின்றான். மேலே என்ன செய்வது என்ற யோசனையில் ஆழ்ந்த ராவணனிடம் பிரஹஸ்தன் சொல்கின்றான்:" இந்த ஆலோசனை முன்னால் நடந்த போதே நான் சீதையைத் திருப்பி அனுப்புவதே உகந்தது எனத் தெரிவித்தேன். இத்தனை பயங்கரமான, பெரிய யுத்தத்தை எதிர்பார்த்தே அவ்விதம் சொன்னேன். எனினும், நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவன். என்னால் என்ன முடியுமோ அதை உங்களுக்காக நான் செய்யத் தயாராக இருக்கின்றேன். உயிர்த் தியாகம் கூடச் செய்யுவேன்." என்று கூறிவிட்டு யுத்தகளத்துக்குச் செல்கின்றான் பிரஹஸ்தன். பிஹஸ்தனைப் பார்த்த ராமர், அவன் பலத்தையும், வந்த நொடியில் பல வானரர்களை அவன் அழித்ததையும் கண்டு வியந்தார். அதே சமயம் நீலன் பிரஹஸ்தனைத் தோற்கடித்து அவனையும் கொன்றான். பிரஹஸ்தனே போரில் மாண்டான் என்ற செய்தி கேட்ட ராவணன் திகைத்தான். பின்னர் தானே நேரில் போரில் இறங்குவதே சரி என்ற முடிவுக்கும் வந்தான்.
தன்னுடைய அம்பு வெள்ளத்தால் வானர சேனையையும், ராம, லட்சுமணர்களையும் மூழ்கடிக்கும் எண்ணத்துடன் தேரில் ஏறிக் கொண்டு வந்த ராவணனையும், அவன் தலைமையில் வந்த படைகளின் அணிவகுப்பையும் கண்டு ராமர் வியந்த வண்ணம், விபீஷணனிடம், "கம்பீரமான ஒளி பொருந்திய, இந்த அணி வகுப்பை நடத்தி வருபவர் யார்? இந்த அணி வகுப்பில் யார், யார் இருக்கின்றனர்?" என்று கேட்கின்றார். விபீஷணன் சொல்கின்றான்:
"இந்திர வில்லைப் போன்ற வில்லைக் கையில் ஏந்தி, சிம்மக் கொடியுடன் இந்திரஜித்தும்,
மலைபோன்ற தோற்றத்துடன் அதிகாயனும்,
சிவந்த நிறமுள்ள கண்களை உடைய மஹோதரனும்,
இடி போன்ற வேகம் உடைய பிசானனும்,
கையில் வேலுடன் திரிசிரனும்,
மேகங்கள் போன்ற தோற்றத்துடம் கும்பனும்,
எல்லாருக்கும் மேல், தெய்வங்களுக்கே அஞ்சாத துணிவும், வல்லமையும் கொண்டவனும், இந்திரனையும், யமனையும் ஜெயித்தவனும், ருத்ரனுக்கு நிகர் ஆனவனும் ஆன ராவணனே இந்தப் படை அணிவகுப்புக்குத் தலைமை தாங்கி வருகின்றான்." என்று சொல்கின்றான்.
ராவணனின் அணிவகுப்பு போர்க்களத்தை அடைந்தது. போர் ஆரம்பம் ஆனது. தன் இடைவிடாத அம்பு மழையால் வானரப் படையைச் சிதற அடிக்கின்றான் ராவணன். வானரப் படையோ திக்குத் தெரியாமல் ஓடுகின்றது. தன் அம்பால் சுக்ரீவன் மார்பில் ராவணன் அடிக்க அதனால் சுக்ரீவன் நிலை குலைந்து கீழே விழ, கோபம் கொண்ட வானரப் படை ராவணனைத் தாக்க, அவனோ அம்புமழை பொழிய, வானர வீரர்கள் ராமனிருக்கும் இடம் தேடி ஓடுகின்றது, பாதுகாப்புக்காக.

சங்குமுகம், இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள், தயவு செய்து!!!
But you have forgotten to answer the secondary part of the Question about a man whose life is consumed in cares and worries of his duties as a father. He is poor, he is unlettered; and he has no time.
அற்புதமான சொல்வளம், திரு சங்குமுகம், உங்கள் ஆங்கிலப் புலமையைக் கண்டு நேற்றே வியந்தேன், பொறாமையாகக் கூட இருக்கின்றது. இப்போ இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு என்னுடைய வாழ்த்துகள். இப்போ விஷயத்துக்கு வருவோமா?? இந்த விவாதத்தை நான் தொடர நினைக்கவில்லை, எனினும் நீங்கள் திரும்பத் திரும்ப, ஒரு சராசரி, சாமான்ய மனிதனுக்கு இதனால் என்ன பயன்? அதுவும் எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கு, தன் வேலைகளில் ஆழ்ந்து போனவனுக்கு, இறைவனைப் பற்றி நினைக்கக் கூட முடியாதவனுக்கு என்று கேள்விகளை அடுக்கியுள்ளீர்கள். யாராக இருந்தாலும், யாருடனும் தொடர்பாவது வைத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது. அப்படி அவன் தொடர்பு கொள்ளும் நபர்களில் யாராவது என்னைப் போல் இருக்கலாம், இது பற்றி அவனிடம் பேசலாம். அப்போது அவன் தெரிந்து கொள்ளலாம். நம் புராணத்திலேயே இது பற்றிய ஒரு கதை உண்டு. குடும்பப் பிரச்னைகளில் மூழ்கிய ஒரு விவசாயி பற்றிய கதை அது. தெரிந்திருக்கும் என நம்புகிறேன். காலையில் எழும்போதும், இரவு படுக்கும்போதும் மட்டும், "அப்பனே, நாராயணா!" என இறைவன் பெயரைச் சொல்கின்றான். அப்படி பெயரை மட்டுமே சொல்பவர்களும் உண்டு, இப்போதும், எப்போதும். ஆகவே யாருக்கும் எதுவும் பயனே இல்லை என்பதே கிடையாது. இன்னும் சொல்லப் போனால், நான் சுயபுராணமாக இருக்குமோ என்ற எண்ணத்தில் எனக்கு வந்த சில தனி மடல்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. எனினும் self appraisal ம் தேவையோ என்று நினைக்க வைத்துவிட்டது உங்கள் பின்னூட்டம். கொச்சியில் இருந்து,தமிழ் தெரிந்த யாரோ படித்துச் சொல்லக் கேட்ட ஒரு நபர் ஆங்கிலத்தில் எனக்குக் கடிதம் எழுதி இருந்தார், நன்றி தெரிவித்து. அதேபோல் பாண்டிச்சேரியில் அரசின் உதவியுடன் வைக்கப் பட்ட பொது கணினியில் தமிழ் படிக்க மட்டுமே தெரிந்த ஒருவரும் வேறு ஒருவர் உதவியுடன் எனக்கு மடல் அனுப்பி இருந்தார். இதை இங்கே உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை எனினும், கணினியின் தொடர்பு இல்லை எனில் இதை யாரால் படிக்க முடியும் என்ற கேள்வி உங்களால் எழுப்பப் பட்டிருப்பதால் குறிப்பிட்டுள்ளேன். பட்டி, தொட்டிக்கெல்லாம் கணினியை எடுத்துச் சென்ற ராஜீவ் காந்திக்கு உளமார நன்றி செலுத்துவோம்.
//You say, you are rendering a great service through these discourses; and you want to bring the epical truths to the young generations.//
மன்னிக்கணும், இதை ஒரு "பெரிய சேவை" என்ற எண்ணம் உங்களுக்கு எழும்படியாக நான் எழுதி இருப்பது என்னுடைய குற்றமேதான். இதை ஒரு சேவையாக நான் நினைக்கவில்லை. இளைஞர்களுக்கு, முக்கியமாக தற்கால இளைஞர்களுக்கு, ஆன்மீகம் என்றால் என்ன என்பதே தெரியாமல் போய்விட்ட ஒரு தலைமுறைக்கு இதைச் சொல்லுவது "என் கடமை" என்றே நான் நினைத்தேன், நினைக்கின்றேன், நினைப்பேன். ஆகவே உங்களுக்கு மாறுபட்ட எண்ணம் தோன்றும்படி எழுதியதற்கு மீண்டும் மன்னிப்பைக் கோருகின்றேன். நம் நாடு தான் சுதந்திரம் அடைந்துள்ளதே தவிர, நம் மனதில் இன்றளவும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் தான் இருக்கின்றோம். ஆங்கில ஆட்சிமுறைதான் நம் நாட்டு அரசியல் வாதிகளால் கடைப்பிடிக்கப் பட்டு நாம் ஆளப் படுகின்றோம். ஆங்கில ஆட்சி முறைக் கல்வி தான் கற்பிக்கப் படுகின்றது. நமக்குச் சற்றும் பொருந்தாத ஒரு ஆட்சி முறையை, கல்வி முறையை சில நூற்றாண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களால், இது தான் நம் ஆட்சி முறை, கல்வி முறை என்ற தவறான எண்ணத்தைச் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கூட ஏற்கும்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதில் இருந்தே ஆங்கிலேயர் நம்மை எந்தக் காரணத்துக்காக ஆண்டார்களோ அதில் வெற்றி அடைந்துள்ளார்கள் என்பது புலனாகின்றது. நம் நாட்டுக் கல்வி முறையோ, கலாசாரமோ, விவசாய முறைகளோ, குடும்பவாழ்வு முறையோ கேவலம் என்று நம் நாட்டினரே இன்று எண்ணும்படியான நிலை உருவாகி உள்ளது. எது நம் நாட்டுக்குப் பெருமையோ, எதனால் நம் நாடு மீண்டும் மீண்டும் உயிர்த்து எழுகின்றதோ அத்தகைய நம் நாட்டின் "ஆன்மா" இப்போது மயக்க நிலையில், சொல்லப் போனால் கோமா நிலையில் உள்ளது. அதை எவ்வாறேனும் தட்டி எழுப்ப வேண்டியதே நம் கடமை. அது நம் நாட்டுக் கலாசாரத்தைக் காப்பதிலேயே அடங்கி உள்ளது என்பது என் கருத்து. உலகுக்கே கூட்டுக் குடும்ப வாழ்க்கையைப் போதித்த நம் நாடு, இன்று ஒன்றாக இருப்பது போல் தெரிந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சிதறி விடுமே என்ற பயமே காரணம். என் காலத்துக்குள் இல்லாவிட்டாலும் வருங்காலமாவது காக்கவேண்டுமே என்ற அச்சம்!!
In order to benefit from your services, I must be computer-saavy, lettered in Tamil, and some English too, have enough time on hand, and such relaxation as can help me sit before a PC - which I must own, afte spending many thousands of hard-earned rupees, which could have helped me buy some feeding bottles to my babies.
//Your niir is selectively channelled and will irrigate only the arable fields which are already awash with abundant supply of water. The barren lands, as they are condemned to be barren by cruel fate or man-made cruelty, is out of your reckoning completely. How idyllic!//
nirr???? எது அது??? கீழே சொல்லுவதா?? இல்லை எனத் தெரியும். :P
//National Network for Immigrant and Refugee Rights //
"niir" என்று எதைச் சொல்கின்றீர்கள்?? மேலே நான் குறிப்பிட்டிருப்பதையா????
முட்டாள் தனமாய், ஒரு தரப்பினருக்கே என்னுடைய சேவையை நான் செய்வதாய் நீங்கள் குறிப்பிட்டிருப்பதையும் நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.இதற்காக நான் பட்டியல் போட்டுக் காட்டும் அளவுக்குத் தரம் தாழ்ந்தும் போகவில்லை. ஏனெனில் என்னுடைய கடமைகளை நான் எனக்குத் தெரிந்த அளவில் திருப்தியாக மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்து வருகின்றேன் என்று மட்டுமே குறிப்பிடுகின்றேன். No self appraisal in these matters. It is restricted.
நீங்கள் சொல்லுவது போல் எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கும் மேட்டுக்குடியினருக்கே என்னுடைய சேவை போய்ச் சேருவதாய் நீங்கள் கருதினாலும் மேட்டில் நீர் நிற்காது. பள்ளத்தை நோக்கியே பாயும், பாயவேண்டும். ஆகவே எனக்கு இது பற்றிய வருத்தம் இல்லை.
//'Measuring life in coffee spoons
Talking of Michangello'
Have you observed that?//
Yes, Sir, I do.
மேலும் இது போன்ற புராணக் கதைகளைப் படிப்பதால் இப்போது பயனில்லை என நீங்கள் கூறி இருப்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. இதில் இருந்து, நல்லவை, கெட்டவை எனப் பிரிக்க முடியாது ஒரு சாமானியனால் எனச் சொல்லி இருப்பதும் ஏற்க முடியாது. நீங்களே உங்களுடைய பின்னூட்டத்தில் தற்காலத்தில் மனிதர்கள் மிகக் கெட்டிக்காரர்கள் எனச் சொல்லி இருக்கின்றீர்கள்.
//People have become more clever nowadays. The effect of such books is minimal today.//
அப்படி இருக்கும்போது தராதரம் பிரிக்கமுடியாத அளவுக்கு மோசமான மனிதர்கள் என்று நான் நம்பிக்கை இழக்கவில்லை. சுயநலம் ஒன்றே மனிதனைக் கொல்கின்றது மோசமான அளவில்.
//Now, coming to your discourses, while you do agree that the book should not be accepted in toto blindly, yet, do you show such discernment and discrimination in your blog? If no, your reproduction of the epic defeats your noble intention.//
தவறான புரிதலுக்கு இடம் கொடுத்தமைக்கும் மன்னிப்பைக் கோருகின்றேன். நம்மிடம் உள்ள நல்ல தன்மையை, நல்லொழுக்கங்களை தேவ குணம் என்றும் , கெட்டவற்றை அசுர குணம் என்றும் சொல்லுவது உண்டு. நன்மை புரிந்தால் நன்மையே நடக்கும், எனவும், தீமைகள் புரிந்தால் அவன் எவ்வளவு நல்லாட்சி புரிந்தாலும் அவன் தர்மத்தில் இருந்து வழுவினால் அவனுக்கு முடிவில் தண்டனையே கிட்டும் என்பதே நான் சொல்ல வந்தது. எப்படிப்பட்ட பக்திமானும் கெடுதல் செய்தால் தண்டனனயில் இருந்து தப்ப முடியாது, எவ்வளவு பெரியவன் ஆனாலும். இதுவே நான் சொல்லுவது. இதில் ராவணன் பற்றியவற்றையும், அவனின் தீய ஒழுக்கங்களையும், அவன் செய்த பாவங்களையும் ஒதுக்கவேண்டும் என்பதே என் கருத்து. அதே சமயம் அதே ராவணன், பல தவங்களைப் புரிந்துள்ளான், பல பூஜைகள் செய்துள்ளான், பல வரங்களையும் பெற்றுள்ளான். ஆனால் அவற்றால் அவன் பிறருக்கு நன்மை செய்யவில்லை அல்லவா?? அதைத் தான் தள்ளவேண்டும். அவனின் தீய குணத்தைத் தள்ளிவிட்டு, அவன் விடாமுயற்சியுடன் கைலையைத் தூக்கி நிறுத்த முயன்றும் தோற்றுப் போனானே? அகம்பாவத்தால் அதைத் தள்ளவேண்டும், இப்படிக் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கவேண்டுமோ??? நாத்திக வாதமும் பேசப் படும் வால்மீகி ராமாயணத்தில். அதைத் தள்ளவேண்டும். தசரதனின் பெண் மோகத்தையும், யோசிக்காமல் கொடுத்த வாக்குறுதியையும் நினைத்துப் பார்த்து அதைத் தள்ளவேண்டும். ஐயா, இப்படி யோசித்தால் நிறையவே வரும். ஆனால் நான் இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்ளுகின்றேன். எனினும் உங்களுக்கு என் நன்றிகள்.

Thursday, June 12, 2008
Thank You Mr. Shangumuham!!!! My answer to You!
SANGKUMUHAM said...
//Geetha Sambasivam!
Nice to read the results of your labors. But I dont know why I have read them at all!//
Mr.Sangumuham,
First of all, I never asked you to read them all. And I am not going to people and asking them to read this, or that. If you are interested in the subject, read it. I am not asking people to comment in favour of it also. Always there are two sides. Some are favouring, some are not. So it is completely your desire. Not mine.
//Will it make me a good person? Suppose it does, how can a person who cant read and write, become a good person? Because, he is what he is! Or, a person whose life is consumed in eking out his mean existence on a measly wages, to fill the stomach of an innocent wife and yet more innoncent children?//
இப்போ கொஞ்சம் வசதிக்காகத் தமிழில் மாறிக்கறேனே??? உங்களை இது மாற்றவில்லை எனில் அது ராமாயணத்தின் குற்றம் அல்ல. மாற்றினாலும் அதற்கு அதனால் பெருமை என நீங்கள் நினைத்தால் அது உங்கள் எண்ணம். எழுதப் படிக்கத் தெரியாதவனுக்கு என்ன பிரயோசனம் என்றால், படித்தவர்கள் யாரேனும் இதைப் பற்றி எடுத்துச் சொல்லுவதை அவன் காதால் கேட்க முடியும். அதிலும் என்ன பயன் என்றால் இது வாழ்க்கையில் வாழும் வகை பற்றிச் சொல்கின்றது. எப்படியாவது வாழ வேண்டும், என்று நினைக்காமல் எப்படி வாழ்ந்தால் நல்லது எனப் போதிக்கும் அதே சமயம், கஷ்டமான சூழ்நிலையில் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும், என்பதையும், நட்பு என்பது எவ்வளவு உன்னதமான விஷயம் என்பதையும்,நட்பையும், நண்பர்களையும் எவ்வாறு போற்றவேண்டும், என்பதையும் கஷ்டமான காலத்தில் நட்பு எவ்வாறு உதவுகின்றது என்றும், மேலும் ஊழியம் செய்பவர்களின் தொண்டின் சிறப்பையும் எடுத்துக் கூறுகின்றது. நன்கு படித்தவர்கள் மேலும், மேலும் இதைப் படித்தால், முக்கியமாய் ஆட்சி புரிபவர்கள் படித்தால், மக்களுக்குச் செய்ய வேண்டிய முக்கியமான கடமைகள் பற்றியும், ஆட்சி புரியவேண்டிய முறை பற்றியும், மனிதர்கள் கடைப்பிடிக்கவேண்டிய நீதி பற்றியும், நேர்மை பற்றியும், நல்லொழுக்கம் பற்றியும் சொல்லுகின்றது. நேர்மையும், திறமையும் இல்லாத அரசுகளே தொடர்ந்து ஆட்சி புரியும் இந்நாட்களில், குறைந்த பட்சம் ஆட்சியாளர்களுக்கு ஒரு "MORAL FEAR" ஆவது ஏற்பட வழி செய்யும், மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது உறுத்தும், அந்த உறுத்தல் தாங்காமல் ஒருவேளை மக்களுக்குக் கொஞ்சம் நல்வழி காட்டவும் முற்படலாம். ஆனால் இன்று ஒருநாளில், ஒரு இரவில் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது தான்.
படிக்கும் பிள்ளைகளுக்கு இன்றைக்கு எந்தவிதமான நீதி போதனைகளும் போதிக்கப் படுவதில்லை. இத்தகைய இதிகாசங்களில் இருந்தும், புராணங்களில் இருந்தும் எடுத்துச் சொல்லப் படும் நீதிக் கதைகளும், நீதிக்காகப் பாடுபட்ட அரசன் பற்றிய விபரங்களும், அவர்களுக்கு நம் நாடு எத்தகைய உன்னத நிலையில் இருந்தது என்பதை எடுத்துச் சொல்லும், இனி வரும் தலை முறையாவது அத்தகைய உன்னத நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்ல முயற்சிக்கும். வருங்கால இளைஞர்களுக்குத் தேவையான அனைத்து விஷயங்களுமே நம் நாட்டு இதிகாசங்களிலும், புராணங்களிலும், உபநிஷத்துகளிலும் கொட்டிக் கிடக்கின்றன. அருமை தெரியாமல் ஆட்சியாளர்கள் அலட்சியம் செய்கின்றார்கள் எனில், நாமாவது தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும். அட, பழைய காக்கை, நரி, பாட்டி, வடை கதையையே எடுத்துக்குங்களேன்?? அதிலேயே கற்றுக் கொள்ள எவ்வளவு இருக்கின்றது?? பாட்டி வயசு ஆகியும் தன் கையால் உழைத்துப் பிழைக்கின்றாள், யாரையும் எதிர்பார்க்காது. காக்கை, உழைப்பைத் திருடித் தின்க முயற்சிக்கின்றது. உழைப்பே இல்லாமல் அது திருடியதற்காக, நரியிடம் தன் வடையை இழக்கின்றது. வல்லவனுக்கு வல்லவன் உலகிலே உண்டு அல்லவா? அதான் இங்கே நரியாக உருவகம், மேலும் முகஸ்துதிக்கு, அதிலும் பொய்யான முகஸ்துதிக்கு காக்கை மயங்கவும் செய்கின்றது. உழைக்காமல் பிறர் காசில் வயிறு வளர்த்தால், பின்னால் உன்னிலும் சிறந்த ஏமாற்றுக் காரன் உன்னை ஏமாற்றுவான் என்று அந்தக் கதை சொல்லவில்லையா? இந்தக் கதையைத் தள்ளி விட முடியுமா??? அந்தக் கதை கேட்டு வளர்ந்த எங்கள் தலைமுறையைப் போல் இன்றைய தலைமுறை இல்லையே??? அந்த வருத்தமே என்னை இதெல்லாம் எழுத வைக்கின்றது. ஓரிருவர் மாறினாலே போதும், மாற்றம் என்ற சொல்லைத் தவிர, மற்றதெல்லாம் மாறுபடும் அல்லவா? மாறும், மெல்ல, மெல்ல மாறும், காத்திருக்கவேண்டும். எப்போது எனத் தெரியாது!!!!
//Your lucubrations are vizallukku iraththa niir. Or, to put it correctly, a luxury for a people who has nothing else to do?//
நிச்சயமாய் இல்லை. விழலுக்கு இறைத்த நீர் எனச் சொல்லவே முடியாது. வேறு வேலை இல்லாமலும் இதைச் செய்யவில்லை. அதுதான் உங்கள் கருத்து என்றால், அப்படியே இருக்கட்டும். புராணங்களும், இதிகாசங்களும் பொழுதுபோக்குக்கான அம்சங்களே இல்லை, முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான சாதனைகளை வைத்து, நம் அன்றைய நாட்களின் அர்த்தமுள்ள விஷயங்களைப் புறக்கணித்துச் செல்வது முற்றிலும் சரி அல்ல. நமது இப்போதைய அனுபவத்தை அளவுகோலாக வைத்துக் கொண்டு கணிப்பது சரியும் இல்லை. இந்த வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் இவற்றின் தகவல்களை அனுபவங்களோடு சேர்த்துப் பார்த்துச் சிந்தித்து அவற்றின் உள்ளே மறைந்துள்ள உண்மைகளைக் கண்டு உணரவேண்டும் என்பதே அவற்றின் தாத்பரியம். ஐயா, நாம் உணவு உட்கொள்ளுகின்றோம், அந்த உணவில் இருந்து சத்தை மட்டும் நம் உடல் எடுத்துக் கொண்டு வேண்டாதவற்றைக் கழிக்கின்றது அல்லவா?
மேலும் நெல் அறுவடை செய்கின்றோம். நெல்மணிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு வைக்கோலைத் தள்ளுகின்றோம் அல்லவா? எத்தனை விஞ்ஞான புத்தகங்கள், எத்தனை இலக்கிய, மொழி சார்ந்த, சாராத புத்தகங்கள் படிக்கின்றோம்? அவற்றில் எது நமக்குத் தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொள்கின்றோம் அல்லவா? என்ன செய்தாலும், எதைச் செய்தாலும், எப்படிச் செய்தாலும் நமக்குத் தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ளுகின்றோம். தேவை இல்லாதவற்றைத் தள்ளுகின்றோம். அன்றாட வாழ்வில் இப்படி நமக்குத் தேவையானதையே சிந்திக்கும், நாம் ஏன் புராண, இதிகாசங்களில் மட்டும் வரிக்கு வரி, சொல்லுக்குச் சொல் எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க வேண்டும்?? அவற்றில் நமக்கு எது தேவையோ அதை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும், அது தான் சரி இல்லையா??
//God is greater than your lucubrations. Let me sincerely ask you this question:
what is the use of all these luxuriating books written by the godmen, the puraanaas, the vedas, the Bible stories, the gimmicks of mohamed etc.?
What is the outcome for an ordinary person? The question is sincere. Please go over it. In case you need a separate blog topic to answer, please try and make it as such; and put in your thoughts therein. You appear to be an intelligent person. I hope your answer will be illuminating.
I am afraid, without knowing where you are going, it is a wanton dissipation of the precious life God has gifted you!//
உங்களது இந்தக் கேள்விக்குப் பதில் எழுதினால் மிகவும் பெரியதாகிவிடும், எனினும் மகான் அரவிந்தர் அவர்களின் சில வரிகளை மட்டும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்தச் சுட்டி, , "Francois Gautier" என்பவரால் எழுதப் பட்ட, "REWRITING INDIAN HISTORY" என்னும் புத்தகத்தில் இருந்து எடுக்கப் பட்டது. ஒரு வேளை உங்கள் கேள்விக்கு இது பதிலாக அமையலாமோ என்ற எண்ணத்தில் கொடுக்கின்றேன். மூலப் புத்தகம் என்னிடம் இல்லை.
//ஸ்ரீஅரவிந்தர் சொல்வது என்னவென்றால்:
the ancient and classical literature of the Sanskrit tongue shows both in quality and in body an abundance of excellence, in their potent orginality and force and beauty, in their substance and art and structure, in grandeur and justice and charm of speech, and in the heightened width of the reach of their spirit which stands very evidently in the front rank among the world's great literatures."
"the vedas, the Upanishadas, the Ramayana, the Mahabharatha, as seen earlier, the Vedas represent "a creation of an early and intuitive and symbolic mentality." It was only because the Vedic rishis were careful to clothe their spiritual experiences in symbols, so that only the initiated would grasp them, that their meaning has escaped us, particularly after they got transtated in the last two centuries. The Veda is the WORD discovering truth and clothing in image and symbol, the mystic significance of life"
ராமாயணம் பற்றி அரவிந்தர் சொல்வது என்னவெனில்:
"For Indians, the Ramayana embodies the highest and most cherished ideals of manhood, beauty, courage, purity, gentleness. The subject is the same as in the Mahabharatha: the struggle between the forces of light and darkness. but the setting is more imaginative, supernatural and there is an intensification of the characters in both their goodness and evil. As in the Mahabharatha too, we are shown the ideal man with his virtues of courage, selflessness, virtue and spiritualised mind. ......
The puranas, and the Tantras, which contains in themselves the highest spiritual and philosophical truths, while embodying them in forms that are able to carry something of them to the popular imagination and feeling by way of legend, tale, symbols, miracles and parables."
அரவிந்தரின் பார்வையில் ராமாயணம் இப்படியும் பார்க்கப் படுகின்றது, இதுவும் ஒரு விதத்தில் சரியே!:
"Valmiki moulded the Indian mind with his depiction of Rama, and Sita, another classic of India's love couples and one that has survived through the muth of enduring worship, in the folklore of this country, along with the polular figures of Hanuman and Lakshmanan. His diction is shaped in the manner of the direct intuitive mind as earlier expressed in the Upanishads."
யாருக்குமே தங்கள் மனைவி பற்றியோ, கணவன் பற்றியோ கனவுகளோ, கற்பனைகளோ இல்லாமல் இருக்காது. இல்லையா??கற்பனை கலந்த ஒரு கதையாகவே இருக்கட்டுமே ராமாயணம். அதிலும் வால்மீகி எவ்வளவு விஷயங்களை எடுத்துச் சொல்லி இருக்கின்றார்?? பூகோள அமைப்பு, வனங்களின் வளம், நாட்டு வளம், நதி வளம், குடியாட்சி முறை, சாத்திரங்களும், தர்மங்களும் கடைப்பிடிக்க வேண்டிய முறை, இன்னும் நாத்தீக வாதம் என அனைத்துமே பேசப் படுகின்றது. வேறு எங்கேயாவது, எதிலாவது இம்மாதிரியான ஒரு சுதந்திரத் தன்மையுடனும், பெரும்போக்குடனும் கூடிய கதை அமைப்பைக் காண முடியுமா??? வால்மீகியின் விபரமான வர்ணனையினால் ராமனும், சீதையும் இன்று உலகளவில் பேசப் படும் ஆதர்சத் தம்பதிகளாய் மாறி இருப்பதும் உண்மையே! எனினும் அனைத்துக்கும் மேல் ராமாயணத்தில் சொல்லப் படும் விஷயங்கள் கணவன் - மனைவி உறவு மட்டுமல்லவே! அரசன் ஆனவன் எவ்வாறு ஆட்சி, நிர்வாகத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும் என்பதில் இருந்து போர் முறைகள், போரில் நடக்கும் உபாயங்கள், விளைவுகள், பாதிப்புகள், சக மனிதர்களை மதிக்கும் முறை, மந்திரி, பிரதானிகளை மன்னன் நடத்த வேண்டிய முறை, மூத்தோருக்குச் செலுத்த வேண்டிய மரியாதைகள், குருவிற்குச் செய்ய வேண்டிய கடமைகள், அவருக்குச் செலுத்த வேண்டிய மரியாதைகள் என எத்தனையோ கற்க இருக்கும் போது, இன்னும் நான் கற்றுக் கொண்டிருக்கும்போது, என்னுடைய இந்த அற்புதமான வாழ்வை நீங்கள் "wanton dissipitation" என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்த்தால் எனக்குக் கோபம் வரவில்லை. சிரிப்புத் தான் வருகின்றது. வாழ்வை அனுபவிப்பது பற்றி ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கலாம் அல்லவா?? என்னளவில் நான் மனதில் இன்னும் கற்கும் ஆவலுடனேயே இருக்கின்றேன். I am an optimistic person, so no problem . May God Bless All. That is all to say, and thank you for coming to my blog.Of course, it is God's gift, my life, I mean, and Nothing is going to be waste, including my life. Actually I do not want to reply you, but after second thought, I made up my mind.

கதை, கதையாம், காரணமாம், ராமாயணம் - பகுதி 59
தன்னால் ராம, லட்சுமணர்கள் வீழ்த்தப் பட்டதைப் பார்த்த இந்திரஜித்திற்கு மனதில் மகிழ்ச்சி பொங்கியது. நேருக்கு நேர் நின்று யுத்தம் செய்யும் போது, எதுவும் செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருந்த இந்திரஜித், இப்போது தன்னை மறைத்துக் கொண்டு செயல்பட்டதின் மூலம் சகோதரர்கள் இருவரையும் வீழ்த்திவிட்டது குறித்து மேலும் மகிழ்ந்தான். இன்னும், இன்னும் என அம்புகளைப் பொழிந்த வண்ணம், "தேவேந்திரனால் கூட என்னை நெருங்க முடியாது. அப்படி இருக்க நீங்கள் இருவரும் என்னைக் கொல்ல எண்ணுவது நடக்கும் காரியமா?" என்று கூவினான். நாராசங்கள் என்ற பெயருடைய அந்த அம்புக் கூட்டங்களால் முதலில் ராமரின் உடல் துளைக்கப்பட அவர் மீழே வீழ்ந்தார். வில் கையில் இருந்து நழுவியது. இதக் கண்ட லட்சுமணனுக்குத் தன்னுடைய உயிரே உடலை விட்டுப் பிரிவது போல் மனம் தளர்ந்து, உடல் சோர்வுற்றது. இனி தன் உயிர் என்னவானால் என்ன என்று அவன் மனம் எண்ண அவனும் தரையில் சாய்ந்தான். இருவரையும் வானர வீரர்கள் சுற்றிக் கூடி நின்றனர். உடலில் ஒரு விரல் அளவு கூட இடைவெளி இல்லாமல் எங்கும் அம்புகள் துளைத்து, ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. மூச்சுவிடத் திணறிக் கொண்டிருந்த இரு சகோதரர்களையும் பார்த்து வானரப் படைத் தலைவர்களும், மற்ற வீரர்களும் கவலையுடன் யோசிக்க இந்திரஜித் மறுபடியும் கூவினான். எத்தனை நன்கு கவனித்துப் பார்த்தாலும் அவன் இருக்குமிடம் தெரியவில்லை. ஆனால் அவன் குரல் மட்டும் நன்கு கேட்டது அனைவருக்கும்."கர, தூஷணர்களை வென்றுவிட்ட பெருமையில் இருந்த இந்த இரு மனிதர்களும், தேவேந்திரனையே வென்ற என்னால் தோற்கடிக்கப் பட்டு தரையில் வீழ்த்தப் பட்டனர். இவர்கள் இருவரையும் என்னுடைய அம்புகளில் இருந்து விடுவிக்க யாராலும் முடியாது. சாத்திரங்கள் கற்றறிந்த, வேத மந்திரங்கள் அறிந்த ரிஷிகளாலோ, அல்லது தேவர்களாலோ, யாராலும் முடியாது. இவர்களை வீழ்த்தியதன் மூலம் பெரும் துன்பக் கடலில் மூழ்கி இருந்த என் தந்தை காப்பாற்றப் பட்டார். இலங்கையை அழிப்போன் என்று வந்த இவர்களை நான் வீழ்த்தியதன் மூலம் வானரக் கூட்டத்தின் பெருமைகளும், மேகங்கள் கலைவது போலக் கலைந்துவிட்டது." என்று உற்சாகக் கூச்சல் போட்டுக் கொண்டு, மேன் மேலும் அம்புகளை வானரப் படை இருக்குமிடம் நோக்கி ஏவுகின்றான். அரக்கர்கள் மனம் மகிழ, வானரப் படை வீரர்களுக்குப் பெரும் காயங்கள் ஏற்படுகின்றது. ராம, லட்சுமணர்கள் இறந்துவிட்டனரோ என்ற முடிவுக்கு வந்த சுக்ரீவனை விபீஷணன் தேற்றுகின்றான். மந்திர, ஜபங்களைச் செய்து கையில் நீர் எடுத்துக் கொண்டு அந்த மந்திர நீரால் சுக்ரீவன் முகத்தைக் கழுவி விட்டு, வானரப் படையை மேன்மேலும் ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றான். தன்னம்பிக்கையை இழக்கவேண்டாம், ராமரோ, லட்சுமணனோ இறந்திருக்க மாட்டார்கள், முகத்தில் ஒளி குன்றவில்லை எனவும் ஆறுதல் சொல்கின்றான். அரக்கர்களோ தாங்கள் ஜெயித்துவிட்டதாகவே ராவணனிடம் சென்று சொல்ல, இந்திரஜித்தும் அங்கே சென்று தன் தந்தையிடம் நடந்த விபரங்களைத் தெரிவிக்கின்றான். மனம் மகிழ்ந்த ராவணன் இந்திரஜித்தைப் பாராட்டிக் கொண்டாடுகின்றான்.
உடனேயே சீதையைக் காத்து நின்ற அரக்கிகளை அழைத்து வருமாறு கட்டளை இடுகின்றான். அவர்களிடம், சீதையிடம் சென்று, ராம, லட்சுமணர்கள் இந்திரஜித்தால் கொல்லப் பட்டனர் என்ற செய்தியைத் தெரிவிக்குமாறு கூறுகின்றான். அவளைப் புஷ்பக விமானத்தில் அமரச் செய்து அழைத்துச் சென்று யுத்தகளத்தில் வீழ்ந்து கிடக்கும் அந்த இரு இளவரசர்களையும் காட்டச் சொல்கின்றான். பின்னர் வேறு வழியில்லாத சீதை என்னை நாடி வருவாள் எனக் கோஷம் போடுகின்றான் தசகண்டன். சீதை அந்தப் படியே புஷ்பக விமானத்தில் ஏற்றப் பட்டு யுத்தகளத்துக்கு அழைத்துச் செல்லப் படுகின்றாள். வானரக் கூட்டங்கள் அழிக்கப் பட்டு, ராமரும், லட்சுமணனும் தரையில் வீழ்ந்து கிடப்பதை சீதை கண்டாள். தன்னுடைய அங்க, லட்சணங்களைக் கண்ட ஜோதிடர்களும், ஆரூடக்க் காரர்களும், தனக்குப் பட்டமகிஷியாகும், லட்சணம் இருப்பதாய்க் கூறியது பொய்த்துவிட்டதே எனவும், தான் விதவை ஆகிவிட்டோமே என ஜோதிடத்தின் மேலும், அந்த ஜோசியர்கள் சொன்னது எல்லாம் பொய் என்றும் கூறிப் புலம்புகின்றாள் சீதை. அப்போது திரிஜடை, "கலங்க வேண்டாம் சீதை, ராமரோ, லட்சுமணரோ இறக்கவில்லை, அவர்கள் முகம் ஒளி பொருந்தியே காணப் படுகின்றது. மேலும் தலைவர்கள் இறந்து விட்டதால் ஏற்படும் குழப்பம் எதுவும் வானரப் படையிடம் காணப்படவில்லை. அமைதியாக மேற்கொண்டு செய்யும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இறக்கவில்லை, நீ அமைதியாக இரு. இவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்று என் மனம் சொல்கின்றது. உன் மனதைத் தேற்றிக் கொண்டு தைரியமாய் இருப்பாயாக." என்று சொல்கின்றாள்.அப்படியே இருப்பதாய் இரு கையும் கூப்பிக்கொண்டு சீதை அவளை வேண்ட புஷ்பகம் மீண்டும் அசோக வனத்துக்கே திரும்புகின்றது. அரை மயக்கத்தில் இருந்த ராம, லட்சுமணர்களில், சற்றே கண்விழிக்க முடிந்த ராமர், தன் அன்புக்கு உகந்த சகோதரன், தன்னோடு சேர்ந்து தரையில் வீழ்ந்து கிடப்பதைக் காண்கின்றார். அவர் மனம் லட்சுமணனைப் பெற்றெடுத்த தாயான சுமித்திரையின் மனம் என்ன பாடுபடும் இதைக் கண்டால் என்று யோசிக்கின்றது. தனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லி வந்து, தன்னைத் தேற்றிய லட்சுமணன் இப்போது விழுந்து கிடப்பதைக் கண்டதும் அவர் மனம் துடிக்கின்றது. லட்சுமணனைப் பின் தொடர்ந்து தானும் யமனுலகுக்குச் செல்லவேண்டியதே என்று மனம் நொந்து சொல்கின்றார். சுக்ரீவனுக்காவது கிஷ்கிந்தைக்கு அரசுப் பட்டம் கட்டியாயிற்று. ஆனால் விபீஷணனுக்குக்கொடுத்த வாக்கைக் காக்க முடியவில்லையே?? இப்படி வீழ்ந்து கிடக்கின்றோமே என மனம் பதறுகின்றார் ராமர். அங்கே அப்போது வந்த விபீஷணனைக் கண்ட வானர வீரர்கள் இந்திரஜித்தோ எனக் கலக்கமுற, அவர்களை நிறுத்திய விபீஷணன், சுக்ரீவனிடம் படையை அணிவகுத்து நின்று எதிர்த்துப் போரிடக் கட்டளை இடுமாறு கூறுகின்றான். எனினும் தன்னாலன்றோ ராம, லட்சுமணர்கள் இவ்விதம் வீழ்ந்து கிடப்பது என எண்ணித் தவிக்கின்றான். ராவணன் ஆசை நிறைவேறிவிடுமோ எனக் கலக்கம் அடைகின்றான். இவர்களை எழுப்புவது எவ்வாறு என் அவன் சுக்ரீவனிடம் ஆலோசனை செய்கின்றான். தன் ம்ந்திர நீரினால் இருவர் கண்களையும் துடைக்கின்றான். சுக்ரீவன் தன் மாமனாராகிய சுஷேணனைப் பார்த்து, "ராம, லட்சுமணர்களை கிஷ்கிந்தை கொண்டு சேர்க்கும் படியும், தான் இருந்து ராவணனையும், அவன் குடும்பம், மகன், சகோதரர் போன்றோரையும், மற்ற அரக்கர்களையும் அழித்துவிட்டு, சீதையை மீட்டுக் கொண்டு வருவதாயும் தெரிவிக்கின்றான். சுஷேணன் சொல்கின்றான்:
தேவாசுர யுத்தம் நடந்த போது அதை நானும் கண்டிருக்கின்றேன். அப்போது அசுரர்கள் தங்களை நன்கு மறைத்துக் கொண்டு போரு புரிந்த வண்ணமாக தேவர்களுக்கு மீண்டும், மீண்டும் அழிவை ஏற்படுத்தினார்கள். அப்போது தேவகுருவாகியவரும், மஹரிஷியும் ஆன பிரஹஸ்பதியானவர் சில மந்திரங்களை ஓதி, துதிகளைப் புரிந்து, சில மருந்துகளைத் தயாரித்து, அவற்றின் மூலம் தேவர்களை உயிர்ப்பித்து வந்தார். அந்த மருந்துகள் இப்போதும் பாற்கடலில் கிடைக்கின்றது. சம்பாதி, பனஸன் ஆகியோர் தலைமையில் சில வானரர்கள் சென்று அந்த மருந்துகளைக் கொண்டு வரவேண்டும். பாற்கடலில் இருந்து எழும் இரு மலைகள் ஆன, சந்திரம், துரோணம் ஆகியவற்றில், "சஞ்சீவகரணி" என்னும் அற்புத மருந்து, இறந்தவர்களைக் கூடப் பிழைக்க வைக்கும், ஆற்றல் பொருந்திய மூலிகையும், விசால்யம் என்னும் அம்புகளால் படும் காயங்களை இருந்த இடம் தெரியாமல் போக்கும் சக்தி வாய்ந்த மூலிகையும் கிடைக்கும். அவை கொண்டுவரப்படவேண்டும். அனுமன் நினைத்தால் அவை நம் கையில் கிடைத்துவிடும், ராம, லட்சுமணர் எழுந்து விடுவார்கள் என்று சொல்கின்றான்.அப்போது ஆகாயத்தில் பெருத்த ஓசை ஒன்று கேட்டது. இடி, இடித்தது, மின்னல்கள் பளீரிட்டன. அண்ட, பகிரண்டமும் நடுங்கும்படியான பேரோசை கேட்டது. கடல் கொந்தளித்தது. மலைகள் ஆட்டம் கண்டன. மேகங்கள் ஒன்றுக்கொன்று மோதும் ஓசையில் உலகே நடுங்கியது. பூமி பிளந்துவிட்டதோ என்னும்படியான எண்ணம் ஏற்பட்டது. இத்தகைய மாற்றங்கள் எதனால் ஏற்படுகின்றது என அனைவரும் அதிசயித்துப் பார்க்கும்போது, காற்று பலமாக வீசத் தொடங்கியது. ஊழிப்பெருங்காற்றோ, புயலோ, இது என்ன இவ்வாறு காற்று? எனக் கலங்கும் வேளையில் கருடன் வானில் தோன்றினான். ஊழித் தீயே காற்றின் வேகத்தோடு பறந்து வருவது போன்ற செந்நிறத் தோற்றத்தில் வானம் மட்டுமின்றி, பூமியும் சிவந்தது.
Wednesday, June 11, 2008
கதை, கதையாம், காரணமாம் - ராமாயணம் - பகுதி 58
ராமனுடன் சேர்ந்து சுவேல மலை மீது பல வானரர்களும் ஏறினார்கள். இலங்கை போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த காட்சி அங்கிருந்து கண்ணில் பட்டது. மாலை நேரம் முடிந்து இரவில் அங்கேயே ஓய்வெடுத்த வானரப் படை மறுநாள் காலையில், திரிகூட மலையின் மீது ஆகாயத்தில் இருந்து தொங்க விடப்பட்டது போன்ற பேரழகோடு காட்சி அளித்த இலங்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு உயரமான இடத்தில் ராவணன் நின்று கொண்டிருப்பதை ராமர் கவனித்தார். ராவணனின், கம்பீரத்தையும், தேஜஸையும், வீரத்தோற்றத்தையும் கண்டு ராமர் வியந்து கொண்டிருந்த நேரத்தில், சுக்ரீவனுக்கு ராவணன் பேரில் கடுங்கோபம் ஏற்படுகின்றது. உடனேயே அந்த மலைச் சிகரத்தில் இருந்து ராவணனை நோக்கித் தாவினான். "உன்னைக் கொன்று விடுவேன், விடமாட்டேன்" என்று கூவிய வண்ணம் தாவிய சுக்ரீவனின் தாக்குதலினால் ராவணனின் கிரீடம் தலையில் இருந்து கீழே விழுந்து உருண்டோடியது. ராவணன் மிகுந்த கோபத்துடன் எதிர்த் தாக்குதல் நடத்தினான். தரை மீது சுக்ரீவனைத் தூக்கி வீசி அடித்தான். பதிலுக்கு சுக்ரீவனும் ராவணனை வீசி எறிய இருவருக்கும் பயங்கரமாக யுத்தம் நடந்தது. கடுமையான சண்டையால் கொஞ்சம் மனம் தளர்ந்த ராவணன் தன் மாயாசக்தியைப் பிரயோகிக்க முடிவு செய்தான். அதற்குள் இதை உணர்ந்த சுக்ரீவன் ஆகாயத்தில் தாவி, இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான், ராமர் சுக்ரீவனை, நீ ஒரு அரசனாக இருந்து கொண்டு இம்மாதிரியான காரியங்களைச் சொல்லாமலும், யாருடனும் கலந்து ஆலோசிக்காமலும் செய்யலாமா??? உனக்கு ஏதானும் நேர்ந்திருந்தால்???? அதன் பின்னரும் யாரைப் பற்றியாவது நான் யோசனை செய்ய முடியுமா??? ராவணன் படைகளையும், அவனையும் நாசம் செய்து விட்டு, உன் மகன் ஆன அங்கதனையும், இலங்கை மன்னனாக விபீஷணனையும், என் தம்பி பரதனையும் முறையே சிம்மாசனத்தில் அமர்த்தி விட்டு நான் உயிரை விட்டிருப்பேன் என்று சொல்லிவிட்டு, இனியும் இம்மாதிரியான காரியங்களை யாரையும் கேட்காமல் செய்யாதே என்று கூறுகின்றார். பின்னர் லட்சுமணனும், விபீஷணனும், சுக்ரீவன், அனுமன், நீலன், ஜாம்பவான் ஆகியோருடன் பின் தொடர, ராமர் வானரப் படையை முன்னேறிச் செல்லக் கட்டளை பிறப்பித்துவிட்டுத் தானும் தொடர்ந்து முன்னேற ஆரம்பித்தார். ராம, லட்சுமணர்கள் ராவணனால் பாதுகாக்கப் பட்ட வடக்கு வாயிலை அடைந்தனர். மற்றவர்கள் தங்களுக்குக் குறிப்பிடப் பட்ட வாயிலை நோக்கிச் சென்று காற்றுக் கூடப் புக முடியாத அளவுக்கு இலங்கையைச் சூழ்ந்து கொண்டு, யுத்தம் தொடங்கும் நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்போது மீண்டும் ஒரு முறை ஆலோசனைகள் செய்த ராமர் அங்கதனை அழைத்து, ராவணனிடம் சென்று, எச்சரிக்கை கொடுக்குமாறு சொல்லித் தூது அனுப்புகின்றார். ராவணன் செய்த பாவங்களுக்கெல்லாம் முடிவு கட்டிவிட்டு அவன் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டிய வேளை நெருங்கிவிட்டதென்றும், சீதையை ஒப்படைத்துவிட்டு, பாதுகாப்பைக் கோரவேண்டும் என்றும், விபீஷணன் இலங்கை அரசனாய் முடிசூட்டப் படுவான் என்றும், நீ ஒத்துழைக்கவில்லை எனில் உன் உயிர் என் கையில் என்றும் சொல்லி அனுப்புகின்றார். மண்ணோடு மண்ணாக ஆக்கிவிடுவதாயும் சொல்லி அனுப்புகின்றார். அங்கதன் அவ்வாறே ராமனின் உத்தரவை ஏற்று ராவணனின் அரண்மனை அடைகின்றான்.
அங்கதன் கூறிய செய்தியைக் கேட்ட ராவணன் கோபத்துடன் அங்கதனைச் சிறைப் பிடிக்குமாறு உத்திரவிட, அங்கதனை நான்கு அரக்கர்கள் பிடிக்கின்றார்கள். தன் வலிமையை அவர்கள் உணரவேண்டி தானாகவே அவர்களிடம் சிறைப்பட்ட அங்கதன், பின்னர் நால்வரையும், குருவிகளைத் தூக்கிச் செல்வது போல் தூக்கிக் கொண்டு அரண்மனையின் உப்பரிகையை அடைந்து, அங்கிருந்து அவர்களை உதறிக் கீழேதள்ள, அவர்கள் கீழேவிழுந்தார்கள். உப்பரிகையை இடித்துத் தள்ளிவிட்டு அங்கதன் ஆகாயத்தில் தாவி, ராமர் இருக்குமிடம் போய்ச் சேர்ந்தான். ராமரின் அனைத்துப் படைகளும் முன்னேறி இலங்கையைப் பரி பூரணமாய் முற்றுகை இட்டன. நான்கு பக்கங்களிலும் கோட்டையை ஒட்டிக் கோட்டைச் சுவர்கள் போல் அடைத்துக் கொண்டு வந்து விட்ட வானரப் படையைக் கண்ட அரக்கர்கள், ராவணனிடம் ஓடிப் போய் இலங்கை முற்றுகைக்கு ஆளாகி விட்டது என்னும் தகவலைத் தெரிவிக்கின்றனர். ராவணன் வானர சேனை எவ்வாறு அழிப்பது என யோசனையில் ஆழ்ந்தான். ஆனால் ராமரோ எனில் தாமதம் செய்யாமல் எதிரிகளைத் தாக்குவோம் என உத்தரவு பிறப்பிக்கின்றார். கையில் கிடைத்த பாறைகள், பெரிய மரங்கள், மலைகளைப் பெயர்த்தெடுத்த கற்கள், சிறு மலைகள், குன்றுகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டு வானரப் படை இலங்கையைத் தாக்க ஆரம்பித்தது. தாக்குதல் முழு அளவில் ஆரம்பித்தது.
வானரப் படையும், அதன் தலைவர்களும் அவரவருக்கு உரிய இடத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர். உள்ளே இலங்கை நகரிலும், ராவணன் படை வீரர்களை ஊக்குவித்து அனுப்பி வைக்கின்றான். சங்க முழக்கம் கேட்கின்றது. போர்ப் பேரிகை ஒலிக்கின்றது. எக்காளங்கள் ஊதப் படுகின்றன. அரக்கர்கள் ராவணனுக்கு ஜெயம் என்ற கோஷத்தோடு எதிர்த் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர். தேர்களிலும், யானைகள் மீதிலும், குதிரைகள் மீதிலும் அரக்கர் படைகள் வருகின்றன. இந்திரஜித் அங்கதனையும், சம்பாதி, ப்ரஜங்கனையும், அனுமான், ஜம்புமாலியையும், விபீஷணன், சத்ருக்கனன் என்பவனையும், நீலன் நிகும்பனையும், சுக்ரீவன் ப்ரக்சனையும், லட்சுமணன், விருபாஷனையும் எதிர்க்கின்றனர். எண்ணற்ற வானர வீரர்களின் உடல்கள் கீழே விழுகின்றன. அதே போல் அரக்கர்களின் உடல்களும் வெட்டித் தள்ளப் படுகின்றன. ரத்த வெள்ளத்தில் உடல்கள் மிதந்து செல்கின்றன. சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னரும் கூட அரக்கர்கள் வலிமையுடனேயே வானரவீரர்களைத் தாக்குகின்றனர்.தன்னைத் தாக்கிய இந்திரஜித்தின் தேரோட்டியும், தேர்க்குதிரைகளும் அங்கதனால் கொல்லப் படுகின்றனர். இந்திரஜித் களைப்புடன் போர்க்களத்தை விட்டு அகலுகின்றான். ராமர், லட்சுமணர், சுக்ரீவன், விபீஷணன் போன்றோர் அவனைப் போற்றினார்கள். அங்கதனால் துன்புறுத்தப் பட்ட இந்திரஜித்தோ கோபம் மிகக் கொண்டு தன்னுடைய மாயாவி யுத்தத்தில் இறங்கிவிட்டான். தன்னை மறைத்துக் கொண்டு, ராம, லட்சுமணர்களை அம்பு உருக் கொண்ட விஷப் பாம்புகளால் தாக்கினான். மனித சக்திகளை மீறிய சக்தி கொண்ட இந்திரஜித் தன்னுடைய இந்த அம்புகளால் ராமனையும், லட்சுமணனையும் கட்டிவிட்டான். சகோதரர்கள் இருவரும் மயங்கிக் கீழே விழுந்தனர். அம்பு உருக் கொண்ட பாம்புகளால் அவர்கள் உடல் துளைக்கப் பட்டது. ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. வானரப் படை செய்வதறியாது கலங்கி நின்றது.
**************************************************************************************
பெரும்பாலனவர்கள் இந்த ராமாயணத்தைப் படிப்பதில்லை. சிலர் தெரிந்த கதைதானே என்றும், வேறு சிலர் பத்துப் பதினைந்துக்கு மேல் படிக்க முடியவில்லை என்றும் சொல்கின்றனர். எனினும் உத்தர ராமாயணம் வரையிலும் பூராவும் எழுதி முடிக்கவே திட்டம்!!! ஆனால் நம்மில் பெரும்பாலோர் வால்மீகியின் மூலக் கதையை முழுதும் படித்திருக்க மாட்டோம், பெரும்பாலோருக்குத் தெரிந்தது கம்பரும், மற்றச் சில சுருக்கமான ராமாயணங்களுமே/ ஆனால் இது முழுக்க, முழுக்க வால்மீகியின் மூலத்தையே எடுத்துச் சொல்லும் ஒரு முயற்சி. அதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய கம்பரை நன்கு அறிந்தவர்கள் அறிந்தது எல்லாம் ராமன் ஒரு அவதாரம் என்றே. ஏனெனில் கம்பர் ராமாயணம் பூராவுமே ராமரை ஒரு அவதாரம் என்றே குறிப்பிடுகின்றார். அதனாலேயே வாலி வதம் பற்றிய கேள்விகளும், சீதையின் அக்னிப் ப்ரவேசம் பற்றிய கேள்விகளும் எழுகின்றன.வாலியைக் கண்டு ராவணன் அஞ்சினான். வாலி ராவணனை வென்றிருக்கின்றான். ராவணன் பயந்த ஒரே ஆள் வாலி மட்டுமே. அத்தகைய வீரம் பொருந்திய வாலி, சீதையை, ராவணன் தூக்கிக் கொண்டு சென்ற போது, வாலியின் நாட்டின் வழியாகவே சென்ற போதும் அதைத் தடுத்து நிறுத்தவில்லை என்பதைத் திருமதி ஜெயஸ்ரீ அவர்கள் தம் பதிவில் சுட்டிக் காட்டி உள்ளார். அவரின் இந்த வாதம் ஓரளவு ஏற்கக் கூடியதே! ஏனெனில், தன்னை வீழ்த்தியதும், வாலியே ராமனிடம் சொல்கின்றான்:"தர்மச் சங்கிலியை அறுத்துவிட்டு, நன்னெறிக்கட்டுகளைத் தளர்த்திவிட்டு, நியாயம் என்ற அங்குசத்தையும் அலட்சியம் செய்துவிட்டு,மதம் பிடித்த ஒரு யானை போல் நடந்து கொண்டுவிட்ட ராமன் என்பவன் என்னை கொன்றுவிட்டானே? உனக்கு என்ன வேண்டும்? உன் மனைவி சீதை தானே?என்னிடம் சொல்லி இருந்தால் நான் ஒரே நாளில் கொண்டு வந்து சேர்த்திருப்பேனே? ராவணனைக் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுத்து வந்திருப்பேனே?" என்று ராமனைப் பார்த்துக் கேட்கின்றான். ஆகவே வாலி ராவணனைத் தடுக்காததின் காரணமாகவே ராமர் கொன்றிருக்கலாம் என்பது திருமதி ஜெயஸ்ரீயின் கூற்று. jeyasri
ஆனால் வால்மீகியோ தான் அறிந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையே தான் அறிந்தும், கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்ட வரையில் எழுதி இருக்கின்றார். ஆகவே, ராமர் அவ்வாறு நடந்து கொண்டதிலோ, அல்லது சீதையோ, ராமரோ கைகேயியைக் குறை கூறிப் பேசும்போதோ சற்றும் யாருடைய கோபத்தையுமோ, அல்லது, பேச்சுக்களையோ கூட்டியோ, குறைத்தோ சொல்லவில்லை.ராமரோ, அல்லது சீதையோ இப்படி எல்லாம் பேசி இருப்பார்களா என்று போன அத்தியாயத்தைப் படித்தவர்கள் நினைக்கலாம். சாதாரண மானுடப் பெண்ணாக வாழ்ந்த சீதையும் சரி, ராமரும் சரி இப்படித் தான் பேசுவார்கள், பேச முடியும், என்பதை நினவில் கொள்ள வேண்டும்.
மேலும் அரசன் ஆனவன் எவ்வாறு தர்மம், கடமை, நீதி, நேர்மை, நியாயம் பொருந்தியவனாய் இருக்க வேண்டும் என்பதிலும் கடுமை காட்டியே வருகின்றது ராமாயணம் பூராவும். ராவணன் ஒரு வீரனாக இருந்தும், தன் குடி மக்களுக்கு நன்மையே செய்து வந்தும், அவன் தர்மத்தில் இருந்து தவறியதாலேயே அவனுக்கு இந்த வகையில் மரணம் ஏற்படுகின்றது. ஆகவே ஆட்சி புரிவோருக்கு ஒழுக்கம் என்பது முக்கியத் தேவையாக இருந்து வந்திருக்கின்றது என்பது நன்கு விளங்குகின்றது. அதை ஒட்டியே தோன்றி இருக்கும், "மன்னன் எவ்வழி, அவ்வழி மக்கள்" என்னும் கூற்று. ஒவ்வொருத்தரின் பிறப்புக்கும், இறப்புக்கும் தகுந்த காரணங்களையும் சொல்லி வருகின்றது இந்த ராமாயணக் கதை. அவரவர்கள் செய்யும் பாவத்துக்குத் தக்க தீய பலனும், செய்யும் புண்ணியங்களுக்குத் தக்க நற்பலனையும் கொடுத்தாலும் அவரவர்களுக்கு என்று விதிக்கப் பட்ட விதியை யாராக இருந்தாலும் மீற முடியாது. விதியின் பலனை அனுபவித்தே தீரவேண்டும் என்றும் சொல்கின்றது. தமிழில் இவ்வாறு ஊழ்வினையைச் சுட்டிக் காட்டும் காப்பியம் "சிலப்பதிகாரம்".
Tuesday, June 10, 2008
கதை, கதையாம் காரணமாம் - ராமாயணம் பகுதி- 57
தன் கணவன் மறைந்துவிட்டானோ என எண்ணிய சீதையின் புலம்பலும், அழுகையும் அதிகம் ஆனது. அந்த மாயத் தலையை அத்தனை தத்ரூபமாய் வடித்திருந்தான் வித்யுத்ஜிஹ்வா. தன் சிறிய மாமியார் ஆன கைகேயியின் செயலால் அன்றோ ராமன் நாட்டை விட்டுக் காட்டுக்கு வந்து, தன்னையும் பறி கொடுத்துவிட்டு இப்போது இறந்தும் போக நேர்ந்தது?? ஆஹா, ஒருவழியாய் கைகேயி, உன் ஆசை நிறைவேறியதா? உன் மகனுக்குப் போட்டி இல்லாமல் போயிற்றா??? ராமர் கொல்லப் பட்டார். குலமே நாசம் அடந்துவிட்டது. இதுதான் நீ விரும்பியதா? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்??? என்று எல்லாம் புலம்பி மயங்குவதும், சில நேரம் தெளிந்து மீண்டும் புலம்புவதும், அந்தத் தலையின் அருகே அமர்ந்து அழுவதுமாய் இருந்தாள் சீதை! கணவன் முன்னால் இற்ந்து போக மனைவி உயிரோடு இருப்பது போன்ற துயர சம்பவம் என் வாழ்விலும் நிகழ்ந்துவிட்டதே? இது எத்தகைய கொடிய துயரம்??? உங்கள் ஆயுளைப் பற்றிக் கூறிய ஜோசியர்களின் பலனெல்லாம் பொய்த்துவிட்டதோ? குலத்தைத் தவிக்கவிட்டுவிட்டு சொர்க்கம் சென்று உங்கள் தந்தையோடு சேர்ந்தீர்களோ??? என்னைப் பார்க்க மாட்டீர்களா?? என்னோடு சேர்ந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பேன் என்று சொன்ன வாக்குறுதி என்ன ஆயிற்று? லட்சுமணன் கெளசலைக்கு இந்தச் செய்தியைச் சொல்லுவானோ??? நீங்களும் இறந்து, நானும் அரக்கர் பிடியில் மாட்டிக் கொண்டிருப்பதை அறிந்த பின்னரும் கெளசலை உயிரோடு இருப்பாரா??? நிச்சயம் மாட்டார். என்னைக் காக்கும்பொருட்டு சமுத்திரத்தைக் கடந்து வந்த நீங்கள் உயிரை விட நேர்ந்தது என்னாலே அன்றி வேறு என்ன காரணம்??? என் முன் பிறவியில் நான் ஏதோ ஒரு திருமணத்தைத் தடுத்திருக்க வேண்டும், அதனாலேயே எனக்கு இம்மாதிரி ஒரு துயரம் ஏற்பட்டு விட்டது. ஏ, ராவணா, என்னையும் கொன்றுவிட்டு, என் கணவரின் உடல் மீது என் உடலைப் போட்டுவிடு, இறப்பிலாவது அவருடன் நான் ஒன்றாய் இருக்கின்றேன்." என்று சொல்லும்போது, ராவணனின் பணியாள் ஒருவன் ஓடி வந்து மந்திராலோசனை சபையை மந்திரிமார்கள் அவசரமாய்க் கூட்டி இருப்பதால், ராவணன் வரவுக்குக் காத்திருப்பதாய்ச் சொல்லுகின்றான். அவ்வளவில் ராவணன் அங்கிருந்து செல்ல, அந்த மாயத் தலையும் அவனோடு சேர்ந்து மறைந்து போகின்றது.
ராவணன் மந்திராலோசனை சபையில் நுழைந்ததுமே, யுத்த முழக்கம் செய்ய அனைவரும் ஆமோதித்தனர். அப்போது பெரும் துயரத்தில் அசோகவனத்தில் இருந்த சீதையிடம் சரமை என்னும் ஓர் அரக்க குலப் பெண் வந்து ஆறுதல் சொல்லுகின்றாள்.(இவள் விபீஷணன் மனைவி எனச் சில ராமாயணங்களின் கூற்று.)ராமனை யாராலும் கொல்ல முடியாது எனவும், இதுவும் ராவணனின் தந்திரங்களில் ஒன்று, எனவே பயம் வேண்டாம் எனவும் கூறிய அவள் யுத்த முழக்கம் கேட்பதைச் சுட்டிக் காட்டுகின்றாள். படைகள் யுத்தத்திற்குத் தயாராகின்றன என்றும் எடுத்துச் சொல்கின்றாள். யுத்தத்தில் ராமரே வெற்றி பெற்று அவளை மீட்டுச் செல்வார் என்றும் உறுதி அளிக்கின்றாள். யாரும் அறியாமல் ராமரிடம் சென்று சீதையைப் பற்றிக் கூறிவிட்டு, ராமரிடமிருந்து சீதைக்கும் செய்திகளை எடுத்துவரத் தயாராய் இருப்பதாயும் தெரிவிக்கின்றாள். சீதையோ, ராவணனின் திட்டம் என்ன என்று அறிந்து வந்தால் போதும் என்று சொல்லவே அவ்வாறே அவளும் ராவணன் இருக்குமிடம் சென்று அவன் ஆலோசனைகளைக் கேட்டு வந்து சொல்கின்றாள்.ராவணனின் தாயார் அவனை சீதையை ராமனிடமே ஒப்படைக்கும்படி அறிவுரை கூறியதாகவும், இன்னும் சில வயதில் மூத்தவர்களும் அவ்வாறே ஆலோசனை கூறியதாகவும் கூறுகின்றாள். ஆனால் ராவணனோ இவை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் போருக்கு ஆயத்தம் அடைந்ததாயும் சொல்கின்றாள். ராமர் ராவணனைப் போரில் வீழ்த்துவார் எனவும், சீதையை மீட்டுச் செல்வார் எனவும் ஆறுதல் கூறுகின்றாள். வானரப் படைகளின் பேரொலி கேட்கின்றது. ராவணன் தரப்பில் அரக்கர்களிடம் மனவலிமை ஏனோ குன்றத் தொடங்கியது. அரசன் செய்தது குற்றம் என அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்த காரணத்தால், நம்பிக்கை அவர்களிடமிருந்து அகன்றது. ஆனால் ராவணனோ தீர்மானமாய் யுத்தம் செய்வதில் இருந்தான். அவன் பாட்டனாகிய மால்யவான் ராவணனுக்கு அவன் செய்த தவறுகளை எடுத்துக் காட்டுகின்றான். படைப்புகள் அனைத்துமே இருவகையிலேயே இயங்குவதாயும், நன்மை, தீமை என்ற அந்த இருவகையிலே அரக்கர்கள் தீமையின் வழியிலேயே சென்றுவிடுவதாயும் சொல்கின்றான். தர்மத்தின் வழியிலேயே மற்றவர்கள் செல்வதால் அவர்களுக்குத் தர்மம் ஒரு பெரும்பலமாய் இருந்து காப்பதாயும் சொல்கின்றான். தர்மத்தை வளர்த்து வந்த ரிஷி, முனிவர்களைத் துன்புறுத்திவிட்டு நாம் செய்யும் யாகமோ, தவமோ நம்மைக் காப்பாற்றாது என்பதை அறிவாயாக! ராவணா, நீ பெற்றிருக்கும் வரமோ தேவர்களிடமிருந்தும், ராட்சதர்கள், அரக்கர்கள், யக்ஷர்கள் போன்றோரிடமிருந்து உனக்கு மரணம் இல்லை என்பதே. ஆனால் இங்கே வந்திருக்கும் பெரும்படையோ எனில் வானரர்களையும், மனிதர்களையும் கொண்டது என்பதை மறந்து விடாதே! அபசகுனங்களும், ரத்தமழை பொழியும் மேகங்களும் இலங்கையைச் சூழ்ந்துள்ளன. அரக்கர்களில் பலருக்கும் துர் சொப்பனங்கள் வருகின்றன. தெய்வங்களுக்கு என்று படைக்கப் படும் உணவை நாய்கள் தின்கின்றன. சூரியனைப் பார்த்து மிருகங்களும், பறவைகளும் எழுப்பும் சப்தம் கர்ணகடூரமாய் உள்ளது. ராவணா, நமக்குப் பேரழிவு காத்திருக்கின்றதோ என்று அஞ்சுகின்றேன், மேலும் மனித உருவில் விஷ்ணுவே தான் ராமனாய் வந்திருக்கின்றாரோ எனத் தோன்றுகின்றது. நினைத்துப் பார்! கடலில் எத்தகைய அற்புதமான பாலம் அமைக்கப் பட்டிருக்கின்றது இந்த ராமனின் ஆணியால். ஆலோசனைகள் செய்துவிட்டு முடிவை எடுப்பாய்." என்று கூறுகின்றான்.
கோபம் கொந்தளித்துக் கொண்டிருந்த ராவணனுக்குப் பாட்டனின் வார்த்தைகள் இன்னும் அதிகக் கோபத்தையே ஏற்படுத்தியது. பல்வேறு சாத்திரங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்த தன் பாட்டன், யாருடைய தூண்டுதலாலோ இவ்விதம் பேசி இருக்க வேண்டும் என்றும், அல்லது தன் பேரனாகிய தன் மீதுள்ள வெறுப்பினால் பேசி இருக்க வேண்டும் என்றும் நினைத்தான். அப்படியே பாட்டனிடம் சொல்லவும் சொன்னான். சீதையைத் திரும்பிக்கொடுப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று உறுதிபடச் சொல்லிவிட்டான், தசக்ரீவன். அவன் பாட்டனும் அவனுக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் கூறிவிட்டுச் சென்றான். சபையில் போர்த் திட்டங்கள் விவாதிக்கப் பட்டன. ராவணன் பாதுகாப்புக்கான பல்வகை உபாயங்களையும் கையாண்டு அதற்கேற்ப உத்திரவுகளைப் பிறப்பித்தான். அதே போல் ராமரும் வானரப் படையும், தாங்கள் தங்கி இருந்த இடத்தில் விவாதித்துக் கொண்டிருந்தனர். விபீஷணன், தன் அமைச்சர்களைப் பறவை உரு எடுத்துக் கொண்டு இலங்கையின் காவல் பற்றித் தெரிந்து வந்து சொல்லச் சொல்ல அவர்களும் அவ்வாறே சென்று தெரிந்து வந்து சொல்கின்றார்கள். ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொருவரால் பலமாய்க் காக்கப் படுகின்றது என்றும், ராவணனின் பலத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் அறிந்து கொள்கின்றனர் அனைவரும். அனைத்தையும் கேட்டுக் கொண்ட ராமர் யார், யார், எவர் எவரை, எம்முறையில் தாக்குவது என்று முடிவு செய்து கட்டளைகள் பிறப்பிக்கின்றார்.
அதன்படி நீலன், கிழக்கு வாயிலில் நிற்கும் பிரஹஸ்தனையும், தெற்கு வாயிலின் மஹாபார்ச்வனையும், மஹோதரனையும் அங்கதனும், மேற்கு வாயிலைத் தகர்த்து உள்ளே புகும் பொறுப்பு அனுமனிடமும், ராவணனாலேயே பாதுகாக்கப் படும் வடக்கு வாயிலை ராமரும், லட்சுமணனும் தாக்குவதாயும் முடிவு செய்யப் படுகின்றது. சுக்ரீவன், ஜாம்பவான், விபீஷணன், ஆகியோர் படையின் மத்தியிலும், ஊரின் மத்தியிலும் புகுந்து தாக்க வேண்டும். வானரர்கள் அனைவரும் தங்கள் சொந்த வானர உருவிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் நம் படை வீரர்களை நாம் தனியாக அடையாளம் காணலாம். ராமர், லட்சுமணன், விபீஷணன், அவனுடன் வந்திருக்கும் நால்வர் ஆகிய ஏழு பேர் மட்டுமே மனித உருவில் இருப்போம். என்று கட்டளை இடுகின்றார் ராமர். பின்னர் லட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன் ஆகியோர் தொடர சுவேல மலை மீது ராமர் ஏறினார். இலங்கை முற்றுகைக்கு வானரப் படை ஆயத்தம் ஆனது.
Subscribe to:
Posts (Atom)