சந்திரகண்டா மூன்றாம் நாளுக்கான தேவி! மூன்று கண்களை உடைய இவளை வணங்கினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். சந்திரகாந்தக் கல் எப்படி சந்திரனின் குளுமையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு நீரைப் பொழிகின்றதோ அப்படியே அம்பாள் நம் வெம்மையைத் தன்னுள் வாங்கிக் கொண்டு குளுமையான கருணை நீரைப் பொழிகின்றாள். இங்கே வெம்மை என்பது நம் வினைகளைக் குறிக்கின்றது. நம் தீவினைகளால் ஏற்படும் வெப்பத்தைத் தணிவித்துத் தன் கருணை மழையால் நம்மைக் குளிர்விப்பவள் இவளே. முக்கண்ணனின் பத்தினியான இவளும் முக்கண்களைக் கொண்டு தலையில் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டு காக்ஷி கொடுக்கின்றாள். நாம் செய்யும் தீவினைகள் ஆகிய அசுரர்களைத் தடுக்கக் கையில் பல்வேறு ஆயுதங்களை ஏந்தியவண்ணம் காக்ஷி கொடுக்கின்றாள். ராகுவினால் துன்பம் நேருமோ என அஞ்சுபவர்கள் இவளைத் துதிக்கலாம். செவ்வாய்க் கிழமைகளில் இந்த தேவியைத் துதித்தல் துன்பம், தடைகள் நீங்கி வாழ்வில் வளம் பெறலாம். திருவாலங்காட்டில் காளியைத் தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆட்டம் ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். ஒரு காலைத் தரையில் ஊன்றி, மறு காலைத் தோளுக்கு இணையாக உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆட்டத்தில் இருந்து தோன்றியவளே சந்திரகாந்தா தேவி.

இன்றைய தினம் நான்கு, ஐந்து வயதுப் பெண் குழந்தையைக் கல்யாணியாகப் பாவித்து வழிபட வேண்டும். நக்ஷத்திரக் கோலம் போடலாம். அல்லது முத்துக்களால் ஆன மலர்க்கோலமும் போடலாம். குழந்தைகள் சாப்பிடுவதால் நிவேதனத்துக்கு கோதுமை மாவினால் ஆன லாடும், சர்க்கரைப் பொங்கலும் செய்யலாம். செண்பகப் பூக்கள், மரு, செம்பருத்தி, தாமரை மலர்கள், குங்குமத்தாலும் அர்ச்சனை செய்யலாம். மஹிஷத்தின் தலை மீது வீற்றிருக்கும் கோலத்தில் தேவியை அலங்கரிக்கலாம். வெப்பத்தைப் போக்கும் தேவி என்பதால் தயிர் சாதமும் நிவேதனம் செய்யலாம். மாலையில் வெள்ளைக்காராமணி அல்லது பச்சைப்பயறுச் சுண்டல் செய்யலாம்.
சர்க்கரைப் பொங்கல் இரண்டு பேருக்கானது: அரைக்கிண்ணம் பச்சரிசி, கால் கிண்ணம் பாசிப் பருப்பு. இரண்டையும் 250 மில்லிலிட்டர் பாலில் குழைய வேகவிடவும். நன்கு குழைந்ததும் வெல்லம் பொடியாக்கியது ஒன்றரைக்கிண்ணம் சேர்க்கவும். நெய் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு வெல்ல வாசனை போகக் கிளறவும். நன்கு சேர்ந்து வந்ததும் ஒரு கடாயில் இன்னொரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பு, திராக்ஷையை வறுத்து நெய்யோடு சர்க்கரைப் பொங்கலில் சேர்க்கவும். கீழே இறக்கும்போது ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கலந்து கீழே இறக்கவும்.
கோதுமை மாவு லாடு: அரைக்கிண்ணம் கோதுமை மாவு, ஒரு கிண்ணம் சர்க்கரை, அரைக்கிண்ணம் நெய், முந்திரிப்பருப்பு ஒரு கைப்பிடி, ஏலக்காய்த் தூள் அரை டீஸ்பூன். அரைக்கிண்ணம் நெய்யை நன்கு சூடாக்கி கோதுமை மாவை அதில் சேர்க்கவும். நன்கு வாசனை வந்து மாவு பொரிந்து மேலே வரும். அப்போது ஒரு கிண்ணம் சர்க்கரையைப் பொடியாக்கிச் சேர்த்துக் கலக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். இன்னொரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்துக் கலந்த மாவில் கொட்டவும். மாவை நன்கு கலந்து ஆற விடவும். ஆறியதும் நிதானமாக உருண்டைகள் பிடிக்கலாம்.
தயிர்சாதம்: அரிசி ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு குழைய வேக வைக்கவும். 250 மில்லி லிட்டர் பாலை நன்கு காய்ச்சி வெந்த சாதத்தில் சூட்டோடு கொட்டிக் கிளறவும். சற்றே ஆறியதும் ஒரு கரண்டி ஆடையுடன் கூடிய தயிரைச் சேர்க்கவும். தேவையான உப்புச் சேர்க்கவும். நல்லெண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், பெருங்காயம், இஞ்சி சேர்த்துக் கலந்து சாதத்தில் கொட்டவும். தேவையானால் முந்திரி, திராக்ஷை, மாதுளை முத்துக்கள் சேர்க்கலாம். இல்லை எனில் காரட், மாங்காயைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.
முதல்நாளே வெள்ளைக்காராமணியை ஊற வைத்து நன்கு கழுவி உப்புச் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும். பின்னர் வடிகட்டிக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு, கருகப்பிலை, மி.வத்தல், பெருங்காயம் தாளித்துக் கொண்டு வெந்த காராமணியை/பயறைக் கொட்டி ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியும் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் துருவிய தேங்காய்த் துருவல் சேர்க்கவும். விநியோகத்துக்குச் சுண்டல் தயார்.
ஹிஹிஹிஹி, அ.வ.சி. இன்னிக்குப் பயறுச் சுண்டல் செய்திருக்கேன். காலையில் தான் ஊற வைச்சேன் என்பதால் வேகுமோ வேகாதோ என்ற சந்தேகத்தில் குக்கரில் போட்டுட்டேன். குழைந்து விட்டது! சுண்டல் துவையல் மாதிரி இருக்கு! ஆனாலும் உப்பு, காரம் ஓகே! படம் எடுத்தேன். செல்லில் தான். ஶ்ரீராமுக்கு வாட்ஸப்பினேன். அவர் கிட்டே இருந்து பதில் இல்லை. எங்கானும் சுண்டல் கலெக்ஷனுக்கு அவங்க பாஸை அழைச்சிட்டுப் போயிட்டாரோ என்னமோ! வந்து படம் அனுப்பினால் போடறேன்.இல்லைனா நாளைக்குப் பார்த்துக்கலாம். ஓகேயா!
படங்கள் வந்துவிட்டன. போட்டாச்சு! :) சின்னக் கிண்ணத்தில் கொஞ்சம் போல் சுண்டல் வைச்சிருக்கேன். மீதம் தனியா இருக்கு!