நண்பர்களுக்கு நன்றி
என்னுடைய பதிவில் வந்து பின்னூட்டம் இட்ட எல்லா நண்பர்களுக்கும் முதலில் என் நன்றி. நான் இரண்டு மூன்று நாளாக ஒன்றும் எழுத முடியாமல் போனதற்கு என் கையில் நான் பட்டுக்கொண்ட வெட்டுக்காயம் மிகவும் ஆழமாகப் பட்டுக் கொண்டதால் type செய்யமுடியவில்லை. மற்றபடி நான் அவன் பின்னூட்டங்களுக்குப் பயந்து நிறுத்தவில்லை. அவன் என் வீட்டுச் சூழ்நிலை சரியாக இல்லாமல் இருந்தபோது கொடுத்த தொந்திரவில் கூட அதை அழிக்க உட்கார நேரம் கிடைக்காமலும் அழிக்கும்போது blogger சொதப்பிலும் தான் கஷ்டப்பட்டேன். மற்றபடி மட்டுறுத்தல் செய்து உள்ளேன்.நான் அவ்வளவு பிரபலம் இல்லாத போதே அவன் இப்படி என்றால் மற்றவர்களை என்ன பாடு படுத்தி வருவான் என்று புரிகிறது. விட்டுத் தள்ளுங்கள்.வேறு விஷயம் பார்ப்போம். மறுபடியும் நண்பர்களுக்கு நன்றி.
கீதாக்கா, உங்க பதிவைப் பார்த்தேன். உங்க கையறு நிலை இப்போ தான் புரியுது... நான் கூட எங்க காணோமேன்னு பாத்துகிட்டிருந்டேன்.. கையப் பாத்துக்குங்கக்கா.. காய்கறி எல்லாம் ஏன் நிங்க வெட்டறீங்க? வேற யார்கிட்டயாவது (சாம்பசிவம் ஐயா ) ;) கிட்ட குடுக்க வேண்டியது தானே..
ReplyDeleteதேர்தல் வேலையெல்லாம் நிறைய இருக்கு, சீக்கிரமா கைய சொகப்படுத்திகிட்டு வந்து யானை மேல ஏறிக்குங்க.. :)
கீதாக்கா, ஏதோ ஒரு ஆர்வத்துல ரொம்ப கிண்டல் பண்ணி பின்னூட்டம் போட்டுட்டேன்னு நினைக்கிறேன், தப்புன்னு தோணிச்சுன்னா, அழிச்சுடுங்க. :) :)
ReplyDeleteகீதா அக்கா, கொஞ்சம் கவனமா இருக்க கூடாதா? வீட்டு வேலை எல்லாம் இப்போ வேண்டாம். ஒய்வு எடுங்கள்.
ReplyDeleteரொம்ப நன்றி, பொன்ஸ் மற்றும் அம்பிக்கு. அம்பி, உங்கள் பதிவைப் படித்து வருகிறேன்.நீங்கள் எழுதி இருப்பதில் இருந்து உங்களுக்கு போலி டோண்டுவைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று புரிந்து கொண்டேன். நல்லவேளை அவன் உங்கள் மனதைச் சோர்வடையச் செய்யவில்லை. கடவுளுக்கு நன்றி.
ReplyDelete