எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 16, 2006

109. ஒரு அவசரமான பதிவு

திக்கெட்டும் பரவிக்கிடக்கும் தலைவியின் புகழைக் கண்டு பொறாமை கொண்ட சில நெஞ்சங்கள், அவர் தம் புகழைக் கெடுக்கும் வகையிலே, சம்பந்தமே இல்லாமல் அவரின் வயதைப் பற்றிக் கேள்வி கேட்டு அவரை மிகவும் நோக அடித்துள்ளனர். இப்போது வலை உலகில் மிக அவசியமான விஷயங்கள் எத்தனையோ இருக்கத் தலைவியின் வயதா முக்கியம்? அவர் என்றும் பதினாறு என்பதுதான் எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயம். அதற்குச் சாட்சி அவர் தாசில்தார் கிட்டே சான்றிதழ் வாங்கும்போது துணை செய்த திரு பித்தானந்தா அவர்கள். மேலும் தலைவருக்கெல்லாம் தலைவரான திரு கைப்புள்ள அவர்கள் தலைவியை ஏதாவது கேள்வி கேட்கிறாரா? தலைவியின் பேச்சு "கா" என்பதோடு அவர் விட்டு விடுகிறார். நாகை சிவாவோ அணுக்கத் தொண்டராக மாறி இன்னும் விம்மி, விம்மி அழுது கொண்டிருக்கிறார். அவர் அழுகையை அடக்கத் தனிப்படை புறப்பட்டுப் போயிருக்கிறது.

இது இங்ஙனம் இருக்க நம்ம அம்பி என்ன செய்கிறார்? தலைவி பங்களூர் வந்த போது குண்டர் படைத் தலைவர் வந்ததையும் பொறுத்துக் கொண்டு அவரை நல்வழிப் படுத்தி அவருக்கு உப்புப் பொட்டலம் பரிசளித்து அவரைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டார். இந்த அம்பிக்கு இதெல்லாம் பார்த்து என்ன செய்வது என்று புரியாமல் தலைவியைச் சாடுகிறார். அதுவும் யார் துணையில்? இத்தனை நாள் தலைவிக்குத் துணை இருப்பேன் என்று சொன்ன புதரகத் தூதர் ச்யாமின் துணையுடனும், அவர் தம் பாச மலர் வேதாவின் துணையுடனும். தலைவி புதரகத் தூதர் பொறுப்பில் இருந்து ச்யாமை விடுவிக்க மிகுந்த மன வேதனையுடன் பரிசீலித்து வருகிறார். சரி. அது தான் போச்சு என்றால் தம்பி என்பவர் தலைவிக்கு ஆதரவாக விளம்பரம் வெளியிட முயல இந்த அம்பி அங்கே போய் அவரையும் ஊக்குவிக்கிறார். ஊக்கு விற்க வேண்டாம், ஊசி அல்லது பின் போதும் என்று தலைவி சொன்னாலும் கேட்கவில்லை. தன் பதிவிலே எழுதுகிறார்: உங்களுக்கு இருக்கு ஆப்பு, உங்களுக்கு இருக்கு ஆப்பு என்று என்னத்தை இவர் ஆப்பு வச்சு என்னத்தப் பண்ணறது. இவரால் முடியாததை ஏன் சொல்றார். அதான் இன்னிலேருந்து அம்பி பேர் "ஆப்பு அம்பி" என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

11 comments:

  1. அதானே! மொக்கை பதிவு போடலைனா உங்களுக்கு தூக்கமே வராதே!
    சிங்கத்தை சீண்டி விட்டாச்சு! Grrrr.

    வைர மூக்குத்தியா வேணும்? அதுக்கு முதலில் மூக்கு குத்தனும், ஷ்யாம் அந்த கோணி ஊசிய கொண்டு வா! உன் பாசமலர், வேதா அந்த நற்காரியத்தை செய்வா!

    ReplyDelete
  2. கோணி ஊசியா வேணும்? அதெல்லாம் முன்னாடியே மூக்கு குத்தி வச்சிருக்கேன். மூக்குத்தியை வாங்காமல் விடப் போறதில்லை, ஆப்பு அம்பி, சிங்கமா? சிங்கம்? அசிங்கம்! :D

    ReplyDelete
  3. கோணி ஊசியா வேணும்? அதெல்லாம் முன்னாடியே மூக்கு குத்தி வச்சிருக்கேன். மூக்குத்தியை வாங்காமல் விடப் போறதில்லை, ஆப்பு அம்பி, சிங்கமா? சிங்கம்? அசிங்கம்! :D

    ReplyDelete
  4. ஐயோ எங்கள் தானை தலைவலி ச்சே தலைவி இப்படி ஒரு முடிவு எடுக்கலாமா....அம்பி கூட நான் சேர்வேனா? இது எல்லாம் அயல் நாட்டு சதி...இத நம்பி என்ன பதவில இருந்து தூக்கிடாதீங்க...
    :-)
    அம்பி இப்படி பப்ளிக்ல எல்லாம் கோணி ஊசி கேக்கப்படாது :-)

    ReplyDelete
  5. Aunty!!! Unga sandai Besh Besh Romba Nanna irruku...

    ReplyDelete
  6. வேதா,
    நீங்க ஒரு சாதா,
    உங்களுக்கு வைரமூக்குத்தி கிடையாது. எனக்குத்தான்.

    ReplyDelete
  7. ச்யாம், கோரிக்கை பரிசீலிக்கப் படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையைப் பொறுத்து முடிவு எடுக்கப் படும்.

    ReplyDelete
  8. ஆஹா! அருமையோ அருமை! ஆப்பு அம்பி என்ற அருமையான பட்டம் தந்த தலை(வலி)வி வாழ்க! :)(அதாவது அம்பிக்கு தலைவலி கொடுத்த தலைவின்னு அர்த்தம்!)

    ReplyDelete
  9. //அப்டியா? அந்த எல்லாரும் என்பது நீங்க மட்டும் தான?:)
    ஏன்பா, அம்பி, ச்யாம், சிவா, இன்னும் இங்கே வந்து கடனேன்னு பின்னூட்டம் போடற நீங்க எல்லாம் இத ஒத்துக்கிட்டீங்களா என்ன? //
    வேதா இப்படியா சபையில கேட்பது. அப்புறம் நான் உண்மைய சொல்லிடுவேன். வேணாம் விடுங்க.

    ReplyDelete
  10. இந்தியத்தேவதையே,
    நீங்களாவது பாராட்டுறீங்களே? பாராட்டுக்கு நன்றி. ஆப்பு அம்பி வாழ்க! என்ன ஒரு பெருந்தன்மையோடு சொல்லறேன் பாருங்க!

    ReplyDelete
  11. you too Siva, ஐயகோ, இந்த நல்ல வல்லவரை யாரோ மனம் மாற்றி விட்டார்களே? என் செய்வது?
    கடனேன்னு தான் பின்னூட்டம் போடறேன்னு இப்படியா பப்ளிக்கா ஒத்துக்கறது? நான் வெளியே எப்படித் தலை காட்டுறது?

    ReplyDelete