எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 23, 2006

117. சபாஷ் வேதா!

முந்தா நாள் தற்செயலா வேதாவுக்கு மெயில் கொடுத்தேனா, அன்னிக்கு அவங்க பிறந்த நாள். எனக்கு அது தெரியாமலே கொடுத்தேன். அப்போ அவங்க கொடுத்த ஒரு பதிலில் அம்பியைப் பத்தி ஒரு certificate கொடுத்திருக்காங்க, பாருங்க. சிரிச்சுச் சிரிச்சு எனக்கு வயிறே புண்ணாயிடுச்சு. தலைவிக்குப் பிடித்த அந்த வார்த்தையைப் print out எடுத்து, "தக தக தங்க வேட்டை" மாதிரி தக தக தங்க எழுத்துக்களிலே பொறிச்சு ஒரு பட்டயம் மாதிரி செய்து, அல்லது lamination செய்து அம்பிக்குப் பரிசளிக்க முடிவு செய்துள்ளார். இதற்கு எல்லாரும் ஏகபோக ஆதரவு தெரிவித்தனர்.

ஆகவே தோழர்களே, தோழியர்களே, அம்பிக்குப் பரிசளிப்பு விழா நம்ம கைப்புள்ள தலை மேலே, தேவ் கையாலே (தேவ், இப்போ கொஞ்சமாவது திருப்தியா? அடுத்த பதிவிலே நிறைய எழுதறேன்.) அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. அதற்கு நேரம், இடம் முடிவு செய்தார், தலைவி. அதாவது நல்ல கொட்டும் மழையில் சென்னையில் எல்லாத் தெருக்களும் தண்ணீர் ஓடாமல் தேங்கி நிற்கும் காலத்தில் இது நடைபெறும். (அப்போதான் யாருமே வர மாட்டாங்க.) பாராட்டு விழாவிற்கு லாரிகளிலும், வேன்களிலும் தொண்டர் படை மற்றும் குண்டர் படை அழைத்து வரப்படும். செலவு? வேறே யாரு? நம்ம விவசாயிதான். பட்டயத்திற்கு ஆகும் செலவு அல்லது lamination பண்ண ஆகும் செலவு எல்லாம் நம்ம நாகை சிவாவைச் சேர்ந்தது. இம்முறை அவர் தப்பிக்க முடியாது. அப்படி அவர் அழுது, அடம் பிடித்தால் அவருக்கு "லாலிபாப்" வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்யும் பொறுப்பு அம்பி, கைப்புள்ள ஆகியோர் ஏற்க வேண்டும். பாசமலர்களான வேதாவும், ச்யாமும் மின்சார விநியோகம் மற்றும் ஸ்பீக்கர் செட் செலவை ஏற்க வேண்டும். போன முறை தலைவியின் பிரிவுபசார விழாவிலும், வெற்றி விழாவிலும் ஏற்பட்ட முணுமுணுப்பைச் சமாளிக்கவே இம்முறை எல்லாம் பகிர்ந்து அளிக்கப் படுகிறது.

தலைவிக்குப் பாராட்டு விழாவுக்கு வர A/C Volvo Bus ஏற்பாடு செய்யும் பொறுப்பு அம்பியைச் சேர்ந்தது. பங்களூரில் இருந்து வரும்போதே அவர் அதைக் கொண்டு வரும்படிக் கேட்டுக் கொள்ளப் படுகிறார். தலைவியுடன் அவர் குடும்பத்தினர் ஒரு 50 அல்லது 60 பேர் மட்டும் கலந்து கொள்வார்கள் என்பதால் தான் பஸ்ஸே போதும் என்று பெரிய மனதுடன் தலைவி கூறிவிட்டார்.கார்த்திக் இப்போதுதான் புதரகம் போயிருப்பதாலும், அவர் ஊருக்குப் புதிசு என்பதாலும் அவர் விழாவில் கலந்து கொண்டால் போதும் எனத் தலைவி பெரிய மனதுடன் கூறி விட்டார். தலைவிக்குப் பிரிவுபசார விழாவில் போன முறை போஸ்டர் அடித்ததைத் தலைவி "தன் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டேன்" என்றும் கூறினார்.

அம்பி அப்படி என்ன certificate வாங்கினார் என்று எல்லாருக்கும் ஆச்சரியமாக இருக்கும். வேதா சொன்னது: "As usual Aappu Ambi is always wrong." ஆகவே தோழர்களே, தோழியர்களே, தலைவியின் வயதைப் பற்றி அம்பி கூறுவது தவறு என்று வேதாவே ஒத்துக் கொண்டு விட்டார். வெற்றி நமக்கே! வெற்றி வேல், வீர வேல்!

31 comments:

 1. cha! ipdi mokkaiyooo mokkai post podarathunaala thaan blogspot ellam banned.

  ReplyDelete
 2. என்னத்த சொல்ல வர வர உங்க அராஜகத்துக்கு அளவே இல்லாம போயிகிட்டு இருக்கு. என்ன பண்ணுறது.

  சபாஷ் மீனா தான் பாத்து இருக்கேன். இப்ப சபாஷ் வேதா வேறயா. அவ்வளவு ரைமிங்கா இல்லயே. வேதாள வேதா தான் நல்லா இருக்கு.

  ReplyDelete
 3. அம்பி, ரொம்ப எரியுதா? என்ன செய்யறது? :D

  ReplyDelete
 4. ஹி,ஹி,ஹி சிவா, தலைவின்னா அப்படித்தான் இருக்கும். வேதாள வேதாவும் நல்லாத் தான் இருக்கு. ஆனால் அவங்களைப் பாராட்டணும்னா என்ன செய்யறது? இது தான் சரியா வரும். :D

  ReplyDelete
 5. /./.
  பின்னூட்டம் போடலைன்னா சங்கப் பக்கம் வரலைனு நினைக்காதீங்க. இந்த மாத "அட்லஸ் வாலிபர்" யாருங்கிறதிலே இருந்து பார்த்துக்கிட்டே இருக்கேனாக்கும்
  /./

  இதையேதான் நானும் சொல்லுறேன்.
  எல்லாத்தையும் படிச்சிகிட்டு தான் இருக்றேன்.

  வெளியிலிருந்து ஆதரவு.

  அட்டென்னஸ் குடுக்கனுமா டெய்லி??

  உங்கள் பதிலில் தான் இருக்கு..::))))

  ReplyDelete
 6. //வேதாள வேதா தான் நல்லா இருக்கு. //
  he hee, puli unakku time seri illanu ninaikiren. veda vanthu jingu jingkunu kuthikka poraanga paaru! :)
  yappadi! mudinjathu en velai. :)

  ReplyDelete
 7. @மின்னல், என்ன ரொம்பவே சூடா இருக்கீங்க? என்ன விஷயம்?
  /./

  எவ்வளவு ஆப்பு வாங்குனாலும் சிரிச்சிகிட்டே இருக்குறவங்க நாங்க.

  நாங்க ஏன் சூடா...??

  /./
  வலைப்பக்கத்துக்கும் வரதில்லை. :D
  /./

  தப்புதான் என்ன பண்ணுறது..

  இங்ககூடதான் ரெண்டு பதிவுக்கு வரல..

  வலைக்குள் விழுந்தா எங்கையாவது கொண்டுபோய் விட்டு விடுகிறது...
  கால் போன போக்கில் மேய்கிறேன். திரும்பிபாத்தா வேலை வந்து விடுகிறது..!!!!!!!!!

  ReplyDelete
 8. என்னத்த சொல்ல வர வர உங்க அராஜகத்துக்கு அளவே இல்லாம போயிகிட்டு இருக்கு.
  /./

  புலம்பாம
  விழா ஏற்பாட்டை கவனி
  தலவி சொல்லுறாங்கள...::::)))

  ReplyDelete
 9. ஒரு மூன்று பதிவுக்கான மொத்தப் பின்னூட்டத்தையும் இப்படியா சேர்த்துப் போடறது மின்னல்?
  தனித் தனியாப் போட்டிருந்தா எண்ணிக்கையாவது கூடி இருக்கும். பரவாயில்லை. எல்லாப் பதிவுக்கும் இப்படியே வந்து ஒரு பத்து பின்னூட்டம் போட்டுடுங்க போதும், வேலை என்ன வேலை? அது பாட்டுக்கு இருக்கட்டும். :D

  ReplyDelete
 10. ஹி,ஹி,ஹி, மின்னல், தலைவி எல்லாம் சங்கத்துலே வந்து உட்காருவாங்களா என்ன? சும்மா அப்படி வந்து பார்த்து, என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கிட்டு அப்புறம் யாருக்கு என்ன வேணுமோ அதைச் செய்வாங்க. அதானே நானும் செய்யறேன், சங்கத்துக்கு என்னோட உ.பி.ச. வேதா வருவாங்க.

  ReplyDelete
 11. ஆப்பு அம்பி நாரதர் அம்பியா மாறியாச்சு,
  வேதாள வேதா, சீச்சீ, சபாஷ் வேதா, இன்னும் என்ன செய்யறீங்க?

  ReplyDelete
 12. சிவா,
  சமத்தா "லாலிபாப்" வாங்கிக்கிட்டு விழா ஏற்பாட்டைக் கவனிங்க, அதான் பெரியவர் சொல்றாரு இல்ல? :D

  ReplyDelete
 13. வர வர உங்க அக்கப் போர் தாங்க முடியலீங்க:) இப்ப என்ன ஆப்பு அம்பி பட்டத்தை நீங்க தானே கொடுத்தீங்க, நான் அதை வழி மொழிந்தேன் அதுக்கு இப்படி ஒரு மொக்கை போஸ்டா? நீங்க அனுப்பின ஒரு மெயிலுக்கு நான் பதில் சொன்னேன் அவ்வளவு தான், ஆனா இப்படி தனிப்பட்ட விஷயத்தையெல்லாம் போஸ்டா போட்டு நீங்க மொக்கை போஸ்ட் ஸ்பெஷலிஸ்டுன்னு அடிக்கடி ப்ரூவ் பண்றீங்க:)
  சிவா, உங்களுக்கு நேரம் சரியில்லை அவ்ளோ தான் சொல்ல முடியும்:)

  ReplyDelete
 14. http://thacnathaku.blogspot.com/

  ReplyDelete
 15. ஹி,ஹி,ஹி, வேதா,
  அம்பி பத்திச் சொன்னதெல்லாம் தனிப்பட்ட விஷயமா என்ன? உலகமஹா ரகசியத்தைக் கண்டு பிடிச்ச உங்களுக்குப் பாராட்டே நடத்தப் போறேன், நீங்க வேறே, அதெல்லாம் அம்பி ஒண்ணும் சொல்றதில்லை. ஆப்பு அம்பின்னே கையெழுத்துப் போட ஆரம்பிச்சுடுவார்.
  சிவா, பாவம் விட்டுடுங்க அவரை. :D

  ReplyDelete
 16. அனிதா,
  இன்னிக்குப் புதுசா வந்துட்டு என்ன புரியும்? இதெல்லாம் சாமானியவர்கள் புரிந்து கொள்ள முடியாதது. :D

  ReplyDelete
 17. பெருசுன்னா பெருசு தான். புதிசா எல்லாம் ஐடியா கொடுக்கிறீங்களே? ரொம்ப டாங்ஸு
  .

  ReplyDelete
 18. //இன்னிக்குப் புதுசா வந்துட்டு என்ன புரியும்? இதெல்லாம் சாமானியவர்கள் புரிந்து கொள்ள முடியாதது//

  ஆமாம், கண்டிப்பா புரியாதுதான்.புரியணும்னா குறைந்தது 2 மாசம் ஆப்பு வாங்கினாதான புரியும்.

  ReplyDelete
 19. முடியல....
  உஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே... :-)

  ReplyDelete
 20. அனிதா இன்னும் ஒரு 10 வருசம் இவங்க பிளாக் படிச்சீங்கன்னா கூட ஒன்னும் புரியாது :-)

  ReplyDelete
 21. ஆஹா..ஒரு போஸ்டருக்கே இப்படியா..தலைவி கீதாவே..அப்ப அடிக்கடி போஸ்டர் ஒட்டி விட வேண்டியது தான்..

  ஆமா..அப்படி வேதா என்ன தான் சொன்னாங்க அம்பி பத்தி..அத சொல்லாம விட்டுடீங்களே..கீதா

  ReplyDelete
 22. thalaivi kitta konjam ushara thaan irukkanum..illaina namakku etho oru pattam katti, post pottu viduvaanga..

  thanga thalaivi vazhka.. (eppa..velai vetti illama ippadi ellam kosam poda vendi irukku..ellam oru payam thaaan)

  ReplyDelete
 23. வேதா..பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. உங்க பிறந்த நாளை நாகை சிவா தப்ப புரிஞ்சுகிட்டு, புது பேர் வச்சுட்டார் போல..

  ReplyDelete
 24. asin ambi ippO aappu ambi aakittar pola.. vazhthukkal ambi..

  ReplyDelete
 25. geetha madam, comments padai pothuma..innum konjam venumaa.

  ReplyDelete
 26. தம்பி,
  நீங்க இன்னும் ஆப்பு வாங்கலைன்னு குறைப் படறீங்க போல இருக்கு. கவலையே படாதீங்க, கொண்டாடிடலாம். அம்பிக்கும், தம்பிக்கும் சரியாத் தான் இருக்கும்.

  ReplyDelete
 27. ஹி,ஹி,ஹி,ச்யாம்,
  முகில் உங்களை மாதிரி இருக்கமாட்டான், நான் வந்து ஆசி கொடுத்திருக்கேன் இல்லை, என்னை மாதிரி புத்திசாலியா இருப்பான். உங்களுக்குத் தான் ஒண்ணும் புரியலை. அவன் புரிஞ்சுப்பான்.

  ReplyDelete
 28. கார்த்திக்,
  இந்தப் பதிவுக்கு எல்லாரும் பின்னூட்டக் குத்தகை எடுத்திருக்கீங்க போல் இருக்கு, அம்பி, பாருங்க, என்னோட முப்பெரும் விழாவுக்குக் கூட வராத கூட்டம் இதுக்கு வருது.. உங்களுக்குப் பட்டமளிப்பு அதுவும் "ஆப்பு அம்பி"னு பட்டமளிப்புன்னால் எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம்,
  கார்த்திக்,
  ஆப்பு அசின் அம்பி அல்லது அசின் ஆப்பு அம்பி எது தேவலை முடிவு பண்ணி வச்சிக்குங்க.

  ReplyDelete
 29. கார்த்திக்,
  அதான் பதிவிலேயே வந்திருக்கு. திரும்பி ஒரு முறை படிங்க. புரியும்.

  ReplyDelete