எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 08, 2006

135. மனம் மாறிய வேதா(ள்).

ஹா, ஹா, ஹா, ஹா, ஹா, ஹி, ஹி, ஹி, ஹி, சிரிக்கிறது வேறே யாருமே இல்லை. நான் தான் சிரிக்கிறேன். காரணம் என்ன தெரியுமா? ஆப்பு அம்பியை வாழ வைத்த தெய்வம், ச்யாமின் பாசமலர், கார்த்திக்கின் தோழி, பொற்கொடி நம்பும் சகோதரி, தி.ரா.ச. அவர்கள் தன் சிஷ்யை என நினைத்துக் கொண்டிருக்கும் செல்வி வேதா(ள்) அவர்கள் நேற்று அதிகார பூர்வமாகத் தலைவியுடன் இணைந்தார்.

முன்னதாகத் தலைவிக்குத் தொல்லைபேசியில் வேதா(ள்) பேசித் தலைவியுடன் பேட்டிக்கு (!!!!!) நேரம் கேட்டார். தலைவி வேதா(ள்)வுடன் தனக்கு முரண்பாடுகள்(?!) இருந்தாலும் பெருந்தன்மையுடனும், தாயுள்ளத்துடனும் மன்னிக்கும் மனப்பான்மை உடையவர் என்பது அனைவரும் அறிந்ததே! ஆகவே மாலை 4 -00 மணிக்கு அதாவது அக்டோபர் திங்கள் 7-ம் நாள், முன்பகல் வரை பெளர்ணமி, பின் பிரதமை கூடிய சுபயோக சுபதினத்தில் மாலை 4-00 மணி அளவில் தன்னை வந்து சந்திக்கும்படிக் கட்டளை(!!) இட்டார். தலைவியின் கட்டளையைச் சிரமேற்கொண்ட வேதா(ள்), தன்னுடன் காவலுக்கு ஒரு நபருடன் தலைவியின் இல்லம் வந்து சேர்ந்தார். அவர் யார் என்பதை முன்கூட்டியேத் தலைவியிடம் தெரிவித்து விட்டதால் தலைவியும் அவரைப் புரிந்து கொண்டார். அவர் தானும் வலைப் பதிவாளர் என்றும் தான் இருப்பது கிரிக்கெட் என்னும் உலகில் என்றும் சொன்னார். நடு நடுவில் தலைவிக்கும், வேதா(ள்)வுக்கும் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் அவரும், தலைவியின் கணவரும் கலந்து கொண்டார்கள்.

பேச்சு வார்த்தையின் போது சமீபத்தில் சென்னை வந்த ஆப்பு அம்பி நடத்திய கூட்டம், அதன் நிகழ்ச்சி நிரல்கள், நடந்த பேச்சு வார்த்தைகள், சாப்பிட்ட சமோசாக்கள், அவை வாங்கிய கடைகள் முதலியன விவாதிக்கப் பட்டன. இங்கே ஒரு மாறுதலுக்காக போண்டாவோ சமோசாவோ இல்லாமல் தலைவி, மைசூர்பாகு, சோன் பப்டி, மிக்ஸ்சர் போன்றவை கொடுத்தார். பின் இஞ்சி, ஏலக்காய் போட்ட தேநீருடன் டீ பார்ட்டி முடிந்து பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆனது. அம்பியின் தலை உருண்டது என்று சொல்லத் தேவை இல்லை. கார்த்திக், ச்யாம், நாகை சிவா, பொற்கொடி ஆகியவர்களின் தலையும் அவ்வப்போது உருண்டன. சூடான் புலி மறுபடி பதுங்கிக் கொண்டதின் காரணம் அறியாமல் இருவரும் திகைத்தனர். பொற்கொடிக்கு வ்ந்திருக்கும் காய்ச்சல், சிக்குன்-குனியாவா? டெங்குவா என்றும் கேள்விகள் பிறந்தன. அவர் உடல் நலத்துக்காகப் பிரார்த்திக்கத் தலைவி பெருந்தன்மையுடன் சொன்னார். சங்கத்தில் சமீபத்தில் சேர்ந்த டுபுக்கு பற்றியும், கைப்புள்ள தலைவி மேல் வைத்திருக்கும் மரியாதை (!) பற்றியும், அம்பியின் பஞ்சாப் குதிரை பற்றியும் அதைப் பற்றிச் சொல்லி எல்லார் மனதையும் மாற்றுவதையும் பற்றிப் பேச்சுக்கள் தொடர்ந்தன. குண்டர் படைத் தலைவர் மறைவில் நின்று அம்பிக்கு உதவி செய்வதையும், அவர் வெளிவராத காரணமும் அலசித் தோய்த்துப் பிழிந்து உலர்த்தப் பட்டது. (வேதா, இது போதுமா? நாரதர் வேலைக்கு, இன்னும் கொஞ்சம் வேணுமா)

தலைவி வேதா போர்த்திய பொன்னாடையை ஏற்றுக் கொண்டு அவரைச் சங்கத்தின் கொ.ப.செ. ஆகவும் தன் உ.பி.ச. ஆகவும் நியமித்தார். வேதா மன மகிழ்ச்சியுடன், "இது மாதிரித் தலைவி நான் பார்த்ததே இல்லை. ஏழைப் பங்காளி., புரட்சியே செய்யாத தலைவி, தங்கத் தாய், பொன்மனச் செம்மல், தாய் வீடு, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" சீச்சீ கடைசிலே சொன்னது எல்லாம் சினிமாப் பேர் மாதிரி இல்லை இருக்கு. அது அழிச்சுடுங்க. மத்தது எடுத்துக்குங்க. அப்பாடி, என்னோட புகழை இப்படிக் கஷ்டப் பட்டு நானே எழுத வேண்டி இருக்கு. வேதா(ள்) , கொஞ்சம் உதவக்கூடாது?

34 comments:

 1. //செல்வி வேதா(ள்) அவர்கள் நேற்று அதிகார பூர்வமாகத் தலைவியுடன் இணைந்தார்.//
  உங்களை விட்டுட்டு மாநாடு நடந்ததுன்னு நீங்க கதறி அழுததை மட்டும் நான் சொல்லவே மாட்டேன்:)ஏதோ போனா போகுது வயசான காலத்துல மனசு கஷ்டப்படறீங்களேன்னு உங்களை வந்து சந்திச்சா இப்படியெல்லாம் புரளியை கிளப்பி விடக்கூடாது:)

  //தாயுள்ளத்துடனும் மன்னிக்கும் மனப்பான்மை உடையவர் //
  ஆமாமா உங்க வயசுக்கு அது கூட இல்லேன்னா எப்படி:)

  //அம்பியின் தலை உருண்டது என்று சொல்லத் தேவை இல்லை. கார்த்திக், ச்யாம், நாகை சிவா, பொற்கொடி ஆகியவர்களின் தலையும் அவ்வப்போது உருண்டன. //
  ஆமா இதையெல்லாம் சொல்லித் தான் தெரியணுமா என்ன?:)

  // என்னோட புகழை இப்படிக் கஷ்டப் பட்டு நானே எழுத வேண்டி இருக்கு//
  தன் புகழை தானே பரப்பிக் கொள்ளும் மொ.ப கீதா அவர்கள் இனி எல்லார் புகழையும் சேர்த்து பரப்புவதாக எனக்கு உறுதி மொழி கொடுத்தப்பின் தான் உடன்படிக்கையில் கையெழுத்திட்டேன்:)
  // வேதா(ள்) , கொஞ்சம் உதவக்கூடாது? //
  ஹிஹி இது போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?:)

  ReplyDelete
 2. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"

  சமீபத்தில் 1970-ல் வந்திருந்தது இப்படம். ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ, கோபாலகிருஷ்ணன், நாகையா, சிவகுமார், லட்சுமி, டி.ஆர். ராமச்சந்திரன், சோ, ஜி.சகுந்தலா, ருக்மணி ஆகிய்யோர் நடித்தது. தயாரிப்பு ஏ.வி.எம்., டைரக்ஷன் கிருஷ்ணன் பஞ்சு.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 3. "காவலுக்கு ஒரு நபருடன் தலைவியின் இல்லம் வந்து சேர்ந்தார்."
  மக்களே அந்த காவலுக்கு வந்த நபர் நான் தான்.தலைவி வீட்டுல ஒசி டிபனை முடித்துக்கொண்டேன்:)
  "தான் இருப்பது கிரிக்கெட் என்னும் உலகில்" orkut என்று சொன்னதை கிரிக்கெட் என்று புரிந்துக்கொண்டார், பாவம் வயதாகிவிட்டது அல்லவா:)

  ReplyDelete
 4. //மைசூர்பாகு, சோன் பப்டி, மிக்ஸ்சர் போன்றவை கொடுத்தார்.//
  சாப்ட எங்களுக்கு தான கஷ்டம் தெரியும், ஏதோ சங்கத்தின் நலன் கருதி அதை நாங்க சாப்டோம்:)

  // அவர் வெளிவராத காரணமும் அலசித் தோய்த்துப் பிழிந்து உலர்த்தப் பட்டது.//
  அப்புறம் அதை இஸ்திரி போட்டோமே:)

  @அம்பி,
  தலைவி எல்லாம் சொல்டாங்களே:)

  ReplyDelete
 5. //கார்த்திக், ச்யாம், நாகை சிவா, பொற்கொடி ஆகியவர்களின் தலையும் அவ்வப்போது உருண்டன.//

  அடியேன் செய்த தவறென்ன தலைவியே.. நீங்க தான் என் அரசியல் குரு..உங்க ஆசில தான் பதவியே ஏத்துக்க போறேன்..உங்க கணவருக்கு எல்லா மணல் கான்ராக்ட்டும் தர்றேன்.

  ReplyDelete
 6. //ஏழைப் பங்காளி., புரட்சியே செய்யாத தலைவி, தங்கத் தாய், பொன்மனச் செம்மல், தாய் வீடு, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்//

  நல்லாத் தான் பட்டங்கள் சூட்டிக்கிறீங்க.. எனக்கும் ஒரு நாலு ஐஞ்சு சொல்லுங்களேன்.. அப்போ தான் முதல்வர் பதவி ஏற்கிறப்போ ஆள்கள்ட சொல்லி கோஷம் போடுறதுக்கு சரியா இருக்கும்..

  உங்களை பற்றீயும் கோஷம் போட ஆள் ஏற்பாடு பண்ணியாச்சு தலைவியே..

  ReplyDelete
 7. வேதா(ள்), இப்படிக் காலை வாரிவிட்ட, முதுகில் குத்திய உங்களைக் கட்சியின் கொ.ப.செ. பதவியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது? தகுந்த பதில் அளிக்குமாறு தலைமையகம் கேட்டுக் கொள்கிறது. நற நற நறநற நறநற :-)

  ReplyDelete
 8. ஹி,ஹி,ஹி, வேதா(ள்), அம்பியின் தலை உருண்டது பத்தியும், மத்த விஷயங்கள் பத்தியும் நீங்க சொன்னதை நான் யார் கிட்டேயும் சொல்லவே மாட்டேன். (அம்பி, note the point)

  @வேதா(ள்), அப்புறம் நீங்க எனக்கு மலர்க்கிரீடம் சூட்டியதையும், பொற்கொடி அளித்ததையும், சீச்சீ பொற்கிழி அளித்ததையும், உங்க அண்ணா பெண்ணுக்கு மறுபடி சங்கத் தலைவி என்ற முறையில் என்னைப் பெயர் வைக்கச் சொன்னதையும், தன்னடக்கத்தோடு (!!!)நான் குறிப்பிடவில்லை என்பதைக் கவனிக்கவும்.

  ReplyDelete
 9. grrrrrrrrrrrrrrrrrrrrr...........வேதா(ள்), உதவியா செய்யறீங்க உதவி? இருங்க உங்களுக்கு வெயிட்டிங் லிஸ்ட்லே இருக்கு.

  ReplyDelete
 10. டோண்டு சார், ரொம்ப நாள் கழிச்சு வரீங்க, தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 11. grrrrrrrrrrrrrr...........தம்பி, நாயகரே, வாங்க வாங்க, அக்கா கூட்டணியிலே இருக்கிறதாலே என்னை முறியடிக்க நினைத்தால் உங்களுக்கு இருக்கு ஆப்பு, நீங்க orkutனு சொன்னது புரியாத அளவு மாங்காய் மடைச்சி(மடையனுக்குப்பெண்பால்) இல்லை நான். அதை எழுத வேண்டாம்னு தான் எழுதலை. இருந்தாலும் தாங்கள் இருப்பது கிரிக்கெட்டில் அந்த மட்டையர் கங்கூலியின் உலகில் அன்றோ? மட்டை எடுத்தாரெல்லாம் ப்ளேயர் அல்லர்,
  கங்கூலி மட்டை எடுத்தால் பெவிலியனுக்கு உடனே வருவாரே, அந்தக் கங்கூலி தானே? நறநறநறநற :D

  ReplyDelete
 12. சாப்பிட்டதும் இல்லாமல் சங்க நலனுக்காகச் சாப்பிட்டதாக மழுப்பல் வேறேயா? அடுத்த முறை வரும்போது நானே ஸ்வீட் செய்து (விளக்கெண்ணெய் ஊற்றி) வைக்கிறேன்.
  அம்பிக்கு வேறே தகவலா? இது நல்லாவே இல்லை. உடன்படிக்கைக்கு விரோதம்(!!!!), கூட்டுச் சதி! ஒருவேளை கத்திரிக்காய்க் கூட்டோ?:D

  ReplyDelete
 13. ஹி,ஹி,ஹி,ஹி, மணல் காண்ட்ராக்ட்டுக்கு நன்றி. (ம்ஹும், முதலமைச்சராம் முதலமைச்சர், உங்க தலை உருண்டதின் காரணமே அதானே! நான் பதிவில் வந்து எச்சரிக்கை செய்தும் இன்னும் இந்த ஆசையா)
  வெளியே: கார்த்திக், நீங்க உண்மையான குண்டர் சீச்சீ, தொண்டர்னு எனக்குத் தெரியாதா? சிஷ்யனே, நீ முதலமைச்சராக வர முடியாதபடி நான் பாரத்துக் கொள்கிறேன், கவலைவேண்டாம்.(ஆசி போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?)

  ReplyDelete
 14. ஆள் ஏற்பாடு பண்ணின வரை சரி, ஒழுங்கா வந்து நீங்களும் சேர்ந்து கோஷம் போடுங்க, அதை விட்டுட்டு முதலமைச்சர், அது ,இதுன்னா ஆட்டோ வரும். :D

  ReplyDelete
 15. //இப்படிக் காலை வாரிவிட்ட, முதுகில் குத்திய உங்களைக் கட்சியின் கொ.ப.செ. பதவியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது?//
  கட்சின்னு இருந்தா இதெல்லாம் ஜகஜம் அதுவும் தங்க தமிழ்நாட்டுல இப்படி தான் இதுக்கெல்லாம் பதவி நீக்கம் செய்தா அப்புறம் நீங்கெல்லாம் என்ன தலைவி இப்படியெல்லாம் மனசுல நினைசுண்டாலும் சங்கத்தின் நலன்(!) கருதி தலைவி மொ.ப.கீதா வாழ்க அப்படின்னு சொல்லி என் உரையை முடிச்சுக்கறேன்:)

  ReplyDelete
 16. முழுக்க எழுதி முடிக்கிறதுக்குள்ளே என்ன அவசரம்? என் பதிவிலேயே உட்கார்ந்து கொண்டு இப்படிப் பார்த்துட்டே இருந்தா நான் எப்படி எழுதறது?(லோட் ஆகாமல் நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்). கொஞ்சம் பொறுமையா இருங்க மொ.ஸ்பெஷலிஸ்ட் நம்பர் 2 அவர்களே! :-)

  ReplyDelete
 17. // இப்படிப் பார்த்துட்டே இருந்தா நான் எப்படி எழுதறது?//
  நாங்கெல்லாம் அப்படி தான் ஒரே நேரத்துல எல்லா வேலையும் செய்வோம் ஏன்னா இது வாலிப வயசு:) பாவம் உங்களுக்கு அது எங்க புரிய போகுது:)(சரி சரி இதுக்கும் நம்ம சங்க வேலைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது வேற இது வேற)

  ReplyDelete
 18. ஆண்டவா, அலட்டல் தாங்கலியே? லோட் ஆக லேட் ஆகுதுன்னு சொன்னேன். உடனே நாங்க இளமை, இளமை ஊஞ்சலாடுகிறதுனு சினிமா எல்லாம் ரீல் சுத்தறாங்களே கடவுளே, கடவுளே! :D

  ReplyDelete
 19. என்ன பண்றது பொழுது போகணுமில்லை அதான் உங்க பதிவுக்கு பின்னூட்ட மழை,புயல்,சூறாவளின்னு ஏதாவது என் சார்பா கொடுக்கலாம்ணு:) இது போதுமா இல்லை இன்னும் வேணுமா?:)

  ReplyDelete
 20. //உங்களை விட்டுட்டு மாநாடு நடந்ததுன்னு நீங்க கதறி அழுததை மட்டும் நான் சொல்லவே மாட்டேன்://
  ha haa, bnglrre la kooda ipdi thaan azhuthaanga! :D

  //கொஞ்சம் பொறுமையா இருங்க மொ.ஸ்பெஷலிஸ்ட் நம்பர் 2 அவர்களே!//
  No:1 mokkai neenga thaan!nu sollama solreengale. very gud! very gud!

  ReplyDelete
 21. தி.ரா.ச. அவர்கள் தன் சிஷ்யை என நினைத்துக் கொண்டிருக்கும் செல்வி வேதா(ள்) அவர்கள் நேற்று அதிகார பூர்வமாகத் தலைவியுடன் இணைந்தார்.

  நான் ஊரிலில்லாத நேரத்தில் அவசர அவசரமாக ஓர்கூட்டம் நடத்தி பாவம் வேதாவை உங்கள் பக்கம் சேர்த்துவிட்டதாக மனப்பால் குடிக்கவேண்டாம்.இதுவே நாங்கள் செய்த ஏற்பாடுதான்.எங்கள் உளவுப்படைத்தலைவர்தான் வேதா.

  ReplyDelete
 22. வேதா(ள்),கீழே தி.ரா.ச. எழுதி இருக்கிறதைப் பாருங்க, துரோகி, வேதா(ள்), பச்சை, சிவப்பு, மஞ்சள் எல்லாக் கலரிலேயும் துரோகம் பண்ணி இருக்கீங்க. கட்சியில் இருந்து உடனடியாக ஏன் நீக்கக் கூடாது?
  தண்டனையாக ஒரு 25 பின்னூட்டம் தினமும் கொடுக்க உத்தரவிடுகிறேன்.

  ReplyDelete
 23. ஆப்பு,
  ஏற்கெனவே மொக்கை ஸ்பெஷலிஸ்ட் பட்டம் கொடுத்து உங்களைக் கெளரவிச்சது அதுக்குள்ளே மறந்து போச்சா? ஸ்பெஷலிஸ்ட் நம்பர் 1 நீங்க, நீங்க, நீங்களே தான். வேறு யாரும் இல்லை. பங்களூரில் நீங்க தான் நான் சொன்னதுக்கு அழுதீங்க,வேணும்னா என் கணவரைக் கேளுங்க. நற நறநறநறநற

  ReplyDelete
 24. தி.ரா.ச. சார்,
  நீங்க கருட சேவை பார்க்கப் போறதா நினைச்சேன். எல்லாம் இந்த அம்பி, குண்டர் படைத் தலைவர், நீங்க எல்லாரும் சேர்ந்து செஞ்ச சதியா? இருக்கும், இருக்கும் நினைச்சேன். இன்னிக்கு அம்பியோட மெயில் பார்த்ததுமே தோணிச்சு. நீங்க வந்துட்டீங்க, ஏதோ விஷயம் இருக்குன்னு. நாளை அறிக்கை விடுகிறேன்
  இந்த அறிக்கைப் போரில் இருந்து எல்லாத்தையும் நான் தனி ஒரு ஆளா சமாளிக்கிறேன் பாருங்க, உங்களுக்குத் தான் கூட்டு, கறி எல்லாம்.

  ReplyDelete
 25. தலைவியும் என்ன என்னமோ சொல்லி கட்சிக்கு ஆள் சேர்க்க பார்கறாங்க ஆனா ஒன்னும் நடக்க மாட்டேங்குது...
  இப்பிடியே புலம்பி புலம்பியே வயசு வேற ஏறிட்டு போகுது தலைவிக்கு..
  :-)

  ReplyDelete
 26. //தான் இருப்பது கிரிக்கெட் என்னும் உலகில்" orkut என்று சொன்னதை கிரிக்கெட் என்று புரிந்துக்கொண்டார், பாவம் வயதாகிவிட்டது அல்லவா//

  ROTFL :-)

  ReplyDelete
 27. yeppallam bore addikkuthoo appallam konjam intha page vantha semma commedy paddam partha orru thirupthi. vazhga ung sangamm

  ReplyDelete
 28. நம்ம உள்கட்சி பூசலை பயன்படுத்தி திராச என் மீது சுமத்தும் பழியை நம்ப வேண்டாம் தலைவி:)

  @திராச,
  பாருங்க ரெண்டு நாள் அம்பியோட ஊர் பக்கம் போனதுக்கே இப்படி டகால்டி வேலையெல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டீங்க, நாரத வேஷம் உங்களுக்கும் பொருந்தும்:)

  @அம்பி,
  இல்லையே பெங்களூரில் உங்களை முதலில் சந்தித்தவுடன் தலைவி உங்களிடம் ஏதோ சொன்னாராம் அதை கேட்டு நீங்க தான் கதறி அழுததா எனக்கு உளவுத் துறை அறிக்கை வந்தது:)

  ReplyDelete
 29. ச்யாம்,
  நீங்க கட்சியிலே இருக்கிறதா இல்லை நினைச்சேன். புதுசா ஆள் பிடிக்கத் தான் நீங்க, பொற்கொடி எல்லாம் இருக்கீங்களே! எல்லாப் பதிவிலேயும் போய்த் தலைவியின் புகழைப் (!!!!!!!) பரப்புவதற்கு. அதனாலே நான் ஒண்ணும் புலம்பலை. நடந்த விஷயத்தைச் சொல்றேன். புரிஞ்சுக்குங்க, கடவுளே,, முகில் அவங்க அம்மா மாதிரி புத்திசாலியா இருக்கணும்.

  ReplyDelete
 30. ச்யாம்,
  இந்த வயசு விஷயத்துக்கு இன்னிக்கு ஒரு disclaimer கொடுக்கப் போறேன் பார்த்துக்குங்க, நற நறநற நற

  ReplyDelete
 31. ஹிஹிஹி, வேதா, அம்பி உங்களை வாழவைத்த தெய்வம்னு ஏன் சொன்னார்னு புரிஞ்சுக்கிட்டேன். டாங்ஸு, டாங்ஸு.

  தி.ரா.ச. சார்,
  இந்தத் தாவல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

  ஆப்பு, என்ன இருந்தாலும் வேதா(ள்) வேதா(ள்) தான், தான் நம்பினவரைக் கைவிடுவதில்லைனு முடிவு எடுத்திருக்கார். உங்களைப் பத்தி ஏதோ சொல்லி இருக்காரே என்ன அது? எனக்குத் தெரியாதே?:D

  ReplyDelete
 32. பெரிய ரணகளமே இங்கு நடக்குது போல. எல்லாம் சுபமாக முடிந்தால் சரி தான். அப்படி ஒரமா வர்கார்ந்து வேடிக்கை பாக்குறேன்.

  /சூடான் புலி மறுபடி பதுங்கிக் கொண்டதின் காரணம் அறியாமல் இருவரும் திகைத்தனர். //

  நமக்காக பீல் பண்ணிய உங்களுக்கு ரொம்ப தாங்க்ஸ்ங்கோ....
  நான் எங்கயும் போகல, போகல, போகவே இல்ல..........

  ReplyDelete
 33. புலி, அதெல்லாம் ரணகளம் எல்லாம் இல்லை. மறுபடி பதுங்க வேண்டாம். என்ன இருந்தாலும் நீங்க என் பக்கம்தான்னு இவங்க கிட்டே சொல்லிடுங்க. புலியைப்பார்த்தா நடுங்குவாங்க இல்லை? அதான். அப்புறம் கொழுக்கட்டை, புலியோதரை சீச்சீ, புளியோதரை பார்சல் அனுப்பறேன். :D

  ReplyDelete