எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 17, 2006

141. இடுக்கண் வருங்கால் நகுக.

சொல்றது என்னமோ சொல்லிட்டாங்க, "இடுக்கண் வருங்கால் நகுக"ன்னு. எங்கே இருந்து நகுகிறது. பின்னே பாருங்க, போன வாரம் பூரா பிரச்னை வாஆஆஆஆரமாப் போச்சு. எல்லாம் முதல் முதலில் ஏ.சி. யில் ஆரம்பித்தது. அதிலே panel எரிந்து போயிருக்கிறது. தெரியவே இல்லை. மெக்கானிக் வந்து பார்த்துட்டு, short circuit ஆகாமல் இருந்ததே உங்க அதிர்ஷ்டம் என்றார். சரினு இந்த இடுக்கண்ணிற்குச் சிரித்து விட்டு மெக்கானிக்கிடம் வேலை செய்யச் சொல்லிவிட்டுப் போய்க் கழிப்பறையைப் பார்த்தால் slimline flush ஆகவே இல்லை. சரினு வெளியே இருக்கும் நம்ம சிஸ்டம்தான் பெஸ்ட் என்று அதைப் புகழ்ந்துவிட்டு வந்து ரேடியோவில் FM Gold-ல் 3-00 மணிக் கச்சேரி கேட்க ரேடியோவைப் போட்டால் அது பாடவே இல்லை. இந்த இரண்டு இடுக்கண்ணிற்கும் சிரிக்கிறதா, அழுகிறதானு தெரியலை. Parryware company-க்குத் தொலைபேசினால், " உங்க நம்பரா? வீடா? எங்களுக்கு நல்லாத் தெரியுமே? உடனே ஆள் வருவார்." என்று சொல்கிறார்கள். அவங்க கிட்டே,"slimline never fails"னு விளம்பரம் செய்யாதீங்க"னு புத்திமதி சொல்லிவிட்டு ஃபோனை வைத்தேன்.

இதுக்கு முன்னாலேயே நாங்கள் அடிக்கடி ஊருக்குப் போய்க் கொண்டிருந்த காரணத்தால் gas regn. cancel செய்து விட்டார்கள். வீட்டில் இரண்டு பதிவு இருக்கிறதாலே இன்னொரு பதிவு மூலம் சிலிண்டர் வந்து கொண்டிருப்பதால் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. அவங்க கிட்டே தொலைபேசினால் அவங்க, "நாங்க வீட்டிற்கு வந்து சோதனை போடுவோம்" என்று சொன்னார்கள். வீட்டை விட்டு வெளியே போகாமல் காவல் காத்ததுதான் மிச்சம். கடைசில பார்த்தால் அவங்க முன்னாடியே நாங்க வெளியே போயிருந்த ஒருநாள் வந்துட்டு வீடு பூட்டி இருக்குன்னுட்டுப் போயிருக்காங்க.

என்னத்தைச் சொல்றது? கம்ப்யூட்டரில் உட்கார்ந்து பதிவுகளைப் பார்த்து ஏதாவது பின்னூட்டம் கொடுக்கலாம், அல்லது ஜி-மெயிலுக்குப் போய் முத்தமிழ்க் குழுமத்தின் பதிவுகளைப் பார்க்கலாம்னு வந்தால் அதுக்கு மேலே அது பல்லை இளிக்கிறது. Google Message-ல் Internal Server Error-500 அப்படின்னு வருது. ஒரு வழியாகச் சனிக்கிழமை அன்னிக்கு எல்லாம் சரியாகிப் பதிவும் போட்டு விட்டு ஞாயிறு அன்று வந்தால் யாஹூ ஹோம் பேஜ் திறக்கவே இல்லை. மறுபடி என்னோட பதிவே எனக்குத் திறக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. சரி, போன்னு நேத்திக்குப் பார்த்தால் காலையிலேயே கரண்ட் கட், அதோடு வீட்டு வேலைகளில் உதவும் அம்மாவும் லீவு. வாஷிங் மெஷின் குழாய் மாற்ற வேண்டும். கரண்ட் வந்தாலும் வோல்ட்டேஜ் சரியாக இல்லை. மத்தியானம் 2-00 மணிக்கு வந்தது, கம்ப்யூட்டரில் உட்கார்ந்தா கம்ப்யூட்டரில் டாட்டா இண்டிகாம் maintenance work னு இணைப்புக் கொடுக்கவே இல்லை. இரவு 7-30 மணிக்குத் தொலைபேசியில் பேசி இணைப்புக் கொடுத்து விட்டதாகச் சொன்னார்கள். இரவு யார் உட்காருகிறது. இன்னிக்குத் தான் பார்த்தேன். இணைப்பு வந்ததை. இப்போ உங்களுக்குத் தகவல் கொடுக்கிறேன். இன்னிக்கு இதுக்கு மேலே எழுத நேரம் இல்லை. வேலை இருக்கிறது. "ஓம் நமச்சிவாயா" நாளைதான் எழுத வேண்டும். நம்ம அம்பிக்குத் தான் ரொம்பவே சந்தோஷம், நான் ஒண்ணும் எழுதாமல் இருக்கிறதில். மெயில் கொடுத்து மிரட்டி இருக்கிறார், புயல் வேகத்தில் எழுதினால் யார் பின்னூட்டம் கொடுக்கிறதுன்னு? grrrrrrrrrrrrrrrrrrrr நான் ஓட்டை வாயாம், அம்பி, போர்க்கொடி இரண்டு பேரும் வாயில் ஓட்டையே இல்லாதவங்களாம். பின்னே எப்படிச் சாப்பிடறாங்க? அவங்க சொல்லுனு சொல்ற விஷயத்தைத் தானே நான் சொல்றேன்? எல்லாரும் எனக்கு சப்போர்ட்டா வாங்க, அப்போதான் புரியும், இரண்டு பாசமலருக்கும்.

இடுக்கண்ணிற்கு இன்னும் சிரிக்கணுமா? இது போதுமா? :D

39 comments:

 1. ஹாஹாஹா இது எல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா.. எங்க வீட்டுலயும் தான் இஸ்திரி பொட்டி, கீய்சர், காற்றாடி(பட்டம் இல்ல) எல்லாம் ரிப்பேர். ஒலிப்பெருக்கி அமைப்பும் துணித் தோய்ப்பானும் தான் இப்போதைக்கு ஒழுங்கு :P

  ReplyDelete
 2. ஹி,ஹி,ஹி, தலைவிக்கும் தொண்டுக்கிழவிக்கும், சீச்சீ தொண்டிக்கும், சீச்சீ தொண்டருக்கும் என்ன ஒரு ஒத்துமை போர்க்கொடி?

  ReplyDelete
 3. கீதா மேடம், உங்களோட இந்த பதிவை பாத்தா தெனாலில கமல் அதை பாத்தா பயம் இதை பாத்தா பயம்னு அலர்ற மாதிரி இருக்கு.. அதுக்குகாக நான் டாக்டர் யாரையும் பாக்க சொல்லல.. ஜெயராம் மாதிரி :-))

  ReplyDelete
 4. நீங்க தானே பின்னூட்டம் போடல போடலன்னு கூப்பாடு போட்டது.. அப்போ சில பல அடிகள் உங்களுக்கும் கிடைக்கதானே செய்யம், தலைவியே

  ReplyDelete
 5. நானும் பல நாளா பாத்துகிட்டு தான் இருக்கேன்..எப்போ பாத்தாலும் என் மச்சான் அம்பியையும் மச்சினிச்சி பொற்கொடியையும் வம்புக்கு எழுக்குறதே உங்களுக்கு வேலையா போச்சுங்க மேடம்..

  நிறுத்தனும்..எல்லாத்தையும் நிறுத்தனும்..மேடம்

  ReplyDelete
 6. Kaaaaaarththththhikkkkkkkkkk, grrrrrrrrrrrrrrrrrr, I accept your first comment only. Hi Hi Hi, because I like it. The other two grrrrrrrrrrrrr and you are supporting AAPPU AMBI and POORKODI, grrrrrrrrrrrrr

  ReplyDelete
 7. அம்பி, போர்க்கொடி இரண்டு பேரும் வாயில் ஓட்டையே இல்லாதவங்களாம். பின்னே எப்படிச் சாப்பிடறாங்க?
  அதை நான் நேர்லேயே பாத்துட்டேன்.எதுக்கும் நீங்க ஒருதரம் ரெடி பண்ணுகோ நல்லாவே பார்க்கலாம்.முழு சமோசவும் அப்படியே விள்ளாமல் உள்ளே போனதை போட்டோதான் எடுக்கலை

  ReplyDelete
 8. OH!Boy!ivalo idukkangalukkum sirikanumna romba kashtanga.
  yeppdi samalikireenga yellorum?
  India varadhai ninacha vayuthula ennavo saiyudhu.But indha prachanaigalukkum naduvil pala pala sandhoshangal irukku.Adhu inge missing.--SKM

  ReplyDelete
 9. ithu ennathu..Ushavoda kodumai post matihri iruku :) mothathula uga vetla onum velaiku aagalnu simplea solitu polaamla..atha utuputu..ipdi mokka podreenga...
  apdinu ambi kepaarenu bayapadamaa dhairiyama post poatrukeenga...jooper

  P.S:
  me firsht time here...

  ReplyDelete
 10. அரசியல் வாழ்க்கைல இது எல்லாம் சகஜம்...இது பாக்கிஸ்தான் சதி னு ஏன் சொல்லலை :-)

  ReplyDelete
 11. மேடம்..அம்பியும் பொற்கொடியும் என்னோட இரு கண்கள்..ஏன்னா, அசின் என் இதயத்துல இருக்குறதுனால..

  நான் சப்போர்ட் பண்ணாம வேற யார் பண்ணுவா, தலைவியே

  ReplyDelete
 12. ரொம்ப சிரிக்காதீங்க தலைவியே.. வீட்டுல சார் பயந்துட போறாரு.. எப்படித்தான் பொழப்பை ஓட்டுறாரோ அவர்.. உங்க கூட..

  ReplyDelete
 13. ungal idukanill pallarukku pun nagai

  ReplyDelete
 14. கார்த்திக், அப்படி போடுங்க அருவாள. நா கண்டிப்பா விளக்கு தூக்கறேன் :)

  ReplyDelete
 15. ஹி,ஹி,ஹி, சார், கடைசிலே என்னை சப்போர்ட் பண்ணாமத் தீராதுன்னு முடிவு எடுத்துட்டீங்க போல் இருக்கு. ரொம்ப சந்தோஷம். அம்பி, போர்க்கொடி, முகத்தைத் துடைங்க இரண்டு பேரும்.
  இந்த வேதாவுக்கு என்ன ஆச்சு? இரண்டு நாளா ஆளே காணோம்?

  ReplyDelete
 16. வாங்க சண்டைக்கோழி, இது நீங்களா உங்க அம்மாவா தெரியலை, முன்னே ஒருமுறை நான் சண்டைக்கோழியின் அம்மானு ஒருத்தர் எழுதி இருந்தார்,. முதல்லே அதைத் தெளிவு படுத்துங்க.
  அப்புறம் சந்தோஷமே இந்தியாவிலே தாங்க இருக்கு. இது எல்லாத்தையும் சவாலே, சமாளின்னு பதிவு போடறோமே, அங்கே என்ன சவால் இருக்கு? சவால் இல்லையேல் வாழ்க்கையில் ருசி இல்லை.

  ReplyDelete
 17. gils, நடுவிலே இது ஒரு குழப்பம், கில்ஸா, ஜில்ஸானு, தமிழ்ப் பேரே கிடைக்கலியா? முதல் வரவுன்னு தெரியும். உங்க பின்னூட்டத்தைப் பார்த்திருக்கேன், ஆப்பு அம்பியோட மொக்கைப் பதிவுகளிலே. இது எப்படி இருக்கு? சூப்பரோஓஓஓஓஓஓஓ சூஊஊஊஊஊப்ப்ப்ப்ப்ப்பபபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்லை? அம்பி இப்போ ரொம்ப பிசி, அதனாலே வர மாட்டார். தைரியமாச் சொல்ல வந்ததைச் சொல்லுங்க. நான் அதெல்லாம் மெயில் கொடுக்க மாட்டேன்.

  ReplyDelete
 18. ச்யாம், இதுக்குத் தான் உங்களை மாதிரி ஒரு தொண்டர் வேணும்னு சொல்றது. எப்படி எல்லாம் ஐடியா கொடுக்கறீங்க, ரொம்ப டாங்க்ஸூ

  ReplyDelete
 19. காஆஆஆஆர்த்திக், இது நல்லாவே இல்லை. தலைவியிடம் உங்கள் ஆதரவை உடனடியாகத் தெரிவிக்கும்படி மேலிடத்துக் கட்டளை. (இல்லாட்டி மறுபடி சிரிப்பேன், பரவாயில்லையா?) :D

  ReplyDelete
 20. அறிந்த அந்நியரே, இன்னிக்கு என்ன பின்னூட்டக் குத்தகை ஏதும் இல்லையா? சில்லறைக்குக் கொடுத்திருக்கீங்க?

  ReplyDelete
 21. போர்க்கொடி, நல்லா ஏமாறப் போறீங்க, அங்கே பாருங்க, வேதா, தி.ரா.ச. சார், இன்னும் கொஞ்ச நாளில் அம்பின்னு எல்லாரும் என் பக்கமே! ரொம்பக் கனவு காணாதீங்க.

  ReplyDelete
 22. இதோ வந்துட்டேன் தலைவியே காப்பி சீசீ களப்பணி ஆற்றுவதில் கொஞ்சம் பிஸியாக இருந்ததினால் தான் தாமதம்:)
  எங்கண்ணன் சொன்னது போல் இது பாகிஸ்தான் சதியாக இருக்காது நேபாள மன்னரை நீங்க ஓட ஓட விரட்டினீங்க இல்லை அதான் அவரு மாவோயிஸ்ட் கூட சேர்ந்து உங்களுக்கு ஆப்பு வைக்க முயற்சிக்கிறார், ஆனால் எங்கள் தங்க தலைவலி சீசீ தலைவி இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ரிவர்ஸிபிள் பட்டு சேலை அணிந்து கட்சிக்கு பொது தொண்டு ஆற்ற வருகிறார் கார்த்தி எங்க பட்டுப்புடவை?

  ReplyDelete
 23. ஆக மொத்தில் உங்க வீட்டில் உள்ள பொருட்களுக்கு கூட தெரிஞ்சு போச்சு உங்கள பத்தி
  :)

  ReplyDelete
 24. @geetha, இப தான் சந்தோஷமா இருக்கு. உங்க ஏரியா Transformer ப்யூஸ் போனா இன்னும் நன்னா இருக்கும். :)

  @TRC sir, சே! இரண்டு குழந்தைகள் ஆசையா போண்டா சாப்டதை இப்படியா சொல்லி காட்றது? :)

  யாரு உங்களுக்கு சப்போர்ட் பண்ணினாலும், நானும் பொற்கொடியும் எப்பவும் தனியாவர்தனம் தான் வாசிப்போம்.

  @geetha madam, கில்ஸை நேர்ல பார்தவனாக்கும். இந்த நாரதர் வேலை எல்லாம் நடக்காது இங்கே!:D

  வேதா குழந்தை வளர்ப்பு Trainingla இருக்கா. வர மாட்டா. கமண்ட்டுக்கு இப்படியா பறக்கறது? :)

  ReplyDelete
 25. //முன்னே ஒருமுறை நான் சண்டைக்கோழியின் அம்மானு ஒருத்தர் எழுதி இருந்தார்,. முதல்லே அதைத் தெளிவு படுத்துங்க.//
  ezhudhi mudichu kadaisiyil SKM apdi
  sign irundha adhu Sandaikozhi yin MOM.Sandaikozhi Chennaiyil 11th padikira.So romba busy.Iam in USA.Ava blogla summa post poda arambichu,Iam into it now.My daughter will reply in english, tamil padikka ezhudha avalukku varadhu.Ippo konja konjam kathundu vara.Thelivai Vizhakkam koduthullaena?

  //அங்கே என்ன சவால் இருக்கு? சவால் இல்லையேல் வாழ்க்கையில் ருசி இல்லை.// mukiyama pandigai kala sandhoshangal illavae illa Inge. day to day problems illa,aana vera madhiri problems irukku.--SKM

  ReplyDelete
 26. //தலைவியிடம் உங்கள் ஆதரவை உடனடியாகத் தெரிவிக்கும்படி மேலிடத்துக் கட்டளை. (இல்லாட்டி மறுபடி சிரிப்பேன், பரவாயில்லையா//

  தலைவியே என்ன இது.. நான் எப்போவும் உங்கள் தொண்டன் தான்.. கலைஞருக்கு அண்ணா மாதிரி, நீங்க எனக்கு.. ஹிஹிஹி
  அதுக்காக, என் சொந்தங்கள் அம்பியையும் பொற்கொடியையும் விட்டுத்தரவே முடியாது..

  ஆனா, தயவு செய்து சிரிக்காதீங்க

  ReplyDelete
 27. பின்னூட்டம் போடல பின்னூட்டம் போடலன்னு அறிக்கை அறிக்கையா விட்டீங்களே இந்த சின்ன பையன் மேல..
  இந்த பின்னூட்டங்கள் போதுமா..தலைவியே..

  சே.. இந்த உண்மைத் தொண்டன் மேல இப்படி சந்தேகப்பட்டீங்களே, இது நியாயமா..தலைவியே

  ReplyDelete
 28. @சிவா சூப்பர் ஆப்பு வெச்சுட்டீங்க

  ReplyDelete
 29. அம்பி, உங்கள பாத்து பாட்டி என்ன சொல்லிட்டா பாருங்கோ.. இத சும்மா விட கூடாது, மான நஷ்ட வழக்கு தொடுக்கறோம்! வழக்கு வேண்டாம்னா, ஒழுங்கா பஜ்ஜி போண்டா சமோசா கச்சோரி ரசகுல்லா பாசந்தி கொண்டு வர சொல்லுங்க :)

  ReplyDelete
 30. அப்புறம் உங்க கடைக்கு சண்டைக்கோழியோட அம்மா வர்றதே பெரிசு, ஏன் பாவம் அந்த சின்ன குழந்தைய இழுத்துட்டு? நா ஒருத்தி படற பாடு போதாதா?

  ReplyDelete
 31. இன்னுமா சிரிக்கறீங்க பல்லு சுளுக்கிக்க போகுது அடுத்த பதிவை போடுங்க.:D

  ReplyDelete
 32. வேதா(ள்), அது என்ன களப்பணி எனக்குத்தெரியாமல், எப்படி ஆற்றுவதுன்னு தெரியுமா? இது ஒண்ணும் நேபால அரசரோட சதியோ, சீன அரசோட சதியோ இல்லை, எல்லாம் நம்ம எதிர்க்கட்சிகளோட சதி தான். இன்னிக்கு மூணு முறை உட்கார்ந்தேன் பாருங்க, உடனேயே கரண்ட் போயிடுச்சு,

  @சிவா, இப்போ ரொம்ப சந்தோஷமா? அடிக்கடி கரண்ட் போறதிலே பால் பாயாசம் குடிப்பீங்க போல் இருக்கு.இதுதான் உண்மைத் தொண்டரின் அழகா? :D

  ReplyDelete
 33. ஆப்பு அம்பி, தீபாவளி முடிஞ்சதும் உங்களுக்குத் தனி தீபாவளி கொண்டாடலாம், பார்த்துட்டே இருங்க, போர்க்கொடி சப்போர்ட் பண்ணினால் பயந்துடுவாங்களா?
  போண்டா, சமோசா சார் வீட்டிலே கொடுத்ததே தப்பு. நானா இருந்தா வெறும் தண்ணீர் மட்டும் தான் கொடுத்திருப்பேன். அன்னிலே இருந்து அதையே சொல்லிட்டு, போண்டாவே பார்க்காதவர்னு புரியுது. :D

  ReplyDelete
 34. சண்டைக்கோழி அம்மா, தெளிவு படுத்தியதுக்கு ரொம்ப நன்றி. தமிழ் தெரியும்னா தமிழிலே எழுதுங்களேன். எனக்கு இந்த தங்கிலீஷே பிடிக்கிறதில்லை. அதுவும் அம்பிக்கு அதுதான் எழுத வரும்ங்கிறதாலே இன்னும் அலர்ஜி, அதைப் பார்த்தா. :D

  @கார்த்திக், என்னாத்தை உண்மைத் தொண்டன் போங்க, மூன்று நாளா எதிர்க்கட்சி சதியிலே கரண்டே சரியா வரலை. அதுக்கு முதலில் ஏதாவது செய்யுங்க. இந்தப் போர்க்கொடியைப் போய் மின்சார அமைச்சராப் போட்டப்போவே நினைச்சேன். அதான் இப்படி! :D

  ReplyDelete
 35. நறநறநற போர்க்கொடி, கொஞ்சம் கூட நல்லாவே இல்லை. இதோ போட்டுட்டேன் மான நஷ்ட வழக்கு. எதுவும் கிடையாது. கொண்டு வரவும் முடியாது. என்ன செய்வீங்க?
  சண்டைக்கோழி அம்மா என்னோட பரம ரசிகை. பார்த்தாலே புரியுது, நீங்க ஒண்ணும் அதைக் கெடுத்துட்டுப் போகாதீங்க, பாவம் அப்பாவி அவங்க. :D

  @வேதா(ள்), நீங்களுமா இப்படி? நறநற நறநற நறநற
  "எங்கெங்கு காணினும் ப்ரூட்டஸ்களடா!"
  ஒரு தனி மனுஷி சீச்சீ சின்னப் பொண்ணு இத்தனை பேரோடப் போராட வேண்டி இருக்கு. :D

  ReplyDelete
 36. //போர்க்கொடியைப் போய் மின்சார அமைச்சராப் போட்டப்போவே நினைச்சேன். அதான் இப்படி//

  unmai ungalukku therinju pOchchaa, thalaiviyE

  ReplyDelete
 37. //நீங்க ஒண்ணும் அதைக் கெடுத்துட்டுப் போகாதீங்க, பாவம் அப்பாவி அவங்க.//
  edho neengalavadhu purinju kittengalae.Thanks.
  //எனக்கு இந்த தங்கிலீஷே பிடிக்கிறதில்லை. அதுவும் அம்பிக்கு அதுதான் எழுத வரும்ங்கிறதாலே இன்னும் அலர்ஜி, அதைப் பார்த்தா. :D//
  What else will I do?e-kalappai download panna edho edho signup password kekudhu,so my husband refused to do that.Iam happy that atleast Iam able to read all the tamil posts with no problems.
  Iam so sorry about it,mami.--SKM

  ReplyDelete
 38. கார்த்திக், முதலில் போர்க்கொடியிடம் இருந்து ராஜினாமாக் கடிதம் வாங்குங்க, அப்புறம் தான் உங்களை உண்மைத் தொண்டர்னு அறிவிப்பேன். முக்கியமான துறைகள் எல்லாம் என்கிட்டே தான் இருக்கணும்கிற அடிப்படை தெரியாத முதலமைச்சரா நீங்க? முதலில் பதவியில் இருந்து உங்களைக் கீழே இறக்கிட்டுத் தான் மறு வேலை. :D

  ReplyDelete
 39. ஹி,ஹி,ஹி, சண்டைக் கோழி, இப்படி எல்லாம் சொன்னால் தான் நீங்க என்னோட உண்மைத் தொண்டர்னு நிரூபணம் ஆகும். நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கீங்க, இந்த வேதா(ள்)வைக் கீழே இறக்கிட்டு உங்களை உ.பி.ச. ஆக்கலாமானு யோசிக்கிறேன். ரொம்ப ரொம்ப டாங்ஸு,

  நறநறநற, அது என்ன மாமி, மச்சான் எல்லாம், உங்களை உபிச ஆக்க முடியாது, முடியவே முடியாது.

  ஹி,ஹி,ஹி, நான் உட்கார்ந்திருப்பது விக்கிரமாதித்தன் சிம்மாசனம். இதிலே உட்கார்ந்தால் ஒரு மாதிரியாவும், வேறே சிம்மாசனத்தில் உட்கார்ந்தால் வேறு மாதிரியாவும் எழுதுவேன்.

  அப்புறம் இந்த எறும்பு கலப்பை பத்தி ஒரு ட்யூஷன் எடுக்கிறேன். உங்க பதிவுக்கு வரேன். யான் பெற்ற இன்பம் இவ்வையம் பெற வேண்டாமா? அதுக்குத் தான்.

  ReplyDelete