எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 20, 2016

எங்கும் குழப்பம், எதிலும் குழப்பம்! அமைதி நிலவட்டும்!

வீட்டில் தான் குழப்பமான மனோநிலைன்னா நாட்டிலும் அப்படியே! என்னத்தைச் சொல்றது? என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. வெளியே செல்பவர்கள் பத்திரமாக வீட்டுக்கு வரணுமேனு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது பெற்றோருக்கு. வேலைக்குச் செல்ல வேண்டி ரயிலுக்குக் காத்திருந்த இளம் பெண்ணை வெட்டிக் கொலை செய்கிறார்கள்.  தற்காப்புக்கு அந்தப் பெண் ஸ்ப்ரே வைச்சிருக்கணும்னு சிலர் கருத்து! அதை தாராளமாகக் கடைகளில் விற்கணும்னு இன்னொருத்தர் கருத்து. தாராளமாக் கடைகளில் விற்கப்பட்டால்கொலையாளிகள்/வில்லன்கள் அதைப் பயன்படுத்துவாங்களேனு ஒருத்தருக்கும் தோணலை போல! என்னவோ போங்க! இப்போதெல்லாம் சிறு வயது மரணங்கள் அதிகம் காணப்படுகின்றன. அதிலும் கொலைகள் அதிகமாக இருக்கின்றன. காய்கறிகளை வெட்டுகிறாற்போல் மனிதர்கள் வெட்டப்படுகின்றனர். ஏன் இப்படி?

 பெரும்பாலான பெற்றோர் வேலைக்குச் செல்வதால் சின்ன வயசுக்காரங்க பெற்றோரிடம் மனம் விட்டுப் பேசாதது கூட இதுக்குக் காரணமாக இருக்கலாம். அநேகமாய் வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள் பல்வேறு விதமான மன அழுத்தங்களுக்கு ஆட்படுகின்றார்கள். அவற்றை எல்லாம் பகிர ஆளில்லை. பெற்றோர் பயந்துக்கப் போறாங்கனு நினைச்சே பலர் சொல்வதில்லை. இன்னும் சிலருக்குப் பெற்றோருக்கு என்ன தெரியும்ங்கற நினைப்பும் இருக்கலாம். எதுவானாலும் பெற்றோருக்குத் தெரியாமல் நடக்க வேண்டாம். அவங்களை  விடவும் உங்கள் நலம் விரும்பிகள் வேறே யாரும் இல்லை. நம்பிக்கையான ஓரிரு சிநேகிதிகள், சிநேகிதர்கள் இருந்தால் போதும். அவங்களிடமும் பகிர்ந்துக்கலாம்.  இப்போதெல்லாம் சிறுவயதுக்காரர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தாங்கள் நிறையப் படித்திருப்பதாலும், வேலை பார்ப்பதாலும் பெற்றோரை விடத் தாங்கள் அதிகம் அறிந்தவர்கள் என்னும் நினைப்புடன் பெற்றோருக்குப் புத்திமதி சொல்லுகின்றனர். சிறு வயதிலிருந்து உங்களை வளர்த்து வரும் பெற்றோர் ஒன்றும் தெரியாதவர்களா?  உங்கள் உண்மையான நலம் விரும்பிகள் முதலில் உங்கள் பெற்றோர் தான்!

அவர்கள் அனுபவம் உங்களுக்கு இல்லை என்பதை மறவாதீர்கள். உங்கள் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு சிநேகித, சிநேகிதியும் உங்கள் பெற்றோருக்கும் வீட்டுக்கும் தெரிய வேண்டும். பெற்றோரிடம் அலுவலகத்தில் நடந்த, நடக்கும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தவறு யார் மீதென்பதை அவர்களுடன் பேசித் தெளிவு பெறுங்கள். முக்கியமாய் ஆண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் மகனைக் கூடப் படிக்கும் பெண்ணை சகோதரியாய், தோழியாய் மதிக்கும்படி நடந்து கொள்ளச் சொல்லிக் கொடுங்கள். பெண் எப்படி உடை உடுத்தினாலும் அது அந்த ஆண் மகனின் உணர்வுகளைப் பாதிக்காத வண்ணம் திடமாக இருக்கக் கற்றுக் கொடுங்கள். ஆடையையும் மீறி ஒரு பெண்ணின் உணர்வு புனிதமானது என்பதை எடுத்துச் சொல்லி அதை மதிக்கக் கற்றுக் கொடுங்கள். நாகரிகமாக உடை உடுத்திய ஒரு பெண் நடத்தை கெட்டவள் என்று சொல்ல முடியாது. அப்படி உடை உடுத்துவது அவள் சொந்த விருப்பம். இதற்கும் அவள் நடத்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைச் சொல்லிக் கொடுங்கள்.

பெண் குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளைக் கண் கவரும்படி உடை உடுத்தி வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள்.  மென்மையாக எடுத்துச் சொல்லுங்கள். நம்பிக்கைக்கு உரிய சிநேகித, சிநேகிதிகளை மட்டுமே அவளோடு பழக அனுமதியுங்கள். அதையும் உங்கள் கண்காணிப்பிலேயே வையுங்கள். குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பது பெற்றோருக்குக் கட்டாயமாய்த் தெரிந்திருக்க வேண்டும்.  அவள் அலைபேசியில் வெகுநேரமாக யாருடனாவது பேசிக் கொண்டிருந்தால் அதைப் பற்றித் தயக்கமில்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். மொத்தத்தில் குழந்தைகள் உங்களிடம் எதையும் மறைக்காமல் இருக்கும்படி பழக்குங்கள். கணினியில் வெகு நேரம் உங்கள் குழந்தைகள் நேரம் செலவு செய்தால் அதைப் பற்றி என்னவென்று தெரிந்து கொள்ள எப்படியானும் முயலுங்கள். கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் ஒரு பெற்றோராக இது உங்கள் முக்கியக் கடமை!

இறந்து போன பெண்ணைப் பற்றிப் பலவிதமான அவதூறுகள், கருத்துகள், விவாதங்கள். இதெல்லாம் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கும், உற்றோருக்கும் மன வேதனை அளிக்கும் பேச்சுகள்.  தொலைக்காட்சியில் அந்தப் பெண்ணின் சித்தப்பா மனமுருகி வேண்டிக் கொண்டார். இறந்த பெண்ணின் மேல் யாரும் அவதூறான கருத்துகளைப் பரப்ப வேண்டாம்.  இது தான் இப்படி என்றால் சேலம் அருகே இளம்பிள்ளை என்னும் கிராமத்தில் தன்னைப்  பற்றி ஆபாசமாகப் படம் போட்டதால் இன்னொரு இளம்பெண்  தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். வர வர மனிதாபிமானம் என்பதே அற்றுப் போய்விட்டதோ என நினைக்க வைக்கும் சம்பவங்கள் இவை எல்லாம். இன்று ஒரு பெண் பதினோராம் வகுப்புப் படிக்கும் பெண் விஷம் குடித்து இறக்க முற்பட்டிருக்கிறாள். காரணம் என்னவெனில் ஓர் பையர் அவளைத் துரத்தித் துரத்திக் காதலித்திருக்கிறார். பெண் மறுத்திருக்கிறாள். தொல்லை தாங்க முடியாமல் பெண் விஷத்தைக் குடித்திருக்கிறாள். படிக்கிற வயசிலே காதல் எப்படி வரும்?

இதுக்கெல்லாம் திரைப்படங்களும் நெடுந்தொடர்களுமே காரணம். அதில் தான் பள்ளிக் காதலை ஆதரித்துப் படம் எடுக்கின்றனர். நெடுந்தொடர்களிலும் பார்ப்பதை உண்மையில் வாழ்க்கையில் நடக்கும் என்று நம்புகிறார்கள். என்னதான் கற்பனை என்று போட்டாலும் ரசிகர்கள் அதை ஏற்பதில்லை. இதை எல்லாம்   படிக்கவே மனம் வெதும்புகிறது. இப்படி இவர்கள் எல்லாம் கொலையுண்டு சாகவும், தற்கொலை செய்து கொண்டு சாகவும் காரணம் ஆண்களே! பெண்ணைப் பெண்ணாக நினைக்காமல் போகப் பொருளாக நினைக்கிறார்கள். அவர்கள் கண்ணில் ஒரு பெண் பட்டுவிட்டால் போதும்! அந்தப் பெண்ணை அவர்கள் தங்கள் சொத்தாகவே நினைக்கின்றனர். இதில் அந்தப் பெண்ணின் விருப்பம், மனம் எதுவும் பார்க்கப்படுவதில்லை.

திரைப்படங்களும் தொலைக்காட்சிகளும் மிகவும் கெட்டவனாக இருக்கும் கதாநாயகன் கதாநாயகியான பணக்காரப் பெண்ணை மிரட்டி மிரட்டி துரத்தித் துரத்திக் காதலிப்பான். அந்தப் பெண்ணை ஒத்துக்க வைக்கிறேன்னு சவாலெல்லாம் விடுவான். அதில் ஜெயித்தும் காட்டுவான். சினிமாவில் பணத்துக்காக நடிக, நடிகைகள் இப்படிப் பொருந்தாத வேடங்களில் நடிக்கின்றனர். அதை நிஜம் என்று நம்பலாமா?  இதைப் பார்க்கும் இளைஞர்கள் தங்களையும் அப்படியே நினைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். நிஜ வாழ்க்கைக்கும் திரை வாழ்க்கையும் வித்தியாசம் தெரியாமல் செயல்படும் இவர்களைப் போன்றவர்களைத் திருத்தும்படியான திரைப்படங்கள் வந்தால் தான் உண்டு! பெண்ணையும் அவள் விருப்பத்தையும் மதிக்கிறாப்போல் கதாநாயகன் வரணும். அதைப் பார்த்தாவது இந்த முட்டாள் மக்கள் திருந்தணும்!

அதோடு இப்போதெல்லாம் பள்ளிகளில் நீதி போதனையோ நல்லொழுக்கங்களோ கற்றுக்கொடுப்பதில்லை. இவை எல்லாம் என்று நிறுத்தப்பட்டதோ அதிலிருந்து குழந்தைகளின் பால் போன்ற மனது கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போய் விட்டது.  குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்தே நம் கலாசாரங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும். நம்முடைய மரபுகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். படிக்கும் வயதிலோ அல்லது அதன் பின்னரோ அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தச் சொல்லிக் கொடுக்க வேண்டும். இவை அனைத்தும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது. ஒரு பெண்ணைப் பார்த்தால் முதலில் உடல் ரீதியான எண்ணங்கள் மனதில் தோன்றாமல் அவளும் நம்மைப் போன்ற ஒரு மனுஷி என்னும் எண்ணத்தைச் சிறு வயதிலிருந்தே ஆண்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.  ஒரு பெண் இன்னொரு ஆணோடு தாராளமாகப் பேசினால் அதைக் காதல் என்று நினைக்கக் கூடாது!  பெண்ணை ஒரு போகப் பொருளாகப் பார்க்காமல் மனுஷியாகப் பார்க்கக் கற்றுத் தர வேண்டும். ஒரு பெண்ணை நாம் விரும்பினால் அந்தப் பெண்ணும் நம்மை விரும்புவாள் என்று எதிர்பார்க்கக் கூடாது!

முன்னெல்லாம் அக்கா, தங்கை இல்லையா என்று சம்பந்தப்பட்ட ஆண்மகனைக் கேட்பார்கள்! இப்போதெல்லாம் உண்மையிலேயே அக்கா, தங்கை இருப்பதில்லை. ஒரே குழந்தையாகப் போய் விடுகிறார்கள். அதனாலும் அதிகச் செல்லம் கொடுத்துக் கெடுக்கின்றனர் பெற்றோர்.  கேட்டதை எல்லாம் அடைபவனுக்கு ஒரு பெண் தன்னை மறுத்தால் அதைப் பொறுக்க முடியாமல் போகிறது. அந்தப் பெண்ணைப் பழி வாங்கி விடுகிறான். அன்றாடம் தொலைக்காட்சிகளில் இதைத் தானே பார்க்கின்றனர்!  சினிமா மோகம் வேறு பிடித்து ஆட்டுகிறது. கபாலி படத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கறாங்களாம். தலை சுத்துது  எனக்கு!  இதெல்லாம் மாறும் காலமும் வருமா? !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

15 comments:

  1. ​​
    உங்கள் அங்கலாய்ப்புகள் புரிகிறது. இந்தக்காலத்தில் யாரும் சொன்ன பேச்சை கேட்பதில்லை, வாண்டு முதல் பெரியவர்கள் வரை. சட்டங்கள் என்பவை மீறுவதற்காகவே என்ற எண்ணம் சின்ன வயதிலேயே வந்து விடுகிறது. செயலுக்குப்பின் ஏற்படும் விளைவுகளை ஆராயாமல் மனதில் தோண்றியதைச் செய்யும் மனப்பான்மை எல்லோருக்கும் வந்து விட்டது. இதற்கு நமது பாடத்திட்டமும் ஒரு காரணம் என சொல்லலாம். Analysis and Inference என்பது நம்முடைய பாடத்திட்டத்தில் இல்லை.

    செவிடன் காதில் ஊதிய சங்காக நீங்கள் பதிவு எழுதமுடியுமே தவிர இதை படித்து ஒன்றோ இரண்டோ பேர் திருந்தினால் சரி.

    --
    Jayakumar​ ​

    ReplyDelete
    Replies
    1. யார் இதை எல்லாம் படிக்கப் போறாங்க? படிச்சவங்க கணக்குனு ஒண்ணைக் காட்டுது கூகிள்! ஆனால் இதுக்கு யாரும் கருத்து கூடச் சொல்லலை! :( பாடத்திட்டத்தை மாத்தணும்னு சொல்வது சரியே! அப்போதெல்லாம் வாரம் இரண்டு நாட்கள் நீதி போதனை வகுப்புகள் இருக்கும். குடிமைப் பயிற்சி வகுப்புகள் அநேகமாய் தினம் இருக்கும். இப்போ எதுவும் இல்லை. வெறும் மனப்பாடம் பண்ணிட்டு அதைக் கக்கும் ஒரு கூட்டமே உருவாக்கப்பட்டு வருகிறது.சுய சிந்தனையை வளர்ப்பதில் பெற்றோரும் அக்கறை காட்டுவதில்லை. பள்ளிகளும் அப்படியே!

      Delete
  2. பதிவுகள் எழுதி மனத்தைத் தேற்றிக் கொள்ளலாம் அவ்வளவுதான். இப்போதெல்லாம் ஒரு புதிய ஸ்டைல் என்ன என்றால் எந்த ஒரு கருத்துக்கும் துணிந்து - அது உண்மையா, பொய்யா என்று அறியாத நிலையிலும் - எதிர்க் கருத்துகளை பரப்பி விட்டால், மீடியாக்களின் புண்ணியத்தில் மக்களைக் குழப்பி விடலாம்! உண்மைக்கு மதிப்பு குறைந்து போகும்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இந்தத் தரங்கெட்ட ஊடகங்களின் வேலை தான் அதிகம் இதிலே! :(

      Delete
  3. நாளை வருகிறேன்...

    ReplyDelete
  4. தங்களது சமூக ஆதங்கத்தை அருமையாக வெளிப்படுத்தியமைக்கு முதலில் எமது சல்யூட்.

    சுவாதி இறந்து இறைவனடி சேர்ந்து விட்டாள் (ஆன்மா அமைதி பெற வேண்டுவோம்)
    அவளது பெற்றோர் தினம், தினம் செத்துக்கொண்டு இருக்கின்றார்கள் இன்றைய ஊடகங்களால்...

    இன்றைய இளைய சமூகத்தினர் பெற்றோர்களை மதிப்பதில்லை காரணம் நாம் பெற்றோர்களைவிட படித்தவர்கள் என்ற எண்ணங்கள் எல்லா பாலினரிடமும் இருக்கின்றது மேலும் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடைவெளி அதிகமாகி விட்டது.

    இதற்கு அடிப்படை காரணம் திரைப்படங்களும், தொலைக்காட்சி தொடர்களும் என்பதை மறுக்க முடியாது தணிக்கை குழு என்று ஒன்று இருக்கின்றதா ? என்பதை நான் பலமுறை யோசித்து பார்த்து இருக்கின்றேன்.

    வீட்டில் இருக்கும் பொழுது தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருக்கின்றது மீதி நேரம் கணினி, பிறகு செல்போண் இப்படியாக போய்க்கொண்டு இருப்பதால் வாய் விட்டு, மனம் திறந்து பேசும் காலங்கள் குறைந்து கொண்டு வருகின்றது.

    குழந்தைகள் பெற்றோர்களை புரிந்து கொள்ள ஒரு காலம் வரும் அது அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்து வளரும் பொழுது ஆனால் அந்த பெற்றோர்கள் அப்பொழுது மண்ணுக்குள் போய் விடுவார்கள்.

    மேலும் இன்றைய பிள்ளைகளுக்கு பந்த பாசங்களும் இல்லை என்றே சொல்லலாம் காரணம் இவர்களின் கூடப்பிறந்தவர்கள் யாருமில்லையே.. எல்லோருமே ஆசைக்காக ஒரேயொரு அதுவும் ஆண் பிள்ளைதான் வேண்டும் என்று வேண்டி விரும்பி பெறுகின்றார்கள் அவனுக்கு அக்கா-தங்கை என்ற பாசத்தைப்பற்றி தெரிய வாய்ப்பு இல்லை ஆகவே அவன் பெண் பிள்ளைகளை தாங்கள் சொல்வது போல் ஒரு போதைப் பொருளாகவே பார்க்கின்றான் போதாக்குறைக்கு இன்றைய திரைப்படங்களும் அவனுக்கு அதையே போதிக்கின்றது.

    மேலும் இப்பொழுது ஆசிரியர்களும் பிள்ளைகளை கண்டிப்பது இல்லை கண்டித்தால்தான் நாம் காவல் நிலையத்தில் புகார் கொடுப்போமே அதன் பலன் நாம் இதையும் அனுபவிக்க வேண்டும்.

    மொத்தத்தில் இன்றைய மனிதர்களிடம் எண்ணங்கள் சரியில்லை ஆகவே இனிமேல் இப்படித்தான் கொலை. கொள்ளை, வழிப்பறிகள் நடக்கும் இதை நாம் கடந்து செல்லும் பக்குவத்தை பெறவேண்டும்.

    அல்லது நாடு கடந்து செல்லவேண்டும் அதற்கும் மனப்பக்குவம் இருந்தாலும், எல்லோராலும் அப்படி போய் விடவும் முடியாது.

    ஆக மொத்தம் முடிவு பழைய பழமொழி

    வெந்ததை திண்ணுட்டு விதி வந்தால் சாவோம்.
    - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். நாளாக நாளாக இந்தச் சமுதாயம் திருந்தாதுங்கற முடிவுக்கே வர வேண்டி இருக்கு! :(

      Delete
  5. https://vimarisanam.wordpress.com/2016/07/21/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/


    //ஒழுக்கத்தையும், பொது ‘நடத்தையையும் கற்றுத்தராமல்
    வெறும்னே பிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி என்று பாடங்களை
    மனப்பாடம் பண்ணிப் படிக்கும் கல்வி என்ன
    மாறுதலை நாட்டில் கொண்டுவந்துவிடும்?//

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. இதை அவர் தளத்திலேயே படித்து விட்டேன். :)

      Delete
  6. நல்லதொரு பகிர்வு. யாருக்கும் எதைப் பற்றியும் கவலை இல்லை. ஊடகங்கள் தங்கள் புகழுக்காகவும், சம்பாத்தியத்திற்காகவும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை. எங்கே போகிறோம் என்ற எண்ணம் எனக்குள்ளும் உண்டு!

    ReplyDelete
    Replies
    1. ஊடகங்கள் பெருகிப் போனதில் தான் பிரச்னையே! ஒவ்வொன்றும் அரசுக்கு எதிராகச் சொல்கிறோம் என்னும் பெயரில் சின்ன விஷயத்தைக் கூட ஊதி ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.

      Delete
  7. அருமையான பகிர்வு. ஊடக தர்மம் என்றுஒன்று உண்டு அது சுத்தம் இப்போது. கண்டதை எழுதுவதுதான் தர்மம் ஆகியிருக்கிறது. பரபரபபக விற்க வேண்டுமே அதற்காக சென்சேஷனல் செய்திகள் வெளியிடுவதில் போட்டி. அதிலும் கூட போட்டி. டி ஆர் பி ரேட்....அது பற்றி கேரளத்தில் ஒரு படம் மிக அருமையாக எடுத்திருக்கிறார்கள் பல வருடங்களுக்கு முன்பே. நம் சமூகம் எதை நோக்கி? எங்கே செல்கிறது என்று அவ்வப்போது எண்ணங்கள் ஏற்படத்தான் செய்கிறது..

    ReplyDelete
    Replies
    1. கவலையாகத் தான் இருக்கிறது. இளைஞர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றே சில சமயம் தோன்றுகிறது. நம்பிக்கை தோன்றும் சமயம் இப்படி ஒரு கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று செய்தி வந்து மனதைச் சோர்வடைய வைக்கிறது.

      Delete
  8. உண்மையிலேயே பயமாகத்தான் இருக்கிறது. ஒரு பக்கம் ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் என்று அதற்கும் கூட்டம் பெருகிவருகிறது. நல்ல விஷயங்களுக்கு ஜனங்கள் வருகிறார்களே என்று சந்தோஷப்படும் போதே இன்னொரு பக்கம் கொலை, கொள்ளை என்று செய்திகள் வருகின்றன. கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

    ReplyDelete