எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 14, 2016

தண்ணீர், தண்ணீர், தண்ணீர் கேட்கும் வயல்கள்!

எப்போவும் நம்முடைய இருப்பைக் காட்ட வேண்டியதாய் இருக்கு! ஹிஹிஹி!கொஞ்ச நாட்கள் பதிவு போடலைனால் மக்கள் மறந்துடறாங்க! அவங்க அவங்க வேலை இருக்கு இல்லையா! அதோடு எனக்கும் இப்போப் பதிவுகள் போடுவதில் கொஞ்சம் இல்லை நிறையச் சுணக்கம் ஏற்பட்டிருக்கு. இந்த 2016 ஆம் வருடம் பிறந்ததில் இருந்தே சுணக்கம் தான். போகப் போக எப்படியோ தெரியலை! :)

நேற்றுப் பெரிய ரங்குவைப் பார்க்கப் போயிருந்தேனா! கூட்டமே இல்லை! தாயார் சந்நிதியில் கொஞ்சம் கூட்டம் இருந்தது என்றாலும் பட்டாசாரியார்கள் விரட்டவில்லை என்பதால் கொஞ்சம் நிம்மதியாகப் பார்த்துட்டு வந்தோம். நவராத்திரியும் முடிஞ்சு பள்ளிகள் அலுவலகங்கள் எல்லாமும் திறந்தாச்சா, கூட்டமே இல்லை. கோயிலில் நம்ம பெரிய

படம் நேத்தி எடுக்கலை, முன்னர் எடுத்தது.

 ரங்குவுக்கு இப்போ இரண்டாம் முறையாத் தைலக்காப்புச் சார்த்திப் போர்த்தி விட்டிருக்காங்க! முக தரிசனம் மட்டுமே! திருவடி தரிசனம் கிடையாது! அதனால் தானோ என்னமோ தெரியலை, நேத்திக்குக் கூட்டம் கம்மியா இருந்தது. எவ்வளவு கம்மின்னா நாங்க இரண்டு பேருமே இலவச தரிசனத்தில் நேரே ஜய, விஜயர்களைக் கடந்து உள்ளே காயத்ரி மண்டபம், மூலஸ்தானம் வரை போய் விட்டோம். உள்ளே ஒரு பத்திருபது பேர் தான் இருந்திருப்பார்கள். பட்டாசாரியார்கள் வழக்கம்போல் தெரிந்தவர்களுக்குச் சடாரி சாதித்துக் கொண்டும், துளசிப் பிரசாதம் கொடுத்துக் கொண்டும் இருந்தனர். அப்போ அவர் சரியாப் புரியாமல் எனக்கும் சடாரி சாதித்துவிட்டார். அடிச்சேன் பிரைஸ்! ஹிஹிஹி, நம்ம ரங்க்ஸ் தலையைக் குனிந்து குனிந்து காட்டிட்டு இருந்தார். அப்புறமா என்ன நினைச்சாரோ அவருக்கும் கிடைச்சது! துளசியும் நாங்க வேறே வாங்கிக் கொண்டு கொடுத்ததாலோ என்னமோ இரண்டு பேருக்கும் கிடைச்சது.

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் க்கான பட முடிவு

இதை எல்லாம் நம்பெருமாள் பார்த்துக் கொண்டு சிரிச்சாரா, நான் அவரையே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டேனா, பட்டாசாரியா ர் ஒருத்தருக்குக் கோபம் வந்து விட்டது. என்றாலும் அசராமல் நின்று பார்த்து நம்பெருமாளை என்னனு கேட்டுவிட்டுத் தான் வந்தேன். யாகபேரரைத் தான் பார்க்க முடியவில்லை. அடுத்த முறை வைச்சுக்கலாம்னு வந்துட்டேன். அப்புறமா வெளியே வந்தும் சில நிமிடங்கள் நின்று கொண்டு பார்த்தோம். பெரிய ரங்குவின் திருமுக தரிசனம் கிடைச்சது. திருவடி தரிசனம் தீபாவளியிலிருந்து ஆரம்பிக்கும்னு நினைக்கிறேன். 

இன்னிக்குக் கும்பகோணம் அருகிலுள்ள எங்க மாமனாரின் பூர்விக ஊரான பரவாக்கரை மாரியம்மன் கோயிலுக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டிச் சென்றோம். மாரியம்மன் தான் குல தெய்வம். அங்கே சென்றபோது அம்பாளின் அபிஷேஹம் முடிந்து அலங்காரம் வெகு எளிமையாகச் செய்திருந்தார் பூசாரி. அதைப் பார்த்ததும் அம்மனை ஒரு படம் பிடித்துக் கொண்டேன். பூசாரி அனுமதியுடன் தான். வழக்கம்போல் அலைபேசியில் எடுத்ததால் அதை ஶ்ரீராமுக்கு வாட்ஸப்பில் அனுப்பி வைச்சு அவர் என் மெயிலுக்கு அனுப்பினார். என் மெயிலுக்கு என் அலைபேசியிலிருந்து அனுப்ப முயன்றால் போவதே இல்லை! என்னனு புரியலை!
வரும் வழியில் வயல்களைப் பார்வையிட்டுக் கொண்டே வந்தோம். வசதி படைத்தவர்கள் போர்வெல் குழாய்கள் மூலம் நிலத்து நீர்ப்பாசனம் செய்திருந்தனர். சில இடங்களில் நாற்றுகள் பிடுங்கி நடுவதற்குக் காத்திருந்தன. சில இடங்களில் உழுது போட்டிருந்தார்கள். தண்ணீர் வருவதற்குக் காத்திருந்தார்கள். தண்ணீர் அங்கெல்லாம் போய்ச் சேரவே இல்லை. இங்கே திருச்சிக்கே வந்திருக்கும் தண்ணீரின் ஆழம் அரை அடி இருந்தால் பெரிது! இதிலே கல்லணையிலிருந்து விடப்படும் நீர் கடைமடை வரை போவது எங்கே? இங்கே நடுவிலிருக்கும் கும்பகோணத்துக்கே போகவில்லை! தண்ணீர் விடும் பாசன வாய்க்கால்கள் எல்லாம் தூர் வாரப்படாமல் நாணலும், ஆகாசத்தாமரையும் வளர்ந்து புதர்கள் மண்டிக் காட்சி அளித்தன.

உழுது போட்டிருக்கும் வயல்! அருகே பாசன வாய்க்கால், புற்கள் முளைத்துக் காணக் கிடைக்கிறது. 

இதுவும் ஒரு வயல் தான். உழுது விட்டுப் பின்னர் சும்மா விட்டிருக்கின்றனர். நீர் வருமா என எதிர்பார்த்தோ என்னமோ! அருகில் பாசன வாய்க்கால் வழக்கம் போல் செடி, கொடிகளுடன்! :(

குட்டை போல் கொஞ்சம் தண்ணீருடன் காணப்படும் அரிசிலாறு. மற்ற இடங்கள் மேடிட்டும், சில இடங்களில் மணல் வாரியதால் பள்ளமாயும், சில இடங்களில் மரங்களே முளைத்து வளர்ந்தும் காண முடிகிறது. :(



அரிசிலாறு இன்னொரு கோணத்தில் எடுக்கப்பட்டது. இங்கே தடுப்பணை போல் கட்டி இருப்பதால் குடி நீர்த்தேவையைப் பூர்த்தி செய்கிறது என்று நினைக்கிறேன். என்றாலும் ஆற்றுக்கு நடுவில் எவ்வளவு பெரிய மரம் வளர்ந்திருக்கிறது என்று பாருங்கள். 

இன்னொரு காய்ந்து காணப்படும் வயல். வயல்களை ஒட்டிய பாசன வாய்க்கால்கள் எல்லாம் வறண்டே காணப்படுகின்றன. அவை சுத்தம் செய்யப்படவும் இல்லை. ஆயிற்று, மழை இன்னும் சில நாட்களில் வந்து விடும். அப்போது தண்ணீரெல்லாம் உறிஞ்சப்பட்டாலும் தேங்கவும் செய்யும், அந்த நீரை எல்லாம்சேமிக்க வழி செய்யப்பட்டிருக்கிறதா? ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டிருக்கின்றனவா? நீர் வரத்துக்கால்வாய்களிலும் பாசனக் கால்வாய்களிலும் தூர் வாரப் பட்டிருக்கிறதா? செடி, கொடிகள், முட்புதர்கள் அகற்றப்பட்டிருக்கின்றனவா? கொடிய ஆகாயத் தாமரை அகற்றப்பட்டிருக்கிறதா? 

தண்ணீர் தரவில்லை என்று போராட்டங்கள் நடத்துகிறோம். ஆனால் அந்தத் தண்ணீரைச் சேமிக்கும் வழியை நாம் கடைப்பிடிக்கிறோமா? இந்த இடையூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டால் தான் கடைமடைவரை தண்ணீர் போய்ச் சேரும்! வருகிற தண்ணீரையாவது நன்கு செலவு செய்ய வேண்டாமா? போராட்டம் நடத்தினால் போதுமா? முன்னேற்பாடுகள் செய்ய வேண்டாமா?  யார் செய்வது? அரசாங்கம் செய்யும் என்று கிராமவாசிகள் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தால் அரசு வெளி ஆட்களைக் கொண்டு வந்து ஏதோ முடிந்தவரை சுத்தம் செய்து விட்டுப் போகும். கூலியும் வெளி ஆட்களுக்குப் போகும். சுத்தம் செய்வதும் சரிவர நடக்காது.

நம் கிராமம், நம் வயல், நம் மண் என்று இருந்தால் தானே இதெல்லாம் சரியாகும்! நம் கிராமத்தை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா? ஒரு காலத்தில் இவை எல்லாம் சரிவர நடந்து தான் வந்திருக்கிறது. அதனால் இன்றும் கண்டோர் வியக்கும் வண்ணம் நீர்ப்பாசன வாய்க்கால்கள் காணப் படுகின்றன. குறைந்த பக்ஷமாக முன்னோர்களால் கட்டிக்காத்த வளங்களை முடிந்த அளவு அழிக்காமலாவது இருக்கலாமே! தண்ணீர் குறைந்த அளவு செலவாகும் பயிர்களைப் பயிரிட ஆரம்பிக்கலாம். அல்லது சொட்டு நீர்ப்பாசனத் திட்டம் எப்படி என்று கண்டறிந்து அதன் மூலம் பாசனங்கள் செய்ய ஆரம்பிக்கலாம். ஏற்கெனவே நகரங்களை ஒட்டி இருந்த வயல்களெல்லாம் குடியிருப்புகளாக மாறி விட்டன. இப்போது கிராமங்களில் இருக்கும் வயல்களும் அழிந்து விட்டால்! எல்லாம் நரகமயமாகவே ஆகி விடும்! நினைக்கவே பயமாக இருக்கிறது. 

19 comments:

  1. வணக்கம் சகோ விரிவான விடயங்கள்.

    நம் கிராமம், நம் வயல், நம் மண் என்று இருந்தால் தானே இதெல்லாம் சரியாகும்! நம் கிராமத்தை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டாமா ?

    உண்மையான வார்த்தை இந்த எண்ணங்கள் எல்லோர் மனதிலும் வரே வேண்டும்
    நான் உங்களது பதிவை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் நீங்கள்தான் கொஞ்ச நாட்களாக காணவில்லை

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! உங்க பதிவுகள் எனக்கு எதுவும் அப்டேட்டே ஆகலை. காரணம் புரியலை. நீங்க இங்கே குறிப்பிட்டிருப்பதைப் படித்ததும் போய்ப் பார்த்தேன். நாலைந்து பதிவுகள் வந்திருக்கின்றன. அதோடு மடிக்கணினியில் ஏதோ வைரஸ் வந்ததால் கொஞ்ச நாட்கள் மடிக்கணினியைச் சரியாகப் பயன்படுத்தாமல் வைத்திருந்தேன். இப்போது தான் கணினி மருத்துவர் வந்து சிலவற்றை நீக்கினார். இன்று நிச்சயம் பார்த்துவிடுகிறேன்.

      Delete
  2. அருமையான தகவல்

    ReplyDelete
  3. பயணத்தில் வறண்ட நிலங்களைப் பார்த்ததால் வந்த ஆதங்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது. ஐம்பது அல்லது நூறு வருடங்கள் கழித்து நிஜமாகவே என்ன நிலைமைக்கு ஆகுமோ....

    ReplyDelete
    Replies
    1. தெரியலை, குறைந்த அளவு மனிதர்களே விவசாய வேலைக்கு வருகின்றனர் என்பதும் ஓர் பிரச்னைதான். யாரும் உழைக்கத் தயாராக இல்லை. இன்னும் கொஞ்ச நாட்களில் விவசாய வேலைக்கும் வட மாநிலத்து ஆட்களே வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை! :(

      Delete
  4. காவிரி நிலையை ஆராய ஒரு குழு வந்து சென்றதே... அதில் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக அறிக்கை அளிப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. தெரியலை! ஆனால் எல்லாவற்றுக்கும் மத்திய அரசைக் குற்றம் சொல்வது இப்போதெல்லாம் ஒரு பொழுதுபோக்காகி விட்டது. இதற்கு முன்னர் ஆண்ட அரசுகள் என்ன செய்தன என்ற கேள்வியை யாரும் கேட்பதே இல்லை! :(

      Delete
    2. இன்னிக்கு அறிக்கை வெளிவந்துவிட்டது! :)

      Delete
  5. நீர் நிலைகள் மட்டுமல்ல, இயற்கை வளங்கள் எதையுமே பாதுகாப்பதில்லை. எதிலே எவ்வளவு சுரண்டலாம் என்றே இருக்கும் வரை இப்படித்தான் வறண்டு கிடக்கப் போகிறது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை. ஆனால் மற்ற மாநிலங்கள் அமைதியாக நீரைப் பங்கிட்டுக் கொள்கையில் தமிழ்நாட்டுக்கு மட்டும் அண்டை மாநிலங்களோடு எப்போதும் பிரச்னை! குஜராத், மத்தியப் பிரதேசம் நர்மதா நீரைப் பகிரவில்லையா! கங்கையை எத்தனை மாநிலங்கள் பகிர்ந்து கொள்கின்றன! சிந்து நதியைப் பக்கத்து நாடான பாகிஸ்தானோடு பகிர்ந்து கொள்கிறோம். இங்கே? ஏன் இப்படி? தண்ணீரை அண்டை நாடுகளோடு பகிராத நாடே இல்லை எனலாம்.

      Delete
  6. கர்நாடகாவில் குடிக்கவே நீரில்லாதபோது பாசனத்துக்குக் கேட்கிறார்களே என்னும் ஆதங்கம்

    ReplyDelete
  7. அந்த பக்கம் ஆறிருந்தும் வரண்டு கிடக்கிறது! எங்கள் ஊர் பக்கம் ஆழ்துளை கிணறு மோட்டார் பாசனம்தான்! இலவச மின்சாரம் என்பதால் பலர் நீரை வீணாக்குகிறார்கள் வயல்கள் நிரம்பி மோழை பாய்கிறது! கண்டு கொள்வதில்லை! அப்புறம் எப்படி நீர் கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பதில் கொடுத்திருந்தேன். அது எங்கேனு தெரியலை! :) இந்த கன்ஃப்ளிக்டிங் எரர் வந்து எல்லாத்தையும் தூக்கிடுது போல! நம்ம ஊரில் நீரை வீணடிக்கச் சொல்லியா தரணும்! :( எத்தனை சிரமப்பட்டாலும் மாறாத மக்கள் மனம்!

      Delete
  8. எந்த மாநிலமாக இருந்தாலும் சரி நீர் வளத்தைச் சரியாகப் பராமரிக்காவிட்டால் இது தான் கதி மட்டுமல்ல இரு மாநிலங்களுக்கும் பொதுவாக இருக்கும் நீர்நிலைப் பிரச்சனைகள் எழத்தான் செய்யும். இருக்கும் நீர்நிலைகளைக் கூடச் சரிவரப் பராமரிக்காவிட்டால் ...நிறைய எழுதலாம் நீர் மேலாண்மை பற்றி. தங்களின் ஆதங்கம் சரியே...

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டில் இதற்கு அக்கறை காட்டுபவர்கள் குறைவே! :(

      Delete
  9. உங்கள் ஆதங்கம் சரியானதுதான். அரசும் சரி, சம்பந்தபட்டவர்களும் சரி போராட்டம் நடத்துவதில் காட்டும் அக்கறையை ஆக்கபூர்வமான விஷயங்களில் காட்டுவதில்லை.

    ReplyDelete