எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 28, 2017

நல்லவேளையாப் படிப்பை முடிச்சுட்டேன்!

இப்போல்லாம் எதற்குத் தற்கொலை பண்ணிக்கிறது என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது! சில நாட்கள் முன்னர் பள்ளியில் படிக்கும் சிறுமிகளைச் சரியாப் படிக்கவில்லை என்பதற்காகப் பெற்றோரை அழைத்து வரும்படி ஆசிரியர்கள் சொல்லி இருக்க அந்தப் பெண்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இன்னிக்குப் பார்த்தா +2 படிக்கும் ஓர் மாணவன் ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டானாம்.

நான் படிக்கிறச்சே எல்லாம் அப்பா பள்ளிக்கே வந்து ஆசிரியர்களிடம் வீட்டிலே இவ படிக்கிறதே இல்லை. விகடன், கல்கி, குமுதம் தான் படிக்கிறாள். நல்லா அடிச்சுச் சொல்லுங்க! என்று வந்து சொல்லி விட்டுப் போவார்.  இத்தனைக்கும் பள்ளியிலேயே பள்ளி நேரம் முடிந்த பின்னர் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஆசிரியர் சிறப்பு வகுப்பு வைச்சிருப்பாங்க. அன்றன்றைய பாடங்களை அந்தச் சிறப்பு வகுப்பிலேயே தேர்வு வைச்சு எழுதச் சொல்லியும் பயிற்சி கொடுத்திருப்பாங்க. வீட்டுப் பாடங்களையும் சிறப்பு வகுப்பிலேயே முடிப்போம். தினம் தினம் காலை, மாலை இரு நேரமும் சிறப்பு வகுப்புக்கள் உண்டு. இப்படிப் படிச்சப்புறமும் வீட்டிலே வந்து படிக்கலைனு ஆசிரியப் பெருமக்களும், பெற்றோரும் எங்களைக் கண்டிச்சாங்க. அடிகளும் விழுந்தன. ஆனால் நமக்கெல்லாம் எருமைத் தோலாச்சே! அதை எல்லாம் கண்டிக்கலை.

எல்லாத்தையும் துடைச்சுப் போட்டுட்டுப் போயிடுவோம். இப்போதைய ஆசிரியர்கள் போலவா அப்போதைய ஆசிரியர்கள்? இப்போதைய ஆசிரியர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்! வருமானம் என்னமோ முன்னை விட இப்போது பரவாயில்லை தான்! ஆனால் ஒரு பையனையோ, பெண்ணையோ படிக்கலை என்று கண்டிச்சுட்டு அந்த ஆசிரியர் அப்புறமா அந்தப் பள்ளியிலே வேலை செய்ய முடியுமா? கஷ்டம்! அப்படியும் மீறிச் சொல்லிட்டா அந்த மாணவன் அல்லது மாணவி தற்கொலைக்கு முயன்றாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ அந்தக் குறிப்பிட்ட ஆசிரியர் நேரே சிறைக்குத் தான் போகணும். சம்பந்தப் பட்ட மாணவன் படிச்சால் என்ன, படிக்காட்டி என்னனு கண்டுக்காமப் போனால் தான் ஆசிரியர்கள் பிழைச்சாங்க. இல்லைனா அவங்க பாடு சிரமம் தான்!

ஏற்கெனவே கல்வியின் தரம் தாழ்ந்து கிடக்கிறது. எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் பாஸ்னு வேறே போட்டுடணும். ஒன்பதாம் வகுப்பிலே இருந்தாவது படிம்மா கண்ணே, முத்தேனு கொஞ்சிக் கெஞ்சிப் படிக்கச் சொன்னாலும் படிக்காதவங்களை என்ன செய்ய முடியும்? அவங்க தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் அதுக்கும் ஆசிரியர்கள் தான் காரணம்! சரியாச் சொல்லிக் கொடுக்கலை என்பாங்க. சரியாச் சொல்லிக் கொடுத்து மாணாக்கர்கள் சரியா அதைத் தேர்வில் எழுதறாங்களானு ஆசிரியர் கவனிச்சு அதைத் திருத்திட்டால் பொல்லாத ஆசிரியராகி விடுகிறார். நல்லவேளையா இந்தக் காலத்தில் பிறக்கலை.

ஆசிரியரை உண்மையாக குருவாக மதிச்சு வந்த காலத்திலேயே என்னோட படிப்பெல்லாம் முடிஞ்சு போச்சோ, பிழைச்சேன்! இப்போதைய ஆசிரியர்கள் சாபம் வாங்கிக் கொண்டு ஆசிரியத் தொழிலுக்கு வந்தவர்கள். பாவம் ஆசிரியர்கள்! 

29 comments:

  1. "வருமானம் என்னமோ முன்னை விட இப்போது பரவாயில்லை தான்! " - எந்தக் காலத்துல இருக்கீங்க நீங்க. இப்போல்லாம் ஆசிரியர்களுக்கு மிக நல்ல சம்பளம். ஆனா, அவங்க கடமையைச் செய்ய மிகவும் கட்டுப்பாடுகள் உண்டு (படிக்கச் சொல்லக்கூடாது, பசங்களைக் கண்டிக்கக்கூடாது, இன்னும் பலப் பலப் பிரச்சனைகள். ஆர்வமா, அவங்களுக்கு நல்லது செய்ய நினைத்தால், பெரிய பிரச்சனைல கொண்டுவந்துவிட்டுடும். அதுனால, பெரும்பாலும், எக்கேடோ கெட்டுப் போங்கன்னு விட்டுடலாம். ஆனால் அதையும் செய்யமுடியாது. ரிசல்ட் காட்டலைனா, மேனேஜ்மென்ட், தலைமை ஆசிரியர் முதலிய பலரிடம் வாங்கிக்கட்டணும்)


    "ஆசிரியரை உண்மையாக குருவாக மதிச்சு வந்த காலத்திலேயே" - யாருகிட்ட கதை விடறீங்க? அந்த வயசிலயும் ஆசிரியரை பட்டப்பெயர் வைக்கறதும், யாருக்கும் கேட்காமல் திட்டறதும் சகஜம்தானே (அந்த வயதில்). மற்றபடி வேறு தொந்தரவு எதையும் அவங்களுக்குக் கொடுத்ததில்லை. ஆனால் அவங்களை நம்ம ஆயுள் முழுவதும் நினைவில் வைத்திருக்கிறோம் என்பது வேறு விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை... ஆசிரியருக்கு பட்ட பெயர் எல்லாம் வைத்து அழைத்தாலும் அவர் மீது மரியாதையும் பயமும் இருந்தது. ஆசிரியர் திட்டி விட்டார், அடித்து விட்டார் என்று நம் பெற்றோர் அவர்களிடம் சண்டைக்குப் போனதில்லை, மாணவ, மாணவியரும் தற்கொலை செய்து கொண்டதில்லை.

      Delete
    2. வாங்க நெ.த. எங்க அப்பா மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியர் தான். அவருக்கும் பட்டப்பெயரெல்லாம் உண்டு! ஆனாலும் மாணவர்கள் மரியாதையுடனும், உண்மையான பக்தியுடனும் இருந்தார்கள். அடித்துத் தான் கண்டித்தார்கள் அப்போதெல்லாம். பெற்றோரை அழைத்துக் கோபிப்பதும் உண்டு! பெற்றோரும் பயத்துடன் ஆசிரியர்கள் சொல்லுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்.

      Delete
    3. ஆசிரியர் திட்டி விட்டாரே என்று அவமானம் இருந்ததே தவிர தற்கொலை அளவுக்கெல்லாம் போனதில்லை.

      Delete
  2. அக்கா ..நான் தமிழ் டீச்சர்கிட்ட கொட்டும் காலில் அடியும் வாங்கியிருக்கேன் ..எதுக்கு தெரியுமா எஸ்ஸே நோட்டில் ஒழுங்கா வரிசையா எழுதவே வராது எனக்கு மார்ஜின் கேவலமா இருக்கும் பெரிய கேப்போட ..
    அப்படிதான் விளையாட்டு டீச்சர்கிட்டயும் திட்டு வாங்காத நாளே இல்லை .

    இந்த ஆசிரியர் மாணவர் விஷயம் பற்றி நிறைய சொல்லலாம் .
    நல்லா படிக்க சொன்னா கத்திகுத்தும் மரணமும் கிடைச்சதே ஒரு ஆசிரியருக்கு சில வருஷமுன் பாரிமுனை பள்ளியொன்றில் .
    ஆசிரியர் படிக்க சொல்வது நமது நன்மைக்குத்தான் என்பதை மாணவர்கள் புரிஞ்சிக்கணும் .
    அதேபோல எல்லா ஸ்டூடண்ட்ஸும் மருத்துவராகவோ எஞ்சினியராகவோ ஆகா முடியாது அதனால் அவரவர்களே அவரவர்க்கு ஏற்ற துறையை தேர்ந்தெடுக்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒத்துழைக்கணும் .
    அடுத்தது இந்த மாணவிகள் கிண்டல் செய்து ஆசிரியையிடம் மாட்டிக்கொண்டதாகவும் ஒரு செய்தி படித்தேன் .
    சரி கிண்டல் செய்தாலும் ..ஆசிரியை அந்த மாணவிகளை அழைத்து பொறுப்பாக அவர்கள் செய்த தவறை எடுத்து சொல்லியிருக்கலாம் ..

    ஆசிரியரும் பாவம்தான் அவர்களுக்கும் ஸ்ட்ரெஸ் வேலைப்பளு என் பலதும் இருந்திருக்கும் .
    எல்லாருக்கும் எல்லாத்துக்கும் அவசரம் :(





    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சலின், நானும் டீச்சரிடம் அடி வாங்கிக் கொண்டு கை எல்லாம் வீங்கி இருக்கிறது. முழங்கால் போடச் சொல்லி முழங்காலில் வலியும் ஏற்பட்டிருக்கு! ஆனாலும் ஆசிரியர் திட்டிட்டாரேனு வருத்தமாக இருக்குமே தவிர அதை ஓர் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டதில்லை. ஆசிரியர் திட்டுவதும் அடிப்பதும் சகஜமாகவே தோணும்.

      Delete
  3. ஒரேயடியாக ஜெனரலைஸ் செய்யக் கூடாது என் மருமகள் கள் இருவரும் ஆசிரியைகள் அவர்களிடம் பிள்ளைகள் எத்தனை மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது எத்தனை கடிதங்கள் வாழ்த்துகள் என்று வருபவற்றை நான் பார்த்திருக்கிறேன் தற்கொலைக்குக் காரணங்கள் குழந்தைகள் வேண்டியனவெல்லாம் கிடைக்கப் பெறு கின்றன ஆனால் கல்வியிலும் வாழ்க்கையிலும் தோல்வியை சந்திக்க தெரியாமல் திண்டாடுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, சென்னையில் ஆசிரியை ஒருத்தியை மாணவன் குத்திக் கொலை செய்தது தெரியுமா இல்லையா? இங்கே தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மதிப்போ மரியாதையோ இல்லை என்பது உண்மை! பெற்றோரும் பிள்ளைகளைத் தோல்வியை எதிர்கொள்ளும்படி வளர்ப்பதில்லை.

      Delete
  4. உண்மை இன்றைய ஆசிரியர்களின் நிலைப்பாடு கஷ்டமானதுதான்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் மரணங்களின் கோணம் மாறுகிறது ஒரு காலத்தில் ஸ்டவ் வெடித்து மருமகள் இறப்பது இப்போது அடியோடு மறைந்து விட்டது.

    இன்று இளைய தலைமுறையினர் அவசியமின்றி மரணத்தை நாடுகின்றார்கள்.
    இதை ஆய்வு செய்து வழிவகைபடுத்தும் குழுவை அரசு உடனடியாக கவனம் கொள்ளவேண்டும்.

    இதில் அரசுக்கு என்ன இருக்கிறது என்று எண்ணக்கூடாது. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், மாணவ-மாணவிகளையும் இணைத்து கலந்துரையாடல் வைப்பது அரசின் கடமை.

    தமிழ்நாட்டில் இன்று அவனவன் எப்போது பதவி இழந்து வீட்டுக்கு போவோமோ என்ற நிலையில் இதெல்லாம் நடக்குமா ?

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி கலந்துரையாடல் எல்லாம் இருக்கு ஜி! சில பள்ளிகளில் ஃபாலோ செய்யறாங்க சில பள்ளிகளில் இல்லை. ஃபாலோ செய்யும் பள்ளிகளில் சொல்லுவது என்ன தெரியுமா...உங்க பிள்ளை சரியா படிக்கலை....இதுதான்...அதற்கானக் காரணம் என்ன என்று யாரும் அறிய முற்படுவதில்லை. உடனே படிப்பு வரலை...முட்டாள் என்று சொல்லிவிடுவது...குழந்தைக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று அறிவதில்லை. படிக்கணும் மார்க் வாங்கணும்னு சொல்லிக் கொடுக்கறாங்களே தவிர "கற்றல்" என்பதையும், கற்கும் ஆர்வத்தைத் தூண்டும் சூழலையும் ஏற்படுத்துவதில்லை...

      கீதா

      Delete
    2. வாங்க கில்லர்ஜி, இந்தப் பெற்றோர் ஆசிரியர் சங்கம் என எல்லாப் பள்ளிகளிலும் இருக்கா என்னனு தெரியலை! அப்படி இருந்தாலும் அது சரியாக நடைபெறுவதில்லை. ஆசிரியர் சொல்லுவதைப் பெற்றோர் ஏற்பதில்லை. பெற்றோரிடம் மாணாக்கர்களின் சரியான ஆர்வத்தையோ எந்தப் பாடத்தில் அவர்கள் சரியாகப் படிப்பதில்லை என்பதையோ ஆசிரியர்கள் சரிவரத் தெரிவிப்பதில்லை. மொத்தத்தில் ஏதோ நடக்கிறது!

      Delete
  5. ஆசிரியர் மட்டுமென்றில்லை, எங்கேயும் தலைமையாக இருப்பவரை கீழே இருப்பவர்கள் கிண்டல் கேலி செய்வது நிஜம்தான் கீதாக்கா. ஆனா அது பெரிய விசமாக சில சமயம் மாறிவிடும்போதுதான் கவலையாக இருக்கு.

    இன்னொன்று தற்கொலைகளுக்கு இன்னொரு காரணம் ஜி எம் பி ஐயா சொன்னதைப்போல, தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் வளர்கின்றனர் பிள்ளைகள்.. பெற்றோரும் முடிந்தவரை தோற்றுப்போக விட மாட்டார்கள் பிள்ளைகளை.

    எங்கள் மூத்த மகன் பிறந்ததிலிருந்தே என் அப்பா அம்மாவும் எங்களோடுதான் இருந்தார்கள், மூத்தவரை முழுக்க முழுக்க வளர்த்து விட்டது எங்கள் அப்பாதான். அதனால ஒரு குட்டித் தோல்விகூட ஏற்பட்டிடாமல் பேரனைப் பார்ப்பார்.. எங்களுக்கே மகனுக்கு ஏதும் சொல்லப் பயமாக இருக்கும் ஹா ஹா ஹா.. இதனால தோல்வி என்றால் என்னவென்றெ தெரியாமல் அனைத்திலும் நீதான் 1ஸ்ட் என்பதுபோலவே வளர்ந்தார் அவரும்.

    ஒரு 4 வயதில், தம்பிக்கு 1வது பிறந்தநாள் வந்தது, அதில் மியூசிக் செயார் நடந்தது குழந்தைகளுக்கு.. அதில் ஒரு தடவை மூத்த மகனுக்கு செயார் கிடைக்காமல் போய் விட்டது... அதுக்கு அவர் அழுத அழுகை.. அப்போதான் தெரிந்தது தோல்வியையும் சொல்லிக் கொடுத்துப் பழக்கோணும் என்பது.. அதன் பின்னர் விளையாட்டில்கூட, தோற்றால் அது தோல்விதான் நெக்ஸ்ட் ரைம் வின் பண்ணுவீங்கள் எனச் சொல்லிக் கொடுத்தே வளர்த்தோம்... இப்போ அவருக்கு எது வந்தாலும் ஏற்கும் மனப்பக்குவம் நிறையவே இருக்கிறது.. ஹா ஹா ஹா ஜொந்தக் கதை ஜொல்ல வச்சிட்டீங்களே கீதாக்கா:)..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா, ரொம்ப நாளா, உங்க நடையில் "கன"நாளா காணோம் உங்களை! வரவுக்கு நன்றி. குழந்தைகளுக்குச் சின்ன வயதிலிருந்தே கேட்பது உடனே கிடைக்காது என்பதைப் புரிய வைச்சு வளர்க்கணும். விளையாட்டில் தோற்றுவிட்டு அழுது அமர்க்களம் பண்ணுபவர்களைப் பார்த்திருக்கேன். அவங்க வாழ்க்கையில் முன்னேறவும் இல்லை!

      Delete
  6. இன்றைய ஆசிரியர்கள் நிலை உண்மையிலேயே மிகவும் பரிதாபத்துக்குரியதுதான். மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் ஆசிரியர்கள் திட்டுவது அல்ல, நொய்ந்த மனது. இந்த தலைமுறையே அப்படித்தான் இருக்கிறது.

    //நான் படிக்கிறச்சே எல்லாம் அப்பா பள்ளிக்கே வந்து ஆசிரியர்களிடம் வீட்டிலே இவ படிக்கிறதே இல்லை. விகடன், கல்கி, குமுதம் தான் படிக்கிறாள். நல்லா அடிச்சுச் சொல்லுங்க! என்று வந்து சொல்லி விட்டுப் போவார்.//
    நாங்கள் படித்த பள்ளியிலேயேதான் எங்கள் மாமா பி.டி மாஸ்டராக வேலை பார்த்தார். அவர் தன்னுடைய மகன் மற்றும் அண்ணன் மகனின் வகுப்பு ஆசிரியரிடம்,"இவர்களுடைய கண்களை மட்டும் வைத்து விட்டு, தோலை உரித்து விடுங்கள் என்று சொல்லி விட்டார். அவர்களின் நிலையை நினைத்து பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, நான் கொஞ்சம் நாசூக்காக எழுதி இருந்தேன். இதை விட மோசமாக என் அப்பாவும் சொல்லுவார். :) இன்னும் சொல்லப் போனால் ஒரு முறை ஆறாவது ராங்க் வந்துட்டேன்னு சாப்பாடே போடக் கூடாதுனு சொல்லிட்டார்.

      Delete
  7. அக்கா இப்படித் தற்கொலை நிகழ்வதற்குக் காரணம் முதலில் பெற்றோர்தான். அதீத ப்ரெஷர் கொடுக்கிறார்கள் இல்லை என்றால் சரியான கவனிப்பு இல்லை. இது படித்த பெற்றோர்கள் இல்லை என்றால் அரைகுரையாகப் படித்த பெற்றோர்களின் வீட்டில்....அப்புறம் அடுத்து...அக்குழந்தைகள் வளரும் சூழல். நண்பர்கள் என்று பல காரணங்கள்.

    பள்ளிகளில் மாரல் வகுப்புகள் இல்லாதது மிகப் பெரிய குறை! நாம் படிக்கும் போதெல்லாம் நல்லொழுக்க வகுப்புகள் இருந்தன. யங்க் ஸ்டூடன்ட்ஸ் மூவ்மென்ட் இருந்தது. அதில் அந்த ஆசிரியை நல்ல கவுன்சிலராக இருப்பார். இப்போது நீங்கள் சொல்லியிருப்பது போல் நம் கல்வியின் தரம் படு மோசம். கல்வி என்பதை விட பள்ளியின் தரமும்...அதாவது நான் சொல்லுவது ஏட்டுப் படிப்பு மட்டுமில்லை மற்றபடியும் தரம் இல்லை...வாழ்க்கைக் கல்வி வீட்டிலும் கிடைப்பதில்லை, பள்ளியிலும் கிடைபப்தில்லை. அதனால் தோல்வியைச் சந்திக்கும் மனப்பக்குவம் இல்லாமல் இருக்கிறார்கள்.

    அதே போன்று சும்மா குழந்தைகள் படிக்கவில்லை என்று சொல்லுகிறார்கள் சரி...இது பொருந்தும் தான் ஆனால் குழந்தைகளின் கிரகிக்கும் தன்மை, எழுதும் திறன், வாச்க்கும் திறன் இவை எல்லாம் சரிவர இருக்கிறதா அல்லது குறைபாடு இருக்கிறதா அதாவது கற்றல் குறைபாடு இருக்கிறதா என்று ஆசிரியர்கள் ஆய்ந்து அப்படியானக் குழந்தைகளைச் சரியாகப் படிக்கவில்லை என்று திட்டாமல் அக்குறைபாட்டை சரிசெய்ய முயற்சி எடுக்க வேண்டும்...பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பெற்றோர் அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.

    என் மகனை பள்ளி நிராகரித்தது. அதாவது அவன் படிக்க மாட்டேன் என்கிறான் என்றுதான் முத்திரை குத்தினார்கள். அவனது கற்றல் குறைபாடு ஆசிரியய்ர்களுக்குப் புரியவில்லை. இங்கு அதற்கான பள்ளிகள் இல்லை அப்பொது. இப்போதும் கொஞ்சம் தான் இருக்கின்றன. அதாவது லேர்னிங்க் டிஸெபிலிட்டியைக் கையாளும் திறமை மிக்கப் பள்ளிகள். என் மகன் இறுதிப் பரீட்சை வரை ஃபெயில் தான் ஆவான். ஆனால் எங்களுக்கு மட்டுமே தெரியும் அவன் இறுதியில் நன்றாகச் செய்வான் என்று. பள்ளியில் நண்பர்கள் இல்லை. இதன் காரணமாக. அவனுக்குத் தாழ்வு மனப்பான்மை வரும் லெவலுக்குப் போகவிடாமல் எங்கள் சப்போர்ட் இருந்ததால் அவனால் இன்று கால்நடை மருத்துவம் முடித்து அமெரிக்காவில் இன்டெர்ன்ஷிப்இல் அங்கு பாராட்டு பெறும் அளவில் வந்திருக்கான். இங்கு கல்லூரியிலும் அவன் கஷ்டப்பட்டன் தான் ஆனால் அவனது விருப்பப் பாடம் என்பதால் ஆர்வத்துடன் படித்தான்..பள்ளி அவனுக்குக் கசப்பு...அவனுக்கு எழுத ரொம்பக் கஷ்டப்படுவான். அதாவது மைன்ட் பாடி கோஆப்பரேஷன்...இல்லை. இதனை எத்தனை ஆசிரியர்கள், பள்ளிகள், பெற்றோர் புரிந்து கொண்டு செய்ய முடியும். சப்போர்ட் எத்தனைக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கிடைக்கிறது ...பாவம் அக்குழந்தைகள் சரியாகப் படிக்கலைனு சொல்லிட்டதால் தாங்கும் மன நிலை இல்லாமல் தற்கொலை அதைவிட ஏன் அக்குழந்தைகள் படிக்கலைனு ரீஸனை ஆராய்ந்திருக்கணும்.

    மற்றொன்று தங்கள் குழந்தைகளின் திறனைப் பற்றி யோசிக்காமல் பல பெற்றோர் செய்யும் ஒரு தவறு, இந்த சிலபஸில் தான் படிக்கணும் இந்த ஸ்கூலில்தான் படிக்கணும் என்று சேர்ப்பது...

    அதீத ட்யூஷன்கள்...நல்ல பொழுது போக்கு அம்சங்கள் இல்லாமை....என்று பல காரணங்கள்...

    என்னவோ போங்கக்கா உயிருக்கு மதிப்பில்லாமல் போச்சு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பெற்றோர் தான் முழுப் பொறுப்பு. குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லிப் புரிய வைப்பதில்லை. எதுவும் எளிதில் கிடைக்கும் பிடிவாதம் பிடித்தால் எனக் காட்டி விடுகின்றனர். எளிதில் எதுவும் கிடைக்காது என்பதைப் புரிய வைக்கவேண்டும். அதோடு கற்றல் குறைபாடு என்பதைக் கண்டறிவதும் கஷ்டம் தான்! சுமார் மூன்று வகுப்புகளாவது படித்த பின்னரே புரிய ஆரம்பிக்கும். அதற்கேற்றபடி நாம் குழந்தைகளிடம் நடந்துக்கணும். அதுவும் இங்கே எல்லாப் பெற்றோரிடமும் எதிர்பார்க்க முடியாது. பெற்றோரின் விருப்பத்தைக் குழந்தைகளிடம் திணிக்கவும் கூடாது.

      Delete
  8. அவ்வ்ளவு செல்லமாக வளர்க படுகிறார்கள் போல் சொல் தாங்காமல் அதற்க்கு வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும் எப்போதுமே வெளியே என்று வந்தால் நாலும் இருக்கும் வளைந்து கொடுக்கவும் தாங்கி கொள்ளவும் பழக படுத்தாது அந்த குழந்தைகளுடைய பெற்றோர்களின் தவறு

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி, ஆமாம், ஒரு சொல் கூடத் தாங்காதவர்களாகவே பிள்ளைகளை வளர்க்கின்றனர். இவர்களை நினைத்தால் எதிர்காலத்துத் தமிழகம் எப்படி இருக்குமோனு கவலையாத் தான் இருக்கு!

      Delete
  9. அக்காலகட்டத்தில் படித்துமுடித்துவிட்டோமே என்ற நிறைவு மனதில் உள்ளது. பள்ளி நாள்களில் நாங்கள் வாங்கிய அடிகளே எங்களை நல்ல அளவிற்கு உயர்த்தியுள்ளது என்று நம்புகிறோம். அதேசமயம் அப்போது ஆசிரியர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொண்டோம். கண்டிப்பு என்பது ஒருபுறம் இருந்தபோதிலும், அவர்கள் திறமையானவர்களாக, அறிவாளிகளாக, அனுசரித்துப்போகின்றவர்களாக, ஒரு நிலையில் குடும்பத்தில் மூத்தவரைப் போலவே இருந்தார்கள். அது அந்தக் காலம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா, நாம் வாங்கின அடிகளைக் கணக்கே வைச்சுக்க முடியாது. ஆனால் அவற்றை நம் நன்மைக்கு என நாம் கருதியதால் தான் இப்போதும் மன நிறைவுடன் இருக்கோம். அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் வீட்டுக்கு முக்கியஸ்தர்களாக இருந்தார்கள். எல்லாவற்றுக்கும் ஆசிரியர்களைக் கலந்து ஆலோசிப்பதும் உண்டு!

      Delete

  10. படித்த காலத்தில் வீட்டிலும் பள்ளியிலும் வாங்கிய அடிகள், நான் சிறிது காலம் ஆசிரியராக இருந்தபோது கொடுத்த அடிகள் ( ஒரு பையன் முட்டியில் ஸ்கேலால் அடித்ததில் முட்டியே வீங்கி விட்டது) எல்லாம் நினைவுக்கு வந்தது.

    அன்று மாணவன் படிக்கவேண்டும் என்பதும் ஆசிரியர் கற்பிக்கவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம் ஆக இருந்தது. ஆனால் இன்று படிப்பும் கற்பிப்பதும் இரண்டாம் பட்சமே. எப்படியாவது மார்க் வாங்குவதே முக்கியம் என்பது மாணவர்களுக்கு முக்கியம் ஆகி விட்டது (வசூல் ராஜா). அதே போன்றே தோல்விகளை களைந்து முன்னே செல்லும் பக்குவம் இல்லை.

    கிடைக்கும் காசுக்கு எதோ நாலு உளறினால் போதும், எனக்குபணம் தான் முக்கியம் என்பது ஆசிரியர்களின் கொள்கை ஆகிவிட்டது.

    தற்போது மாணவர்கள் பல பிரச்சினைகளை கையில் எடுத்துக்கொண்டு படிப்பைத் தவிர மற்றவைகளில் அதிகம் கவனம் செலுத்துகின்றனர். பகுத்தறிந்து கெட்டவைகளை நீக்கி நல்லதை கற்கும் பக்குவம் போய் விட்டது.

    சுருக்கமாக சொன்னால் பொறுப்பு உணர்வு இல்லாமை, பின் விளைவுகளை ஆராயாமல் செயலில் இறங்குதல், தோல்விகளையும் ஏற்று முன்னே செல்லும் பக்குவமின்மை, ஊடகங்கள், வலைத்தளம், வாட்சப் போன்றவற்றில் வரும் தீய பரப்புரைகளை நம்புதல் போன்றவை தவறான பாதையில் செல்லத் தூண்டுகிறது.

    இளைய தலைமுறை அறிவுரைகளை ஏற்காது. சங்கை ஊதிவிட்டு சும்மா இருக்க வேண்டியது தான்.

    முக்கியமாக பதிவுலகில் மாணவர்கள் இல்லை. இருப்பவர்கள் இந்தப் பதிவை படிக்க மாட்டார்கள்.

    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா, பதிவுலகில் மாணாக்கர்கள் இருப்பதாகத் தான் தெரிகிறது. ஆனால் படிக்கிறார்களா என்பது சந்தேகமே! இப்போது எல்லாப் போராட்டங்களுக்கும் தலைவர்கள் மாணவர்களையே குறிவைத்துக் கலந்து கொள்ள வைக்கின்றனர். என்ன செய்ய முடியும்! :(

      Delete
  11. சரியா சொல்லியிருக்கீங்க சிஸ் முன்னரே படிப்பை முடித்தது நானும் இந்த காரணங்களுக்காவே ஆசிரியர் பணியை செய்வதை விட்டுவிட்டேன் இப்பொது உரிமையா படிக்கலைன்னாகூட திட்ட முடியாது எதர்கெடுத்தாலும் பெற்றோரை கூப்பிட்டு கொண்டுவா என்று சொல்லணும் அதற்க்கும் பர்மிஷன் வாங்கணும் மேலிடத்தில் அட்வைஸ் நமக்கு இலவசமாய் எரிச்சல் கொடுக்க இப்படி செயர்கை தனங்களாக ஆகிவிட்டது இன்றைய நிலைமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க பூவிழி, பெற்றோரை அழைத்து வரச் சொல்வதற்குக் கூட அனுமதி வேணுமா? எங்க குழந்தைங்க படிக்கும் காலத்திலே கூட அப்படி எல்லாம் இல்லை! :( ரொம்பவே மோசமாப் போயிட்டிருக்கு நிலைமை!

      Delete
  12. மழையில் தொடங்கி, விருந்துக்குச் சென்று... பரீட்சைக்குப்போய் விட்டீர்கள்! இங்கும் மழை. அதன் காரணமாக போர்த் தண்ணீர் கலராக வருவது ஒரு கடுப்பு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், நேற்றும் மழை! இன்னிக்கும் அவ்வப்போது கொஞ்சம் தூறல்! விருந்து நன்றாக இருந்ததால் அதைக் குறிப்பிட்டேன்.

      Delete
    2. ///போர்த் தண்ணீர் கலராக வருவது ஒரு கடுப்பு!//

      போர்த் தண்ணீர்ர்?:)

      Delete
    3. Garrrr that's bore well water,ஆழ் துளை குழாய் கிணறு

      Delete