எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 24, 2018

தோசை முகம் மாறிப் போச்சே!

அஹமதாபாதிலிருந்து சென்னை வந்ததும் எழும்பூரில் வழக்கமான சங்கீதா ஓட்டலில் சாப்பிடச் சென்றோம். முன்னே மாதிரி இல்லைனாலும் மனசு என்னமோ அங்கேயே சாப்பிடலாம் என்றது. நாங்க வந்த விமானத்திலே தாராளமாத் தண்ணீர் மட்டும் கொடுத்தாங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! காலம்பர அஹமதாபாதிலிருந்து ஆறு மணிக்கே கிளம்பியாச்சு. தங்கி இருந்த ஓட்டலிலே காலை ஏழரைக்குத் தான் ப்ரெக்ஃபாஸ்ட் ஆரம்பம். அதுக்குத் தங்கினா இங்கே விமானம் போயிடும். நல்லவேளையா இப்போல்லாம் எல்லா ஓட்டல்களிலும் வைக்கிறாப்போல் காஃபி பொடி, பால்பவுடர், சர்க்கரை எல்லாம் வைச்சிருந்ததாலே காலங்கார்த்தாலேயே காஃபி கலந்து சாப்பிட்டோம். தமிழ்நாட்டிலே இன்னும் இப்படி இருக்கிறாப்போல் தெரியலை. மதுரை போனப்போத் தங்கின நக்ஷத்திர ஓட்டலிலேயே இல்லை! நறநற! ஆனால் கும்பகோணத்திலே ஓட்டல் ராயாஸில் வைச்சிருந்தாங்க. டீ, காஃபி, பால், சர்க்கரை எல்லாமும் இருந்தது.

சங்கீதாவிலே நம்ம ரங்க்ஸ் சாப்பாடு சாப்பிட்டார். எனக்குச் சாப்பாடு சாப்பிட பயம். வயிறு என்ன சொல்லுமோ! அதோடு மறுபடி ரயிலில் பயணம் இருக்கே! பாதி வழியில் வயிறு தகராறு செய்தால்! ஆகவே எளிமையா இருக்கட்டும்னு தோசை சொன்னேன். வெங்காய தோசை தான் இருந்தது. விட்டால் மசாலா தோசை! மசாலா தோசைல்லாம் ரொம்ப கனம் அதிகம் உள்ள உணவு. வெங்காயம் பரவாயில்லை ரகம்! ஆகவே வெங்காய தோசையே சொன்னேன்.  தோசை வந்தது பாருங்க! என் மூஞ்சியைப் பார்க்கச் சகிக்காமல் இருந்தது என்று கண்ணாடியைப் பார்க்காமலேயே என்னால் சொல்ல முடியும். பொதுவா தோசைனா ஓரங்களில் முறுகலாக அடுத்த ஒரு அங்குலத்திற்குக் கொஞ்சம் மெத்தென்றும் நடுவில் போகும்போது ஓரங்கள் மெலிதாக முறுகியும் நடுவே கொஞ்சம் மெத்தென்றும் இருக்கும். இதைத் தான் நாம் தோசை என்போம். இப்போல்லாம் முறுகல் தோசை என்னும் பெயரில் ஒடிக்கிறாப்போல் தோசையைக் கொடுக்கிறாங்க. விண்டால் தூள் தூளாக ஆகி விடுகிறது. அம்பேரிக்காவில் எல்லா ஓட்டல்களிலும் இப்படித் தான் தூள் தூளாகத் தோசை! அல்லது ரப்பர் போல் இழுக்கும் தோசை! அங்கேயாவது வார்க்கத் தெரியாமல் வார்க்கிறாங்கனு நினைச்சால் இங்கேயும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வெங்காய தோசை எனில் மாவில் வெங்காயத்தைக் கலந்து கொண்டு அதுவும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைக் கலக்கணும். தோசை வார்க்கும்போதும் ரொம்ப மெலிதாகவும் இல்லாமல் கனமாக ஊத்தப்பம் போலவும் இல்லாமல் சாதாரண தோசை மாதிரியே வார்த்துட்டு வெங்காயத்தை நன்கு வேகும்வரை திருப்பியும் போடணும்! இங்கே! ம்ஹூம்! மெலிதாகப் பேப்பர் மாதிரி! பேப்பர்னா "தமிழ் தி இந்து" அல்லது "தினமலர்" அல்லது "தினத்தந்தி" அல்லது "தினகரன்" மாதிரிப் பேப்பர் தாங்க! அவ்வளவு மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லிசாக வார்த்துட்டு அதில் கரடு முரடாக நறுக்கிய வெங்காயத்தை உள்ளே கொட்டி வைச்சிருக்காங்க. தோசையை எடுத்தால் வெங்காயம் தனியாக் கொட்டுது! தோசை கையில் ஒரே சுருட்டாகச் சுருட்டலாம். அந்த மாதிரி இருக்கு!

இது வெங்காயம் தனி, தோசைங்கற வஸ்து தனியா இருந்தது. தோசையைப் பிய்ச்சா வெங்காயத்தோடு சேர்ந்து வரணும். ம்ஹூம், வெங்காயம் எங்கேயோ இருந்தது. தோசையை வார்த்துட்டு அதன் மேலே வெங்காயத்தை இஷ்டத்துக்கு நறுக்கி உள்ளே கொட்டி வைச்சிருக்காங்க! இதுக்கு வெங்காய தோசைனு பேராம்! இதுக்குப் போய்   75 ரூபாயாம். தண்டம்! அரைக்கரண்டி மாவு கூட எடுத்திருக்க மாட்டாங்க! ஆனாப் பாருங்க, எங்களுக்கு, முக்கியமா எனக்கு முதல் நாளிலே இருந்தே சந்திராஷ்டமம் ஆரம்பிச்சிருக்குப் போல! முதல் நாள் சாப்பாட்டிலே அன்னிக்கு 100ரூ தண்டம். அப்போவே உஷாரா இருந்திருக்கணும்! :)  எங்கே! புதன்கிழமை நல்லா மாட்டிக்கிட்டேன். நம்ம ரங்க்ஸ் சிரிச்சிருக்கணும். என்னைப் பார்த்தாப் பாவமா இருந்தது போல! ஒண்ணும் சொல்லாம விட்டுட்டார். இல்லைனா இம்மாதிரியான நிகழ்வுகளுக்கே நாங்க காத்திருப்போமே! மாட்டி விட்டிருக்க மாட்டோமா என்ன! :)))) அப்புறமா ஒரு லஸ்ஸி சாப்பிட்டுப் பசியை ஆத்திக் கொண்டேன். முதல்லேயே லஸ்ஸி சாப்பிட்டுட்டு தோசையைக் கான்சல் செஞ்சிருக்கணுமோ! தோசைன்னாலே இப்போ பயம்மாவும் இருக்கு! வாழ்க்கையும் வெறுத்துப் போச்சு! ஶ்ரீரங்கம் வந்து ஓர் அடை, அவியலோடு சாப்பிட்டதும் தான் வாழ்க்கை திரும்பக் கிடைச்சது.  பயத்திலே தோசை கிட்டேக் கூடப் போகலை. என்  பிரியமான தோசை முகமே மறந்துடுமோனு பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவும் இருக்கு! :)

இன்னிக்குப் பாருங்க, தோசைக்கு அரைக்கிறேன்னு சொன்னா ரங்க்ஸ் ஓட்டமா ஓடிட்டார். எங்கே அது போல வார்த்துடுவேனோ னு பயம் போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!




இது மங்களூரு நீர் தோசை வார்த்தப்போ எடுத்த படம்! நீர்த் தோசை

65 comments:

  1. ஹோட்டல்களில் வெங்காய தோசையில் வெங்காயத்தைப் பெரிய இதழ்களாகத்தான் போட்டு விடுகிறார்கள். அதுவும் வெ ங்காயத்தின் தரம் பற்றிக் கவலைப்படாமல். சாப்பிட்டாலே கசக்கும். ஓரங்களைக் கூட வெட்டியிருக்க மாட்டார்கள். கடமைக்கு வேலை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஶ்ரீராம், அந்த வெங்காயத்தின் கட்டை போன்ற பாகம் வாயில் அகப்பட்டால் வரும் எரிச்சல் இருக்கே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  2. நான் கூட தோசை ஊற்றி அதன்மேல் வெங்காயம் தூவி, மூடி, திருப்பிப் போடாமலே எடுப்பேன். ஆனால் வெங்காயம் பூவாய் இருக்கணும், தோசைத்திருப்பியால் அல்லது ஒரு ஸ்பூனால் மெல்ல அந்த வெங்காயத்தை அழுத்தி விட்டுடுவேன். அடுப்பை சிம்மில் வைக்கணும்,

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! நல்லா அனுபவிச்சு இப்படி இல்ல தோசை வார்க்கணும். மீ ஆல்சோ மேகிங் லைக் திஸ் டைப்! :)

      Delete
  3. தோசை மாவிலேயே வெங்காயம் சிரித்து வார்ப்பதுதான் எப்போதும் இருக்கே என்றுதான் நான் அப்படி போடுவேன். விமான நிலையம் எதிரில் சரவணபவன் இருந்திருக்குமே, அங்கே முயற்சித்திருக்கலாமே...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹிஹிஹிஹி, வெங்காயம் சிரிக்குமா? ஹிஹிஹிஹி!

      விமானநிலையம் எதிரே சரவணபவன்? தெரியாத்! உள்ளே இருந்து வாயிலுக்கு அருகேயே இருக்கும் கால்டாக்சி ஸ்டான்டில் முன் பதிவு செய்து கொண்டால் வெளியே போகாமலேயே உள்ளேயே டாக்சியில் ஏறிக் கொள்ளலாம். ஆகவே வெளியே போனதே இல்லை! அதோடு சரவணபவன்? நான்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஒரே ஒரு முறை மயிலையில் வேறே வழியில்லாமல் போனோம். ஸ்டிக்கர் பொட்டுப் போல இட்லிகள், சின்ன அப்பம் சைசில் தோசைங்கற வஸ்து. குழந்தைகள் வைச்சு விளையாடும் சொப்புக்களில் சட்னி, சாம்பார்! பில் என்னமோ ஒருத்தருக்கு இருநூறைத் தாண்டும். அதுவும் இப்போ சரவணபவன் வேறே ஒருத்தர் வாங்கிட்டதில் அங்கே திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை! :))))) ராஜகோபால் கிட்டே இருக்கும்போதே போனதில்லை!

      Delete
  4. ஆசை தோசை முகம் மறந்து போச்சே!!! இதை உங்களிடம் தானே புலம்பமுடியும்!! ஹா ஹா ஹா அக்கா இப்பல்லாம்...எந்த ஹோட்டல்லயும் வெங்காய தோசைன்றது ஹும்...உங்க வரிகளை..இதோ..

    // அவ்வளவு மெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லிசாக வார்த்துட்டு அதில் கரடு முரடாக நறுக்கிய வெங்காயத்தை உள்ளே கொட்டி வைச்சிருக்காங்க. தோசையை எடுத்தால் வெங்காயம் தனியாக் கொட்டுது! தோசை கையில் ஒரே சுருட்டாகச் சுருட்டலாம். அந்த மாதிரி இருக்கு!//

    இதே தான்...சகிக்கலை அதுலக்யும் சில ஹோட்டல்ல நடுல தோசை வெந்தே இருப்பதில்லை...திருப்பி போடவே மாட்டேன்றாங்க...

    //இன்னிக்குப் பாருங்க, தோசைக்கு அரைக்கிறேன்னு சொன்னா ரங்க்ஸ் ஓட்டமா ஓடிட்டார். எங்கே அது போல வார்த்துடுவேனோ னு பயம் போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

    ஹா ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. //இன்னிக்குப் பாருங்க, தோசைக்கு அரைக்கிறேன்னு சொன்னா ரங்க்ஸ் ஓட்டமா ஓடிட்டார். எங்கே அது போல வார்த்துடுவேனோ னு பயம் போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

      ஹா ஹா ஹா ஹா ஹா..​//

      அதெல்லாம் இல்லை.​ ​​கல்லுல அரைத்தால் தான் தோசை நல்லாயிருக்கும் என்று கீசாக்கா சொல்லி அரைக்க வச்சிடுவாங்களோ என்று ஓடிப்போயிட்டார்.

      Delete
    2. தி/கீதா, பொதுவாக ஹோட்டல் தோசைகளைத் திருப்பிப் போட்டு வார்ப்பதில்லை! என்றாலும் ஒரே பக்கம் வேகும்போதே பொன்முறுகலா எடுத்தால் திருப்பிப் போடலைனாலும் தோசையைச் சாப்பிட முடியும்! இங்கே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      Delete
    3. ஜேகேஅண்ணா,அதெல்லாம் அவர்கிட்டேக்கூட வர மாட்டார். நான் அரைச்சால் தான் உண்டு! தோசை மேலேயே ஒரு வெறுப்பு வந்துடுச்சு! அதான் கொஞ்ச நாளைக்கு வேணாம்னு முடிவு! :)

      Delete
  5. மங்களூரி நீர் தோசை சூப்பர்!!! கிட்டத்தட்ட ஆப்பமே தான்...எங்க பிறந்த வீட்டுல இதை களிக்கஞ்சி தோசைனு சொல்லுவாங்க ..அரைச்சுட்டு கழுவி விடுவதை கொஞ்சம் மாவை நீர்க்கக் கரைத்துக் கொண்டு கஞ்சி போல காய்ச்சி மொத்த மாவோடு கலந்தும் செய்வாங்க என்பதால் இதை களிக்கஞ்சி தோசைனு....இல்லைனா அப்படியேயும் செய்வாங்க...தேங்கா தோசைனு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, கூழ் தோசை என்று எங்க மாமியார் வீட்டிலேயும் வார்ப்போம். ஆனால் அதில் தேங்காய் போட்டதாகத் தெரியலை. இதில் தேங்காய் உண்டு. நல்லாவே இருக்கு! :) சட்னி தான் கொஞ்சம் காரசாரமாத் தேவை!

      Delete
  6. ஹோட்டலில் எவ்வளவு தூரத்துக்கு மெல்லிய தோசை வார்க்க முடிகிறதோ அவ்வளவு தூரம் மாஸ்டருக்கு சம்பளம் உயரும்.

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி, ஆமாம், கேள்விப் பட்டேன். :)

      Delete
  7. தோசை முகம் மாறிப் போச்சே!//
    அருமை.

    மங்களூர் நீர் தோசை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு. மங்களூர் நீர்த்தோசை செய்து பாருங்க!

      Delete
  8. தோசைக்கு GST போடலையா? 75+18%=89

    ReplyDelete
    Replies
    1. ஜேகே அண்ணா, ஒருவேளை நீங்க ஓட்டல் திறந்தால் 18% ஜிஎஸ்டி வாங்குவீங்களோ என்னமோ! ஆனால் ஹோட்டல்களில் ஜிஎஸ்டி 5% தான். மொத்த பில் 200 எனில் அதில் 5% ஜிஎஸ்டி. 21/2+21/2=5% பத்து ரூபாயில் ஐந்து ரூபாய் மத்திய அரசுக்கும், ஐந்து ரூபாய் மாநில அரசுக்கும். பில்களைச் சேர்த்து வைத்து ஸ்கான் பண்ணித் தான் போடணும். இல்லைனா எல்லோரும் இப்படியே சொல்லிட்டு இருப்பாங்க! ஒரு ஓட்டலிலும் 5% த்துக்கு மேல் ஜிஎஸ்டி வாங்கவில்லை. மேலும் எல்லா ஓட்டல்களிலும் ஜிஎஸ்டி எண்ணையும் கட்டாயமாக் குறிப்பிடறாங்க!

      Delete
    2. //ஒருவேளை நீங்க ஓட்டல் திறந்தால் 18% ஜிஎஸ்டி வாங்குவீங்களோ என்னமோ! // "நீங்க பிரதமராவோ, நிதிமந்திரியாவோ ஆனா" ஓட்டல்களில் ஜிஎஸ்டி 18% வாங்குவீங்களோ என்னமோ!"

      இப்படி வந்திருக்கணும். கவனக்குறைவு! அர்த்தமே மாறி விட்டது. இப்போத் தான் கவனிச்சேன். :)

      Delete
    3. நான் GST போடுற ஹோட்டல் எல்லாம் போவது இல்லை ஆதிகுடி காப்பி கிளப் அல்லது ரோட்டோரம் கையேந்தி பவன் அல்லது நாயர் கடை சாய தான்.

      Delete
    4. ஹையோ, ஆதிகுடி? சரி தான்! :)))))

      Delete
  9. /// பொதுவா தோசைனா ஓரங்களில் முறுகலாக அடுத்த ஒரு அங்குலத்திற்குக் கொஞ்சம் மெத்தென்றும் நடுவில் போகும்போது ஓரங்கள் மெலிதாக முறுகியும் நடுவே கொஞ்சம் மெத்தென்றும் இருக்கும். இதைத் தான் நாம் தோசை என்போம்.//

    ஆஹா அடுத்த சிலபஸ் ல இதை கொண்டுவரச் சொல்லி மோடி அங்கிளுக்கு மனுக் குடுக்கப் போறேன்.. தோசைக்கு வரைவிலக்கணம்.. கூறியவர் கீசாக்கா:).. இப்பூடி பிள்ளைகள் பாடமாக்குவினம்:)..

    அதுசரி நீங்க ஐயர் பரம்பரை எனச் சொல்லிக் கொண்டு ஹோட்டல்களில் சாப்பிடுவதும் இல்லாமல் குறை வேறு சொல்லலாமோ:).. இண்டைக்கு விடமாட்டேன்ன் எனக்கு நீதி வேணும்ம்ம்ம்:)).. என்னை அடிச்சாலும் போகமாட்டேன்ன்:) நீதி பெற்றே செல்வேன்ன்ன்ன்ன்ன்:))

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரடி, தோசையின் வரைவிலக்கணம் நல்லாத் தானே இருக்கு? நாங்க ஐயர் பரம்பரைன்னா ஓட்டல்களில் சாப்பிடக் கூடாதா என்ன? முன்னே எல்லாம் சாப்பாடு கட்டிக் கொண்டு தான் போவோம். போயிருக்கோம். ஆனால் இப்போல்லாம் அப்படிக் கொண்டு போவதில்லை. அதோடு ஓட்டல்களை ஆரம்பிச்சவங்களே இந்த ஐயருங்க தானே! :))))

      Delete
    2. தோசை நல்லா இல்லைன்னாக் குறை சொல்லுவோம். சொல்லுவோம்!

      Delete
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஓசை நல்லா இல்லாட்டில் இனிமேல் இட்டலி சாப்பிடுங்கோ:)

      Delete
    4. எனக்குக் கல்யாணம் ஆனப்போ இட்டிலியே பிடிக்காது அதிரடி, மாஸ்டர்செஃப். நல்லவேளையா நம்ம ரங்க்ஸும் ஒரு தோசைப் பிரியர். இப்போத் தான் இட்டிலியே சாப்பிட ஆரம்பிச்சிருக்கேன்! :)

      Delete
    5. இட்டிலிக்கு பெயர் போன மதுரையில் பிறந்து எனக்கு இட்டிலி பிடிக்காது என்று பெருமைப்படும் மதுரைக்காரி நீங்கள் ஒருவர் மட்டும்தான்.

      Delete
    6. அட? இதைக் கூடப் பெருமைனு சொல்லிக்கலாமா? நீங்க சொன்னப்புறமாத் தான் தெரிஞ்சுண்டேன். பொதுவா எங்க வீட்டில் அப்பா உட்பட எல்லோருக்கும் தோசை தான் ரொம்பப் பிடிக்கும். வீட்டில் இட்லி செய்தால்கூட என் அம்மா எனக்குத் தனியாக இலுப்பச்சட்டியில் தோசை வார்த்துக் கொடுப்பார்! :) மாமியார் வீட்டில் எல்லோரும் இட்லி ரசிகர்கள். எப்படின்னாக் காலையில் ஆரம்பித்து இரவு வரைக்கும் மறுநாளைக்கும் கூட இட்லியை விட மாட்டார்கள். அந்த அளவுக்கு இல்லைனாலும் இப்போல்லாம் ஓரளவுக்கு இட்லி சாப்பிடுகிறோம்.

      Delete
  10. // மதுரை போனப்போத் தங்கின நக்ஷத்திர ஓட்டலிலேயே இல்லை! நறநற! ஆனால் கும்பகோணத்திலே ஓட்டல் ராயாஸில் வைச்சிருந்தாங்க. டீ, காஃபி, பால், சர்க்கரை எல்லாமும் இருந்தது.//
    ஹா ஹா ஹா இப்போ எல்லாமும் தலைகீழாகிப் போச்ச்ச்ச்ச்ச்:))

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா அதிரடி! இது எப்பூடி இருக்கு?

      Delete
  11. ///தோசையை எடுத்தால் வெங்காயம் தனியாக் கொட்டுது! தோசை கையில் ஒரே சுருட்டாகச் சுருட்டலாம். அந்த மாதிரி இருக்கு!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு அதைக் கொட்டுப்படாமல் ஸ்டைலா எடுக்கத் தெரியல்ல:)).. வெங்காயத்தோடு சுருட்டி எடுக்கோணும்மாக்கும்:))

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, அது சரி, வெங்காயத்தோடு சுருட்டி எடுத்தாலும் தோசை மெல்லிசா இருக்கே! அப்படியே கீழே கொட்டுது! என்ன பண்ண முடியும்?

      Delete
  12. //ஆனாப் பாருங்க, எங்களுக்கு, முக்கியமா எனக்கு முதல் நாளிலே இருந்தே சந்திராஷ்டமம் ஆரம்பிச்சிருக்குப் போல! //

    ஹா ஹா ஹா எனக்கு இண்டைக்கு சந்திராஸ்டமம் நடக்குது:) அதுதேன் ஆரோடயாவது சண்டைப்பிடிக்கோணும் போல இருக்கு:) இதனாலேயே இன்று எங்கும் போவதில்லை எனக் கங்கணம் கட்டி இருந்தேன்:) என் செக்தான். என்னை ஓடு ஓடு புளொக்ஸ் பக்கம் போய்ப்பாரு என மிரட்டினா கர்ர்ர்ர்ர்:))

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, எங்கே போனாங்க உங்க செக்! நல்லா மாட்டி விட்டாங்களா?

      Delete
    2. / அதுதேன் ஆரோடயாவது சண்டைப்பிடிக்கோணும் போல இருக்கு:)//

      ஸ்காட்லாந்ட் zoovil இருந்து சிங்கம் தப்பிருச்சுன்னாங்க பிபிசில அது கூட சண்டை போடுங்க அவ்ளோ ஆசையா ஆர்வமா இருந்தா

      Delete
    3. அதானே ஏஞ்சல்! நீங்க சொல்றது நல்ல ஐடியா! ஜிங் சக்க, ஜிங் சக்க, ஜிங் சக்க! :)))))

      Delete
  13. //இன்னிக்குப் பாருங்க, தோசைக்கு அரைக்கிறேன்னு சொன்னா ரங்க்ஸ் ஓட்டமா ஓடிட்டார். எங்கே அது போல வார்த்துடுவேனோ னு பயம் போல! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!//

    ரங்ஸ் மாமா செஞ்சது கரீட்டுத்தான்:) உங்கட ஓசையைப் பார்க்க நீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்த்தோசைபோல இருக்கே:) ஹையோ மீயும் எஸ்கேப்ப்ப்ப்ப்:) இண்டைக்கு என்னை உளக்கியே மயங்க வைச்சிடப்போறா கீசாக்கா:))

    ReplyDelete
    Replies
    1. நீர்த்தோசையைச் செய்து சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க அதிரடி! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. கீசாக்கா எனக்கு நீர்த்தோசை என ஒன்றிருப்பதே 2 நாளைக்கு முன்னர்தான் தெரியும் தற்செயலா ஒரு ரெசிப்பி பார்த்தேன்... ஆனா பார்க்கும்போது பெரிசா பிடிக்கவில்லை.. எதுக்கும் ஒரு தடவை செய்யோணும்:)..

      Delete
    3. செய்து பாருங்க. இதையே என் மாமியார் வீட்டில் கூழ் தோசை எனச் செய்வாங்க! தேங்காய் போட்டதில்லை! ஆனால் தொட்டுக்கக் காரசாரமான சட்னி தேவை!

      Delete
  14. Replies
    1. என்ன சிரிப்பு தம்பி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  15. ஹாஹா உங்களுக்காவது தோசை முகம் மாறிப்போச்சு :) எனக்கு மறந்தே போச்சு .ஏன்னா நான் சுடறதுதானே தோசை இங்கே :)
    இங்கே ரெஸ்டாரண்டில் போன வருஷம் வாங்கினோம் பார்க்க ரொம்ப பிரவுனா இருந்துச்சி அப்புறம் பார்த்தா க்ரிஸ்பியா வர கோதுமை மாவை கலந்து சுடறாங்க னு அங்கிருந்த ஒருவர் சொன்னார் .
    இங்கே கிடைக்கற இட்லி அரிசியை பொறுத்து தோசை எனக்கு நல்லா பல தினுசா வரும் .அநேகமா இப்போ ஹோட்டல்காரங்க மொறுமொறுப்புக்கு அவலை கலக்கிறாங்களோனு தோணுது ,,ஹீ ஹி ஏன்னா போன தரம் சுடும்போது ஒரு கை கழுவி போட்டதில் பேப்பர் ரோஸ்ட்டா வந்திச்சு எனக்கு .
    எனக்கு பஞ்சுமாதிரி soft தோசை பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல்! அடக் கடவுளே! தோசை முகமே மறந்து போச்சா? :( வாரம் ஒரு நாளாவது தோசை சாப்பிடாமல் என்னால் இருக்க முடியாது. :))) அவல் போட்டு ஊற வைப்பது மெத்தென்று ஊத்தப்பம் போல் உப்பி வருவதற்குனு தான் சொல்லுவாங்க. மொறுமொறுப்பு வேணும்னா கொஞ்சம் போல் துவரம்பருப்புச் சேர்க்கணும். இரண்டு கிண்ணம் இட்லி அரிசி எனில் இரண்டு டீஸ்பூன் துபருப்பு சேர்த்தால் பொன்னிறமாக முறுகலாக தோசை வரும். உளுந்து வழக்கம் போல் போடணும். உளுந்தோடு சேர்த்துக் கொஞ்சம் வெந்தயம் சேர்த்தாலும் மொறுமொறு தோசை, மெத்தென்ற இட்லி வரும்.

      Delete
  16. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை கிடைத்தால் ரசித்துப் புசிப்பதை விட்டுவிட்டு குறைகள் எழுதியிருக்கீங்களே.

    ReplyDelete
    Replies
    1. நெ.த. என்னாது? ஆ.இ.ஊ.இ.ச.? நீங்க வேறே! வரிசையா ஓட்டல்கள்! அதுவும் அடையாறு ஆனந்த பவன் பக்கத்திலேயே இருந்தது. பேசாம/பேசிண்டே அங்கே போயிருக்கணுமோனு நினைச்சுக்கறேன். ஒரு சுருட்டலில் வரும் தோசையை என்னத்தை ரசிக்கிறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. உங்களை வம்புக்கு இழுத்து ஏகப்பட்ட பின்னூட்டங்கள் போட்டது எனக்குத் திருப்திதான்.

      Delete
  17. ஆவ் அங்கேயும் இன்ஸ்டன்ட் காபி பவுடர் ஹோட்டலில் வைக்கிறாங்களா ?
    இங்கே பிரட் அன்ட் ப்ரேக்பாஸ்ட் புக் பண்ணும்போது எல்லா ஹோட்டலஸிலும் இப்படி வச்சிடுவாங்க நாமே கெட்டில் இல் சூடு பண்ணி போட்டுக்கணும் .என்னதான் இருந்தாலும் வீட்டுச்சுவை வராது .

    ReplyDelete
    Replies
    1. அநேகமா வட மாநிலங்களில் உள்ள ஓட்டல்களில் எல்லாம் நெஸ்கஃபே, எவ்ரிடே பால் பவுடர், சர்க்கரை, வாஹ் பக்ரி தேயிலைத் தூள்(டிப் டீ), மெஸ்வாக் பற்பசை, துளசி ஷாம்பூ,ஆயுர்வேதிக் சோப், மற்றும் துண்டு (டர்க்கி டவல், இதை நாம் பயன்படுத்தறதில்லை) ஒண்ணு வைப்பாங்க! இங்கே தமிழ்நாட்டில் சோப், துண்டு கூட இருக்காது. கும்பகோணத்தில் ராயாஸ் ஓட்டலில் மட்டும் காஃபி பவுடர், தேயிலைத்தூள், சர்க்கரை, பால் பவுடர் வைச்சிருந்தாங்க! கெட்டில் எல்லா ஓட்டல்களிலும் இப்போ இருக்கு என்றாலும் தமிழ்நாட்டில் பரவலாக இல்லை!

      Delete
  18. இந்தப் பெண்கள்தான், தாங்கள் செய்வது உச்சத்தில், கடைகளில் ஆண்கள் செய்வது சுமார் என்று ஏன்தான் சொல்கிறார்களோ... :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. நான் செய்யறது உசத்தினு எல்லாம் சொல்லலை. இதே சங்கீதாவில் அயோத்தி போயிட்டுத்திரும்பிய அன்று சாப்பிட்டேன் பாருங்க! 2013 ஆம் ஆண்டில். அந்த தோசைக்கு ஈடு, இணை இல்லை! அப்போ இந்த சங்கீதா ஓட்டல் செல்ஃப் சர்வீஸ் ஓட்டல். நின்று கொண்டு தான் வட்டமான மேஜையில் தட்டை வைச்சுக் கொண்டு சாப்பிடணும். டோக்கன் சிஸ்டம்! காஃபி பிரமாதமா இருந்தது! இப்போப் பெரிசு பண்ணிப் பக்கத்தில் பிசினஸ் ஓட்டலும் ஆரம்பிச்சு, மேஜை, நாற்காலிகள் போட்டு சூபர்வைசர் தனியாப் போட்டு! உணவு மட்டமான தரம். சேவையும் மிக மிக தாமதம்! :(

      Delete
  19. மசால் தோசைனா மசால் தனி தோசை தனியாத்தானே இருக்கும். வெங்காய தோசைக்கு மாத்திரம் சட்டம் வேறா மோடி அவர்கள் ஆட்சியில்

    ReplyDelete
    Replies
    1. மசால் தோசையில் மசாலா தோசைக்கு உள்ளேயே இருக்கும். மசாலாவோடு சேர்த்து தோசையைப் பிய்க்கலாம். ஆனால் இந்த ஓட்டல் மசாலா தோசையில் தோசை கிழிஞ்சு மசாலா வெளியே வந்திருக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எல்லாம் இந்த மோதியால் தான் வந்தது! மோதி ஒழிக! :)))))

      Delete
  20. நானும் நீர்த்தோசை லோங் அகோ சுட்டிருக்கேன் :) நான் சோனாமசூரி போட்டு அரைச்சேன் ..ஆனா எனக்கு பிஞ்சிபோன லேஸ் பார்டர் வந்தது :) நான் வெரைட்டி தோசை வகை செஞ்சிருக்கேன் என்னனா ப்ராப்பரா லேபிள்ஸ் தரலை தேடி எடுத்து தனியா ஷேர் பண்ணனும்
    நீங்க சுட்டது அழகா வந்திருக்கு திரும்பி செஞ்சி பார்க்கணும்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஏஞ்சல், பார்டர் பிய்ஞ்சால் என்ன? இதான், இப்படித் தான் என்று அடிச்சுச் சொல்லிடணும். நீர்த்தோசை ரொம்பவே எளிது. செய்து பாருங்க!

      Delete
  21. கீதாவின் பயணங்களில் என்று புது ப்ளாக் தான் ஆரம்பிக்கணும்.
    சாப்பாடுதான் எப்படிப் பயமுறுத்துகிறதுமா.
    அவசரப் பசிக்கு எதையாவது சாப்பிடலாம்னு போனால்
    இந்தக் கொடுமை.

    எண்ணெயில்லாமல், வெறும் சாதம் ,ரசம் மட்டும் சாப்பிட வேண்டும்.
    ராயாஸ் சாப்பாடு கூட எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை.
    அதற்காகத் தோசை அரைக்காமல் இருக்காதீர்கள்.
    இப்போ தோசை சாப்பிட்டுத்தான் வந்திருக்கிறேன்.ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. ராயாஸில் பின்னாடி உள்ள ரெஸ்டாரன்டில் சாப்பாடு நன்றாகவே இருக்கிறது. என்றாலும் என்னிக்கோ ஒரு நாள் சாப்பிடலாம். :) தொடர் பயணங்களில் கூடியவரை சாப்பாட்டைத் தவிர்ப்பதே நல்லதாக இருக்கிறது.

      Delete
  22. பாரதியின் (?) "ஆசை முகம் மறந்து போச்சே"வை இப்படியா தலைப்புக்காக உல்டா செய்வது?

    ReplyDelete
    Replies
    1. பாரதியே தேசச் சொத்துத் தானே! அவர் கவிதையை உல்டா பண்ணினால் ஒண்ணும் சொல்ல மாட்டார்! :)))

      Delete
  23. ஹோட்டல் சங்கீதா முன்பு போல இல்லை! சுவையும் தரமும் குறைந்துவிட்டது! தோசைக்கு நீங்க கொடுத்த விளக்கம் அருமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், ஆமாம், சங்கீதா முன்னைப் போல் இல்லை தான்! :)

      Delete
  24. சில ஐட்டங்களை ஆர்டர் செய்யும்போது அடுத்த டேபிளில் யார் என்ன சாப்பிடுகிறர்கள் என்றும் பார்க்க வேண்டும் போல இருக்கு அந்த ஹோட்டல்காரர் உங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டு விட்டார் போல

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, அதெல்லாம் மத்தவங்க டேபிளைப் பார்க்கும் வழக்கம் இல்லை. கூடியவரை வே று யாரும் வர முடியாதபடியான இரட்டை ஆசனங்களிலேயே தேடிப் பிடித்து உட்காருவோம். எங்களுடனும் யாரும் உட்கார முடியாது. நாங்களும் மற்ற டேபிளைப் பார்க்க முடியாது!

      Delete
  25. அப்போநீங்க சொல்றது வெங்காய உதிர் தோசை. தோசைமுகம் மறக்கலாமோ? முதலில் நல்ல தோசையாக வார்த்து சாப்பிட்டுவிட்டு அடுத்த பதிவு போடுங்கோ!எல்லா முகங்களும் ஞாபகம் வந்து விடும்.அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க காமாட்சி அம்மா, தோசையா அது! நீங்க சொன்னாப்போல் வெங்காய உதிர் தோசைனு வைச்சுக்கலாம்! :)))) தோசை வார்த்துச் சாப்பிடணும். இன்னும் இரண்டு நாட்கள் போகணும் அரைக்க! :)))) ஊருக்குப் போறோம்.

      Delete