எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 25, 2018

ஶ்ரீராமநவமிக்கு ஓர் மீள் பதிவு!


ஶ்ரீராமருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! :)

ராமருக்குப் பாவம் ரொம்பவே மிருதுவான பக்ஷணங்கள்! அதான் அவர் இப்படிச் சொல்றார்!
நீங்கல்லாம் கிருஷ்ண ஜயந்தின்னா எல்லாம் நொறுக், முறுக்னு தின்னப் பண்ணித் தள்ளறீங்க! இன்னைக்கு என்னோட பிறந்த நாளைக்கு எல்லாம் மிருதுவாத்தானே பண்ணணும்! அது கூடப் பண்ணலைன்னா எப்படினு கேள்வி மேல் கேள்வி! கண்ணனை இப்போத்தானே எழுதறேன், அதுக்கு முன்னாடியே உங்களைப் பத்தி எழுதியாச்சே! ரெண்டாவதா அவன் இன்னமும் குழந்தை தான்! உங்க மேலே முதல்லே மரியாதை தானே வருதுனு சொன்னேன்! ஏதோ சாக்குனு முகத்தைத் திருப்பினார் ஶ்ரீராமர்!  சரி இன்னிக்குத் தான் ராமருக்குப் பிறந்த நாள் வேறேயே! நேத்திக்கே ஜன்ம நக்ஷத்திரம் வந்தாச்சு! ஆனால் நாமெல்லாம் என்னமோ நவமி திதியிலே தானே கொண்டாடறோம்! ஆகவே இன்னிக்கு ஶ்ரீராமநவமிக்கு ஶ்ரீராமர் மனம் குளிரும்படி எல்லாமும் செய்துடலாம்னு முடிவு.

இந்த வருஷம் மல்லிகை மாலை போடலை. பூ சரியாக வர ஆரம்பிக்கலை. அதனால் கதம்பம் தான். படமும் முன்னால் எடுத்தது. இந்த வருஷம் எடுக்கலை! :)


என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர்! அம்புடுதேன்! அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது! :) போளியெல்லாம் பண்ணலை!  இந்த வெயில் வேறே இந்த வருஷம் பாடாய்ப் படுத்தி எடுக்குது. குளிச்சுட்டு வந்த உடனே மறுபடி குளிச்சாப்போல் வியர்வை வெள்ளம். அடுப்பு எரிஞ்சால் என்ன, எரியாட்டி என்னனு மெத்தனமா சமையலறையில் முழு வேகத்தில் மின் விசிறியைச் சுத்த விட்டுட வேண்டி இருக்கு!  பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வியர்வைக்குளியலைக் கழுவி நல்ல நீர் விட்டு முகம், கை,கால்களைக் கழுவிட்டு வர வேண்டி இருக்கு! இத்தனைக்கு நடுவே சமையல், சாப்பாடு. மூணு நாளாக் காலை நோ டிஃபன்! நம்ம ரங்க்ஸுக்கு அதுவே பாதி பலவீனமாயிடுச்சு. பசி தாங்கலை! காஃபி இரண்டு தரம், ஹார்லிக்ஸ் (மருத்துவர் தடை போட்டிருக்கார்) ஒருதரம்னு குடிச்சாலும் தாங்கறதில்லை. ஆகவே பத்து மணிக்குள்ளாகச் சமைக்கணும்.

வீடு சுத்தம் செய்துட்டுக் குளிச்சுட்டு வரவே எட்டரை மணி ஆயிடுது! :) அதுக்கப்புறமா இவை எல்லாம் செய்துட்டுச் சரியாப் பத்து மணிக்கு எல்லாம் முடிச்சுட்டேன். வெள்ளிக்கிழமையா, ராகுகால விளக்கு ஏத்துவேன். அதுக்காகப் பத்து நிமிஷம் காத்திருந்து நிவேதனம் பண்ணினேன். கீழே படங்கள்! ராமர் படத்தின் மேலே வெளிச்சம் பிரதிபலிக்காமல் எடுக்கணும்னு பார்த்தால் முடியலை. மின் விளக்கை அணைத்தால் படம் எடுக்க வெளிச்சம் போதலை. விளக்கைப் போட்டால் அது பிரதிபலிப்பு அதிகமா ஆகி ஶ்ரீராமரின் முகமே தெரியறதில்லை!சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், பானகம், நீர்மோர், வடை, வெற்றிலை பாக்கு, பழம் நிவேதனம்!

கீழே கற்பூரம் காட்டியது தட்டில் எரிந்து கொண்டு இருக்கிறது.  பலகையில் ராகுகால விளக்கு ஏற்றியது எரிகிறது. :)

எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா!

இது ஒரு மீள் பதிவு. மற்றபடி இந்த வருஷமும் பாயசம், சுண்டல், வடை, நீர்மோர், பானகம், சாதம், பருப்பு, வெற்றிலை, பாக்கு, பழம்!

30 comments:

 1. ஸ்ரீராமுக்கு (வலைப்பதிவர் அல்ல) பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் தம்பி லட்சுமணனுக்கு மட்டும் கொண்டாடுவதில்லை.

  ஏனிந்த ஓரவஞ்சனையோ....

  ReplyDelete
  Replies
  1. ஹையோ கில்லர்ஜி எங்க வீட்டுல நான் என் பாட்டியிடம் சொல்லிக் கிண்டல் செய்வேன். பாட்டி உடனே ராமரிடம்...ராமா என் குழந்தைய தப்பா எடுத்துக்காதே...அது சும்மா இப்படித்தான் விளையாடும்...ஆனா பாரு கோயிலுக்குப் போனா உம்முன்னாடிதான் நிக்கறா நிக்கறா நிக்கறா மத்தவங்க எல்லாம் உன்ன பாக்க வேண்டாம்? என்னடி இவ்வளவு நேரம்னு கேட்டா...அது எனக்கும் ராமருக்கும் உள்ள டீல்...நிறைய கெள்வி கேட்டுருக்கேன்...உங்கிட்ட கேட்டா பதில சரியா வராதுனு அவர்கிட்ட கேட்டுருக்கேன்னு வேற பதில் சொல்லுவா என்று பாட்டி சொல்லுவார்...இப்படி பல நினைவுகள்....

   கீதா

   Delete
  2. //தம்பி லட்சுமணனுக்கு மட்டும் கொண்டாடுவதில்லை.

   ஏனிந்த ஓரவஞ்சனையோ....//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆராவது சீதையைப் பற்றிக் கொஞ்சமாவது கலவை சே.சேஏ.. கவலைப் பட்டீங்களோ?:).. ஏனிந்த ஓரவஞ்சனை சீதைக்கும் பேர்த்ட்டே கேக் வெட்டோணும்.. கீசாக்கா அதுக்கும் ஒரு போஸ்ட் போடொணும் இல்லையெனில் விட மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

   Delete
 2. ஹாஹா, ஆமா இல்ல! நாலு பேருக்கும் தானே கொண்டாடணும்! ஆனாலும் ராமர் பிறந்த சில மணி நேரம் பின்னால் பரதனும், அப்புறமாச் சில மணிக்குப் பின்னர் லக்ஷ்மணனும், கடைசியில் சத்ருக்னனும் பிறந்திருக்கின்றனர். நான்கு பேரின் பிறந்த நக்ஷத்திரங்களும் வெவ்வேறு. :))

  ReplyDelete
  Replies
  1. ராமரின் தாயும், லடசுமணனின் தாயும், பரதன் & சத்ருக்கனின் தாயார். மூவரும் வெவ்வேறு தாயார்கள் இல்லையா ?

   Delete
  2. ஆமாம், கில்லர்ஜி, வெவ்வேறு தாயார்களே!

   Delete
 3. அருமையான் மீள்பதிவு.
  ராமரை கும்பிடும் போதெல்லாம் உங்கள் நினைவும் . (நீங்கள் கொடுத்த ராமர் படம்)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கோமதி அரசு!

   Delete
 4. கீதாக்கா பதிவு நல்ல பதிவு திங்க இருக்கே ஹா ஹா ஹா ஹா ஹாஹா...

  காலைல எல்லாம் செஞ்சாச்சு இன்று...எங்க வீட்டுலயும் காலைலதான்...முதல்ல மீள் பதிவுன உடனே போன வருஷம் செஞ்சத கொடுத்து இன்வைட் பண்ணுறீங்களானு சொல்லிக் கலாய்க்கலாம்னு பார்த்தா இன்ன்றைய மெனுவும் சொல்லிட்டீங்க...ஹா ஹா ஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஹூம், வருஷா வருஷம் அதே சமையலைத் திரும்பத் திரும்பப் பண்ணிட்டு இருக்கோம். அதான் புதுசுனு தெரியலை! :)

   Delete
 5. மீள் பதிவை ரசித்தேன். பிசியாக இருக்கிறீர்கள் போலிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அதை ஏன் கேட்கறீங்க நெ.த. ரொம்பவே பிசிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

   Delete
 6. பானகமும் நீர்மோரும் ஸ்பெஷல் அட்சராக்ஷன். இவை இரண்டையும் நினைக்கும்போது எனக்கு நாகைத் திருவிழா நினைவுக்கு வரும்!

  ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம். ஸ்ரீராமஜெயம்.

  ReplyDelete
  Replies
  1. மதுரையிலே வெயில் காலத்திலே மேலகோபுர வாசல் முழுதும் பந்தல் போட்டு ஆங்காங்கே பானைகளில் நீர்மோர், பானகம் கரைச்சு வைப்பாங்க. பக்கத்திலே ஒரு வாளியில் ஏதேனும் ஓர் சுண்டல். இப்போல்லாம் இருக்கானு தெரியலை!

   Delete
 7. ஹாப்பி ராமநவமி .
  முதல் படத்தில்தான் விளக்கு பிளாஷ் தெரியுது ரெண்டாவது அழகா க்ளியரா இருக்கு .
  எனக்கு பானகம் அப்புறம் அந்த வடை வேணும் .

  கிருஷ்ணஜெயந்திக்கு குட்டி பாதம் அச்சு வைக்கிறமாதிரி பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மாதிரி
  ராமருக்கு ஏதும் ஸ்பெஷல்ஸ் இருக்கா !

  அப்புறம் உங்க செல்ல பட்டு குஞ்சுலு வந்தாச்சுன்னு கேள்விப்பட்டேன் :) என்ஜோய்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், எனக்கு ஃபோட்டோ எடுக்க வரவே வராது! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா க்ளிக்குவேன். :)

   Delete
 8. மீள்பதிவானாலும், பொருத்தமான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவர் ஐயா!

   Delete
 9. ///என்ன பெரிசா? சாதம், பருப்பு, பாயசம், சுண்டல், வடை, பானகம், நீர்மோர்! அம்புடுதேன்! அதுக்கே இங்கே நாக்குத் தள்ளுது! :) போளியெல்லாம் பண்ணலை! //

  ஓ ராமருக்கு பிறந்தினமும் இருக்கோ.. ஹப்பி பேத்டே ரூ ராமார்..

  போளியைப் பற்றி எல்லாம் கவலைப்படாதீங்கோ கீசாக்கா... அதெல்லாம் செய்து குடுக்க சீதை இருக்கிறா:).. நீங்க எதுக்கு மூக்கை நுழைச்சு நல்லா போகிற குடும்பத்தில குழப்பம் உண்டுபண்ணப் பார்க்கிறீங்க கர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க அதிரடி, ராமருக்குப் பிறந்த நாள் இருக்கிறதே தெரியாதா? ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் (கோபத்திலே "க்"ஐ முழுங்கிட்டேன்! சீதை ராஜகுமாரி! அவளுக்கு போளி எல்லாம் பண்ணத் தெரியாது.

   Delete
 10. // மூணு நாளாக் காலை நோ டிஃபன்!//

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) டிபனும் இல்ல.... எங்கள் புளொக் ல 1ஸ்ட்டும் இல்ல:) அப்போ என்னதான் பண்ணுறா கீசாக்கா கர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹிஹி, வேலை, வேலை, வேலை!

   Delete
 11. //எல்லோரும் சீக்கிரமா வந்து சுடச் சுட வடை, பாயசம், சுண்டல் எடுத்துண்டு, பானகமும், நீர்மோரும் குடிங்கப்பா!//

  கீதா வும் கில்லர்ஜி உம் எல்லாத்தையும் சாப்பிட்டு விட்டினம்:).. மீ வரும்போது பிளேட் காலி கர்ர்ர்ர்:))

  ReplyDelete
  Replies
  1. ஹையா ஜாலி! நீங்க வரச்சே ப்ளேட் காலியா! ஜாலியோ ஜாலி! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா!

   Delete
 12. இங்கே ராம நவமிக்கு அடுத்த நாள் பரத ,லக்ஷ்மண,சத்ருக்னன்
  பிறந்த நாள் கொண்டாடினார்கள் கீதா மா.

  ReplyDelete
  Replies
  1. ஓ, அப்படியா, நன்றி வல்லி. இதுவரை கேட்டதில்லை. புதுச் செய்தி!

   Delete
 13. இதுவே யதேஷ்டம். இவ்ளோ பண்றதுக்கே உங்களுக்கு சுத்திப் போடணும். படிக்கும்போது நானே கிச்சன்ல நின்ன மாதிரி கசகசப்பும் சிரிப்பும் வந்தது. :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க தேனம்மை. அதிசயமா நீங்க வந்தீங்க! எனக்குப் பதிவே போட முடியலை! :))))))) கிச்சன்லே நின்னுட்டெல்லாம் இருக்க மாட்டேன். சுத்திட்டே இருப்பேன்.

   Delete
 14. What is the reason for "raagu kaala villaku " on Friday? Please and Thanks.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜான் கென்னடி, முன்னால் ஓர் பதிவு எழுதின நினைவு. மீண்டும் எழுதறேன். விபரமாக!

   Delete