எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 08, 2018

பாரதி கண்ட புதுமைப் பெண்!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்
நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்
ஓது பற்பல நூல்வகை கற்கவும்
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவி லொழிப்பராம்.
சாத்திரங்கள் பலபல கற்பராம்
சவுரியங்கள் பலபல செய்வராம்
மூத்த பொய்மைகள் யாவு மழிப்பராம்
மூடக் கட்டுகள் யாவுந் தகர்ப்பராம்!

மேலே சொல்லி இருப்பது பாரதி தான் கண்ட புதுமைப் பெண் குறித்த கற்பனைகள். ஓரளவுக்குப் பெண்கள் இவற்றில் வெற்றி கண்டும் இருக்கின்றனர். பாரதி வாழ்ந்த காலத்தில் பெண்களுக்குப் படிப்பு என்பது மறுக்கப்பட்டு இருந்தது. பல காரணங்கள்! அந்நியர் படையெடுப்பு முக்கியம். அதோடு இல்லாமல் மத மாற்றம் செய்யப்பட்டதும் ஒரு காரணம்.  பெண்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் இருந்ததுக்கு மேற்சொன்ன காரணங்கள் தான் முக்கியம். அதற்கு முன்னால் சுமார் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பெண்கள் படித்துக் கொண்டு தான் இருந்திருக்கின்றனர். பல அரச மகளிர் எல்லாக் கலைகளையும் கற்றுத் தேர்ந்து மிகவும் சாமர்த்தியசாலியாகவும் புத்திசாலியாகவும் அரசை நிர்வகிக்கும் சக்தி உள்ளவர்களாகவும் இருந்திருக்கின்றனர்.

பதினான்காம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசியான கங்கா தேவியின் மதுரா விஜயம் அவள் சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறது. இதிலிருந்து பெண்கள் படிக்காமல் இருந்ததில்லை என்பதையும் பெண்களுக்குப் படிப்பு மறுக்கப்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்பட்டது பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னரே! அந்தக் கால கட்டங்களில் பெண்ணை வீட்டில் வைத்திருப்பதற்கு பயந்து விரைவில் திருமணமும் முடித்து அனுப்புவதை வழக்கமாய்க் கொண்டனர். திருமணங்களும் பெரும்பாலும் இரவில் நடத்துவார்கள். ஆகவே பாரதியார் மேற்கூறியபடி பெண்கள் முன்னேற்றம் குறித்துக் கருத்துகளைத் தெரிவித்துப் பாடல்களாகவும் பாடி வைத்துள்ளார்.

ஆனால் இன்றைய புதுமைப் பெண்ணுக்கு சுதந்திரம் என்பது கட்டற்றதாகவே இருக்கிறது. பெண்களின் திருமண வயதும் 30க்கு வந்து விட்டது. அப்படியும் பல திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. முன்னெல்லாம் திருமணத்தில் வைதிகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் திருமணங்கள் ஆடம்பரச் செலவுகளில் மூழ்கி முத்தெடுக்கின்றன.  நமக்கு வடக்கே பேசும் மொழி வேண்டாம். ஆனால் கலாசாரத்தை மறுப்பதில்லை. பல திருமணங்களிலும் மெஹந்தி விழா வட மாநிலங்களைப் போல் நடத்துகின்றனர். அதே போல் உடை, நடை, பாவனைகளும் வட மாநிலப் பெண்களைப் போல் தான்! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனார்கலி சல்வார், குர்த்தா இல்லைனா லெஹங்கா, சோலி போட்டுக் கொண்டு தான் மணப்பெண் நிற்பார். ஆனால் வெளியில் பேசும்போது தமிழ், தமிழ்க் கலாசாரம், தமிழ் மொழியை எங்கிருந்தோ வடக்கத்தியர் வந்து அழிக்கின்றனர் என்று அரசியல் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

திருமண பந்தம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள் முன்னெல்லாம். ஆனால் இப்போதெல்லாம் ஆயிரம் நாட்கள் வாழ்ந்தாலே விழா எடுக்க வேண்டியதாய் உள்ளது. நம் திருமணத்தின் முக்கியத்துவம் இன்னமும் குறையாமல் இருப்பதாலேயே நம் நாட்டின் பொருளாதாரமும் ஆட்டம் காணாமல் நிலைத்து இருக்கிறது! இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்குப் பின்னால் அது பற்றி வேறொரு சமயம் பேசிக்கலாம். குடும்பம் என்பது இருப்பதால் தான் இன்னமும் திருமணங்கள் பெற்றோர் பார்த்து வைத்தும் நடந்து வருகின்றன. அந்தத் திருமணங்களில் சப்தபதி என்றொரு நிகழ்ச்சி நடக்கும். தாலி கட்டி முடிந்ததும் அது நடக்கும். தாலி கட்டியதும் திருமணம் முடிந்து விட்டதாகப் பெரும்பாலோர் நினைத்தாலும் சப்தபதி முடிந்தால் தான் திருமணம் முடிந்ததாக அர்த்தம்.  தாலி கட்டிய பின்னர் கூடப் பெண்ணோ, பிள்ளையோ திருமணம் வேண்டாம்னு போனால் அது சட்டரீதியாகச் செல்லுபடி ஆகும். ஆனால் சப்தபதி முடிந்த பின்னர் தம்பதிகள் சட்டரீதியாகப் பிரிவது கடினம். குறைந்தது ஒரு வருஷம் காத்திருக்கணும்.

அப்படி என்ன இருக்கு சப்தபதியிலே என்பவர்களுக்கு! இது கிட்டத்தட்டத் தாலி கட்டிக் கொண்ட பின்னர் கணவன், மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்றது!

அக்னிக்கு வடக்கே மணமகன் மணமகளின் வலக் கையைப் பிடித்த வண்ணமே அவள் வலக்காலைத் தன் இடக்கையால் பிடித்துக் கிழக்கே பார்த்து அல்லது வடக்குத் திசையில்  முன்னே ஓர் அடி நகர்த்த வேண்டும். கூடவே தானும் செல்ல வேண்டும்.  சாஸ்திரங்கள் சொல்லுவதன் பேரில் ஒருவருடன் நாம் ஏழு அடிகள் எடுத்து வைத்து நடந்தால் அவர் நம் நண்பர் எனப் பொருள். சாவித்திரி சத்தியவானை மீட்க யமனுடன் ஏழடி நடந்து சென்று அவனுடன் சிநேகிதி ஆன பின்னரே வாதங்களில் ஈடுபட்டு சத்தியவானின் உயிரை மீட்பாள்.

இங்கே திருமணத்தில் ஒவ்வொரு அடிக்கும் ஓர் மந்திரம் உண்டு. அவற்றின் பொருள் என்னவெனில் மஹாலக்ஷ்மியை நிகர்த்த நீ என் வீட்டுக்கு வருவதால் என் குலம் விருத்தி அடையட்டும். நீயும் சந்தோஷம் அடைந்து என்னையும் சந்தோஷம் அடையச் செய்யப் போகிறாய். நீ என் வீட்டுக்கு வரும் நேரம் உணவுப் பொருட்கள் தட்டாமல் நிறைந்து இருக்க அந்த மஹாவிஷ்ணு திருவருள் புரியட்டும்.

இரண்டாம் அடி: அந்த மஹாவிஷ்ணுவின் அருளால் உனக்கு என் வீட்டில் வந்து இருக்கக் கூடிய உடல் வலிமை ஏற்படட்டும். உன் எண்ணங்களையும் அவன் நிறைவேற்றித் தரட்டும்.

மூன்றாம் அடி:  நாம் இருவரும் சேர்ந்து வாழப்போகும் இந்தப் புதிய வாழ்க்கையில் நாம் சாஸ்திர சம்பிரதாயங்களை மீறாமலும் அவற்றின் நியமங்களை மீறாமலும் கடமையுடன் செயலாற்றவும் அதற்கான நம்பிக்கை நமக்கு ஏற்படவும் அந்த இறைவனின் ஒத்துழைப்பை நாடுவோம்.

நான்காம் அடி: இவ்வுலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை நாம் இருவரும் சேர்ந்து அனுபவிக்கவும் அனைத்துச் சுகங்களும் என்னோடு சேர்ந்த உனக்கும் முழுமையாகக் கிடைக்கவும் இறைவன் அருளட்டும்.

ஐந்தாம் அடி: சுக, போகங்களை அனுபவிக்கத் தேவையான வீடு, வாசல், நிலம், கால்நடைச் செல்வங்கள் ஆகியவையும் நிறைந்து இருக்கக் கடவுள் அருளட்டும்.

ஆறாம் அடி: பருவகால மாற்றங்களினால் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களை வாழ்வின் சுவை குன்றாமல் அவற்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை நமக்குத் தருமாறு அந்தக் கடவுளை வேண்டுவோம்.

ஏழாம் அடி:  நம் வாழ்க்கையில் வெறும் சுகம் மட்டுமே இல்லாமல் அனைத்தையுமே பார்ப்போம். அதற்கு அடிப்படையான இயற்கைச் சக்திகளை மழை, வெயில், பனி போன்றவற்றை அந்த அந்தப் பருவத்தில் தவறாமல் ஏற்படுவதற்கு  உதவி செய்யும் கண்ணுக்குத் தெரியாத அந்த மாபெரும் சக்தியை நாம் வணங்கவும் அதற்குச் செய்ய வேண்டிய எல்லாக் கடமைகளையும் நாம் இருவரும் சேர்ந்து நிறைவேற்றவும் எல்லாம் வல்ல அந்த சக்தியை வேண்டுவோம்.

இவ்வாறு திருமண வாழ்க்கையில் ஈடுபடும் மணமகனும், மணமகளும் தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் உலக க்ஷேமத்துக்கும் சேர்த்துப் பிரார்த்திப்பான். இதன் மூலம் இருவருக்கும் மனத்தெளிவு உண்டாகி ஆன்மிகப் பாதையில் செல்ல வேண்டிய பக்குவம் ஏற்படும்.  இந்தப் பிறவியின் கடமைகளை ஆற்றவேண்டுமானால் இயற்கைச் சக்திகளும் உதவ வேண்டும் அல்லவா? அதற்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றுக்கும் சேர்ந்து நன்றிக்கடனை வேள்விகள், பூஜைகள் மூலம் நிறைவேற்றுவார்கள் தம்பதியர்.  இப்படி அறம் சார்ந்த வாழ்க்கையே இல்லறம் எனப்பட்டது.

ஆனால் இன்றைய அவசரகால வாழ்க்கை முறை இணையம், முகநூல், செல்ஃபோன் போன்றவற்றோடு சம்பந்தப் பட்டிருப்பதால் கணவனும், மனைவியும் அதிலேயே மூழ்கி விடுவதால் இவற்றை எல்லாம் நினைக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. தங்களைப் பற்றியே நினைக்க நேரமில்லாதவர்களுக்கு உலகைக் குறித்த சிந்தனைகள் எங்கே இருந்து வரும்? என்னவோ வாழ்க்கை நடத்துகின்றனர். சமீபத்தில் ஒரு புதிதாகத் திருமணம் ஆன தம்பதியரின் வாழ்க்கை முறை பற்றிக் கேட்டதில் அவங்க உறவினர் சொன்னது. கணவன் காலை வெளியே போனால் அந்த நேரம் மனைவி தூங்குவாள். இரவில் மனைவி சீக்கிரம் வந்து சாப்பிட்டுப் படுத்து விடுவாள். கணவன் நேரம் கழித்து வந்து தானே சாப்பிட்டுப் படுப்பான். காலை அவன் எழுந்தால் மனைவி வேலைக்குப் போய்விடுவாள். இருவரும் சந்திப்பது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே! அதுவும் இருவருக்கும் வேறு வேலை ஏதும் இல்லை எனில்! பேசிக் கொள்வதும் அப்போது தான். பல சமயங்களில் மனைவி சனிக்கிழமையும் வேலைக்குப் போய்விடுவார். கணவன் தனியாகத் தான் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறார். இதுக்குக் கல்யாணம் எதுக்கு என்று நினைத்துக் கொண்டேன்! :( இப்போப் பல குடும்பங்களின் நிலைமை இது தான்.

இது தான் பெண் சுதந்திரம். பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

வாழ்க அனைத்து மகளிரும். மகளிர் தின வாழ்த்துகள்! 

72 comments:

  1. இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் கீதாக்கா ..
    பதிவை வாசிச்சிட்டு வரேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏஞ்சல். வாசிச்சாச்சு! :)

      Delete
  2. பாரதியின் பெண்கள் பற்றிய கனவு முழுதும் நனவாகணும்னா அது பெண்கள்கிட்டதான் இருக்கு.இன்னும் நிறையபேருக்கு எது பெண்ணியம்னும் தெரியலை எது சுதந்திரம்னும் புரியலை
    தமிழ் மொழி ..எத்தனை பேர் தூய தமிழ் பேரை வச்சிக்கிட்டு அதன் அர்த்தம் கூட தெரியாமல் வளர்கிறார்கள் :(
    தமிழ் மொழியை வேறு யாரும் படை எடுத்து வந்து அழிக்க தேவையில்லை இந்த சுயநல போராளிகள் போதும் .
    சப்தபதி கிறிஸ்தவ திருமணங்களிலும் இருக்கே அதை திருமண பிரமாணங்கள் //wedding vows னு சொல்வோம் .
    எதைச்சொன்னால் உடனே விவாக முறிவு கிடைக்கும்னு இக்கால பொண்ணுங்களுக்கு தெரியும்க்கா :( சப்தபதிக்கும் வெட்டிங் VOWS க்கும் இப்போ இவர்கள் மதிப்பு கொடுப்பதில்லை
    சமீப காலமா இந்த லெஹெங்கா அனார்கலி எல்லா திருமணங்களிலும் காண்கிறேன் அதை அத்தனை விலை குடுத்து வாங்கி மறுபடியும் அணிய சான்ஸ் அமையுமானு யோசிக்கக்கூட மாட்டாங்க. சரி இத்தனை லட்சம் செலவு செய்து வாழ்நாள் முழுதும் பிரியாமல் இருந்தா ஓகே .ஒரு ஆண் கிறிஸ்டியன் பெண் இந்து பிராமின் இவர்கள் கிறிஸ்தவ பிராமண இரு முறைகளிலும் உடை சம்ப்ரதாயம் எல்லாம் செய்து /அணிந்தது சந்தோஷமா கல்யாணம் பண்ணாங்க 2 வருஷம் கூட வாழலை பிரிவு .

    ReplyDelete
    Replies
    1. பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்ணே வேறே மாதிரி என்று என் கருத்து! மற்றபடி கிறித்துவத் திருமணங்களிலும் கணவன், மனைவி இருவருமே உறுதிமொழி எடுப்பது உண்டு என்பதை நேரில் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். விவாகரத்து என்பது இப்போதெல்லாம் சர்வ சகஜமாக இருக்கிறது. இரு தரப்புப் பெற்றோரும் லட்சக் கணக்கில் செலவு செய்து திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் ஆறே மாதத்தில் மண முறிவு ஏற்படுகிறது.

      Delete
  3. பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தால்தான் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமாக இருக்கிறது இது இந்தியாவில் மட்டுமே சாத்தியமானது என்று குருமூர்த்தி 'தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?' கட்டுரையில் சொல்லி இருந்தார்.

    ReplyDelete
    Replies
    1. @ஶ்ரீராம், ஆமாம், குருமூர்த்தியும் சொல்லி இருந்தார்.

      Delete
  4. ஏழடிகளுக்கும் பொருள் சொல்லி இருப்பது அருமை. ஏஞ்சல் பின்னூட்டம் கிறிஸ்தவ முறையிலும் சப்தபதி (போன்று) இருப்பது என்பது ஆச்சர்யம். இப்போதெல்லாம் எல்லாமே அவசரம். எதைக்கண்டு ஆசைப்பட்டு சேர்கிறார்கள் என்றும் புரிவதில்லை. எதைக்கண்டு பிரிகிறார்கள் என்றும் தெரிவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. இதை அப்படியே தமிழில்வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும் உடனிருப்பேன் அப்படின்னு கையை பிடிச்சி பிரமாணம் எடுப்போம்
      இதில் ஆயர் சொல்வார் இறைவன் இணைத்த இவர்களை மனிதன் பிரிக்காதிருப்பானாக என்று ..ஆனா எல்லா டைவர்ஸும் court plus கோட்டு போட்ட மனுஷங்களால்தான் நடக்குறது :(

      Delete
    2. ஶ்ரீராம், சப்தபதியின் பொருள் ஏற்கெனவே எழுதி இருக்கேன். அதிலிருந்து எடுத்துப் போட்டது தான் இது! :)

      Delete
    3. ஏஞ்சல் சொல்வது போல் உறுதிமொழி கணவன், மனைவி இருவரும் எடுப்பார்கள் என்பதை என்னுடைய ஆசிரியரின் திருமணம், மற்றும் தோழியின் திருமணம் ஆகியவற்றில் கண்டிருக்கிறேன்.

      Delete
  5. இப்போதைய காதல்களில் காதல் இருப்பதில்லை. அந்தச் சொல்லின் பொருளே மாறி விட்டது!!

    ReplyDelete
    Replies
    1. ஹையோ ஸ்ரீராம் ஓடிப்போய்க் கட்டிலுக்குக் கீழ ஒளியுங்கோ:) ஹையோ கல்லெறி வரப்போகுது:)).. ஹா ஹா ஹா இல்ல என்னால ஒட்டுமொத்தமாக முந்தைய காதல் முந்தைய திருமணம் எனப் பிரிச்சுப் பார்க்க முடியாது.. இரண்டிலும் இரண்டும் இருக்கு... இப்பவும் மிகவும் அந்நியோன்யமான காதலர்களும் இருக்கிறார்கள்.. முந்தின காலத்திலும் பெற்றோருக்குப் பயந்து காதலைக் கைவிட்டு வேறு மணம் முடிச்சு வாழ்ந்தோரும் இருக்கின்றனர் எனத்தான் நான் ஜொள்ளுவேன்:).. நேக்கு நீதி நேர்மை கடமை எருமை:) தேன்ன்ன்ன் முக்கியம்ம்ம்:))

      Delete
    2. ///ஆனால் இன்றைய புதுமைப் பெண்ணுக்கு சுதந்திரம் என்பது கட்டற்றதாகவே இருக்கிறது. பெண்களின் திருமண வயதும் 30க்கு வந்து விட்டது.//

      இது ஒரு விதத்தில் பெண்களுக்கான சாபம் எனக்கூடச் சொல்லலாம்.. முன்பு 14,15 வயதில் திருமணம் அதுவும் தபு.. இப்போ மிகவும் தாமத திருமணம் இதுவும் தப்பு.. இடையில் சிலரே உரிய வயதில் மணம் முடித்து வாழ்வை என் சோய் பண்ணுகின்றனர்.

      அதே போல ஒரு காலத்தில் பெண்குழந்தைகளைக் கொன்றார்கள்.. பெண்களை ஓவரா அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்... அதிலிருந்து மீட்கவே.. பெண்களை மிக உயர்த்தி ... பெண்குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிலிருந்து வெளியே கொண்டுவர நிறையப்பேர் பாடுபட்டனர்.. அது தராசு இப்போ இந்தப் பக்கம் ஓவரா சாய்ஞ்சு .. இப்போ நின்று பிடிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கு ஓவர் சுகந்திரம் எனும் பெயரில்...

      நமக்கு நாமே எல்லை வைத்து நடந்தால் ஒழிய இது ஒழியாது...

      Delete
    3. ஶ்ரீராம் இப்போது காதல் இல்லை. காமம் மட்டும்! :(

      Delete
    4. அதிரடி, ஹாஹா, 14,15 எல்லாம் இல்லை. என்னோட அம்மாவழிப் பாட்டி 5 வயதில் திருமணம் ஆனவர்! :))))) இப்போதெல்லாம் பெண் 30 வயதுக்கு முன்னர் திருமணம் குறித்துச் சிந்திப்பதில்லை என்றே நினைக்கிறேன். எல்லோரும் வாழ்க்கையில் நிலைத் தன்மை வேண்டும் என்கின்றனர். அது எப்படி எனில் பொருளாதார நிலைத் தன்மை! பாங்க் பாலன்ஸ், சொந்த வீடு, கார் போன்றவை! அதோடு புக்ககத்தில் இருந்தும் தொந்திரவுகள் வரக் கூடாது. பொறுப்புக்களைச் சுமக்க முடியாத பெண்களே இப்போது அதிகம்!

      Delete
    5. ///என்னால ஒட்டுமொத்தமாக முந்தைய காதல் முந்தைய திருமணம் எனப் பிரிச்சுப் பார்க்க முடியாது///

      இதில முந்தைய காதல்.. இப்போதைய காதல் என வந்திருக்கோணும்.. மாறி இரண்டுமே முந்தையதாகிவிட்டது.... தடங்கலுக்கு வருந்துகிறேன்:)

      Delete
  6. ரொம்பவே ஆதங்கப்பட்டுள்ளீர்கள். ரொம்பவே பயமுறுத்துகிறீர்கள்.

    'சப்தபதி' கான்சப்ட் அறிந்ததே. 'கைத்தலம் பற்றுதல்' என்ற கான்சப்ட் இப்போ கிடையாது (அதாவது திருமணத்தின்போது மணப்பெண்ணின் தந்தை, தன் மகளின் கையை மாப்பிள்ளையின் கையோடு சேர்த்து தாரைவார்ப்பது. என் மாமனார் எங்கிட்ட, பெண்ணை கல்யாணத்தும்போதுதான் நான் கையை சேர்த்து தாரை வார்க்கணும், மறந்து கையைப் பிடிச்சிடாதீங்கோ. மேலயும் பட்டுடாதீங்கோ' என்று திருமண ரெஜிஸ்டர்-நாங்கள் மாலையும் கழுத்துமா நிக்கறச்சே- செய்யும் சமயத்தில் சொன்னார்-பாஸ்போர்ட், விசாவுக்காக இதைச் செய்தோம்)

    ReplyDelete
    Replies
    1. ///'கைத்தலம் பற்றுதல்' என்ற கான்சப்ட் இப்போ கிடையாது (அதாவது திருமணத்தின்போது மணப்பெண்ணின் தந்தை, தன் மகளின் கையை மாப்பிள்ளையின் கையோடு சேர்த்து தாரைவார்ப்பது. ///

      இது இப்பவும் எங்கள் திருமணங்களில் இருக்குதே நெல்லைத்தமிழன்..

      அப்பா.. மகளின் கையைப் பிடிச்சு மாப்பிள்ளையிடம் கொடுத்து ... அப்படியே மகள் கையையும் மாப்பிள்ளை கையையும் சேர்த்தபடி பிடிச்சிருக்க.. அம்மா தீத்தம் எடுத்து அக் கைகளுக்கு தெளித்து விட்டு... தாரை வார்த்துக் கொடுத்தல்..

      ஆனா இந்த சொல்லே எனக்குப் பிடிப்பதில்லை.. அந்நேரம் கண்ணால கண்னீர்தான் பொலபொல எனக் கொட்டும் இதை எழுதும்போதே கண்ணீர் மறைக்குது... அது எதுக்கு தாரை வார்த்துக் குடுக்கோணும்... திருமணம் கட்டிக் குடுத்தாலும் அப்பா அம்மாவோடும் ஒட்டி உறவாடப் போகிறோம் தானே.... இந்த முறை எனக்குப் பிடிக்கல்ல.. மாற்றப்படோணும் இச் சம்பிரதாயம்:)..

      Delete
    2. /// என் மாமனார் எங்கிட்ட, பெண்ணை கல்யாணத்தும்போதுதான் நான் கையை சேர்த்து தாரை வார்க்கணும், மறந்து கையைப் பிடிச்சிடாதீங்கோ. மேலயும் பட்டுடாதீங்கோ' என்று//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)) நெல்லைத்தமிழனைப் பார்த்து, மகளை ஏதும் பண்ணிடப்போறாரே எனப் பயந்திட்டாரோ ஹா ஹா ஹா:)

      Delete
    3. உங்களுக்குப் பிடிக்காததை எழுதறேன். இந்திய சம்ப்ரதாயப்படி பொதுவா பெண் என்பவள் ஒரு ஆணின் பாதுகாப்பில்தான் வாழ்க்கை முழுவதும் இருக்கணும். திருமணம் ஆகும்வரை அப்பா. அதன் பிறகு அவளது கணவர். அதனால்தான், அந்தப் பெண்ணை, 'இதுவரை நான் பார்த்துக்கொண்டேன். இனி நீங்கள் பார்த்துக்கொள்ளவேணும். அவள் கையை உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று சொல்லும் முகமாக தாரைவார்த்துக் கொடுக்கிறார். ஒரு பொருளை தண்ணீர் தெளித்து (தாரை வார்த்து) கொடுத்தால், அந்தப் பொருளின் உரிமையாளன், வாங்கிக்கொண்டவனாகிறான். திருமணம் ஆனவுடன் பெண்ணின் மீதான உரிமை, கணவரிடம் செல்கிறது, அப்பாவிடமிருந்து. அதற்குப் பின், அவள், கணவனின் சொல்லுக்குத்தான் கட்டுப்பட்டவள் என்பது அதன் அர்த்தம்.

      Delete
    4. மகளை ஏதும் பண்ணிடப்போறாரே - அவர் என் ப்ரொஃபசர். எங்கள் குடும்ப நண்பர் (அப்போதே 30+ வருடங்களுக்கு மேல்). ரெஜிஸ்டிரார், இவங்கதான் தம்பதிகளா என்று கேட்டு, 'பக்கத்துல நில்லுங்க அல்லது கையைப் பிடிங்க' என்று ஏதேனும் சொல்லி, தவறுதலா நான் கையைப் பிடித்திடுவேனோ என்ற எண்ணத்தில் சொல்லியிருப்பார். (அதுவும் தவிர, ஓரிரு வருடங்கள் வெளி நாட்டு வாழ்க்கை அப்போது, அதனாலும் சொல்லியிருக்கலாம்). மற்றபடி நீங்கள் எதிர்பார்க்கும் 'மசாலா' இதில் கிடையாது.

      Delete
    5. வாங்க நெ.த. கைத்தலம் பற்றுதல் இப்போதும் தாரை வார்த்துக் கொடுத்து கோத்திரம் மாற்றும்போது பெண்ணின் அப்பா தன் பெண்ணின் கையை மாப்பிள்ளையிடம் கொடுத்துப் பெண்ணின் அம்மா நீர் வார்க்கக் கண்ணீருடன் தாரை வார்ப்பது நடக்கிறது. டிசம்பரில் நடந்த அண்ணா பெண்ணின் திருமணத்திலும் நடந்தது. அதற்கு முன்னர் மூன்று தலைமுறைகளின் பெயரைச் சொல்லி இன்னாரின் கொள்ளுப் பேத்தி,இன்னாரின் பேத்தி, இன்னாரின் பெண் என்று சொல்லி இந்தப் பெண்ணை இன்னாரின் கொள்ளுப் பேரன், இன்னாரின் பேரன், இன்னாரின் குமாரனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுக்கப் போகிறோம் என அறிவிக்கின்றனரே! அதன் பின்னரே தாரை வார்த்தல்! கைத்தலம் பற்றுதல்! ரொம்ப ஆசாரமான குடும்பங்களில் இந்தக் கைத்தலம் பற்றுதல் வரும் வரை மாப்பிள்ளை, பெண்ணின் கையைத் தொட முடியாது. சமீப காலங்களில் ஊஞ்சலில் இருந்து மண மேடைக்குப் போகும்போது கையைப் பிடித்துக் கொள்ளச் சொல்கின்றனர். ஆனாலும் ஒரு சில குடும்பங்களில் பெண்ணின் கையை அவள் மாமியாரும், பிள்ளையின் கையை அவர் மாமியாரும் பிடித்துக் கொண்டு அழைத்துச் சென்று மணமேடைக்குக் கொண்டு விடுவார்கள். அதன் பின்னரே கைத்தலம் பற்றுதல். தென்னிந்தியத் திருமணம் குறித்து ஏற்கெனவே எழுதி வந்தேன். இன்னும் சில சேர்க்க வேண்டி இருப்பதால் அவற்றையும் சேர்த்த பின்னர் மின்னூலாக வெளியிட எண்ணம்.

      Delete
    6. அதிரா சொல்லுவது சரியே!

      Delete
    7. //உங்களுக்குப் பிடிக்காததை எழுதறேன். இந்திய சம்ப்ரதாயப்படி பொதுவா பெண் என்பவள் ஒரு ஆணின் பாதுகாப்பில்தான் வாழ்க்கை முழுவதும் இருக்கணும்.// இது எல்லோருக்கும் தெரிந்தது தானே! எனக்குப் பிடிக்காது என்று எப்படிச் சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை கணவனின் கருத்தும், மனைவியின் கருத்தும் மாறுபடலாம். மாறுபடும். மாறுபட வேண்டும். ஆனால் இரண்டையும் ஆராய்ந்து பார்த்து எது சரியோ அதை இருவரும் ஒத்துக் கொள்ள வேண்டும். எங்க வீட்டில் அப்படித் தான் நடந்து வருகிறது. யாரானும் என்னிடம் மதுரையா, சிதம்பரமா என்று கேட்டால் நான் திருசெங்கோடு என்றே சொல்லுவேன்.

      Delete
    8. திருமணம் ஆகும் வரை தந்தை, அதன் பின் கணவன், பின்னர் மகன்! அதைச் சொல்லாமல் விட்டுட்டீங்களே நெ.த. :)))))) பெரும்பாலான பெண்கள் தந்தைக்குப் பின்னர் கணவனுக்குத் தான் கட்டுப்படுவார்கள். கட்டுப்படுகிறார்கள். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இப்போதைய பெண்கள் இதில் சேர்த்தி இல்லை.

      Delete
    9. உங்களுக்குப் பிடிக்காததை எழுதறேன்.// - கீசா மேடம்... நான் எழுதியதில் பிழை. இது 'அதிரவை' நோக்கிச் சொன்னது. இந்தத் தலைமுறைக்கு இந்த கான்செப்ட் பிடிக்காதுன்னு அனுமானம் செய்துகொண்டேன். நீங்கள் கூறியது சரி. கணவனுக்குப் பின்னர் (அப்படி ஒரு வாழ்க்கை எழுதியிருந்தால்) மூத்த மகன்.

      Delete
    10. //யாரானும் என்னிடம் மதுரையா, சிதம்பரமா என்று கேட்டால் நான் திருசெங்கோடு என்றே சொல்லுவேன்.
      ஐயோ! பெருமாள் முருகன் தயவால் தற்போது திருச்செங்கோட்டின் அர்த்தமே வேற. திருவானைக்காவல் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்க.

      Delete
    11. ///இது எல்லோருக்கும் தெரிந்தது தானே! எனக்குப் பிடிக்காது என்று எப்படிச் சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை.//

      ஹா ஹா ஹா கீசாக்கா .. அது எனக்கு சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்... எனக்கும் இது தெரியும் நெல்லைத்தமிழன்... ஆனா அப்படி செய்வது பிடிக்கவில்லை என்றுதான் சொல்கிறேன்.. அதுக்காக கணவர் பொறுப்பில் ஒப்படைப்பது தப்பு எண்டெல்லாம் சொல்ல வரவில்லை.. நமக்கும் அப்பா அம்மாவுக்குப் பின்.. கணவனின் பொறுப்பில் அடங்குவதுதான் பிடிச்சிருக்கு.. அப்படி வளர்க்கப்பட்டு விட்டோம்...

      ஆனா அச்செயல் ஏதோ ....உண்மையைச் சொல்லப் போனால்.. கடசியாக குட்பாய் சொல்லி அனுப்புவதைப்போல இருக்கும்... எதுக்கு அப்படி..எனத்தான் நினைக்கிறேன்.

      Delete
    12. நெ.த. அதிரா, புரிந்து கொண்டேன். நன்றி.

      ஜேகே அண்ணா பெருமாள் முருகன் எழுதியதால் திருச்செங்கோட்டின் பெருமை குறையவில்லை. குறையவும் குறையாது! மேலும் அது சில ஆண்டுகளுக்கு முன்னே பேசப்பட்ட ஒரு விஷயம். இப்போது அடங்கி விட்டதே! திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி ஞான ஸ்வரூபி!

      Delete
  7. அய்ய்ய்ய்ய்ய்ய் கீசாக்கா மகளிர் தின வாழ்த்துப் போட்டிட்டாஆஆஆஆ:)) ஆனா இன்றாவது மகளிரைத்திட்டாமல் ஒரு வாழ்த்துப் போட முடியல்லியே கீசாக்காவால கர்ர்ர்ர்:))...

    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அதிரடி, இது நம்ம பாணி!

      Delete
    2. அதிரடி, எல்லோருமே தப்பாய்ப் புரிஞ்சுட்டு இருக்கீங்களோ? :) நான் யாரையுமே திட்டவில்லை. இப்போதைய பெண்கள் வளர்ப்பைத் தான் சுட்டி இருக்கேன். ஆனால் பாருங்க, நல்லபடியா வளரப்படும் பெண்களையும் ஆண்கள் தொந்திரவு செய்யறாங்க காதல் என்னும் பெயரில். அந்தப் பெண் சம்மதிக்கலைனா கொல்றாங்க! :(

      Delete
  8. ///அந்தத் திருமணங்களில் சப்தபதி என்றொரு நிகழ்ச்சி நடக்கும். தாலி கட்டி முடிந்ததும் அது நடக்கும். தாலி கட்டியதும் திருமணம் முடிந்து விட்டதாகப் பெரும்பாலோர் நினைத்தாலும் சப்தபதி முடிந்தால் தான் திருமணம் முடிந்ததாக அர்த்தம். தாலி கட்டிய பின்னர் கூடப் பெண்ணோ, பிள்ளையோ திருமணம் வேண்டாம்னு போனால் அது சட்டரீதியாகச் செல்லுபடி ஆகும். ஆனால் சப்தபதி முடிந்த பின்னர் தம்பதிகள் சட்டரீதியாகப் பிரிவது கடினம். குறைந்தது ஒரு வருஷம் காத்திருக்கணும்.//

    இது சமய சம்பிரதாயம்தான் கீசாக்கா ஆனா இதில்... தாலிகட்டி முடிய நிறுத்தலாம் ஆனா சப்தபதி முடிஞ்சா நிறுத்த முடியாது என்கிறீங்க... அதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப்போகுது கண்டுபிடிக்க? புரிஞ்சு கொள்ள?..

    அப்படி எனில் தாலி கட்டி ஒரு மாத இடைவேளையாவது விட்டு.. கணவன் மனைவியை பேச விட்டு பின்னர் ஓகேயா எனக் கேட்டு சப்தபதி நடத்தி சாந்திமுகூர்த்தம் வைத்தால் அதை ஏற்றுக் கொள்ள முடியும்.

    பிரச்சனை எங்கு உருவாகிறது.. புரிந்துணர்வு இல்லாதபோதுதானே... அப்போ புரிந்து கொள்ள ரைம் தேவை எல்லோ நிட்சயிக்கப்படும் திருமணங்களில்.

    நம் இடத்தில் ஒரு முறை இப்பவும் அப்படித்தான் இருக்கு.. சில அவசரமாக மாப்பிள்ளைக்கு லீவு இல்லை சட்டுப்பட்டென முடிக்கோணும் எனும் இடங்களில் மட்டும் கொஞ்சம் அவசரப்பட்டு விடுகிறார்கள்..

    மற்றும்படி முதலில் சொந்த பந்தங்களைக்கூட்டி ரெஜிஸ்ரேஷன் நடத்துவார்கள்.. இது பெண் வீட்டில் அல்லது ஹோலில் இல் நடக்கும்...

    பின்னர் குறைந்தது 6 மாத இடைவெளி விட்டு, அந்த இடைவெளியில் பெண்ணும் மாப்பிள்ளையும் பேச விடுவினம்.. மாப்பிள்ளை, பெண் வீட்டுக்கு வந்து நேரடியாகவும் பேசிப்போவார்... பின்னரே திருமணம் நடக்கும்.. இந்த இடைவெளியில் கருத்து வேற்றுமை வந்து பிரிய நினைப்பின் பிரியலாம்...

    இதை எல்லாம் தாண்டி, திருமணம் முடிச்ச பின் குறை சொல்லிப் பிரிந்தால் அதை ஒண்ணும் பண்ண முடியாது!!..

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தாலி கட்டி முடிந்த பின்னரும் திருமணங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் சப்தபதி முடிந்த பின்னரும் மாப்பிள்ளை வீட்டாரோ, பெண் வீட்டாரோ கோபத்தினால் மற்றச் சடங்குகளை நிறுத்தினாலும் அந்தத் திருமணம் நடந்து முடிந்து விட்டதாகவே பொருள். அதைத் தான் சொல்ல வந்தேன். மற்றபடி தாலி கட்டியதும் இருவரையும் ஒரு மாத இடைவெளி விட்டுப் பேச வைத்துப் பின்னர் சப்தபதி எல்லாம் நடத்த மாட்டாங்க! தாலி கட்டுதல் என்பது திருமணத்தில் முக்கியம் என்றெல்லாம் இல்லை. சப்தபதிக்கே முக்கியத்துவம்! உணர்வு பூர்வமாகப் பெண்கள் தாலிக்கும் திருமங்கல்யத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவ்வளவு தான்.

      Delete
    2. அதிரா, அதோடு இல்லாமல் ஒரு மாத இடைவெளி விட்டுக் கணவன், மனைவியைப் பழக விட்டு சாந்தி முஹூர்த்தம் நடத்துவது என்பது எழுபதுகளின் கடைசி வரை நடந்து வந்தது. என் திருமணத்திலும் அப்படியே நடந்தது. ஆனால் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் கணவன், மனைவி தனியாச் சந்திக்கவோ பேசவோ விடமாட்டார்கள். கண்குத்திப் பாம்பாகப் பார்த்து எச்சரிக்கைக் குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

      Delete
    3. அதிரா, மற்றபடி இப்போதெல்லாம் ஜாதகப் பொருத்தம் பார்த்தாலும் பெண்ணும், பிள்ளையும் முதலில் சாட்டிங், இ மெயில், ஸ்கைப் எனப் பார்த்துப் பழகிப் பின்னர் நிச்சயம் செய்து அதன் பின்னரும் ஆறு மாதம் போல் பழகிவிட்டுப் பின்னரே திருமணங்கள் நடக்கின்றன. அப்படி நடக்கும் திருமணங்கள் தான் விவாகரத்திலும், சண்டை, சச்சரவிலும் முடிகின்றன. என்னோட திருமணம் பெண் பார்த்துப் பதினைந்தே நாட்களில் நடந்தது! மே மாதம் ஒன்றாம் தேதிப் பெண் பார்த்து நிச்சயம். மே பதினேழாம் தேதி திருமணம்! :)

      Delete
    4. //ஒரு மாத இடைவெளி விட்டுக்// - கீசா மேடம்.. இது என்ன புதுத் தகவல். இப்படி நான் கேள்விப்பட்டதேயில்லை.

      பழைய திருமணங்களில் (இப்போவும் தீக்ஷிதர்கள் வீடுகளில் நடக்கிறது), சிறிய வயதிலேயே 'கன்னி தானம்'. கணவன் மனைவி பேசலாம் எல்லோரும் இருக்கும்போது. அவளுக்கு அதற்கான வயது வந்தபிறகு, தனியாக இதனை நடத்துவார்கள். நான் இப்படி ஒரு நிகழ்வை சென்னையில் (அதாவது, சிறு பெண் கணவன் வீட்டில் இருக்கிறார். அவர்கள் அக்னிஹோத்திரி, தீக்ஷிதர்கள்) பார்த்திருக்கிறேன்.

      இந்த மாதிரி சம்பிரதாயம் இல்லாமல், என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள், உன்னை அமெரிக்காவுக்கு அனுப்புகிறேன் என்று உறவினர்களுக்குள் ஒப்பந்தம் ஏற்பட்டு, பெண்ணை 9ம் வகுப்பு படிக்கும்போதே திருமணம் செய்துகொடுத்து, பிறகு உரிய காலத்தில் (அமெரிக்கா சென்று பையன் இதற்காகத் திரும்பினான்) 'சாந்தி' நடந்ததையும் அறிவேன். இது 80ல்.

      Delete
    5. உண்மைதான் கீசாக்கா எந்தப் பக்கம் போனாலும் உதைக்குது:).. உண்மையைச் சொல்லப்போனால்ல்.. முந்தைய காலம் சகித்துக் கொண்டு வாழ்ந்தார்கள்.. இப்போ சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்த ஆரும் ரெடியில்லை.. அதனாலேயே விவாகரத்து... 100 க்கு 100 வீதம் அனைத்துமே கரெக்ட்டாக இருக்கோணும் என எதிர்பார்க்கின்றனர் போலும்..

      Delete
    6. நெ.த. எங்கள் குடும்பத்தில் திருமணத்தன்றே சாந்தி முஹூர்த்தம் செய்ய மாட்டார்கள். மேலும் அது பெரும்பாலும் பெண்களின் புக்ககங்களிலேயே நடைபெறும். வைதிக காரியங்கள் மட்டுமே நான்கு நாட்கள் நடைபெறும். எங்களுக்குத் திருமணத்தன்று மாலையும் நடந்ததால் அப்புறமா கிரஹப்ரவேசம், ஸ்தாலிபாகம் போன்றவை புக்ககத்தில் நடந்தது. இவை தொடங்கும் முன்னர் முதலில் அங்கேயும் மாலை மாற்றும் வைபவம் நடத்தப்பட்டது. இதைக் குறித்து விரிவாக 2012-13 ஆண்டுகளில் எழுதி இருக்கேன். கல்யாணங்களிலேயே வைதிகம் தான் முக்கியம் என்பார்கள். அப்படியே எங்களுக்கு நடத்தப்பட்டது!

      Delete
    7. இப்போதைய திருமணங்களில் முதல் நாள் நடக்கும் விரதம், நாந்தி போன்றவை கூடக் கல்யாணத்தன்று காலையிலேயே அவசரம் அவசரமாகச் செய்யப்படுகிறது. கல்யாணத்தன்று சப்தபதி முடிந்ததுமே எல்லாம் முடிந்து விடுகிறது. அதன் பின்னர் வைதிகர்களுமே மண்டபங்களில் இருப்பதில்லை!

      Delete
  9. மகளிர் தின வாழ்த்துகள் மா...

    ReplyDelete
  10. பிறகு வருவேன்...

    ReplyDelete
  11. வணக்கம் ஏழடி பெருமையை விளக்கிய விதம் அழகு

    உண்மைதான் நமக்கு ஹிந்தி வேண்டாம் ஆனால் அவர்களுடைய கலாச்சாரத்தை புதுமை என்ற பெயரில் காப்பியடிப்பது நியாயமா ?

    தமிழ், கலாச்சாரம், பண்பாடு, மொழி என்று கூவுவது வெற்றுக்கூச்சல்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, தமிழ், கலாசாரம் என்பதெல்லாம் இப்போ எங்கேனு தேடணும்! :)

      Delete
  12. பெண் சுதந்திரம் அர்த்தமற்ற போக்கில் போய்க் கொண்டு இருக்கிறது இது அழிவையே தரும்.
    பாரதி ஆசைப்பட்டது இதற்கல்ல... அது வேறு வகை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் கில்லர்ஜி, பாரதி ஆசைப்பட்ட பெண் சுதந்திரம் இதுவல்ல!

      Delete
  13. >>> இப்போதெல்லாம் ஆயிரம் நாட்கள் வாழ்ந்தாலே விழா எடுக்க வேண்டியதாய் உள்ளது..<<<

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................

    இப்போதெல்லாம் ஆயிரம் மணி நேரம் புருஷன் பொஞ்சாதியாய் இருந்தாலே
    விழா எடுக்க வேண்டியதாய் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார், நீங்க சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. இப்போதெல்லாம் கணவன், மனைவியாகச் சேர்ந்து இருப்பதே வெற்றி என்னும் வண்ணம் இருக்கு!

      Delete
  14. அதுங்க லெஹங்காவோ சோளியோ எதையாவது போட்டுக்கிட்டுப் போகட்டும்...

    வீட்டுக்குள்ள வர்றச்ச படியில அரிசி நெரப்பி கால் நுனியால எத்தி விடறது என்ன பழக்கம்!?...

    நெல்லோ அரிசியோ அல்லது எந்த மாதிரி தானியங்கள் ஆனாலும் சரி...
    வீட்டுக்குள்ள வந்தப்புறம் கால்ல பட்டுடுத்துன்னா பதறிப் போய்டுவாங்க!...

    அதிலயும் பத்து இருபது வருசங்களுக்கு முன்னால வீட்டுக்கு வீடு மரக்கால், படி, நாழி இதெல்லாம் இருக்கும்...

    அதை மகாலச்சுமிக்கு சமானமா மதிப்பாங்க...
    ஓரளவுக்கு கஷ்டம் இருந்தாலும் பஞ்சம் இல்லாம இருந்துச்சு...

    Packed Items (Life) ஆக, ஆகிப் போன
    இந்தக் காலத்துல வீட்டுல உள்ள புள்ளைங்களுக்கு
    ஏன் - அதுங்களைப் பெத்தவங்களுக்கே
    மரக்கால் படி ... ந்னா என்னான்னு தெரியாது...

    ஏதோ பித்தாளை..ல செஞ்ச டப்பா...ன்னு நெனைக்காங்க!...

    அதனால தான் காசு பணம் யதேஷ்டமா இருந்தாலும்
    நல்ல வாழ்க்கைக்கு பஞ்சமா இருக்கு!..

    ReplyDelete
    Replies
    1. // வீட்டுக்குள்ள வர்றச்ச படியில அரிசி நெரப்பி கால் நுனியால எத்தி விடறது என்ன பழக்கம்!?...

      நெல்லோ அரிசியோ அல்லது எந்த மாதிரி தானியங்கள் ஆனாலும் சரி...
      வீட்டுக்குள்ள வந்தப்புறம் கால்ல பட்டுடுத்துன்னா பதறிப் போய்டுவாங்க!...//

      எனக்குக் கூட இது தோன்றி இருக்கிறது. நான் வெட்கிய ஒரு கணம் பற்றி ... கொஞ்ச நாட்களுக்கு முன்னால் என் உயர் அதிகாரியுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். உண்ணும் பொருள் கொஞ்சம் சிந்தி விட்டது. அதிகாரியின் அறை என்பதால் சட்டென காலால் ஓரமாகத் தள்ளினேன். பதறிப்போன அவர் சட்டென நகர்ந்து வந்து கைகளால் எடுத்துக் கீழே போட்டார். விளக்கம் எதுவும் அவர் சொல்லவில்லை. சிதம்பரத்தில் அவருக்கு சொந்தமான நிலம் உண்டு. அங்கு அவரே விவசாயமும் செய்கிறார்.

      Delete
    2. இது உண்மைதான், உணவோ புத்தகமோ எதையுமே காலால் தொட்டிடக்கூடாது.. எனக்கு உணவை குப்பைக்கு மேலே கொட்டுவதுகூடக் கஸ்டமாக இருக்கும்.

      என் கணவர் தப்பித் தவறிக்கூட ஒரு பேப்பர் துண்டு ஒரு பொருள்.. எதையும் காலால் தொட்டிட மாட்டார்ர்.. எதையும் குனிஞ்சு கையாலேயே செய்வார்.

      தப்பித்தவறி ந்டந்து போகும்போது நம்மில் அவரது கால் முட்டி விட்டால்கூட எட்டித் தொட்டுமுகத்தில் வைத்துக்கொண்டு போவார்ர்... சிலசமயம் இழுத்து வச்சு அவர் காலுக்கு கிரீம் பூசி விடுவேன் அப்போது உடனேயே கையைத்தாங்கோ கையைத்தாங்கோ எனச் சொல்லி தொட்டு முகத்தில் வைப்பார்ர்.. நான் கையைக் கொடுக்காமல் கொஞ்சநேரம் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடியதும் உண்டு ஹையோ ஹையோ:)..

      அவரிடம் பார்த்தே இப்போ எனக்கும் ஒரு பேப்பர் துண்டை தவறி மிதிச்சிட்டாலே நெஞ்சு துடிக்கும் தப்பு பண்னிட்டெனோ என...

      Delete
    3. //வீட்டுக்குள்ள வர்றச்ச படியில அரிசி நெரப்பி கால் நுனியால எத்தி விடறது என்ன பழக்கம்!?...//

      துரை சார், நான் அறிந்தவரையில் தெலுங்கில் ஒரு சிலரும் பெரும்பாலான வங்காளிகளுமே இந்த வழக்கத்தைக் கடைப்பிடிப்பார்கள். அரிசி வீடு முழுதும் சிதறுவது போல் நிரம்பி இருப்பது போல் அவள் வாழ்க்கையும் எல்லா நலங்களும் பெற்று வீடு முழுதும் சந்தோஷத்தால் நிரம்பவேண்டும் என்ற பொருளில் செய்வார்கள் எனக் கேள்வி. உறுதியாய்த் தெரியாது.

      Delete
    4. என்னைப் பொறுத்தவரை எந்தப் பொருளையும் காலால் எட்டி உதைப்பதில்லை. யார் மீதாவது கால் பட்டால் கூடக் கண்ணில் தொட்டு ஒத்திக் கொண்டு விடுவோம். அதிரா சொல்வது போல் மனது பதறும்.

      Delete
  15. சப்தபதி சடங்கு விளக்கம் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், பல மாதங்களுக்குப் பின்னர் காண்பதில் மகிழ்ச்சி.

      Delete
  16. திருஇ பொ ஞானப்பிரகாசம் எழுதி இருக்கும் பதிவைப் பாருங்கள் தளம் அகச் சிவப்பு தமிழ் பெண்ணியம் பற்றி நூதன குறளில்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, பார்த்துட்டேன், நன்றி.

      Delete
  17. ஒன்னும் சொல்றதுக்கில்ல.

    ReplyDelete
  18. இதுவரை இப்படி ஒரு மகளிர் தின வாழ்த்து பார்த்ததில்லை. பாரதியின் பாடலில் துவங்கி, இன்றைய திருமணம் மற்றும் மண வாழ்க்கையின் அபத்தங்கள், சப்தபதியின் பொருள் என்று பல்வேறு திசைகளில் பயணிக்கிறது உங்கள் கட்டுரை.

    பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் பெண் கல்வி மறுக்கப்பட்டது என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வேத காலத்திலேயே மைத்ரேயி, கார்க்கி போன்றவர்கள் படித்திருக்கிறார்கள், கபிலர் முதல் முதலாக உபதேசம் செய்தது தன்னுடைய தாய்க்குத்தான் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மதுரா விஜயம் எழுதிய கங்கா தேவி உட்பட அவர்கள் எல்லாம் விதிவிலக்குகள்தான். விதி விலக்குகள் உதாரணங்கள் ஆக முடியாது.

    எங்கள் குடும்பத்தில் என் மூத்த மாமிகள் இருவரும் ஆரம்ப பள்ளியைத் தாண்டவில்லை. ஆனால், என் மூத்த மாமி, ரீடர்ஸ் டைஜஸ்ட் எல்லாம் படிப்பார். இரண்டாவது மாமிக்கு சுந்தர காண்டம், சௌந்தர்ய லஹரி, மூக பஞ்ச சதி போன்றவை மனப்பாடமாக தெரியும். இவையெல்லாம் அவர்கள் தங்களின் சுய ஆர்வத்தில் கற்றுக் கொண்ட விஷயங்கள். அப்படி பல பெண்கள் உண்டு. இதனால் அவர்களுக்கு படிப்பு அளிக்கப் பட்டது என்று கூறி விட முடியுமா?

    அந்தக் காலத்தில் படிக்க அனுமதிக்கப்பட்ட, எழுத படிக்க தெரிந்த பெண்கள் என்றல் அவர்கள் தேவதாசி இனத்தவர்தான்.

    சப்தபதி மந்திரங்கள் நல்ல பொருள் பொதிந்தவைதான், ஆனால், ஐந்து, அல்லது பத்து வயது சிறுமிக்கும், பதினைந்து வயது பையனுக்கும் திருமணம் நடக்கும் பொழுது, அவற்றின் பொருளை புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருக்குமா?

    //தாலி கட்டியதும் திருமணம் முடிந்து விட்டதாகப் பெரும்பாலோர் நினைத்தாலும் சப்தபதி முடிந்தால் தான் திருமணம் முடிந்ததாக அர்த்தம்.// உண்மையில் சப்தபதி முடிந்த பின்னரும் கூட திருமண சடங்குகள் முடிவதில்லை, பிரவேச ஹோமம் முடிந்து, அருந்ததி பார்த்த பின்னர் கணவன் வீட்டில் இருக்கும்மூத்த ஆண்மகனிடம், "என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவளாக ஏற்றுக் கொண்டு, உங்கள் குடும்ப சுக துக்கங்களில் பங்கேற்க அனுமதியுங்கள்" என்று பொருள் படும் ஒரு மந்திரத்தை கூற வேண்டும், அதற்கு அவர்,"ததாஸ்து(அப்படியே ஆகட்டும்)" என்று கூறுவார். இந்த சடங்கோடுதான் திருமணம் முடிகிறது என்று என் திருமணத்தின் பொழுது அதை நடத்தி வைத்த சாஸ்திரிகள் பொருள் கூறினார்.

    இரவில் திருமணம் நடத்தியதற்கு காரணம், திருமணம் நடக்கும் பொழுது வானத்தில் நட்சத்திரங்களை பார்க்க முடிவது உத்தமம்.(தாரா பலம், சந்திர பலம் என்று மந்திரங்களில் வரும்) அதனால்தான் அதிகாலை முகூர்த்தங்கள் சிறப்பானவை என்பார்கள். இப்போது கூட தெலுங்கர்கள், உ.பி.காரர்கள், மராட்டியர்,பஞ்சாபியர் போன்றவர்கள் இரவில்தான் திருமணம் நடத்துகிறார்கள். குறிப்பாக பஞ்சாபியர்களுக்கு திருமணம் முடிந்த மணமகள் புகுந்த வீட்டிற்கு செல்லும் போது வானத்தில் நட்சத்திரங்கள் தெரிய வேண்டுமாம்.

    பெண்களின் சாதனைகளை சொல்லியிருக்கலாம். எங்கிருந்து எங்கே வந்திருக்கிறோம்!!(நல்ல விதமாகத்தான் சொல்கிறேன்) அதை கொண்டாட வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. //பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர்தான் பெண் கல்வி மறுக்கப்பட்டது என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.// உ.வே.சா. கூட இதைப் பற்றி எழுதி இருக்கார். அதோடு நான் சொல்லும் தரம்பாலின் புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்துப் பார்க்கவும். தமிழிலும் "அழகிய மரம்" என்னும் பெயரில் புத்தகம் வெளி வந்துள்ளது. மற்றபடி சாதனையாளர்களைக் குறித்துப் பலரும் முகநூலிலும் மற்றப் பதிவுகளிலும் சொல்லி இருக்கின்றனர். இரவில் திருமணம் நடத்தியதற்குக் காரணம் என் அப்பா மற்றும் தாத்தா(அம்மாவின் அப்பா) ஆகியோர் கதை, கதையாகச் சொல்லி இருக்கிறார்கள்.

      Delete
    2. என்னிடம் பலரும் பொதுவாக இப்போதைய பெண்களைக் குறித்துச் சொல்லும் கருத்துக்களே இங்கே பகிரப்பட்டுள்ளன. எனக்கும் இத்தகைய மன வருத்தம் உண்டு என்பதால் இதை நான் பிறரின் கருத்துகள் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள முடியாது! ஏனெனில் பல நெருங்கிய குடும்பங்களின் சோகங்களையும் பார்த்து வருகிறேன். இதில் ஆண், பெண் இருபாலாருக்கும் பொறுப்பு இருக்கிறது.

      Delete
    3. பெண்கள் தினத்தன்று தான் இரு இளம்பெண்கள் அநியாயமாய் இறந்து போயிருக்கிறார்கள். எப்படிக் கொண்டாடுவது? அப்பாவிப் பெண்கள்! :( வாழ்க்கைனா என்னனு தெரியும் முன்னேயே கொல்லப்பட்டு விட்டார்கள்!

      Delete
    4. //எங்கிருந்து எங்கே வந்திருக்கிறோம்!!(நல்ல விதமாகத்தான் சொல்கிறேன்) அதை கொண்டாட வேண்டாமா?// என்னைப் பொறுத்தவரை தப்பாக எதையும் எடுத்துக் கொள்வதில்லை. ஆகவே தைரியமாக மனதில் நினைப்பதைச் சொல்லலாம். ஆனால் பெண்கள் இருந்த நிலைமையே வேறே! அது கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் தான் மாறிவிட்டது. ஆதாரங்கள் பல உள்ளன.அந்நியப் படையெடுப்பு, ஆங்கிலேய ஆட்சி போன்றவையே முக்கியக் காரணங்கள்!

      Delete
    5. //ஆனால் பெண்கள் இருந்த நிலைமையே வேறே! அது கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் தான் மாறிவிட்டது.// மூன்று, நான்கு நூற்றாண்டுகளில் தான் மாறி விட்டது! என்று வந்திருக்கணும். விட்டுப் போயிருக்கு!

      Delete
  19. பெண் சுதந்திரம் என்ற சொல்லுக்கான பொருள் பல்வேறு பரிமாணங்களில் மாற்றமடைந்து வருகிறது.

    ReplyDelete
  20. அருமையான பெண்ணியல் எண்ணங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி காசிராஜலிங்கம்

      Delete
  21. “அக்னி குஞ்சொன்று பொந்திடை வைத்தேன்
    வெந்து தணிந்தது காடு”
    என்பது பாரதியின் வாக்கு.
    சக்தி சொரூபமான பெண் அக்னி குஞ்சைப் போன்றவள்தான். சரியான கட்டுபாட்டில் இல்லாமல் போய்விட்டால் சமுதாயத்தையே அழித்து விடும். எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டியது யார்? அவ்வப்போது வழிகாட்டிய பெரியவர்கள் பாதையில் நம்பிக்கை வைத்து நடந்தால் நன்மை பிறக்கும். இல்லாவிட்டால் இது (பெண்ணுரிமை) எக்காலத்திற்கும் ஒரு விதண்டாவாதமாகவே இருக்கும். என்னுடைய கட்டுரை ‘வள்ளுவர் ஆணாதிக்கவாதியா’ என்ற கட்டுரையை பார்க்கவும். nirmal-kabir.blogspot.in ; JUly 2007

    ReplyDelete
    Replies
    1. வாங்க கபீரன்பரே, உங்கள் கட்டுரையைப் படிக்கிறேன். நீண்ட நாட்களுக்கு ஒருமுறை வருகை புரிவதற்கு நன்றி.

      Delete