எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, April 08, 2018

குஞ்சுலு ஊருக்குப் போயாச்சு!

நீண்ட தூக்கத்திலிருந்து முழிச்சாப்போல் இருக்கு! பதினைந்து நாட்களாக ஒரே ஓட்டம் தான். கிடைச்சதைச் சாப்பிட்டுக் கொண்டு, நேரம் இருக்கும்போது சமைத்துக் கொண்டு! என் வாழ்க்கையில் இப்படி ஒரு ஓட்டம், பாட்டம் இல்லை.  அன்றாட வேலைகளை எப்படியோ முடிச்சுடுவேன். ஆனால் இந்த முறை அது முடியலை! எல்லாம் குஞ்சுலுவால் தான்!

 குட்டிக் குஞ்சுலு வரப்போகும் செய்தி தெரிந்ததில் இருந்தே பரபரப்புத் தான்! ஓட்டம் தான். இதிலே பிப்ரவரி மாதம் திருப்பதி வேறே போக வேண்டி இருந்தது. மார்ச் மாதம் மாத்ருகயா செல்ல வேண்டி குஜராத் பயணம். அங்கே இருந்து வந்ததும் ஶ்ரீராமநவமி முடிச்சுட்டுக் குட்டிக் குஞ்சுலுவை வரவேற்கச் சென்னை பயணம்.  சென்னையில் குட்டிக் குஞ்சுலுவின் காதுகுத்து விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. குஞ்சுலு தான் அழுதது! என்றாலும் விடாமல் குத்தியாச்சு! அப்புறமா ஶ்ரீரங்கம் வந்தது குட்டிக் குஞ்சுலு! வந்ததிலே இருந்து கொட்டம் தான். எங்களை எல்லாம் நல்லா நினைவும் வைச்சுக் கொண்டிருந்தது. மறக்கலை! ஆனால் தூக்கக் கூடாது! தூக்கிக் கொஞ்சக் கூடாது!

வந்ததுமே கீழே இறங்கி வீட்டை எல்லாம் அதுவாவே தனியாப் போய் ஒவ்வொரு அறையாப் பார்த்துக் கொண்டது. அது பாட்டுக்கு ஏதோ பழகிய இடம் மாதிரி விளையாட ஆரம்பித்து விட்டது. ஒவ்வொரு நிமிஷமும் போனது தெரியலை. அதோடு இல்லாமல் குட்டிக் குஞ்சுலுவுடன் ஊர் சுற்றல் வேறே. குலதெய்வம் கோயில் மட்டுமில்லாமல் மற்றப் பிரார்த்தனைக் கோயில்களும் செல்ல வேண்டி இருந்தது. வீட்டில் இரவு படுக்கத் தான் வருகிற மாதிரி ஆயிடுத்து! எப்படியேனும் தினசரி மின்மடல்கள் இருக்கானு கணினியில் பார்ப்பேன். அது கூடப் பார்க்க முடியலை. யாருங்க, அது செல்ஃபோன் இல்லையானு கேட்கிறது? செல்ஃபோன் இருக்கு! அதில் ஒரு ஐடிதான் சேர்த்திருக்கேன். மற்ற ஐடிகள் முக்கியமாய் பிரைம் ஐடி எனப்படும் முக்கிய ஐடி சேர்க்கலை! வேண்டாம்னு தான்! :)))) ஆகவே கணினி கிட்டேயே போக முடியலை. மொபைல் டாட்டா மூலம் வாட்சப்கள், முகநூல் மட்டும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் பார்த்தேன்.

வெள்ளிக்கிழமை வரை நேரம் சரியாகப் போய்விட்டது. நேரம் போனது தெரியாமல் குஞ்சுலுவே எங்களை முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது.  குஞ்சுலு வந்து எங்களைத் தொடும், விளையாடும், ஆனால் நாங்க அதைத் தொடக் கூடாதாம். வீட்டில் இப்போ சாமான்கள் எல்லாம் வைச்ச இடத்தில் இருக்கின்றன. சேப்பங்கிழங்குக் கூடை குஞ்சுலு இல்லாமல் சோகத்தில் இருக்கு. உ.கி.யும். வெங்காயமும் விளையாடப் பட்டுக் குஞ்சுலு எங்கே என்று கேட்கின்றன. குஞ்சுலு தொலைபேசியை எடுத்து எண்களை அழுத்தி விட்டுத் தானே ஏதோ பேசும். தொலைபேசி இப்போ வைச்ச இடத்திலே இருக்கு. என் அலைபேசியில் குஞ்சுலுவுக்காக "வந்தே குருபரம்பராம்" யூ ட்யூப் தரவிறக்கிக் குஞ்சுலுவுக்குப் போட்டுக் கொண்டிருப்பேன். பிபரே ராமரசம் பாட்டும், ஹனுமான் சாலீஸாவும் குஞ்சுலுவின் மிக விருப்பமான பாடல்கள். இப்போ அதை எல்லாம் போடவே தோணலை. எங்கே பார்த்தாலும் குஞ்சுலு நின்று கொண்டு கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விரல் இடுக்கு வழியே எங்களைப் பார்த்துச் சிரிப்பது போலவே இருக்கு!

இல்லைனா சுவரில் மறைந்து கொண்டு எட்டிப் பார்த்துச் சிரிக்கும். கொஞ்சம் ஏமாந்தால் வாசல் கதவு வழியாக வெளித்தாழ்வாரத்துக்குப் போய் மாடிப்படிகள் கிட்டே போக ஆரம்பிக்கும். அதைக் கண்காணிப்பதே வேலையாக இருக்கும். இப்போ அதெல்லாம் இல்லை. நேரம் நிறையவே இருக்கு. மிக மிக மிக அதிகமாக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நேரம்! :(  இப்போதைக்கு சென்னையில் அவங்க பாட்டி வீட்டில் குஞ்சுலு இருக்கு. அப்புறமா நாலு நாட்கள் கழிச்சு அம்பேரிக்கா போயிடும். அங்கே போய் எங்களை எல்லாம் காணோமேனு நினைச்சு ஏங்குமோ? தெரியலை! இங்கே எல்லோரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு விளையாட அழைக்கும். பட்டுப்பாவாடை கட்டிவிட்டால் தட்டாமாலை சுற்றும்! அதுக்குப் பட்டுப்பாவாடை ரொம்பவே பிடிச்சிருக்கு!  நாங்க அம்பேரிக்காவில் குஞ்சுலுவை விட்டுட்டு வரச்சே ஒன்பது மாசம் ஆகி இருந்தது. இப்போ ஒன்றரை வயசு! இனி எப்போப் பார்ப்போமோ தெரியலை. ஸ்கைபில் பார்ப்போம் தான்! என்றாலும் நேரில் குஞ்சுலுவைத் தொட்டு விளையாடிக் கொஞ்சுவது போல் வருமா? :(

38 comments:

  1. ரொம்ப நல்லா உணர்வை எழுதியிருக்கீங்க. படமே போடாம இடுகையை வெளியிட்டுட்டீங்களே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை, உடல் நலம் பேணவும். படங்கள் எல்லாம் போட முடியாதே! :)))))

      Delete
  2. குஞ்சுலு ரொம்பவும் மனதை ஆக்கிரமித்து விட்டது போல்தெரிகிறது.

    உண்மையான பெயர் சொல்லில்லையே...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, பெயர் ஏற்கெனவே சொன்ன நினைவு. துர்கா என்பது உண்மையான பெயர். கூப்பிடுவது குஞ்சுலு, லட்டு, தங்கம், பட்டுக்குஞ்சுலு, கிளி என்றெல்லாம்! :)

      Delete
  3. குழந்தையும் பாவம், தாத்தா பாட்டிகளும் பாவந்தான் - உங்களது ஏக்கமிட்ட எழுத்தாயிற்று, அக்குழந்தையின் ஏக்கம் மறந்திடும் நாளாசரிதியில்

    ReplyDelete
    Replies
    1. வாங்க மௌலி, ஆச்சரியமான வருகை! கருத்துக்கு நன்றி.

      Delete
  4. பேத்தியின் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி.
    வீடு வெறிச் என்று ஆகி இருக்கும்.

    குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் வந்தால் உடம்பும் மனமும் ஓட்டம் தான்.
    நாட்களும் பறந்து போய் விடும்.

    குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

    காதுகுத்தும் போது அழும் போது எல்லோரும் சேர்ந்து பதறி பார்த்து பார்த்து என்று சொல்வதும் அழுவதும் இயற்கைதான்.

    ஆனால் சில பெற்றோர்கள் அழகு நிலையத்தில் வலிக்காமல் பேஸ்ட் தடவி குத்திக் கொள்கிறோம் என்கிறார்கள்.


    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, குழந்தை நடந்த, நின்ற, உட்கார்ந்த, படுத்த இடங்கள் என்றெல்லாம் பார்த்துப் பார்த்து நினைத்துக் கொள்கிறோம். பொன்னாசாரி வந்து தான் காது குத்தினார். நாங்க என்னோட பிறந்த/புகுந்த வீட்டுப் பழக்கப்படி நிறைநாழி வைக்கணும். ஆசாரிக்கு வேஷ்டி, துண்டு, பழங்கள், பக்ஷணங்கள், பணம், அரிசி, பருப்பு, வெல்லம், மட்டைத் தேங்காய் எல்லாம் வைச்சுக் கொடுப்போம்.

      Delete
    2. என் பையனுக்கு பெங்களூரில் காது குத்தினபோது, ஆசாரிக்கு அதிக ரூபாய் கொடுத்தேன் ஆனால் அவர் வாங்க மாட்டேன் என்று சொல்லிட்டார். இவ்வளவுதான் வாங்கணும் என்று அதை மட்டும் வாங்கினார்.

      Delete
  5. கீதாக்கா குஞ்சுலுவின் மீதாங்க உங்க பாசமும், அந்த உணர்வுகளும் மனதைத் தொட்டுவிட்டது அக்கா...ஹையோ நான் எப்படி எல்லாம் குழந்தைகளைக் கண்டு ஃபீல் செய்வேனோ அப்படியே...ரசித்து அப்படியே காட்சிகள் மனதில் விரிய வாசிச்சேன் கீதாக்கா....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, எனக்குச் சின்ன வயசில் இருந்தே தோழர்கள், தோழிகள் என்போர் அக்கம்பக்கம் வீட்டில் வளர்ந்த சின்னக் குழந்தைகளே! என் வயசுக்குகந்த தோழிகளுடன் விளையாடியது வெகு சொற்பம்! ஆகவே எப்போவுமே குழந்தைகள் என்றால் பிடிக்கும். இதுவோ பேத்தி! :))))

      Delete
  6. உங்கள் உணர்வுகளை நன்றாகவே புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் நம் குழந்தைகள் படிப்பதற்கு வேலைக்கு அப்புறம் திருமணம் என்று சின்னச் சின்ன வெற்றிடம் உருவாகும் அப்புறம் பேரன் பேத்திகள் இப்படி வந்து செல்லும் போது. இப்போது என் பிள்ளைகளும் ஒவ்வொருவராகப் படிக்க வெளியூர் செல்லும் போது வீட்டில் கொஞ்சம் வெற்றிடம் உருவாகிறது. உங்களின் குட்டிப் பேத்தி உங்கள் எல்லோரையும் தனக்குள் கட்டிப் போட்டுக் கொண்டுவிட்டார்!! அதனை அழகாகப் பதிந்திருக்கின்றீர்கள்.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசிதரன், பணி ஓய்வுக்குப் பின்னர் குடும்பத்துடன் பொழுது இனிமையாகக் கழிந்து வரும் என நினைக்கிறேன். எங்கள் பெண்ணை முதல் முதலாகக் கல்லூரியில் படிக்க என் அண்ணா வீட்டில் விட்டுவிட்டு நாங்க பட்ட கஷ்டம் சொல்லி முடியாது! அதுக்கப்புறம் திருமணம் ஆகிச் சென்றதும் முதலில் கஷ்டமாக இருந்தாலும் பெண்ணின் சௌக்கியத்தை நினைத்துத் தேற்றிக் கொண்டோம். அப்புறமாப் பிள்ளையும் யு.எஸ். அதன் பின்னரே தனிமை தான்! :))))

      Delete
  7. பதினைந்து நாட்கள் இன்பம். குஞ்சுலு நன்றாக இருக்கட்டும். இதெல்லாம் பழகினதுதானே கீதா.
    ஆனாலும் உங்கள் ஆதர்ச பேத்தி, நினைவு உங்களுடன் தான் இருக்கும்.
    அது அங்க போச்சுன்னா கொஞ்ச நாள் தெடும். சரியாகிடும்.

    நமக்கு அவர்களின் சௌக்கியம் போதும்.
    வலிக்காமலியே குத்தி இருக்கலாம் காதை.
    பாவம் மாமா சொல்லாமல் ,பேத்திய நினைத்துக் கொண்டிருப்பார்.
    பிரார்த்தனைகள் நிறைவேறியது சந்தோஷம்.
    ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நீங்க சொல்வது சரியே! இப்போதைக்கு ஓய்வு தான் எங்களுக்கும் தேவை!

      Delete
  8. உணர்வு பூர்வமான பகிர்வு. பிரிதல் - இப்போதெல்லாம் தவிர்க்க முடிவதில்லை. என்ன செய்ய.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், உங்கள் கருத்திற்கு நன்றி.

      Delete
  9. பேத்தி ஊருக்குப் போன சோகத்தை அழகாக ச் சொல்லி இருக்கிறீர்கள். பிபரே பாட்டெல்லாம் குஞ்சுலுவின் விருப்பமா? அட!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், ஆமாம், குஞ்சுலுவுக்கு ராகுல் வெல்லால்/வெள்ளாள் (??) பாடி இருக்கும் பிபரே ராமரசமும் சூர்யா காயத்திரியின் பிரம்மம் ஒகடே பாடலும், ஹனுமான் சாலீஸாவும் ரொம்பப் பிடிக்கும்.

      Delete
  10. // கைகளால் முகத்தை மூடிக் கொண்டு விரல் இடுக்கு வழியே எங்களைப் பார்த்துச் சிரிப்பது//

    அழகு....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கொள்ளை அழகு!

      Delete
  11. இன்றைய உங்கள் இந்தப் பதிவு இலக்கியநயம். மனதின் உணர்வுகள் வார்த்தைகளாகி இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஶ்ரீராம்.

      Delete
  12. பாசத்துடன் வர்ணனை கலக்கும்போது மிகவும் ரசனையாக இருக்கும் என்பதை இப்பதிவு உணர்த்தியது.

    ReplyDelete
  13. உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது,

    பார்வையிடவும்.

    ReplyDelete
    Replies
    1. தேடினேன், கிடைக்கலை!

      Delete
  14. இந்தக் குட்டிக்குஞ்சுலு சூப்பர் பேத்தியா இருப்பா போலருக்கே! ஒங்களப் பின்னியெடுத்துட்டு போயிருக்கு. அம்பேரிக்காவில இருந்தா என்ன, வேற எங்க இருந்தா என்ன.. ஒங்கள சும்மா விடப்போறதில்ல!

    பாசம் தேனாய் ஓடும் எழுத்து..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன் சார், குட்டிக்குஞ்சுலு எல்லா சாமிகளும் சேர்ந்து கொடுத்த வரம்! :))) பிள்ளைக்குத் திருமணம் ஆகிப் பதினோரு வருடங்களுக்கு அப்புறமாப் பிறந்திருக்கா! அதான்!

      Delete
  15. ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன் குழந்தைகளின் குணங்கள் சீக்கிரமே மாறி விடும் நாம்தான் அவர்களை என்றுமே குழந்தைகளாகப் பாவித்து பின் ஒவ்வொரு மாற்றம் வரும்போதும் வருந்துவோம்

    ReplyDelete
  16. குழந்தைகளின்மேல் நமக்கு உள்ள பிரியம், அவர்களைப் பிரியும் போது நமக்கு இப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அதுவும் பிள்ளை வழிக் குழந்தைகளுடன் அதிகம் சேர்ந்திருக்க வாய்ப்பும் உண்டாகி, இருந்து பிறகு இம்மாதிரி எல்லாம் உணர்வுகள். இந்தாங்கோ உங்கள் குஞ்ஜுலு என்று நேரில் கொண்டு விட முடிந்தால் நன்றாக இருக்கும். நீங்களும் முடிந்தபோது அம்பேரிக்கா போய்விட்டு வரலாம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.பாசக்கட்டுரைஇது. அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா. பொதுவாகவே கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டதால் இப்போப் பத்து வருஷங்களாக நாங்க தனியாக இருப்பது ஒரு மாதிரியாகவே இருந்தது. இப்போப் பழகி விட்டது. அது போல் இதையும் பழகிக்கணும். ஆனாலும் குஞ்சுலுவை ஸ்கைபில் பார்ப்போம்.

      Delete
  17. மிக மிகக் கஸ்டமான தருணம்.... கொஞ்ச நாளைக்கு நெஞ்செல்லாம் அடைக்கும்... என்ன செய்வது வெளிநாடு என்ற ஒன்று வந்ததினால் பெரும்பாலான குடும்பங்களில் இதுதான் சோகம்.... எனக்கும் இப்படி நிறைய அனுபவம் உண்டு... எங்கட அப்பா அம்மா.. மாமா மாமியும் இப்படித்தான் கலங்குவார்கள்.. கண்களை மூடினாலே குழந்தைகளின் முகம்தான் தெரியுது என்பினம்...

    “நாள் செய்வதுபோல் நல்லோர் செய்யார்”.. நாள் ஓடினால் எல்லாம் நோர்மலாகிடும். இதனால்தான் .. “வந்து கெடுப்பதை விட:) வராமல் இருப்பதே மேல்” எனவும் சிலசமயம் எண்ண வைக்கும்... புளொக்கில் நெட்டில் அதிக நேரம் செலவிட்டு எல்லோரோடும் சண்டை போடுங்கோ நோர்மலாகிடும்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா, நீங்க சொல்வது ரொம்ப சரி! மனசெல்லாம் வருத்தம், சோகம், என்றாலும் வெளிக்காட்டிக்கொள்ள முடியலை! வெளிநாட்டில் எல்லாம் எங்க பிள்ளைங்க இருப்பாங்கனு நாங்க நினைச்சுக் கூடப் பார்த்ததில்லை! என்ன செய்ய! கண்ணை மூடினாலும், மூடாட்டியும் குஞ்சுலு தான் தெரியறா! :(

      Delete
    2. //புளொக்கில் நெட்டில் அதிக நேரம் செலவிட்டு எல்லோரோடும் சண்டை போடுங்கோ நோர்மலாகிடும்..// ஹாஹாஹா, என்னோட சுபாவத்தை நல்லாப் புரிஞ்சு வைச்சு இருக்கீங்க! அது சரி, எங்கே உங்க செக்? காணவே காணோம் எங்கேயுமே! உடம்பு நல்லா இருக்காங்க தானே!

      Delete
    3. இதோ வந்திட்டேன்க்கா :)

      Delete
  18. கீதாக்கா
    பட்டுகுஞ்சுலுவுக்கும் கஷ்டமாத்தான் இருக்கும் இங்கே தன்னை சுற்றி அத்தனை பேர் இருந்தாங்களே எங்கேன்னு தேடும் பாவம் செல்லம் .
    பதிவை வாசிச்சப்போ என் மகள் தாத்தா பாட்டியுடன் இருந்த நாட்கள் வந்துபோனது .

    ReplyDelete