எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 06, 2018

சில, பல திப்பிசங்கள்!


கடுகோரை


சில, பல திப்பிசங்கள்! ஹிஹிஹிஹிஹி, இன்னிக்கும் மாங்காய் சாதம் தான் கலந்தேன். முன்னாடி படம் போட்டுக் காட்டின அதே மாங்காய் விழுது தான். ஆனால் இன்னிக்குக் கொஞ்சம் மாறுதலாச் செய்யணும்னு நினைச்சேன். இதோடு வெங்காயமோ, மசாலாவோ ஒத்துப் போகாது! மாங்காய்ச் சுண்டி என்று சொல்லும் குஜராத்தித் தொக்கிலோ அல்லது மாங்காய்த் துண்டங்களோடு வெல்லம் போட்டாலோ சோம்பு வறுத்துப் பொடி செய்து சேர்க்கலாம். அது ஊறுகாய்க்கு நல்லா இருக்கும். சப்பாத்தியோடு ஒத்துப் போகும். ஆனால் சாதத்தோடு? ஆகவே இன்னொரு வேலை செய்தேன்.

வீட்டில் ஏற்கெனவே வறுத்த வெந்தயப் பொடி இருந்தது. அதோடு புளிக்காய்ச்சலுக்காக வறுத்து அரைத்த பொடியும் வைச்சிருந்தேன்.  இன்னிக்கு மாங்காய்ச் சாதம் கலக்கையில் நல்லெண்ணெயில் தாளிதம் புதிதாகச் செய்து சேர்த்தேன். கடுகு, உபருப்பு, கபருப்பு, வேர்க்கடலை, ஒரு மி.வத்தல், கருகப்பிலை, பெருங்காயம், மஞ்சள் பொடி எல்லாமும் எண்ணெயில் போட்டுப் பொரித்துக் கொண்டு சமைச்ச சாதமும் தேவையான அளவுக்குப் போட்டுக் கொண்டு கால் டீஸ்பூனில் இருந்து அரை டீஸ்பூன் வரை உப்புச் சேர்த்தேன். பின்னர் வெந்தயப் பொடியும், புளிக்காய்ச்சலுக்கு வறுத்த பொடியும் போட்டேன். இத்தோடு சேர்த்து மாங்காய் விழுதையும் போட்டுக் கலந்து விட்டேன். நல்லாக் கலந்திருந்தது. சாப்பிடும்போது புளியோதரை ருசியாட்டமாவே இருந்தது. அதையே ரங்க்ஸும் ஆமோதித்தார். புளியோதரைப் பொடி செய்யறது எப்படினு சொல்லும் முன்னாடி அதுவும் ஒரு திப்பிச வேலைக்காகச் செய்ததே!

சில நாட்கள் முன்னர்  கடுகோரை செய்தேன். கடுகோரை லிங்க் மேலே இருக்கு!  அது நம்மவருக்கு அவ்வளவாப் பிடிக்காது. என்றாலும் சாப்பிட்டார். அன்னிக்குப் பாருங்க, என்ன ஆச்சுன்னா ஒரு மிளகாய் வத்தல் கூட ஆயிடுச்சு போல, காரமா இருந்தது. அன்னிக்கு எப்படியோ சாப்பிட்டாச்சு. ஆனால் இன்னொரு நாள் பண்ணறதுன்னா என்ன செய்யறது! மண்டை காய யோசிச்சு அதைப் புளிக்காய்ச்சலா மாற்றுவது என முடிவு பண்ணினேன். உடனே செயலாற்ற வேண்டாமா? ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்குப் புளியை எடுத்து ஊற வைச்சுச் சாறு எடுத்தேன். கல்சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு புளிக்காய்ச்சலுக்குத் தாளிக்கிறாப்போலவே ஒரே ஒரு மிளகாய் வற்றலைத் தாளித்துக் கொண்டேன்.

ஏற்கெனவே காரம் இருக்கு இல்லையோ! ஆகையாலே சும்மா வாசனைக்கு ஒரு மி.வத்தல். பெருங்காயம் போட்டுக் கொண்டு கடுகு கபருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடியும் உப்பும் சேர்த்தேன். புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்க விட்டேன். கொதித்து நல்லாச் சேர்ந்து வரும்போது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கடுகோரை விழுதைச் சேர்த்தேன். ஏற்கெனவே தயாரித்துச் சாப்பிட்டது தானே! அதனால் இப்போக் கொதிக்கிறதைக் கொஞ்சம் போல் எடுத்து ருசியும் பார்த்தேன். உப்பு, காரம் சரியாகி விட்டது. ஆனாலும் ஏதோ ஒண்ணு குறைந்தாற்போல் இருக்கவே ஒரு நெல்லிக்காய் அளவுக்கு வெல்லம் சேர்த்தேன். புளிக்காய்ச்சலில் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்தது. அடுப்பை அணைத்துக் கல்சட்டியோடு வைச்சேன். அதில் அணைச்ச பின்னரும் நீண்ட நேரம் கொதிக்கும். ஆகவே இப்போ அணைச்சாச் சரியா இருக்கும்னு அணைச்சேன்.

புளியோதரைப் பொடி என்ன ஆச்சுனு கேட்பவர்களுக்காக! அதைத் தயாரித்தேனே ஒழிய இதுக்குத் தேவையா இருக்கலை. எல்லாம் சரியாக இருந்ததால் பொடியை எடுத்து வைச்சிருக்கேன். பின்னர் பயன்படுத்திக்கலாம். இப்போப் பொடி தயாரிக்கும் முறை:

மி.வத்தல் 4 அல்லது 6, இரண்டு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, பெருங்காயம் ஒரு துண்டு இவற்றை எண்ணெயில் வறுக்கணும். அதுக்கு முன்னாடி வெறும் சட்டியில் கடுகு, வெந்தயம் போட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் சேர்த்துப் பொடி செய்து வைக்கவும். புளிக்காய்ச்சல் செய்து இறக்கும்போது இதைக் கொஞ்சம் போல மேலாகத் தூவி இறக்கவும். காரம் அதிகம் இல்லை எனில் சாதம் கலக்கும்போதும் கொஞ்சம் தூவிக்கலாம். புளிக்காய்ச்சலுக்குத் தேவையான மி.வத்தல் பாதியைத் தாளிக்கையிலும் மீதிப் பாதியை இம்மாதிரி வறுத்துக் கொத்துமல்லி விதையோடு பொடி செய்தும் சேர்ப்பார்கள். அவரவர் காரத்துக்கு ஏற்பச் செய்யலாம்.

அடுத்து மோர்க்குழம்பு மிஞ்சினால் செய்யும் திப்பிசம் விரைவில்! மொக்கைக்குக் கூட்டம் வந்துடும். :)))))))

45 comments:

  1. புளிக்காய்ச்சலுக்காக வறுத்து அரைத்த பொடியா? அது என்ன? ஓ... கடைசியில் சொல்லி இருக்கிறீர்கள். குறித்துக் கொள்கிறேன். (ஆனால் எங்கே செய்யப்போகிறேன்? இப்பல்லாம் ரெடிமேட் புளிக்காய்ச்சல்தான்!)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ச்ரீராம், எங்க வீட்டில் வெளியே வாங்குவதற்குக் கடுமையான தடை உத்தரவு பிறப்பித்து விட்டேன்! :) கட்டுப்படி ஆகவில்லை என்பதோடு வயிறும் தகராறு! இரட்டைச் செலவு ஆயிடுது!

      Delete
  2. நேற்று ஒரு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். ஹோமம். பந்தியில் பரிமாறிக் கொண்டிருந்தோம். பார்த்தால் தயிர் தீர்ந்து விட்டது! எப்பவுமே விருந்துச் சமையலில் நிறைய மிஞ்சுவது தயிர்ப் பச்சடித்தானே? ஒரு ஸ்பூன் மட்டும் இலையில் பரிமாறிவிட்டு மிச்சம் வைத்திருப்போமே... அதை எடுத்து மிஞ்சிய தயிருடன் கலந்து தண்ணீர் விளாவி பரிமாறிவிட்டோம்! திப்பிசம்! தயிர் சாதத்தை விட இந்தக் கலவை நன்றாய் இருந்ததாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க என்ன செய்திருக்கணும்னா முதல்லேயே கொஞ்சம் தயிரைத் தனியே எடுத்து வைச்சுட்டு மிச்சத் தயிரில் கடைந்து நீர் விட்டுக் கடுகு, ப,மி. கருகப்பிலை, எ.ப. சேர்த்து உப்புப்போட்டுக் கரைத்து விட்டிருந்தால் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக் கிடைச்சுடும். அப்படியும் பத்தலைனா எடுத்து வைத்திருக்கும் தயிரோடு காய்ச்சி வைச்சிருக்கும் பாலைக் கலந்து மேலே சொன்னாப்போல் தாளித்து விட்டால் அடுத்த பந்திக்கும் மோர் ரெடி! நான் எங்க வீட்டு விசேஷங்களில் இப்படித் தான் சமாளிப்பேன். எல்லோருக்கும் தயிர் விடுவதில்லை. அப்புறமாவும் போறலைனாக் கடைசியில் தானே வீட்டு மனிதர்கள் சாப்பிடுவாங்க. அவங்களுக்குத் தயிர்ப் பச்சடியைப் பயன்படுத்திக்கலாம்.

      Delete
  3. நீங்கள் பி.ஜே.பி. என்பது உலகறிந்த விடயம் அதற்காக அடிக்கடி குஜராத்திக் தொக்கு செய்துதான் நிரூபிக்க வேண்டுமா ?

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் எந்தக் கட்சியும் இல்லை. குஜராத்தில் இருந்ததால் பிஜேபி ஆயிடுவேனா? நல்லா இருக்கே கதை! :)))))

      Delete
  4. இதோ வந்துட்டேன்...

    இருந்ஹாலும் இப்படியெல்லாம் போட்டு பயமுறுத்தக் கூடாது!...

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெஹெ, இதுவும் சாப்பிடலாமில்ல! :)))) தெரிஞ்சு வைச்சுக்குங்க! தனியா இருக்கீங்க! தேவைப்படும். ;)))))

      Delete
  5. எதையும்விட்டு வைக்க மாட்டீர்கள் போல

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெ, ஆமா இல்ல!

      Delete
  6. திப்பிசம் ரொம்ப சுவை. அதைச் செய்யற நீங்கள் சொல்லும்
    முறையும் அதைவிடப் பிரமாதம்.
    என்ன திப்பிசம் செய்தீர்கள் எப்படி எல்லாம் பரிமளித்தது
    என்று தனி பதிவு போட்டால் சிறப்பாக இருக்கும் கீதா மா.
    மாங்காய் சாதம் படு ஜோர்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நிஜம்மாவே மாங்காய்ச் சாதம் அன்னிக்குச் செய்ததை விட இன்னிக்கு நல்லாவே வந்திருந்தது. :)))) திப்பிசங்கள் அவ்வப்போது பகிர்கிறேனே!

      Delete
  7. ஆஹா !சூப்பர் ஐடியாவா இருக்கே ..இதெல்லாம் குறிச்சு வச்சிக்கறேன் சமையல் பிளாக்குக்கு உதவும் ..
    புளியோதரைக்கு நான் கொஞ்சம் ஒரு டீஸ்பூன் ஆளி விதையை கடைசியில் அரைச்சு சேர்ப்பேன் ஸ்லைட்டா இனிப்பு சுவை வரும் வெல்லம் இல்லைனா இது கைகொடுக்கும் :)
    நானா கடை மசாலாக்கள் வாங்கறதிலைக்கா .ஒரு ரசப்பொடி வாங்கினேன் என் பொண்ணே சொல்லிட்டா டேஸ்ட் நல்லால்லைன்னு .
    எல்லாம் வீட்டில் அரைச்சா அது தனி சுவை

    ReplyDelete
    Replies
    1. ஏஞ்சல் ஆளி விதை இன் பு கா...ஓகே நோட்டட்!!!

      கீதா

      Delete
    2. வாங்க ஏஞ்சல், நான் இதுவரை ஆளி விதையைக் கண்ணால் கூடப் பார்த்தது இல்லை. எல்லோரும் சொல்றாங்க. ஒரு முறை வாங்கிப் பார்க்கணும். :)

      Delete
    3. நானும் எந்தப் பொடி வகையும் கடைகளில் வாங்கியது இல்லை.

      Delete
  8. // ச்ரீராம்//

    கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

    ReplyDelete
    Replies
    1. ஹெஹெஹெஹெ, நல்லா இருக்கு இல்ல? :)))))))))

      Delete
  9. // முதல்லேயே கொஞ்சம் தயிரைத் தனியே எடுத்து வைச்சுட்டு//

    பரிமாறுவது திடீரென உதவி செய்யப் போனது.. 25 பேருக்கு அவ்வளவு கம்மியாக தயிர் வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சிறிய பாத்திரத்தில் இருக்கவும், கொஞ்சம் எடுத்து உள்ளே வைத்துக்கொண்டு இங்கே பரிமாற்ற வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு லிட்டர் ஆவின் சிவப்புப் பாக்கெட் பாலை உறை ஊத்தி இருந்தால் 25 பேருக்கு தாராளமாப் போதும். ஆனால் தயிராக விடக் கூடாது!

      Delete
  10. கீசாக்கா.. நீங்க மனதில நினைப்பதை எல்லாம் கொஞ்சம் சத்தமா சொல்லிப்போடுறீங்க:)) அது போஸ்டா வெளி வந்திடுது அப்பூடித்தானே?.. நீங்க கடுகோரையைச் சொல்றீங்களோ?:) இல்ல தயிர்ச்சாதம் பற்றிச் சொல்றீங்களோ தெரியல்ல:)) ஆனா உங்கட மைண்ட் வொயிஸ் மட்டும் நல்லாவே கேஎய்க்குதூஊஊஊஊ:))..

    ReplyDelete
    Replies
    1. இகி இகி, இகி! அதிரடி, நான் நினைப்பதைச் சொல்றேன் என்பது என்னமோ சரி தான். ஆனால் இங்கே தயிர் சாதம் எங்கே இருந்து வந்துருக்கு? நான் அதைப் பத்தி நினைக்கவும் இல்லை; சொல்லவும் இல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. கடுகோரையைப் புளிக்காய்ச்சலா மாத்தினதைப் பத்தியும், மாங்காய்ச் சாதத்தில் புளியோதரைக்குப் போடும் பொடியைக் கலந்து செய்ததையும் பத்தித் தான் இங்கே சொல்லி இருக்கேன். ஒழுங்காப் படிச்சால் தானே! எப்போப் பார்த்தாலும் தேம்ஸில் குதிக்கும் நினைப்போடு இருந்தால் இப்பூடித் தான்! எதுவும் புரியாது! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
  11. //அடுத்து மோர்க்குழம்பு மிஞ்சினால் செய்யும் திப்பிசம் விரைவில்! மொக்கைக்குக் கூட்டம் வந்துடும். :)))))))///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்குமாமே:)).. திப்பிலி ரெசிப்பி போடுங்கோ:))

    ReplyDelete
    Replies
    1. திப்பிலி ரசமெல்லாம் இப்போ ஒத்துக்கறதே இல்லை. வாங்கி வைச்சு அப்படியே கிடக்கு!

      Delete
  12. ஹை கீதாக்கா திங்க வுல கடுகோரை/கடுகுப் பச்சடி போட்டிருந்தேன்...இப்ப உங்க ரெசிப்பியும் பார்த்துவிட்டேன்...கிட்டத்தட்ட அதேதானோ...

    மாங்காய்க் சாதத்தில் நானும் வெந்தயம் சேர்ப்பதுண்டு ஆனால் புகா பொடி சேர்த்ததில்லை.

    புகா வுக்கு நான் தனியா சேர்த்து செய்வதில்லை என்பதால் பொடி செய்வதில்லை. ஆனால் என் மாமியார் தயாரிப்பில் பொடி உண்டு இதெ...

    நீங்கள் புகா பொடி சேர்த்து மா சா செய்தது போல் செஞ்சு பார்த்துடறேன்...வெந்தயப் பொடி சேர்த்துச் செய்வேன்...சேர்க்காமலும் செய்வேன்...இப்ப புகா பொடி சேர்த்துச் செய்து பார்த்துடறேன்...

    மகனுக்கும் பொடி செய்வதில் இந்தப் பொடி எல்லாம் உண்டு...

    உங்க திப்பசத்தையும் குறித்துக் கொண்டாச்சு...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, உங்க கடுகோரையிலேயே நான் எழுதினதுக்கான சுட்டி கொடுத்திருந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாரும் கண்டுக்கலை! புளியோதரைப் பொடி சும்மாப் போட்டுப் பார்த்தேன். எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்க. நல்லாவே இருந்தது. ருசி மாறி விட்டது! :))) என் மாமியாரும் புளிக்காய்ச்சலில் தனியா சேர்க்க மாட்டார்கள். வெறும் வெந்தயப் பொடி மட்டுமே! சில சமயம் அப்படியும் பண்ணுவேன்.

      Delete
    2. அக்கா உங்க சுட்டி அன்னிக்கு ஓபன் ஆகலை. நினைவிருக்கு. அப்புறம் தான் தெரிந்தது நான் காப்பி பேஸ்ட் பண்ணிப் போடும் போது சரியா காப்பி ஆகலைனு. அப்புறம் பார்த்துட்டேனே....

      இனி அப்பப்ப பதில் கொடுத்துடறேன் சாரிக்கா....க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாபஸ் வாங்குங்க....ஹா ஹா ஹா ஹா

      கீதா

      Delete
  13. திப்பிசம்..சொல்லாடல் ரசித்தேன்.

    ReplyDelete
  14. இண்டெரெஸ்டிங்.

    இனிமே உங்க வீட்டுக்கு வந்தால், நீங்க எதைக் கொடுத்தாலும், அது நமக்காகப் பண்ணினதா அல்லது வேற பொருளை மாற்றி இப்படிச் செய்திருக்கிறாரா என்று யோசிக்க வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறது.

    எம்.டி.ஆர் புளியோதரைப் பொடி போல, எப்படிச் செய்யறதுன்னு எழுதுங்களேன். நான், புளிப்பவுடர் போட்டுச் செய்யறாங்கன்னு நினைத்தேன்.

    முந்திய தினம் ஒரு கோவில், நேற்று முழுவதும் திருப்பதி. அதனால் வருவதற்குத் தாமதம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. அநியாயமா இருக்கே. நீங்க வரீங்கனு தெரிஞ்சா என்ன சாப்பிடுவீங்கனு கேட்டுட்டு அதை மட்டும் சமைப்பேன். இதெல்லாம் எப்போவும் இருக்குமா என்ன? பண்ணும்போது சில, பல திப்பிசங்கள் பண்ணறது தான்! :))))) திருப்பதியில் நல்ல தரிசனம் கிடைச்சதா? பெரிய லட்டு கிடைச்சதா?

      Delete
    2. எம்.டி.ஆர். புளியோகெரப் பொடி நான் வாங்கிப் பார்த்ததில்லை. ஆனால் புளியை நன்கு காய வைத்து வெறும் இரும்புச் சட்டியில் போட்டுப் பிரட்டி எடுத்துக் கொண்டு வறுத்த சாமான்களோடு பொடிக்கலாம். தாளிதத்தை நேரடியாகச் சாதம் கலக்கும்போது போட்டுக்கலாம். கரகரவென்று இருக்கும்.

      Delete
  15. புளியோதரைப் பொடி நானும் திரித்து போடுவேன்.

    கடலைப்பருப்பு வேர்க்கடலை இல்லாமல் புளியோதரை செய்ய வேண்டும் என் கணவருக்கு.
    அதனால் மிளகாய் வற்றல், கொத்தமல்லிவிதை, பெருகாயத்துடன் சிறிது கடலைப்பருப்பு, வேர்கடலை வறுத்து பொடித்து போட்டு விடுவேன். வாசமாய் நன்றாக இருக்கும், கறுப்பு எள் சிறிது, கொஞ்சம் வெல்லம் எல்லாம் போட்டு புளிக்காய்ச்சல் செய்வேன்.

    எலுமிச்சை சாதம்,தேங்காய் சாதம்,செய்தாலும் கடலைபருப்பு போடகூடாது என்பார்கள்.
    நம் ஊர் பக்கம் கடலைப்பருப்பு ரவா உப்புமா, உருளை கிழங்கு பொடிமாஸிலும் போடுவார்கள்.

    உங்களுடைய திப்பிசங்கள் சமயத்தில் எல்லோருக்கும் கை கொடுக்கும்.
    எந்த பொருளையும் வேஸ்ட செய்ய வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் கடலைப்பருப்புத் தாளித்தால் பிடிக்காது. நல்லவேளையா அவருக்கும் பிடிக்கிறதில்லை. பொதுவாத் தாளிதமே கம்மியாத் தான் போடுவேன். அதிலும் கடலைப் பருப்புக்குத் தடா! அரைக் கிலோ கடலைப்பருப்பு எனக்கு 2 மாசம் வரும்! :)))) அதே எங்க மாமியார் வீட்டில் கடலைப்பருப்புத் தான் தெரியும் புளிக்காய்ச்சல், உப்புமா, , பொடிமாஸ், கறிவகைகள் போன்றவற்றில். சாம்பாருக்கு அரைத்து விடுவது கூட நிறையக் கடலைப்பருப்பு வறுத்து வைப்பார்கள். சட்னி வகைகளிலும் கடலைப்பருப்பு வறுத்து வைத்து அரைப்பார்கள். சில சமயங்களில் எள்ளை வெறும் வாணலியில் வறுத்துப் புளிக்காய்ச்சல் தயாரிப்பில் நானும் சேர்ப்பேன். இல்லை எனில் எள்ளுப் பொடி செய்து மீதம் இருந்தால் அதை அப்படியே கலப்பதும் உண்டு. அநேகமாக எள்ளுப் பொடி மீதம் ஜாஸ்தியா இருந்தால் இட்லி மிளகாய்ப் பொடியில் கலந்து விட்டால் ருசியாக இருக்கும். குறைந்த அளவிலேயே எள்ளுப் பொடி செய்வேன். அதுவும் சில சமயம் மிஞ்சிப் போகும்.

      Delete
  16. முதலில் ஸாரி லேட்டா வந்ததுக்கு..
    உங்கள் திப்பிசங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் பிகாஸ்...ஸேம் பிளட்!! :-)) நானும் சில பல வேலைகள் செய்து என் நாத்தனாரிடமே பாராட்டு வாங்கியிருக்கேன்!
    கடுகோரை எனக்குப் புதிது! நாளைக்கு அதான் எங்க வீட்லே!!

    ReplyDelete
    Replies
    1. // நாத்தனாரிடமே//

      இதற்கு விளக்கம் தேவை மிகிமா!

      Delete
    2. வாங்க மிகிமா! எங்க வீட்டிலே நாத்தனார் எல்லாம் சிரிப்பாங்க! கண்டுக்காம இருக்கப் பழகிட்டேன்! :)))))) கடுகோரை செய்தீங்களா?

      Delete
    3. ஸ்ரீராம், எப்போவானும் மாமியார் கூட நல்லா இருக்குனு சொல்லிடுவாங்க! நாத்தனார்கள் சொல்ல மாட்டாங்க! கொஞ்சம் மாத்தினால் கூட "அம்மா இப்படி எல்லாம் செய்ய மாட்டாங்க! நீங்க உங்க பழக்கத்தைக் கொண்டு வரீங்க!" எனச் சொல்லுவாங்க! உதாரணமாகத் தேங்காய்ச் சட்னிக்குப் பொட்டுக்கடலை கூட வைக்கக் கூடாது! வைச்சால் இதெல்லாம் நம்ம வீட்டுப் பழக்கம் இல்லைம்பாங்க! :)))))))) சில நாத்தனார்கள் இப்படியும் உண்டு. ;)))))))))

      Delete
  17. //குஜராத்தில் இருந்ததால் பிஜேபி ஆயிடுவேனா? நல்லா இருக்கே கதை! :))))) //ஐயையோ! என்னது இது? ஏற்கனவே மோடிக்கு எதிர்ப்பு வலுத்து வரும் வேளையில் உங்களைப் போன்றவர்களும் கை விட்டு விட்டால் என்ன ஆகும்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, மோதிக்கு எதிர்ப்பு வலுக்கிறதா? புதிய தகவல்! போனால் போகட்டும். நான் ஒருத்தி கைவிட்டால் அவருக்கு எதுவும் ஆகப் போறதில்லை! :)))))) எனக்குத் தெரிந்து global conspiracy to remove Modhi as PM of India போன்ற செய்திகள் தான் தெரியும். :))))) புனேயில் நடந்தது பத்தியும் சிரிப்பாச் சிரிக்குது! ;)))))

      Delete
    2. பானுமதி, அவல் உப்புமாவோ, ரவா உப்புமா, கிச்சடி மிஞ்சினாலோ மாலை கட்லெட்டாக மாத்துவேன். :))))

      ஶ்ரீராம், பண்டங்கள் பாழாகாமல் சமைப்பதும் ஒரு கலை தானே! :)))))

      Delete
  18. திப்பிசம் செய்யாமல் சமைக்க முடியாது. ஒரு முறை போகா செய்ய ஊற வைத்த அவல் அதிகம் ஊறி விட்டது. நன்றாக வடித்து விட்டு, வெங்காயம், பி.மிளகாய் சேர்த்து பக்கோடாவாக போட்டு விட்டேன்.
    பாஸ்தா செய்த பொழுது அதற்கான கிரேவி குறைவாகி விட்டது. புளியோதரை பொடி இருந்தது, கலந்து கொடுக்க, விரும்பி சாப்பிட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. திப்பிசங்கள் அனைவருக்கும் பொது போலிருக்கு!!!!

      Delete
    2. ஹிஹிஹி, முந்தைய பின்னூட்டத்தில் இதற்கான பதிலைப் போட்டுட்டேன். ரெண்டு பேரும் படிச்சுக்குங்க! :))))))

      Delete