எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 16, 2018

மாயமா,மந்திரமா, தந்திரமா!

என்னவோ விசித்திரமான அனுபவங்கள் கணினியோடு ஏற்படுகின்றன. சில நாட்கள் முன்னர் இணையம் இணைப்புக் கிடைத்ததும் உள்ளே நுழைந்தால் உடனே திரும்ப டெஸ்க் டாப் வந்துடும். சரி, இணைப்புத் தான் சரியா இருந்திருக்காதுனு நினைச்சேன். அதுக்கு அப்புறமா எல்லாப் பின்னூட்டங்களும் மெயில் பாக்ஸுக்கு வராமல் டாஷ் போர்டுக்கு வந்து கமென்ட் பக்கம் திறந்து அவெயிடிங் கமென்ட் மாடரேஷன் க்ளிக் செய்தால் தான் கமென்ட்டுகள் கிடைக்கும். இப்போவும் அப்படித் தான். வெளியிடும் கமென்டுகள் எதுவும் மெயில் பாக்ஸுக்கு வருவதில்லை. அது இந்த வலைப்பக்கம் மட்டுமில்லாமல் நான் எழுதும் பிற வலைப்பக்கங்களிலும் வேறு ஐடிகளிலும் இப்படித் தான் இருந்து வருது. ஶ்ரீராம் சொன்னபடி கமென்ட் ஆப்ஷன் க்ளிக் செய்தால் உள்ளே போகிறது. !!!!!!!!!!!!!!!!!! :)

 இப்போ என்னடான்னா இந்த வலைப்பக்கத்து sivamgss@gmail.com log in செய்து உள்ளே வந்தால் ஜிமெயில் பக்கம் திறக்கும் முன்னே தானாக லாக் அவுட் ஆகிறது.  இது கடந்த ஒரு வாரத்துக்கும் மேலே நடக்கும் கூத்து! பொறுத்துப் பொறுத்துப் பார்த்துட்டு பாஸ்வேர்ட் மாத்தலாம்னு போனால் உன்னோட பழைய பாஸ்வேர்ட் நினைவில் இருப்பதைப் போடுனு சொன்னது. சரினு தினம் பயன்படுத்தும் கடவுச் சொல்லைப் போட்டேன். ஹிஹிஹி! உடனேயே "நீ கீதா தான்! வேறே ஆள் இல்லை!  உன்னோட இப்போதைய பாஸ்வேர்ட் உனக்குத் தெரிஞ்சிருப்பதாலே மாத்தணும்னு இல்லை! அப்படியே தொடர்ந்து கொள்!" அப்படினு உத்தரவு கொடுக்கவே தொடர்ந்தேன்! என்னத்தைச் சொல்றது. மறுபடி மறுபடி அதே பிடுங்கல். இரண்டு மடிக்கணினிகளிலும் சோதித்துப் பார்த்தேன். இது கணினி பிரச்னை இல்லைனு புரிஞ்சது.

சில நாட்கள் முன்னர் புது ஜிமெயிலுக்கு மாறிக்கோனு ரொம்ப உபசாரம் பண்ணியது. வேணாம் போ அப்படினு அலட்சியமா அதை ஒதுக்கினேன். அந்தக் கோபமா? என்னனு தெரியலை! சரினு இன்னிக்குக் காலம்பர ஒரு முக்கியமான மெயில் பார்க்கையில் இதே போல் ஆகவும் நான் மறுபடியும் லாக் இன் செய்யாமல் சேஞ்ச் பாஸ்வேர்ட் கொடுத்தேன். அப்போவும் மேற்கண்ட கேள்விகள். இப்போதைய பாஸ்வேர்ட் தெரியுமா என! சரினு அதை டைப்பினதும் மீண்டும் மேற்சொன்ன கமென்டுகள். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் தான் கீதானு எனக்குத் தெரியாதா என்ன? விடாமல் கடவுச் சொல்லை மாத்தினேன். மாத்திட்டு சோதிச்சேன். ஒண்ணும் ஆகலை போல இருக்கவே கணினியை அணைச்சுட்டு வேலை செய்யப்போயிட்டேன். எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு  இப்போ வந்து கணினியைத் திறந்து அதே மெயிலில் புதுக் கடவுச் சொல்லைப் போட்டுத் திறந்தால்  புது பாஸ்வேர்டுக்கும் அதே கதி! currently being used in one other location அப்படினு எச்சரிக்கைச் செய்தி வேறே தினம் தினம்! போதுண்டா சாமினு இருக்கு! :))))) இத்தனைக்கும் நான் சன் தொலைக்காட்சியின் "மாயா" வெல்லாம் பார்க்கிறதே இல்லை! :P :P :P :P

 அதான் போச்சுன்னா கணினியை ரீ சார்ஜ் செய்யறச்சே இரண்டு லைட் எரியும். ஒண்ணு வெளிர் நீலம் இன்னொண்ணு சிவப்பு! இரண்டும் வெளிர் நீலத்துக்கு வந்துட்டால் கணினி 100% சார்ஜ் ஆயிருக்குனு தெரிஞ்சு அணைக்கலாம். இது ஒரு மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சுடும். ஆனால் இப்போ நாலைந்து நாட்களாக அந்தச் சிவப்பு விளக்கு அணைவதே இல்லை. இரண்டு மணி நேரம் வரைபோட்டு வைத்து விட்டுப் பின்னர் கணினியைத் திறந்து எத்தனை சதவீதம் சார்ஜ் ஆகி இருக்குனு தெரிஞ்சு கொண்ட பின்னர் கணினியை மின் இணைப்பில் இருந்து துண்டிக்கிறேன்.  வோல்டேஜ் ஏறி இறங்குகையில் கணினி மின் இணைப்பில் இருந்தால் பிரச்னை என்பதால் இதைக் கவனிக்க வேண்டி இருக்கு. அலைபேசியையும் அப்படித் தான் சார்ஜ் ஆகி விட்டால் மின் இணைப்பைத் துண்டித்து விடுவேன். ஏற்கெனவே இடி இடிக்கையில் அலைபேசியில் பேசினவங்களுக்கு விபத்து ஏற்பட்டதுனு படிச்சதிலே இருந்து கொஞ்சம் எச்சரிக்கை! என்றாலும் எப்போதுமே மின்னணு சாதனங்களிடம் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டி இருக்கு! 

36 comments:

  1. சில நேரங்களில் இணையம் இப்படித்தான் செய்கிறது. உங்களுக்கே இப்படி என்றால் ???

    படிக்காத என்னைப் போன்ற பாமரர்களின் நிலை ?

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே கில்லர்ஜி! நானும் ஒரு க.கை.நா. தான்! ஏதோ பண்ணுவேன். சில சமயங்கள் சரியாகும். பல சமயங்கள் மாட்டிண்டு முழிப்பேன்.

      Delete
  2. ஆஆஆவ்வ்வ்வ்வ் கீசாக்காவுக்கு வயசாகிட்டுதெல்லோ தலைப்புப் போட மறந்திட்டாஆஆஆஆஆஆஆஆஆஆ ஹா ஹா ஹா .. கொஞ்சம் லேட்டா வந்து படிக்கிறேனே பிளீஸ்ஸ்ஸ்:)

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, உங்களுக்குத் தான் வயசாச்சு. தலைப்பை எவ்வளவு பெரிசாப் போட்டிருக்கேன். தப்பாய் ஒரு பக்கம் எதுவும் எழுதாமல் பப்ளிஷ் ஆகி விட்டது! அதைப் பார்த்திருப்பீங்க! :))

      Delete
    2. ஹையோ ஹையோ கீசாக்கா தலைப்பை உள்ளேதான் போட்டு வச்சிருக்கிறீங்க.. போஸ்ட் ரைப் பண்ணும்போது மேலே தலைப்பு போடுவோமெல்லோ அங்கு போட மறந்திட்டீங்க.. ஸ்ரீராமின் எங்கள் புளொக்கில் செக் பண்ணுங்கோ.. எண்ணங்கள் 6 அவேர்ஸ் எகோ என மட்டுமே காட்டுது தலைப்பு நஹி:)) ஹா ஹா ஹா:)).. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதை எல்லாம் புரிய வைக்கவோ வைரவா என்னை நீ படைச்சாய் அப்பனே:))

      Delete
    3. அதிரடி, தலைப்பை சரியாத் தான் போட்டிருக்கேன். என்னோட டாஷ்போர்டிலும் எண்ணங்கள் முகப்புப் பக்கமும், வலைப்பக்கம் திறந்தாலும் சரியாவே காட்டுது. என்ன தப்பு நடந்ததுன்னா, இந்தப்பதிவை எழுதி பப்ளிஷ் பண்ணின உடனேயே ஒரு காலிப்பக்கம் தானாக வந்து உட்காரக் கவனிக்காமல் அதை பப்ளிஷ் கொடுத்துப் பின்னர் கவனித்து நீக்கினேன். அது தான் கடைசி என்பதால் எ.பி. பக்கம் அதையே காட்டுது! ஆனால் அங்கே சொடுக்கினால் இந்தப் பதிவுக்குத் தான் வரும். அதையும் சோதிச்சுட்டேன். அதான் சொன்னேனே, மடிக்கணினியின் அமானுஷ்ய வேலைகளில் இதுவும் ஒண்ணு! :))) பிள்ளையாரே, இந்த அதிரடிக்கு இப்போவானும் புரியணுமே! உனக்குக் கொழுக்கட்டை போடறேன். :))))

      Delete
  3. இதுவும் ஒருவித அனுபவம்தான். எஞ்சாய் மாடி. 'கணிணி' - லேப்டாப்பா? டெஸ்க் டாப்புல எங்கடா சார்ஜ் என்று யோசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கணினி பூட் ஆனதும் வர பக்கத்தை டெஸ்க் டாப் என்றே அதிலும் குறிப்பிட்டிருக்காங்க! எங்க மெகானிக் மற்றும் பையர், மருமகள், மாப்பிள்ளை எல்லோரும் சொல்வாங்க! நீங்க சொல்லும் பிசியும் வீட்டில் இருக்கு! அதில் வின்டோஸ் எச்பி! மெதுவா வேலை செய்யும். ஆனால் ஒரிஜினல்/ அதான் மாத்தாமல் அப்படியே வைச்சிருக்கேன்.

      Delete
  4. //இப்போவும் அப்படித் தான். வெளியிடும் கமென்டுகள் எதுவும் மெயில் பாக்ஸுக்கு வருவதில்லை. //

    ஐரோப்பிய GDPR , Compliance னு சொல்லி ரெண்டு மாசமுன்னே எதோ அக்செப்ட் செஞ்சி வச்சேன் அத்திலிருந்து எனக்கும் மெயிலுக்கு பின்னூட்டம் வரதேயில்லை :))

    ReplyDelete
    Replies
    1. @Angel, நான் அப்படில்லாம் எதுவுமே செய்யலை. கூகிளார் தான் ஜிமெயில் புதுசு வந்திருக்கு, மாறு, மாறிக்கோனு சொல்லிட்டே இருந்தார். அலட்சியம் செய்யவே வேலை காட்டுறார்! :P :P :P

      Delete
  5. / currently being used in one other location அப்படினு எச்சரிக்கைச் செய்தி வேறே தினம் தினம்! //
    இது மொபைல் போன் /ஐபேட் எல்லாத்திலும் திறந்து வச்சிருந்தாலும் இப்படி எச்சரிக்கை செய்யும்

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே மொபைலில் எல்லாம் வரதில்லை. ஐபாடில் வருதானு தெரியலை. அவரைத் தான் கேட்கணும். லாப்டாப்பில் இந்த மாதிரித் தானாக சைன் அவுட் ஆகி மறுபடி லாகின் செய்து உள்ளே போனால் தான் வரும். :))))

      Delete
  6. ஆனா கூகிள் உங்க வீட்டுக்குளேயே உங்களை விட மாட்டாம அட்டகாசம் செய்யுதே :)

    ReplyDelete
    Replies
    1. ஆமா, ஏஞ்சல்! என்ன தைரியம் பாருங்க இதுக்கு! :))))

      Delete
  7. அக்கா! உங்க பேரை வேணும்னா ‘முத்தழகு’ன்னு மாத்தி வச்சுப் பாருங்களேன்!!

    ReplyDelete
    Replies
    1. @மோகன் ஜி, அதெல்லாம் மு.ஜா.மு. என்றெல்லாம் ஏற்கெனவே பெயர் இருக்கே! :)))))

      Delete
  8. என் லாப்டாப்ல ஆன் ஆப் சவுண்ட் வரும். ஆனா எந்த விடியோ, மியூசிக் ப்ளேயர்லயும் சவுண்ட் கேக்காது. கடைக்கு கொண்டு போனால் மட்டும் சவுண்ட் கேக்கும். இதுமாதிரி 3 முறை ஆகிட்டுதும்மா. இப்ப ச்சீ போன்னு விட்டுட்டேன்

    ReplyDelete
    Replies
    1. இப்போக் கொஞ்ச நாட்களா அப்படித் தான் விட்டுட்டேன் ராஜி! :))))

      Delete
  9. உண்மையில் நீங்கள் சொல்லும் எதுவும் சரியாகப் புரியவில்லை. ஜிமெயில் ஏதாவது சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதா என்று பார்க்கவேண்டும். வல்லிம்மாவுக்கு காணாமலேயே போய்விட்டது. மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ச்ரீராம், வல்லி மீட்டுட்டாங்கனு நினைக்கிறேன். இன்னும் போய்ப் பார்க்கலை. நான் சொல்வது மெயிலில் லாகின் பண்ணி உள்ளே நுழைஞ்சதுமே இன்பாக்ஸைக் காட்டிய அடுத்த நொடி தானாக லாகவுட் ஆகும்! மறுபடி லாகின் செய்யணும்! :))))பாஸ்வேர்டை எல்லாம் மாத்திப் பார்த்துட்டேன். அப்படியே தான் இருக்கு!

      Delete
  10. எனக்கு ஜிமெயில் அதன் முழு கொள்ளளவான 15 ஜிபியை நெருங்கி கொண்டே இருந்தது. அவ்வப்போது சில பழைய மெயில்களை க்ளீன் செய்து ஈடாக ஏற்படுத்திக்கொண்டிருந்தேன். திடீரென ஒருநாள் 6 ஜிபி எனக் காட்டுகிறது. எதை அழித்ததோ, எதை ஒழித்ததோ... நானும் ஆராய்ச்சி செய்யவில்லை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு 2,3 கூகிள் அக்கவுன்ட் இருக்கு. இது மெயின் அக்கவுன்ட். முக்கியமான தொடர்புகள் இது தான் என்பதால் அடிக்கடி பார்த்து நீக்கவேண்டியதை நீக்கிடுவேன் ஶ்ரீராம்! எனக்கு இன்னமும் 2 ஜிபி கூட ஆகலை! ஆகவே அது பற்றிக் கவலை இல்லை. மேலும் மின் மடல்களைப் பிரித்து வாங்குவதாலும் பிரச்னை இல்லை.

      Delete
  11. கணினி, லாப்டாப் பற்றி எதுவும் தெரியாது. நான் மொபைல் வழிதான் வாசித்தல், தங்க்லிஷில் கமென்ட் தலைமையகத்துக்கு அனுப்புதல் என்று போகிறது. சென்னை தலைமையகம் என்பதால். ஆனால் கணினி இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறது என்றும் தெரிகிறது.

    துளசிதரன்

    ReplyDelete
    Replies
    1. நிஜம்மாவா சொல்றீங்க துளசி? எனக்கென்னமோ மொபைல் வழி வாட்சப் தவிர்த்து மற்ற எதுவும் சரியாக வருவதில்லை. அதோடு செல்லினம் தரவிறக்கிக்கவும் இல்லை. ஆகவே எப்போவானும் தான் முகநூல் பதிவுகளுக்கு மொபைல் வழி பதில் கொடுப்பேன். வாட்சப்புக்கும் அழைக்கும் நபர்களுடன் பேசுவதற்கும் மட்டுமே மொபைல்! :))))

      Delete
  12. எனக்கு மடிக்கணினி சரிவருவதில்லை டெஸ்க் டாப்தான் பிரச்சனை என்று வந்தால் கணினிமருத்துவர்தான் உதவி

    ReplyDelete
    Replies
    1. கணினிக்கும் மடிக்கணினிக்கும் ரொம்ப ஒண்ணும் வித்தியாசம் இல்லை ஐயா! அதோடு நான் வயர்லெஸ் மவுஸ் பயன்படுத்துவேன். கையால் இயக்கும் வேலை செய்வதில்லை. மணிக்கட்டில் வலி வந்துடும்.

      Delete
  13. //அதுக்கு அப்புறமா எல்லாப் பின்னூட்டங்களும் மெயில் பாக்ஸுக்கு வராமல் டாஷ் போர்டுக்கு வந்து கமென்ட் பக்கம் திறந்து அவெயிடிங் கமென்ட் மாடரேஷன் க்ளிக் செய்தால் தான் கமென்ட்டுகள் கிடைக்கும். இப்போவும் அப்படித் தான். வெளியிடும் கமென்டுகள் எதுவும் மெயில் பாக்ஸுக்கு வருவதில்லை. //

    இதேதான் கீசாக்கா எனக்கும் நான் நினைக்கிறேன் இது ஏதோ ஓட்டமெட்டிக் புளொக் அப்டேட் ஆக இருக்கும்.. இப்போ எனக்கும் மெயிலுக்கு கொமெண்ட்ஸ் வருகுதில்லை, நானும் இரு தடவைகள் திரும்ப செய்து பார்த்திட்டேன் ம்ஹூம்ம்ம்... புளொக்கர் உள்ளே போனால் மட்டுமேதான் தெரியும். இதனால பல நேரம் புளொக்கர் உள்ளே போய் செக் பண்ண மறந்திடுவதால் கொமெண்ட் பப்ளிஸ் பண்ண தாமதமாகுது.. மெயிலுக்கு எனில் டக்கு டக்கென நோட்டிபிக்கேசன் காட்டிடும்...

    ReplyDelete
    Replies
    1. அதிரடியா ஞானி ஆன அதிரா, எனக்கும் கடந்த 2,3 மாசங்களாக இப்படித் தான் வருது. அதே போல் உடனே திறந்து திறந்து பின்னூட்டம் வந்திருக்கானும் பார்க்கணும். :)))))

      Delete
  14. அக்கா இங்ங்கும் கணினியில்-லாப்டாப்பில் பல பிரச்சனைகள். இணையத்திலும், கூகுள் ப்ளாகரில் கூட என்று தோன்றுகிறது. எனக்கும் கமென்ட்ஸ் வராமல் இருந்தது. ப்ளாகர் அப்டேட் ஆகாமல் புதிய பதிவுகள் வருவது கூடத் தெரியாமல் இருந்தது. நானாக ஒவ்வொரு தளமும் கூகுளில் அடித்துத் திறந்தால் தெரியும். இல்லை என்றால் எபியில் சைட் பாரில் பார்த்து தெரிந்துகொள்வேன்...

    எபி, கில்லர்ஜி பதிவுகளுக்கு கமெட்ன் போடும் போது சிவப்பு எழுத்துகள் வரும்...உங்க கமென்ட் இத்தனை வேர்ட்ஸ் என்றோ எதோ ஒன்று வந்து கமென்ட் போட முடியாதுனு வரும். ரெஃப்ரெஷ் பண்ணினாலும் சரி கணினி மூடி திறந்தாலும் சரி....அது அப்படியே காட்டிக் கொண்டிருக்கும் நம்ம கமென்டும் அப்படியே உட்கார்ந்திட்டிருக்கும்.

    சில சமயம் கில்லர்ஜி ப்ளாக் நான் அசைய மாட்டேன்னு அப்படியே இருக்கும். கல் சிலை போல ஹா ஹா ஹா ஹா...வெங்கட்ஜி ப்ளாகும் சில சமயம் அப்படி ஆகும். தஞ்சையம்பதி சுத்துக்கிட்டே இருக்கும்....இல்லைனா அதுவும் அசையாது. கமென்ட் போடாது....

    இப்படி ப்ளாகரினாலா இல்லை எங்கள் ஏரியா இணையத்தினாலா என்று தெரியலை...ஆனா குறிப்பிட்ட சில ப்ளாக்ஸ் தான் இப்படிப் படுத்தல் என்னனு தெரியலை

    கீதா

    ReplyDelete
    Replies
    1. தி/கீதா, உங்களோட இணையப் பிரச்னை தீராத ஒன்றாக உள்ளதே! முடிந்தால் இணையச் சேவை கொடுப்பவரை மாத்திப் பாருங்க! இங்கே இப்போ நான் கடந்த 3 வருஷங்களாகத் தனியார் சேவை தான்! ஓரளவு பரவாயில்லை. புகார் எனில் நேரிலேயே வந்து கவனிப்பார்கள். பிஎஸ் என் எல் எனில் நேரில் வருவதில்லை! :))))

      Delete
    2. //எபி, கில்லர்ஜி பதிவுகளுக்கு கமெட்ன் போடும் போது சிவப்பு எழுத்துகள் வரும்...உங்க கமென்ட் இத்தனை வேர்ட்ஸ் என்றோ எதோ ஒன்று வந்து கமென்ட் போட முடியாதுனு வரும்.// எனக்கு என்ன வரும்னா நீ பின்னூட்டம் கொடுக்கும் வேகம் ரோபோவை ஒத்திருக்கு! நீ ரோபோவானு கேட்கும்! இது அடிக்கடி நடக்கும் ஒண்ணு! :)

      Delete
    3. //பின்னூட்டம் கொடுக்கும் வேகம் ரோபோவை ஒத்திருக்கு// - சந்தடி சாக்குல யாரோ தன்னையே பாராட்டிக்கிறாங்களே.... சான்ஸ் கிடைக்கும்போது நாம இரண்டுபேரும் தட்டச்சுல போட்டிபோட்டுப் பார்க்கலாம்.

      Delete
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் எப்போவுமே போட்டி போடறதில்லை நெ.த. :)))) என்றாலும் தட்டச்சு வேகம் உண்டு! உங்க அளவு இருக்காது தான்!

      Delete
  15. சிரமம் தான்... ஆனால் நிறைய தெரிந்து கொள்ள முடியும்...!

    ReplyDelete
    Replies
    1. உண்மை டிடி. சொல்லப் போனால் நான் கணினி பத்தித் தெரிந்து கொண்டதே இப்படித் தான்! :)))))

      Delete
  16. இவ்வகையான சாதனங்கள் எவ்வளவோ உதவியோ அவ்வளவு தொந்தரவும்கூட.

    ReplyDelete