எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, December 14, 2018

இதுவும் ஒரு நியாயம் தான்! :(


zomato

 அநேகமாக இந்த வீடியோவைப் பார்க்காதவங்க இருக்க முடியாது. இதில் Zomato என்னும் குழுமம் சம்பந்தப்பட்டிருப்பதும் அனைவரும் அறிவோம். இந்தப் பெயரில் உணவுகளைத் தரமாகவும் சூடாகவும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலேயே கொண்டு சேர்க்கவென்று குழுமம் ஒன்று 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஹரியானாவில் குருகாவ் என்னும் நகரில் ஆரம்பித்திருக்கின்றனர். இதன் தலைமை அலுவலகம் குருகாவ் தான். பின்னர் இந்தியா முழுதும் விரிவடைந்து, உலக அளவிலும் பெயர் சொல்ல ஆரம்பித்துள்ளது.

இதன் முக்கிய வேலையே நகரங்களில் உள்ள முக்கியமான நல்ல தரமான உணவு தயாரிக்கும் ஓட்டல்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வர முடியாமல் அல்லது ஓட்டலில் போய்ச் சாப்பிட்டு வருவதற்குக் கூட நேரமில்லாமல் தவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் குறிப்பிடும் உணவை அதாவது வாடிக்கையாளர் விரும்பும் உணவை இணையம் மூலம் அந்தக் குறிப்பிட்ட ஓட்டலில் ஆர்டர் செய்தால் இந்த அமைப்பினர் அந்தக் குறிப்பிட்ட உணவை வாடிக்கையாளர் சார்பாக அவங்க குறிப்பிட்டிருக்கும் ஓட்டலில் சென்று உணவைப் பெற்று வந்து வாடிக்கையாளரிடம் சேர்ப்பது தான். இதில் அவர்கள் வாடிக்கையாளரிடம் இந்தச் சேவைக்காகக் குறிப்பிட்ட தொகையை உணவின் விலையோடு சேர்த்து வாங்கிக் கொள்வார்கள். 

இது வீட்டில் பெரும்பாலும் தனியாக இருக்கும் நபர்களுக்கு மற்றும் வயதானவர்களுக்கு உதவி என்னும் காரணத்தில் செய்யப்படுகிறது. அதோடு இல்லாமல் இப்போது பெரும்பாலான குடும்பங்களில் ஆண், பெண் இருவரும் வேலைக்குச் செல்வதால் இரவு உணவைச் சமைக்க நேரம் இல்லாமல் தவிக்கும் இல்லத்தரசிகளுக்கு ஓர் வரப்பிரசாதம் எனச் சொல்லப்படுகிறது. திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுச் சமைக்க முடியாமல் போனாலும் அவர்களுக்கும் இது உதவும். பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட  மற்றும்  Swiggy என்னும் இன்னொரு சேவைக் குழுவும் இதில் ஈடுபட்டிருக்கிறது. இவர்களின் சேவை குறித்துத் தொலைக்காட்சிகளில் விளம்பரங்களும் வருகின்றன.

இவர்களில் முதலில் குறிப்பிட்ட  zomato குழுவின் ஊழியர்களில் ஒருவர் தான் வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய உணவை எடுத்து எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு அதுவும் அவர்கள் கொடுத்திருக்கும் ஸ்பூனாலேயே எடுத்துச் சாப்பிட்டுவிட்டுத் திரும்ப அதையே மிச்சத்தை மூடி அவர் எச்சல் செய்து சாப்பிட்ட ஸ்பூனையும் நாக்காலேயே நக்கித் துடைத்து வைக்கிறார். இதை எவரோ ஃபோட்டோ எடுத்து அது வாட்ஸப்பிலும், முகநூலிலும் பரவி விடவே zomato அந்த ஊழியரை வேலையை விட்டு நீக்கி விட்டதாகச் சொல்லி இருக்கிறது. ஆனால் வாடிக்கையாளரிடம் மன்னிப்புக் கேட்டதா என்றெல்லாம் தெரியவில்லை. அதோடு வாடிக்கையாளர் யார் எனவும் தெரிவிக்கவில்லை. இவை எல்லாம் தனிப்பட்ட விஷயம் என எடுத்துக் கொண்டாலும் ஊழியர் இப்படிச் செய்தது அநாகரீகம் என்பதோடு ஆரோக்கிய ரீதியாகக் கெடுதல்களை விளைவிக்கக் கூடியது என்பதை யாரும் உணரவில்லை. அந்த ஊழியருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றனர். அவருக்குச் சாப்பிடக் கூட நேரம் கொடுக்காமல் வேலை வாங்கியதால் பசி தாங்க முடியாமல் இப்படிச் செய்தாராம். அப்படியே வைத்துக் கொண்டாலும் அவர் தனக்கெனத் தனியாக உணவுப் பொட்டலங்களை வாங்கி வைத்துக் கொண்டு அங்கேயே அந்த ஓட்டலிலேயே ஓரிடத்தில் அமர்ந்து சாப்ப்பிட்டுவிட்டுக் கிளம்பி இருக்கலாமே! வழியில் நிறுத்தி உணவை எடுத்துத் திருடிச் சாப்பிடுவதற்குப் பதிலாகக் குறிப்பிட்ட உணவை முழுவதும் சாப்பிட்டிருக்கலாமே! இதெல்லாம் எதுவும் செய்யாமல் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை மூடி வைக்கிறார். இது பசியின் காரணமாகச் செய்வதா?

இவருக்கு ஆதரவாகக் குரல்கள் எழுந்துள்ளன.  குரல் கொடுப்பவர்களுக்கு இப்படி நேர்ந்திருந்தால் பொறுத்துக் கொண்டு அந்த உணவை வாங்கிச் சாப்பிட்டிருப்பார்களா? இப்போது மட்டுமல்ல எப்போதுமே நோய் பரவுவது எச்சில் மூலமும் தான் என்பது பல வகைகளில் நிரூபணம் ஆகி உள்ளது. வீட்டில் உள்ளவர்களே ஒருத்தருக்கொருத்தர் எச்சில் உணவைப் பகிர்ந்து கொள்வதே சரியில்லை என்னும்போது இப்படி யாரோ ஒருத்தர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் இருந்து பிறழ்ந்து வாடிக்கையாளரின் உணவிலிருந்து எடுத்துச் சாப்பிடுவது எந்த வகையில் நியாயம்? வரவர எதற்குத் தான் ஆதரவு என்றில்லாமல் போய்விட்டது! தவறு செய்பவர்களை ஆதரிப்பதே இப்போதைய நியாயமாக மாறி வருகிறது.

இப்படி இருந்தால் நம் குழந்தைகளுக்கு நாம் என்ன சொல்லிக் கொடுப்போம்? பள்ளியில் இன்னொருத்தர் உணவை நீ எடுத்துச் சாப்பிடு என்றா? உன் இஷ்டத்துக்கு நீ இருக்கலாம்  அதை யாரும் கேட்க மாட்டார்கள் என்றா? ஏற்கெனவே பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளோ மற்ற ஒழுக்கங்களைச் சுட்டிக்காட்டும் படிப்போ, அதைக் குறித்த தகவல்களோ, பெரியோர்களைப் பற்றிய சரித்திரங்களோ இல்லாமல் பார்த்துக் கொண்டாச்சு! அதோடு நீதிமன்றங்கள் வேறே தப்புச் செய்யலாம் எனத் தீர்ப்புக் கொடுத்தாச்சு. நாமெல்லாம் சொல்வதைக் கேட்டால் இப்போதைய குழந்தைகள் நாம் நம் சிறு வயதில் பெரியவங்களோட அராஜகத்துக்கு அடிமைகளாகவே இருந்திருக்கோம் என்றே நினைப்பார்கள்.அநியாயங்கள் எல்லாமே நியாயம் என ஆகி வருகிறது. இது தான் கலி முத்திவிட்டது என்பதன் அடையாளமோ?

66 comments:

  1. தவறைச் சரியெனவும், சரியைத் தவறெனவும் மாற்றி மாற்றி சொல்வது இப்போது வழக்கமாக மாறி இருக்கிறது. எல்லாவற்றையும் காணொளியாக, நிழற்படமாக எடுத்து இணையத்தில் பரப்புவது இப்பொழுது மன நோய் ஆகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இது நல்லதுக்கா, கெடுதலுக்கா எனத் தெரியவில்லை!

      Delete
    2. இந்த விஷயத்தில் இப்படிக்கூட நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உதவிய இந்த வீடியோ அவசியம்தான்.

      Delete
    3. இனி வெளியே வாங்கிச் சாப்பிடுபவர்கள் யோசிக்கணும். :(

      Delete
    4. ஸ்ரீராம், கீதாக்கா நீங்க சொல்லியிருப்பதை கன்னாபின்னாவென்று அப்படியே ஆதரிக்கிறேன்.

      வெளியே வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதுவும் வீட்டிற்கு வரவழைத்துச் சாப்பிடுபவர்கள் யோசித்தே ஆகனும்.

      கீதா

      Delete
    5. இது தான் இப்படின்னா இப்போப் புதுசா காலேஜ் ஹாஸ்டல்களில் சைவம், அசைவம் எனத் தனித்தனியாக இருக்கக் கூடாது! அது தீண்டாமை எனக் கிளம்பி இருக்காங்க! இதெல்லாம் காலம் காலமாக இருந்து வருபவையே! வெளிநாடுகளில் கூட வெஜிடேரியன் எனில் தனிக் கரண்டிகள், தட்டுகள் தான் பயன்படுத்துவாங்க! அதே போல் தனி செக்‌ஷனும் அங்கே சில ஓட்டல்களில் உண்டு. இங்கே சென்னை ஐஐடியில் சைவம்னு தனியா தனிப் பாத்திரங்கள், தனி ஹால், தனித் தட்டுக்கள்னு வைச்சிருப்பதால் அதைத் தீண்டாமைனு சொல்லிப் போர்க்கொடி தூக்கி இருக்காங்க! இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வருமோ தெரியலை! (

      Delete

  2. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய். ஜொமோட்டோ விஷயத்தில் எங்கே ஏன் எப்படி என்ற மூன்று விஷயங்களையும் ஆராயவேண்டும்.
    மற்றபடி எச்சில் என்பது அவரவர் எண்ணத்தைப்பொறுத்தது. பிள்ளை தரும் எச்சில் சாக்லேட் அம்மாவுக்கு அமிர்தம். பள்ளியில் தோழன் தந்த காக்காக்கடி கமர்கட் உண்மையான தோழமையை உறுதிப்படுத்தும்.
    ஏன் எதற்க்கெடுத்தாலும் உதடோடு உதடு முத்தம் கொடுத்துக் கொள்கிறார்களே வெளிநாட்டினர் அவர்கள் அது தீமை என்று உணரவில்லையே?

    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. ஜே கே ஐயா... விருப்பத்தோடு கொடுக்கும் முத்த எச்சிலையும் யாரோ தொழிலாளியின் எச்சில் பட்டதையும் ஒன்றென சொல்லி ஏற்றுக்கொள்ள முடியாது...
      ஆனா உங்கள் முதல் வசனத்தோடு நானும் ஒத்துப் போகிறேன்.

      இந்த எச்சிலில் அசுத்தம் எனச் சொல்வதைவிட அருவருப்பெல்லோ...

      Delete
    2. ஜேகே அண்ணா, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் ஜொமோட்டோ தரப்பில் அது மதுரை எனவும் அந்தக் குறிப்பிட்ட ஊழியரை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாகவும் அவங்க வலைப்பக்கம் பதிந்திருக்கின்றனர். இது செய்தியாகவும் வந்திருக்கு. ஆகவே உண்மை என்றே தெரியவருகிறது.

      Delete
    3. குழந்தை அம்மாவுக்குக் கொடுப்பதும், அம்மா குழந்தைக்குக் கொடுப்பதும் பாசத்தினாலும் நேசத்தினாலும். இது அப்படியா? இரண்டையும் ஒன்றாக நீங்கள் பார்க்கலாம். எனக்கெல்லாம் அவ்வளவு பெருந்தன்மை இல்லை. அதோடு காதலில் கொடுத்துக் கொள்ளும் முத்தமும் இருவரின் சம்மதத்தின் பேரில் தான்! ஆனாலும் அதையும் என்னால் ஏற்க முடியாது! இருவர் வாயும் சுத்தமாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

      Delete
    4. நான் பார்த்தவரை வெளிநாடுகளில் பொது இடங்களில் உதடோடு உதடு முத்தம் கொடுப்பவர்களை இதுவரை கண்டதில்லை. அத்தகைய சந்தர்ப்பம் வாய்க்கவில்லை! :)))))

      Delete
    5. அதிரடி சொல்வதை ஆமோதிக்கிறேன்.

      Delete
    6. ஜேகே சாரின் கருத்து ஆச்சர்யம் அளிக்கிறது. கஸ்டமர்கள் ராமரா, இல்லை அவர்கள்தான் சபரியா!

      Delete
    7. வாங்க ஶ்ரீராம், அவருக்குப் பிடிச்சிருக்கலாம், அல்லது ஏற்கும் மனோநிலையில் இருக்கலாம். இது அவர் விருப்பம்! நமக்கென்ன! என்னைப் பொறுத்தவரை இதில் பெருந்தன்மை என்பதே சிறிதும் இல்லை.

      Delete
    8. ஸ்ரீராம். கஸ்டமர்கள் காளத்தீஷ்வரர் டெலிவரி பாய் கண்ணப்பர். சுவைத்துப் பார்ப்பது பிரியாணி. எப்படி????

      Delete
    9. வீட்டில் கூட சமைத்து முடிந்ததும் உப்பு, காரம் சரியா இருக்கா என சுவைத்துப்பார்ப்பது உண்டு ஜேகே அண்ணா. ஆனால் எச்சில் செய்தோ அல்லது நக்கியோ அல்ல. அந்தச் சுவைத்துப் பார்க்கும் வழக்கம் கூட சமைத்து முடிந்து இறைவனுக்கு அர்ப்பணித்த பின்னர் தான்! கண்ணப்பர் விஷயமே வேறு. அதோடு இதை ஒப்பிட முடியாது. சபரி--ராமர் விஷயத்தை ஒப்பிடுகிறாப்போல் தான் இதுவும். என்னதான் சப்பைக்கட்டுக் கட்டினாலும் இந்த நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதே!

      Delete
    10. முக்கியமான பண்டிகைநாட்கள், அமாவாசை, ச்ராத்தம், போன்ற நாட்களில் ஒரு துளிக்கூட வாயில் போட்டுக்காமல் சமைப்போம். எங்க வீடுகளில் தினசரி சமையலே முன் கூட்டிச் சுவைத்துப் பார்க்கும் வழக்கம் இல்லை. சாப்பிடும்போது தான்.

      Delete
    11. வீட்டில் கூட சமைத்து முடிந்ததும் உப்பு, காரம் சரியா இருக்கா என சுவைத்துப்பார்ப்பது உண்டு ஜேகே அண்ணா. ஆனால் எச்சில் செய்தோ அல்லது நக்கியோ அல்ல. அந்தச் சுவைத்துப் பார்க்கும் வழக்கம் கூட சமைத்து முடிந்து இறைவனுக்கு அர்ப்பணித்த பின்னர் தான்! கண்ணப்பர் விஷயமே வேறு. அதோடு இதை ஒப்பிட முடியாது. சபரி--ராமர் விஷயத்தை ஒப்பிடுகிறாப்போல் தான் இதுவும். என்னதான் சப்பைக்கட்டுக் கட்டினாலும் இந்த நிகழ்ச்சி தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதே!//

      யெஸ் யெஸ் அதே அதே....அதிராவின் கருத்தையும் டிட்டோ செய்கிறேன்...

      கீதா

      Delete
  3. மிகவும் வருந்ததக்க செயல்.
    நீங்கள் சொல்வதுபோல தவறுகளை நியாயப்படுத்தி பேசுவதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.

    எந்த பதவியும் இல்லாமல் சசிகலா குடும்பம் பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்து உள்ளது. அதையும் ஆதரித்து பேசும் கூட்டமும் இருக்கிறதே...

    கலி முத்திதான் போனது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, உண்மை தான் நீங்க சொல்வது! இப்போதெல்லாம் எவ்வளவு பெரிய தவறு செய்தார்கள் எனப் பார்த்து அதற்கென விருது கொடுப்பார்கள் என நினைக்கிறேன்.

      Delete
    2. சசி - சொத்துகளை விடுங்கள். கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர் 50 ரூபாய் அல்லது 60 ரூபாய் லஞ்சம் கேட்கிறார் என்று சொன்னதற்கு நம் நண்பர்களே அதற்கு தப்பேயில்லை, தொழிலாளிக்கு உதவி, எங்கெங்கோ ஏதேதோ வீண் செலவு செய்கிறோம் என்றெல்லாம் சொல்லி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

      Delete
    3. ஶ்ரீராம், நீங்க சொல்வது போல் தான் நாங்களும் சிலின்டர் சப்ளை செய்பவர் கேட்கும் கூடுதல் பணத்தைக் கொடுக்க மாட்டோம் என்று சொன்னதோடு இந்தியன் ஆயிலில் புகாரும் கொடுத்தோம். அதன் பலன் அவர் எங்களுக்கு அடுத்தாற்போல் கொடுக்கவேண்டிய ரீஃபில் சிலின்டரை டெலிவரி செய்யவே இல்லை. விஜிலன்ஸ் மூலமாப் போய்ச் சொன்னதும் மாலை ஏழு மணி போல் அவசரம் அவசரமாக சப்ளை செய்து விட்டு அதுவும் வாசலில் இருந்தபடியே வாசல் கோலம் போடும் இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டார். அதுக்கப்புறமா நாங்க டியுசிஎஸ்ஸிலும் போய்ச் சொன்னதும் அவரை மாற்றல் செய்தார்கள்.

      Delete
    4. ஸ்ரீராம் அதேதான்...ரொம்பவே கூடுதலாகத்தான் வாங்குகிறார்கள். ஆதரவுக் கூட்டம் வேறு இதுக்கு. இதுவும் லஞ்சம் தான் இப்படித்தான் எல்லா இடங்களிலும் லஞ்சம் புகுகின்றது.

      இங்கு பங்களூரில் இன்னும் தெரியவில்லை. இன்னும் எங்களுக்கு இந்த வீட்டு கேர் டேக்கர் ரென்டல் அக்ரீமென்ட் கொடுக்கவெ இல்லை நாங்கள் அது எழுத்து வடிவத்தையும் கொடுத்தாச்சு இன்னும் வரலை. கேஸ் கடிதம் சென்னையிலிருந்து இங்கு மாற்றலாகி வந்தாச்சு ஆனால் ரென்டல் அக்ரீமென்ட் இல்லாததால் அட்ரஸ் ஃப்ரூஃப் இல்லாததால் இன்னும் கேஸ் வரலை. வந்தால்தான் தெரியும் இங்கு எவ்வளவு வாங்குறாங்கன்னு..

      கீதா

      Delete
    5. எங்களுக்குத் தெரிஞ்ச ஒரு சிலின்டர் டெலிவரி பாய்க்கு 3 ஆட்டோக்களும், 2 கார்களும் ட்ராவல்ஸ் வைத்திருப்பதன் மூலம் ஓடுகின்றன! ))))

      Delete
  4. முதலில் இவர்களுக்கெல்லாம் வருடாந்திர அல்லது ஆறு மாதத்துக்கொரு தரம் என மருத்துவ பரிசோதனைகள் உண்டா?... என்பது தெரியவில்லை..

    சாலையின் சாக்கடையோர கடைகளை விடுங்கள்..

    இத்தனை பொறுப்புள்ள இந்த குழுமங்கள் தயார் செய்யும் உணவுக்கான மூலப் பொருட்கள் அனைத்தும் முழுமையான தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டவையா?...

    தளவாடப் பொருட்கள்/ பாத்திரங்கள்/சமையலறை எல்லாம் முறையாக அங்கீகரிக்கப்பட்ட இரசாயனங்களைக் கொண்டு நாள் தோறும் அல்ல -

    வேளை தோறும் சுத்தம் செய்யப்படுகின்றனவா!?..

    இந்தக் குழுமங்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் வண்டியின் சுத்தம் பராமரிக்கப்படுகின்றதா?...

    அவற்றின் ஓட்டுனர்களும் பணியாளர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டனரா?...

    சமையல் கூடத்தின் - சமையல்காரர் முதற்கொண்டு துப்புரவாளர் வரைக்கும் அவர்களுக்கு முடி திருத்துவோர் முதல் உடை வெளுப்போர் வரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டார்களா!...

    உஷ்!.. இப்பவே கண்ணக் கட்டுதே!...

    இதுக்கு மேலயும் இருக்குறப்பவே சில ஆளுங்க செய்யிற தில்லாலங்கடி வேலைங்க எல்லாம் தெரியும்!..

    இப்படியெல்லாம் தரக்கட்டுப்பாடுகள் நம் நாட்டில் (ஒருவேளை) இருந்தும் நடைமுறைப்படுத்துறது இல்லை..ன்னா..

    அறிவின்மை/ அலட்சியம்/ சோம்பேறித்தனம்/ கண்டுக்காதே..ன்னு கையூட்டு/ பாவத்துக்கு அஞ்சாமை -
    இதுகள்..ல ஒன்னு தான் காரணமாக இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை, இத்தனையையும் நீங்க கேட்டால் எந்த உணவும் இணையம் மூலம் வாங்கிச்சாப்பிட முடியாது! கண்ணையும் புத்தியையும் மூடிக்கொண்டால் தான் இதை எல்லாம் ஏற்க முடியும்!

      Delete
    2. கருத்துரையில் நான் சொல்லியிருக்கின்றவை - இங்குள்ள தரக்கட்டுப்பாட்டு விதிகளில் ஒரு சில தான்..

      அத்தனை கட்டுப்பாட்டுகளுக்கும் உட்பட்டுத் தான் இங்கே Catering Company கள் இயங்குகின்றன..

      மளிகைக் கடைகளுக்கும் உணவகங்களுக்கும் காய்கறி / இறைச்சி/ மீன் விற்பவர்களுக்கும்
      அட்டைப் பெட்டிகளின் உள்ளே உள்ள உணவு வகைகளைக் கையாளுபவர்களுக்கும் கூட கடுமையான அதரக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன..

      அவற்றை மீறுவோர்க்கு மிகக் கடுமையான தண்டனைகள் - உடனடியாக!..

      குவைத் மட்டுமல்லாது அரபு நாடுகள் எல்லாவற்றிலும் கடுமையான தரக்கட்டுப்பாடுகள்...

      இருந்தாலும் நான் உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டேன்..
      எதாவது (சிறு) தவறுகளைக் கண்டு விட்டால் அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டேன்...
      அதற்காக வெளியில் சாப்பிடுவது இல்லை என்றெல்லாம் கிடையாது...

      உணவகம்/ பரிமாறுபவரின் சுத்தம், முக மலர்ச்சி, உணவின் தரம் - சுவை!.. முக்கியம்...

      நேற்றைக்குக் கூட காலையில் ஒரு அவசர வேலை...
      அறையில் சமையலை முடித்து வைத்து விட்டு சிட்டிக்குச் சென்று வேலையை முடித்து விட்டு அங்கொரு உணவகத்தில் இரண்டு வடை, ஒரு டீ பேக்கிங் ல் வாங்கிக் கொண்டு அதே உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வந்தேன்..

      காரணம் - விரதத்தில் இருப்பதால்!...

      Delete
    3. அட, இணையத்தை விடுங்கள். நாம் இப்போது சென்று சாப்பிடும் பெரிய உணவகங்களின் உணவு தயார் செய்யுமிடத்தை எப்போதாவது சென்று பார்த்திருக்கிறோமா?

      Delete
    4. துரை, நாங்க இணையம் மூலம் எந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்வதில்லை. முக்கியமான பில்கள் கட்டுவது தவிர! அதுவும் வங்கி மூலம். மற்றபடி எந்தப் பொருளும் ஆர்டர் செய்து வாங்கியதில்லை. அதற்கான தேவையும் இல்லை. இங்கேயும் நீங்க சொல்றாப்போல் தரக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால் பின்பற்றுவோர் இல்லை.மற்றபடி நல்ல தரமான ஓட்டல் எனில் நாங்களும் சாப்பிட்டது உண்டு. அதை ஓர் பழக்கமாகக் கொள்வதில்லை. உங்களோட நிலைமை வேறே! தனிக்குடித்தனம். கைச்சமையல். என்றாவது மாறுதலுக்கு ஓட்டலுக்குப் போகத் தோன்றும் தான்!

      Delete
    5. ஶ்ரீராம், இங்கே நாங்கள் எப்போதாவது சாப்பாடுக்கு சாம்பார், ரசம், கறி, கூட்டு வாங்கும் ஓட்டலில் சமையலறைக்குச் சென்று தான் மாமா வாங்கி வருவார். அந்த ஓட்டலில் தோசை போடும் இடம் வாசலிலேயே இருக்கும். எல்லோரும் பார்க்கும்படி தான் தோசை போடுவார்! சுத்தமாகவே பராமரித்து வருகின்றனர். இன்னொண்ணு இருக்கு! ரொம்பவே பழைய ஓட்டல். அங்கே நாங்க போவதில்லை. முக்கியமா நான் அங்கே இருந்து வாங்கி வந்தால் சாப்பிடவே மாட்டேன். சுத்தம் போதாது!

      Delete
    6. பெரிய ஸ்டார் ஓட்டல்களில் சமையலறை சுத்தமாகப் பராமரிக்கப்படுவதாகவே சொல்கின்றனர்.

      Delete
  5. கீசாக்கா இந்த ஷொமாட்டோ பற்றி எனக்கும் தெரியும், இந்தியாவில் இதுவும் இன்னொரு கொம்பனியும்தான் இப்போ டெலிவரியில் முன்னணியில் இருக்கிறது, அதனாலே வேண்டுமென்றே போட்டியில் யாராவது ஷொமாட்டோவை கீழே தள்ளவென்றே செய்திருக்கலாம். இப்போதான் எப்படிப்பட்ட வீடியோவும் காசு கொடுத்தால் செய்ய முடியுமே, அதனால எந்த வீடியோவையும் முழுமையாக நம்பிடக்கூடாது. இன்னொன்று...

    ReplyDelete
    Replies
    1. அதிரடி, ஜொமோட்டோ அதிகாரபூர்வமாக அந்த மனிதரை வேலை நீக்கம் செய்து விட்டதாக அறிவித்துள்ளது. இது நடந்த இடம் மதுரை எனவும் தெரிவித்திருக்கிறது. போட்டியிலே கீழே தள்ளச் செய்தது எனில் அந்த இன்னொரு கம்பெனியும் தங்கள் தரத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இல்லை எனில் அவங்களுக்கும் இந்த கதி தான் வரும்!

      Delete
  6. இன்னொன்று, இந்த ஷொமாட்டோ மூலம் எப்போதாவது உணவு வாங்கியிருக்கிறீங்களா? வாங்காவிட்டால் உங்களுக்கு அதுபற்றி தெரிய வாய்ப்பில்லை, ஓடர் கொடுத்ததிலிருந்து அப்டேட் பண்ணிக்கொண்டே இருப்பார்கள், கலெக்ட் பண்ணியாச்சு வந்து கொண்டிருக்கு என்றெல்லாம் மெசேஜ் வரும் ஓடர் கொடுத்து 15..25 நிமிடத்தில் 99 வீதமும் வந்துவிடும்.. அதுக்குள் எங்கே திறப்பது சாப்பிடுவது மீண்டும் பக் பண்ணுவது? தெரியவில்லை எனக்கு... ஆண்டவனுக்கே உண்மை பொய் வெளிச்சம்.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, அதிரடி, நான் பக்கத்து கேட்டரர் கிட்டே குழம்பு, ரசம் வாங்கவே மேலேயும் கீழேயும் பார்ப்பேன். அதுவும் அவங்க கொண்டு வந்தெல்லாம் தரமாட்டாங்க! நாம் தான் பாத்திரம் எடுத்துப் போய் வாங்கி வரணும். இங்கே எனக்குத் தெரிந்து ஒரு கேட்டரர் சீல் வைத்த அலுமினியம் ஃபாயில் பைகளில் உணவுப் பொருட்களை வைத்து நன்கு சீல் செய்து அனுப்பி வைக்கின்றனர். அதைப் பிரித்தால் கட்டாயமாய்த் தெரிந்து போய்விடும். மிஷினில் கொடுத்துத் தைத்தாற்போல் சீல் வைத்திருப்பார்கள். எப்போதாவது அவசியம் நேரிட்டால் அதை நம்பி வாங்கலாம். நான் பொதுவாக வெளியில் வாங்கிச் சாப்பிடுவதை ஏற்பது இல்லை. திங்கள் அன்று வீடு சுத்தம் செய்யும்போது சமைக்க முடியவில்லை. அப்போத் தான் இங்கே ஒரு ஓட்டலில் மாமாவே நேரில் போய் வாங்கி வந்தார். அவங்களையும் நாங்க கொண்டு தரச் சொல்லமாட்டோம். அவங்க டோர் டெலிவரி உண்டுனு சொன்னால் கூட! எனக்கு சந்தேகமும் அதிகம், அலர்ஜியும் அதிகம்! அடையார் ஆனந்த பவன் ஓட்டலுக்கு (திருச்சியில்) சாப்பிடச் சென்றோம் அவசியத்தின் பேரில்! அங்கே நான் சாம்பார் இட்லி ஆர்டர் செய்தேன். தட்டில் இட்லிகளைப் போட்டு விட்டு சாம்பாரை ஊற்றிய ஊழியர் அதிலிருந்து எதையோ மற்றொருவரிடம் காட்டிவிட்டு எடுத்துக் கீழே போட்டுவிட்டு எனக்குக் கொண்டு வந்தார். நான் அந்த ஆர்டரையே கான்சல் செய்து விட்டேன். கடைசிவரைக்கும் அங்கே சாப்பிடவே இல்லை.

      Delete
    2. அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிட்டால் கட்டாயம் செலவு கூடுதல் ஆகும்.என்னைப் பொறுத்தவரை அதெல்லாம் லக்சுரி!. சினிமாவையும் அப்படித் தான் நினைப்பேன். அதனாலேயே அதிகம் டிக்கெட் வாங்கிசினிமாபார்த்தது இல்லை. பின்னாட்களில் பார்த்ததும் தொலைக்காட்சிகளிலும் கேபிள் டிவி மூலமும் தான்!

      Delete
    3. நாங்கள் வாங்கி இருக்கிறோம். உண்மைதான், ஆர்டர் எடுக்கப்பட்ட நேரத்திலிருந்து ஆன் தி வே என்றெல்லாம் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கும். எனினும் அதற்கு நடுவில் இதுவும் சாத்தியமே....

      Delete
    4. எனக்கு இதைப் பற்றி அவ்வளவாத் தெரியாது! கால் டாக்சி கூட ஃபாஸ்ட் ட்ராக்கில் தான் புக் செய்வோம். இருமுறை ஓலாவில் புக் செய்துவிட்டுக் கடைசி நிமிடத்தில் அவங்களே கான்சல் செய்துட்டாங்க, காரணமே இல்லாமல்.

      Delete
    5. ஆஆஆவ்வ்வ் நான் அந்த வீடியோ இப்போ பார்த்தேன் கீசாக்கா... அது அப்பட்டமான நடிப்பு, நடு ரோட்டோரத்தில் ஸ்கூட்டரில் இருந்து கொண்டே சாப்பிடுகிறார்... அப்படி சாப்பாட்டுக்கே வழியில்லாத பிச்சைக்காரரோ அவர்... இது வேண்டுமென்றே மற்ற கொம்பனி ஆள்செட் பண்ணி செய்த வேலையாம்.. போட்டி பொறாமைதான் அனைத்துக்கும் காரணம்...

      இதை நம்ப வேண்டாம் ஆனா ஶ்ரீராம் சொன்னதைப்போல் ஹோட்டல் கிச்சின் காட்சிகள் ரகசிய கமெரா மூலம் எத்தனையோ வெளி வந்துதே... அதை எல்லாம் பார்த்தால் எங்கும் சாப்பிடவே முடியாது பட்டினிதான்...

      இதனாலதான் நாங்கள் சின்னவர்களாக இருந்தபோது ஒரு சைவக் ஹோட்டேல் தவிர வேறு எங்கும் அப்பா எதுவும் சமைத்த உணவு வாங்கித் தர மாட்டார்ர்ர் வடைகூட.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
    6. இருக்கலாம் அதிரடி, ஆனாலும் பொதுவான நம்பகத்தன்மை என்பது இல்லாமல் தானே போகிறது! போட்டிக்கம்பெனிக்கும் வியாபாரம் ஆகுமா என்பது இனி கேள்விக்குறிதான்.

      Delete
    7. //ஓடர் கொடுத்து 15..25 நிமிடத்தில் 99 வீதமும் வந்துவிடும்.. //20 நிமிஷத்துக்குள் எப்படிக் கொண்டு சேர்க்க முடியும்? உணவை வாங்க வேண்டிய ஓட்டல் நம் வீட்டிலிருந்து அவ்வளவு கிட்டே இருந்தால் நாம் ஏன் ஆன்லைனில் ஆர்டர் செய்யப் போறோம்?

      Delete
    8. ஆமாம் கீதாக்கா நாங்களும் ஆன்லைனில் வாங்கியதில்லை.

      கீதாக்கா உங்க கருத்துகளை அப்படியே டிட்டோ செய்து ஆதரிக்கிறேன்...

      கீதா

      Delete
    9. அதோட பதினைந்து இருபது நிமிஷத்துக்குள்ளாக உணவைத் தயார் செய்வது எப்படி? ஏற்கெனவே சமைச்சு வைச்சதை மைக்ரோவேவ் பண்ணினால் கூட சுமார் பத்து நிமிஷம் பிடிக்கும்.

      Delete
  7. சமூக சீரழிவுவிற்கு இதுவும் ஒரு உதாரணம் அம்மா....

    ReplyDelete
  8. யார் எங்கு இதை ஆதரித்திருக்கிறதிகள்?!! ஆச்சர்யம். மனைவி கணவன் எச்சிலையோ, கணவன் மனைவியின் எச்சிலையோ சாப்பிடவே யோசிக்கும் இந்தக் காலத்தில் இதை எப்படி பொறுப்பார்கள்?!!

    ReplyDelete
    Replies
    1. முகநூலில் சில நண்பர்கள் பதிவுகள் மூலம் படித்தேன் ஶ்ரீராம். இது முக்கியமாய் ஆரோக்கியத்துக்குக் கெடுதல்!

      Delete
    2. ஆரோக்கியத்தை விடுங்கோ கீசாக்கா... யாரோ ஒருவரின் கைவிரல் நம் உணவில் பட்டதென்றாலே எவ்ளோ அருவருக்கும்.. சமைப்பது வேறு இது பார்சலை திறந்து எனில்... எவ்ளோ அருவருப்பாக இருக்கும்...

      Delete
    3. யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸு

      Delete
    4. ஹைஃபைவ் எல்லொருடனும்....அதே அதே...ஹையோ எப்படி....சாப்பிடுவது...ஏற்கனவே இப்படி சாப்பிட்டதில்லை இப்போ இது எனக்கு நியூஸ் கீதாக்கா. ஸோ திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்...எங்கள் குடும்பத்தில் சிலர் உள்ளனர் இப்படி ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதுவும் அடிக்கடி...இதைச் சொல்லனும் அவங்களுக்கு..

      கீதா

      Delete
  9. தொழிலில் ஒரு நேர்மை வேண்டாமா? இதை எப்படி ஆதரிக்கிறார்கள் என்று புரியவில்லை. அவர் செய்ததை விட, இந்த ஆதரவு அதிர்ச்சியாக இருக்கிறது. அடுத்தவர் காசைத் திருடுவதற்கு சமம் இது. மீண்டும் செலோடேப் எல்லாம் போட்டு ஓடுவதைப் பார்த்தபோது பாவம் அந்த ஆர்டர் கொடுத்தவர் என்ற எண்ணம் எழுந்தபோதே, நான் ஸ்விக்கியில் வாங்கி உண்ட நேரங்களும் நினைவுக்கு வந்து சங்கடப்படுத்தியது உண்மை.

    ReplyDelete
    Replies
    1. நாங்க நல்லவேளையா அதிலெல்லாம் ஆசை வைக்கலை. அம்பேரிக்காவில் கூட சூடாக பிட்சா வேணும்னால் பையர் இத்தாலியன் உணவகத்துக்குக் கூட்டிச் செல்வார். ஆர்டர் கொடுத்துச் சாப்பிடலாம். அல்லது நமக்குத் தேவையானதை நாமே வாங்கி வந்து வீட்டில் மைக்ரோவேவில் சூடு செய்து சாப்பிடலாம். அநேகமாய் அவங்க பிட்சா பேஸ் வாங்கி வந்து வீட்டிலேயே அவனில் பேக் செய்து தான் சாப்பிடுகின்றனர். அதே போல் உணவகத்திலும் தொலைபேசி மூலம் உணவு ஆர்டர் செய்தாலும் நேரில் போய்த் தான் வாங்கி வருகின்றனர். வீட்டுக்கு டெலிவரி செய்யச் சொல்லுவதில்லை.

      Delete
  10. அப்படி சாப்பிட நேரம் கொடுக்காமல் யாரும் அவரை வேலை செய்யச் சொல்ல மாட்டார்கள். வரும் ஆர்ட்ரை ஏற்றுக்கொள்வது அவர் விருப்பம். எந்த அளவு ஆர்டர் எடுத்து டெலிவரி செய்கிறார்களோ, அந்த அளவு கமிஷன். அவர்கள் சம்பளம் கமிஷன் அடிப்படையில்தான் தரப்படுகிறது. எதற்கு இடைவெளி விடாமல் ஆர்டரை ஏற்கவேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், இந்தக் குறிப்பு அங்கே யாராலும் சொல்லப்படவில்லை. என்னவோ அவரைச் சாப்பிடக் கூட நேரமில்லாமல் உணவு டெலிவரி செய்யச் சொல்லிப் படுத்தியதால் தான் பசி தாங்காமல் எடுத்துச் சாப்பிட்டதாகச் சொல்கின்றனர். :(

      Delete
    2. அது அப்பட்டமான செட்டப் வீடியோ கீசாக்கா... நன்கு தெரிவு செய்தே டெலிவரிக்கு நியமிப்பார்கள், ஒளிச்சு எங்காவது மூலையில் இருந்து சாப்பிட்டால்கூட ஓரளவு நம்பலாம் இது பப்ளிக் ரோட்டில் பிரித்து உண்கிறார் இதை எப்படி நம்பச் சொல்றீங்க அது படு பொய் வீடியோ...

      Delete
    3. என்ன கீசாக்கா இன்னுமா நம்புறீங்க படி எனில் கடையில ரீயும் பன் உம் வாங்கி சாப்பிட்டிருக்கலாமெல்லோ

      Delete
    4. அது தான் என் கேள்வியும் அதிரடி. ஏன் வாடிக்கையாளர்களின் உணவில் கை வைக்கணும். இது வேணும்னு செய்யப்பட்டது என்பது புரிகிறது. இனிமேல் இப்படி உணவு ஆர்டர் செய்து வாங்குபவர்கள் எங்கே வாங்கினாலும் யோசிப்பார்கள்.

      Delete
  11. அந்த ஊழியர் செய்தது தவறே! தனது வேலையில் ஏமாற்றுகிறார் தானே? பணத்தில் வேலை செய்பவர் களவாடினால் திருட்டு தானே?
    சென்னை வந்த பிற்கு நாங்களும் ஆன்லைனில் ஆர்டர் பண்ணி சாப்பிடுவதுண்டு (போட்டிக் கம்பெனியில்!!)- (எனக்கு ஒரு வேளை சமையலில் ரெஸ்ட் என்ற பெயரில்! :)) ) ட்ராக்கிங் வசதியும் உண்டு. இந்த ஆர்டர்கள் நாம் விரும்பும் ஹோட்டல்களில் இருந்து வருகின்றன. சமயத்தில் டிஸ்கவுண்டுகளும் உண்டு.
    சமீபத்தில் ப்ளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட பின் பாக்கிங் பொட்டலங்களாக வருகின்றன. இது அந்த ஊழியருக்கு வசதியாகப் போயிருக்கலாம். zomato வில் இனி tamper proof பாக்கிங்கில் தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம்! பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மிகிமா. இப்போல்லாம் பார்க்கவே முடியறதில்லை. இங்கேயும் எனக்கு ஒரு வேளை சமையலில் இருந்து ஓய்வு என்னும் பெயரில் வாங்குவோம் தான். ஆனால் கண்ணெதிரே சமைத்துத் தருவார்கள்! அல்லது அலுமினியம் ஃபாயிலில் நன்றாக சீல் வைக்கப்பட்டு வரும். அதைப் பிரித்தால் தெரிஞ்சுடுமே! ஆகவே நம்பி வாங்கலாம்.

      Delete
  12. சமையல் நிகழ்ச்சிகளில் கூட இருக்கும் தொகுப்பாளர் சமையலை ருசி பார்த்து விட்டு அந்த ஸ்பூனை அப்படியே அந்த கிண்ணத்தில் போட்டு விடுவார் தனியாக அதை வைக்க மாட்டார்.

    அதை பார்க்கும் போதே கஷ்டமாய் இருக்கும்.

    பள்ளியில் படிக்கும் போதுகூட தோழிகளுடன் சாப்பாட்டை முன்பே அவர் அவர் டிபன் பாக்ஸ் மூடியில் சாப்பிடும் முன்பே வைத்து விடுவேன். அவர்களும் அப்படி வைப்பதைதான் விரும்புவேன்.
    எச்சில் கையால் கொடுத்து வாங்கி கொள்வது இல்லை.

    ஆர்டர் செய்த சாப்பட்டை இப்படி சாப்பிடுவது கொடுமை.
    வெளியில் ஆர்டர் செய்து சாப்பிட பயமாய் இருக்கிறது.
    முடியவில்லை என்றால் கூட ஒரு சாதம் மட்டும் வைத்துக் கொண்டு தயிர் சாதம் சாப்பிட்டு விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கோமதி, கிண்ணத்தில் என்ன? அதுவாவது தனியா இருக்கும். அப்புறமா அவரையே சாப்பிடச் சொல்லலாம். ஒரு சில பெண்மணிகளின் சமையல் நிகழ்ச்சிகளில் அடுப்பில் சமைக்கும் உணவையே ஸ்பூனாலோ கரண்டியாலோ எடுத்து நக்கிச் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் அந்தக் கரண்டியை அந்த மொத்த உணவிலும் போடுவார்.:(

      Delete
    2. கோமதிக்காவின் கருத்தையும் நீங்க சொல்லியிருக்கும் கருத்தையும் சொல்ல வந்தேன் இங்கு சொல்லிட்டீங்க..ஹையோ கொடுமை அது...

      நம் வீட்டில் எல்லாம் இப்படி டேஸ்ட் பார்க்கவே அனுமதி கிடையாது என்பது ஒரு பக்கம் நாமும் அப்படிச் செய்வதில்லை. இறைவனுக்கு வைத்த பின்னர்தான் டேஸ்ட் பார்ப்பது....அதுவும் நான் பாட்டி சொல்லி வளர்ந்ததால் பாட்டி யாரையாவது அழைத்து கொஞ்சம் தனியாகக் கொடுத்து வாயில் தூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊக்கிப் போட்டுச் சாப்பிடச்க் சொல்லித்தான் டேஸ்ட் பார்ப்பார் அதுவும் விருந்தினர் வருவதென்றால் மட்டுமே...இல்லை என்றால் அதுவும் இல்லை. நானும் அப்படியே பழகிவிட்டதால் சாப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் இல்லாமல் (விருந்தினர் வருவது என்றால் மட்டும் வீட்டிலுள்ளோரைச் சாப்பிட்டுப் பார்க்கச்சொல்லுவேன்...அதுவும் வாயில் படக் கூடாது...) வீட்டிலுள்ளோர் உப்பு காரம் எல்லாம் கம்மியாக இருந்தாலும் கூடுதலாக இருந்தாலும் அப்போதுதான் அவர்கள் சொல்லித்தான் தெரியும்....அவர்களும் குற்றம் சொல்லாமல் சாப்பிட்டுவிடுவார்கள்...

      கீதா

      Delete
  13. யார் செய்தாலும் குற்றம் குற்றமே வலையில் வாசிப்பவர்களில்பலரும் எதையும் அப்படியே நம்புவது இல்லை

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ல நினைப்பது என்னனு புரியலை ஐயா!

      Delete
  14. இந்த வீடியோ நம்பத் தகுந்தது இல்லைனு எனக்குத் தோணுது. பட்டப் பகல்ல திருட்டுத்தனம் செய்யறவன் எல்லார் கண் முன்னும் செய்வானா? இல்லை ஒருவேளை அந்த கம்பெனி அவனுக்கு போதுமான அளவு பணம் தரலைனு கம்பெனி பேரைக் கெடுக்க இப்படி செய்திருக்கலாம்.

    இதைப்பற்றி நாளை எழுதறேன்.

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் நெ.த. ஆனால் இதை எடுக்கும்போது அந்த மனிதர் காமிராவுக்கு முன்னால் முகத்தைக் காட்டலை! சாப்பிட்டுவிட்டு எல்லாத்தையும் மறுபடி பாக் செய்கிறார். பொய்யாகச் செய்தாலும் ஏன் இப்படிச் செய்யணும்? இதன் மூலம் ஆன்லைன் ஆர்டர்கள் யாராக இருந்தாலும் போட்டிக்கம்பெனி உட்படக் குறைந்து தான் போகும். யாரும் நம்பி ஆர்டர் செய்ய மாட்டார்கள்! எச்சல் பரவாயில்லை என்பவர்கள் வேண்டுமானால் ஆர்டர் பண்ணலாம்.

      Delete