எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 18, 2019

கோலாப்பூரை நோக்கி!

மங்கள்வார்ப்பேட்டையில் சாய் ஹெரிடேஜ் என்னும் லாட்ஜில் வந்து ஆட்டோவை நிறுத்தினார் ஆட்டோ ஓட்டுநர். இங்கேயும் சுமார் ஏழு, எட்டுப் படிகள். எல்லாம் கறுப்பு கிரானைட் கற்களால் ஆனவை! கொஞ்சம் வழுக்கினாலும் அதோகதி தான். இரு பக்கமும் பிடித்துக் கொள்ளும் பிடிமானச் சாய்வுப் பகுதியும் ரொம்பவே ஓரத்தில் இருந்தது. என்றாலும் அந்த ஓரத்திற்கே போய்ப் படிகளில் மேலே ஏறினோம். அங்கே இருந்த வரவேற்பு அறையில் இருந்தவர் அந்த லாட்ஜின் மானேஜர் என்று சொன்னார். அவர் எங்களைப் பார்த்ததுமே எங்களால் ஏற முடியவில்லை என்றதுமே கீழேயே இருந்த ஓர் அறையைக் காட்டினார். லிஃப்ட் இல்லையா என்று கேட்டதுக்கு, இருப்பதாகவும், இது கீழே இருப்பது பல விதங்களில் உங்களுக்கு வசதி எனவும் சொன்னார். நானும் அறையைப் போய்ப் பார்த்தேன். நல்ல பெரிய அறையாக இருந்தது. ஏசியும், டிவியும் இருந்தது. கழிவறையும் நாங்கள் கேட்கிறாப்போல் மேல்நாட்டு முறை என்பதோடு சுத்தமோ சுத்தம். அதைப் பார்த்ததுமே நான் தலையை ஆட்டிவிட்டேன்.

அறை வாடகை 2500 ரூ என மானேஜர் சொல்ல, நான் அவரிடம் அறையில் காஃபி, தேநீர் வைப்பீங்களா எனக் கேட்டதற்கு அதெல்லாம் இல்லை என்றார். அப்போ காம்ப்ளிமென்ட்ரி ப்ரெக் ஃபாஸ்ட் உண்டா எனக் கேட்டதற்கு அதுவும் இல்லை என்றார்.  அதன் பேரில் நான் அப்போ இந்த அறை வேண்டாம். ரொம்பவே வாடகை ஜாஸ்தி எனத் திரும்ப ஆரம்பித்தேன். மானேஜர் விடவில்லை. அதோடு அந்த ஆட்டோ ஓட்டுநர் வேறே குறுக்கே குறுக்கே பேசிக் கொண்டே இருக்கக் கோபம் வந்த மானேஜரும்,  எரிச்சலான நானும் ஆட்டோ ஓட்டுநரைப் பேசாமல் இருக்கச் சொன்னோம்.அதற்குள்ளாக நம்ம ரங்க்ஸ் அறைக்கு 1500 ரூ வாடகைக்கு மேல் கொடுக்க முடியாது எனத்திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அவர் தானே நிதி மந்திரி! ஆனால் மானேஜர் மாட்டேன்னு சொல்லுவார் என்றே நான் எதிர்பார்த்தால் அவர் 2000 ரூபாய்க்கு இறங்கி வந்தார். நம்மவர் பிடிவாதமாக 1500 ரூபாயிலேயே நிற்கக் கடைசியில் இருவருக்கும் பொதுவாக 1600 ரூபாயில் அறை பேரம் முடிந்தது. நாங்க மானேஜரிடம் ஏற்கெனவே நாங்க பண்டர்பூரிலிருந்து சனிக்கிழமை மதியம் வந்து தங்கத் தான் அறை எனச் சொல்லி இருந்ததால் அவரும் அதற்கு ஒத்துக் கொண்டதோடு இல்லாமல் ஒரு நாள் வாடகையை முன் பணமாக வாங்கிக் கொண்டு ரசீதும் கொடுத்தார். லாட்ஜின் முகவரி அடங்கிய அடையாள அட்டையையும் கொடுத்தார்.

ஒரு பெரிய பிரச்னை தீர்ந்தது. பண்டர்பூரில் இருந்து எந்த நேரம் எப்போ, எப்படி வரோமோ, வந்தால் உடனே தங்க இடம் இருக்கு என நிம்மதி.ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் விட்டால் தானே!எந்த வண்டியில் வரப்போகிறாய் என எங்களைக் கேட்க சோலாப்பூரிலிருந்து வரும் உதான் எக்ஸ்பிரஸ் என நாங்கள் சொல்ல அது மதியம் 3-45க்குப் புனே வருவதாகவும், முதல் நடைமேடைக்கு அருகே தான் நிற்பதாகவும், நாங்க ரயிலில் இருந்து இறங்கியதும் அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத் தொலைபேசியில் அழைப்புக் கொடுக்குமாறும் சொல்லி தன் அலைபேசி எண்ணை எங்களுக்குத் தெரிவித்துவிட்டு எங்களை மீண்டும் புனே ரயில் நிலையத்தில் கொண்டு விட்டார். இதற்குள்ளாக மணி ஏழரை ஆகி இருந்தது. இரவு எட்டு மணி வரை தான் டார்மிடரியில் தங்கலாம்.காலி செய்யணும். ஆகவே நம்ம ரங்க்ஸ் என்னைக் கீழேயே இருக்கச் சொல்லிவிட்டு ஒரு போர்ட்டரைப் பார்த்து இரவு கோலாப்பூர் வண்டியில் ஏற்றிவிடணும் என்றும் ஏ-2 ஆம் எண் பெட்டியில் 7, 9 படுக்கை எண் எனவும் சொன்னார். அந்தப் போர்ட்டர் 300 ரூபாய் முதலில் கேட்டார். ரயில் பத்து மணிக்குத் தான் வருகிறது. அதோடு அது முதல் நடைமேடைக்கும் வராது! ஏழு அல்லது எட்டில் வரலாம். எதில் என்பது வரும்போது தான் தெரியும். ஆகவே அங்கே வரை தூக்கிச் செல்லணும் என்றார். பின்னர் பேரம்பேசி 200ரூக்கு ஒத்துக் கொண்டு ரயில் எங்கே வரும் என்பது தெரியும்வரை எங்களைப் பயணிகள் தங்கும் அறையில் உட்காரும்படி சொல்லிவிட்டுப் போனார்.

வண்டிவருவதற்கு அரை மணி நேரமே இருக்கையில் அந்த வண்டி ஒன்பதாம் நடைமேடைக்கு வருவதாகப்போட்டார்கள். உடனே போர்ட்டர் எங்கிருந்தோ வந்து எங்களை அழைத்துக் கொண்டு அந்த நடைமேடைக்குச் சென்றார். அது மும்பையிலிருந்து வருகிறது. நல்லவேளையாகப் படிகள் உள்ள பக்கம் மேலே ஏற்றிக் கூட்டிச் செல்லாமல் கூடியவரை சரிவான பாதை வழியாகவே கூட்டிச் சென்றார். இருந்தாலும் என்னால் வேகமாகச் செல்ல முடியவில்லை. ஒருவழியாக வந்து சேர்ந்தோம். டிஸ்ப்ளேயில் ஏ2 எங்கேயோ காட்டப் போர்ட்டர் எங்களை எங்கேயோ நிறுத்தி இருந்தார். ஆகவே எங்களுக்குச் சந்தேகம் வந்து நாங்க அந்த டிஸ்ப்ளே பக்கம் போய் நின்றோம். போர்ட்டர் வந்து எங்க பெட்டி அவர் எங்களை நிறுத்தி இருந்த பக்கம் தான் வரும் என்றார். அதே போல் வண்டி வந்ததும் சரியாகப்போர்ட்டர் எங்களை நிறுத்தி இருந்த பக்கமே எங்கள் பெட்டியும் வந்தது. நாங்கள் ஏறிக்கொள்ள சாமான்களைக் கொண்டு வைத்த போர்ட்டர் அதைச் சரிபார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கூலியை வாங்கிச் சென்றார். இருவருக்குமே கீழ்ப்படுக்கைகள் தான். படுக்கை மும்பையிலிருந்து வந்தவர்கள் யாரோ படுத்திருந்தது தெரிய அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் புதிய படுக்கைகள் வாங்கிக் கொண்டோம். படுத்தோம். முதலில் தூக்கம் வரவில்லை என்றாலும் காலை வேளையில் கண்ணை அழுத்தியது. அப்போது பார்த்து ரயில்வே ஊழியர் கோலாப்பூர் வருவதாகச் சொல்லி எல்லோரையும் எழுப்பிச் சென்றார். இந்தச் சேவை இப்போது இங்கே தமிழ்நாட்டில் எல்லாம் பார்க்க முடிவதில்லை. ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸில் ஶ்ரீரங்கம் வரும்போதெல்லாம் இப்படித் தான் ஊழியரிடம் சொல்லுவோம். அவர் நாங்க எழுப்புவதில்லை என்று சொல்லிவிடுவார். ஆகவே சரியான தூக்கம் இருக்காது. ஒவ்வொரு ஸ்டேஷனாக எழுந்து எழுந்து பார்த்துக் கொண்டு வருவோம்.

கோலாப்பூரில் கீழே சாமான்களையும் இறக்கிக் கொண்டு நாங்களும் இறங்கியதுமே ஓர் ஆட்டோக்காரர் எங்களிடம் வந்தார். அவரிடம் நாங்க தங்குமிடம் கோயிலுக்கு அருகே வேண்டும் எனவும் அங்கிருந்து கோயில் நடந்து செல்லும் தூரம் இருந்தால் நல்லது என்றும் சொல்ல அவரும் அப்படிப்பட்டலாட்ஜுக்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார். அவர் கேட்ட தொகை வெறும் ஐம்பதே ரூபாய்கள் தான். முதலில் கூட்டிச் சென்ற லாட்ஜ் நன்றாக இருந்தாலும் அங்கேயும் படிகள், படிகள், படிகள்! அதோடு மேலே அறைகள்! அங்கே செல்லவும் லிஃப்ட் இல்லை! படிகள்! ஆகவே நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்னொரு லாட்ஜ் இன்னமும் புதியதாகவும் நன்றாகவும் அவங்களே சாப்பாடும் கொடுப்பதாகச் சாப்பாடுக்கூடமும் இணைந்து இருந்ததுக்குச் சென்றால் அந்த ஓட்டல் வரவேற்பு ஊழியருக்கு எங்களைப்பார்த்தால் அங்கே தங்குபவர்களாகத் தெரியவில்லை போல! அறையே இல்லை என்று சொல்லிவிட்டார். மேலும் இந்த லாட்ஜும் படிகள் ஏறித் தான் ஆகணும்! நன்றாகக் கவனித்ததில் எல்லாமுமே படிகள், படிகள் தான்! என் நிலைமையைக் கவனித்த ஆட்டோ ஓட்டுநர் மீண்டும் எங்களை வண்டியில் அமர வைத்து அந்தத் தெருவையே சுற்றிக் கொண்டு தெரு முனையில் இருந்த ஓர் சரிவுப்பாதைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். அது கார்கள் நிறுத்துமிடம் போல் இருந்தது. அங்கே இருந்த ஒருவரிடம் மராட்டியில் பேசிவிட்டு எங்களை அங்கே இருந்த ஒரு லிஃப்டைக்காட்டி மேலே அறையைப் பார்க்கச் சொன்னார் அந்த ஆட்டோ ஓட்டுநர்.

நான் மட்டும் மேலே போய் அறையைப் பார்த்தேன். நன்றாகவே இருக்க, நான் அங்கேயே தங்கிக் கொண்டு சாமான்களையும், நம்ம ரங்க்ஸையும் மேலே வரும்படி சொல்லி அனுப்பினேன். கூடவே இரண்டு கப் தேநீர் சூடாக வேண்டும் எனவும் அரை மணி கழித்துக் கொண்டு வரும்படியும் சொல்லி அனுப்பினேன்.  நம்ம ரங்க்ஸ் அந்த ஆட்டோக்காரரையே கோலாப்பூர் சுற்றிப் பார்க்க ஏற்பாடும் செய்து விட்டார். அவரும் எட்டரை மணிக்கு வருவதாகச் சொல்லிச் சென்றுவிட்டார். ரங்க்ஸும் சாமான்களும் மேலே வந்து நாங்கள் பல்தேய்த்து முடித்துத் தேநீர் குடிக்கத் தயாராகியும் தேநீர் வரவே இல்லை. தொலைபேசியில் கேட்டதற்கு நாங்க மெதுவாக் கொண்டுவரும்படி சொல்லி இருப்பதால் தாமதம் எனவே தலையில் அடித்துக் கொண்டு தேநீரைக் கொண்டு வரும்படி சொன்னோம். பின்னர் தேநீரைக் குடித்துக் குளித்து முடித்துத் தயாராக ஆனோம். கோயிலுக்குச்செல்லத் தயார் என்பதை அந்த ஆட்டோ ஓட்டுநருக்குத்தொலைபேசி மூலம் தெரிவித்தார் நம்ம ரங்க்ஸ். சற்று நேரத்தில் அந்த ஆட்டோ ஓட்டுநர் கீழே வந்துவிட்டு எங்களுக்குத் தகவல் கொடுக்கவே நாங்களும் கீழே இறங்கி ஆட்டோவில் ஏறி முதலில் காலை உணவுக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னோம். கோயிலுக்கு அருகே இருந்த ஒரு சின்ன ரெஸ்டாரன்டில் நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் எங்களைச் சாப்பிட்டு வரும்படி சொன்னார். அவரை அழைத்ததற்குத் தான் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டதாகச்சொல்லி விட்டார்.

நாங்களும் அங்கே போய் என்ன இருக்கிறது எனப் பார்த்ததில் போஹா, ப்ரெட் டோஸ்ட், சான்ட்விச், தோசை எனப் போட்டிருந்தது. எனக்கு அங்கெல்லாம் தோசை சாப்பிட பயமாக இருக்கவே எனக்கு மட்டும் ப்ரெட் டோஸ்ட் போதும் என்றேன். வயிற்றையும் எதுவும் செய்யாது. சற்று யோசித்த ரங்க்ஸ் தனக்கும் அதுவே கொடுக்கச் சொன்னார். அவங்க ப்ரெட் வாங்க பேக்கரிக்குப் போனாங்களா இல்லை, பேக்கரியில் ப்ரெட்டை அப்போத் தான் செய்து கொண்டிருந்தாங்களா தெரியலை! சுமார் அரைமணி நேரம் ஆனது ப்ரெட் டோஸ்ட் கொடுக்க. இத்தனைக்கும் அப்போ அந்த ஓட்டலில் இருந்ததே நாங்க இரண்டு பேர் தான். அப்புறமாத் தான் மேலும் இருவர் வந்தனர். ஒருவழியாக ப்ரெட் டோஸ்ட்வந்தது! இரண்டேஇரண்டு பீஸ்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அது 75 ரூபாய்! பின்னர் தெரியாத் தனமாகக் காஃபி சொல்லிக் கோகோ கலந்த காஃபி வர அதைக் குடிக்க முடியாமல் அப்படியே வைச்சுட்டு வந்தோம். காஃபி 60 ரூபாய்! இப்படியாகத் தானே பழைய கடனைக் கழித்துவிட்டுக் கோயிலுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறினோம்.

28 comments:

  1. அறை வாடகையை எல்லாம் பேரம் பேச முடிகிறதா? அட... ஆனாலும் வாடகை அதிகம்தான்! அதாவது அவர்கள் முதலில் சொன்ன வாடகை!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், அறை வாடகைப் பல ஓட்டல்களில் பேரம் பேசலாம். சில குறிப்பிட்ட ஓட்டல்களில் நோ பேரம். உதாரணமாகத் தமிழ்நாடு ஓட்டல் போன்றவற்றில்! ஆனால் அங்கே மற்ற லாட்ஜுகளை விட அறை வாடகை குறைவாகவே இருக்கும். ஆன்லைனில் அறை முன்பதிவு செய்தாலும் பேரம் பேச முடியாது!

      Delete
  2. ஆட்டோக்காரர் உங்கள் மேல் பாசம் அதிகம் வைத்துவிட்டார் போல...! ஆனால் அப்படி அமைவதும் நல்லதற்குதானே? போர்ட்டர் வாடகையும் கம்மிதான் போல! நல்லவராகவும் தெரிகிறார். அவர் சொன்னதுதான் சரியாய் இருந்திருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஶ்ரீராம், ஆட்டோக்காரர் பாசம் வைச்சாரோ இல்லையோ, பிடுங்கலாக இருந்தது. விடாமல் பேசிக் கொண்டிருந்தார். போர்ட்டர்கள் சொல்லுவது எப்போவுமே சரியாக இருக்கும். 200 ரூபாய் கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் மூட்டை முடிச்சு எல்லாம் இல்லை. ஒரு பெட்டி தள்ளிக்கொண்டு செல்வது எனக்கு. அவருடையது ஒரு ஷோல்டர் பை! எங்களால் இப்போல்லாம் முன்னை மாதிரித் தூக்க முடியாததால் போர்ட்டர் வைக்கிறோம். சாதாரணமாகத் தூக்கிச் செல்லும் எடை உள்ளதே!

      Delete
  3. நாம் எதிர்பார்க்கும் சுவை அங்கு ஊர்களில் கிடைக்காது என்று நினைக்கிறேன். அவர்கள் சுவை நமக்கும் ஒத்துவராது!

    ReplyDelete
    Replies
    1. பொதுவாக வட மாநிலங்களிலேயே காஃபி குடிக்கக் கூடாது! அதில் மேலே கோகோ பவுடர் போடாமல் கொடுக்க மாட்டாங்க! சித்ரகூட்,நைமிசாரணியம், அயோத்தி எல்லாம் போனப்போக் கடுமையாகத் தடுத்து அது சேர்க்காத காஃபி வாங்கினோம். பொதுவாத் தேநீரே இங்கெல்லாம் நல்லது. அதிலும் மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தான் தேநீர் மிகவும் ருசியாக இருக்கும்.

      Delete
  4. ஒரு மணி நேரம் முன்போ அல்லது அரை மணி நேரம் முன்போ கைபேசியில் அலாரம் செட் செய்து கொள்ளலாம்...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அதை ஏன் கேட்கறீங்க டிடி! அலார்ம் செட் செய்யப் போய் அது வருஷம் எல்லாம் மாறி! அதுக்கப்புறமா அந்தப் பக்கமே போவேனா என்ன? எழுந்து எழுந்து மணி பார்த்துக்கறது தான்! நானும் எவ்வளவோ முயன்று விட்டேன். பழைய செல்லில் செய்ய முடிந்தது. இதில் என்னமோ இன்னும் பிடிபடலை! அடுத்த பயணத்துக்குள்ளாகப் பிடிச்சுடணும்.

      Delete
  5. 2500 லிருந்து சட்டென 1600 ரூபாயா...
    முடிந்தவரை ஏமாற்றுதல்....

    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், கில்லர்ஜி. அப்படித் தான் சொல்லுவார்கள். பொதுவாக டீலக்ஸ் அறை என்பதில் தொலைக்காட்சி, ஏசி, வெஸ்டர்ன் கழிப்பறை, இருவருக்கான படுக்கை கொண்டது குறைந்த பட்சம் 1,500 ரூபாய் தான். ஆனால் ஒரு சிலர் பயணிகள் ஊருக்குப் புதுசு எனில் எக்கச்சக்கமாக வாடகையை வாங்குவாங்க! காஃபி, டீ, பால் பவுடர், வெந்நீர் போடும் கெட்டில் வைத்து, காலை உணவும் கொடுத்தால் 2,000 ரூபாய். சில சமயங்களில் ஓட்டல் இருக்கும் பகுதியைப் பொறுத்து 2,500 முதல் 2,200 வரை இருக்கும். இப்போப்பெரும்பாலான ஓட்டல்கள் காலை உணவு கொடுப்பதில்லை. காஃபி, தேநீர் அவங்களே போட்டுக் கொடுத்துத் தனியாசார்ஜ் பண்ணறாங்க. இந்த ஓட்டலிலும் அப்படித் தான் செய்தாங்க! ஆனால் ஸ்விகி மூலமே என்னமோ உணவு வரவழைத்துக் கொடுக்கிறாங்க!

      Delete
  6. நல்ல விவரமா எழுதியிருக்கீங்க. பாராட்டுகள். அப்போதான் என்ன என்ன பிரச்சனைகள் உண்டு என்பது தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. எப்போவுமே விபரமாகத் தான் எழுதி வருகிறேன். அதுக்குத் தான் தயக்கம் காட்டியதும் கூட! பிரச்னைகளைப் பார்த்தால் சில பயப்படறாங்க!

      Delete
  7. அங்க அங்க போய் நீங்க தங்கற இடங்களை ஃபிக்ஸ் பண்ணறீங்களே... எந்த தைரியத்துல பயணத்தை வச்சுக்கறீங்க? ஒருவேளை இடம் கிடைப்பதில் சிரமம் இருந்தால் என்ன பண்ணுவீங்க? (தெய்வம் துணையிருக்கும் என்றாலும்)

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே! ஓரிரு முறை தான் ஆன்லைனில் அறை முன்பதிவு செய்து போனோம். கும்பகோணம் ராயாஸில், மதுரையில் கதிர் ஓட்டலில். இதில் ராயாஸ் நன்றாக இருந்தது. காஃபி, தேநீர் அறையிலேயே வைத்திருந்தார்கள். ஆனால் காலை உணவு காம்ப்ளிமென்ட்ரி இல்லை. அங்கேயே பின்னால் இருந்த சத்தார் ரெஸ்டாரன்டில் போயோ அல்லது ரூமுக்கு வரவழைத்தோ சாப்பிடலாம்.

      Delete
  8. கிரானைட் படிகள் போடறவங்களும் சரி...வீட்டுக்கு உபயோகப்படுத்தறவங்களும் சரி...அதன் உபயோகம் தெரியாம ஜம்பத்துக்குப் பண்ணறாங்க. தண்ணீர் விட்டால் வழுக்கிவிடும்...சில சமயம் டோர் மேட்டில் கால் வைத்தாலே வழுக்கும்.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நாங்களும் சொந்தக்காரங்க பலரிடமும் சொல்லிப் பார்த்தோம். எங்களைச் சிலர் கோபத்தோடும், சிலர் விசித்திரமாகவும் பார்த்தார்கள். அவங்க வீடுகளுக்குப்போகும் போதெல்லாம் கவனமாகப் போய்க்கணும்!

      Delete
  9. பேரம் பேச முடிவது ஆச்சிரியம்.
    ஆட்டோக்காரர் நல்ல மனிதராக இருக்கிறார்.

    //ரயில்வே ஊழியர் கோலாப்பூர் வருவதாகச் சொல்லி எல்லோரையும் எழுப்பிச் சென்றார்.//
    நல்ல சேவைதான்.

    படிகள் தான் சிரமபடுத்தி விட்டது போலும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! ஆட்டோக்காரர் நல்லவர் தான் என்றாலும் ஓயாத பேச்சு! ரயில்வேயில் எப்போதுமே இப்படி எழுப்புவது உண்டு. இப்போ எல்லாம் ராக்ஃபோர்ட்டில் எழுப்புவது இல்லை. படிகள் எங்கே போனாலும் சிரமம் தான்! :(

      Delete
  10. பல இடங்களில் இப்படி பேரம் உண்டு. பொதுவாக உள்ளூர் நண்பர்கள் மூலம் நாங்கள் ஏற்பாடு செய்ய முயற்சி செய்வோம். பிறகு ஆன்லைன். நேரடியாகச் சென்றால் பேரம் தான்!

    அனுபவங்கள் - ஒவ்வொரு பயணமும் நமக்கு பல அனுபவங்களைத் தருபவை. ஆதலினால் பயணிப்போம்!

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், மாமா சர்வீஸில் இருந்தப்போ அந்த ஊர் ராணுவ அதிகாரிகள் யாரையேனும் கேட்டுத் தங்குமிடம் ஏற்பாடு பண்ணிக் கொள்வோம். முன்னெல்லாம் அப்படித் தான்! சில சமயங்களில் எம்.ஈ.எஸ் இருக்கும் ஊர் எனில் அங்கே உள்ள இன்ஸ்பெக்‌ஷன் பங்களாவில் தங்கிப்போம். "பெண்"களூரில் இவங்க ஆஃபீஸுக்கே கெஸ்ட் ஹவுஸ் சர் சிவி.ராமன் நகரில் இருந்தது. அங்கே தங்குவோம். ப்ளாக் காட் செக்யூரிடி இருக்கும். ஹிஹிஹி! காலை எட்டரைக்குள் போகலைனால் காலை உணவாக ப்ரெட் டோஸ்ட் தான் கிடைக்கும். அதான் பிரச்னை! பூரி, பராத்தா என்றால் எங்கிருந்தோ கூட்டம் அள்ளும். மதிய உணவை அறைக்கே அனுப்பிடுவாங்க! அங்கே தான் வீடும் பார்த்து வாங்குவதற்கு இருந்தார் மாமா! நான் தான் குறுக்கே விழுந்து தடுத்தேன். :))))) கதை எங்கேயோ போகுதே!:)))))

      Delete
  11. மற்றவர்களுக்குப் பயனாக அமையும் வகையில் அமைந்துள்ள அனுபவப்பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா! பலருக்கும் பயன்பட வேண்டும் என்பதே இதன் மையக்கருத்து!

      Delete
  12. வணக்கம் சகோதரி

    நல்ல விபரமாக பொறுமையாக ஒன்றையும் விடாமல் எழுதியிருக்கிறீர்கள். தங்கள் எழுத்து நடை படிக்கும் போது உங்களுடன் நாங்களும் உடன் வருவது போன்ற அழகான உணர்வை தருகிறது. அறை வாடகை பேரம் பேசி குறைத்தது நல்ல விஷயம். தமிழ் நாட்டில் இதெல்லாம் நடக்காது. நாங்கள் இங்கு வந்த பின் சென்ற மந்திராலயம், ஹொரநாடு, தர்மஸ்தலா பயணமெல்லாம், இப்படித்தான் என் கணவரும், பையரும் சேர்ந்து பேரம் பேசி தங்குவதற்கு அறை எடுப்பார்கள். தங்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் நல்லவராக அமைந்தது தெய்வ சங்கல்பம்.

    இனி எப்போது இங்கெல்லாம் செல்லப் போகிறோம் என்று தெரியவில்லை. ஆனாலும் செல்லும் போது உங்கள் அனுபவ பயணம் எங்களுக்கு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.. பகிர்வுக்கு மிக்க நன்றி. தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, நாங்க மங்களூரில் தங்கிக் கொண்டு தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யாஆகிய கோயில்களுக்குப் போனோம். பின்னர் உடுப்பியில் தரிசனம் செய்து கொண்டு ச்ருங்கேரியில் தங்கிக் கொண்டு ஹொரநாடு எல்லாம் போனோம். மீண்டும் வந்து உடுப்பியில் தங்கினோம். பெஜாவர் மடத்தில் அருமையான அறை கொடுத்திருந்தனர். ச்ருங்கேரியிலும் அறை வசதியாக இருந்தது. விரைவில் உங்களுக்கும் விருப்பப்பட்ட கோயில்களுக்குச் சுற்றுப் பயணம் செல்ல வாய்ப்புக் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்.

      Delete
  13. அருமையான விவரிப்பு. மாமாவுக்கும் உங்களுக்கும் பொறுமையின் பூஷணம் என்று பட்டம் கொடுக்கிறேன்.

    நல்ல ஏற்பாடுடன் சென்றாலும், நல்ல ஆட்டோக்காரர்,
    போர்ட்டர் அமைந்தது அதிர்ஷ்டமே.

    நீங்கள் சொல்லி அரைமணிக்குப் பிறகாவது வந்தார்களே. பெங்களூரில் அவர்கள் எழுந்திருக்கவே
    நாழியாகும்.
    லோக மாதா சரணம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. உண்மையில் பொறுமையின் பூஷணங்கள் தான்! :))))) இல்லைனா இத்தனை பிரச்னைகளுக்கு அப்புறமும் போயிட்டு வர முடியுமா? கடவுள் துணையும், அருளும் இருப்பதால் எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் மனோபலம் கொஞ்சமானும் இருக்கிறது. அது மட்டும் இருந்தாலே போதும்! உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete
  14. அட! ரூம் எல்லாம் பேரம் பேச முடியுமா? குறித்துக் கொண்டாயிற்று. இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா இல்லை ஒரு சில இடங்களுக்கு மட்டுமா?

    விவரங்கள் அறிந்து கொண்டோம்

    துளசிதரன், கீதா

    கீதா : அக்காகோலாப்பூரில் நல்ல ஆட்டோக்காரர் கிடைத்தார் போல சூப்பர். புனாவிலும் பரவாயில்லையே நீங்க திரும்பி வரும் போது வந்து பிக்கப் என்று ஏதோ இந்த அளவாவது இருக்காங்களே. காபி வடநாட்டில் வேஸ்ட். மேற்கு, கிழக்கு, வடக்கு எல்லா இடத்திலும். விலை ரொம்பக் கூடுதலா இருக்குதே சின்ன உணவு விடுதியிலும் கூட. ஒரு வேளை கோயில் அருகில் என்பதாலோ? பொதுவாகவே புனா கொஞ்சம் காஸ்ட்லிதான்.

    நாங்கள் மச்சினர் குடும்பத்துடன் கோல்ஹாப்பூர் எல்லாம் போய் வரும் போது வழியில் ஒரு பஞ்சாபி போன்று அழகாக வீடு, சுற்றி தோட்டம் தோட்டத்தில் அவர்கள் ஊர் கயிற்றுக் கட்டில் மேசை எல்லாம் போட்டு அதில் தான் சாப்பாடு செர்வ் செய்தார்கள். அருமையான சாப்பாடு. சாஸ் எல்லாம் செமையா இருந்தது. விலை கொஞ்சம் கூடுதல்தான் இருந்தாலும் தரம், ஆம்பியன்ஸ் ஹோட்டல் போல் இல்லாமல் எல்லாம் நன்றாக இருந்தது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, வயிறு கொஞ்சம் அமைதியாக இருக்கணும்னே ப்ரெட் டோஸ்டை நான் தேர்ந்தெடுத்தேன். அங்கே உள்ள நிலவரங்கள் அப்படி எனில் நாம் என்ன செய்ய முடியும்? நாங்க ப்ரெட் டோஸ்ட் சாப்பிட்டது கோலாப்பூரில். புனேயில் முதல்நாள் மதியம் சாகரில் மதிய உணவும் இரவு பாதாம் மில்க் ஷேக்கும் சாப்பிட்டிருந்தோம். இது மறுநாள் காலை! நீங்க காரிலேயே போயிருப்பீங்க! சில தாபாக்கள் நீங்க சொன்ன மாதிரி இருக்கும். அதை வட மாநிலங்களிலே அதிகம் பார்க்கலாம்.

      Delete