எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, May 07, 2019

அக்ஷய த்ரிதியைக்கு என்ன செய்யணும்?

உப்பு வாங்கலையோ உப்பு!

அன்னக்கொடி விழாஅக்ஷய த்ரிதியை அன்னிக்கு வாங்க வேண்டிய முக்கியமான பொருள் உப்புத் தான். தங்கமோ, வெள்ளியோ, வைரமோ, பிளாட்டினமோ, பட்டுப் புடவைகளோ அல்ல. ஆனால் நம்ம மக்களுக்கு இதை எல்லாம் யாரு புரிய வைக்கிறது? போறாததுக்கு எல்லாப் பத்திரிகைகள், தினசரிகள், தொலைக்காட்சிகளில் எல்லாம் அக்ஷய த்ரிதியை விற்பனைச் சலுகைகள் வேறே அறிவிச்சிருக்காங்க. இதுக்காக உண்மை விலையில் எவ்வளவு கூட்டி இருப்பாங்கனு தெரியலை. ஆனாலும் ஜனங்க போய்க் குவிஞ்சு கும்பலில் மாட்டிக்கொண்டு எதையோ வாங்கிட்டு வரதிலே ஒரு சந்தோஷம். நமக்கு நல்ல நாளிலேயே கூட்டம் அலர்ஜி. இப்போ இந்தக் கடுமையான கோடையிலே ம்ஹும், துளிக்கூட ஒத்துவராது. ஆனால் என்ன என்ன பண்ணணும்னு மட்டும் பார்ப்போமா?

அக்ஷய த்ரிதியை என்பது உண்மையில் பூமித்தாய்க்கு நாம் செய்யும் வழிபாடு என்றே கொள்ளலாம். பிரளயம் முடிந்து உலகம் பிறந்த நாள் என்றும் சொல்வார்கள். முன்பெல்லாம் பல கிராமங்களிலும் பொன்னேர் பூட்டுதல் என்ற ஒன்று சிறப்பாக நடக்கும். அந்தப் பொன்னேர் பூட்டுவதை அக்ஷய த்ரிதியை அன்று செய்பவர்களும் உண்டு. இந்தக் கோடை முடிந்து மழை ஆரம்பிக்கும். அதற்கு முன்னர் நிலத்தை உழுது போடவேண்டும். உழுது போட ஏரை எடுக்கும் முன்னர் இப்படி ஒரு வழிபாடு ஏருக்கும், நுகத்தடிக்கும் நடத்துவார்கள். இன்னிக்குப் பொன்னேர் பூட்டுவதுனால் என்னனு கிராமத்துக்காரங்களுக்கே தெரியுமா சந்தேகமே!

மேலும் முக்கியமாய்ச் செய்யவேண்டியது பல்வகைப்பட்ட தானங்கள். கோடைக்குப் பயனாகும் விசிறி தானம், குடை தானம், செருப்பு தானம், நீர்மோர் பானகம், தண்ணீர்ப்பந்தல் வைத்தல், அன்னதானம் போன்றவை மிகுந்த சிறப்புடன் செய்யப் பட்டு வந்தன. மதுரையிலே தெருவுக்குத் தெரு தண்ணீர்ப் பந்தல் இருக்கும் முன்பெல்லாம். அங்கே கொடுக்கப் படும் தயிர்சாதத்தை அதன் சுவைக்காகவே திரும்பத் திரும்பப் போய் வாங்கிச் சாப்பிட்டது ஒரு காலம். ஆனால் அப்போ அக்ஷயத்ரிதியை என்றோ, அதுக்காகச் செய்யறாங்கன்னோ தெரியாது. புரிஞ்சுக்கவும் முயற்சி செய்யலை. மிகச் சில வீடுகளிலேயே அன்னதானம் சிறப்பாகச் செய்து வந்தார்கள். தயிர்சாதம் கொடுப்பது மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. அன்னப் பஞ்சம் வராமல் தடுக்கவே ஏற்பட்ட நாள் என்று சொன்னாலும் மிகையில்லை.

அன்னதானம் செய்யும் சத்திரங்கள், மடங்கள் போன்றவற்றில் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்வார்கள். இந்த அன்னக்கொடியில் அன்னபூரணி சித்திரமாக வரையப் பட்டிருப்பாள் என்று எனக்கு நினைவு. வேறு மாதிரி இருந்தால் பெரியவங்க யாரேனும் சொல்லி அருளணும். எனக்கு நினைவு தெரிந்து இளையாத்தங்குடி வித்வத் சதஸ் நடந்தப்போ பரமாசாரியாள் அவர்கள் அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ததாகவும் நினைவு. அன்னக்கொடி போட்டு அன்னதானம் செய்ய ஆரம்பிச்சா நேரம், காலம் இல்லாமல் பசி என்று வருபவர்களுக்கு உணவு அளிக்கப் படும். ஜாதியோ, மதமோ பார்த்ததாகவும் தெரியவில்லை. அப்படி ஒரு தானம் இந்தக் காலங்களில் அளிக்கப் படுகிறதானும் தெரியலை. ஆனால் பழங்காலத்தில் சோழர் காலம் தொட்டே இந்தப் பழக்கம் இருந்ததாகத் தெரிய வருகிறது. பார்க்க!அன்னக்கொடி விழா என்ற தலைப்பிலே மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் காணலாம். மேலும் நம்ம தமிழ்த் தாத்தாவும் அவர் பங்குக்கு இந்த அன்னக்கொடி விழா பத்தி எழுதி இருக்கார் தமது என் சரித்திரத்திலே. அதிலிருந்து சில பகுதிகள் தாத்தாவின் நடையிலேயே கீழே! அவர் தமிழ் படித்த மடத்தின் குருபூஜையின் நிகழ்வுகளின் போது நடைபெற்ற அன்னதானம் பற்றி எழுதி உள்ளார். ஆகவே அக்ஷய த்ரிதியை என்றால் அதை தானம் செய்யும் ஒரு நாளாகவே கொண்டாடுங்கள்.

அன்ன தானம்
எங்கே பார்த்தாலும் பெருங்கூட்டம். தமிழ் நாட்டிலுள்ள ஜனங்களில்
ஒவ்வொரு வகையாரையும் அங்கே கண்டேன். நால்வகை வருணத்தினரும்,
பாண்டி நாட்டார், சோழ தேசத்தினர் முதலிய வெவ்வேறு நாட்டினரும்
வந்திருந்தனர்.

குரு பூஜா காலங்களில் அன்னதானம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
யார்வரினும் அன்னம் அளிக்கப்படுமென்பதற்கு அறிகுறியாக மடத்தில்
உத்ஸவத்தின் முதல் நாள் அன்னக்கொடி ஏற்றுவார்கள். பல வகையான
பரதேசிகளும் ஏழை ஜனங்களும் அங்கே வந்து நெடு நாட்களாகக் காய்ந்து
கொண்டிருந்த தங்கள் வயிறார உண்டு உள்ளமும் உடலும் குளிர்ந்து
வாழ்த்துவார்கள். பிராமண போஜனமும் குறைவற நடைபெறும்.

பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர். மடத்து முக்கிய
சிஷ்யர்களாகிய தக்க கனவான்கள் பலர் காணிக்கைகளுடன் வந்திருந்தனர்.
மற்றச் சந்தர்ப்பங்களில் தங்கள் ஞானாசிரியரைத் தரிசிக்க இயலாவிட்டாலும்
வருஷத்துக்கு ஒரு முறை குருபூஜா தினத்தன்று தரிசித்துப் பிரசாதம் பெற்றுச்
செல்வதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருந்தது. ஸ்ரீ சுப்பிரமணிய
தேசிகருடைய அன்பு நிரம்பிய சொற்கள் அவர்கள் உள்ளத்தைப் பிணித்து
இழுத்தன. தமிழ்நாட்டில் தென்கோடியில் இருந்தவர்களும் இக்குருபூஜையில்
வந்து தரிசிப்பதை ஒரு விரதமாக எண்ணினர். அவரவர்கள் வந்த வண்டிகள்
அங்கங்கே நிறுத்தப் பட்டிருந்தன. குடும்ப சகிதமாகவே பலர் வந்திருந்தார்கள்.

எல்லா தானங்களும் செய்த கர்ணன் அன்னதானமே செய்யாததால் சுவர்க்கம் சென்றும் கூடப் பசியால் துடித்த கதையும், கட்டை விரலைச் சூப்பச் சொல்லி பகவான் சொன்னதன் பேரில் அவன் பசி அடங்கியதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தானே? ஆகவே இயன்ற அளவு ஒரு ஏழைக்கானும் அன்னமிடுங்கள். அன்னதானம் செய்ய முடியவில்லையா? ஏழை மாணவ, மாணவிகளுக்குக் கல்விக்கு உதவுங்கள். நீத்தோர் கடன்களை முக்கியமாய்ச் செய்யுங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற ஆடை தானம் செய்யுங்கள். இன்றைய நாள் கொடுப்பதற்கு உரிய நாளே தவிர, கடைகளுக்குக் கூட்டத்தில் இடிபட்டுச் சென்று பொருட்களை வாங்கிக்குவிக்கும் நாளல்ல. எதுவுமே முடியலையா, இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள். அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள். முடியலையா வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்.

2010 ஆம் ஆண்டு அக்ஷய த்ரிதியைக்குப் போட்ட பதிவின் மீள் பதிவு. இன்றைய தினம் அக்ஷய த்ரிதியை.  நகை வாங்கவும் துணிகள் வாங்கவும் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் இந்த வருஷம் முன் பதிவெல்லாம் நடக்கிறது. இதெல்லாம் தேவையா!  இதிலே பலரும் கடன் வாங்கி அக்ஷய த்ரிதியைக்குத் துணியோ, நகையோ வாங்குவதாக வேறே சொல்றாங்க.  இதெல்லாம் தேவையா!  எந்தக் கடவுளும் இப்படி எல்லாம் செய்யச் சொல்லவே இல்லை.  எனக்குத் தெரிந்து இது கடந்த இருபது வருடங்களிலேயே ஆரம்பித்து இன்று விஷ விருக்ஷமாக வளர்ந்திருக்கிறது.  அக்ஷய த்ரிதியை என்றாலே முன்னெல்லாம் யாருக்கும் தெரியாது.  இப்போப் போறாக்குறைக்குத் தொலைக்காட்சி சானல்கள், பத்திரிகைகள் போன்றவை இவற்றை ஊக்குவிக்கின்றன.  கடைகளின் இடைவிடா விளம்பரம் வேறெ ஒரு மாசத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பம். 

இன்று நம் வீட்டில் தயிர் சாதம், பால் பாயசம், கறுப்பு உளுந்தில் வடை செய்து நிவேதனம் பண்ணிக் குடி இருப்பு வளாகத்தில் சிலருக்குக் கொடுத்தேன். அதன் படங்கள் கீழே!


வடைகள் எண்ணெயில் வெந்து கொண்டிருக்கின்றன.


உருளியில் பால் பாயசமும், பக்கத்தில் தயிர் சாதமும்ராமர் என்னவெல்லாம் நிவேதனம்னு பார்க்கிறார்.கீழே பெருமாளும் பார்க்கிறார்.சொம்பில் தண்ணீர். அக்ஷயம் போல் தண்ணீர் பெருகித் தண்ணீர்க் கஷ்டம் தீர வேண்டிப் பிரார்த்திக் கொண்டு வைத்திருக்கிறது. தயிர் சாதம், வெற்றிலை, பாக்கு, பழம், உருளியில் பால் பாயசம், வடைகள். வடைகள் வெந்து கொண்டிருந்தன. ஆகவே நிவேதனத்துக்கு 2 மட்டும் எடுத்து வைத்தேன். 

56 comments:

 1. இன்றைய அவசர தேவையான தண்ணீர் கிடைக்க வேண்டி வழிபட்டது சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜி, முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தினம் தினம் தண்ணீர் வைத்து வழிபடச் சொல்கின்றனர்.

   Delete
 2. பால் பாயாசம் - பார்க்கவே நல்லா இருக்கு, "மினியேச்சர்" உருளில. ஹாஹா.

  மலைநாட்டுத் திருப்பதி யாத்திரையில் ஒரு கோவிலில் பால் பாயாசம் சாப்பிட்டேன். அவங்கதான் நல்லா பண்றாங்க. அதிலும் அம்பலப்புழா பால்பாயாசம் சிறப்புன்னு சொல்வாங்க.

  இல்லை..நானும் அட்டஹாசமாப் பண்ணியிருந்தேன்னு சொன்னீங்கன்னா...கொஞ்சம் எடுத்துவைங்க. வந்து சாப்பிட்டுட்டுச் சொல்றேன்.

  ReplyDelete
  Replies
  1. உருளி ஒண்ணும் சின்னது இல்லை. எங்க இரண்டு பேருக்கு (கூட ஒருத்தருக்கும் பண்ணலாம்) உப்புமா, பொங்கல், சர்க்கரைப் பொங்கல்னு எல்லாம் இதிலே தான் பண்ணுவேன். நிறையவே இருக்கும். அம்பலப்புழா எல்லாம் போனதில்லை. எங்களோட பயணங்களில் கேரளாவில் குருவாயூர் தவிர்த்து வேறே கோயில் போனதில்லை. அவர் சபரிமலை, காலடி எல்லாம் போயிருக்கார். 2015ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் போனோம். மற்ற இடங்கள் போனதில்லை. கேரளம் அவ்வளவாக் கவரவில்லை. ஆந்திராவில் முன்னர் இருந்த காரணத்தால் சிகந்திராபாத், ஹைதராபாத் பார்த்திருக்கோம். வடகிழக்கு மாநிலங்கள் போனதே இல்லை.

   Delete
  2. நெல்லை அம்பலப்புழா பாயாசம் செமையா இருக்கும் வீட்டிலும் செய்வதுண்டு...

   கீதா

   Delete
 3. எபி திங்கட் கிழமைக்கு செய்துபார்த்து அனுப்பணும்னு 'பால் பாயாசத்துக்காக' அங்க இருந்தபோது சிவப்பு அரிசி வாங்கிவைத்திருந்தேன். ஆனால் செய்துபார்க்கும் சந்தர்ப்பமே வரலை.

  வடை - கறுப்பு உளுந்துன்னு சொல்றீங்க. பரவாயில்லாமல் வந்திருக்கு.ஹாஹா

  ReplyDelete
  Replies
  1. நெ.த. நான் சாப்பாட்டுப் பச்சரிசியில் தான் பால் பாயசம் பண்ணினேன். சிவப்பு அரிசி எல்லாம் வாங்கினதே இல்லை.

   Delete
 4. ஆமாம்...இது பலாப்பழம் மாம்பழம் சீசனாச்சே... அதை பெருமாளுக்கு கண்டருளப்பண்ணுவதில்லையா? எப்போதும் வாழைப்பழம்தானா?

  ReplyDelete
  Replies
  1. மாம்பழம் எல்லாம் யாரானும் வாங்கிக் கொண்டு வந்தால் தான்! நாங்க வாங்குவதில்லை. முன்னே கூடை கூடையாக வாங்கிச் சாப்பிட்டு வந்தார். அப்போக் கூட நான் வாரம் ஒரு பழம் சாப்பிட்டால் பெரிய விஷயம். பலாப் பழம் பிடிக்கும். ஆனால் வாங்குவதில்லை. வாழைப்பழம் கூட எப்போதேனும் இம்மாதிரி விசேஷ நாட்களில் தான். இல்லைனா மாதுளை, பப்பாளி, கொய்யா, ஆரஞ்சு போன்றவை தான்!

   Delete
 5. வெயிலுக்கு தயிர்சாதம் பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு.

  இப்போதான் சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலுக்கு, "ஜோசியர்" சொல்படி போய் தரிசனம் செய்துவிட்டு வந்தோம். அங்கு பிராகாரத்தில் பலர், தயிர் சாதம் விநியோகம் செய்துகொண்டிருந்தனர். அப்புறம்தான் 'அட்சயதிருதி' ஞாபகம் வந்தது.

  ReplyDelete
  Replies
  1. சைதாப்பேட்டையில் கடும்பாடி அம்மன் கோயில்னும் ஒண்ணு இருக்கிறதாச் சொல்றாங்க. போயிருக்கீங்களா?

   Delete
  2. நான் சென்னைல எத்தனையோ வருடமா இருந்தாலும், சைதாப்பேட்டை கோவிலை கேள்விப்படலை. போன தடவையும் ஜோசியர் சொல்லியிருந்தார் (6 மாதம் முன்பு). இப்போவும் சொன்னார். (என் மனைவி அவர்கிட்ட பேசி, நரசிம்ஹர் கோவிலுக்குப் போலாமா என்று கேட்டுக்கொண்டாள். அதன்படி திருவல்லிக்கேணி கோவிலுக்கு இருமுறை போய் சேவித்தோம். நான் அவர் முதல்ல சொன்ன மாதிரி இந்தக் கோவிலுக்கும் போகணும்னு சொல்லி இன்றைக்குச் சென்றோம்). ஓரளவு கூட்டம். போய் அர்ச்சனை செய்தேன். 'கடும்பாடி அம்மன் கோவில்' கேள்விப்படலை. கண்டுபிடிக்கிறேன்.

   Delete
  3. சைதாப்பேட்டையில் இந்தக்கோவில் நான் கேள்விப்பட்டதில்லை.

   Delete
  4. https://temple.dinamalar.com/New.php?id=1724 Jayaram Street, Saidapet West, Chennai, Tamil Nadu India
   ஃபோன: 044 2485 1094

   Delete
 6. அக்‌ஷயதிருதியைக்கு தங்கம் வாங்கணும்னு சொல்வதே ஒரு மோசடி வேலைதான். இதைச் சாக்கிட்டு எத்தனைபேர் பித்தளையையும் செம்பையும் 'தங்க நகை' என்ற பேரில் வாங்கிக்கொண்டுவருகிறார்களோ...பாவம்.

  ReplyDelete
  Replies
  1. பெரிதாக விளம்பரங்கள் செய்யும் எந்தக் கடையிலும் நாங்க தங்கம், வெள்ளி வாங்க மாட்டோம்! சின்னக் கடைகள், ஆசாரி செய்து கொடுக்கும் முறைனு போய்ப் பார்த்துத் தேவைப்பட்டால் வாங்குவோம். தங்கம் வாங்கி என்ன செய்ய முடியும்? உள்ளே பூட்டித்தான் வைக்கணும்.

   Delete
 7. // இறைவனை மனமாரப் பிரார்த்தியுங்கள்...

  அருகில் இருக்கும் கோயிலுக்குச் செல்ல முடிந்தால் செல்லுங்கள்...

  முடியலையா, வீட்டில் இருந்த வண்ணமே வழிபடுங்கள் போதும்...//

  சிறப்பு...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி. வேலைப்பளு குறைந்திருக்கும் என நம்புகிறேன். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 8. அக்சய த்ரிதியைப்பற்றிய உண்மையான விசயத்தை அழகாக விவரித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, நன்றி.

   Delete
 9. இங்கு கர்நாடகாவில் பெரும்பாலான கோவ்ல்களில் தினமும் அன்னதானம் உண்டு ஆனால் கொக்கிசுப்ரமண்யா கோவிலில் சாதிபார்த்துஅன்னதானம்செய்வது பிடிக்காததால் அங்கு உண்பதைத் தவிர்த்தேன் உங்கள் ஊர் கரிவிலியில் அருகே இருக்கும் குளத்தில் நீரில் உண்டவர் கை கழுவியதால் நெய் மிதக்கும் என்று ஏதோ பாடல் படித்த நினைவு, நான் வந்து விடேனே

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. நல்வரவு. இங்கேயும் சில கோயில்களில் அன்னதானம் உண்டு. டோக்கன் கொடுப்பார்கள். குக்கே சுப்ரமண்யா மட்டுமில்லை, எல்லாக்கர்நாடகக் கோயில்களிலும் ஜாதி பார்த்துத் தான் அன்னதானம். நீங்கள் மற்ற இடங்களில் பார்க்கவில்லை போலும்! அதிலும் உடுப்பியில் ரொம்பவே மட்டமாக நடத்துவார்கள். எங்களுக்கு ஏன் சாப்பிடப் போனோம் என ஆகி விட்டது!

   Delete
  2. நான் குக்கே சுப்ரமண்யா என்று எழுதணும்னு நினைத்தேன். நீங்க சொல்லிட்டீங்க.

   'ஜாதி பார்த்து அன்னதானம்' - இதை ஏற்றுக்கொள்ள இயலாது. எல்லோருக்கும் வயிறு ஒன்றுதான். பசிக்குச் சோறிடல் வேண்டும். அதில் ஜாதி பார்க்கலாமா? எல்லோரும் பிரசாதம் உண்ணும் நோக்கத்துடந்தானே வருகிறார்கள். அதில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது சரியில்லை. ஜி.எம்.பி சார்... உங்கள் கருத்து இதில் ஏற்றுக்கொள்ளத் தக்கது.

   Delete
  3. கர்நாடகாவில் எந்தக் கோயில்களுக்குப் போனாலும், சங்கரமடத்துக்குப் போனாலும் ஜாதி பார்த்துத் தான் அன்னதானம். அதிலும் சிருங்கேரி மடத்துக்குப் போனால் பாதபூஜை பண்ணுகிறவர்களுக்குத் தனிச் சாப்பாடு, மற்றவர்களுக்குத் தனிச் சாப்பாடு. இந்த விஷயத்தில் காஞ்சி மடம் பரவாயில்லை.

   Delete
 10. இறைவழிபாடும்,உணவு விநியோகமும் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி, பல மாதங்களுக்குப் பின்னர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   Delete
 11. நாங்கள் அட்சயத் திரிதியைக்கு நகைகள் வாங்குவதில்லை. சமீப காலங்களில் வெள்ளைப்பொருள் குறிப்பாக உப்பு வாங்குவது பாழாகி இருக்கிறது. தயிர்சாதம் யாருக்கும் தரவில்லை. வாய்ப்பு கிடைக்கவில்லை! அல்லது ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

  ReplyDelete
  Replies
  1. //வெள்ளைப்பொருள் குறிப்பாக உப்பு வாங்குவது பாழாகி இருக்கிறது.// அர்த்தமே மாறிப் போச்சே. பழகி இருக்கிறதுனு வந்திருக்கணும். நாங்க எப்போவுமே அக்ஷய த்ரிதியை, தள்ளுபடி சீசன்களில் எல்லாம் துணிகளோ, நகைகளோ வாங்குவதில்லை.

   Delete
  2. //குறிப்பாக உப்பு வாங்குவது பாழாகி இருக்கிறது. //

   என்ன சொல்ல வந்தேன் என்று புரிந்திருக்கும். பழகியிருக்கிறது என்று சொல்ல வந்தேன்.

   Delete
 12. உ வே சா வார்த்தைகள் சுவாரஸ்யம். உள்ளைத்தைப் பிடித்தா பிணித்தா? இல்லையெனாது வழங்கும் அன்னதானம் சிறப்பு. அன்னக்கொடி பொருள் இன்று தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. //உள்ளைத்தைப் பிடித்தா பிணித்தா?// புரியலையே????? இது ஏற்கெனவே எழுதியதன் மீள் பதிவு. 2014 ஆம் ஆண்டில் மீள் பதிவில் உங்கள் கருத்து முதலாவதாக இருக்கிறது.

   Delete
  2. பல இடங்களிலிருந்து தம்பிரான்கள் வந்திருந்தனர் என்று தொடங்கும் பாராவில் நான்காவது வரியில் (வாக்கியத்தில்) வரும் வார்த்தை!

   Delete
  3. பிணித்து என்பதே சரி! பழைய தமிழ் வார்த்தை!

   Delete
 13. வடைகள், பால்பாயாசம், தயிர்சாதம் சிறப்பு. பார்க்க நன்றாய் இருக்கின்றன. தண்ணீர் வேண்டி மழைக்காக அனுதினமும் பிரார்த்தனை செய்வோம்.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், தண்ணீர் தான் சென்னையின் முக்கியத் தேவை. மழை கொட்டட்டும். நீர், நிலைகள் நிரம்பட்டும்!

   Delete
 14. பதிவின் முதல் சொற்றொடரே அட்சய திரிதியையின் சிறப்பை குறிப்பாய் உணர்த்தியது. தற்போது வணிக நோக்கில் இவ்விழாவினை ஆக்கிவிட்டனர் என்பது வேதனையே.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் ஐயா!

   Delete
 15. கீதாக்கா இந்த அக்ஷ்யத்ரிதியை ஏமாற்று வேலைதான்...நீங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் அப்படியே...

  நம் பிறந்த வீட்டில் அக்ஷய திருதியை எல்லாம் கேள்விப்பட்டதே இல்லை. புகுந்த வீட்டிலும் அவர்கள் சொன்னதில்லை. சமீபகாலமாக வெளியில் பேசப்பட்டப் போதுதான் இப்படி ஒன்று இருக்கு என்பதே அறிந்தேன்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா. தாமதமாய் வந்தாலும் கருத்திட்டதுக்கு நன்றி. எனக்கும் சின்ன வயசில் அக்ஷய திரிதியை என்றால் எல்லாம் தெரியாது. சும்மாச் சாப்பாடு கொடுப்பாங்க! வாங்கிச் சாப்பிடுவோம். சுமார் 20 வருடங்களாகத் தான் இது பிரபலமாக ஆகி இருக்குனு நினைக்கிறேன். ஆரம்பிச்சு வைச்சது யார்னு தெரியலை.

   Delete
 16. பிரசாதம் சூப்பரா இருக்கிறது கீதாக்கா. வடை ஆஹா கறுப்பு உளுந்தில்...பிறந்த வீட்டில் கறுப்பு உளுந்தில்தான் செய்வான..ஊற வைத்து களைந்து தொலி எடுத்து கொஞ்சம் தொலி இருக்கும் ...இங்கும் நான் செய்வதுண்டு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. இதிலேயும் வடையில் கொஞ்சம் தோலி இருந்தது. படத்தில் தெரியலை! மிளகும் உப்பும் மட்டுமே சேர்த்துப் பண்ணினேன், நிவேதனம் என்பதால்.

   Delete
 17. தாத்தாவின் வார்த்தைகள் வெகு ஸ்வாரஸ்யம். ரசித்தோம்...அன்னக்கொடி அறிய முடிந்தது.

  தண்ணீர் வேண்டியது சிறப்பு.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தாத்தா ஒரு பொக்கிஷம்! ஆனால் அவரைக் கொண்டாடுபவர்கள் இல்லை!

   Delete
 18. அக்ஷ்யதிருதியை என்பது அறிந்ததில்லை. இப்படியான ஒன்றை கேரளத்திலும் வந்த விளம்பரம் மூலம் அறிந்தேன். நான் சிறியவனாக இருந்த போதும் சரி அதன் பின்னும் சரி வீட்டில் இது பற்றிப் பேசியோ கொண்டாடியோ பார்த்ததில்லை. எங்கள் வீட்டில் பழக்கமும் இல்லாததால் இருக்கலாம். அதைப் பற்றி உங்கள் பதிவு மூலம் அறிகிறேன்.

  இதற்கு பூஜை எல்லாம் உண்டா?

  தண்ணீருக்கான பிரார்த்தனை நல்லது. இங்கு எங்கள் பகுதியில், நிலம்பூரில் மழை அவ்வப்போது நன்றாகப் பெய்கிறது.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. கேரளா மாதிரி இயற்கை வளம், மரங்கள் போன்றவை நான் பெரும்பாலும் எங்கும் பார்த்ததில்லை. (ஆனால் அவ்வப்போது குறுக்கே ஓடும் பாம்புகளைப் பார்த்தால்தான் பயம்). அங்கு மின்வெட்டு இல்லையோ துளசிதரன் சார்?

   Delete
  2. வாங்க துளசிதரன், அங்கே மழை என நானும் படிச்சேன். அக்ஷயதிரிதியை என எங்கள் வீட்டிலும் கொண்டாடிப் பார்த்ததில்லை. பூஜைனு எல்லாம் செய்யலை. வழக்கமான நிவேதனம் தான். கூடப் பாயசம், வடை, தண்ணீர்ச் செம்பு.

   Delete
  3. நெல்லைத் தமிழரே, நீங்க மங்களூர் வழியா கோவா போனீங்கன்னா இன்னும் அழகைப் பார்க்கலாம். அதோடு பருவக்காற்று ஆரம்பிச்சாச்சுன்னா புனே-மும்பை வழி ரயிலில் போனாலும் சரி, பேருந்துகளில் போனாலும் சரி! அழகு அள்ளும்! பிஹாரின் இயற்கை வளத்தைப் பார்த்தால் அசந்துடுவீங்க! சரியானபடி தலைமை இல்லாததால் மாநிலம் முன்னுக்கு வரமுடியலை. இப்போப் பரவாயில்லை.

   Delete
 19. பொன்னேரு பூட்டுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் தெரிந்து கொண்டேன். அன்னக்கொடி பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பானுமதி! பொன்னேர் பூட்டுவது சின்ன வயசிலேயே கேள்விப் பட்டிருக்கேன்.

   Delete
 20. அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்குவது நல்லதுதான் எல்லோருக்கும் ஐஸ்வர்யம் சேரக்கூடாதா? நம் நாட்டில் ஜனத்தொகை அதிகமாக இருப்பதால் எல்லாமே உட்சபட்சமாக தெரிகின்றன.

  ReplyDelete
  Replies
  1. பானுமதி, இருக்கிறவங்க என்னிக்கும் வாங்குவாங்க/வாங்கத் தான் போறாங்க! அக்ஷயத்ரிதியையை விசேஷமாகச் சொல்லி வாங்க முடியாதவர்களைப் பரிதவிக்க விடுவதில் என்ன லாபம்? எனக்குத் தெரிந்து சென்னையில் இருந்தப்போ வீட்டு வேலை செய்யும் பெண்கள் எல்லாம் பணம் கடன் வாங்கித் தங்கம் வாங்குவாங்க! அப்புறம் அந்தத் தங்கத்தை அடகு வைச்சுக் கடனை அடைப்பாங்க! பார்த்துக் கோவிச்சுத் திட்டி இருக்கேன். ஐஸ்வரியமா இது?

   Delete
 21. வணக்கம் சகோதரி

  அருமையான பதிவு. அட்சய திருதியை பற்றி நானும் கொஞ்ச காலமாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன். அந்த காலத்தில் இதன் சிறப்பு பற்றி அவ்வளவாக கேள்விபட்டதில்லையோ என நினைக்கிறேன். அன்று நகைகள் வாங்குவது சிறப்பு என சொல்வது கேள்விப்படும் போது ஆச்சரியமாக இருக்கும். எந்த தினமும் நகைக்கு சிறப்புதானே.! "நம்மிடம் பணம் வந்து அன்று வாங்கும் சூழ்நிலைக்கு தெய்வத்தால் என்று அனுகிரஹிக்கபடுகிறோமோ அன்று நம் இல்லத்தில், நம்மிடம் மஹாலக்ஷ்மி வாசம் செய்ய பிரியப்படுகிறாள் என்றுதான் அர்த்தம்" என நான் நினைப்பேன்.

  அன்னக்கொடி கட்டுதல், மற்றும் அனேக விஷயங்கள் தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இப்படி பல நல்ல தகவல்களை தொகுத்து தரும் தங்களுக்கு மிக்க நன்றி.

  உப்பு வாங்கச் சொல்லியும்,வெற்றிலை பாக்கு பழங்களுடன், நீர் நிறைந்த சொம்பை கடவுளுக்கு முன் வைத்து நீர் வளம் நிறக்கச் செய்ய வேண்டுமென பிரார்த்தனை செய்யும்படியும், வந்த தகவல்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன். அன்றைய தினம் தயிர் சாதம், பாயாசம் நிவேதனமும், நன்றாக உள்ளது. தங்களிடமிருந்து பெற்ற நிறைய தகவல்களுக்கு மீண்டும் நன்றி கூறுகிறேன்

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா. இருக்கிறவங்க என்னிக்கும் வாங்குவாங்க! அதிகம் வாங்கினாலும் இந்தக் காலங்களில் போட்டுக்கவும் முடிவதில்லை! இல்லாதவங்க கடன் வாங்கியாவது தங்கம் வாங்கணுமா என்ன? இதெல்லாம் அதிகப்படி! மக்களைத் தூண்டி விடுவது இல்லையா? எங்க வீட்டில் உப்பு, மல்லிகைப்பூ இரண்டும் வாங்கினோம். உங்கள் பாராட்டுகளுக்கு மனமார்ந்த நன்றி.

   Delete
 22. //சொம்பில் தண்ணீர். அக்ஷயம் போல் தண்ணீர் பெருகித் தண்ணீர்க் கஷ்டம் தீர வேண்டிப் பிரார்த்திக் கொண்டு வைத்திருக்கிறது//

  அதுதான் இப்போது முக்கிய பிரார்த்தனை.
  அன்று 1 மணி நேரம் நல்ல மழை பெய்து குளிர்ச்சியை தந்தது.
  நாங்களும் உப்பு வாங்கினோம். மாலை கோவில் போகலாம் என்று நினைத்து இருந்தேன், மழை.
  அதனால் வீட்டிலேயே வணங்கி விட்டேன். மழைக்கு நன்றி சொன்னேன்.

  பிரசாத படங்கள் அருமையாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, நீங்க இந்தப் பதிவுக்கு வரலைங்கறதையே இப்போத் தான் கவனிச்சேன். ஆனால் அடுத்தடுத்து இணையமும், மின்சாரமும் படுத்தும் பாட்டில் ஒண்ணும் செய்ய முடியலை. வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

   Delete