எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 25, 2019

மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா?

மண்ணைப் பிசையுது அலகாலே தெரியுதா?

நேத்திக்குப் படம் பார்க்க முடியாதவங்க பார்த்துச் சொல்லுங்கப்பா, இப்போ தெரியுதானு! களிமண்ணை அலகால் கொத்திக் கொத்தி
இப்படிக் கொண்டு வந்து வட்ட வடிவமாகச் சுவர் எழுப்பி


கொத்துவேலை தெரியும்.  அதான் நல்லாக் கொத்திக் கொத்திப் பூசறேன்.





நீங்களே பாருங்க குஞ்சுங்களுக்கு இந்த இடம் போதுமா போதாதா? என்ன, இன்னும் பெரிசா இருக்கணுமா?  ம்ம்ம்ம்ம்ம் சரி.


தனியாத் தான் செய்தாகணும்.  நம்ம வீட்டு வேலை; நான் தானே செய்யணும்.  அவர் வரட்டும், பார்த்து அசந்துடுவார்.

அடப் பாவமே, நீ ஏன்மா தனியாக் கஷ்டப்படறே, இந்த ஓரமெல்லாம் கொத்த உன் மெல்லிய அலகால் முடியுமா?  நான் சரி பண்ணிடறேன் பார்த்துட்டே இரு.


பாவம், தனியா முடியலை.  வரதுக்குள்ளே நாமே சரி செய்துடுவோம்.  பாலிஷிங் நடக்கிறது.  அடடா வந்துட்டாளா?  என்ன எப்படி இருக்கு?



அலங்கார வளைவுகள் பாக்கி இருக்கே.



இந்த அலங்காரம் எல்லாம் அவராலே முடியாது.  நான் தான் பண்ணணும்.

அப்பாடா, இது தான் சொர்க்கம்.

வெளியே போனாரே காணோமே இன்னமும், என்ன ஆச்சு?  கவலையா இருக்கு.

இவ்வளவு நேரமாச்சு, இன்னும் வரலியே? எங்கே போயிருப்பார்?


அப்பாடா, வந்துட்டார்.  போய்ப் படுத்துத் தூங்கலாம்.  குஞ்சுகளெல்லாம் நல்லபடியாப்பொரிச்சாகணும். அது வேறே கவலை. காலையிலே பார்க்கலாம். இப்போத் தூங்கப்போறேன். வீடு எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?

தெரியாதவங்க சொல்லுங்கப்பா.2013  மீள் பதிவு. இதை இப்போச் சிலர் பார்த்திருக்க மாட்டீங்க என்பதால் மறுபடி போட்டேன். 2013 என்பதைக் க்ளிக்கினால் பழைய பதிவுக்கு அழைத்துச் செல்லும்.

36 comments:

  1. அழகாக அமைத்து இருக்கிதே அலகால்...

    இவ்வளவு பொறுமையாக படம் பிடித்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அட, கில்லர்ஜி, உங்களுக்கு 2 முறை பதில் கொடுத்தும் போக மாட்டேன்னு அடம். இந்தப் படம் நான் பிடித்தது இல்லை. 2013 ஆம் ஆண்டில் யாரோ பகிர்ந்து அதை நான் பகிர்ந்தேன். அந்தப் பதிவை இப்போ மீள் பதிவாப் போட்டிருக்கேன்.

      Delete
    2. கீசா மேடம்.. படங்கள் அட்டஹாசம்.. என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.. நீங்களா இப்படி லட்டு லட்டா படங்கள் எடுத்துருக்கீங்கன்னு. கன்னாபின்னான்னு பாராட்டிடணும்னு நினைத்து கீழே வந்தால் இந்த பின்னூட்டம்...

      பலூனில் ஊசி குத்தின எஃபக்ட்
      அட.. யாரோ எடுத்தபடங்களா?

      Delete
    3. நான் எடுத்த படங்கள் என்று எங்கேயும் சொல்லவே இல்லையே நெ.த.! :))))

      Delete
    4. ///
      Geetha Sambasivam26 May, 2019
      நான் எடுத்த படங்கள் என்று எங்கேயும் சொல்லவே இல்லையே நெ.த.! :))))//

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

      ஹையோ நானும் ஏமாந்திட்டேன்ன்ன்ன்.. கீசாக்காதான் பொறுமையாகப் படமெடுத்துப் போட்டிருக்கிறா என நினைச்சுட்டேனே.. நல்லவேளை நெல்லைத்தமிழன் என் அறிவுக் கண்ணைத் திறந்திட்டீங்க:).. இது தெரியாமல் புகழ்ந்து கொமெண்ட்ஸ் போட்டு முடிச்சிட்டனே ஹா ஹா ஹா.. சரி இது ஒன்று புதிசில்லை:)) எங்களுக்கு:)) ஹா ஹா ஹா.

      Delete
    5. ஹாஹாஹாஹா,நீங்க வந்ததே அதிசயம் அதிரடி! ஆகவே உங்க கிட்டே இருந்து பாராட்டை எதிர்பார்க்க முடியுமா? :))))))

      Delete
  2. அப்போது ரசித்ததை இப்போதும் ரசித்தேன் என்றாலும் அப்போது கேஜிஜியும் வந்து ரசித்திருக்கிறார் என்பது தெரிந்து இப்போது நான் மட்டும் ரசித்திருக்கிறேன் என்பது புரிந்து ஆனால் ஏன் இதை இப்போது மீள்பதிவாக்கியிருக்கிறீர்கள் என்பது புரியாமலேயே எப்படி இருந்தாலும் அது வீடு கட்டும் அழகை இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம் என்று மனதில் பட்டதை இங்கே பகிர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உல(க்)கை நாயகராட்டம் எல்லாம் பேசினா எப்புடிப் புரிஞ்சுக்கறதாம்? ஆமாம், நீங்க அப்போவும் கருத்துச் சொல்லி இருக்கீங்க. கௌதமனும் அப்போல்லாம் அடிக்கடி வருவார். அவர் ஞாயிறு படம் போலவே நானும் போட்டிப் படம்போடுவேன். நினைவிருக்கோ என்னமோ! இதோ ஒரு உதாரணம் பாருங்க இங்கே! சுட்டி கொடுக்கிறேன். https://sivamgss.blogspot.com/2013/07/blog-post_14.html

      Delete
    2. ஹா ஹா ஹா ஸ்ரீராம், கீசாக்காவின் கூடு பார்த்து ரோட்டலி புரூட்டலி கொயம்பிங்:)) ஹா ஹா ஹா.

      Delete
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதிரடி!

      Delete
  3. மண்ணைப் பிசையுது அலகாலே!
    என்ற வரிகள் இரண்டு தடவை வந்த வுடன் எனக்கு பாராதியாரின் பாடல் நினைவுக்கு வந்து விட்டது.

    //பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
    மனந்திறப்பது மதியாலே”
    பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
    வீட்டைத் திறப்பது பெண்ணாலே//

    அழகாய் வீடு அமைக்குது இரு குருவிகளும்.
    முன்பே பார்த்து இருக்கிறேன்.
    இப்போதும் பார்த்து ரசித்தேன்.
    இறைவன் எப்படி எல்லாம் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் முளையை கொடுத்து இருக்கிறார்! என்று வியக்க வைக்கும் அறிவு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இப்போ இங்கே குளவிகள் கூடு கட்டின. என்ன ஒரு பிரச்னை என்றால் அதுங்க கூடு கட்டும்போது அங்கே நாம் போனால் கொட்ட வருதுங்க! இத்தனைக்கும் அந்தப் பக்கம் பெருக்குவதையே நிறுத்தி வைச்சிருக்கேன்! :))))

      Delete
  4. அழகோ அழகு...

    மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, நன்றி, குற்றால வாசம் ஆரம்பிச்சாச்சா?

      Delete
  5. இயற்கையின் கொத்தனார்கள் நானும் ஒரு கூடுகட்டும் காணொளியைப் பகிர்ந்திருக்கிறேன் ரன்னிங் கமெண்டரி நன்று

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, அப்படியே பழைய பதிவை காப்பி, பேஸ்ட் பண்ணினேன்.

      Delete
  6. மனிதனை விடவும் மற்ற உயிரினங்கள் மேம்பட்டவை தான்...

    காடுகளும் மலைகளும்
    வயல்களும் வரப்புகளும்
    பறவைகளும் விலங்குகளும்
    இல்லாத உலகம் - உலகமா?...

    வாழ்க சிற்றுயிர்கள்..
    வளர்க இயற்கைச் சூழல்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்,துரை, சிற்றுயிர்கள் வாழாமல் இயற்கைச் சூழல் நிலைத்து நிற்பது எப்படி? ஆனால் பாழாய்ப் போன மனிதனுக்குத் தான் அது தெரியவே இல்லை!

      Delete
  7. கீசா மேடம்... நான் அனிமல் ப்ளானட் போன்ற சேனல்களைத் தொடர்ந்து பார்ப்பேன். எப்படி பறவைகளில் சில, பெண் துணைசேர, நன்றாக வீடு கட்டி, அதனைக் காண்பித்து ஈர்க்கிறது, பெண்ணைக் கவர சில பறவைகள் எப்படி எப்படி நடனம் ஆடுகின்றன என்றெல்லாம் பார்த்தால், ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும். ஆண் விலங்குகளில், யார் பெரியவன் என்ற போட்டி மட்டும்தான் பெண்ணைக் கவர்வதில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும், பறவைகளில் அப்படி இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லைத் தமிழரே, நாங்களும் அவ்வப்போது பார்க்கிறோம். ஆகவே இதெல்லாம் பார்க்கப் பார்க்க அதிசயம் தான் மனதில்.

      Delete
  8. ஆஹா. இப்படி ஒரு கூடு உருவானதா. நான் முன்பு பார்த்த நினைவில்லை.
    மிக அழகு. அதுக்கு எழுதி இருக்கும் வாசகங்களும்
    இனிமை. என்ன ஒரு உழைப்பு மா. கீதா. மிக மிக நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. முன்னர் எழுதினதை அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணிட்டேன்.

      Delete
  9. வெகு அழகான படங்கள்! காமிராவில் ஜூம் செய்து எடுத்தீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, பானுமதி, பதிவைச் சரியாப் படிக்கலை. பின்னூட்டங்களையும் சரியாப் பார்க்கலை! :))))

      Delete
  10. வணக்கம் சகோதரி

    அழகாய் வீடு கட்டி வெகு அழகாய் குடும்பம் நடத்தி... இறைவன்தான் இவ்வுயிர்களுக்கு எப்படியெல்லாம் கற்றுத் தந்திருக்கிறான். அதன் செயல்கள் ஒவ்வொன்றும் பார்க்கும் போதே ஆச்சரியமூட்டுகிறது. ஒவ்வொரு படத்திற்கும் தாங்கள் தந்துள்ள பொருத்தமான வாசகங்களை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்ககமலா,ஆமாம், அசத்தல் வேலை தான். அதுவும் ஓர் அழகான கொத்தனார் போல் மண்ணைக் குழைத்து வீடு கட்டி! அமர்க்களம்! மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்துக்கு!

      Delete
  11. கீதாக்கா அசத்தல் பதிவு!! செம செம செம!! மிகவும் மிகவும் ரசித்தேன்....நல்ல காலம் படங்கள் முதலில் வரலை. இப்ப வந்துருச்சு!!

    என்ன அழகா கட்டுது இல்லையா...என்ன ஒரு பொறுமை...எப்படி இப்படி இயற்கையில் அதுகளுக்கு கைவண்னம்...சான்சே இல்லை. மனுஷன் கூட இப்படிக் கட்ட மாட்டான்...அந்த உள்ளே போகும் நுழைவு வாயில் பாருங்க என்ன அழகு இல்லையா...

    இந்தப் படங்களை நான் எதற்கோ தேடும் போது நெட்டில் பார்த்தேன் ஆனால் அந்தப் படத்தில் பாதி விடூதான் இருந்தது...ஒவ்வொரு படமும் அப்படி ஒர் அழகு...

    கமென்ட்ஸும் செம...

    மிக மிக ரசித்தேன் கீதாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. படங்கள் எல்லாம் ஒழுங்காத் தானே வந்திருக்கு! உங்க கணினி சரியில்லைனு நினைக்கிறேன். மற்றபடி பாராட்டுக்கு நன்றி.

      Delete
  12. ஓ மை கடவுளே.. என்ன கீசாக்கா இது? உண்மையாகவே அக்குருவிகள்தான் கட்டியதோ? என்னால நம்பவே முடியவில்லை... ஆரோ மனிசர் கட்டிக் கட்ட்டி விட்டுப் படமெடுத்ததைப்போல நினைக்க வைக்குது. என்னா ஒரு கெட்டித்தனம்.. எப்படி மூடி வாசல் வச்சிருக்கினம் .. எனக்கு உடம்பெல்லாம் புல்லரிக்குது.. இவ்ளோ திறமை இருக்கோ என.. உண்மையில பறவை மிருகங்களுக்கு நம் பாஷையில் பேச வராது அல்லது நமக்கு அவர்கள் பாசை தெரியாதே தவிர.. அவர்களும் மனிதர்கள் போலத்தான் என நான் அடிக்கடி நினைப்பதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அதிரடி, அவற்றுக்குப் பேசத்தெரியவில்லையே தவிர அவையும் மனிதர்கள் போலத் தான்! உண்மையா அந்தக் குருவிகள் தான் கட்டின.

      Delete
  13. உண்மையில் சொக்கிப்போய் இருக்கிறேன் களிமண் வீடு பார்த்து.. அந்தக் குட்டி அலகால கொஞ்சம் கொஞ்சமாக மண் எடுத்துவர எவ்ளோ காலம் எடுத்திருக்கும்., ஆனா சில மனிதர்கள் இப்படிக் கண்டால், கூட்டை உடைத்துக் கலைப்போரும் உண்டு:(.

    ஆரோடதோ வீட்டு ஜன்னலில் கட்டியிருக்கே வீட்டை, ஜன்னலைத் திறந்தால் கூடு உடைஞ்சிடுமே...

    கூட்டுக்கான கப்ஸன்ஸ் சூப்பர்ர் ஹா ஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. கூட்டுக்கான தலைப்புக்கள் எல்லாம் முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னே எழுதினது தான். மறுபடி போட்டேன். பாராட்டுக்கு நன்னி ஹை!

      Delete
  14. இவ்வளவு பொறுமையாக ..மண்வீடு அடடா..

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, நன்றி.

      Delete
  15. சில நாட்கள் இடைவெளி. உங்கள் பக்கத்துக்கு வந்தால் ஜன்னலில் குருவிகள்! ஸ்டெப் ஸ்டெப்பாக கூடுகட்டும் படங்கள். ஆனந்தமாக இருக்கின்றன பார்ப்பதற்கு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன். எங்க வீட்டு ஜன்னலில் குருவிகள், அணில்கள் எல்லாம் கூடு கட்டி வாழ்ந்திருக்கின்றன. அம்பத்தூர் வீட்டில்! அது ஒருகாலம். அப்போல்லாம் காமிராவும் இல்லை. படங்கள் எடுத்துப் போட வேண்டும் என்றெல்லாம் தோன்றவும் இல்லை.

      Delete