எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 01, 2019

வணக்கம்.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னோட கடைசி மைத்துனர் திரு கணேஷ் பற்றி ஏற்கெனவே எழுதி/சொல்லி இருக்கேன், இருதய நோயாளியான அவர் சில வருடங்கள் முன்னர் மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததும்,பின்னர் குணமானதும் தெரிந்திருக்கும். இப்போது அவர் அலுவவலக வேலையாக அசாமின் சில்சார் சென்றபோது தங்குமிடத்திலிருந்து திரும்ப தில்லி கிளம்பும் சமயம் ஓட்டலில் மிதியடி தடுக்கிக்கீழே விழுந்ததில் இடுப்பில் எக்கச்சக்கமான அடி பட்டு அங்கேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை முடித்து இப்போது மும்பையில் ஓர் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சையை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறார். இதய நோயாளியான அவருக்கு இதயம் நல்ல முறையில் வலுவாக இருப்பது உறுதியானதும் சிகிச்சை தொடங்குவார்கள். நாங்கள் இங்கே இருக்கிறோம். ஆனாலும் அங்கே துணைக்குப் பெரிய மைத்துனர், அவர் மனைவி குடும்பமும் என் கடைசி நாத்தனாரும் இருக்கின்றனர். இந்தச் செய்தி கிடைத்ததில் இருந்து ஒரே மனக்குழப்பம். அவர் உடல்நிலை அறுவை சிகிச்சையைத் தாங்கும் வலிமை பெற்று சிகிச்சையும் நல்லபடியாக முடிந்து மீண்டும் உடல் நிலை தேறிவரப் பிரார்த்தித்துக்கொண்டிருக்கோம்.

இதன் காரணமாகவும் வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களாலும்  என்னால் இரண்டு நாட்களாக இணையத்துக்கு வர முடியலை. இன்று மதியம் (இங்கே ஞாயிறு காலை) நாங்க பெண்ணின் வீட்டில் இருந்து கிளம்பிப் பிள்ளை வீட்டுக்குப் போகிறோம்.அதன் பின்னர் ஓரளவு இணையம் வர முடியும் என நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.

38 comments:

  1. அவர் நலமுடன் வீடு திரும்பிட எமது பிரார்த்தனைகளும் கூடி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி!

      Delete
  2. நீங்கள் எப்போது அம்பேரிக்கா போனாலும் நெருங்கிய உறவினர்கள் யாருக்காவது ஏதாவது ஏற்ப்படுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா, சென்ற முறையும் இந்த முறையும் தான் இப்படி. அதுக்கு முன்னரெல்லாம் நாங்க பாட்டுக்குத் தான் வந்து போய்க் கொண்டு இருந்தோம். மாமியாருக்கு வயது 93 ஆகி இருந்தது. வயிற்றில் ஜீரணக்கோளாறுக்குப் போய் இப்படிப் பெரிய மருத்துவமனையில் சேர்த்தது, அங்கே கொடுத்த சிகிச்சை எல்லாமும் சரியாய் இல்லை என்பதை அப்போதே நாங்க உணர்ந்தோம். ஆனால் என்ன செய்வது? வயது காரணமோ, சிகிச்சை காரணமோ தெரியாது! அதோடு அவர் விதி முடிந்து விட்டது. இப்போது நடந்திருப்பது எதிர்பாராத ஒன்று. முற்றிலும் எதிர்பாராதது. பாவம், மைத்துனர் அலுவலக வேலையை முடித்துக்கொண்டு தில்லி திரும்ப விமான நிலையம் செல்ல அறையை விட்டு வந்தவருக்கு மிதியடி தடுக்கிக் கீழே விழுந்ததில் 4,5 படிகள் உருண்டு எக்கச்சக்கமாக அடி! இது அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். எல்லாம் ஒழுங்காக இருந்திருந்தால் இந்நேரம் தில்லியில் வீட்டில் இருந்திருப்பார். நேரம்! :( அதோடு அவர் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். செயற்கை வால்வ் பொருத்தி உள்ளது. அதனால் இருதய நோய் மருத்துவரின் நேரடிக்கண்காணிப்பிலேயே இருப்பார்.

      Delete
  3. திரு கணேஷ் அவர்கள் விரைவில் குணமடையப் ப்ரார்த்திக்கிறோம். மனக்குழப்பம் அடையத் தேவையில்லை. எல்லாம் நன்றாகவே நடக்கும்.

    இணையத்தில் காணவில்லையே என்று நினைத்தேன். தங்கள் மனக்குழப்பம் விரைவில் தீரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. இரண்டு நாட்களாக எதுவும் முடியலை. செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை அறுவை சிகிச்சை நடக்கலாம். நல்லபடியாக முடியவேண்டும்.

      Delete
  4. கவலைப்படாதீங்கோ கீசாக்கா, இப்போ குருமாற்றம் வந்தது அனைவருக்கும் சிறு சிறு இடைஞ்சல்களைக் காட்டுது, அனைத்தும் நல்லபடி நலமாகும், உங்கள் மைத்துனர் நல்லபடி நலமாகி வீட்டுக்கு வருவார், நம்பிகையோடு இருங்கோ... நாமும் அவருக்கு விரைவில் நலம்பெறப் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கார்த்திகைப்பிறை, குருப்பெயர்ச்சியும் சரி, புது வருஷமும் சரி, விருச்சிக ராசிக்காரங்களுக்கு நல்லா இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மைத்துனர் விருச்சிக ராசி இல்லை. எதாக இருந்தாலும் குலதெய்வம் அருளால் பூரண குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். இப்போவே பரவாக்கரை மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டு இருக்கிறேன்.

      Delete
  5. அன்பு கீதாமா,
    பாவம் எப்படி எல்லாம் வலித்திருக்குமோ. மாமா
    மிகக் கவலையில் இருப்பார்.
    பகவத் சங்கல்பம் நன்றாகவே இருக்கும். ஆப்பரேஷன் ஆகி நல்லபடி வீடு திரும்பட்டும்.சின்ன வயசு தானே. நிறைய தொந்தரவில்லாமல் இருக்க பிரார்த்தனைகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லி, இந்த வலி தான் பாடாய்ப் படுத்துகிறது என்கிறார்கள். ஒரேயடியாகக் கத்துகிறாராம். :( என்ன செய்ய முடியும். வலியை வாங்கிக்கொள்ளும் வல்லமை இருந்தால் நாம் வாங்கிக்கொள்ளலாம். :( சின்ன வயசு தான். உடனே மருத்துவமனையில் சேர்த்திருந்தால் செயற்கை முறையில் எலும்புகளை இணைத்திருக்க வேண்டாம். 2 நாட்கள் தாமதம் ஆகிவிட்டது. சில்சாரில் இருந்து கல்கத்தா வந்து அங்கே ஒரு நாள் காத்திருந்து மும்பைக்கு விமானம்! வியாழனன்று அடிபட்டது. சனிக்கிழமை இரவு தான் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.

      Delete
  6. அவர் பூரண நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.   உங்கள் மனக்கவலைகளும் சீக்கிரம் தீரப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம், பிரச்னைகளே இல்லாதவர்கள் யார்? தாங்கும் வலிமையைத் தான் ஆண்டவன் தரவேண்டும்.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    விபரங்கள் படித்தவுடன் மனதிற்கு கலக்கமாக உள்ளது. கவலைப்படாதீர்கள். தங்கள் மைத்துனர் உடல் நலம் தேறி நல்லபடியாக திரும்பிவர நானும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கமலா ஹரிஹரன். அனைவரின் பிரார்த்தனைகளாலும் விரைவில் குணம் அடைவார்.

      Delete
  8. நானும் அவர் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன் நீங்களும் அதையே நினைத்து அதிகம் கவலைப்படாமல் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்பி இங்கு இருக்கும் வரை ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுரைத்தமிழரே, கவலை இல்லாமல் இருக்குமா? கவலை இருக்கத்தான் செய்கிறது. இங்கே குட்டிக்குஞ்சுலுவின் விளையாட்டுகள் கவலைகளை மறக்கடிக்கிறது.

      Delete
  9. மைத்துனர் திரு கணேஷ் அவர்கள் இறைவன் அருளால் விரைவில் குணமடையவார்.
    சனி ,ஞாயிறு எங்காவது வெளியில் போய் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, சனி,ஞாயிறு மட்டுமில்லை. போனவாரம் முழுக்க இங்கே அனைவருக்கும் விடுமுறைதான், நன்றி நவிலும் நாள் என்பதால். ஒரு சில அலுவலகங்கள் இயங்கின. மற்றவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்தார்கள்.

      Delete
  10. அவர் பூரண நலம் பெற பிராத்திப்போம்.

    ReplyDelete
  11. உங்கள் உறவினர் நலமடைய என்பிரார்த்தனைகள்

    ReplyDelete
  12. விரைவில் உங்கள் மைத்துனர் சுகமடைய பிரார்த்திக்கின்றோம் அக்கா .

    ReplyDelete
  13. எல்லாம் நல்லபடியாக நடக்க இறைவன் அருள் புரிவான்....

    ReplyDelete
  14. உங்களது உறவினர் நலம் பெற எனது பிரார்த்தனைகளும். எல்லாம் நல்லபடியாக நடக்க எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.

    ReplyDelete
  15. உங்கள் மைத்துனர் கணேஷ் அவர்களுக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்து பூரண நலத்துடன் வீடு திரும்ப பிரார்த்தனைகள்!

    ReplyDelete
  16. இன்று உங்கள் மைத்துனருக்கு நல்ல படியாக அறுவை சிகிச்சை நடைபெறும் . பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள். எங்கள் பிரார்த்தனைகளும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அறுவை சிகிச்சை முடிந்து தற்சமயம் ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. உடல்நிலை சீரானவுடன் வென்டிலேட்டரை எடுத்துவிடுவார்கள்.

      Delete
  17. உங்கள் மைத்துனர் விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும், கவலைப்படாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பானுமதி. விரைவில் குணம் அடையப் பிரார்த்திக்கிறோம். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் மூலம் அவர் விரைவில் குணமடைவார் என்னும் நம்பிக்கை இருக்கிறது.

      Delete
  18. அறுவை சிகிச்சை நடந்து முடிந்தா? மைத்துனர் எப்படி இருக்கிறார்? உங்களை கவலை கொள்ளாதீர்கள் என்று சொல்லிவிட்டு நீங்கள் மற்றும் உங்கள் குடுமப்த்தினர் கவலைப்படுவீர்கள் என்று நான் நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து மைத்துனர் நல்லபடியாக இருப்பார் என நினைக்கிறேன் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. அறுவை சிகிச்சை முடிந்து தற்சமயம் ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. உடல்நிலை சீரானவுடன் வென்டிலேட்டரை எடுத்துவிடுவார்கள்.

      Delete
  19. வணக்கம் சகோதரி

    அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து தங்கள் மைத்துனர் நலம் பெற்றது குறித்து விபரமறிந்ததும் மனதுக்கு மிகவும் மகிழ்வாக உள்ளது. அவர் பூரண நலமடைந்து இயல்பாக வீடு திரும்பி நலமே வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கமலா!

      Delete