எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, January 25, 2020

குஞ்சுலுவின் குழந்தைகள்!

இவை எல்லாம் குட்டிக்குஞ்சுலுவின் "பேபீஸ்"!  தினம் ராத்திரி அது படுத்துக்கப் போகும்போது இவை எல்லாவற்றையும் உடன் எடுத்துச் சென்று தன்னுடன் படுக்கையில் போட்டுக்கொள்ளும். அந்தப்பக்கம் அப்பாவும், இந்தப்பக்கம் அம்மாவும் இடம் இல்லாமல் படுத்துக்கொள்வார்கள். அது தூங்கினதும் எடுத்து வைப்பார்கள். இதை ராத்திரி எடுத்துப் போவது ஒரு தனி வேலை. குஞ்சுலு "ஸ்லீபி!" என்றதும் அவ அம்மாவோ, அப்பாவோ தூங்க வைக்க உடன் செல்லுவார்கள். அது அப்போ வேறே ஏதேனும் பாப்பாவை வைத்துக் கொண்டிருக்கும். படுத்துக்கப் போறச்சே தான் இந்த பேபீஸ் நினைவே குஞ்சுலுவுக்கு வரும். உடனே தேடும் படலம் ஆரம்பிக்கும். எல்லாத்தையும் ஒரே தடவையில் தூக்கிக் போகணும்னு சேர்த்து இரு கைகளாலும் பிடிச்சுக்கும். ஆனால் ஏதேனும் ஒண்ணு கீழே விழுந்து வைக்கும். அதை எடுக்கையில் இன்னொண்ணு. இப்படிப் பொறுமையாக எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டே போகும். அவ அம்மாவோ அப்பாவோ ஒரு பேபி போதும்னு சொல்லக் கூடாது! க்ரீச்னு ஒரு கத்தல்! எல்லா பேபிஸும் தான் வரணும்.

காலம்பர எழுந்து வரச்சேயும் நினைவாக முதலில் பேபீஸைக் கொண்டு வந்து சோஃபாவில் போட்டு விடும். அப்புறமாத் தான் அது மத்த வேலையே பார்க்கும். இவற்றில் ஏதேனும் ஒன்றுக்குத் திடீர்னு அதிர்ஷ்டம் அடிக்கையில் அன்றைய நாள் பூராக் குஞ்சுலுவின் இடுப்பிலேயே அந்த பேபி வாசம் செய்யும். இல்லைனா வேறே 3,4 பேபீஸ்  உள்ளன. அவற்றை வைத்துக்கொள்ளும். அவற்றில் இரண்டு இரட்டைக் குழந்தைகள்! அதற்கெனத் தனியாக விளையாட்டு  ஸ்ட்ரோலர் வாங்கி இருப்பதால்  அதில் வைத்துத் தள்ளிக் கொண்டு போகும். அவற்றுக்கு ஃபீடிங் பாட்டிலில் இருந்து வாயில் வைத்துக்கொள்ளும் ரப்பர் வரை கொடுத்து இருக்காங்க! எல்லாத்தையும் எங்கேயானும் போட்டு விடும். அல்லது இந்த பேபீஸின் காலுக்கு எனக் கொடுத்திருக்கும் ஷூவைக் கழற்றி எங்கேயானும் போட்டு விட்டுத் தேடும். அல்லது திரும்பத் திரும்ப நம்மைப் போட்டுத் தரச் சொல்லும். இன்னொரு பேபி பையரோட நண்பர் வீட்டில் கொடுத்தது. சில சமயம் இந்த பொம்மைகளைக் கீழே போட்டுவிட்டுக் காலால் மிதிக்கும். குழந்தைத் தனம் அப்போது வந்துடும் போல! பாப்பாவை மிதிக்கலாமா எனக் கேட்டால் உடனே கைகளில் எடுத்துக் கொள்ளும்.

என்ன இருந்தாலும் பெண் குழந்தை என்பதை இதோட விளையாட்டுக்கள் காண்பித்து விடுகின்றன. முரட்டுத்தனமாக நாற்காலி, பெஞ்ச் ஆகியவற்றை இழுத்துப் போட்டுக் கொண்டு மேலிருந்து சாமான்களை எடுத்துக் கீழே போட்டு விஷமம் செய்தாலும் இம்மாதிரியான விளையாட்டுக்கள் "பெண் என்றும் பெண்தான்!" என்பதைக் காட்டுகின்றன. அதோடு இல்லாமல் அம்பேரிக்கா முழுவதும் பெண் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் தனி, ஆண் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள் தனி. நாம் பரிசுப் பொருள் வாங்குவதானால் கூடக் குழந்தை ஆணா, பெண்ணா எனச் சொல்லி வயசையும் சொன்னால் அதற்கேற்ற பரிசுப் பொருட்களை நம் வசதியைச் சொன்னால் அதற்கேற்ப எடுத்துக் கொடுப்பார்கள். அல்லது நாமே தேர்வு செய்து கொள்ளலாம். ஆங்காங்கே இவற்றை விரிவாகப் போட்டு அலமாரிகளில் அடுக்கி இருப்பார்கள். ஆண், பெண் சமத்துவம் என்று சொல்பவர்கள் எல்லாம் இங்கே வந்தால் வாயை மூடிக் கொண்டு இம்மாதிரித் தான் செய்யணும். பெண் குழந்தைகளுக்கு என ரோலிங் சைகிள் கூடப் பிங்க் (ரோஜா நிறம்) வண்ணத்திலும் ஆண் குழந்தைகளுக்கு நீல வண்ணத்திலும் க்டைக்கும். பிறந்த பெண் குழந்தைகளுக்கு மருத்துவமனை கொடுக்கும் உடுப்புகள் ரோஜா நிறத்தில் தான். ஆண் குழந்தைகள் எனில் நீல நிறம். குழந்தைக்குப் போர்த்தும் போர்வையிலிருந்து துண்டு வரை ஆணுக்கு நீலமும், பெண்ணுக்கு ரோஜா நிறமுமாக இருக்கும்.

28 comments:

  1. ஆஹா நாந்தான் பர்ஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, நீங்க தான் ஃபர்ஷ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! அதிரடி ஏமாந்தாச்சு! :))))

      Delete
  2. ஆஆஆஆஆஆஆ மீதான் 1ஸ்ட்டூஊஊஊஉ.. கீசாக்கா நலமோ.. நீண்ட நாளாகி விட்டதைப்போல இருக்கு உங்களோடு பேசி.. பாக் அடுக்கிப் போட்டீங்களோ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சாமுத்ரிகா லக்ஷண நாரீமணி! நீங்க தான் பக்தி,ஆன்மிகம் எனில் தலை தெறிக்க ஓடறீங்க! அப்புறமா நீண்டநாட்களாகாமல் எப்படி இருக்குமாம்?

      Delete
  3. குஞ்சுலுவின் பேபீஸ் கதை அழகு.. பெண் குழந்தைகள் என்றாலே இப்படித்தானே..இப்போதுதான் ரசிக்கும் பருவம், பின்பு திரும்பிப் பார்க்க முன் வளர்ந்திடுவினம், தன் ரூமும் படிப்பும் என இருப்பார்கள்...

    ஆண்குழந்தைகள் எனில் குட்டிக் குட்டிப் பொருட்கள்..லெகோ வகைகள்.. எங்கள் வீட்டில் குட்டிக் கார்கள் கொண்டு திரிவார்கள், ஒன்றைக் காணவில்லை எனில் எங்கள் கதை அவ்ளோதான்.

    மூத்தமகன், கணவர் வேர்க் போகும்போது ஒரு குட்டிக்காரைக் கொண்டுபோய் அவரிடம் கொடுப்பார், கணவரும் உடனே அதைப் பக்குவமாக பொக்கட்டில் வைத்து வேலைக்குக் கொண்டு போவார்ர், ஈவினிங் வந்து வாசலில் ஏறியதும், ஓடிப்போய் அப்பா வெயார் இஸ் மை கார் என்பார்ர், உடனே கையில கொடுக்கோணும்:).. என் கணவர் சொல்வார் தனக்கு அந்தக் காரைத் துலைச்சுப்போடுவேனோ என நெஞ்சு எப்பவும் பக்குப் பக்கென இருக்கும் என்று ஹா ஹா ஹா.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் இப்படித் தான், நினைவாக் காலம்பர ப்ளே ஸ்கூல் போறச்சே கொடுத்துட்டுப் போறதை மத்தியானமா வந்து கேட்கும். நாம் நினைவாக் கொடுக்கலைனால் அவ்வளவு தான்!

      Delete
  4. உங்களுக்கு ஒன்று சொல்லோணும் கீசாக்கா:).. என்னிடமும் குஞ்சுலுவைப்போல பொம்மைக் கலெக்‌ஷன் இருக்குது தெரியுமோ:)) ஹா ஹா ஹா எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. எங்க பெண்ணிடம் அப்படி ஒரு கலெக்ஷன் வெகு வருடங்கள் இருந்தன. பின்னாட்களில் அங்கே இங்கே மாற்றல் ஆகிப் போனதில் அந்த அந்த ஊரில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்துட்டோம். இம்மாதிரி நிறைய தானம் பண்ணியாச்சு! எலக்ட்ரிக் ஹீட்டர், கல்லுரல், அம்மி, ஸ்டவ் அடுப்பு எனத் தூக்கித் தூக்கிக் கொடுத்திருக்கோம்.

      Delete
  5. //சில சமயம் இந்த பொம்மைகளைக் கிழே போட்டுவிட்டுக் காலால் மிதிக்கும். //

    ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தூக்கிப் போட்டுவிட்டு மிதிக்கும். பின்னர் நாம் சொன்னால் எடுத்துக் கைகளில் வைச்சுக்கும்.

      Delete
  6. குழந்தைகளுக்கு நிறங்களைக்கூட தேர்வு செய்து வைத்த விடயம் ஆச்சர்யமளிக்கிறது.

    குஞ்சுலுவோடு சந்தோஷமாக பொழுதைக் கழியுங்கள் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. அமாம், கில்லர்ஜி, இங்கே ஆண் குழந்தை, பெண் குழந்தை என்பதைச் சின்னக் குழந்தையாக இருப்பதிலிருந்தே பிரித்துத் தான் சொல்கிறார்கள். நம்ம நாட்டுப் பெண்ணுரிமைவாதிகள் இங்கே வந்தால் வாயை மூடிக் கொள்ள வேண்டியது தான்.

      Delete
  7. பொம்மைகள், விளையாட்டுப்பொருட்கள் மூலமாகவும் பெண்ணின் வேலைகளை வடிவமைக்கிறோமோ?   ஆனாலும் சுவாரஸ்யம் குழந்தையின் விளையாட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், இது நாம் சொல்லிக் கொடுத்து அது செய்யவில்லையே! தானாக அப்படித் தான் விளையாடிக் கொள்கிறது. அதனால் இது பெண்களின் இயல்பான சுபாவத்தை வெளிக்கொண்டு வரும் இறைவனின் பேரருள் தான்!

      Delete
  8. பெரிய பெண்கள் கூட கரடிபொம்மையைக் கட்டிக்கொண்டு தூங்குவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  பார்த்ததில்லை.  வியப்பாக இருக்கும்.  தான் குழந்தை போல் என்று காட்டிக்கொள்ள விரும்புகிறார்களோ என்றும் தோன்றும்.  !!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஸ்ரீராம், பணக்காரப் பெண்கள் இப்படிச் செய்வார்கள் என நானும் திரைப்படங்கள், கதைகளில் படித்திருக்கிறேன்.

      Delete
  9. வணக்கம் சகோதரி

    தங்கள் பேத்தி குட்டி குஞ்சுலுவின் பொம்மை குழந்தைகள் அழகாக உள்ளது. குழந்தைகளின் விளையாட்டே தனிதான். அவர்கள் உலகமே அதற்குள்தான் அடங்கி இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். கூடவே நாமும் அந்த உலகத்தில் ஐக்கியமாகி விடவேண்டும் இல்லையெனில் அவர்களுக்கு கோபம். அழுகை பிடிவாதம் இதெல்லாம் வேறு வந்து விடும். நினைவாக அவள் பொருட்களை ஒவ்வொன்றாக படுக்கையிலிருந்து வெளியில் கொண்டு வந்து வைக்கும் போது பார்க்க நன்றாகத்தான் இருக்கும். பேத்தியுடன் உங்களுக்கு நன்றாக மகிழ்வாக பொழுது போவது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்கு வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கமலா, அதன் உலகமே தனி தான். நாம் தான் அந்த உலகில் ஐக்கியம் ஆக வேண்டும். இப்போ அதுக்கு எல்லாமும் தன்னுடையது எனச் சொல்ல வந்திருக்கிறது. என்னோட செருப்பைக் கூட அது தன் காலில் போட்டுக்கொண்டு, "மைன்!" என்று சொல்லும். :)))))

      Delete
  10. குஞ்சுலுவின் விளையாட்டு , குஞ்சுலுவின் குறும்பு அனைத்தும் படிக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு சாமான் கடையில் பெண்குழந்தைகளுக்கு படுக்கை, விளையாட்டு சாமான்கள் , கிச்சன் செட்கள் எல்லாம் பிங்க் தான். பார்க்க அழகு.
    நான் முன்பு படங்கள் எடுத்து இருக்கிறேன்.

    குழந்தைகளின் உலகம் தனி உலகம் ,அதில் அவர்கள் விளையாடி களிப்பதை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். பார்க்கவும், சேமித்து வைக்கவும்.

    ஊருக்கு வரும் நாள் நெருங்க நெருங்க மனதுக்கு கஷ்டமாய் இருக்கும். இருக்கும் நாளில் மகிழ்வாய் இருங்கள் குஞ்ச்லுவோடு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, அது நம்மையும் தன் உலகத்துடன் சேர்த்துக் கொள்கிறதே! ரைம்ஸ் எல்லாம் சொல்லிக் கொண்டு அபிநயங்களோடு அது ஆடும்போது பார்க்கவே ரசனையாக இருக்கிறது. அதுவும் முழுக்க முழுக்க மழலைச் சொற்கள். திரும்பும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தேடும் என்றாலும் ஸ்கைபில் பார்க்கையில் கோபம் வரும். முகத்தை மூடிக் கொண்டு எங்களைப் பார்க்க மாட்டேன் என்று சொல்லி விடும்.

      Delete
  11. எங்கள் பெரிய பையன் மகளும் இன்னும் இவைகளோடுதான்
    தூங்குகிறாள்.
    ஒரு பெரிய கோணி நிறைய பொம்மைகள்.
    அவள் அறை வசதியாக பொம்மைக்கொலு வைத்தது போல
    இருக்கும். தூக்கிப் போட அனுமதி இல்லை:)
    குஞ்சுலுவை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது.

    எத்தனை விவரம் அதுக்குத் தெரிந்திருக்கிறது.!!!!
    வளமோடு வாழ வேண்டும்.
    எனக்கென்னவோ இந்த நீலம், சிவப்புப் பிரிவே
    ஒத்துக் கொள்ள முடிவதில்லை. இரண்டுமே அழகான வண்ணங்கள் .
    நம் கண்ணனே நீலமேனியும் செவ்வாயும் கொண்டவன் தானே.

    குழந்தையிலியே பிரித்துவிட்டால் அவர்கள்
    வாழ்க்கையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றூ
    வகைப்படுத்துவது போல இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, இங்கேயும் அதே கதை தான். பொம்மைகள் பெட்டிகளில். இப்போத் தான் அதுக்குத் தெரியாமல் பிள்ளை ஆசிரமத்திற்கு தானம் கொடுத்துவிட்டு வந்தார். ஆனாலும் நினைவாக வந்து தேடுகிறது. ஆமாம், எனக்கும் குழந்தையிலிருந்து இந்தப் பிரிவினை ஏற்கத் தான் முடியலை. ஆனால் இங்கே மறந்து கூட நீல உடையைப் பெண் குழந்தைக்குப் போடுவதில்லை. வாங்குவதும் இல்லை.

      Delete
  12. Toys R US மூடியது தான் கஷ்டம். எப்படி இருந்த மிகப்பெரிய சூப்பர் ஸ்டோர். குஞ்சுலுவுக்கு எப்படியிருந்தாலும் வீட்டில் தமிழில் பேசுங்கள். Jayakumar

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜேகே அண்ணா, எனக்கு அவ்வளவெல்லாம் தெரியாது. நான் இந்த வணிகவளாகங்களுக்குப் போவதையே நிறுத்தி விட்டேன். 2011 ஆம் வருஷம் ஐகியா போயிட்டுப் போதும் போதும்னு ஆகிவிட்டது. வீட்டில் தமிழில் தான் பேசுகிறோம். அதுவும் அப்பா, அம்மா என்றே கூப்பிடும். எங்களையும் தாத்தா, பாட்டி என்று தான்!

      Delete
  13. சிறிது வளர்ந்ததும் குழந்தை டீச்சராக மாறும் பாருங்களேன் ,

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, இப்போதே அது எங்களுக்கு ரைம்ஸ் எல்லாம் சொல்லிக் கொடுக்கும். பள்ளியில் விளையாடும் விளையாட்டுக்களை எங்களோடு விளையாடும்.

      Delete
  14. குட்டி குஞ்சுலுவின் குறும்புகள் ரசனை. மகிழ்ந்திருங்கள்.

    ReplyDelete
  15. சுவையான குறும்புகள்... குழந்தைகள் என்றாலே ஆனந்தம் தான்.

    நல்ல பொழுதுபோக்கு உங்களுக்கும்!

    தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete