எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 27, 2020

வெற்றி! வெற்றிக்கு மேல் வெற்றி!

மசால் தோசையை எதிர்பார்த்துக் காத்துட்டு இருப்பீங்க. நேற்று வழக்கம்போல் தோசைக்குக் கிழங்கு பண்ணும்போதும் சரி, நம்மவருக்குக் கொடுக்கும்போதும் சரி சுத்தமா மறந்துட்டேன். அப்போத் தான் பையர் தொலைபேசி ஹூஸ்டனில் எக்கச்சக்கமான கொரோனா நோயாளிகள் என்னும் வருத்தமான தகவலைச் சொன்னார். இங்கே வேறே நிலைமை இப்படி இருக்கேனு வருத்தத்தில் மறந்திருக்கேன். நடுவில் எதுக்கோ மொபைலை எடுக்கும்போது நினைவு வந்தது.ஆஹா! மறந்துட்டோமே! என நினைத்துக் கொண்டு போனால் கிழங்கும் கொஞ்சமாக இருந்தது. இருந்தவரை படம் எடுத்துக் கொண்டு எனக்கு தோசை வார்க்கும்போது நினைவாகக் கிழங்கை வைத்து (நான் இரவு நேரம் எனக்குக் கிழங்கு வேண்டாம், வெறும் தோசை போதும்  எனக் கொஞ்சமாகப் பண்ணி இருந்தேன். இரண்டே உ.கி. தான். அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு தோசையில் வைத்தேன். மீதம் இருந்ததை எனக்கு வார்த்துக் கொண்டிருந்த தோசையில் வைத்தேன். படங்கள் எடுத்தேன். தொட்டுக்கக் காலையிலேயே பண்ணின வெங்காய சாம்பார் தான். சின்ன வெங்காயம் போட்டது. அந்தப் படங்களைத் தான் கீழே பார்க்கிறீர்கள். சாம்பார்ப் படம் எடுக்கலை. 






அட! படங்களை வெகு எளிதாக இணைத்துவிட்டேனே! வெற்றி! வெற்றி! வெற்றிக்கு மேல் வெற்றி!

கிழங்கு பண்ணும் முறை எப்போவும் போல் தான். உருளைக்கிழங்கைக் குக்கரில் போட்டு (நான் இம்மாதிரிச் சமைக்க மட்டும் குக்கர் பயன்படுத்துகிறேன்.) வேக வைத்துக் கொண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்புப் போட்டுத் தாளித்துக் கொண்டு எல்லாவற்றையும் வரிசையாகப் போட்டு வதக்கிக் கொண்டு உருளைக்கிழங்கை உதிர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு அரைக்கரண்டி ஜலத்தில் நன்கு கலந்து வெங்காய வதக்கலில் சேர்த்துக் கிளற வேண்டியது தான். இதுவே பூரிக்கான கிழங்கு எனில் அது வேறே மாதிரி! பின்னர் ஒரு முறை செய்முறையோடு போடறேன். இது கெட்டியாக இருக்கணும். அது கொஞ்சம் தளர்வாக இருக்கலாம். ஆச்சா! இப்படியாக மசால் தோசைப் புராணம் முடிந்தது. இனி ரேவதி கேட்டிருந்த இரு மருந்து வகைகளின் செய்முறைக்குறிப்புக் கீழே!

**********************************************************************************

ஹை! ஜாலியா இருக்கு! ஸ்டாரை அழுத்தியதும் இரண்டு பக்கமும் தானாகவே போகுதே! இஃகி, இஃகி, இஃகி,

நாங்க நம்ம ரங்க்ஸுக்குச் சர்க்கரைனு தெரிந்ததுமே நெல்லிக்காய்ச் சாறு சாப்பிடுகிறோம். அப்போல்லாம் எனக்குச் சர்க்கரை என்பதே இல்லை. ஆனாலும் அவர் என்னல்லாம் சாப்பிடுகிறாரோ எல்லாம் நானும் சாப்பிடுவேன், மாத்திரைகள் தவிர்த்து. ஆகவே நெல்லிக்காய் மட்டும் போட்டுச் சாறு எடுத்துச் சாப்பிட்டது இப்போக் கொரோனாக் காலத்தில் கொஞ்சம் வேறு மாதிரியாகச் சாப்பிடுகிறோம். அது எப்படி எனில் இரண்டு பேருக்கு நான்கு நெல்லிக்காய்கள், ஒரு அங்குலத்துண்டு இஞ்சி, இரண்டு சின்ன வெங்காயம், பாகல்காய் இரண்டு அங்குலத் துண்டு எல்லாம் எடுத்துக் கொண்டு நன்கு பொடியாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டு மஞ்சள் பொடி (நினைவாக) சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து வைத்துப்பேன். சின்னத் தம்பளரால் ஆளுக்கு ஒரு தம்பளர் காலை எழுந்ததும் காலைக்கடன்கள் முடித்துப் பின்னர் இதைக் குடித்துவிடுவோம். அதன் பின்னர் சுமார் 45 நிமிஷம் கழித்தே காஃபி எல்லாம். அதுவரைக்கும் நோ காஃபி.

அதற்குப் பின்னர் முருங்கைக்கீரை இப்போ நிறையக் கிடைப்பதால் வாரம் ஒரு கட்டு வாங்கி விடுவார். யாருக்கு நேரம் இருக்கோ அவங்க அதை ஆய்ந்து எடுத்து வைத்துக் கொள்வோம்.

அந்த முருங்கைக்கீரை இரண்டு கைப்பிடி (இருவருக்கு), சின்ன வெங்காயம் சுமார் பத்து, தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளி நல்ல சாறுள்ளதாக இருந்தால் இரண்டு போதும். இவற்றைத் தயார் செய்து கொண்டு அடுப்பில் கடாய் அல்லது அடி கனமான பாத்திரத்தைப் போட்டு நெய் இரண்டு டீஸ்பூன் ஊற்றிக் கொண்டு மிளகு, ஜீரகம், சோம்பு, கருஞ்சீரகம், லவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு எல்லாம் போட்டு வறுத்துக் கொண்டு நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் போட்டு வதக்க வேண்டும். ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். வெங்காயமும் வதங்கும் சூப்பிலும் சுவை கூடும். பின்னர் தக்காளியைச் சேர்த்து வதக்கிப் பின் முருங்கைக்கீரையைச் சேர்த்து வதக்க வேண்டும். ஒவ்வொன்றாக வதக்கினாலே நன்றாக இருக்கும். முருங்கைக்கீரை வதங்கியதும் மஞ்சள் பொடி, தனியாப் பொடி சேர்த்துக் கொஞ்சம் வதக்கி விட்டு இரண்டு கிண்ணம் நீரை விட்டு உப்புப் போட்டுக் குக்கர் எனில் மூடி நாலைந்து விசில் கொடுக்கவும். இல்லை எனில் பத்து நிமிஷம் நன்றாகக் கொதிக்கவிடவும். கொதித்துக் கொஞ்சம் கெட்டிப்பட்டதும் அடுப்பை அணைத்துவிட்டு நல்ல வடிகட்டியில் வடிகட்டி சூப்பை மட்டும் தனியாக எடுக்கவும். பாத்திரத்தில் இருக்கும் சக்கையைப் பிழிந்தாலும் சூப் வரும். ஒட்ட எடுக்க வேண்டும். பின்னர் மீண்டும் அடுப்பில் வைத்து மிளகு பொடி மட்டும் போட்டுக் கொஞ்சம் வெண்ணெய்(இருந்தால், இல்லைனா நெய் போதும்.) போட்டுக் கொதித்ததும் சூடாகக் குடிக்கக் கொடுக்கவும். நீங்களும் மறக்காமல் குடிக்கவும்.

82 comments:

  1. ஆஹா, படங்களுடன் பதிவை இணைத்தாயிற்று, புதிய ப்ளாகரில். இதில் படங்கள் தேடுவது எளிதாகவே இருக்கிறது.

    ReplyDelete
  2. grrrrrrrrrrrrrrrrrrrrrr மசால் தோசை போணியே ஆகலை! நான் தான் வந்து வந்து சாப்பிடணும் போல!

    ReplyDelete
    Replies
    1. தலைப்பு வித்தியாசமா வைக்காமா... நான்கூட முந்தின இடுகை என்றே நினைத்துவிட்டேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      Delete
    2. அது சரி.... மசால் தோசை உள்ளங்கை அளவா? இல்லை தோசைக்கல் மிகப் பெரியதா?

      படத்தைப் பார்த்தால் அது மசால் தோசை மாதிரி இல்லை. மினி மசால் தோசை மாதிரி இருக்கு. ஹா ஹா

      Delete
    3. //தலைப்பு வித்தியாசமா வைக்கலாமா...//

      நான் கூட யோசித்தேன்.  தலைப்பு வைப்பதில் கொஞ்சம் கவனம் எடுக்கலாம் கீதா அக்கா.

      Delete
    4. நெல்லைத்தமிழரே, முந்தைய இடுகையின் தலைப்புக்கும் இதுக்கும் மலை, மடுவுக்கு உள்ள வித்தியாசம்.

      Delete
    5. ஶ்ரீராம், காலை வேளையில் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சமானும் நல்ல எண்ணம் தோன்றுமே என்று தான் இந்தத் தலைப்பு! இதுக்கு என்ன குறைச்சல்னு புரியலை! புதிய ப்ளாகரில் படங்களோடு பதிவு போட்டது வெற்றியைக் கொடுத்தது! அதைப் பகிர்ந்தேன். :)))))) மற்றபடி உங்களைப் போல் காவியமான /ருசியான தலைப்புக்களைக் கொடுப்பது எனக்கு வருவதில்லையே! :))))))

      Delete
  3. புதிய ப்ளாக்கில் பதிவிட்டமைக்கு வாழ்த்துகள். இரண்டாவது தோசை படம் அழகு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, முதலில் வந்ததால் நீங்களே எடுத்துக்கோங்க சூடான மசால் தோசையை! நன்றி.

      Delete
  4. அனைத்தும் எளிது தான் ... மசால் தோசையும் முருங்கைக்கீரை சூப்பும் வெற்றியே...

    படங்களைப் போலவே அடுத்து வரும் அனைத்து பத்திகளும் (paragraph) மையமாக (center) வந்து விட்டது... அதை மாற்ற :

    பத்தியை mouse-ல் தேர்வு (select) செய்து கொண்டு, பல Icon-கள் இருக்கும் வரிசை முடிவில், மூன்று புள்ளி இருக்கும்... அதை சொடுக்கி, Justify என்பதை தேர்வு செய்தால் போதும்; தளத்தின் அகலத்திற்கேற்ப வரிகள் மாறி விடும்...

    Default-ஆக உள்ளது Left align... அது பதிவின் ஆரம்பத்தில் உள்ள ஒரே ஒரு பத்தி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன். முயற்சி செய்து பார்க்கிறேன்.

      Delete
  5. படித்துவிட்டேன். ஆனால் மொபைலில் கமெண்டரது கஷ்டமா இருக்கு. கணிணி பொண்ணுகிட்ட இருக்கு. இப்ப சோதனைதான். இது சரியா வந்தா எல்லா ப்ளாகும் இதுலயே படிச்சு கமெண்டலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க எல்கே, நான் மொபைல் வைத்திருப்பது பேசவும் வாட்சப் அழைப்புக்கும் மட்டுமே!

      Delete
    2. இல்லை எனக்கு சொன்னேன். மொபைலில் இருந்துதான் எம்முடைய பொழுது போக்குகள். கணினி வேலை செய்ய சரியா இருக்கும்

      Delete
  6. ஏதோ ப்ளாகர் புதுசுனு சொல்றீங்க. திறந்து பாக்கறேன்

    ReplyDelete
    Replies
    1. இங்கே வழக்கம் போல் தான் வருது. டாஷ்போர்ட் மாறி உள்ளது. பதிவிலும் எழுதும் இடங்களில் மாற்றங்கள். அப்படி ஒண்ணும் புரியாத மாற்றங்கள் அல்ல.

      Delete
    2. @LK, என்னோட டாஷ்போர்டில் இன்னமும் புதிய ப்ளாகருக்கு வரவில்லை. நானாக மாற்றிக் கொண்டு தான் பயிற்சி செய்து வருகிறேன். :) புதிய ப்ளாகரில் டாஷ்போர்ட் மாறி வருகிறது. சென்ற பின்னூட்டத்தில் விபரமாக எழுதினது பாதி தான் வந்திருக்கு! :(

      Delete
  7. மசால் தோசை ஓகே.   நல்லா வந்திருக்கு போல...   எனக்குதான் உருளைக் கிழங்கு அவ்வளவா பிடிக்காது.. எனவே நான் ஹோட்டலுக்குப் போனாலும் மசால் தோசை சாப்பிடுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், எனக்கும் மசால் தோசை அவ்வளவாப் பிடிக்காது. ஆனால் முன்னெல்லாம் அடிக்கடி பண்ணி இருக்கேன். ஒன்று எடுத்துக்கொண்டால் அதிகம். மாமா, குழந்தைகளுக்காகப் பண்ணுவது தான்! இப்போத் தான் அடிக்கடி பண்ணுவது இல்லை. எப்போவோ ஒரு முறை!

      Delete
    2. எனக்குப் பிடித்த திருநெவேலி மசாலா....எந்தக் கடையிலும் போடுவதில்லை என்பதால் நோ மசால் தோசை.

      ஆனா பெங்களூர்ல மசால் தோசை, அவரக்காய் தோசை (அடப்பாவி) அவ்வளவு பிரபலம். 35 ரூபாய்தான்.

      Delete
    3. பாகற்காய் தோசை கிடைக்குமா?   ஆரோக்கியம்!

      Delete
    4. பாகற்காய் தோசை கிடைக்காது. ஆனால் சப்பாத்திக்குப் பாகற்காய் ஸ்டஃப் பண்ணலாம், க்ரேவி செய்து அதில் முழுப் பாகற்காயை ஸ்டஃப் செய்து மிதக்கவிடலாம். இதெல்லாம் சப்பாத்திக்குத் தொட்டுக்கலாம். அல்லது பாகற்காயோடு வெங்காயம், பூண்டு, தக்காளி அரைத்துப்பாகற்காய்க் கூட்டும் பண்ணலாம். சப்பாத்திக்கு இதுவும் தொட்டுக்கலாம். நெல்லைத்தமிழரைக் கேட்டால் உருளைக்கிழங்கு தான் பண்ணணும், அதுவும் வெங்காயம் போடக் கூடாதுனு எல்லாம் சொல்லுவார். அதை எல்லாம் கேட்காதீங்க! ஒரு காதில் வாங்கி இன்னொரு காதால் விட்டுடுங்க! :)))))

      Delete
    5. அஜ்ஜஜ்ஜோ... நல்லது சொன்னா இங்க கேட்க ஆட்கள் அருகி வருகின்றார்களே.

      @ஸ்ரீராம்.. என் பெண் சில வாரங்கள் முன்பு பாகற்காயைப் பிளந்து ஸ்டஃப் வைத்து நூல் கட்டி என்ன என்னவோ செய்து எனக்கு டிஷ் செய்துதந்தாள். அருமையாக இருந்தது. படம்லாம் எங்க, எபிக்கு அனுப்பணும் என்றால், செஞ்ச ஒரு டிஷ்ஷையும் இதுவரை எழுதின மாதிரித் தெரியலை இதுல இன்னொன்றா என்று சொல்லிட்டா. இன்று கூட டாஃபி முயற்சித்திருந்தாள். ருசி சரியா இருக்கு ஆனால் இன்னும் கெட்டியாகலை. நேற்று தாமரைத் தண்டை வைத்து ஒன்று செய்தாள் (நான் சாப்பிடலை. அவ்வளவு சரியா வரலைனு சொன்னாங்க)

      Delete
    6. நெல்லைத்தமிழரே, பாகற்காய் ஸ்டஃப் நன்றாக இருக்குமே! அவங்க செய்த சமையல் வகைகளை நீங்க இங்கே பகிர்ந்தால் தானே அவங்களுக்கும் இதில் ஆர்வம் வரும். ஏதோ இந்தவரைக்கும் சமையலில் ஆர்வம் இருக்கே! அதுக்குப் பாராட்டுகள். தாமரைத் தண்டை நான் உப்பு, தயிர் சேர்த்து ஊற வைத்து வெண்டைக்காய் மாதிரி வறுத்து எடுப்பேன். நறுக்கி வெயிலில் காய வைத்துப் பின்னர் உப்பு, தயிர் சேர்த்து மறுபடி வெண்டைக்காய் மாதிரி காய வைத்து வற்றலும் போடலாம்.

      Delete
  8. மருந்துக் குறிப்புகள் குறித்துக் கொண்டேன்.   முருங்கைக் கீரை சூப் சரி...   அப்புறம் அந்தத் சக்கையைத் தூக்கிப் போட்டு விடுவீர்களா?  இரண்டு மூன்று நாட்களாய் அவ்வப்போது வயிறு லேசாய் வலிக்கிறது.  குறிப்பாக இரவில் ஏதாவது வயிற்றுக்குள் போட்டதும்.. எனவே முருங்கைக் கீரை உபயோகிப்பதில் தயக்கம் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. முருங்கைக்கீரையை நன்கு வதக்கிவிட்டுக் கொதிக்கவிட்டு அதன் சத்தை எல்லாம் எடுத்துவிடுகிறோம். போதாதுக்கு சூப்பை வடிகட்டுகையில் கீரையை நன்கு பிழிந்து எடுத்துவிடுவோம். ஆகவே சக்கையில் எதுவும் இருக்காது ஸ்ரீராம். முருங்கைக்கீரை சூப் காலை வேளையில் தானே சாப்பிடப் போகிறோம். வயிற்றுக்குத் தொந்திரவு இருக்காது என்றே நம்புகிறேன்.

      Delete
  9. மசாலாவை விடுங்கள்.  தோசை அழகாகப் பொன்னிறமாக வந்திருக்கிறது.  அதுவே அழகு.

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, ஸ்ரீராம், எங்க சுற்று வட்டாரங்களில் என்னோட தோசை பிரபலம். முன்னெல்லாம் ரொம்ப மெலிதாக வார்த்துக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் அரிசி காரணமா என்னனு தெரியலை , மெலிதாக வார்த்தால் தோசை பொடிப்பொடியாக ஆகிவிடுகிறது, ஓட்டல்களில் கொடுப்பது போல். ஆகவே கொஞ்சம் நிதானமாகவே வார்க்கிறேன். தோசையை விண்டால் கையில் தெரியணும் என்னும் அளவில்.

      Delete
    2. நல்லா பாராட்டறீங்க ஸ்ரீராம்.

      என் நண்பன் முன்பு சொல்லுவான். அவங்களை நிறைய பாராட்டணும், டிரெஸ், பூ, பொட்டு, செருப்பு, கூலிங் கிளாஸ் என்று பலதரப்பட்டது..இல்லைனா இன்னைக்கு வாய்ஸ் ஸ்வீட்டா இருக்குன்னுலாம் சொல்லணும். நீ பட்டுனு ஏதாவது சொன்னா எப்படி லவ் மேரேஜ்லாம் பண்ணமுடியும் என்று கேட்பான். (ஒரு பெண் என்னிடம், இன்றைக்கு கூலிங் கிளாஸ் போட்டிருப்பது எப்படி இருக்கு என்று கேட்டதற்கு, எனக்குப் பிடிக்கலை என்று பட் என்று சொன்னேன்). ஹா ஹா

      Delete
    3. என் பெண் என்னிடம் நிறைய தடவை சொல்லியிருக்கா.. யாரேனும் how is this dress, how is this, that என்றெல்லாம் (பெண்கள்) கேட்டால், wow, super, ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லணும். அவங்க உங்களோட ஒபினியன் கேட்க வரலை, உற்சாகப்படுத்தும் வார்த்தைகளைத்தான் கேட்க வந்திருக்காங்க என்பாள். அப்போ புரியாதது இப்போது மட்டும் புரிந்துவிடுமா என்ன?

      Delete
    4. பின்னே பாராட்டாம?   என் அலுவலகத்தில் சிலர் கொண்டு வரும் தோசைகள் ஓரம் கிழிந்து, நடுவில் கிழிந்து, கருப்பாக இல்லை ஒரே வெளுப்பாக,  இப்படி எல்லாம் பார்த்திருக்கிறேன்.  ஒரே மாதிரி பொன்னிறமாக, கருகாமல் தோசை வார்ப்பது கூட ஒரு கலை.  எங்கள்  பக்கங்களில் பாஸ் செய்யும் தோசை கூட பிரபலம்.

      Delete
    5. எங்க வீடுகளில் ஐந்தாறு தோசை வார்த்தால் கூட முழுசா எடுக்க வராது சிலருக்கு. ஒரு பாத்திரம் நிறையக் கிழிந்த தோசைகள், கருப்பான தோசைகள்னு இருக்கும். எனக்கு மாவு வீணானால் பிடிக்காது. ஆகவே தோசைக்கல்லை நன்றாகக் காய வைத்து முதல் தோசையை விட்டுவிட்டால் அடுத்தடுத்து வரும் தோசைகளை அடுப்பைத் தணித்து வைத்தே வார்த்துடலாம். என்ன ஒரு பிரச்னைன்னா சீக்கிரம் தயாராகும். இந்த விஷயத்தில் நம்ம ரங்க்ஸுக்கும் எனக்கும் சண்டை வரும். சாப்பிடுவதற்குள்ளாக அடுத்தடுத்துக் கொண்டு வந்துடறே என்பார்! ஆகவே அந்த தோசைகளை அவருக்குப் போடாமல் தனியாக வைத்துக்கொண்டு நான் சாப்பிடும்போது சூடு பண்ணிப்பேன். நேற்றுத் தணித்து வைத்தே வார்த்ததால் எனக்கும் சூடான தோசை கிடைத்தது.

      Delete
  10. இட்லி தோசை - இதெல்லாம் சாப்பிட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகின்றன...

    கொரானாவுக்குப் பயந்த ஊரடங்கில் அடைக்கப்பட்ட உணவகங்கள் இன்னும் திற்க்கப்படவில்லை இங்கே...

    ReplyDelete
    Replies
    1. கேட்கவே மனதுக்குக் கஷ்டமாக இருக்கு துரை. இப்படியும் சிலர் வாழ்க்கை! விரைவில் நிலைமை சரியாகப் பிரார்த்திக்கிறேன். இந்தக் கொடிய கொரோனா அசுரனை அழிக்க அன்னை வெளிப்பட்டு வரட்டும்!

      Delete
    2. நானும் இட்லி, தோசை, காபி (எப்பவாவது கடையில், அதன் சூப்பர் ருசிக்காக) வெளியில் சாப்பிட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. நேற்று ஜி எம் பி சார் அனுப்பிய வாட்சப் செய்தியில் அனேகமா எல்லா பிரபல கடைகளும் கொரோனாவுக்குத் தப்பலை (அந்தக் கடை ஆட்களுக்கு கொரோனா). இனி இப்போதைக்கு வெளி கடைகளில் சாப்பிடும் வாய்ப்பு அறவே இல்லை

      Delete
    3. லேட்டஸ்ட் பிரபலம் போத்தீஸ் அதிபர் குடும்பம்.

      Delete
    4. ஓ, அவங்களுக்கும் கொரோனாவா? அடப்பாவமே! :(

      Delete
  11. அன்பு கீதாமா,
    தாமதமா வரேன்.
    வேலைகள் அப்படி ஆகிவிடுகின்றன.
    ஹ்யூடனில் விவரம் பார்த்தேன்.
    என்னமோ எல்லோரும் சேர்ந்து கும்பல் போட்டு விடுகிறார்கள்.

    அப்படிப் போகாமலேயே ஒரு பெண்ணுக்கு வந்து விட்டதாம்.
    என்னமோ தெரியவில்லை, பகவான் நிறைய கருணை வைக்கணும்

    நம்மேல். மனம் நிறைய பிரார்த்தனைகள் தான்.
    பையரும் பெண்ணும் குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும்.

    மசாலாதோசை மற்றும் படங்கள் நன்றாக வந்திருக்கு.
    புது ப்ளாகருக்குப் பழகினது மிக சந்தோஷம்.
    நிறைய டெக்னாலஜி நமக்கு வேண்டாம் .எழுதினதை சேதம் இல்லாமல்
    பப்ளிஷ் செய்தால் போதும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, என்ன செய்வதுனே தெரியாமல் பித்துப் பிடித்தாற்போல் இருக்கிறது. இறை நம்பிக்கை ஒன்றே கொஞ்சம் தெளிவைக் கொடுக்கிறது. என்னதான் முடிவுனு புரியலை. இப்படி ஒரு பிரச்னை உலகையே பீடிக்கும் என எதிர்பார்த்தவர்களும் யாரும் இல்லை! அந்தக் கடவுள் தான் கூடிய விரைவில் ஓர் முடிவைக் கொண்டு வரவேண்டும். குழந்தைகள் பிரச்னைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியாய் இருக்கணும் என்பதே பிரார்த்தனை!

      முருங்கை இலை கிடைத்தது எனில் நீங்க தினமுமே இந்த சூப் வைத்துச் செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து..

      Delete
  12. நான் கேட்ட மருந்து விவரங்களும், முருங்கை சூப்பும்
    செய்முறை வெளியிட்டதில் மிக சந்தோஷமும் நன்றியும் மா. இங்கே
    முருங்கை இலையாகவே கிடைக்கிறது.

    கருஞ்சீரகம் எல்லாம் இருக்கு. நீங்க சொன்ன
    பிரகாரம் செய்து கொள்கிறேன்.
    எல்லோரும் சாப்பிடட்டும்.
    வெய்ய்லில் உட்காரச் சொல்கிறார்கள்.
    இறைவன் எல்லோருக்கும் நீண்ட ஆயுளையும்
    ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சூப்புக்கு மேலே பதில் எழுதி விட்டேன். சரியாக் கவனிக்கலை. இங்கே வெயிலில் நாம் நிற்க, நடக்க, வேலை செய்யச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்/கிடைக்கின்றன. அங்கே கிடையாது என்பதால் வைடமின் "டி"க்காக வெயிலில் உட்கார, நிற்கச் சொல்கின்றனர் என நினைக்கிறேன். எல்லா மருந்து சாமான்களும் இந்தியக் கடைகளில் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் முடிந்தால் வெயிலில் காய வைத்து வெறும் வாணலியில் வறுத்துப் பொடியாகக் கூட வைத்துக் கொண்டு நீரைக் கொதிக்க வைத்துப் போட்டுக் குடிக்கலாம். முடிந்ததைச் செய்து பாருங்கள்.

      Delete
  13. எப்படி இந்த இடுகை மிஸ் ஆச்சு? பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  14. மசால் தோசை - ஓகே... எனக்கும் அவ்வளவாக பிடிக்காது! ப்ளைன் தோசை, இல்லை ரவா தோசை.

    படம் Center Align செய்யப்பட்டுள்ளது போலவே அதற்குப் பின் வரிகளும்! அதனால் தான் நீங்கள் சொல்லி இருப்பது போல ”ஸ்டாரை அழுத்தியதும் ரெண்டு பக்கமும் தானாப் போகுதே!” :) படத்திற்குப் பின் வரும் வரிகள் Justify செய்திருந்தால் இப்படி வந்திருக்காது! அதை எப்படி மாற்றுவது என்பதை தனபாலன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். முயற்சி செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. ரவா தோசைல பிளெயின் ரவா, ஆனியன் ரவா ரெண்டும் எனக்குப் பிடிக்கும்.  ஆனா தயாரிப்பு தரமா இருக்கணும்...    சட்னி சாம்பாரும் நல்லா இருக்கணும்!

      Delete
    2. வாங்க வெங்கட், நான் ஓட்டல்களில் பொதுவாக தோசை ஆர்டரே கொடுப்பதில்லை. ஆனியன் ரவாவும் குறிப்பாகச் சில ஓட்டல்களில் தான். பொதுவாகப் பூரி, கிழங்கு கொடுத்துடுவேன். கொஞ்சம் சாப்பிடும்படி இருக்கும். நீங்கள் சொன்னதைக் கவனத்தில் கொள்கிறேன் வெங்கட். அடுத்த பதிவில் முயற்சி செய்யறேன்.

      Delete
    3. ஸ்ரீராம், ரவாதோசை வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஓட்டல்களில் சாப்பிடப்பிடிப்பதில்லை. எப்போதாவது ஆனியன் ரவா!

      Delete
  15. மசால் தோசை படங்கள் அழகாக வந்திருக்கின்றன.

    என்ன இருந்தாலும் நான் செய்வது போல (செஞ்சுட்டாலும்...ஹா ஹா) முறுகலா வரலை போலிருக்கே.

    சின்ன வெங்காயம் அங்கு கிடைக்கிறதா? இங்கு உரித்த சின்ன வெங்காயம் பாக்கெட் 15 ரூபாய் என்று விற்றார்கள் (வளாகத்துக்கு வரும் காய்கறி ஸ்டாலில்). இரண்டு வாங்கி, ஒன்றை வெங்காய சாம்பார் பண்ணினேன். இன்னொன்றில் கொஞ்சம் எடுத்து நேற்று சேவைக்கு சரவணபவன் சாம்பார் செய்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லையாரே, முறுகத்தான் மடிச்சுப் போட்டுத் தோசைக்கல்லில் போட்டு வைச்சிருக்கேன். இரண்டு பக்கமும் முறுகவிட்டு எடுப்பேன்.

      என்னது? சின்ன வெங்காயம் இங்கே கிடைக்குதாவா? சரியாப் போச்சு! திருச்சி தானே சின்ன வெங்காயத்துக்குப் பிரபலமான ஊர்! இப்போக் கிலோ 50 ரூ விற்கிறாங்க. ஆனாலும் பரவாயில்லை, வாங்கலாம். முந்தைய லாக்டவுனில் விலை குறைவாக விற்றது. உரித்தெல்லாம் வாங்குவதில்லை. சுகாதாரக் கேடு! அதோடு உரித்த வெங்காயம் என்னதான் பாக்கெட்டுகளில் விற்றாலும் அதன் மணம், குணம் போன்றவை போய்விடுவதால் சாப்பிடுவதற்கு யோசிக்கணும். வெங்காயத்தை உரித்துவிட்டோ நறுக்கி விட்டோ வைப்பதில்லை.

      Delete
  16. ஏதோ..மசால் தோசைக்கும், பூரிக்குமான உருளை வெங்காய மசாலாவுக்கு ஆறு வித்தியாசம் இருப்பதுபோல பிறகு எழுதறேன் என்று சொல்றீங்களே.... ஒன்றுக்கு காவிரி ஜலம் குறைவாகவும் இன்னொன்றுக்கு அதிகமாகவும் விடவேண்டும்..அவ்ளோதானே..

    ReplyDelete
    Replies
    1. நெல்லையாரே, நீங்க பண்ணுவதில் இரண்டுக்கும் ஒரே மாதிரிப் பண்ணுவீங்க/பண்ணி இருப்பீங்க. நான் பண்ணும்போது படம் எடுத்துப் போடறேன். நெல்லையா/மதுரையா? ஒரு கை பார்த்துடுவோம்.

      Delete
  17. டயபடீஸுக்கு நெல்லிக்காய் சாறு நல்லதா? எனக்கு இதுவரை தெரியாது.

    எதை எடுத்தாலும் அதிலும் வெங்காயம் சேர்க்கணுமா? வெங்காயம் சேர்க்காமல் இந்த ஜூஸ் எடுத்துச் சாப்பிடக்கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. இந்த நேரம் பார்த்து நெல்லிக்காய் இங்கே கிடைப்பதில்லை.  டயாபடீஸ் என்றில்லை, கே எம் சி மருத்துவமனையில் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு, நெல்லி சூரணம், லேகியம் தருகிறார்களாம்.  அதனுடன் அமுக்கரா கிழங்கு லேகியம்.

      Delete
    2. நெல்லைத்தமிழரே, நாங்களும் சின்ன வெங்காயம் இல்லாமல் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போத் தான் 3 மாசமாச் சின்ன வெங்காயம் போடறோம். அதிகம் இல்லை. ஒன்றிரண்டு. வெங்காயம் போடாமலும் சாப்பிடலாம். தப்பில்லை.

      Delete
  18. அடுத்து முருங்கைக்கீரை சூப்பா? இதையெல்லாம் செய்யும் வாய்ப்பு இல்லை.

    என் பெண், அவளுக்காக மனைவி என்று இரண்டு முறை என்ன என்னத்தையோ போட்டு சூப் செய்தார்கள். ஆஹா ஓஹோ என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டார்கள். பெண் எனக்குக் கொடுத்ததால் நானும் ஓரிரு ஸ்பூன்கள் சூப் சாப்பிட்டேன்.

    இந்த மாதிரி கஷ்டப்படாமல் எடை குறைக்க வேறு வழி இருக்கிறதா என்று கேட்டிருக்கிறேன். ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், இங்கே நெல்லிக்காய் கிடைத்து வருகிறது. ஆனால் விரைவில் பருவம் மாறிவிடும் என்கின்றனர். கிடைக்கும்போது வாங்கி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நீர் நெல்லிக்காய் போட்டு வைத்துக் கொள்ளணும். ஆனால் இதைக் கட்டாயமாய்க் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கணும். வெளியில் வைத்தால் பூஞ்சக்காளான் பிடிக்கும். பின்னர் தேவைப்படும்போது நெல்லிக்காய்களை எடுத்துச் சாறு எடுத்துக் குடித்துக்கொள்ளலாம்.

      Delete
    2. நெல்லையாரே, கவனிக்காமல் ஸ்ரீராமுக்குச் சொன்ன பதிலை இங்கே போட்டிருக்கேன். முருங்கைக்கீரை சூப் ரொம்பவே உடம்புக்கு நல்லது. முடிஞ்சால் பண்ணியோ/பண்ணிக் கொடுக்கச் சொல்லியோ சாப்பிட்டுப் பாருங்கள். காய்கறி சூப் போலத் தான் இதுவும். முருங்கைக்காய் சாப்பிடும்போது கீரையும், பூவும் சாப்பிட்டால் என்ன தப்பு? நீங்க அனாவசியமாச் சாப்பிட்டு வருவதைக் குறைத்துவிட்டுக் கொஞ்சமாக நேரத்துக்கு உணவு எடுத்துக்கொண்டு பாருங்கள். உதாரணமாக 4 தோசை சாப்பிட்டு வந்தால் 2 தோசை. சாதம் கொஞ்சமாக, காய்கள் அதிகம், சாலட் தினமும் என்று. பட்டினி கிடந்தாலோ இரண்டு வேளை மட்டும் சாப்பிடுவதாலோ எடை குறையாது!

      Delete
  19. கீதாக்கா புதிய ப்ளாகரில் படங்கள் இணைப்பதும் வசதியாகத்தான் இருக்கிறது. கடினமாக இல்லைதான்.

    ஆமாம் பூரிக்கு வேறு மசால் தோசைக்கு வேறு ஒன்று தளர்வு மற்றொன்று கெட்டியாக...

    அக்கா இரண்டுமே நான் சூப் போலச் செய்வதுண்டு. முதல் வகையை அரைத்துச் செய்ததில்லை. அது போல முகீ சூப்பும் அப்படியே பொடியாகக் கட் செய்து சூப் செய்திருக்கேன். வடிகட்டிச் செய்ததில்லை.

    இரண்டுமே நோட்டட்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா, பூரி மசால் என்பதே தனி! என் அம்மா பண்ணுவது போல் நான் பண்ணுவேன். 2 முறைகளில் பண்ணுவார்.
      நெல்லிக்காயை அரைக்காமல் எப்படிச் சாறு எடுப்பீர்கள்? முருங்கைக்கீரையைப் பொடியாக நானும் நறுக்கித் தான் வதக்கி நீர் சேர்த்துக் கொதிக்க வைப்பேன். இலைகள் அப்படியே இருந்தால் மாமாவுக்குத் தொண்டையில் மாட்டிக்கும் என்பதோடு சரியாக வெந்தும் இருக்காதோ என்னும் சந்தேகம். ஆகவே இந்த சூப்புக்கு மட்டும் குக்கர் தான். நாலைந்து விசில் கொடுத்துடுவேன். பின்னர் வடிகட்டினால் நன்கு சக்கையாக ஆகிவிடும்.

      Delete
  20. அக்கா நான் பொருட்களை - முருங்கை மற்றும் நெல்லி எப்போதும் கிடைப்பதில்லை இங்கு அதனால் கிடைக்கும் சமயத்தில் நெல்லி என்றால் வெயிலியில் காய வைத்து நெல்லிமுள்ளி வைத்த்துக் கொண்டுவிடுவேன். இங்கு முருங்கைக் கீரை ஈசியாக ட்ரை ஆகிவிடுகிறது வெயில் இல்லாமலேயே ஸோ அப்படியே பொடித்து வைத்துக் கொண்டு செய்வதால் வடிகட்டிச் செய்வதில்லை. எல்லாமே பொடியாக்கி வைத்துக் கொண்டு.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊரை குறை சொல்லவேண்டாம் கீதா ரங்கன். இங்க அனேகமா எப்போவுமே நெல்லிக்காய், முருங்கைக்காய்களைப் பார்க்கிறேன். ஹா ஹா

      Delete
    2. நெல்லிமுள்ளி நானும் வைச்சிருக்கேன். ஆனால் அவசரத் தேவைக்குத் தான் எடுப்பேன். முருங்கைக்கீரை எப்போதுமே கிடைப்பதால் பிரச்னை இல்லை.

      Delete
  21. மசால் தோசை நன்றாக வந்திருக்கு கீதாக்கா.

    நானும் சில நாட்களுக்கு முன் செய்தேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா, தோசை சாப்பிடுங்க. முன்னெல்லாம் அடிக்கடி பண்ணுவேன். இப்போல்லாம் எப்போவானும்.

      Delete
  22. வணக்கம் சகோதரி

    புது ப்ளாக்கில் இணைத்த மசால் தோசை நன்றாக வந்துள்ளது. உ. கிழங்கு மசாலா குறிப்புக்களும் நன்றாக சொல்லியுள்ளீர்கள். மூன்றாவதாக உள்ள தோசை படம் அழகாக உள்ளது. நாங்கள் நேற்றுதான் இங்கு அடை வார்த்து சாப்பிட்டோம். சூப் குறிப்புக்களும் குறித்துக் கொண்டேன். ஆனால் முருங்கை கீரை எனக்கு வாயுவை கொடுக்கும் என்பதால், சாப்பிடுவதில்லை. நெல்லி சேர்க்கிறோம். எல்லாமே நன்றாக உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, பருப்பு நம்மவருக்கு ஒத்துக்கொள்ளாததால் அடை அதிகம் பண்ணுவதில்லை. பருப்பு உசிலியும் எப்போதாவது தான். பருப்புருண்டைக்குழம்பு பண்ணுவதே இல்லை. எத்தனையோ வருஷங்கள்! மற்றபடி முருங்கைக்கீரை வாயு என்பது நீங்கள் சொல்லித் தான் தெரியும். சென்னை அம்பத்தூர் வீட்டில் வாசலில் முருங்கை மரம் வைத்திருந்தோம். பின்னர் அக்கம்பக்கம் கம்பளிப்பூச்சி வருவதாக ஆக்ஷேபங்கள் தெரிவித்ததால் வெட்டினோம். அப்போவே முருங்கைக்கீரைக் குழம்பு, பொரிச்ச குழம்பு, சாம்பார், பருப்பு உசிலி, முருங்கைக்கீரை வதக்கல்னு பண்ணுவோம். என் மாமனார் எல்லாம் சாப்பிடுவார்.

      Delete
  23. நல்ல வடிவமைப்பு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. மசால் தோசை நன்றாக இருக்கிறது .இன்னும் கொஞ்சம் முறுகலாக வேண்டும் பிள்ளைகளுக்கு.
    நெல்லிக்காய், பாகற்காய் மட்டும், இஞ்சி, வெங்காயம் எல்லாம் போடாமல் ஜூஸ் நானும் செய்து கொடுத்தேன் சாருக்கு. காலையில் காபிதான் வேண்டுமாம். சாப்பாட்டுக்கு முன் குடிக்கலாம் என்றால் எது வேண்டுமென்றாலும் கொடு வெறும் வயிற்றில் காபியை தவிர வேறு எதுவும் குடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.

    முருங்கை கீரை கிடைக்கும் போது சூப் செய்வேன் ஆனால் குக்கரில் வைக்க மாட்டேன். கீரைகளை மூடி வேக வைக்க கூடாது என்பதால். சூப் செய்முறை நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, தோசையை மசாலா வைத்துவிட்டு மடித்துப் போட்டு சமோசாபோல் நன்றாக மூடி இரு பக்கமும் முறுகவிடுவேன். சூடாகச் சாப்பிடும்போது உள்ளிருக்கும் கிழங்கும் நன்கு சூடாகக் குழைவுடன் இருப்பதால் தோசையோடு சேர்ந்து சாப்பிடச் சுவையாக இருக்கும். பல்லாண்டுகளாக இப்படித் தான் பண்ணுகிறேன். அதோடு தோசை எனக்கு ரொம்பச் சிவக்காது. ஓரமெல்லாம் மட்டும் பொன் முறுகலாக வரும்.எப்போவானும் தோசையை விட்டுட்டுப் போய்விட்டால் அப்போச் சிவக்கும்.

      Delete
    2. குக்கரில் நானும் கீரை வகைகளை வைக்க மாட்டேன் தான். ஆனால் இதை மட்டும் நன்கு வதக்கிக் கொண்டு ஜலத்தை விட்டு ஒரு கொதி வந்தப்புறமாக் குக்கரை மூடி விசில் கொடுக்கிறேன். இல்லைனா சாறு முழுசும் வரலை போல் ஓர் எண்ணம்.

      Delete
  25. குறிப்புகள் அனைத்தும் அருமை! நெல்லிக்காய் ஜுஸ் குறிப்பு நிச்சயமாக உபயோகப்படும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ, பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  26. ஆஹா தோசை வெள்ளை வெளீரென அழகாக இருக்கு கீசாக்கா.. மசாலாத்தோசை எங்களுக்கும் நன்கு பிடிக்கும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க பிஞ்சு வில்லி/ஹெஹெஹெ,ஞான வல்லி, மசால் தோசை அநேகமா எல்லோருக்கும் பிடித்தது தான். உங்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி! :)))))) ஆனால் நீங்க செய்து படம் எடுத்துப் போட்டால் தான் நம்புவேன்! :))))))

      Delete
  27. மஞ்சள் தூளுடன் அரைத்தேக்கரண்டி, மெதுவாக வறுத்த மிளகு, வெந்தயத்தைப் பவுடாக்கி வச்சு, அரைத்தேக்கரண்டி சேருங்கோ.

    நாங்களும் ஸ்மூத்தி.. கிரீன் ஸ்மூத்தி குடிக்கிறோம்...எது கிடைக்குதோ அதை எல்லாம் போட்டு, வீட்டில் புதினா, நெல்லிக்காய்[கூஸ்பெரி] மரத்தில் கிடைப்பதால் அதையும் சேர்க்கிறோம்.

    ReplyDelete
  28. ஞானவல்லி, சூப்பில் மிளகு, ஜீரகம் சேர்ப்பதால் நெல்லிச்சாறில் சேர்ப்பதில்லை. அதோடு ரசத்தில் நான் தினமும் மிளகு பொடி சேர்ப்பேன். வெந்தயப்பொடியும் மோரில் போட்டுக் குடிப்போம், அல்லது குழம்பில் போடுவேன். உங்களுக்கு கூஸ்பெரி கிடைப்பது ஓர் நல்ல விஷயம். தினமும் எவ்விதத்திலாவது உணவில் சேருங்கள்.

    ReplyDelete
  29. வெற்றி வெற்றி என்று ஆரவாரத்தை கேட்டு ஆசையோடு வந்தால்... ப் ஹு!முருங்கை கீரையில் இரும்புச் சத்து நிறைய உண்டு. பாலூட்டும்  தாய்மார்களுக்கு நல்லது என்பார்கள். நான் முருங்கைக் கீரையில் சுண்டல் தவிர வேறு எதுவும்  செய்வதில்லை. சாம்பாரிலும் போடுவதுண்டு. இங்கு கிடைப்பதேயில்லை. 

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா, பானுமதி, நான் "வெற்றி!" சொன்னது புதிய ப்ளாகர் மூலம் படங்களை இணைத்ததற்கு. இதுக்குத் தான் ஒழுங்காப் பதிவைப் படிக்கணும்ங்கறது! :)))))) முருங்கைக்கீரையில் விதம் விதமாகச் சமைக்கலாமே! அடைக்குக் கூடப் போடலாம். அதுவும் வெறும் அரிசி அடைக்கு முருங்கைக்கீரை போட்டால் நன்றாக இருக்கும்.

      Delete
  30. Murungai keerai soup remba naal pending, pannanum. Super masal dosa pics maami

    ReplyDelete