எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, June 17, 2021

கீரை வடை, கீரை வடை பார்! பார்!

ரொம்ப நாட்களாகவே சரியாய்ப் பதிவிடுவது இல்லை. அதிலும் சமையல் குறிப்புக்கள் எல்லாமும் பாதியில் நிற்கின்றன. அவற்றைத் தொகுக்கும் வேலையும் அப்படியே நிற்கிறது. ஆனாலும் ஒரு பக்கம் சோம்பல், மனது பதியாமல் போவது ஆகியவற்றால் ரொம்ப நேரமெல்லாம் இணையத்தில் செலவிடுவதே இல்லை. குறைந்து விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக முயன்று எல்லாவற்றையும் சரி செய்யணும். பார்ப்போம். முழுக்க முழுக்கத் தப்பு என்னோடது தான். 

நேற்று திடீரெனக் கீரை வடை பண்ணினேன். கீரை வாங்கும்போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். ஆனால் பண்ணியது இல்லை. என்னவோ காரணம், முடியாமல் போகும். ஆகவே நேற்றுக் கீரை நறுக்கும்போதே வடைக்கு எனத் தனியாக எடுத்து வைத்துவிட்டேன். உளுந்து+கபருப்பு+துபருப்புப் போட்டு வடைக்கு ஊறவும் வைத்து விட்டேன். அரைத்துப் பண்ணும்போது மணி மூன்றரைக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு தொலைபேசி அழைப்பை ரசித்துப் பேசிவிட்டு வந்ததில் அரைக்கும்போதோ, மாவை எடுக்கும்போதோ, கீரையைச் சேர்க்கும்போதோ படம் எடுக்க நினைவில் இல்லை. (யாருங்க அது, இதானே உங்க வழக்கம்னு சொல்றது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், அதெல்லாம் இல்லை. நேற்று நிஜம்மாவே மறந்து போச்சு. பின்னர் வடை தட்டி நம்ம ரங்க்ஸுக்கும் கொடுத்த பின்னரே நினைவில் வந்தது. உடனே அலைபேசியை எடுத்து வந்து மாவையும் அடுப்பில் வேகும் வடைகளையும் மட்டும் படம் எடுத்தேன். வடைகளை வெந்ததும் எடுத்துத் தட்டில் போடும்போது எடுக்கணும். யார் இல்லைங்கறாங்க?  அப்போப் பார்த்து வேறே வேலை! ஆகவே அதையும் எடுக்கலை. அதனால் தான் எ.பி.க்குத் "திங்க"ற கிழமைக்கு அனுப்பலை. இங்கேயே போட்டுட்டேன். கையை எண்ணெய்க்குள் விட்டுத் தான் எல்லோரும் வடையை எடுத்துக்கணும். இஃகி,இஃகி,இஃகி! இன்னொரு தரம் தட்டிலே போட்டுட்டு உங்களை எல்லாம் கூப்பிட்டுக் கொடுக்கிறேன். 


வடை மாவு அரைத்துக் கீரை போட்டுக் கலந்தது



 

 எண்ணெயில் வேகும் வடைகள். கண்ணாலே பார்த்துக்குங்க.


உளுத்தம்பருப்பு 200 கிராம், இரண்டு பருப்புக்களும் சேர்ந்து 50 கிராம், பச்சை மிளகாய் நான்கு. காரமாக இருந்தால் இரண்டு போதும், இஞ்சி தோல் சீவியது ஒரு துண்டு, உப்பு தேவைக்கு, பெருங்காயம் விரும்பினால்  நறுக்கிய கீரை இரண்டு கைப்பிடி.  உளுந்தும் பருப்பு வகைகளும் 3 மணி நேரத்துக்குக் குறையாமல் ஊறணும். நேற்றுக் காலம்பரப் பத்து மணி போல் ஊற வைத்தது அரைக்கையில் மூன்றரை ஆயிடுச்சு. ஆனாலும் வடை எண்ணெய் எல்லாம் குடிக்கலை. பருப்புக்களைக் களைந்தே ஊற வைப்பேன். ஊறியதை ஒரு வடிகட்டியில் போட்டு வடிகட்டிவிட்டு அதில் இருக்கும் குறைந்த அளவு நீரோடு மிக்சியிலோ கிரைண்டரிலோ போட்டு அரைக்கணும். நேற்றுக் கொஞ்சமாகப் போட்டதால் கிரைண்டரில் அரைப்பது கடினம் என்பதால் மிக்சியிலேயே அரைச்சேன். மாவு நன்கு திரண்டு வந்ததும் பச்சைமிளகாய்+இஞ்சியை உப்போடு சேர்த்துப் போட்டு அரைக்கலாம். அல்லது பச்சை மிளகாய்க் கடிக்கப் பிடிக்கும்னால் பொடியாக நறுக்கிச் சேர்த்துவிட்டு உப்போடு கீரையைப் போட்டுக் கலந்து வடைகளாகத் தட்டவும். 



ஹிஹிஹி, பழைய ஆங்கிலப் பதிவொன்றிலே இருந்ததா, இங்கே கொண்டு வந்துட்டேன். :)

40 comments:

  1. அன்புள்ள கீதாம்மா, கீரை வடை செய்ததில்லை. ரெசிபிக்கு நன்றிம்மா ! எந்த கீரை வேண்டுமானாலும் போடலாமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானம்பாடி, எந்தக்கீரை வேண்டுமானாலும் போடலாம் முருங்கைக்கீரை, (பிடித்தால்) வெந்தயக்கீரை உள்பட. எங்க வீட்டில் கீரை வகைகள் எதுவானாலும் செலவாகிடும்.

      Delete
  2. எல்லாம் சரிதான்.  வடைகளாகத் தட்டும்போதுதான் பிரச்னை.  அது வடை மாதிரியே வர மாட்டேன் என்கிறது!

    ReplyDelete
    Replies
    1. நன்றாக வரும் ஶ்ரீராம், அடுப்பில் வேகும் வடைகளைப் பாருங்கள். 3 வடைகள் பெரிதாகப் போட்டிருந்தேன். நல்லா மொறுமொறுனு வந்தது. என்னன்னா அடுப்பில் போட்டதும் உப்பிக் கொள்ள வேறே செய்தது!

      Delete
    2. மாவு அரைத்ததும் ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்துப் பின்னர் வடை தட்டிப் பாருங்கள். எனக்கென்னமோ நீங்க தண்ணீர் அதிகம் சேர்க்கிறீங்களோனு சந்தேகமா வருது.

      Delete
    3. ஸ்ரீராம் உப்பு சேர்ப்பதிலும் இருக்கு ....அதாவது உப்பு சேர்க்கும் போது மாவு கொஞ்சம் நீர்த்துப் போகும். எனவே மாவு பதமும் முக்கியம். அக்கா சொல்லியிருப்பது போல் தண்ணீர் அதிகமானாலும் தட்டுவது எளிதாக வராது.

      கீதா

      Delete
    4. உப்பைக் கடைசியில் சேர்க்கணும். நான் கிரைண்டரி/மிக்சியில் இருந்து எடுக்கையில் பச்சை மிளகாய், இஞ்சி அரைத்த விழுதைச் சேர்த்து உப்பையும் சேர்த்து ஒரு சுத்துச் சுத்திட்டு எடுத்துடுவேன்.

      Delete
  3. அரைப்பதில் இருக்கிறதா, தட்டுவதில் இருக்கிறதா சூட்சுமம் என்று தெரிவதே இல்லை.    ஒழுங்காய் வருவதில்லை.  கிரைண்டரிலும் அரைத்துப் பார்த்தேன்.  பால் பாக்கெட்டிலோ, இலையிலோ வைத்துத் தட்டி எடுத்துக் போட முயற்சித்தால் அது உருமாறி எப்படியோ விழுந்து எப்படியோ வேகிறது!

    ReplyDelete
    Replies
    1. என்னைக் கேட்டால் ஊறுவதில் இருக்கு ரகசியம் என்பேன். பொதுவாக வடைக்கு அதிலும் உளுந்து வடைக்கு யாரும் அதிகம் ஊற வைப்பதில்லை. பத்து நிமிஷம் ஊறினால் போதும் என்கின்றனர். ஆனால் எனக்கு அதை விட இப்படிச் செய்வது தான் சரியா இருக்கு. முன்னர் ஒருதரம் பானுமதி கூடச் சொன்னார். ஊறினால் தான் நல்லா வரும்னு. நான் அப்போ ஊற வைக்க வேண்டாம் என்றே சொல்லி இருந்தேன். ஆனால் அனுபவபூர்வமாக ஊறினால் தான் எந்த வடையும் நன்றாக வருகிறது/வரும். என் மாமியார்/நாத்தனார்கள் எல்லாம் ஊற வைக்காமலே செய்வார்கள். ஆகவே நம்மவருக்கு நான் செய்வது அவ்வளவாப் பிடிக்கிறதில்லை. :))))) நானும் ஊற வைக்காமல் அவர் இஷ்டப்படியே பண்ணியும் பார்த்திருக்கேன். எனக்குப் பிடிக்கிறதில்லை! இஃகி,இஃகி,இஃகி~ அதோடு ஊறின பருப்பை நன்கு வடிகட்டியில் போட்டு வடிகட்டி விட்டு அதில் உள்ள நீரே போதும்னு அரைக்கணும். பின்னால் பச்சை மிளகாய், இஞ்சி, உப்புச் சேர்க்கும்போது அதில் உள்ள நீர் சேரும் வடை மாவில். நல்ல மொத்தையாக அரைச்சு எடுத்துட்டால் நன்கு உருட்ட வரும்.

      Delete
    2. அதே அதே கீதாக்கா உளுந்து வடைக்கும் நன்றாக ஊறினால்தான் நன்றாக தட்ட வரும். ஃபைனல் ப்ராடெக்தும் நன்றாக வரும். ஆனால் கொஞ்சம் நேரம் ஊற வைத்தால் போதும் என்பதெல்லாம் சரியாக இல்லை எனக்கும்.

      கீதா

      Delete
    3. ஆமாம், தி.கீதா/ ஆனால் நம்மவர் படுத்தி எடுத்துடறார். அம்மாவெல்லாம் ஊறவே வைக்க மாட்டாங்க. வடை மொறுமொறுனு வரும் என்பார். நானும் சாப்பிட்டிருக்கேன். வெடக்குனு தான் வரும். இந்த ருசி பழகிப் போச்சு போலனு நினைச்சுப்பேன். எனக்கு ஆம வடை, மசால் வ்டை, கீரை வடை, மெது வடை எல்லாத்துக்குமே ஊற வைச்சால் தான் சரியா இருக்கு.

      Delete
  4. வடைக்குத் தொட்டுக்கொள்ள என்ன செய்தீர்கள்?  நாளை மதியம்/மாலை கீரைவடையோ, இல்லை, கீரை இல்லாமலோ செய்து பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தேங்காய்ச் சட்னி அரைக்கணும்னு தான். ஆனால் முடியலை. முதல்நாள் தோசைக்கு அரைச்ச தக்காளிச் சட்னி இருந்தது. அதைத் தொட்டுக்கொண்டோம். 3+3= 6 வடைகள் மட்டுமே!

      Delete
  5. என் பாஸாயிருந்தால் போனைக் கீழே எல்லாம் வைக்க மாட்டார்.  காதில் இடுக்கிக்கொண்டே பேசுவார். பேசிக்கொண்டே வேலை செய்வார்.  ஒரு போன் முடிந்ததும் அடுத்தது!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, என்னோட கடைசி நாத்தனார் அப்படித்தான். காலை பல் தேய்த்துவிட்டு வந்து ஃபோனைக் கையில் எடுத்தால் இரவு படுக்கும்வரை கூடவே இருக்கும். காதில் இடுக்கிக் கொண்டே தான் எல்லா வேலைகளும். காஃபி குடிக்கையில் விழுந்துடுமோனு பயமா இருக்கும். ஆனால் எச்சில் பண்ணிக் குடிப்பார் போல! :))))

      Delete
  6. உண்மையைச் சொல்லுங்கள்..   உங்களுக்கும் வடை சரியாய் வரவில்லைதானே?  அதனால்தானே படம் எடுக்கவில்லை?!!!

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரோ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதான் வடை வேகிற படம் போட்டிருக்கேனே. ஒரு ஈடு எடுத்து அவருக்குக் கொடுத்துட்டேன். இரண்டாவது ஈட்டின் போது தான் படம் எடுக்கணுமேனு தோன்றியது. அவசரம் அவசரமாக எடுத்தேன். வடை நன்கு வட்டமாக மேலே மொறுமொறுப்புடன் வந்திருந்தது.

      Delete
  7. கீரை வடை... நல்லது!

    கடைசி படம் - போடாமலேயே இருந்திருக்கலாம்! ஹாஹா...

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், சும்மா எல்லோரும் என்னோட வடையைப் பார்த்து திருஷ்டிப் போட்டுட்டா? அதான் சேர்த்தேன்! :)

      Delete
  8. //பழைய ஆங்கிலப் பதிவிலிருந்து//... ஓ..அப்போதிலிருந்தே படங்கள் தெளிவா இருக்குமா? அதாவது ஒரே படத்தை, தவலைவடை, கீரை வடை, அப்பளாம் பொரிப்பது என்று பல பதிவுகளுக்கும் போட்டுவிடுவதுபோல

    ReplyDelete
    Replies
    1. //https://cookingforyoungsters.blogspot.com/2018/02/keerai-vadai-spinach-or-greens.html// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்தச் சுட்டியில் போய்ப் பாருங்க, நெல்லை. ரகசியமாய் வைச்சிருந்தேன். பின்னாடி புத்தகம் ஒண்ணு போட்டாச்சு என்பதால் இப்போது வெளியே சொல்லிக்கிறேன். இன்னும் சில குறிப்புக்கள் சேர்த்துட்டு இரண்டாம் பாகம் போடணும். :)))) நேரம் என்னமோ சும்மா வெட்டியாப் போகிறது! :(

      Delete
  9. நேற்று நான் என் turn இல்லாதிருந்தும், பூரி மசால் பண்ணினேன். இன்னும், இவ்வளவு கப் மாவுக்கு இவ்வளவு சப்பாத்தி, பூரி வரும் என்ற கணக்கு பிடிபடுவதில்லை. அன்றைக்கு நினைவில் இருக்கும் பிறகு மறந்துவிடுகிறது. சரி... நீங்கதான் சொல்லுங்களேன்... 1 கப் மாவிற்கு எவ்வளவு சப்பாத்தி பூரி வரும் என்று

    ReplyDelete
    Replies
    1. நமக்கு இந்தக் கணக்கெல்லாம் வராது நெல்லையாரே! மாவைப் பிசைந்து கொண்டே எண்ணெயைக் காய வைப்பேன். பூரிக்கு என்றால். உடனே பூரிக்கு வேண்டிய அப்பளமாக இட்டுப் போட்டு எடுப்பேன். யார் எத்தனை சாப்பிடறாங்களோ அத்தனை பூரி. ஆட்களுக்கு ஏற்ப மாவு போதலைனா அடுப்பைத் தணித்துட்டு மறுபடி பிசைந்துப்பேன். என் அப்பா தான் இந்தக் கணக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார். அக்கம்பக்கம் எல்லோரிடமும் விசாரிப்பார். எனக்கு அது சரியா வராது. இன்னிக்கு 3 பூரி சாப்பிட்டால் இன்னோர் நாள் 4 அல்லது 5 சாப்பிடலாம்.நிச்சயமாய்ச் சொல்ல முடியாது. வயிறு, மனம் சார்ந்த விஷயம் இது.

      Delete
  10. கீசா மேடம் உணவுப் பதிவுன்னா, ஒண்ணு படங்களை இணையத்திலிருந்து கொண்டு வந்திருப்பீங்க, இல்லைனா ஏதேனும் ஒரு பகுதியைப் படம் எடுத்து மற்றவற்றை படம் எடுத்திருக்க மாட்டீங்க. அந்தப் பெருமையை இன்னும் நீங்க விட்டுக்கொடுக்கலை.

    கீரை வடை பார்க்க (எண்ணெயில் பொரிவதில், நானே இமேஜின் பண்ணிக்கறேன்..குண்டா மொறுமொறுப்பா இருந்திருக்கும்னு) யம்மியா இருக்கு. இங்க நல்ல குளிர், காற்று... பண்ணித்தந்தால் சாப்பிடலாம்.

    ReplyDelete
    Replies
    1. நான் இணையத்திலிருந்து உணவுப் பதிவுகளுக்குப் படங்கள் எப்போவானும் அபூர்வமாப் போட்டிருப்பேன். முடிஞ்ச வரைக்கும் படங்கள் எடுப்பேன். இல்லைனா எடுத்தவரை போடுவேன். :) இதான் இதிலேயும்.

      Delete
  11. வணக்கம் சகோதரி

    கீரை வடை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. படங்களும், செய்முறையும் உங்களது படிக்க சுவாரஸ்யமான நல்ல எழுத்துக்களும் அருமை. நானும் கீரை வடை செய்து நாளாகி விட்டது. நல்ல கீரையை கண்ணால் பார்த்தே நாளாகி விட்டது. ஆன்லைனில் வருவது சரியில்லை. எப்போது பழைய மாதிரி சாமான், காய்கறி வாங்க வெளியில் செல்லப் போகிறோமோ தெரியவில்லை. நீங்கள் செய்து வைத்திருந்த இரண்டு வடைகளில் ஒன்றை ஆவல் தாங்காமல் நானே எடுத்து சாப்பிட்டு விட்டேன்.:) சுவை நன்றாக உள்ளது. படங்களுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. நாங்களும் இந்த கூடை/காமில் காய்கள் ஆர்டர் செய்து வாங்கிட்டு அவஸ்தை. கீரை ஒரே அழுகல். காரட் அரைக்கிலோவைத் தூக்கிப் போட்டாச்சு. ஒரு கிலோ உருளைக்கிழங்கு முளைத்து விட்டது. எங்கே நட்டு வைப்பது? கருணைக்கிழங்கு அரைக்கிலோவும் காரல். கொத்தவரை முற்றல் கறி பண்ணிவிட்டுத் தூக்கி எறிந்தோம். சரினு எல்லாக் காய்களையும் போட்டு அவியல் பண்ணினால் எந்தக் காயும் சரியாகவே வேகவில்லை. கத்திரிக்காய் கூட! :( சுமார் 495 ரூபாய் தண்டமாகி விட்டது. வடைகள் நன்றாகவே இருந்தன. ஒரு நாள் பண்ணிப் பாருங்க. எந்தக்கீரையானும் போடலாம்.

      Delete
  12. கீரை வடை பார்க்க நன்றாக இருக்கிறது. கிட்டத்தட்ட 250 கிராம் போட்டிருக்கிறீர்கள் அதாவது கால் கிலோ, அதற்கு ஆறு வடைகள்தான் வருமா?

    ReplyDelete
    Replies
    1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வாங்க பானுமதி, இப்படிக் கணக்கெல்லாமா கேட்பீங்க? எங்க அப்பா மாதிரி இருப்பீங்க போல! :)))))))) இஃகி,இஃகி,இஃகி. பொதுவா அதிகமா இருக்கிற மாவையும் தட்டி அன்னிக்கே விநியோகம் பண்ணிடுவேன். ஆனால் முந்தா நாள் மாவு ரொம்பக் கொஞ்சமா இருந்ததாலே அதை வைச்சு நேத்திக்குச் சின்னதாகத் தட்டி ஆளுக்கு 3 எடுத்துக் கொண்டோம். நேத்திக்குப் பாடு சரியாப் போச்சு. ராத்திரிக்கு இட்லியும் என்னோட பருப்பில்லா சாம்பாரும் பண்ணினேன். எல்லோரும் அளவு கேட்பதால் மேலே அளவு சொல்லி இருக்கேனே தவிர்த்து நான் அத்தனையெல்லாம் போடவில்லை. :)))) அத்தனை போட்டு நான் கல்யாணமே பண்ணிடுவேன்.

      Delete
  13. கீரை வடைக்காக ராஜ் பவன் வரை சென்ற நாட்களும் உண்டு.
    நான் அந்த ஹோட்டல்காரரிக் கேட்டே'
    செய்தாலும் சிங்கம் ,அவன் செய்கிற மாதிரி இல்லை
    என்பார். அவன் சோடா மாவு போட்டிருப்பான் என்று நானும் வாதம் செய்வேன்:)))

    நீங்கள் செய்திருப்பது பார்க்கவே அருமையா இருக்கும்.

    அளவும் வேற மாதிரி இருக்கு.
    நன்றாகத்தான் வந்திருக்கும்.
    ஆறு வடைக்கு எப்படித்தான் அளவாகச் செய்வீர்களோ!!!!!.

    மிக அருமை. நானும் பக்கோடா செய்யும் போதும்,
    போண்டா செய்யும் போதும் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பேன்.

    சர்தான் போ. இப்ப இதைப் படம் எடுத்து என்னாகணும்னு
    தோன்றும்.!!!
    வாழ்த்துகள் கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நானும் வெங்கடேஷ் பட்டோட செய்முறையையும் பார்த்துப்பேன் அடிக்கடி. என்றாலும் செய்வது என்னமோ என்னோட முறையில் தான். சோடா மாவெல்லாம் போட மாட்டாங்க என்றே நினைக்கிறேன். எண்ணெய் குடிக்குமே! ஆறு வடை தட்டிட்டு மாவை நிறுத்தினா அளவாப் போயிடுமே1 ஆனாலும் இப்போதெல்லாம் ரொம்பவே கணக்காகத் தான் செய்ய வேண்டி இருக்கு. வடைகள் நேற்றும் நன்றாகவே இருந்தன.

      Delete
    2. நானும் எல்லாவற்றையும் படம் எடுப்பதில்லை. சில நாட்கள் முன்னர் புழுங்கலரிசித் தட்டை பண்ணினேன். படம் எடுக்கலாமா வேண்டாமானு யோசிச்சு யோசிச்சுக் கடைசியில் வேண்டாம்னு விட்டுட்டேன். முன்னேயே சொல்ல நினைச்சு மறந்துட்டேன். மயிலை கீழ மாட வீதி கற்பகாம்பாள் மெஸ்ஸில் (வித்யா பவனுக்கு நேர் எதிரே) கீரை வடை சாயந்திரம் 3 மணியிலிருந்து போடுவார்கள். ஐந்து மணிக்குள் போகணும். வெந்தய தோசையும் அட்டகாசமான சாம்பாருடன் ருசி அருமையா இருக்கும். இப்போல்லாம் போயே சில வருடங்கள் ஆகிவிட்டன. அதே போல் மாம்பலம் காமாட்சி மெஸ்ஸிலும் எல்லாமே நன்றாக இருக்கும். அறுசுவைக் குடும்பத்தின் மெஸ் என்கிறார்கள்.

      Delete
  14. கீரை வடை நன்றாக இருக்கிறது. எண்ணெயில் வேகும் வடை பார்க்க நன்றாக இருக்கிறது.
    கொஞ்சமாக செய்வது மிகவும் கஷ்டம் தான்.

    படங்களுடன் செய்முறை நன்றாக இருக்கிறது. எனக்கு சமையலே மறந்து போகும் போல ! மருமகள் இப்போது செய்து தருவதை உண்டு வருகிறேன். இடை இடையே தோசை மட்டும் சுடுகிறேன், தினப்படி கூட மாட ஒத்தாசை மட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, என்னோட அதிர்ஷ்டம் எங்கே போனாலும் நான் தான் சமையல். பெண் வீட்டிலும் சரி, பையர் வீட்டிலும் சரி, சமையல் பொறுப்பை நான் எடுத்துக் கொண்டுவிடுவேன். உட்கார்ந்து கொண்டு இருப்பது கஷ்டம்! மற்றபடி மருமகள் மாலைக்கான உணவு தயாரிப்பு முழுவதையும் எடுத்துக் கொண்டு செய்து தருவாள்.

      Delete
  15. கீரைவடை நன்றாக இருக்கிறது.
    நானும் செய்வதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி. கருத்துக்கு நன்றி.

      Delete
  16. அக்கா ஜூப்பரோ ஜூப்பர்.

    நன்றாக வந்திருக்கிறது! (எப்ப நல்லா வரலைன்னு அக்கா கேட்கப்படாது!!! நல்லா வருவது டிஃபால்ட் என்பதால் ஹிஹிஹி)

    கீரை வடை செய்வதுண்டு. கண்ணளவு. நீங்க கிராமில் கொடுத்திருப்பது சூப்பர். கிட்டத்தட்ட இதே அளவுதான் ஆனால் கண்ணால் அளவு.

    க ப, து ப வெங்காயம் கீரை, பெருங்காயம், இஞ்சி, சோம்பு கொஞ்சம் சோம்பு இல்லைனாலும் ஒகே. போட்டும் கீரை வடை செய்வதுண்டு. உங்களுக்கும் தெரியாததா என்ன!! அதிலும் பட்டாணிப் பருப்பு போட்டுச் செய்வதும் சுவை நன்றாக இருக்கும்.

    ரொம்ப நாளாச்சு கீரை வடை செய்து. இன்று கீரைதான் சமையலுக்கு. நினைவுபடுத்திட்டீங்க. அதில் கொஞ்சம் எடுத்து வைத்து வடை செய்ய முடியுமான்னு பார்க்க வேண்டும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நான் கீரை வடை எனில் தனிக் கீரை வடை தான். சோம்பெல்லாம் போட மாட்டேன். பட்டாணிப்பருப்பு மசால் வடைக்குப் பயன்படுத்துவேன். இங்கேயும் கீரை ஒரு சமயம் நன்றாய்க் கிடைக்கும். பல சமயங்களில் கிடைப்பதில்லை. எனக்கும் கண்ணளவு தான். எல்லோரும் கேட்பதால் உத்தேசமாய்ப் போட்டிருக்கேன்.

      Delete
  17. கீரை வடை குறிப்பு அருமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ சாமிநாதன்.

      Delete