எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 09, 2021

கல்வியா? செல்வமா? வீரமா?

 பத்தாம் வகுப்பு/பனிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தும்படியான சூழ்நிலை இல்லை. ஆகவே மத்திய அரசு அதை ரத்து செய்திருக்கிறது. முக்கியக் காரணம் கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் உச்சத்தைத் தொட்டிருப்பது தான். ஆனால் நம் தமிழக மக்கள் அதிலும் அரசியலைக் காண்கின்றனர்.  இது "நீட்" தேர்வுக்காக மத்திய அரசு செய்யும் சதி என்கின்றனர். கடந்த வருடங்களில் எல்லாம் நீட் தேர்வு நடந்து வந்திருக்கையில் இந்த வருஷம் மட்டும் மத்திய அரசு ஏன் சதி செய்யணும் என்பதே புரியலை. மேலும் நீட் தேர்வே இப்போதுள்ள தமிழக அரசின் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மத்திய அரசில் ஆட்சி புரிந்த காலக் கட்டத்தில் தான் 2010 ஆம் ஆண்டில் அரசாங்க கெஜட்டில் வெளியிடப்பட்டது.  தனியார் மருத்துவக் கல்லூரிகளால் எதிர்க்கப்பட்ட அரசு இதே காங்கிரஸ் மற்றும் அதன் துணைக் கட்சியின் உதவியோடு மேல் முறையீடு செய்து சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வை உறுதி செய்து தீர்ப்பளித்தது. உண்மை இப்படி இருக்க இப்போது மோதி அரசு தான் "நீட்" தேர்வைக் கொண்டு வந்தது போல் பேசுகின்றன தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்.   கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாது என்றும் சொல்லுகின்றனர். அப்போது கிராமப்புற மாணவர்களின் படிப்பின் தரத்தைத் தானே மேம்படுத்த வேண்டும்? ஒரு நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற முடியாமல் இருக்கும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் மட்டும் பிரகாசிக்க முடியுமா? அதற்கு உழைப்புத் தேவை இல்லையா? சும்மா மனப்பாடம் பண்ணி எழுதும் படிப்பா மருத்துவப் படிப்பு? கிராமப்புற மாணவர்களும் நகரத்து மாணவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு படிக்க வேண்டும் எனில் "நவோதயா" பள்ளிகளைக் கிராமங்களில் திறந்து மத்திய அரசால் அளிக்கப்படும் இலவசப் படிப்பை/தரமான படிப்பை கிராமப்புற மாணவர்களும் பெறும்படி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இந்த நவோதயா பள்ளிகளும் மோதியின் அரசால் கொண்டுவரப்பட்டவை அல்ல. ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையிலேயே கொண்டு வரப்பட்டவை!  படிப்புக்காகச் செலவு செய்து படிக்கும் சூழ்நிலையோ மேற்படிப்புக்குத் தேவையான அறிவைத் தரும்படியோ இப்போதைய பாடத்திட்டம் இல்லை. ஆகவே அனைவருக்கும் நன்மை தரும் பாடத்திட்டத்தை ஏற்பதே சரியானது.

மாற்றாக இப்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் புதிய கல்விக் கொள்கையையும் சாடுபவர்கள்/தமிழர்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லுபவர்கள் தமிழகத்தில் உண்டு.அவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பது போல் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான பாலகுருசாமி அவர்கள் மிகவும் விளக்கமாக நேற்றைய தினமலரில் எழுதி இருக்கிறார். திருச்சிப் பதிப்பில் வந்திருக்கும் இது மற்ற மாவட்டங்களுக்கான பதிப்பில் வந்திருக்கானு தெரியாது. திருச்சிப் பதிப்பிலும் எத்தனை பேர் படித்திருப்பார்கள் தெரியவில்லை.  முக்கியமான குற்றச்சாட்டான இந்தித் திணிப்பை அவர் கண்டிப்பாக மறுக்கிறார். மும்மொழிக் கொள்கையையும் தவறான புரிதல் என்கிறார். எந்த மொழியை மூன்றாவது கற்கும் மொழியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அந்த அந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றிருக்க ஹிந்தி தான் கற்க வேண்டும் என யாரும் வற்புறுத்தவில்லை என்கிறார். ஆனால் படிப்பு.வேலை போன்ற காரணங்களுக்காக வடமாநிலங்கள் சென்றாலோ துபாய்/சௌதி போன்ற அரபு நாடுகள் சென்றாலோ ஹிந்தி தெரிந்திருப்பது கூடுதலாகப் பயன் தரும் ஒன்று. மற்ற நாட்டு மொழிகளைக் கற்பேன் எனச் சொல்லும் தமிழர்கள் இந்தியாவின் மொழியான ஹிந்தியின் மேல் இவ்வளவு வெறுப்பைக் காட்டுவது ஏன் என்றே புரியவில்ல.

ஐந்தாவது/எட்டாவது வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு வைக்கச் சொல்லிப் புதிய கல்விக் கொள்கை கட்டாயம் செய்வதாகச் சொல்லப்படுவதாயும் அது முற்றிலும் தவறு எனவும் தேர்வுகளை அந்த அந்தப் பள்ளிகளே நடத்திக்கொள்ளலாம் எனவும் தேர்வு இல்லாமல் இருக்கக் கூடாது என்றும் தான் புதிய கொள்கை சொல்வதாகவும் திரு பாலகுருசாமி சொல்கிறார். ஆனால் என்னைக் கேட்டால் தேர்வுகள் வைத்து வடிகட்டுவது நல்லது என்றே சொல்லுவேன். அந்தக்காலங்களில் (என் அம்மாவெல்லாம் படிக்கையில்) எட்டாவதுக்கான பொதுத் தேர்வு எழுதி இருக்கிறார். அதை ஈஎஸ் எல் சி என்பார்களாம். எலிமென்ட்ரி ஸ்கூல் லீவிங் செர்டிஃபிகேட்! இதை வைத்து அந்தக் காலங்களில் ஆசிரியப் பயிற்சிக்குக் கூடச் செல்ல முடியுமாம். ஆசிரியப் பயிற்சி முடித்து வந்து ஒன்றிலிருந்து ஐந்து வகுப்புகள் வரை ஆசிரியப் பணியும் செய்ய முடியும் என்றும் பலரும் அந்தக் காலங்களில் அப்படி ஆசிரியர்கள் ஆகிக் குடும்பச் சுமையையும் குறைத்தனர் என்றும் அம்மா/அப்பா சொல்லிக் கேட்டிருக்கேன். இப்போதோ பத்து/பனிரண்டாம் வகுப்புக்களுக்கே பொதுத் தேர்வு இல்லை. இரண்டு வருஷங்களாகக் கொரோனா காரணமாகத் தேர்வுகளே ரத்து செய்யப்படுகின்றன. 

அடுத்தது தான் மிக முக்கியமானது. ஏதேனும் ஒரு தொழிலை மாணவனோ/மாணவியோ கற்க வேண்டும் என்பது மீண்டும் குலத்தொழிலைக் கொண்டு வரும் முயற்சி என்பது நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கருத்து. தொழில் கல்வி மூலம் மாணவர்களைச் சுயச் சார்புடையவர்களாக மாற்ற முடியும் என்பதாலும் வேலை வாய்ப்புக்கள்/பிறரிடம் போய் வேலை செய்யும் முறை போன்றவற்றையும் முறைப்படுத்தும் எனவும் திரு பாலகுருசாமி சொல்கிறார்.படிப்பை முடித்ததுமே மாணவர்களுக்குத் தொழில் செய்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும் இந்தப் படிப்பு என்கிறார். உலகளவில் இந்திய மாணவர்கள் மட்டுமே தொழில் கல்வியில் பின் தங்கி இருப்பதாகவும் சொல்கிறார். என்னுடைய கருத்து இந்தக் குலக்கல்வியை ஒழித்ததே தப்பு என்பேன். எத்தனை எத்தனை தொழில்கள் இப்போது மறைந்து முற்றிலும் ஒழிந்தே போய்விட்டன! பரம்பரை ஆசாரிகள்/தச்சர்கள்/பொன்னாசாரிகள் இப்போது கிடைப்பது அரிதிலும் அரிது. பரம்பரையாக வந்தால் தொழில் நுணுக்கங்களைத் தன் வாரிசு என்பதால் பெரியோர்கள் சுலபமாகச் சொல்லிக் கொடுப்பார்கள். பரம்பரைத் தொழிலோடு கல்வியும் சேரும்போது அந்த மாணாக்கனிடம் தன்னம்பிக்கையும் படைப்புத் திறனும் பெருகும். இப்போது எங்க வீட்டில் ஒரு தச்சு வேலை/கதவுகளுக்குத் தாழ்ப்பாள் மாற்றுவது சென்ற இரு மாதங்கள் முன்னால் நடைபெற்ற போது இரு இளைஞர்கள் வந்தனர் அந்தவேலைக்கு! அவர்களில் ஒருவர் பரம்பரை ஆசாரிக் குடும்பம் என்பது அவர் வேலை செய்த விதத்திலேயே தெரிந்து விட்டது. இன்னொருத்தர் கேட்டுக் கேட்டுச் செய்தார்.  ஆசாரிப்பரம்பரையிலே வந்தவர் அப்படி இல்லை. இதை இப்படிச் செய்தால் சரியாக இருக்கும் என்பதைத் தீர்மானமாகச் சொன்னதோடு செய்தும் காட்டினார். 

என் அப்பா வேலை பார்த்த மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் அந்தக் காலம் தொட்டு எழுபதுகளின் கடைசி வரை தச்சுத் தொழில், நெசவுத் தொழில் போன்றவை தக்க ஆசிரியர்களால் சொல்லிக் கொடுக்கப்பட்டு வந்தது. விருப்பம் உள்ளவர்கள் தானே படிக்கப் போகிறார்கள்? இதில் தடை சொல்லுவது சரியல்ல என்பதே என் கருத்து.  இது வைத்தியம் முதற்கொண்டு எல்லாவற்றுக்கும் பொருந்தும். விவசாயியின் மகன் எனில் நிலங்களை விற்காமல் இருந்தால் அந்த மகன் விவசாயத்திலேயே ஆய்வுகள் மேற்கொண்டு படித்து அதைத் தன் நிலங்களில் செய்து காட்டலாம் இப்போதும் அப்படியான இளைஞர்கள் தென் மாவட்டங்களில் காணக் கிடைப்பார்கள். விவசாயத்திலேயே படிப்பு மேற்கொண்டு ஆய்வுகள் மூலம் தங்கள் நிலங்களை நல்லதொரு விளைச்சலுக்குக் கொண்டு போயிருக்கிறார்கள்.  என் அப்பாவின் அப்பா நல்லதொரு சித்த/ஆயுர்வேத மருத்துவர். மணி, மந்திர ஔஷதங்கள் தெரியும். பாம்புக்கடி, தேள்கடிக்கு வைத்தியம் தெரியும்.  மஞ்சள் காமாலைக்கு ஊசி மூலம் நோயை மந்திரங்கள் சொல்லி இறக்குவாராம். ஆனால் என் அப்பா.பெரியப்பாக்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை சுவடிகள் எல்லாம் எங்கேயோ ஒழிந்து போய்விட்டன. ஓரளவுக்குக் குழந்தை வைத்தியம் மட்டும் எல்லோரும் சொல்வார்கள். மற்றபடி முக்கியமான வைத்திய சம்பந்தமான குறிப்புகள் முற்றிலும் காணாமல் போய்விட்டன.  என் அப்பாவும் இருந்தவரை சுவடிகளையோ பஸ்பங்கள் பண்ணும் முறையையோ பார்த்துத் தெரிந்து கொள்ளாததோடு அவற்றை எல்லாம் பின்னாட்களில் தூக்கியும் போட்டுவிட்டார். ஆங்கில மருத்துவத்தை நாடிய பின்னர் இவை எல்லாம் எதற்கு என்னும் காரணமும் தான். 


இன்னும் இருக்கு! முடிந்தால் சொல்வேன்!

39 comments:

  1. ஒரு பொய்யை திரும்பத்திரும்பச் சொல்லும்போது உண்மையாகிவிட முயற்சிக்கிறது அந்தப் பொய்!  அதுதான் தமிழ்நாட்டின் நிலைமை.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலான மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியாததால் உண்மை என்றே நினைக்கிறார்களே!

      Delete
  2. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் -

    கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்..
    கிழவனைத் தூக்கி மனையில் வை!..

    என்பது மட்டும் தான்!..

    ReplyDelete
  3. தமிழக அரசியல்வாதிகள், திமுக கூட்டணியிலுள்ளவர்கள் கோயபல்ஸ் என்பது மட்டும்தான் தெரியுது

    ReplyDelete
    Replies
    1. நெ.த. என்னவோ போங்க!

      Delete
  4. என்னமோ சொல்கிறார்கள். எல்லாம் அதர்மம்.
    பார்க்கலாம் எங்கே போகிறதென்று:(

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி. எங்கே போகுமோ!

      Delete
  5. தங்கள் தாத்தாவைப் பற்றி அறிய மிக மகிழ்ச்சிமா.
    அந்த வைத்தியம் தொடரவில்லையே
    என்று வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வல்லி. என்னோட பெரியம்மாவுக்குக் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். முக்கியமாய்க் குடும்பக் கட்டுப்பாட்டுக்கான மருந்தும், குழந்தை பிறப்புக்கான மருந்து வகைகளும் அவங்க நன்கு அறிந்தவர். ஆனால் எல்லாம் ரகசியம் எனப் பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டு முற்றிலும் அழிந்தே போனது.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    நல்ல அலசலான பதிவு. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். நீங்கள் சொல்வதில் அனைத்தும் உண்மை இருக்கிறது. குலத்தொழில் கல்லாமலே வரும் என்பது மூத்தோர் வாக்கு.
    / இன்னும் இருக்கு! முடிந்தால் சொல்வேன்/ நாங்களும் படிக்க காத்திருக்கிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா. ஹிஹிஹி, குலத்தொழில் கல்லாமலே வரும் என்பது ஓரளவுக்கு உண்மை தான்! முடிந்தால் தொடர்கிறேன். நன்றி.

      Delete
    2. வணக்கம் சகோதரி

      நான் உங்கள் கருத்துக்கு மாறுபட்டு சொல்வதாக எண்ண வேண்டாம். குலத் தொழிலையும் முறைப்படி ஆர்வமாக கறறுத் தேர்ந்தால்தான் வரும். தன் பெற்றோர்கள் வழிகாட்டலை எந்நேரமும் அருகிலிருந்து உணரும் போது, அருகிலிருந்து அனுபவ பாடமாக கற்று தேர்ந்து வருவதை பழமொழியாக அப்படிச் சொல்வார்கள் என குறிப்பிட்டேன். தவறாயின் மன்னிக்கவும். இப்போது பிற படிப்பிலும், பிற வேலைகளிலும் அனைவரின் கவனமும் செல்கிறது. குலத்தொழிலை செய்வதை இழுக்கு எனவும் சிலர் கருத்தாக இருந்து விடுகிறது.(அதுவும் பெற்றவர்களுக்கே) நீங்கள் எல்லா விஷயங்களையும் அழகாக அலசி எழுதியுள்ளீர்கள். உங்கள் அளவுக்கு என்னால் எதையும் விமர்சித்து எழுத தெரியாது. பாராட்டுக்கள்.

      காலையில் சென்ற மாதத்தின் 10 தேதி (என் அண்ணா நினைவு) நினைவுக்கு வரவே ஏதேதோ யோசனைகளில் விரிவாக கருத்து தெரிவிக்க இயலவில்லை... அதற்குள் மாதம் கடந்து விட்டது. என் கருத்தைப் பார்த்து நீங்கள் மன வருத்தம் அடைந்து விட்டீர்களோ என எனக்கும் வருத்தமாக இருந்தது. அதனால்தான் பதில் கருத்தாக மீண்டும் விளக்கமாக தருகிறேன். நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. வாங்க கமலா! !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஆச்சரியமாக இருக்கிறதே! நான் இதில் தப்பா நினைக்க என்ன இருக்குனு யோசிச்சு யோசிச்சு ஒண்ணுமே புரியலை. ஆர்வமாகக் கற்றுத் தேர்ச்சி பெற அந்தக் குழந்தைக்கும் ஆர்வம் இருக்கணுமே! என்றாலும் பரம்பரை ரத்தம் என்பதால் சில விஷயங்கள் தானே வரும். குலத்தொழில் இழுக்கு என்பது குறித்து நாம் அனைவருமே கேள்விப் படுகிறோமே! அதனால் எத்தனை அருமையான தொழில்கள் நசிந்து விட்டன! :( நீங்கள் சொல்லி இருப்பதில் எனக்குத் தப்பாக எதுவும் தோன்றவே இல்லை. இன்னும் சொல்லப் போனால் கடுமையாக வரும் கருத்துக்களைக் கூட நான் உதறித் தள்ளிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். :))))))) பதினைந்து வருஷங்களுக்கும் மேல் இணையத்தில் அனுபவம் இருக்கே!

      Delete
  7. "சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் எனும் காலம் வந்து விடும்" என்பது பல தமிழறிஞர்களின் கூற்று...

    ReplyDelete
    Replies
    1. வாங்க திரு தனபாலன். இப்போவும்/எப்போவும் ஆயுர்வேத மருத்துவத்துக்கு சம்ஸ்கிருதம் படித்தாகவேண்டும் கட்டாயமாய்! நாங்க இருந்த ஜாம்நகரில் (குஜராத்) ஆயுர்வேதப் பல்கலைக் கழகம் உள்ளது. அங்கே வெளிநாடுகளில் இருந்தெல்லாம் படிக்க வருகின்றனர். ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகள், ஒரு சில மேலை நாடுகளில் இருந்தெல்லாம் மாணவர்கள் வருகின்றனர். அவங்கல்லாம் சம்ஸ்கிருதம் படித்துவிட்டே மருத்துவப் படிப்பைத் தொடர்வார்கள். அது மட்டுமல்ல. பரத நாட்டியத்தில் மூழ்கி முத்தெடுக்கணும்னால் சம்ஸ்கிருதம் தெரியணும். காலம் சென்ற திரு முரசொலி மாறன் அவர்களின் ஒரே மகள் அன்புக்கரசி (இப்போ அம்பேரிக்காவில் மருத்துவர்) பத்மா சுப்ரமணியத்திடம் நாட்டியம் கற்க அணுகியபோது அவர் கட்டாயமாய் சம்ஸ்கிருதம் படிக்கணும்னு சொல்லிவிடவே அவரும் படித்தார். நாட்டியம் கற்று அரங்கேற்றமும் செய்தார். அவருடைய இரு சகோதரர்கள் திரு கலாநிதி மாறன், திரு தயாநிதி மாறன் இருவருக்கும் ஹிந்தி, சம்ஸ்கிருதம் இரு மொழிகளும் தெரியும். அவ்வளவு ஏன்? திருமதி கனிமொழியின் ஒரே மகன் படிப்பது சென்னை ஐஐடி காம்பஸுக்குள் இருக்கும் கேந்திரிய வித்யாலயாவில் ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் படிக்கிறார். முதலமைச்சரின் மகள் நடத்தும் பள்ளியில் (வேளச்சேரியில் உள்ளது) ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் இவை தான் கற்பிக்கப்படுவது. சிபிஎஸ் ஈ பாடத்திட்டம். பள்ளியில் தமிழில் பேசினால் அபராதம் உண்டு.

      Delete
    2. மொழி, கலை (இன்னும் பல உண்டு) எனப் பலவற்றை நீங்கள் தொடர்புப் படுத்தி சொன்னதை, விரிவாக விளக்க வெறும் கருத்துரை போதாது... அதோடு தமிழில் தமிழ்நாட்டில் எண்ணற்ற ஆய்வுகள், விஞ்ஞான ரீதியாகவும், மெய்ஞான ரீதியாகவும் உண்டு...

      உங்கள் பதிவின தலைப்பையும், மேலுள்ள உங்களின் மறுமொழியின் தகவல்கள் படியும் ஒரு கருத்தை சுருக்கமாக சொல்வதென்றால் :-

      வீரத்திற்காகவும் செல்வத்திற்காகவும் அல்ல கல்வி...

      நன்றி...

      Delete
    3. தமிழுக்கு மேடை கட்டுவோம்..
      இந்திக்குப் ...... கட்டுவோம்..

      என்றெல்லாம் இன்றைய உதய்ணா அவர்களது தாத்தா அன்று முழங்கியது இன்னும் நினைவில் இருக்கின்றது..

      இன்றைய தும்பிகளுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை..

      மாதா, பிதா, சுதன், பரிசுத்தம், பரலோகம் - இந்த வார்த்தைகளைப் பற்றி அறியாமல் சமஸ்கிருதம் செத்த மொழி என்று வேறொரு பக்கத்தில் ஒ.....ரி..

      Delete
    4. திரு தனபாலன், என்னோட பதிவின் தலைப்பு ஓர் ஈர்ப்புக்காகத் தேர்ந்தெடுத்தது. அதைத் தவிர உள் அர்த்தமோ/நோக்கமோ இல்லை. கல்வி மனதில் ஓர் தைரியத்தை எதையும் எதிர்க்கும் மனோவலிமையைக் கொடுக்கும். கல்விச் செல்வமே பெரும் செல்வம். அப்படி இருக்கையில் பொருளாதார ரீதியான செல்வத்தைக் குறித்து இங்கே ஓர் உதாரணத்துக்காகவே சொல்லி இருக்கேன். ஆனால் கல்வியின் மூலம் செல்வம் ஈட்டியவர்களும்/ஈட்டுபவர்களும் உண்டு. கல்வி கற்றுத் தேர்ந்தும் அதன் மூலம் விரிந்து பரந்த அறிவு இல்லாமல் இருப்பவர்களும் உண்டு. எல்லோரையுமே நாம் பார்த்து வருகிறோம். கல்வியே கற்காமல் மிகப் பரந்த மனப்பான்மையுடன் இருப்பவர்களும் உண்டு. இந்தப் பதிவிலோ என்னோட மறுமொழிகளிலோ எந்த இடத்திலும் வீரத்திற்கும்/செல்வத்துக்குமே கல்வி என வலியுறுத்திச் சொல்லபப்டவில்லை.

      Delete
    5. ஆமாம், துரை! ரட்சணிய யாத்திரிகம் என்பதே சம்ஸ்கிருதச் சொல் தானே! எல்லோருமே வடக்கே இருந்து வந்ததால் வடமொழி என நினைக்கிறார்கள். அதுவே தப்பு. வட விருக்ஷத்தின் கீழிருந்து போதிக்கப்பட்டதால் வடமொழி. இதைப்பற்றித் திரு சாலமன் பாப்பையா அவர்கள் தெளிவாக விளக்கி இருப்பார். அதோடு இல்லாமல் கம்பனோ/வில்லிபுத்தூராரோ வடமொழி தெரியாமல் ராமாயணமோ/மஹாபாரதமோ எழுதி இருக்க முடியாது! அவ்வளவு ஏன்? நம் ஐம்பெருங்காப்பியங்களில் கூட வடக்கே இருந்து வந்தவை உண்டு. அதனால் அவற்றைத் தள்ளியா விட்டோம். நூற்றாண்டுகளாகத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கிறது. அவற்றின் கதை மாந்தர்கள் பெயர்களே வடமொழி கலந்த தமிழில் தான் இருக்கும்.

      Delete
  8. அன்புள்ள கீதாம்மா, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கூடுதலாக மொழிகள் கற்றால் தவறென்ன. குழந்தைகள் எளிதில் 3 அல்லது 4 மொழிகள் கற்கும் திறனைப் பெற்றிருக்கிறார்கள். என் பெண் சுரபிக்கு பள்ளியில் ஹிந்தி உண்டு. அவளுக்கு ஸ்லோகங்கள் சொள்வதில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து அவளது ஹிந்தி ஆசிரியர், எங்களுக்கு சம்ஸ்க்ரித பாரதி என்னும் அமைப்பு இலவசமாக நடத்தும் online வகுப்பில் சேர்த்து விட்டார்கள். இன்று ஹிந்தியுடன், சமஸ்க்ரிதமும் நன்கு கற்று வருகிறாள். இரண்டுக்கும் சிறு சிறு வித்யாசம் இருப்பதால், ஒப்பிட்டு கற்கவும் செய்கிறாள். பகவத் கீதையில் முதல் அத்யாயம் முழுதும் அழகாக சொல்கிறாள் குழந்தை.
    இப்பொழுது 10 வயது ஆகப் போகிறது அவளுக்கு. அவளது 8 வயதில் கூட அவளுக்கு மழலை மாறாமல் பேசுவாள். ரகரத்திற்கு பதிலாக லகரத்தையே உச்சரிப்பாள். இன்று கடினமான வார்த்தைகளையும் அவ்வளவு நன்றாக உச்சரிக்கிறாள். மனனம் செய்யவும் எளிதில் முடிகிறது. அவளை பார்த்து எங்கள் மகன் அக்னீஸ்வரும் நன்கு ஸ்லோகங்கள் சொல்கின்றான்.
    இப்படி மொழிகள் பல கற்பதால் குழந்தைகள், திறன் மேம்படுகிறது. இலவசமாக கிடைக்கும் கல்வியை வேண்டாம் என்று சொல்பவர்களை என்ன சொல்வது? மொழி அரசியல் வேதனை அளிக்கிறது அம்மா.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வானம்பாடி. உங்கள் கருத்துரை மகிழ்ச்சியை அளித்தது. குழந்தைகள் இரண்டு மூன்று மொழிகள் கற்பது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் என்பதோடு சுயமாகச் சிந்தித்து எழுதவும் மனப்பாட முறை முற்றிலும் ஒழியவும் பயன்படுகிறது. பகவத்கீதையின் முதல் அத்தியாயம் சொல்லுகிறாள் எனில் அபூர்வமான குழந்தை. ஆசிகள்/பாராட்டுகள். நவோதயா பள்ளியில் இலவசக் கல்வி தான். உண்டு உறைவிடப் பள்ளி என்பதால் எல்லாம் மத்திய அரசே செலவுகள் செய்யும். அதன் வீச்சு அதிகம் என்பதால் நன்மைகளே கிடைக்கும். ஆனால் அதன் பயன் இங்கே யாரும் உணரவே இல்லை. பக்கத்து மாநிலமான புதுச்சேரியைப் பார்த்தாவது தெரிஞ்சுக்கலாம். அக்கம்பக்கம் ஊர்களில் உள்ள ஓரிரு கிராமப்புற மாணவ/மாணவியர் புதுச்சேரிக்குப் போய்ப் படிப்பதாகவும் எங்க கிராமங்களில் சொல்லிக் கேள்விப் பட்டேன்.

      Delete
    2. தங்கள் ஆசிகள் என்றென்றும் அம்மா! பதிவிற்கு நன்றி மா! நம் ஊர்களிலும் நவோதயா பள்ளிகள் வந்தால் எல்லா குழந்தைகளும் கல்விச்செல்வம் பெற்று இன்புறுவர். இப்பொழுது வரவுள்ள தொழில் கல்வி இணைந்த கல்விமுறையும் வரவேற்கத்தக்கதே. முன் போல இப்பொழுதெல்லாம் கைத்தறி பட்டு நெய்வதற்கு ஆட்கள் இல்லை. நீங்கள் சொல்வது போல குலத்தொழில்கள் அழிந்துகொண்டே வருகிறது. நெசவும், பட்டு சார்ந்த தொழில்களும் எங்கள் குலத்தொழில். இப்பொழுதே பாதி பேர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.

      Delete
    3. வாங்க வானம்பாடி, இந்த நெசவுத்தொழில் சீரழிந்து போனது குறித்து மதுரையில் பிறந்து வளர்ந்த எனக்கு நன்றாய்த் தெரியும். இப்போதெல்லாம் உண்மையான சுங்கடியே கிடைப்பதில்லை. தறி போடத் தெரிந்தவர்களே இல்லை. தெருக்களில் பாவு கட்டிப் பார்க்க முடிவதும் இல்லை. எல்லோரும் எங்கே போனார்கள்? இந்த ஆங்கிலப் படிப்பை ஒன்றுக்கும் உதவாத படிப்பைப் படித்துவிட்டு ஆங்காங்கே எழுத்தராகவும், வங்கி ஊழியர்களாகவும் வேலை செய்கின்றனர். நெசவுத்தொழில் முழுமையாகப் பாழ்பட்டு விட்டது. கைத்தறிச் சேலை என்பதன் அருமை அதைக் கட்டியவர்களுக்குத் தான் தெரியும். இதே பொல் நெகமம்/காஞ்சிபுரம்/திருபுவனம் போன்ற ஊர்களிலும் இதில் திருபுவனம் தட்டுத் தடுமாறிக் கொண்டு இருக்கிறது.

      Delete
  9. ஆஹா அக்கா நானும் கல்வி குறித்த ஒரு பதிவுதான் எழுதிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன்!!! கொஞ்ச்ம வேறு வகை...

    மொழிகள் கற்றல் என்பது குழந்தைகளின் திறன் வளர்ப்பதே. முன்னேற்றம் வேண்டுமானால் திறன் வேண்டுமே.

    அக்கா நீங்க சொல்லிருக்காப்ல எலிமென்ட்ரி ஸ்கூல் லீவிங்க் சான்றிதழ் அப்புறம் ஆசிரியப் பயிற்சி...பெற்று அப்போ எல்லாம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியிருக்காங்க எங்க வீட்டிலும். என் மாமா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க தி/கீதா! நீங்களும் போடுங்க, பார்க்கலாம். ஆனால் நிச்சயமாக வேறே மாதிரித் தான் சொல்லி இருப்பீங்க. எனக்குத் தான் நாசூக்காகச் சொல்ல வராதே! :)))))

      Delete
  10. ஆஹா அக்கா நானும் கல்வி குறித்த ஒரு பதிவுதான் எழுதிக் கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ இருக்கிறேன்!!! கொஞ்ச்ம வேறு வகை...

    மொழிகள் கற்றல் என்பது குழந்தைகளின் திறன் வளர்ப்பதே. முன்னேற்றம் வேண்டுமானால் திறன் வேண்டுமே.

    அக்கா நீங்க சொல்லிருக்காப்ல எலிமென்ட்ரி ஸ்கூல் லீவிங்க் சான்றிதழ் அப்புறம் ஆசிரியப் பயிற்சி...பெற்று அப்போ எல்லாம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியிருக்காங்க எங்க வீட்டிலும். என் மாமா சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வந்திருக்குனு தெரிவிக்கவே மறுபடியும் போட்டேன். :)

      Delete
  11. கருத்து வந்ததா என்று தெரியவில்லை கீதாக்கா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நாலு தரம் வந்திருந்தன. இரண்டை நீக்கிட்டு இரண்டைப் போட்டேன். :))))

      Delete
  12. வூப்ஸ் என்று ப்ளாக சொல்லிக் கொண்டே எரர் காட்டியது...ஒரு கருத்தும் கருத்து வந்ததா நு கேட்டதும் தான் வந்திருக்கு...

    இடையில் போட்ட கருத்து வரவில்லை என்று தெரிகிறது....

    என்னவோ உங்கள் தளத்தில் இப்படிக் காட்டியது ஐடி வரவே மாட்டேங்குது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வந்ததைப் போட்டிருக்கேன். ப்ளாகரைக் கேட்டு உலுக்கிக் குலுக்கிப் பாருங்க. சமயத்தில் ஸ்பாமில் போய் உட்கார்ந்துக்கும்.

      Delete
  13. வூப்ஸ் என்று ப்ளாக சொல்லிக் கொண்டே எரர் காட்டியது...ஒரு கருத்தும் கருத்து வந்ததா நு கேட்டதும் தான் வந்திருக்கு...

    இடையில் போட்ட கருத்து வரவில்லை என்று தெரிகிறது....

    என்னவோ உங்கள் தளத்தில் இப்படிக் காட்டியது ​ஐடி வரவே மாட்டேங்குது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹாஹா! அதெல்லாம் மாஜிக் வேலையாக்கும்! நம்ம ப்ளாக் பல சமயங்களில் நம்மையே யார் நீ எனக் கேட்கும்.

      Delete
  14. மொழிகள் பல அறிந்திருப்பது முன்னேற்றத்திற்கும், திறன் வளர்த்துக் கொள்ளவும் உதவும்.

    இப்போது பல தொழில்கள் அழிந்து வருகிறதுதான். விவசாயமுமே....ஆனால் நீங்கள் சொல்லியிருப்பது போல் தென்னகத்தில் இளைஞர்கள் விவசாயப்படிப்பு படித்து அதனை தாங்கள் கற்றதை காலத்திற்கேற்ப நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

    ஏட்டுக் கல்வியையும் நடைமுறைப்படுத்த சும்மா மனப்பாடம் செய்து அதை அப்படியே ஒப்பிப்பதை விடுத்து எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதும் போதிக்கப்பட வேண்டும். காலத்திற்கேற்ப...அது போல நீங்கள் சொல்லியிருப்பது போல படிப்போடு கூடவே சில தொழில்களும் அவரவர் விருப்பற்றத்திற்கேற்ப கற்பித்தால் நல்லது. படிக்க இயலாதவர்கள் அல்லது ஏட்டுக் கல்வியைப் படிக்கக் கஷ்டப்படுபவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

    அவர்களும் வாழ வழிவகுக்கும்..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மை தி/கீதா, ஜேகே அண்ணா அவர்கள் கேரளத்தில் ஹிந்தி படிக்க வேண்டியது கட்டாயம் எனச் சொல்லி இருந்தார் எப்போவோ ஒரு கருத்துரையில். அதனால் அவர் என்ன கெட்டுவிட்டார்? மலையாளம், ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் எனப் பல மொழிகள் தெரிந்திருப்பது ஓர் லாபம் தானே! கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுநர் கூடப் பல மொழிகளில் பேசுவதைப் பார்க்கலாம். ரயில் நிலையங்களில் போர்ட்டர்கள் நாலைந்து மொழிகள் சரளமாய்ப் பேசுவார்கள். அதனால் எல்லாம் கன்னடமொழி அழிந்துவிடும் என அவர்கள் நினைப்பதில்லை.

      Delete
  15. மொழியை வைத்து இத்தனை பெரிய அரசியல் நடப்பது தமிழகத்தில் மட்டும்தான் என்று நினைக்கிறேன். அரசியல்வாதிகளின் வீட்டு குழந்தைகள் ஆங்கில வழி கல்விதான் கற்பார்கள்.
    கிராமப்புற மக்களுக்கு கஷ்டம் என்று சொல்லி சொல்லியே கல்வியின் தரத்தை மிகவும் தாழ்த்தியாச்சு. குலக்கல்வியை ஏற்றுக் கொள்ளாததால் இன்று கோர் லேபருக்கு பஞ்சம். தொழில் மட்டுமல்ல பல நல்ல கலைகளும் அழிந்து கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை கூறிக்கொண்டே, தமிழகத்தை மட்டும் மத்திய அரசு வஞ்சிக்கிறது எனக் கூறிக்கொண்டே எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு, பெற்றுக்கொண்டவற்றை மறைத்துப் பொய்யான பிரசாரம் செய்வதும் தமிழகத்தில் மட்டும் தான். உண்மையில் தமிழக அரசுகள் எல்லாமும் கிராமப்புற மாணவர்களையே வஞ்சிக்கின்றனர். நல்ல கல்வி பெற விடாமல்/ பொது அறிவை மேம்படுத்திக் கொள்ள விடாமல் "குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்களாக" தமிழ்நாட்டு மாணவ மணிகள் இருக்கின்றனர். ஆங்கிலமும் தெரியலை/தமிழும் தகராறு. மற்ற மொழியும் கற்க மாட்டார்கள். இலவசங்கள் போதும்! அதை விட சுகம் வேறென்ன என இருப்பார்கள்.

      Delete
    2. நாதஸ்வரக் கலையையே எடுத்துக்கொள்ளுங்கள். இப்போதைய நாட்களில் கற்கும் இளைஞர்கள் குறைவாக/அரிதாகவே இருப்பார்கள். அதுவே குலத்தொழிலாகக் கற்றிருந்தால் பரம்பரையாக வரும். அதோடு இல்லாமல் இப்போதைய கல்யாணங்களுக்குச் செண்டை மேளம் வைக்கிறார்கள். இதில் என்ன தமிழ் உணர்வு? நம் தமிழகத்து இசைக்கலைஞர்களை ஆதரிக்காமல் அண்டை மாநிலத்து இசைக்கலைஞர்களை ஆதரித்தால் இவங்க வயிறு ரொம்பிடுமா? செண்டை மேளம் சத்தம் வேறே தாங்கறதில்லை. :(

      Delete