நானும் எவ்வளவோ முயற்சி செய்து திருவாரூர்ப் பயணக் கட்டுரையைத் தொடர நினைச்சாலும் எழுத உட்காரவே நேரம் இல்லை. :( ஏப்ரல் மாதம் பதினைந்து தேதியில் இருந்து ஒரே வேலை மும்முரம். அதற்கு முன்னால் வீட்டில் கழிவறை மாற்றம், கதவுகள் மாற்றம், வெள்ளை அடித்தல், பெயின்டிங் செய்தல் என்று கிட்டத்தட்ட 20 நாட்கள் பிழிஞ்சு எடுத்துட்டாங்க. வேலை செய்தது என்னமோ அவங்க தான். அவங்க கேட்கும் நேரத்தில் கேட்டதை எடுத்து வைச்சு, ஒழிச்சுக் கொடுத்து, திரும்ப எடுத்து வைச்சு சமையலறைப் பொருட்களைக் கணினி அறைக்கு மாற்றி, அதைத் தற்காலிகப் பூஜை அறையாக மாற்றி, இன்னொரு படுக்கை அறையில் சமைச்சு, 2,3 நாட்கள் அங்கேயே குடி இருந்துனு எல்லாம் சரியாக மே மாதம் பதினைந்து தேதிக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பின்னர் நாத்தனார் பேத்தி கல்யாணம். இங்கேயே எங்க குடியிருப்பில் இருந்து தெரியுமே! அதான் செண்டை மேளம் எல்லாம் வாசிச்சுக் காதையும், உடம்பையும் பாடாய்ப் படுத்துவாங்களே அந்தச் சத்திரம்.
நாத்தனார் பெண்ணிடம் கல்யாணத்தில் எந்த சங்கீதம் வைச்சாலும் இந்த லைட் ம்யூசிக்கும், செண்டை மேளமும் மட்டும் வைக்காதேனு கெஞ்சிக் கேட்டுக் கொண்டோம். வைக்கலைனு உறுதிமொழிப் பத்திரமும் கொடுத்துட்டாங்க. ஆனாலும் ரிசப்ஷனில் சங்கீத் நிகழ்ச்சி, இந்தக் கால இளைஞர் பட்டாளங்கள் விரும்பியதால் வைச்சிருந்தாங்க. மெஹந்தியும் இருந்தது. ஆனால் நான் மெஹந்திக்கெல்லாம் போகலை. அதோடு வீட்டில் உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அவங்க இங்கே வரச்சே கூடவே வந்து உபசரித்து விட்டு அப்புறமாத் திரும்பச் சத்திரம் போய்னு ஒரு வாரம் போனதே தெரியலை. அதுக்கப்புறமாச் சரியாகும்னு நினைச்சால் இங்கே நம்ம வளாகத்தில் ஒரு கல்யாணம். அதற்குக் கல்யாணத்துக்குப் போவதா./ரிசப்ஷனுக்குப் போவதானு சீட்டுப் போட்டுப் பார்த்தோம். முதல்லே நான் அவரை மட்டும் போகச் சொன்னேன். அவரும் சரினுட்டுப் பின்னர் இரவு ரிசப்ஷனுக்குப் போவதெனில் தனியாகப் போக முடியாதுனு யோசிச்சார். சரினு அப்புறமா நானும் கிளம்பினேன். இங்கே ஓலா மாதிரி ஒரு ஆட்டோ ஓட்டுநர்கள் குழுவில் ஆட்டோவை வெயிட்டிங்கில் இருந்து கூட்டி வரமாதிரி ஏற்பாட்டில் அனுப்பி வைக்கிறாங்க. அவங்க கிட்டே ஆட்டோ முன்பதிவு செய்தோம். ரெட் டாக்சி எல்லாம் ட்ராப் தான் வெயிட்டிங்கோ பாக்கேஜோ இல்லைனு சொல்லிட்டாங்க. அப்புறமா அந்த ஆட்டோவில் போனோம். ஏழு மணிக்கு ரிசப்ஷன்னு போட்டிருந்தும் ஆரம்பிக்கையில் எட்டரை ஆகிவிட்டது. இங்கே சங்கீத் வேறே பெண்/பிள்ளை வரும்போதே எப்போவும் போல் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் வந்தாங்களா. அது முடிஞ்சு நலுங்கு முடிஞ்சு ஆரத்தி எடுத்துப் பின்னர் ரிசப்ஷன் ஆரம்பிச்சது. அதன் பின்னர் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வரச்சே ஒன்பதரை. சாப்பாடு நன்றாக இருந்தாலும் நான் எப்போவும் போல் உணவுக்கட்டுப்பாடு! சாம்பார் இட்லியும் தயிர்சாதமும் மட்டும் சாப்பிட்டேன். ருமாலி ரொட்டி என்னும் பெயரில் மைதாவில் ரொட்டி போட அப்படியே ஒதுக்கிட்டேன். மற்றவை கொண்டு வரும்போதே நோ! நல்லவேளையாக இலைகளில் பரிமாறி வைச்சுட்டு ஈ மொய்க்கச் சாப்பிடச் சொல்லலை. உட்கார்ந்ததுமே பரிமாறினார்கள். நாத்தனார் பேத்தி கல்யாணத்திலும் அப்படியே. உட்கார்ந்தால் தான் பரிமாறினார்கள்.
மறுநாள் நெருங்கிய உறவினர் வருகை. அவங்களுக்காகச் சின்ன வெங்காயம்/முருங்கை போட்டு சாம்பார், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் போட்டு அந்தக் காலத்துக் காரக்கறி, பருப்பு ரசம், சதசதயம் என்னும் எங்க பக்கத்துப் பாயசம். (அரிசி தான் குழையவே இல்லை. திருஷ்டி) வாழைக்காய் வறுவல், மாங்காய்த் துண்டம் ஊறுகாய், தொக்கு எனச் சமைத்துச் சாப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்ததில் நாள் ஓடியே விட்டது. நேத்திக்குப் பதினைந்து நாட்களாகக் கவனிக்காமல் விட்டிருந்த வேலைகளைச் செய்து முடித்துச் சாப்பிடும்போதே ஒரு மணி ஆகிவிட்டது. அதன் பின்னர் இணையத்தில் உட்கார்ந்தாலும் பதிவுகளில் இந்தக் கருத்துரைகள் போய் ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடியதில் ஒரே வெறுப்பு. முந்தா நாள் வந்திருந்த உறவினர்கள் நான் வலைப்பதிவு ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து என் ஆதரவாளர்கள். ஆகவே புதுசா என்ன எழுதினேன்னு கேட்டதில் ரொம்பவே வெட்கமாக இருந்தது. சும்மாவானும் வெளியீடு செய்திருந்த புத்தகங்களைப் பற்றிச் சொல்லி மனதை ஆற்றிக் கொண்டேன். பல பதிவுகளுக்கும் போகலை. என்னோட பதிவையும் கவனிக்க நேரமில்லை. என்னவோ இப்படி ஒரு சூழ்நிலை. ஒரு காலத்தில் நாலைந்து பதிவுகளிலும் எழுதிக் கொண்டு பெரிய வீட்டையும், பராமரித்துக் கொண்டு வருவோர்/போவோரையும் கவனித்துக் கொண்டு இருந்த நான் இப்போ இப்படி ஆயிட்டேன்! :(
பார்க்கலாம். போகப் போக எப்படி முடிகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க நினைச்சாலும் முடியலை. உடல்நிலையும் இடம் கொடுக்கணும்.
//சதசதயம் என்ற எங்க பக்கத்துப் பாயசம்// - சும்மா நெல்லை உணவை, மதுரைக்கு இழுத்துண்டு போகாதீங்க. அதுவுமே பாலக்காடிலிருந்து வந்தது.
ReplyDeleteஇஃகி,இஃகி,இஃகி, கண்டு பிடிச்சுட்டீங்களே! :)))))
Deleteதிருமண முறைகள் முற்றிலும் மாறிக்கொண்டு வருகின்றன.... இதுல, நம்ம ஊர்ல உள்ள ஈரவெங்காயங்கள், தமிழ்மொழியை 'அவர்கள்' மாற்றி வடமொழியைப் புகுத்தினார்கள் என்கிற உளரல் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர். கண் முன்னமே தமிழ் கலாச்சாரத்தில் செண்டை மேளம், சுடிதார் மற்றும் வட இந்திய உணவுகள் என்று வந்திருப்பது இவர்கள் கண்ணிற்குத் தெரியவில்லை.... அவர்கள் திருமணமும் இந்த முறைக்கு மாறிவிட்டதும் புரியவில்லை
ReplyDeleteஆமாம், எல்லாமே மாறுகின்றன. அவங்க திருமணங்கள் உள்பட.
Deleteஎனக்குத் தெரிந்து, நீங்கள் இந்தச் சமயத்தில் (வயதில்) கொண்டுவரவேண்டிய மாற்றங்கள் கழிவறையில், எழுந்துகொள்வதற்கு, பிடித்துக்கொள்வதற்கான எவர்சில்வர் பைப்புகள் (இப்போ இவைகளை 60+ இருக்கும் வீடுகளில் அமைக்கிறார்கள்). கால் வழுக்காமலிருக்க அதற்கேற்ற நடைவிரிப்புகள்.
ReplyDeleteஅதெல்லாம் நாங்க இங்கே வரச்சேயே செய்து கொண்டு வந்து விட்டோமே! நடை விரிப்புக்கள் தான் போடுவதில்லை. மடி, ஆசாரம் ஒரு பக்கம்னால் அதுவும் தடுக்கும். ஆகவே வாசலில், குளியலறைகளின் வாசல்கள் மட்டுமே நடை விரிப்பு. அதையும் பத்து நாளைக்கு ஒரு தரமாவது ஊற வைச்சுத் தோய்ப்போம் இருவரில் யாருக்கு முடியுதோ அவங்க. கழிவறை/குளியலறை எல்லாம் தினம் தேய்த்துக் கழுவிட்டுத் தான் குளிக்கவே போவேன்.
Deleteபிளாஸ்டிக்ல (ஆனா மெட்டீரியல் வேறு..கீழே குமிழ் மாதிரி இருக்கும், தரையைப் பிடித்துக்கொள்ளும்) உள்ள விரிப்பு குளியலறைல. வழுக்கி விடாமல் இருப்பதற்காக
Deleteபுரிந்தது. ஆனால் குளியலறை/கழிவறை வாசலில் ஈரம் போவதற்காகப் போடும் மிதியடியோடு சரி.
Deleteஅக்கா தேங்காய் நார் நீள மிதியடி கேரளத்தில் போடுவாங்களே அது போல அடியில் கிரிப் இருக்கும் ரப்பர் ஷீட் போட்டிருக்கும்படி இருந்தால்..நலது அல்லது இப்போது அதே நாரை சின்னதா கட்டி ப்ளாஸ்டிக் ஷீட் அடியில் இருப்பது போல் வருகிறேதே அதுவும் போடலாமே...
Deleteஓ இதை அடிக்கும் போது நெல்லை போட்டிருப்பதும் தெரிந்துவிட்டது....அதேதான்
கீதா
இந்த நார் மிதியடி மேலேயே ஒரு துணி மிதியடி ஈரம் போவதற்கு சின்னதாக கழிவறை குளியலறை வாசலில் போட்டுக் கொள்ளலாமே.
Deleteஎங்கள் ஊரில் வயதான மாமி ஒருவருக்கு (தனியாக இருக்கிறார்) அவர் வீட்டில் இப்படித்தான் போட்டிருக்கிறார்கள். அதை ஃபோட்டோ எடுத்திருக்கிறேன் வலையில் போட்டேனா என்று நினைவில்லை...பார்க்கிறேன்., போடவில்லை என்று நினைக்கிறேன்
கீதா
முன்னெல்லாம் நாங்க சென்னை மவுன்ட்ரோடில் கேரளத்தின் காயர் போர்டில் தான் மிதியடி வாங்கினோம். இப்போல்லாம் அப்படிப் போவதில்லை. ஆனாலும் இங்கே தெப்பக்குளத்தின் ஒரு காதி கடையில் (ஃப்ராஞ்சைஸ் தான்) எல்லாமே நன்றாக இருக்கும். மாமா தனக்கான கதர்ச் சட்டைகள், வேஷ்டிகள் அங்கே வாங்குவார். நான் எனக்குக் குளிக்கும் டவல்/பெரிய அளவில் வாங்குவேன். நீண்ட நாட்கள் உழைக்கும்.
Deleteஹிஹிஹி, மிதியடி துணியில் போட்டால் குளித்துவிட்டு வரும்போது மடிக்குறைச்சல்னு இரண்டு பேருமே மிதிக்க மாட்டோம். :)))) இன்னமும் இப்படி ஓடுகிறது அதிசயமா இருந்தாலும் அதான் உண்மை.
கூடவே நாங்களும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது போன்ற உணர்வு
ReplyDeleteஉங்கள் சோகத்திலும் இங்கே வந்து பங்கு கொண்டமைக்கு நன்றி கில்லர்ஜி. காலம் உங்கள் மனப்புண்ணை ஆற்றட்டும்.
Deleteநீங்கள் பிஸியாக இருப்பீர்கள் என்று தான் நானும் அழைக்கவில்லை. ஓரிரு முறை அந்தப் பக்கம் வந்திருந்தாலும் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என அழைக்கவில்லை. வேலைகள் முடிந்து, உடம்பும் மனசும் ஒத்துழைக்கும் போது இணையம் பக்கம் வரலாம்.
ReplyDeleteஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! எனக்கு முதல்லே நீங்க வந்ததே தெரியாது. தெரிஞ்சப்போ இங்கே ஒரே உறவுக்கூட்டம். ஆதலால் கூப்பிட முடியலை. நேற்றும் முந்தாநாளும் கூப்பிட நினைச்சு முடியலை! அடுத்தடுத்தத் தொலைபேசி அழைப்புகள்னு பொழுது போய் விட்டது. :( தொலைபேசியில் உங்களை அழைத்திருக்கலாம். என்னவோ நேரம் வாய்க்கவில்லை. :(
Deleteஏப்ரல் 15 தொடங்கியதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மே 15 தொடங்கி, மே 15 முடிந்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள்? சென்ற வருட மே 15?!
ReplyDeleteஇஃகி,இஃகி,இஃகி, திருத்திட்டேன் ஶ்ரீராம். :)
Deleteஉட்கார்ந்த உடன் பரிமாறுவது மெல்ல மெல்ல அதிகமாகி வருகிறது. நிறைய கம்ப்ளெயின்ட் வந்திருக்கும் போல!!! நான் கூட நான் சாப்பிடாதவற்றை, விரும்பாததை பரிமாற்ற வரும்போதே வேண்டாம்னு சொல்லி விடுவேன். துணைப்பொருட்களை வ்வ்வ்ன்றாய் காலி செய்தால் அதை நிரப்ப மறுபடி ஓடி வருபவரை அங்கேயே தேக்கி விடுவேன். அதே சமயம் நாம் எதாவது ஒரு பண்டம் மீண்டும் கேட்டால் கேட்கப்பட்டவர் போனார் போனார் போனார் என்று காணாமல் போய்விடுவார்! இவரைக் கேட்டோமா, அவரைக் கேட்டோமா என்று நாம் குழம்ப வேண்டும்!
ReplyDeleteஅப்படியா? இது தொடரட்டும். நாம் வேண்டும் என்பதை மட்டும் சாப்பிட்டுக்கலாம், இரண்டு கல்யாணங்களிலுமே நான் சாம்பார் சாதம், புலவு, புளியோதரை போன்றவற்றைத் தவிர்த்து விட்டேன். வயிற்றுக்கு இதமான உணவாகத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டேன்.
Deleteகேடரர்கள் யாருமே சரியானவர்கள் கிடையாது. பரிமாறுவதே கிடையாது. காய் கூட்டு போன்ற பலவற்றை மீண்டும் வேண்டுமா என்றே கேட்க மாட்டார்கள். கேட்டாலும் தேவையில்லாதபோது கேட்பாங்க. யாருக்காவது ஏதாவது உருப்படியான கேடரர்கள் தெரியுமா?
Deleteஇங்கே ஶ்ரீரங்கத்தில் எங்க நாத்தனார் பேத்தி கல்யாணத்திற்குச் சமைத்த "சாரதா கௌரி" காடரிங் சேவை/உணவு/பரிமாறும் விதம் எல்லாமே நன்றாக இருந்தது. எங்க பெண்/பிள்ளை திருமணத்தின் போதும் காடரிங் செய்த திரு ராமச்சந்திரன்/சென்னையில் உள்ளகரம் எல்லாமே திருப்தியாகச் செய்வார். ஞானாம்பிகையும் பரவாயில்லை ரகம்.
Deleteரிஸப்ஷன்களில் இரைச்சல் தாங்க முடியாதது. பேச முடியாது என்பது மட்டுமல்ல. காதில் அலறி இதயத்தை அதிரச்செய்யும். வயிற்றில் புலிக்குட்டி ஓடும். எப்போடா வெளியே வருவோம் என்று இருக்கும். ஒருவேளை இதற்குதான் அப்படி வைக்கிறார்களோ என்னவோ!
ReplyDeleteஆமாம், கொஞ்சம் இல்லை, சில சமயங்கள் நிறையக் கோபம் கூட வந்துவிடுகிறது. என்ன செய்ய முடியும்!
Deleteவெளியிடப்பட்ட உங்கள் புத்தகங்கள் எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றன? எனக்கும் பணிச்சுமையால் வலைப்பக்கம் வருவது சிரமமாக இருக்கிறது.
ReplyDeleteஉண்மையைச் சொல்லணும்னால் நான் அந்தப் பக்கம் போவதே இல்லை. அவ்வப்போது ராயல்டிக்கான அறிவிப்பு வரும். வங்கிக் கணக்கில் பதிவாகி இருப்பதும் எஸ் எம் எஸ் மூலம் தெரிந்து கொள்வேன். மற்றபடி நான் ஓரளவு எடிட் செய்து அனுப்புவதோடு சரி. மற்றதெல்லாம் வெங்கட்டே துணை. _/\_.
Deleteகீதாக்கா நீங்க ரொம்ப பிசியாக இருந்தீங்கன்னு தெரிந்தது தெரிகிறது...
ReplyDeleteஇப்போது கல்யாணங்களில், விசேஷங்களில் அதாவது மண்டபத்தில் நடப்பவை, பரவாயில்லை சாப்பிட உட்காரும் போதுதான் போடுகிறார்கள் என்று என் உறவினர்கள் சொன்னார்கள்.
கீதா
இன்னமும் ஓயலை போங்க! இதோ இன்னும் ஒரு நாளில் திடீர்ப் பயணம். இப்போப் பார்த்து வேலை செய்யும் பெண்மணிக் கணவனுடன் கோவித்துக் கொண்டு பிறந்த வீடு போய்ப் பத்து நாட்கள் வரவே இல்லை. இத்தனைக்கும் கல்யாணம் ஆகி 20/25 வருடங்கள். அவங்க அக்கா சமரசம் பேசி இந்தம்மாவின் கணவர் போய் அழைத்து வந்ததும் இப்போ ஒரு வாரமாக வராங்க. நிறுத்தவும் முடியலை. விடுமுறை எடுத்தால் என்னால் முன்போலச் செய்யவும் முடியலை. :( இம்முறைப் பத்து நாட்கள் தொடர்ந்து வேலை செய்ததில் கைகள் வலி, கால்கள் வலி அதிகம் ஆகி மறுபடி பாதமெல்லாம் வீக்கம் வருவதும் போவதுமாக இருக்கு! :(
Deleteகருத்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகல்யாணங்களில் இசை ரொம்பக் கஷ்டம். இப்போது கர்நாடக சங்கீத கச்சேரிகள் குறைந்துவிட்டது போல. மெல்லிசைதான் வைக்கிறாங்களோ?
கீதா
வந்திருக்கு. போன வாரம் போன கல்யாணத்தில் நல்ல நாதஸ்வரக் கச்சேரி வைத்திருந்தார்கள். ஆனால் அப்புறமாக "சங்கீத்" வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteஎத்தனை பரபரப்பாக இருந்திருக்கிறது. நீங்களும் அசராமல்
உழைக்கிறீர்கள்.!!!
என்றும் நலமுடன் இருங்கள்.
நம் ஊர்க்கல்யாணத்தில் இதெல்லாம் புகுந்து
நாட்கள் ஆகிவிட்டது.
குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள்.
சத்தம் குறைந்தால் தேவலை.
எனக்குத் தெரிந்து இரண்டு வாரம் முன்னாடி ஒரு திருமணத்தில்
மணப்பெண் 6 தடவை உடை மாற்றீனாள்.:)
மஹராஷ்டிரரைத் திருமணம் செய்வதால், தமிழ்க் கல்யாணம்,
மராத்தியக் கல்யாணம் என்று நடந்தது.
சினிமா மாதிரி பார்த்துக் கொண்டிருந்தோம்..
நல்ல வேளை நேரே போகவில்லை
என்று மகிழ்ந்தேன்:)
வாங்க வல்லி. ஏப்ரலில் இருந்தே ஒரே ஓட்டம் தான். இன்னமும் உட்காரவில்லை. நம்ம ஊர்க் கல்யாணங்களில் இதெல்லாம் புகுந்திருக்குனு தெரிந்தாலும் நாங்க இப்போத் தான் பார்க்கிறோம். ஆமாம், இந்த உடை மாற்றலும்! :))))))
Deleteசதசதயம் ஆஆஆஆ சூப்பர்...கேரளத்து பாயாசம். நம் வீட்டிலும் செய்வதுண்டே...அதுவும் பிறந்த விட்டில். உருளியில் அரிசி குழைந்து வெல்லத்தில் நிறைய நேரம் வைச்சு மெதுவான தீயில் கொதிக்க வைத்து அதுவும் மூன்றாவது தேங்காய் பாலில் கொதித்து கொதித்து இரண்டாவது விட்டு அப்புறம் ஆஃப் செய்து முதலாவது தேங்காய்ப்பால்...
ReplyDeleteசெம டேஸ்டியா இருக்கும்..இடிச்சு பிழிஞ பாயாசம்னு சொல்வதுண்டு.
கீதா
எங்க வீட்டிலே (பிறந்த வீடு) இதுக்கு விஷுப் பாயசம் என்று பெயர். அம்மா விஷுவன்று இதான் வைப்பார்.
Deleteஇந்தக் கால கல்யாணங்களும் ரிசப்சனும் உணவுகளும் நல்லகாலம் எமது நாட்டுக்கு பெரும்பாலும் வரவில்லை .
ReplyDeleteரொம்பவே நல்லது. மாற்றங்கள் வேண்டும் என்றாலும் அடிப்படைக் கலாசாரத்தையே அடியோடு ஒழிப்பது சரியல்ல.
Deleteபிசியாக இருந்தால் நல்லதுதான்.
ReplyDeleteவீட்டுவேலை, உறவுகளுடன் விழாக்கள் என்று நேரம் போனது நல்லது.
எனக்கும் உறவுகளின் வருகை, விடுமுறைக்கு வந்த தங்கை குழந்தைகளுடன், பேரன் பேத்திகளுடன் உறையாடி மகிழ்ந்து என்று போனவாரம் போனது. இன்று என் தோழி, கணவருடன் வந்து இருந்தாள் இப்போதுதான் கிளம்பி போனாள். நன்றாக இருந்தது.
திருமணங்கள் இப்போது மாற்றம் பெற்றுக் கொண்டே இருக்கிறது.நாம் பார்த்து கொண்டு இருக்க வேண்டும்.
ஆமாம், கோமதி. வேலை மும்முரத்தில் வேறே எண்ணங்கள் தோன்றாது. இப்போதும் இந்த வாரம் வருவதாய் இருந்த உறவினர்கள் இப்போ வரலை. நாங்க தான் பயணம் மேற்கொள்ளும்படி இருக்கு. திருமணங்கள் நம்ம கலாசாரத்தின் அடிப்படையையே அசைக்கிறதே!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteவீட்டில் வேலைகளினால் பிசி என்று சொல்லிக் கொண்டேயுள்ளீர்கள். ஆனால் இப்படி ஒட்டு மொத்தமாக வேலைகள், உறவுகளின் திருமணங்கள், அவர்கள் வந்து தங்குவது என இருந்தால் நேரம் சரியாகத்தான் இருக்கும். உங்கள் மகன் வந்திருக்கும் போதே இந்த வீடு சரி செய்யும் வேலைகளை கொஞ்சம் அவர் இருக்கும் போதே முடித்திருந்தால் உங்களுக்கும் சற்று ஆதரவாக இருந்திருக்குமே... நான் இதுபற்றி கருத்து தெரிவிப்பது தவறாயின் மன்னிக்கவும். உங்கள் இருவரின் சிரமங்கள் சற்று குறைந்திருக்குமே என்ற எண்ணத்தில் சொல்கிறேன்.
இத்தனை வேலைகளுக்கு நடுவிலும், இப்பவும் உறவுகளுக்கு விழுந்து விழுந்து உபசரிக்கும் உங்களின் நல்ல பண்புக்கு பாராட்டுக்கள். நானும் ஒன்றும் எழுதவே முடியவில்லை. என்னென்னவோ எழுத வேண்டுமென காலை எழுந்தவுடன் நினைப்பதோடு சரி. அப்படியே இரவாகி விடுகிறது. உங்களின் திருவாரூர் பயணக்கட்டுரை பதிவுகளை காண ஆவலோடு இருக்கிறேன். விரைவில் எழுத இறைவன் உங்களுக்கு சக்தி தருவாராக... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. பையர் வந்திருந்தாரே ஒழிய அவர் இங்கே இருந்து வேலை செய்து கொண்டிருந்தார். நைஜீரியா நேரப்படி நம்ம மத்தியானம் பனிரண்டுக்கு வேலையை ஆரம்பித்தாரெனில் இரவு ஒன்பதரை/பத்து வரை முடியாது. சப்பாத்தி/இட்லி என்றால் பண்ணி வைச்சுடுவோம். தோசை எனில் நானோ/மருமகளோ சூடாக வார்த்துப் போடுவோம். மேலும் சின்னக் குழந்தையை வைத்துக் கொண்டு இந்த வெள்ளை அடித்தல்/பெயின்டிங் எல்லாம் சரியாக வராது. அதோடு மகனோ/மருமகளோ/பெண்ணோ/மாப்பிள்ளையோ எப்போவோ வராங்க. அந்தச் சமயம் சௌகரியமாக இருந்து அவங்களுக்கான ஓய்வை அனுபவிக்கட்டுமே! இருக்கவே இருக்கு வேலைகள் செய்வது! செய்து தானே ஆகணும்.
Deleteநான் போட்ட கருத்தை காணோம்
ReplyDeleteஒண்ணு வந்திருக்கு கோமதி. ஸ்பாமில் கூடப் போய்ப் பார்த்துட்டேன். தி/கீதாவினுடைய கருத்துகள் தான் இருந்தன. அவற்றையும் வெளியிட்டுவிட்டேன்.
Delete