இன்னமும் ஒரு நிதானத்துக்கு வரலை. கொஞ்சம் கொஞ்சமாகச் சரி பண்ணிக் கொண்டு இருக்கேன். ஆரம்பிச்ச பதிவுகள் இருக்க இன்னிக்கும் சரி, இதுக்கு முன்னாடியும் சரி! வேறே விஷயம் எழுதினேன்/எழுதப் போறேன். தொடரணும்னு எண்ணம் எனக்கு இருக்கு. ஆனால் கடவுளின் அருள் எப்படியோ! நிற்க. (கால் வலிச்சால் உட்காரலாம்.)
விருந்து சமையலில் கொறடா! இங்கே!
காமாட்சி அம்மா இஞ்சித் தொக்கு பற்றி எழுதி இருந்தார். பழைய பதிவு தான். அதிலும் நான் கருத்துச் சொல்லி இருந்தேன். இருந்தாலும் அவர் எழுதினதில் அன்றும்/இன்றும் பச்சை மிளகாய்/கொத்துமல்லி சேர்ப்பது தான் புதிது. இஞ்சியைப் பச்சை மிளகாயோடு சேர்த்துப் பொடியாக நறுக்கி நல்லெண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து வதக்கிக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்துப் புளி ஜலத்தை விட்டு உப்பையும் போட்டுக் கொதிக்க விட்டுப் புளி மிளகாய் எனப் பண்ணி இருக்கேன். புளி மிளகாய் என்பது மிளகாய் மட்டுமே சேர்த்துப் பண்ணுவது என்றாலும் நான் இதையும் புளி மிளகாய் என்றே சொல்வேன். புளி இஞ்சினும் சொல்லலாம். மி.வத்தலோடு இஞ்சியையும் நல்லெண்ணெயில் வதக்கிக் கொண்டு, புளியையும் சூட்டில் ஒரு புரட்டுப் புரட்டிக் கொண்டு உப்புச் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டு நல்லெண்ணெயில் கடுகு, உபருப்பு தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுக் கிளறித் தேவையானால் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொண்டு எடுத்து வைத்தால் மாசங்களுக்கு வரும்.
இதுவும் அப்படித் தான். ஆனால் ஒரே ஒரு வித்தியாசம். புளிக்கு ஏற்ப இஞ்சி மட்டுமில்லாமல் கூடுதல் சுவைக்குப் பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழையும். இன்னிக்குக் காலம்பரப் பண்ணினேன். உடனே மோர் சாதத்துக்குத் தொட்டுண்டாச்சு. சாயந்திரம் தோசைக்கும் அதான். ஆனால் ஒண்ணு, நான் ஒண்ணு பண்ணறதுன்னா அதிலே கொஞ்சமானும் திப்பிசம் இருக்கணுமே! இங்கேயும் அந்தத் திப்பிசம் ஒண்ணு. ஹிஹிஹிஹி, என்னனு சொல்லவா?
ஒண்ணுமில்லை. இரண்டு நாளைக்கு முன்னர் பச்சை மிளகாய், கொத்தும்ல்லி, புளி, உப்பு, பெருங்காயம் வைச்சுப் பச்சைக்கொத்துமல்லிச் சட்னி தோசைக்குனூ அரைச்சேன். போணியே ஆகலை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அது அப்படியே இருந்ததா? இன்னிக்கு அரைச்ச புளி இஞ்சித் தொக்கிலே அதை அப்படியே சேர்த்துட்டேன். ஹிஹிஹி, கண்டுக்காதீங்க. கூடவே புதுசா வேணும்னு 2,3 பச்சை மிளகாயோடு, கொஞ்சம் பச்சைக் கொத்துமல்லியும் வைச்சேன் தான். என்றாலும் இந்தத் திப்பிசத்தையும் விடலை. கீழே படங்கள் போடறேன்.
கிண்ணத்தில் புளியும், மி.வத்தலும் நீர் விட்டு ஊற வைச்சிருக்கேன். நறுக்கிய இஞ்சித்துண்டங்கள். கூடவே புதுசா வைக்கக் கொத்துமல்லி, ப.மி. 3
திப்பிசத்துக்கு உதவிய கொ.மல்லிச் சட்னி. கடுகு தாளித்தது கூடத் தெரியுமே! கொஞ்சமாய் நீர் விட்டுக் கரைச்சு வைச்சேன்.
மிக்சி ஜாரில் மி.வத்தல், புளி, இஞ்சித்துண்டங்கள், கூடவே பச்சை மிளகாய், கொத்துமல்லி. முதலில் உப்பு, பெருங்காயம் சேர்த்து இதை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டேன்.
அரைச்சுக் கொண்டதில் அந்தத் திப்பிச வேலை செய்ய வேண்டிக் கொத்துமல்லிச் சட்னியையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொண்டேன்.
நன்கு நைசாக, வெழுமூண அரைச்ச விழுது.
காமாட்சி அம்மா பிளாக்கில் என் கமெண்ட்ஸ் எத்தனை முறை போட்டாலும் போகமாட்டேன் என்கிறது. ஸ்பாமில் இருக்கலாம். அம்மாவிடமும் சொன்னேன்.
ReplyDeleteஎனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உங்கள் செய்தியும் கிடைத்தது யாரைக் கேட்பது. அன்புடன்
Deleteஶ்ரீராம், எனக்கும் அப்படித்தான் இருந்தது. இன்னமும் ஏகாந்தனின் பதிவுகளில் என்னோட கருத்துரைகள் போவதில்லை. அநேகமாக வேர்ட் ப்ரஸ் பதிவுகளிலே தான் இந்தப் பிரச்னை. நான் இப்போவெல்லாம் முகநூல் மூலமாகப் போய்க் கருத்துச் சொல்கிறேன். அது மொபைலில் கூடப் போகிறது. ஆனால் நான் மொபைலில் தமிழ் நான் தரவிறக்கிக்கொள்ளாததால் ஆங்கிலத்தில் தான் கருத்துக் கொடுப்பேன்.
Deleteஅம்மா, இது தொழில்நுட்பப் பிரச்னை. நீங்க ஒண்ணும் செய்ய முடியாது. :)
Deleteலிங்க் தனியாக வேறு ஜன்னலில் திறக்குமாறு அமைத்திருக்கலாம். இந்த லிங்க் வழியாகவும் சென்று ஒரு டெஸ்ட் கமெண்ட் இட்டுப்பார்த்து வந்திருக்கிறேன்!
ReplyDeleteஎதுவும் வரவில்லை என்பதுதான் செய்தி நான் எழுதுகிறேன். அன்புடன்
Deleteம்ம்ம்ம், ஏற்கெனவே கருத்துப் பெட்டியை எடுத்ததே ஒரு பிரச்னை. பல கருத்துகள் உடனுக்குடன் மறைகின்றன. அதிலும் கோமதியின் பதிவுகளிலும், துரை செல்வராஜின் பதிவுகளிலும் கொடுக்கும் கருத்துக்கள் எங்கே போகின்றன என்பதே புரியலை.
Deleteபார்க்க புளிக்காய்ச்சல் போல, இஞ்சித்தொக்கு போல இருக்கிறது. இதுபோல செய்ததில்லை. எப்பவாவது ஒருமுறை முயற்சிக்கவேண்டும்!
ReplyDeleteஶ்ரீராம், இத்தனை புளி, இஞ்சி, மிவத்தல் வைச்சு அரைச்சு இஞ்சித் தொக்கு நிறையத் தரம் பண்ணி இருக்கேன். பச்சை மிளகாய், கொத்துமல்லி தான் இப்போப் புதுசாச் சேர்த்திருக்கேன். சுவை நன்றாகவே இருக்கு.
Deleteஎன்ன என்னவோ திப்பிசம் பண்ணிக்கிட்டே இருந்தால் எப்படி போணியாகும்? இருந்தாலும் நீங்கள் சொல்லியிருக்கும் புளி இஞ்சி (ஹா ஹா) நல்லாவே இருக்கும்
ReplyDeleteஹிஹிஹி, நெல்லை, இந்தத் திப்பிசம் மாமாவிடம் சொல்லலை இன்னமும்.
Deleteதிப்பிசமாக நீங்கள் நினைத்தாலும், படங்களும், ருசியும் நன்றாகவே வந்திருக்கிறது. சொல்லுவானேன். இதுவும் ஒரு முறை என்று நினைத்து விடலாம். ஆராய்ச்சி ராணிதான் நீங்கள். அன்புடன்
ReplyDeleteநன்றி அம்மா. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி. நமஸ்காரங்கள்.
Deleteமதிப்பிடும் நன்றாக வந்தால் சுவைதான் :)
ReplyDeleteநன்றி மாதேவி!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. படங்களுடன் இஞ்சி தொக்கு மிகவும் நன்றாக வந்துள்ளது.
"நிறக" இது அடிக்கடி நாம் அந்த காலத்தில் கடிதம் எழுதும் போதெல்லாம் இதை இந்த வார்த்தையை உபயோகப்படுத்துவோம். கூடவே உங்களைப்போல் அந்த வார்த்தைக்கு இப்படித்தான் ஆயிரம் கேலி விளக்கங்களும் தருவோம். உங்கள் பதிவை படிக்கையில் பழைய நினைவுகள் எனக்கும் வந்தது சகோதரி.
புளி இஞ்சி நன்றாக உள்ளது. ஆமாம்... சிகப்பு வத்தலுக்கு பதில் பச்சை மிளகாய் வதக்கி அரைத்து விட்டாலும் நன்றாக ருசியுடன் அமையும். கூடவே கொத்தமல்லி தழைகள். ருசிக்கு கேட்பானேன்.... கொத்தமல்லி யும், இஞ்சியும் எப்போதுமே பித்தத்திற்கு நல்லது. தங்கள் செய்முறையும் படங்களும் அருமை. இனியும் செய்ய வேண்டுமென்ற அவாவை தூண்டுகிறது. நானும் என் வலைப்பூ பக்கத்தில் இதுபோல் ஒன்று பகிர்ந்துள்ள நினைவும் வந்தது. .பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. சிவப்பு வத்தலுக்குப் பதில் பச்சை மிளகாய் வைக்கலை. இரண்டும் சேர்ந்தே வைச்சேன். அப்படித்தான் காமாட்சி அம்மாவும் வைச்சிருக்கார். மேலே ஒரு கிண்ணத்தில் புளியோடு சிவப்பு வத்தலும் ஊறப் போட்டிருந்த படம் இருக்கு பாருங்க. புளிமிளகாய் பச்சடியாகப் பண்ணினால் அதில் சின்னச் சின்னதாகப் பச்சை மிளகாய்தான் போடுவோம். எங்க வீட்டில் இதான் அதிகம் அம்மா பண்ணுவார். மிளகாயில் காரமே இருக்காது. பின்னாட்களில் இதோடு இஞ்சி சேர்த்துப் பண்ண ஆரம்பிச்சேன். அப்போது பச்சை மிளகாயைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் பகிர்வின் சுட்டி கொடுங்க கமலா. ஏதேனும் வித்தியாசமாக இருந்தால் தெரிஞ்சுக்கலாமே!
Deleteகாமாட்சி அம்மா கொறடா பற்றி எழுதி இருந்தார்கள்.
ReplyDeleteநீங்களும் நகைச்சுவையாக மிக அருமையாக சொல்லி விட்டீர்கள்.
இஞ்சி பச்சடி, புளி இஞ்சி செய்முறை படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
வாங்க கோமதி. பாராட்டுக்கு நன்றி. வாய்க்கு இதமாகச் சுவையை அதிகமாக்குகிறது. முக்கியமாய் அதான் தேவை எனக்கு.
Delete