பாதகம் செய்பவரைக் கண்டால்- நாம் பயம் கொள்ளலாகாது பாப்பா!
மோதி மிதித்து விடு பாப்பா! அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக்குத்தி
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால்- வையம்
பேதமையற்றிடும் பாரீர்!
ஓ.. நாளைக்கான பதிவு இன்றே வெளியாகி விட்டதா? வாழ்க பாரதி புகழ்..
ReplyDeleteஇந்த மடிக்கணினியில் அம்பேரிக்க நேரம் மாற்றாமல் இருப்பதால் என்னதான் சரி செய்தாலும் அந்த நேரத்துக்குத் தான் வெளியீடு செய்கிறது. நேத்திக்குத் திரும்பத் திரும்ப 11 ஆம் தேதிக்கு ஷெட்யூல் செய்தாலும் பிடிவாதமாக வெளியிட்டு விட்டது. சரினு விட்டுட்டேன்.
Deleteஇன்று பாரதி தினத்தில் அருமை...
ReplyDeleteThank You Killaerji
Deleteஉரிய நாளில் சிறப்பான பதிவு.
ReplyDeleteசோழ நாட்டில் பௌத்தம் என்ற என்னுடைய நூல் அச்சேற்றப்பணி காரணமாக சில மாதங்களாக வலைப்பூக்களின் பக்கங்கள் வர இயலா நிலை. பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அண்மையில் இந்நூல் வெளியாகியுள்ளது. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம்.
Thank You Munaivar Ayya!
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. பாடல் அருமை. பாரதியின் பிறந்தநாளை போற்றியதற்கு நன்றி. அவரின் நினைவுகளை நாம் என்றும் மறவாதிருக்க வேண்டும். நல்லதோர் பகிர்வுக்கு நன்றி சகோதரி.
தங்கள் மகன் குடும்பம் இந்தியா வந்துள்ளனரா? தங்கள் பேத்தியுடன் மகிழ்ச்சியாக நாட்களை கழிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள். அனைவரையும் கேட்டதாகக் கூறுங்கள். நன்றி.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
ReplyDeleteசிறப்பான பதிவு..
//பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்..//
மகாகவியின் புகழ் வாழ்க...
பாரதியின் தினத்தில் போற்றும் பகிர்வு.
ReplyDeleteஅக்கா குடும்பத்தினர் அனைவருக்கும்
ReplyDeleteஅன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..
பாரதி பாடல் பகிர்வு அருமை.
ReplyDeleteபேத்தி துர்கா எப்படி இருக்கிறார்?
பாட்டியும் நலம்தானே!