https://kdp.amazon.com/en_US/bookshelf?ref_=kdp_kdp_TAC_TN_bs
தற்சமயம் மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் கின்டிலில் வெளியான என்னுடைய புத்தகங்களின் பட்டியலைப் பார்க்கலாம். அதிலே "என்ன கல்யாணமடி கல்யாணம்" 2011 ஆம் ஆண்டில் நான் தொடராக எழுதி வந்தவை. அவற்றில் கடைசியில் சப்தபதிக்குப் பின்னர் மற்ற வைதிகக் காரியங்களைப் பற்றி விரிவாக எழுதணும்னு நினைச்சு எழுத முடியலை. இப்போது இதிலேயும் விரிவாக எழுத நினைத்தும் ஓரளவு தான் எழுதினேன். எடிட்டிங் செய்யக் கஷ்டமாக வேறே இருந்ததால் ரொம்ப விரிவாக எழுதாமல் முக்கியமானவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதினேன். வெங்கட் ஸ்ரீரங்கம் வரப் போறார்னு தெரிஞ்சது. தொந்திரவு பண்ணணுமேனு நினைச்சேன். ஆனால் வேறே வழி இல்லை. அனுப்பி வைச்சேன். அவரும் ஒரு முறை எடிட் செய்துவிட்டுப் பின்னர் வெளியீடு செய்தார். ஜனவரி 25 ஆம் தேதி புத்தகம் வெளியானது பற்றி எனக்கு வாட்சப் மூலம் செய்தி அனுப்பி இருந்தார். ஆனால் என்னால் உடனே பார்க்க முடியலை. நேற்றுத் தான் பார்க்க நேரம் கிடைத்தது. ஆனாலும் வெங்கட் அனுப்பிய சுட்டிகளை எங்கள் குடும்பக் குழுவிலும், எங்கள் ப்ளாக் குழுவிலும் எங்க பில்டிங் அசோசியேஷன் குழுவிலும் போட்டேன். யாருமே கவனிக்கலை. எ.பியில் எப்போதும் போல் ரஹ்மான் மட்டும் வாழ்த்தி இருந்தார். இங்கேயும் ஒரு தரம் போட்டுடலாம்னு நினைச்சேன். அப்போத் தான் தோணியது எல்லாப் புத்தகங்களுக்குமே ஒரு விளம்பரம் கொடுத்துடலாமேனு. மேலே கண்டிருக்கும் ஐந்து புத்தகங்களையும் வாங்கிப் படிப்போர் வாங்கிப் படிக்கலாம். கின்டில் அன்லிமிடெட் மூலம் படிப்பவர் படிக்கலாம். உங்கள் விமரிசனங்களை எனக்கு எழுதி அனுப்பவும்.
இன்றைய பரிக்ஷை முடிவு வெளிவந்து விட்டது. நல்ல மார்க் எடுத்துப் பாஸாகி விட்டேன். :))))) இனி அடுத்து என்ன என்பது தெரியணும். பார்க்கலாம். ஈசிஜி கூட வீட்டுக்கே வந்து எடுத்துட்டுப் போனாங்க. உண்மையில் ரிசல்ட் பார்த்து எனக்குமே ஆச்சரியம். முக்கியமாச் சர்க்கரை அளவு!!!!!!!!!!!!!!!!!!!
முந்தாநாள் பைத்தியம் மாதிரி ஒரு ப்ரின்ட் அவுட் எடுக்கையில் இந்த வையர்லெஸ் கீபோர்ட் நினைவே இல்லாமல் பழைய கீ போர்ட் மூலமாகத் தட்டச்சி அது வரவே வராமல் கடைசியில் மைக்ரோ சாஃப்ட் என்னை உள்ளேயே அனுமதிக்காமல் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின்னர் கோட் எல்லாம் வாங்கி எல்லா செட்டப்பையும் மாத்தி, பாஸ்வேர்டை மட்டும் ஒரு பத்துத்தரம் மாத்தி! அது என்னமோ பாஸ்வேர்ட் டைப் பண்ணினால் கீபோர்டில் உள்ள குறி தட்டச்ச ஆரம்பித்த இடத்துக்கே போய் விடுகிறது. அதை மாற்றிப் பாஸ்வேர்டுக்காக எண்கள் எழுத்துக்களைச் சேர்த்தால் சேரவே இல்லை. கடைசியில் ஒருவழியாக வெறும் எண்களை மட்டுமே கொடுத்தேன். அது ஓகே ஆனது. சுத்தப் பைத்தியக்காரத்தனமான வேலையில் ஒரு நாள் மத்தியானம் தண்டமாகக் கழிந்தது தான் மிச்சம். :(