https://kdp.amazon.com/en_US/bookshelf?ref_=kdp_kdp_TAC_TN_bs
தற்சமயம் மேலே கொடுத்திருக்கும் சுட்டியில் கின்டிலில் வெளியான என்னுடைய புத்தகங்களின் பட்டியலைப் பார்க்கலாம். அதிலே "என்ன கல்யாணமடி கல்யாணம்" 2011 ஆம் ஆண்டில் நான் தொடராக எழுதி வந்தவை. அவற்றில் கடைசியில் சப்தபதிக்குப் பின்னர் மற்ற வைதிகக் காரியங்களைப் பற்றி விரிவாக எழுதணும்னு நினைச்சு எழுத முடியலை. இப்போது இதிலேயும் விரிவாக எழுத நினைத்தும் ஓரளவு தான் எழுதினேன். எடிட்டிங் செய்யக் கஷ்டமாக வேறே இருந்ததால் ரொம்ப விரிவாக எழுதாமல் முக்கியமானவற்றை மட்டும் குறிப்பிட்டு எழுதினேன். வெங்கட் ஸ்ரீரங்கம் வரப் போறார்னு தெரிஞ்சது. தொந்திரவு பண்ணணுமேனு நினைச்சேன். ஆனால் வேறே வழி இல்லை. அனுப்பி வைச்சேன். அவரும் ஒரு முறை எடிட் செய்துவிட்டுப் பின்னர் வெளியீடு செய்தார். ஜனவரி 25 ஆம் தேதி புத்தகம் வெளியானது பற்றி எனக்கு வாட்சப் மூலம் செய்தி அனுப்பி இருந்தார். ஆனால் என்னால் உடனே பார்க்க முடியலை. நேற்றுத் தான் பார்க்க நேரம் கிடைத்தது. ஆனாலும் வெங்கட் அனுப்பிய சுட்டிகளை எங்கள் குடும்பக் குழுவிலும், எங்கள் ப்ளாக் குழுவிலும் எங்க பில்டிங் அசோசியேஷன் குழுவிலும் போட்டேன். யாருமே கவனிக்கலை. எ.பியில் எப்போதும் போல் ரஹ்மான் மட்டும் வாழ்த்தி இருந்தார். இங்கேயும் ஒரு தரம் போட்டுடலாம்னு நினைச்சேன். அப்போத் தான் தோணியது எல்லாப் புத்தகங்களுக்குமே ஒரு விளம்பரம் கொடுத்துடலாமேனு. மேலே கண்டிருக்கும் ஐந்து புத்தகங்களையும் வாங்கிப் படிப்போர் வாங்கிப் படிக்கலாம். கின்டில் அன்லிமிடெட் மூலம் படிப்பவர் படிக்கலாம். உங்கள் விமரிசனங்களை எனக்கு எழுதி அனுப்பவும்.
இன்றைய பரிக்ஷை முடிவு வெளிவந்து விட்டது. நல்ல மார்க் எடுத்துப் பாஸாகி விட்டேன். :))))) இனி அடுத்து என்ன என்பது தெரியணும். பார்க்கலாம். ஈசிஜி கூட வீட்டுக்கே வந்து எடுத்துட்டுப் போனாங்க. உண்மையில் ரிசல்ட் பார்த்து எனக்குமே ஆச்சரியம். முக்கியமாச் சர்க்கரை அளவு!!!!!!!!!!!!!!!!!!!
முந்தாநாள் பைத்தியம் மாதிரி ஒரு ப்ரின்ட் அவுட் எடுக்கையில் இந்த வையர்லெஸ் கீபோர்ட் நினைவே இல்லாமல் பழைய கீ போர்ட் மூலமாகத் தட்டச்சி அது வரவே வராமல் கடைசியில் மைக்ரோ சாஃப்ட் என்னை உள்ளேயே அனுமதிக்காமல் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பின்னர் கோட் எல்லாம் வாங்கி எல்லா செட்டப்பையும் மாத்தி, பாஸ்வேர்டை மட்டும் ஒரு பத்துத்தரம் மாத்தி! அது என்னமோ பாஸ்வேர்ட் டைப் பண்ணினால் கீபோர்டில் உள்ள குறி தட்டச்ச ஆரம்பித்த இடத்துக்கே போய் விடுகிறது. அதை மாற்றிப் பாஸ்வேர்டுக்காக எண்கள் எழுத்துக்களைச் சேர்த்தால் சேரவே இல்லை. கடைசியில் ஒருவழியாக வெறும் எண்களை மட்டுமே கொடுத்தேன். அது ஓகே ஆனது. சுத்தப் பைத்தியக்காரத்தனமான வேலையில் ஒரு நாள் மத்தியானம் தண்டமாகக் கழிந்தது தான் மிச்சம். :(
வாழ்த்துகள்...
ReplyDeleteமுதலில் வந்து வாழ்த்துத் தெரிவித்தமைக்கு நன்றி திரு தனபாலன் அவர்களே!
Deleteபுத்தக. வெளியீடு மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி மாதேவி.
Deleteகிண்டிலில் உங்களுடைய புத்தகத்துக்கு எங்கள் வாழ்த்துகள். க்ரூப்பில் சரியாய் கவனிக்கவில்லை. மன்னிக்கவும். கிண்டில் புத்தகங்கள் எதுவும் என்னால் வாசிக்க முடியாது. நான் அங்கு மெம்பர் இல்லை. ஆப் டவுன்லோட் செய்யவில்லை. இன்னும் எத்தனை நாள் இதைச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறாய் என்று கேட்கக்கூடாது! காசிக்குப் போகும் சம்சாரியே நான் அங்கு பார்த்ததில்லை!
ReplyDeleteநாம் உறுப்பினராக இருந்தும் வேறே ஏதோ தொழில்நுப்டக் கோளாறினால் என்னாலும் கிண்டில் புத்தகங்கள் தரவிறக்கவோ, படிக்கவோ முடியாது. நீங்கள் இலவசமாய்க் கொடுத்திருந்தால் கூட! :( வெங்கட்டும் எங்க வீட்டுக்கு வந்திருந்தப்போ அதைச் சரி செய்ய முயன்றார். சரியாகலை. வேறே ஏதோ ஆப்ஷன் வேண்டும் என்கிறது.
Deleteகுழுமத்தில் ரஹ்மானைத் தவிர்த்த யாருமே பார்க்கலை. போனால் போகட்டும். பிரபலங்கள் என்றால் உடனே கவனிப்பாங்க இல்லையா? அதான் என்னை நானே சமாதானம் பண்ணிக் கொண்டேன்.
Deleteசோதனைகளில் பாஸ் மார்க் வாங்கியது சந்தோசம். அடுத்தடுத்த கட்ட 'முக்கிய தேர்வுகளிலும்' வெற்றி பெற வாழ்த்துகள்/
ReplyDeleteஇன்னிக்கு ஸ்கான் செய்யப் போயிருக்கணும். போக முடியலை. சீதோஷ்ணம் சரியில்லை என்பதால் வெளியே போக யோசனை. :( புதன்கிழமை போகணும். ஃபெப்ரவரி எட்டாம் தேதி அறுவை சிகிச்சைக்குக் கேட்டிருக்கோம். புதன்கிழமை தெரியும்.
Deleteமூன்றாவது பாராவில் நீங்கள் சொல்லியுள்ள சிரமம் எனக்குச அறியாய் புரியவில்லை! எனினும் சரியாக பிள்ளையாரை வேண்டுகிறேன்!
ReplyDeleteலாப்டாப்பில் கீ போர்ட் ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தது. புதியது மாத்தும்போது கணினி மருத்துவரிடம் வயர்லெஸ் கீபோர்டாக இருக்கட்டும்னு சொன்னேன். ஆகவே பழைய கீ போர்டை இந்த லாப்டாப்பில் இருந்து கழட்டி விட்டாச்சு. அது நினைவில்லாமல் பையருக்காக ஏதோ ப்ரின்ட் அவுட் எடுக்கும்போது வயர்லெஸ் கீ போர்டை விட்டுட்டுப் பழசிலேயே தட்டச்ச முயன்று எல்லாம் வீணாகிப் போய்ப் பின்னர் மைக்ரோ சாஃப்ட் என்னைக் கணினியைத் திறக்கவே அனுமதிக்காமல்! :( அதன் பின்னர் அந்த அக்கவுன்ட் மூலமாய் கோட் நம்பர் புதுசா வாங்கி 2,3 முறை பாஸ்வேர்ட் மாத்திப் பின்னர் மூன்றாம் முறை பாஸ்வேர்ட் செயல்பட ஆரம்பிச்சதும் கணினியைத் திறக்க முடிஞ்சது! அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடா!!!!!!!!
Deleteபுத்தக வெளியீடு மகிழ்ச்சி!..
ReplyDeleteநல்வாழ்த்துகள் அக்கா...
நன்றி தம்பி
Deleteபுத்தக வெளியீடுகளுக்கு வாழ்த்துகள்.மேலும் புக்கங்கள் வரட்டும்.
ReplyDeleteஉடல்நிலை நன்றாக இருப்பது மகிழ்ச்சி. நல்லதே நடக்கும் இறை அருளால்.
பயணக்கட்டுரைகள் எடிடிங் வேலை செய்து கொண்டிருக்கேன். அடுத்து அதை வெளியிட வேண்டும். பயணக்கட்டுரைகளுக்கு வாசகர்கள் கொஞ்சம் அதிகமாய் இருக்கின்றனர். :)))))
Deleteஉங்களின் சிதம்பர ரகசியம் புத்தகம் அமேசான் கிண்டிலில் உள்ளதா/கிடைக்குமா ?
ReplyDeletehttps://freetamilebooks.com/ebooks/chidambara-ragisiyam/ Sri, You can get it totally free from this site. Enjoy!
Deleteமின்நூலுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவையே காணோமே என்று தேடி வந்தேன் மின்நூல் பதிவு. கண்டேன் மீண்டும் வாழ்த்துகள்.
எபியிலும் வரவில்லையே காரணம் என்ன ?