நவராத்திரிப் பத்து நாட்களூம் பதிவு போட முடியலை. முக்கியமாய் இந்தக் கணீனி ஒரு காரணம். எழுதுவது சிரமமாக ஆகி விட்டது. காப்பி, பேஸ்ட் பண்ணீப் பழைய பதிவுகள் போடலாம் எனில் அதுவும் சிரமமாக இருந்தது. ஆகவே சும்மாவே இருந்துட்டேன். இப்போ நேத்திக்கு சரஸ்வதி பூஜைப் படங்கள் குஞ்சுலுவுக்காக எடுத்தது போட்டிருக்கேன். இதிலே தீபாராதனைப் படங்கள் எல்லாம் வரலை. பார்க்கணூம் பார்த்துக் கிடைச்சதும் அதைச் சேர்க்கிறேன். இப்போதைக்குப் பூஜை நடக்கும் படங்கள் மட்டும். நிவேதனம் சாதம், பருப்பு, பாயசம், வடை, அதிரசம் மட்டும். கொண்டைக்கடலைச் சுண்டல் சாயந்திரம் பண்ணீனேன். நேத்திக்குக் கொஞ்சம் பேர் வரவும் வந்தனர். ஒரு வழியாய் நவராத்திரி முடிஞ்சாச்சு.
எச்சரிக்கை
Have a great day.
Tuesday, October 24, 2023
Sunday, October 08, 2023
மதுரைக்கு வந்த சோதனை!
பதிவு எழுதணும்னு தான் ஆசை. ஆனால் நேரம் என்னமோ இறக்கை கட்டிப் பறக்கிறது. அடுத்தடுத்து உறவினர் வருகை, வீட்டு வேலைகள்னு கணினி பக்கமே வர முடியலை. முன்னெல்லாம் காலை ஒரு மணி நேரமாவது கரெக்டா உட்கார்ந்துடுவேன். இப்போல்லாம் முடியலை. அதிலும் வீட்டு வேலை செய்யும் பெண் வருவாளா/மாட்டாளா என பூவா/தலையா போட்டுப்பார்த்துட்டு வேலை செய்ய வேண்டி இருக்கே. அதோட இப்போல்லாம் வேகமா வேலை செய்ய முடியறதில்லை. சுணக்கம். பிள்ளையாருக்கு முன்னாடி நடந்த கிருஷ்ண ஜயந்திப் படங்களையே இன்னமும் போட முடியலை. அதோடு இந்தக் கணினி பிரச்னை வேறே. பழைய டெல் கணினியில் இ கலப்பையினால் எழுதினால் எழுத்துப் பிழைகள் நிறையவே வருகின்றன. சுரதா மூலம் தட்டச்சிப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போ சுரதா வேலையே செய்வதில்லை.
இந்தப் புதுக்கணினியில் வேலை செய்தாலும் இதில் வேறே சில பிரச்னைகள். இதில் அடிக்கடி உட்கார்ந்து வேலை செய்ய முடியலை. நடுவில் பிரின்டர் வேறே வேலை செய்யாமல் படுத்தல். இதுக்கு நடுவிலே செய்ய வேண்டிய ஆன்லைன் ட்ரான்சாக்ஷன் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம்னு எல்லாமும் செய்வதால் அதுக்கெல்லாம் உட்கார்ந்தால் ஒரு அரை மணியாவது ஒவ்வொண்ணுக்கும் ஆகிடும். அதுக்கப்புறமாப் பதிவுகள் பக்கம் வரவோ, ஏதேனும் எழுதவோ தோன்றுவதில்லை.
வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருப்பதால் கோயில்கள் பற்றியோ சென்ற இடங்கள் பற்றியோ எழுத முடியலை. வேறே சில விஷயங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எழுத யோசனை. இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இதுக்கு நடுவிலே எஸ் எம் எஸ் கொடுத்து மிரட்டும் சைபர் திருடர்கள்! என்னத்தைச் சொல்ல! எத்தனை கவனமாக இருந்தாலும் வந்து மிரட்டுகிறார்கள். நேத்திக்கு அக்கவுன்டே ப்ளாக் ஆகிடுத்துனு தகவல். போனாப் போகட்டும்னு அந்த எஸ் எம் எஸ்ஸை டெலீட் செய்துட்டேன். :)))))) அடுத்து உங்க வீட்டில் மின்சாரம் கட் ஆகும்னு செய்தி வரும். இதுக்கு நடுவில் தொ(ல்)லை பேசித் தொந்திரவு கொடுக்கும் நண்பர்கள். பெல் அடிக்குதேனு ஃபோனை எடுக்கப் போனால் கிட்டப் போகிறவரை அடிச்சுட்டுக் கிட்டப் போனதும் நின்னுடும். :P
எடுத்துக் கேட்டாலோ ஷேர் மார்க்கெட், சீட்டுக் கட்டுவது, ஃபைனான்ஸ் தரேன், வாங்கிக்கோனு ஏகப்பட்ட ஆஃபர்கள். இதுக்கு நடுவிலே ஷாப்பிங் வேறே தொ(ல்)லைபேசி மூலம்! அப்பாடா! எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டி இருக்கு. இந்தக் கணினிப் பயன்பாடு வந்தாலும் வந்தது எல்லோரும் ரொம்பவே கெட்டிக்காரங்களாவும் புத்திசாலிகளாவும் எப்படி எல்லாம் திருடலாம்னு பத்துப் பேருக்கு யோசனை சொல்லக் கூடியவங்களாவும் ஆயிட்டாங்க. எல்லாம் தலைவர்களால் தான். அவங்க வழியிலேயே மக்களும் ரொம்பக் கெட்டிக்காரங்களா ஆயிட்டாங்க போல! ஒவ்வொருத்தரின் சொத்துக்கள் பற்றியும் கேட்டால் ஆகா! தமிழகம் இவ்வளவு பணம் படைத்த மாநிலமாகவா இருந்திருக்கு என ஆச்சரியப்பட வேண்டி இருக்கு.
இப்போ என்னோட தலையாய கவலையே இன்னும் வீட்டு வேலை செய்யும் பெண் வரலை! வருவாங்களா? மாட்டாங்களா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!