எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 08, 2023

மதுரைக்கு வந்த சோதனை!

 பதிவு எழுதணும்னு தான் ஆசை. ஆனால் நேரம் என்னமோ இறக்கை கட்டிப் பறக்கிறது. அடுத்தடுத்து உறவினர் வருகை, வீட்டு வேலைகள்னு கணினி பக்கமே வர முடியலை. முன்னெல்லாம் காலை ஒரு மணி நேரமாவது கரெக்டா உட்கார்ந்துடுவேன். இப்போல்லாம் முடியலை. அதிலும் வீட்டு வேலை செய்யும் பெண் வருவாளா/மாட்டாளா என பூவா/தலையா போட்டுப்பார்த்துட்டு வேலை செய்ய வேண்டி இருக்கே. அதோட இப்போல்லாம் வேகமா வேலை செய்ய முடியறதில்லை. சுணக்கம். பிள்ளையாருக்கு முன்னாடி நடந்த கிருஷ்ண ஜயந்திப் படங்களையே இன்னமும் போட முடியலை. அதோடு இந்தக் கணினி பிரச்னை வேறே. பழைய டெல் கணினியில் இ கலப்பையினால் எழுதினால் எழுத்துப் பிழைகள் நிறையவே வருகின்றன. சுரதா மூலம் தட்டச்சிப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போ சுரதா வேலையே செய்வதில்லை.

இந்தப் புதுக்கணினியில் வேலை செய்தாலும் இதில் வேறே சில பிரச்னைகள். இதில் அடிக்கடி உட்கார்ந்து வேலை செய்ய முடியலை. நடுவில் பிரின்டர் வேறே வேலை செய்யாமல் படுத்தல். இதுக்கு நடுவிலே செய்ய வேண்டிய ஆன்லைன் ட்ரான்சாக்ஷன் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம்னு எல்லாமும் செய்வதால் அதுக்கெல்லாம் உட்கார்ந்தால் ஒரு அரை மணியாவது ஒவ்வொண்ணுக்கும் ஆகிடும். அதுக்கப்புறமாப் பதிவுகள் பக்கம் வரவோ, ஏதேனும் எழுதவோ தோன்றுவதில்லை. 

வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருப்பதால் கோயில்கள் பற்றியோ சென்ற இடங்கள் பற்றியோ எழுத முடியலை. வேறே சில விஷயங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எழுத யோசனை. இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இதுக்கு நடுவிலே எஸ் எம் எஸ் கொடுத்து மிரட்டும் சைபர் திருடர்கள்! என்னத்தைச் சொல்ல! எத்தனை கவனமாக இருந்தாலும் வந்து மிரட்டுகிறார்கள். நேத்திக்கு அக்கவுன்டே ப்ளாக் ஆகிடுத்துனு தகவல். போனாப் போகட்டும்னு அந்த எஸ் எம் எஸ்ஸை டெலீட் செய்துட்டேன். :)))))) அடுத்து உங்க வீட்டில் மின்சாரம் கட் ஆகும்னு செய்தி வரும். இதுக்கு நடுவில் தொ(ல்)லை பேசித் தொந்திரவு கொடுக்கும் நண்பர்கள். பெல் அடிக்குதேனு ஃபோனை எடுக்கப் போனால் கிட்டப் போகிறவரை அடிச்சுட்டுக் கிட்டப் போனதும் நின்னுடும். :P

எடுத்துக் கேட்டாலோ ஷேர் மார்க்கெட், சீட்டுக் கட்டுவது, ஃபைனான்ஸ் தரேன், வாங்கிக்கோனு ஏகப்பட்ட ஆஃபர்கள். இதுக்கு நடுவிலே ஷாப்பிங் வேறே தொ(ல்)லைபேசி மூலம்! அப்பாடா! எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டி இருக்கு. இந்தக் கணினிப் பயன்பாடு வந்தாலும் வந்தது எல்லோரும் ரொம்பவே கெட்டிக்காரங்களாவும் புத்திசாலிகளாவும் எப்படி எல்லாம் திருடலாம்னு பத்துப் பேருக்கு யோசனை சொல்லக் கூடியவங்களாவும் ஆயிட்டாங்க. எல்லாம்     தலைவர்களால் தான். அவங்க வழியிலேயே மக்களும் ரொம்பக் கெட்டிக்காரங்களா ஆயிட்டாங்க போல!  ஒவ்வொருத்தரின் சொத்துக்கள் பற்றியும் கேட்டால் ஆகா! தமிழகம் இவ்வளவு பணம் படைத்த மாநிலமாகவா இருந்திருக்கு என ஆச்சரியப்பட வேண்டி இருக்கு.

இப்போ என்னோட தலையாய கவலையே இன்னும் வீட்டு வேலை செய்யும் பெண் வரலை! வருவாங்களா? மாட்டாங்களா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!

26 comments:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. உங்கள், வேலைகளுககிடையே நேரம் ஒதுக்கி முன்பெல்லாம் அடிக்கடி பதிவுகள் போடுவீர்கள் . நானும் நிறைய படித்திருக்கிறேன். சமீப காலமாக ஏதோ முடக்கம். இது உங்களுக்கு மட்டுமில்லாமல் எனக்கும் தொடர்கிறது. நீங்கள் பல விபரங்கள் (சமையல் அரசியல், நாட்டின் தறபோதைய நிலை, புராணங்கள், தெய்வம் சார்ந்த விஷயங்கள் என பல பல..) அறிந்தவர் தெரிந்தவர். நான் எதோ அசட்டுத்தனமான கதை, கட்டுரை என யோசித்து எழுதி கொண்டிருந்தேன். இப்போது அதுவும் போச்சு...! நேரமே காண மாட்டேன் என்கிறது. நேரந்தான் வேகமாக பறக்கிறதா ...!! இல்லை நீங்கள் சொல்வது போல் தினமும் செய்யும் வேலைகளின் தாமதந்தான் காரணமாகிறதா எனவும் தெரியவிலலை.

    உங்களுக்கு வரும் தொல்லை அழைப்புகள், கணினி பிரச்சனைகள் எல்லாம் சரியாகி விட உங்களைப் போல் நானும் ஆசைப்படுகிறேன். நீங்களும் கணினி பிரச்சனைகளின் தீர்வை கண்டு சரி செய்யும் திறமை பெற்றவராகையால் விரைவில் எல்லாம் நலமாகும்.

    நீங்களும் எப்படியாவது கிருஷ்ண ஜெயந்தி பதிவை தொடர்ந்து எழுதுங்கள். படிக்க, தரிசிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

    தலைப்பை பார்த்தவுடன் திருவிளையாடல் படம் நினைவுக்கு வந்தது. இப்போது சொக்கநாதர் அருளால், சோதனைகள் விலகி விட்டதா? அறிய ஆவலுடன் உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாளைக்கு 2,3 பதிவுகள் போட்டதெல்லாம் உண்டு. நான் இல்லைனால் நண்பர்களை விட்டுப் போடச் சொன்னதும் உண்டு. பின்னால் நானே ஷெட்யூல் செய்து வைத்துப் போட்டதும் உண்டு. இப்போல்லாம் கணினியை வைத்துக் கொண்டு உட்காருவதே குறைந்து விட்டது. :( ஸ்ரீ கிருஷ்ண ஜயந்திக்குப் பதிவெல்லாம் போடலை. படங்கள் தான். அதை அப்லோட் செய்யவே இல்லை. அப்லோட் செய்துட்டுப் பதிவாகப் போடணும். கு.கு.வுக்காக எடுத்து உடனே அனுப்பினேன். அதுவும் பார்த்துட்டு வாய்ஸ் மெசேஜ் கொடுத்தது.

      Delete
  2. வணக்கம் உங்களுக்கு பதிவு எழுத வெளியேவோ, கோயிலுக்கோ போக வேண்டியதில்லை..

    மேலிருந்து மொட்டை மாடிக்கு போய் வந்தாலே புகைப்படங்களோடு பதிவு தயாராகி விடுமே...

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேறே கில்லர்ஜி. மொட்டை மாடிக்குப் போயே 4 வருஷங்கள் ஆகின்றன.

      Delete
    2. இல்லாவிட்டால் இராமர் பட்டாபிஷேகம் படம் அழகாக வந்தால் (ஒருவேளை) புது பதிவும் வரலாம்.

      Delete
    3. நெல்லை, இதுக்காகவே ஒரு தரம் நீங்க எங்க வீட்டுக்கு வந்து ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை நன்றாக எடுத்து அனுப்பும்படி கேட்டுக்கிறேன்.

      Delete
  3. இன்னும் உங்கள் தட்டச்சும் பிரச்னையே தீரவில்லையா?  என்னடா இது ஸ்ரீரங்கத்துக்கு வந்த சோதனை!

    ReplyDelete
    Replies
    1. புது மடிக்கணினியில் சுரதா வேலை செய்யுதுனு சொன்னேனே. இதெல்லாம் அதன் மூலம் எழுதுபவை தான். டெல் மடிக்கணினியில் சுரதா வேலை செய்யவே இல்லை. ஆனால் அது ஐந்தாறு வருஷம் பழகிட்டதாலே யூசர் ஃப்ரன்ட்லி.

      Delete
    2. என்னத்தைச் சொல்ல! நேத்திலேருந்து பழைய டெல் மடிக்கணினியில் சுரதாவும் வேலை செய்யலை. கீபோர்டும் கம்முனு இருக்கு. கீ போர்ட் கணினியிலே உள்ளதை டிஸ் கனெக்ட் பண்ணிட்டு வயர்லெஸ் கீபோர்ட் வைச்சுண்டு இருக்கேன். அதான் இப்போ வேலை செய்யலை. நேத்திக்கு அரைமணி பார்த்துட்டுத் தூக்கி வைச்சுட்டேன். நல்லவேளையா இன்னொரு கணினி இருக்கு. அதிலே எழுதவும் முடியும் என்பதில் கொஞ்சம் ஆறுதல். :(

      Delete
  4. எங்கும் திருடர்கள், எதிலும் திருடர்கள்.  சைபர் க்ரைம்தான் புதுசா என்ன!  புதுப்புது விதமாக முயற்சிக்கிறார்கள்.  

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நேத்திக்கு மத்தியானம் கூட தொந்திரவு தான். என்ன செய்ய முடியும்! நான் அழைப்பையே கட் பண்ணிட்டு உடனே ப்ளாக் பண்ணிடுவேன்.

      Delete
  5. கட்டு கட்டாய் பணம் எல்லாம் எடுக்கிறார்கள்தான்.  ஆனால் அப்புறம் நடவடிக்கைகைதான் எடுக்க மாட்டேன் என்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், அவங்க அதிர்ஷ்டம் அப்படி. நல்ல கவனிப்பும் கூடவே இருக்கும். இதுவே சாதாரண மனிதன் எனில்! :(

      Delete
    2. நடவடிக்கையை பத்திரிகைகளுக்குச் செய்தியாக அனுப்புவதில்லை, அல்லது அவை வெளியிடப்படவில்லை. ஜிஸ்கொயரும் 500 கோடி, வரி ஏய்த்த வகையில் டாக்ஸ் கட்டியதாம் (500 கோடி). ஆனால் பத்திரிகைகளில் வெளிவரவில்லை.

      Delete
  6. வீட்டு வேலை செய்யும் பெண் ஏன் இபப்டி உங்களை சஸ்பென்ஸில் வைக்கிறார்?  என்ன பிரச்னையாம் அவருக்கு?

    ReplyDelete
    Replies
    1. வழக்கமாய் வந்து கொண்டிருந்த பெண்ணுக்குத் திடீரென எக்கச்சக்கமாய் உடம்பு மோசமாகி விட்டது. சிகிச்சையில் இருக்கார். அந்தப் பெண் அவங்க அக்காவிடம் சொல்லி எங்க வீட்டுக்கு மட்டும் தான் உடல் நலமாகி வரும்வரை வேலை செய்யச் சொல்லிக் கேட்டிருக்கார். அவங்க அக்கா சமையல் வேலையில் பிசி. காலையில் 3 வீடு சமையல். மாலை 2 வீடு சமையல். நடுவில் தன்னோட வீட்டு வேலைகள். எல்லாத்தையும் கவனிச்சுட்டு எங்க வீட்டுக்கு ஒதுக்கின நேரத்துக்கு வருவது ரொம்ப சிரமமாக இருக்கு. ஏதோ ஓட்டுகிறார். மாமாவுக்குக் கோபம் வருது. நிறுத்து என்கிறார். நான் தான் நமக்காகக் கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு வருவதால் நிறுத்த மாட்டேன் என்கிறேன்.

      Delete
  7. என்னென்ன் புதுப் புதுக் கவலைகள் கீதா சாம்பசிவம் மேடத்துக்கு.

    ஒருவேளை எப்போதும் கவலைகளோடே இருக்கணும் என்கிற மாதிரி கிரக நிலையா?

    ReplyDelete
    Replies
    1. இந்த ராகு, கேது பெயர்ச்சி விருச்சிக ராசிக்கு நல்லதாமே. முகநூலில் தம்பி பாலாஜி போட்டிருந்தார். அவர், நான்,இன்னும் 2 விருச்சிக ராசி எல்லாம் ஒரே ரகம். :))))) ஓடி ஓடிச் செய்துட்டு வாங்கிக் கட்டிப்போம். :)

      Delete
  8. எங்க வீட்டிற்கு வரும் உதவியாளரும் அவ்வப்போது நேரம் கழித்து வருவார், டவரில் பல ஃப்ளாட்டுகளுக்கும் செல்வதால், இந்த நேரத்தில் வருவார் என்று சொல்வது கடினம். இருந்தாலும் நல்லவங்க என்பதால் அவரையே நாங்கள் தொடர்ந்து உதவி செய்யச் சொல்லி வைத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நானும் அதானே சொல்றேன். இப்போ 2 நாட்களாக மாமா அந்த நேரம் பார்த்து வெளியே போயிடறார். :( என்ன செய்ய முடியும்?

      Delete
  9. கீதாக்கா, ஏன் இப்படி மதுரைக்கு சோதனைகளோ! அது சரி கணினி ஏன் இப்படிப் படுத்துகிறது?

    ஆ இந்தக் கேள்விய நான் கேட்கக் கூடாது நம்ம வீட்டு நான் பயன்படுத்திக் கொண்டிருந்த கணினி போச்...அதை சரிபார்க்க வேண்டும். எப்ப அதுக்கு முகூர்த்தமோ தெரியலை. இப்ப ஒரு கணினில கணவர் நான் என்று மாற்றி மாற்றி போகிறது.

    எனக்கும் பதிவுகள் இருக்கு நிறைய ஆனா எழுததான் நேரம் இல்லை....மனமும் ஒத்துழைக்க மறுக்கிறது.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. என்னோட ஆரம்பகாலப் பதிவுகளைப் படிச்சுப் பாருங்க. இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நேத்திலேருந்து பழைய கணினியோட கீ போர்ட் வேலை செய்யலை. ஏதோ ஓடுது. நான் எதையும் பெரிசாப் பாராட்டுவதில்லை.

      Delete
  10. இந்த திருடர்கள் சைபர் க்ரைம்கள் பத்தி சொல்லவே வேண்டாம். எனக்கும் இப்படி தெரியாத எண்களில் இருந்து கால்கள் வரும் நான் எடுப்பதில்லை. எஸ் எம் எஸ் வரும்...அழித்துவிடுகிறேன். இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஆ ண்ஹான் இதை வெளியில் சொல்லிடக் கூடாது. உடனே கொத்தாக வந்துடும் ஃபோனுக்கு!!!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் ஒண்ணும் குறையவும் இல்லை. கூடவும் இல்லை. வந்துண்டு தான் இருக்கு. :(

      Delete
  11. சோதனைகளை கடந்து சாதனை படைப்பீர்கள் நீங்கள்.
    முன்பு எழுதிய காலங்களை நினைத்து கொண்டு
    உற்சாகத்தை வரவழைத்து கொள்ளுங்கள்.பதிவுகள் எழுத வந்து விடும்.
    நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள்

    நேரங்கள் ஓடுகிறது, யாருக்காக நிற்கிறது?

    தெரியாத நம்பரிலிருந்து வரும் அழைப்பை எடுப்பது இல்லை.
    அப்படியும் எப்படியோ சில அழைப்பை அவசரபட்டு எடுத்து விட்டால் பேச ஆரம்பித்தவுடன் கட் செய்து விடுவேன்.

    நானும் எங்கும் போகவில்லை மகனுடன் மீனாட்சி அம்மன் கோவில் போய் வந்தது தான். அவனுடன் சில இடங்கள் மதுரையில் போய் வந்தோம், அதுவுவே இன்னும் பதிவு செய்யவில்லை.

    உடல் நலமும் , மனமும் ஒத்து வர வேண்டும் பதிவுகள் எழுத. வலுவில் உற்சாகத்தை வரவழைத்து கொண்டு பதிவுகள் எழுதி வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு. உங்கள் ஊக்கம் கொடுக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. இந்த வருஷமாவது நவராத்திரிக்கு ஒரு நாளாவது பதிவு போட முடியுமா தெரியலை. கொலுவே எப்படி வைக்கலாம் என யோசிக்க வேண்டி இருக்கு. வீட்டில் எல்லா இடங்களும் நாற்காலி, மேஜைகளால் நிரம்பி இருக்கின்றன. :( கோயில் போவது என்பது இப்போதெல்லாம் குலதெய்வம் கோயில் மட்டும் தான்.

      Delete