நவராத்திரிப் பத்து நாட்களூம் பதிவு போட முடியலை. முக்கியமாய் இந்தக் கணீனி ஒரு காரணம். எழுதுவது சிரமமாக ஆகி விட்டது. காப்பி, பேஸ்ட் பண்ணீப் பழைய பதிவுகள் போடலாம் எனில் அதுவும் சிரமமாக இருந்தது. ஆகவே சும்மாவே இருந்துட்டேன். இப்போ நேத்திக்கு சரஸ்வதி பூஜைப் படங்கள் குஞ்சுலுவுக்காக எடுத்தது போட்டிருக்கேன். இதிலே தீபாராதனைப் படங்கள் எல்லாம் வரலை. பார்க்கணூம் பார்த்துக் கிடைச்சதும் அதைச் சேர்க்கிறேன். இப்போதைக்குப் பூஜை நடக்கும் படங்கள் மட்டும். நிவேதனம் சாதம், பருப்பு, பாயசம், வடை, அதிரசம் மட்டும். கொண்டைக்கடலைச் சுண்டல் சாயந்திரம் பண்ணீனேன். நேத்திக்குக் கொஞ்சம் பேர் வரவும் வந்தனர். ஒரு வழியாய் நவராத்திரி முடிஞ்சாச்சு.
புடைவை தெரியுதே, நான் உட்கார்ந்திருக்கேன்.
தாமதமான ஆயுதபூஜை வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கில்லர்ஜி
Deleteபூஜை வாழ்த்துகள் கீதாக்கா.
ReplyDeleteகுஞ்சுலுவுக்கும் வாழ்த்துகள்! குஞ்சுலு பார்த்துவிட்டு என்ன சொல்கிறது என்பதையும் எழுதுங்கள் கீதாக்கா.
பூஜை படங்கள் சிறப்பாக இருக்கின்றன.
கீதா
குஞ்சுலு வழக்கம்போல் வாய்ஸ் மெசேஜ் கொடுத்திருக்கு. படங்கள் எல்லாத்தையும் போடலை. :)
Deleteபிரசாதங்கள் அருமை கீதாக்கா!!! அதிரசம் செய்திருப்பது ஆஹா!
ReplyDeleteநவராத்திரி நல்லபடியாக நிறைவேறியதற்கும் வாழ்த்துகள். இனி அடுத்த வருடம் தான், குஞ்சுலு பொம்மை வைக்க முடிகிறதா அவங்க ஊரில்?
கீதா
இல்லை தி/கீதா. நைஜீரியாவில் கொலுவெல்லாம் வைக்க முடியாது. அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் வைப்பது உண்டு. இனி அங்கே போய்த் தான். அது எப்போவோ! :(
Deleteபடங்கள் அழகு. பரவாயில்லையே... தேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆகிட்டீங்களே.. பாராட்டுக்கள்
ReplyDeleteம்ம்ம்ம்ம்ம், :) கேலி பண்ணினாலும் சரி, பாராட்டினாலும் சரி!
Deleteகடவுளர் படங்கள் எண்ணிக்கை அளவு கூட பிரசாதம் இல்லையே. வந்தவங்களுக்குக் கொடுத்தீர்களா இல்லை படம்தானா?
ReplyDeleteபிரசாதம் பண்ணிக் கொண்டு இருந்தேன், சரஸ்வதி பூஜைக்கு நிறையவெல்லாம் பண்ணுவது இல்லை. வடை, அதிரசம் அல்லது சுய்யன் (மாமாவுக்குப் பிடிக்காது என்பதால் பண்ணுவது இல்லை.) பாயசம், மஹாநிவேதனம் எனப்படும் அன்னம், பருப்பு, நெய். பண்ணியதில் நிவேதனத்துக்கு மட்டும் ஒரு பாத்திரத்தில் போட்டு எடுத்து வந்தேன்..
Deleteபுடவைதெரியுதே அது நான், கை தெயியுதே அது மாமா, பாத்திர விளிம்பு தெரியுதே அதுலதான் பிரசாதம் வைத்திருந்தேன்... நல்லாவே சமாளிக்கற மாதிரி இருக்கு
ReplyDeleteஇருக்கட்டுமே என்ன இப்போ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
Deleteநவராத்திரியை நல்லபடியாக கொண்டாடி விட்டீர்கள்.
ReplyDeleteபண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடி பதிவுகள் போட்ட காலங்களை நினைத்து மகிழ்ந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. பண்டிகைகளை முடிந்தவரை செய்து "அப்பாடா" என்ற பெருமூச்சு விடுகிறேன்.
பிர்சாதங்கள் நல்லபடியாக செய்து கொலுவுக்கு வந்தவர்களை நல்லபடியாக தாம்பூலம் கொடுத்து உபசரித்தது அறிந்து மகிழ்ச்சி.
பேத்திக்கு படங்களை அனுப்பி விட்டீர்களா ? பேத்தி பார்த்துவிட்டு மகிழ்ந்து இருப்பாள்.
போன வருஷம் நவராத்திரி ஆரம்பிச்சு நாலு நாளில் படுத்துட்டேன். நடு நடுவே ஓரிரு தினங்கள் எழுந்து கொண்டேன். அதனால் ஆரம்ப முதல் இந்த வருஷம் பயம். எங்கேயும் போகாமல் வீட்டிலேயே அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொண்டு அந்த நேரம் மட்டும் எழுந்து பிரசாதம் பண்ணி, வந்தவர்களைக் கவனித்து என ஒரு மாதிரியாகச் சமாளிச்சேன். கடவுள் துணை பக்கபலம். பேத்தி பார்த்துட்டு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கா. அவளுக்கு இந்தக் கொண்டாட்டங்கள் பட்டுப்பாவாடை, தலை நிறையப் பூ, நகை போட்டுக்கிறது எல்லாம் பிடிக்கும். ஆனால் பாவம் குழந்தை எங்கேயோ இருக்கா
Deleteஉடம்பு முடியாத பட்சத்திலும் பூஜைகளை நல்லபடி முடித்தது சிறப்பு. கொஞ்சம் கொஞ்சம்தான் எனினும் இத்தனை ஐட்டங்களை நிவேதனத்துக்கு தயார் செய்திருபப்தற்கு பாராட்டுகள்.
ReplyDeleteநாலு வடை, நாலு அதிரசம் மட்டும் இங்கே வைச்சேன் ஸ்ரீராம். மத்தது அடுப்பில் தயாராகி சமையலறையில் இருந்தது, :))))சாயங்காலம் கொ.க.சுண்டல். அதுவும் நல்லவேளையா ராத்திரி வரை வந்தது.
Deleteபழைய டைப்பிங் முறையில் ஷிஃப்ட் அமுக்கி சில எழுத்துகளை டைப்பி இருப்பீர்கள். அதை இன்னமும் மறக்காமல் இங்கு புதிதிலும் ஷிஃப்ட் அமுக்கி விடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் ணீ என்று வருகிறது.
ReplyDeleteநான் ஆரம்ப முதலே இ கலப்பை தான் ஸ்ரீராம். ஆகவே இந்த ஷிஃப்ட் அமுக்கி எல்லாம் எப்படினு தெரியாமல் பழைய தோஷிபா லாப்டாப் வரை சுமுகமாகப் போச்சு. பின்னர் நாலைந்து வருஷங்கள் முன்னர் டெல் லாப்டாப் வந்ததில் இருந்து இ கலப்பைப் பிரச்னை, இப்படித்தான் குறில்/நெடில் வராது, நன்றி சொல்ல முடியாமல் நன்னினே சொல்லிட்டு இருக்கணும். ஆனாலும் அப்போல்லாம் சுரதாவால் சமாளித்துக் கொண்டிருந்தேன். இப்போ அந்தக் கணினியில் சுரதாவே வருவதில்லை. இது இ கலப்பையில் டெல் லாப்டாப் மூலம் தட்டச்சியது தான் இப்படிக் கன்னா/பின்னானு வந்திருக்கு. இன்னிக்குத் தான் நவராத்திரி முடிஞ்சு இப்போ வந்திருக்கும் புது விவோ லாப்டாப்பில் சுரதா மூலம் தட்டச்சி பதில் கொடுக்கிறேன். இதிலும் ஈ கலப்பை அதே அழகு தான். நி நீ என்றே வருது.
Deleteதிருச்சி ட்ரிப் போல நேற்று குடவாசல், கும்பகோணம் சென்று சதாபிஷேகம் அட்டென்ட் செய்து சில கோவில்கள் பார்த்து வந்தேன்.
ReplyDeleteபார்த்தேன். திருச்சேறைப் பதிவில். அங்கே போயிருக்கீங்களோனு நினைச்சேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. நவராத்திரி சரஸ்வதி பூஜை படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. உங்கள் பேத்தி இதையெல்லாம் பார்த்து மிகவும் சந்தோஷ மடைந்திருப்பாள். உங்களையே நினைத்துக் கொண்டிருப்பாள். இப்போது இந்த வாட்சப்பினால் அவர்களையெல்லாம் நேரடியாக பார்த்து பேசிக் கொள்வதில் நமக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது.
நீங்களும் உங்கள் உடல் நிலை முடியாமையில் எப்படியோ பூஜை களுக்கு நல்ல விதமாக பிரசாதங்கள் செய்து இறைவனை வழிபட்டிருப்பதற்கு மிக்க மகிழ்ச்சி.
சமீபத்தில் பாத்ரூமில் உங்கள் கால் இடித்து வலி, வீக்கம் என படித்தேன். இப்போது பூரண நலமாகி விட்டீர்களா? நாம் எத்தனை கவனமாக இருந்தாலும் சில சமயங்கள் இப்படி நம்மை வந்தடைந்து துன்புறுத்தி விடுகின்றன. எனக்கும் ஒரு வாரத்திற்கு மேலாக ஜலதோஷம் பாடாய் படுத்துகிறது. இத்தனைக்கும் இன்னமும் இங்கு குளிர் வரவில்லை. அதறகுள்ளேயே இந்தப் பாடு.
தங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். ஏதேதோ வேலைகளினாலும் , அவ்வப்போது உடல் நிலை படுத்தும் பாட்டினாலும் என் தாமதமான வருகைக்கு அனைவரும் பொறுத்துக் கொள்ளவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, நேற்று கிரஹணத்தால் இணையம் பக்கம் வர முடியலை. குட்டிக்குஞ்சுலு பள்ளியில் விளையாட்டுகளில் ரொம்ப பிசி. நம்ம ஊர்ப்பக்கம் இருந்திருந்தால் அத்லெட்டில் முன்னேற்றம் கண்டிருப்பாள். ஹாலோவீன்ஸ் தினத்துக்கு பட்டர்ஃப்ளை உடை போட்டுக் கொண்டு அதைக் கழற்றாமல் எங்களுக்குக் காட்டினாள். விங்க்ஸ் எல்லாம் வைத்துக் கொண்டு ஃப்ளை, ஃப்ளை எனச் சொல்லிக் கொண்டு பறந்தும் காட்டினாள். குழந்தை முகத்தில் கோடி துக்கம் போகும் என்பதும் சரியாகத் தானே இருக்கு.
Deleteஇடது கால் சுண்டு விரல் வலி, வீக்கம் இப்போக் குறைஞ்சிருக்கு. அவ்வப்போது துடிக்கும். அப்போக் கொஞ்சம் வலி தெரியும். மற்றபடி பரவாயில்லை.
Deleteஉங்களுக்கு உடம்பு முடியவில்லை என்பது கோலத்தில் தெரிகிறது. வழக்கமான திருத்தம் இல்லை. உடம்பு முடியாத பொழுதும் எதையும் குறைக்காமல் பண்டிகையை கொண்டாடியிருக்கிறீர்கள், பெரிய விஷயம்!
ReplyDeleteவாங்க பானுமதி. வந்ததே ஆச்சரியமா இருக்கு. அதில் நுணுக்கமாய்க் கவனிச்சிருக்கீங்க. ஆமாம், கோலம் போடும்போது கை விரல்கள் இழுக்கின்றன. அதனால் இழை சரியாக வருவதில்லை. என் அம்மாவை நினைச்சுப்பேன். கீமோதெரபி எடுத்த உடம்பிலேயும் கோலமெல்லாம் போட்டு பக்ஷணங்கள் பண்ணி வரலக்ஷ்மி விரதம், கிருஷ்ண ஜயந்தி, விநாயக சதுர்த்தி, நு எல்லாத்துக்கும் முன்னால் நிற்பார். அம்மாவின் மனோபலத்தில் பாதியாவது எனக்கு வேண்டும் என வேண்டிப்பேன்.
Deleteகொஞ்ச நாட்களாக வேலை அதிகம். இப்போது வாரத்தில் ஒரு நாளாவது எல்லோருடைய பதிவுகளுக்கும் சென்று பதிவு போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.
ReplyDelete