முந்தாநாள் மெடிகல் ஃபார்மசியில் மருந்துகள் வாங்கப் பட்டியலைச் சொல்லிக் கொண்டிருந்தேன், முடிந்ததும் அந்தப்பெண் அவ்வளவு தானா மேடம்? வேறே ஏதும் இருக்கானு கேட்டாங்க. ஆமாம், ஒரு டெட்டால் பாட்டிலும் சேர்த்துப் போடுங்க என்றேன். டெட்டாயில் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்) தானே மேடம்? எத்தனை லிட்டர்? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது டெட்டாயில் இல்லை, டெட்டால் என்றேன். அதான் மேடம் நானும் சொல்றேன், டெட்டாயில் அரை லிட்டர் போடவா?
ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
முந்தாநாளே நடந்த இன்னொரு விஷயம். சிலிண்டர் தீர்ந்து விட்டதால் ரீஃபில் பதிவு செய்தேன், வழக்கம் போல் வாடசப் மூலம் என்னுடைய மொபைல் நம்பரில் தான் செய்தேன், எல்லாம் சரியாக வந்தது. ஆனால் எனக்குச்செய்தி எஸ் எம் எஸ் மூலம் வரவே இல்லை. சரினு மறுபடி செய்தால் ஏற்கெனவே பதிவு செய்தாச்சு, சிலிண்டரும் வந்துடும்னு வாட்சப்பில் வந்தது. இந்த டி.ஏ.சி. நம்பர்னு ஒண்ணு வரணுமே! அது வரவே இல்லை. என்னாச்சுனு தெரியலையேனு குழப்பம், நேத்திக்கு சிலிண்டரும் வந்தது,. வழக்கமாய் வருபவர் தான். சிலிண்டரைப் பொருத்திப் பார்த்துட்டுப் பணம் கொடுக்கையில் டிஏசி நம்பர் கேட்க நான் வரவே இல்லை என்றேன், அவருக்கு திடீர்னு எனக்கு மொபைல் பார்க்கத் தெரியலைனு ஜந்தேகம். மொபைலைக் கொண்டானு சொன்னார். காட்டினேன். பிஎஸ் என் எல் ரீசார்ஜ் மெசேஜ் தான் இருந்தது, (அதுவும் ஒரு தனிக்கதை. பின்னால் பார்ப்போம்.) ஏன் வரலைனு கேட்டேன். உடனே அந்த மனிதர் உங்க காஸ் ஏஜென்சிக்குத் தொலைபேசிக் கேளுங்க. அவங்க தான் அனுப்பணும். அனுப்பாமல் விட்டிருக்காங்க என்றார்.
உடனே தொலைபேசினேன். முதலில் ஒரு பெண் எடுத்தார். அவரிடம் விபரங்கள் சொல்லிக் கேட்டால் நான் புதுசுனு வேறே ஒருத்தரிடம் சொல்ல அந்த ஒருத்தர் எடுத்தார் அவரிடம் விபரங்கள் கன்ஸ்யூமர் நம்பர் எல்லாம் சொல்லவே பெயர், விலாசம் சரியாகச் சொல்லிட்டு உங்க மொபைல் நம்பர்னு ஆரம்பிச்சு 988 நு ஆரம்பிக்கும் ஏதோ நம்பரைச் சொல்லவே இல்லையே இது என்னோட நம்பரே இல்லைனேன். உடனே அவர் மீண்டும் பார்த்துட்டு, நவம்பரில் நீங்க சொல்லும் நம்பரில் இருந்து பதிவு செய்திருக்கீங்க. இப்போ இந்த நம்பரில் பதிவு செய்திருக்கீங்கனு சொல்லவும் கோபத்துடன் இந்த மாதிரி ஒரு நம்பருடன் எங்களிடம் எந்தத் தொலைபேசி/அலைபேசி கிடையாது, இந்த ஒரே நம்பர் தான் எங்க நம்பர்னு சொன்னால் அவ்ர் ஒத்துக்கவே இல்லை. நாங்க கொடுத்த செய்து அந்த 988 இல் இருந்து ஆரம்பிக்கும் நம்பருக்குப் போயிருக்கும் ;என்று முடிக்கப் பார்த்தார். நான் விடலை. இதே நம்பரில் இருந்து தான் வாட்சப்பில் சிலிண்டர் புக் செய்தேன். அந்த வாட்சப் செய்திகளை உங்களுக்கு ஃபார்வார்ட் செய்யறேன் என்று சொல்லவே அவர் ஒரு சவாலாக அனுப்புங்க பார்ப்போம்னு ஒரு அலைபேசி எண்ணைக் கொடுத்தார்.
அது அலுவலக எண்ணாம். நானும் அந்த எண்ணிற்கு எனக்கு வந்த வாட்சப் செய்திகளை ஃபார்வார்ட் செய்து விட்டு மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். ரொம்ப நேரம் யாருமே எடுக்கலை. பின்னர் ஒரு பெண் எடுத்து என்ன எனக் கேட்கவும் விபரங்களைச் சொன்னேன். ரொம்பப் பணிவாக, சரி மேடம், நாங்க என்னனு பார்க்கிறோம் மேடம்னு சொல்லிட்டு ஃபோனை வைச்சுட்டார். மறுபடி சிலிண்டர் போடுபவரைக் கூப்பிட்டு விபரங்களைச் சொன்னால் ஏஜென்சிக்காரங்க தான் தப்பான தொலைபேசி எண்ணை இணைச்சிருக்கணும் எனவும் இது அவங்க தப்பு அதனால் அப்படியே விடுங்க, நீங்க பத்து வருஷத்துக்கு மேலாகத் தெரிஞ்சவங்க என்பதால் நானும் சிலிண்டரைக் கொடுத்துட்டேன். பின்னால் பார்த்துக்கலாம் என்று சொன்னார். ர்ங்க்ஸிடம் இதை ஒரு மாதிரி விபரமாகச் சொல்லி என்ன செய்யனு கேட்டால் பேசாமல் இருப்போம் என்றார், இதுக்கு என்ன செய்யலாம்? ஐ.ஓ.சி.யிடம் புகார் கொடுக்கணுமா? ஏஜென்சியில் நம்பரை மாத்தணும்னால் நேரே வரணும் என்றார்கள். எனக்கோ/அவருக்கோ நேரில் போகும் நிலையில் இல்லை. என்னதான் சும்மா இருந்தாலும் மனதில் இது ஓடிக் கொண்டே இருக்கு.
தனது தவறை பிறரது தலையில் கட்டுவது சில மனிதர்களின் வழக்கம்.
ReplyDeleteஆமாம் கில்லர்ஜி.
Deleteடெட்டாயிலையும் ரேஷனில் கொடுக்கலாம்! தமிழக குன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துப் பார்ப்போம்.
ReplyDeletehaahaahaahaa
Deleteஎங்களுக்கு அதுபோல டி ஏ ஸி நம்பர் வராத சமயங்களும் உண்டு. அப்போதெல்லாம் உடனடியாக அந்த இடத்திலேயே சிலிண்டர் போடுபவர் எங்கள் நம்பருக்கு அனுப்பி விடுவார்! அவர்தான் அனுப்ப வேண்டுமா, அல்லது அவருக்கு வந்த காபியை அனுப்புகிறாரா என்று தெரியாது. கடவுள் புண்ணியத்தில் பெரிய பிரச்னை எதுவும் வந்ததில்லை இதுவரை!
ReplyDeletefirst time for me.
Deleteமூன்று நாட்களாக உங்கள் நினைவுதான் கீதா சாம்பசிவம் மேடம். கூப்பிடணும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன். இருவரும் நலமா?
ReplyDeleteகீதாக்கா, இந்த மாதிரி ரொம்பவும் அசிரத்தையாக இருக்காங்க இப்பல்லாம் வேலை செய்யறவங்க. அதை ஏன் கேக்கறீங்க. அதுவும் இப்படி வயதானவங்க தனியாக இருக்கறப்ப கொஞ்சம் அனுசரணையா நடந்துக்கக் கூடத் தெரியலை பாருங்க. Useless fellows! வாசித்ததும் எனக்குக் கோபம் கன்னாபின்னான்னு தலைக்கேறியது. அலைபேசி எண் தப்பா இணைச்சிருந்தாங்கனா அவங்க பில் மற்றும் சிலிண்டர் எப்படி உங்க முகவரிக்கு அனுப்பினாங்க! அந்த ஆள் சரியாகப் பேசவில்லை சரியாக நோட் செய்துகொள்ளவில்லை. நம்பர் தப்பாக இருந்திருந்தால் உங்களுக்கு எப்படி மெசேஜ் வந்தது? அந்த ஆள் தான் தப்பா சொல்லியிருக்கிறார். என்பது என் அனுமானம். அவர் சின்சியராகப் பார்க்கவில்லை ஏனோதானோன்னு நம்பர் பார்த்துவிட்டு உங்களோடு விவாதம் செய்திருக்கிறார்.
ReplyDeleteநீங்கள் நேரடியாக ஒரு கம்ப்ளெயின்டும் மெயில் வழியாக அந்த ஏஜன்சிக்கு ஒரு அதிபர் இருப்பார்தானே அவருக்கு அனுப்புங்க. அதன் பின் உங்களுக்குத் தெரிந்தவர் மூலமாக, காஸ் யார் பெயரில் இருக்கோ அவங்களுடைய ஆதார், மொபைல் எண்ணைச் சொல்லச் சொல்லி அங்கு சரியாக இருக்கான்னு பார்க்கச் சொல்லுங்க. அங்கு சரியாகத்தான் இருக்க வேண்டும். இல்லைனா உங்க மொபைல் நம்பரிலிருந்து னீங்க புக் செய்ததும் எப்படி புக் ஆச்சு? செய்தி வந்தது?
கீதா
எந்த போனில் இருந்தும் indianoil ஆப் வழி சிலிண்டர் புக் செய்யலாம். நான் இரண்டு போனில் ஆப் வைத்திருக்கிறேன். ஏதாவது ஒன்றில் லொகின் செய்து புக் பண்ணுவேன். இது இல்லாமல் சில சமயம் கம்ப்யூட்டர் வழியும் லாகின் செய்வேன்.
Deleteசாதாரணமாக OTP நம்முடைய அக்கவுண்டில் இணைக்கப் பட்ட நம்பருக்கு மட்டுமே வரும். பேமெண்ட் ஆன்லைன், கார்டு, மற்றும் upi வசதிகளும் இருந்தாலும் சிலிண்டர் கொண்டு வருபவர் கேஷ் தான் கேட்கிறார்கள்.
இந்த indianoil ஆப்பின் 3 கோடுகளை க்ளிக்கி செய்து ப்ரொபைல்க்கு சென்று நம்முடைய விவரங்களை சரிபார்க்கலாம். விவரங்களை மாற்றலாம்.
ஈமெயில் கொடுத்து மெயிலில் OTP வாங்கலாம்.
Jayakumar
எந்த போனில் இருந்தும் indianoil ஆப் வழி சிலிண்டர் புக் செய்யலாம். நான் இரண்டு போனில் ஆப் வைத்திருக்கிறேன். ஏதாவது ஒன்றில் லொகின் செய்து புக் பண்ணுவேன். இது இல்லாமல் சில சமயம் கம்ப்யூட்டர் வழியும் லாகின் செய்வேன்.
Deleteசாதாரணமாக OTP நம்முடைய அக்கவுண்டில் இணைக்கப் பட்ட நம்பருக்கு மட்டுமே வரும். பேமெண்ட் ஆன்லைன், கார்டு, மற்றும் upi வசதிகளும் இருந்தாலும் சிலிண்டர் கொண்டு வருபவர் கேஷ் தான் கேட்கிறார்கள்.
இந்த indianoil ஆப்பின் 3 கோடுகளை க்ளிக்கி செய்து ப்ரொபைல்க்கு சென்று நம்முடைய விவரங்களை சரிபார்க்கலாம். விவரங்களை மாற்றலாம்.
ஈமெயில் கொடுத்து மெயிலில் OTP வாங்கலாம்.
Jayakumar
இந்தியன் ஆயில் தளத்திலே நேர்றுப் புகார் பதிவு செய்து இன்னிக்குச் சரி செய்யப்பட்டு விட்டது தி/கீதா. ஜேகே சார். இம்மாதிரித் தொல்லை இதான் முதல் தரம். அதோடு டிஏசி எண் வராமல் இருந்தது இல்லை.
Deleteசிலிண்டர் போடுபவரையே கூட நீங்க நேரில் சென்று சரிபார்க்கச் சொல்லலாம் அக்கா. அவர் உங்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தால். அல்லது தெரிந்தவர் மூலமாகச் செய்யலாம்.
ReplyDeleteகீதா
சிலிண்டர் போடுபவர் தெரிந்தவர் தான். அதனால் தான் சிலிண்டரை டிஏஸி எண் இல்லாமல் கொடுத்தார். இந்தப் பிரச்னையை இந்தியன் ஆயில் மூலமே சரி செய்தாச்சு.
Deleteமெடிக்கல் கடைகள் என்றில்லை எந்தக் கடையானாலும் நமக்குத் தேவைக்கு அதிகமான அல்லது தேவையில்லாத பொருட்களை நம் தலையில் கட்டிவைக்கத்தான்பார்ப்பார்கள். அது டெட்டாலா, மருந்துகளா எனப்தெல்லாம் அவர்களுக்குக் கவலையே இல்லை. நாம் ஒரு மருந்து சொல்ல அவர்கள் வேறொன்றைப் புரிந்து கொள்ள என்று அதாவது ஃபோனில் எனும் போது. பலரது மருந்துகளின் உச்சரிப்பு வித்தியாசமாகவும் இருக்கிறது. உங்கள் குறை புரிகிறது
ReplyDeleteதுளசிதரன்
நாங்க எப்போவுமே முதல் மாத பில் எண், வாங்கிய தேதியைக் கொடுத்து அந்த பில்லில் உள்ளபடியோ அல்லது சில மருந்துகளைக் கூட்டியோ/குறைத்தோ வாங்கிடுவோம். பெரிதாகப் பிரச்னை வந்தது இல்லை. எங்கேயுமே போவதில்லை. வீட்டில் கொண்டு வந்து கொடுப்பவர்கள் தான் அனைவரும்.
Deleteஉங்கள் இணைப்பு பற்றி ஐ ஒ சி சைட்டில் அங்கு ரிப்போர்ட்டிங்க் கம்ப்ளெய்ன்ட் என்று இருக்கும் அதில் நீங்கள் கம்ப்ளெயின்ட் செய்துவிடுங்க. இல்லையே அவர்கள் இது போல் மீண்டும் செய்ய வாய்ப்பு இருக்கிறது. தெரிந்தவர் என்பதால் சிலிண்டரை சேர்த்துவிட்டார். இல்லை என்றால்? கம்பெள்யின்ட் செய்து பாருங்கள் உடனே எவ்வளவு ஜரூராகக் காரியம் நடக்கும் தெரியுமா? உடனே பல இடங்களில் இருந்தும் அழைப்புகள் வரும். உங்களிடம் அலட்சியமாகப் பேசியவர்கள் எப்படியெனும் உங்களுடன் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்கலாம் இல்லை என்றால் இனி அப்படிச் செய்ய மாட்டோம் என்று சொல்வது வரை நடக்கும். அந்த அளவிற்குப் புகாருக்கு இடமுண்டு. கம்ப்ளெயின்ட் செய்வது எளிதுதான் அந்த சைட்டில் போய் கம்பெளெயின்ட் என்பதை அழுத்தி நம்முடைய தேவையான நம்பர்கள் ஏஜன்சி நம்பர், அவர்களது Code, அட்ர்ஸ், பெரும்பாலும் அதிலேயே வந்துவிடும், நீங்கள் அதை தேர்ந்தெடுத்தால் போதும்.....பின் உங்கள் காஸ் நம்பர், உங்கள் தொலைபேசி எண் எல்லாம் தயாராக வைத்துக் கொண்டு கொடுக்க வேண்டிய மொபைல் நம்பர்கள் என்று எல்லாம் கொடுத்து கம்ப்ளெயின்ட் செய்து பாருங்கள். அவர்களுக்கும் கன்ஸ்யூமரின் பவர் புரியட்டும். புரிந்து கொள்வார்கள்.
ReplyDeleteதுளசிதரன்
ஆமாம், வேலை முடிந்து விட்டது. பல வருடங்களுக்கு முன்னர் ஒரு தரம் அம்பத்தூரில் இருக்கும்போது சிலிண்டர் போடுபவர் சிலிண்டர் விலைக்கு மேல் 50 ரூ கொடுக்கணும்னு கண்டிஷன் போட்டு சிலிண்டரையே போடவில்லை அப்போ நம்மவர் அவர் அலுவலகம் லெட்டர் பேடில் அவருடைய பதவியைக் குறிக்கும் சான்றுகளோடு காலையில் புகார் செய்தார் மத்தியானம் சிலிண்டரை வீட்டு வாசலில் வைச்சுட்டு அந்த ஆள் ஓடிட்டார். பின்னர் அவரை அந்த ஏஜென்சியில் இருந்து பணி இடம் மாற்றம் செய்து விட்டார்கள்.
Deleteஅன்பின் அக்கா அவர்களுக்கும் மாமா அவர்களுக்கும் நமஸ்காரம்..
ReplyDeleteநலந்தானே..
வாழ்க நலம்..
Thanks thambi,
Deleteஇப்படித்தான் ஏகப்பட்ட குழப்பங்கள்..
ReplyDeleteஆமாம், சில மாதங்களாகக் குழப்பங்கள்தான்.
Deleteடெட்டாயில்... :)
ReplyDeleteகேஸ் ஏஜென்சி குளறுபடி... இவர்களது இணைய தளத்தில் புகார் செய்தாலும் பெரிதாக தீர்வு ஒன்றும் கிடைப்பதில்லை.
நேத்திக்குச் சாயங்காலம் நாலு மணிக்கு மேல் தான் புகார் செய்தேன். இன்னிக்குக் காலம்பர ப்தினொன்றரை மணிக்கெல்லாம் புகாரை க்ளோஸ் செய்து எழுதிக் கொடுத்தாச்சு! :)))))))
Deletehttps://paytm.com/blog/bill-payments/gas-booking/how-to-change-mobile-number-in-gas-booking/
ReplyDeleteThe process to update the mobile number with Indane Gas
Here are the different ways by which you can perform the Indane Gas mobile number change:
Through IVRS method
You can use this method in both cases – when you have not registered the mobile number with Indane and when you have registered the mobile number.
Having said that, if you have not registered, dial the Indane gas customer care number: 1800-233-3555, and mention the personal details for verification purposes. Post verification, your number will be registered.
In case you have to change the registered mobile number, you have to follow the mentioned steps:
Call on +91 7718955555 for IVRS from a registered mobile number.
You will hear many choices. Select the fourth option, ‘Change of personal registration number’.
Press 1 from the keypad to revoke the registered number.
Enter your new personal registration number.
After successfully following the steps, you can change your mobile number.
தப்பு செய்த ஏஜென்சிக்காரங்களை விட்டே மாத்தச் சொல்லி மாத்திட்டேன். எப்போவும் கடவுள் துணை இருப்பார். இப்போவும்
Delete