நேற்று காயத்ரி ஜபத்துக்கு எழுந்து வீல்சேரில் உட்கார்ந்த வண்ணம் அரை மணி நேரம் ஜபம் செய்தார் நம்ம ரங்க்ஸ். உதவியுடன் தானே நடந்து கழிவறை செல்கிறார். அவ்வப்போது தலை சுற்றல் எனச் சொல்லுவதாலும், தலை சுற்றல் இருப்பதாலும் தனியே விட பயம். மேலும் மருத்துவரும் கீழே விழாமல் பார்த்துக்கச் சொல்லி இருக்கார். சாப்பாடு மட்டும் இன்னமும் முன்னேற்றம் காண வில்லை. மருந்து வகைகள் ஓரளவுக்குக் குறைச்சிருக்காங்க. கதீட்டரை எடுத்தாச்சு,
தொலைக்காட்சிப்பெட்டியைப் போடுவதே இல்லை. சென்ற நவம்பர் 29 ஆம் தேதியிலிருந்து எப்போவானும் போட்டது தான். ஸ்ரீராமர் பிரதிஷ்டை பார்க்கப் போட்டப்போ தொலைக்காட்சிப் பெட்டி கொலாப்ஸ் ஆகி விட்டது. சுமார் எட்டுமாதங்களாகப் போடாமல் இருப்பதால் கேபிள் இணைப்பையே துண்டித்து விடலாம் என நினைக்கிறோம். தொலைக்காட்சிப் பெட்டி இல்லாததால் ஒண்ணும் வித்தியாசம் தெரியலை. மேலும் உட்கார்ந்து பார்க்க நேரமே கிடைப்பதில்லை.
இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி 2000 ஆம் ஆண்டில் நம்ம ரங்ஸ் ஊட்டி அரவங்காடு ஃபாக்டரிக்கு மாற்றல் ஆகிப் போனப்போ வாங்கினது இதுவும் எல்ஜி கிரைண்டரும் ஒரே சமயம் வாங்கினோம். வீட்டில் பெரிய கிரைண்டர் தான் வாங்கி வைச்சிருந்தொம், அது சென்னையில் மட்டுமில்லாமல் ராஜஸ்தான், குஜராத் என எல்லா இடங்களுக்கும் கூடவே வந்தது. திரும்பவும் அம்பத்தூர் வந்தப்போ அதிகம் மனிதர்கள் இல்லாததாலும் குழவி ரொம்பப் பெரிசாக இருந்ததாலும், அப்போத் தான் தரைத்தளம் முழுவதும் டைல்ஸ் பதிச்சிருந்ததாலும் பழைய கிரைண்டரைக் கொடுத்துட்டு எல்ஜி அல்ட்ரா கிரைண்டர் சின்னது தான் வாங்கினோம், நேற்று வரை நன்றாகவே அரைத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது, தொலைக்காட்சிப் பெட்டியும் ஃபிலிப்ஸ் என்பதால் கலர் க்ளாரிடி, ஒலி, ஒளி எல்லாமே சிறப்பாக இருக்கும். இப்போவும் அதை மெகானிக் வந்து பார்த்துச் சின்னச் சின்னக் கோளாறுகளைச் சரி பண்ணினால் போதும். முன்னர் ஐசி போனப்போப் பார்த்த மெகானிக் வியந்து போனார். இதைப் போல் தொலைக்காட்சி உழைச்சதைப் பார்த்ததே இல்லைனும் சொன்னார். இப்போ 25 வருடங்கள் ஆகியும் கிரைண்டரும் சரி, தொலைக்காட்சிப் பெட்டியும் சரி, நன்றாகவே இருக்கிறது.
பையர் ஸ்மார்ட் டிவி வாங்கி அப்பா படுக்கும் அறையில் மாட்டுவதாகச் சொல்கிறார் வேண்டவே வேண்டாம்னு கெஞ்சிட்டு இருக்கோம். ஒரே சத்தமாக இருக்கும் என்பதோடு யாரும் அவ்வளவு ஆர்வமாகத் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதில்லை. ஆகவே எதுவுமே வேண்டாம்னு சொல்லிக் கொண்டு இருக்கோம். அவ்வப்போது முகநூலில் வரும் கச்சேரிகளைப் போடுவேன். ஸ்லோகங்கள், உபன்யாசங்கள் போடுவது உண்டு. அதுக்கும் மேல் என்ன இருக்கு? எப்படியோ நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. வரும் நாட்கள் நன்மை பயப்பனவாக அமையட்டும் என்று பிரார்த்திப்பது தவிர வேறே நினைப்பு இல்லை.
நலமே விளையும்
ReplyDeleteவாழ்க வளத்துடன்...
நன்றி கில்லர்ஜி. மீண்டும் அரபு நாட்டு வாசம் தற்போது பிடித்தமாதிரி அமைந்திருக்கும்னு நம்புகிறேன்,.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களிடமிருந்து தங்கள் கணவர் நலமடைந்து வருவதாக, நலமுடன் இருப்பதாக இப்படி பதிவுகள் வருவது குறித்து சந்தோஷம். முந்திக்கு அவர் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பது மகிழ்ச்சியே..! விரைவில் முன்பு போல நடமாடி பூரண நலமடைந்து விடுவார். கவலை வேண்டாம்.
வீடுகளில் உபயோகிக்கும் அந்த கால நல்ல கம்பெனியின் தரமான பொருட்கள் எப்போதுமே நன்றாக உழைக்கும். (அதுவும் நாம் பயன்படுத்தும் விதத்திற்கு தகுந்த மாதிரி உழைக்கும்.) என்னிடமும் பழைய ஸ்மித் மிக்ஸி முப்பது வருடங்களுக்கு மேலாக நன்றாக உழைத்தது. ஆனால், வீட்டில் அது நன்றாக இல்லையென வேறு, வேறு என வாங்கி பயன்படுத்துகின்றனர். புது விதமான அதன் கவர்ச்சிகள்தான் காரணம்.
தாங்களும், தங்கள் கணவரும் என்றும் நலமுடன் இருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். நல்ல உடல் ஆரோக்கியத்தை தவிர்த்து வேறு என்ன வேண்டும் நமக்கு?. உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
இப்படி பதிவுலகில் அடிக்கடி வந்து எழுதுங்கள். நானும் இப்போதெல்லாம் அப்படித்தான் அடிக்கடி இல்லையெனினும் எப்போதேனும் வந்து கொண்டிருக்கிறேன். அது ஒன்றுதான் நம் மன மாற்றத்திற்கு ஒரு மகிழ்வை, உற்சாகத்தைத் தருகிறது. இன்றைய பதிவின் பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா. ஒரு நாள் உட்கார்ந்தால் அடுத்துச் சில நாட்கள் உட்கார முடிவதில்லை. பதில் கொடுக்கணும்னு 2 நாட்களாக முயன்று இப்போத் தான் உட்கார்ந்தேன் கிருஷ்ணனுக்குப் பாயசம் பண்ணின கையோடு. உங்கள் அன்பான ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி. நான் இங்கே உட்காராமல் வேலை செய்கையில் எல்லாம் அங்கே "பெண்"களூரில் கமலா ஹரிஹரனும் இப்படித்தானே வேலை செய்வார் என நினைப்பேன்.
Deleteவணக்கம் சகோதரி
Delete/அங்கே "பெண்"களூரில் கமலா ஹரிஹரனும் இப்படித்தானே வேலை செய்வார் என நினைப்பேன்./
ஹா ஹா ஹா. நல்ல சிலேடையான பதிலை ரசித்தேன் சகோதரி. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முதுமையில் உடற்பயிற்சி செய்ய முடியாத நிலையில், நிதானமாக அவர்[ரங்க்ஸ்] ஜபத்துடன் மூச்சுப் பயிற்சியும் செய்யலாமே[யோகா அது இது என்று சிரமப்பட வேண்டாம்]. பலன் கிடத்தால் நல்லது. இல்லையென்றாலும் பக்க விளைவு ஏதுமில்லை.
ReplyDeleteமுதுமையில்தான் அதிகத் தன்னம்பிக்கையும் திட மனதும் தேவை என்பது நீங்கள் அறிந்ததுதான்.
வாழ்த்துகள்.
மிக்க நன்றி திரு பரமசிவம் அவர்களே! தினமும் காயத்ரி ஜபித்துக் கொண்டே இருப்பதால் அதிலேயே மூச்சுப் பயிற்சியும் வந்து விடுகிறது என்பார். மெல்ல மெல்லக் குணமானாலும் பரவாயில்லை. அவர் வேலையை அவர் செய்து கொண்டால் போதும்.
Deleteஸ்மார்ட் டிவி இருப்பது நல்லது. எதையாவது பார்த்துக்கொண்டிருக்க முடியும், மாமாவுக்கு தூக்கம் வராதபோது. வரும் நாட்கள் நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும் கீதா சாம்பசிவம் மேடம். மாமாவை அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.
ReplyDeleteஎதுவும் பார்த்து ரசிக்கும் மனோநிலை இல்லை நெல்லை அவர்களே!வேலைக்கு வரவங்க தான் உட்கார்ந்து பார்க்கிறாப்போல் இருக்கும். நல்லவேளையாக இப்போது வரவங்க கொஞ்சம் நடுத்தர வயசுக்காரங்க என்பதால் தொலைக்காட்சி மோகம் இல்லை.
Deleteஆவணி அவிட்டத்துக்கு அப்பமும் இட்லியும் செய்தீர்களா? மாமா சாப்பிட்டாரா?
ReplyDeleteநெல்லை, எங்க ஆவணி அவிட்டத்தின் போது கூடப் பண்ணுவதில்லை. மாமியார் வீட்டில் அதெல்லாம் பழக்கம் இல்லை என்பார்கள். பொதுவாக அப்பமே எப்போவானும் பண்ணுவாங்க. நான் வந்து தான் கொஞ்சம் கொஞ்சம் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.
Deleteசிறிய முன்னேற்றங்கள் மகிழ்வை ஏற்படுத்துகின்றன. மாமா சீக்கிரம் பழைய மாதிரி ஆகவேண்டும் என்று பிரார்தித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteThanks Sriram.
Deleteதொலைகாட்சி CRT மானிட்டர் தொலைக்காட்சியான? அதற்கு ஈடு இணை எது? பிலிப்ஸ் அப்போது வந்தது நல்ல தரமாகவும் இருந்தது.
ReplyDeleteஆமாம். தொலைக்காட்சிப் பெட்டி இப்போவும் நன்றாகவே இருக்கு. கொடுத்துடுங்க யாருக்கானும்னு மாமா சொல்றார். இப்போல்லாம் ஸ்மார்ட் டிவி காலம். இதைச் சும்மாக் கொடுத்தால் கூட யாரும் வாங்கிக்க மாட்டாங்க என்றேன்.
Deleteகாயத்ரி ஜெபம் ஒன்றேகால் மணிநேரம் உட்கார்நதது எனக்கே சிரமமாக இருந்தது,. மாமாவுக்கு சொல்ல வேண்டுமா? விட்டுக் கொடுக்காமல் செய்திருக்கிறார்.
ReplyDeleteபோளி செய்தீர்களா?!!
போளி வேணுமானு மாமாட்டக் கேட்டுக் கொண்டு எங்க ஆவணி அவிட்டத்தின்போது முடிஞ்சால் பண்ணுவேன் ஸ்ரீராம். காயத்ரி ஜபத்தை விடக் கூடாது என்று விடாப்பிடியாக வீல் சேரில் உட்கார்ந்த வண்ணம் செய்தார். சஹஸ்ர காயத்ரி செய்து கொண்டிருந்தவர். இப்போ இப்படி நிலைமை.
Deleteவரும் நாட்கள் நன்மை பயப்பனவாக அமையட்டும்..
ReplyDeleteஇதுவே மிகச் சிறந்த பிரார்த்தனை..
நன்றி துரை. பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.
Deleteவரும் நாட்கள் நன்னமை பயப்பனவாக இருக்கும் இறைவன் அருளால்.
ReplyDeleteசார் பூரண நலம் அடைவார்கள் பழைய மாதிரி அனைத்தும் நடக்கும்.
கதீட்டரை எடுத்து விட்டாலே நலம் தான்.
நம்பிக்கையோடு இருங்கள். உங்கள் தன்னம்பிக்கை உங்களுக்கு கை கொடுக்கும்.
கதீட்டரை எடுத்து விட்டாலும் அவ்வப்போது யூரின் போகையிலே வாரும் பிரச்னைகளைப் பார்த்துட்டு மறுபடி கதீட்டரே போட்டுக்கிறேன் எனச் சொல்கிறார். சமாதான வார்த்தைகள் சொல்லி, நடக்க முடிந்திருப்பதை எடுத்துக் காட்டிக் கதீட்டர் வேண்டாம்னு மனதில் பதிய வைச்சுக் கொண்டிருக்கேன். தன்னம்பிக்கை எனக்கு அதிகம் தான். ஆனால் அதுவே எதிரியாகவும் இருக்கு. பலரும் அவ பாட்டுக்குக் கவலைப்படாமல் இருக்கா பாருங்கனு சொல்றாங்க. நெருங்கிய உறவுகள் கூட. ராத்திரி நல்லவேளையாத் தனியாப் படுத்துக் கொள்வதால் அப்ப்போது அழுது தீர்த்துப்பேன்.
Deleteஊர் , உறவுகள் பேசுவதை வகை வைக்காதீர்கள் வருத்தப்பட்டால் உங்கள் உடம்பு கெட்டு விடும். சாரை கவனித்து கொள்ளும் பொறுப்பு உங்களிடம் இருக்கிறது. உங்கள் உடல் நலம் நன்றாக இருந்தால் தான் சாரை கவனித்து கொள்ள முடியும்.
Deleteஇறைவன் துணையிருப்பார். மனதை தளர விடாதீர்கள்.
நல்லதே நடக்கட்டும். மாமாவின் உடல்நிலை விரைவில் குணமடைய எங்களது பிரார்த்தனைகளும்.
ReplyDeleteதொலைக்காட்சி - என்னிடம் தில்லியில் இருந்ததை பத்து வருடங்களுக்கு முன்னரே கொடுத்துவிட்டேன். இப்போது திருச்சியிலும் கூட தொலைக்காட்சியின் தொல்லை இல்லை - கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக! இல்லாதது ஒன்றும் பெரிய இழப்பென்று தோன்றவில்லை.
நல்லது தான் வெங்கட். வேறு எந்தப் பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் கூடப் பார்ப்பதில்லை. நேரம் என்னமோ ஓட்டமாய் ஓடுகிறது. ஸ்ரீரங்கமா, தில்லியா? இரண்டு நாட்கள் முன்னர் தக்குடு பேசும்போது உங்களைப் பற்றிப் புகழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
Deleteமாமாவின் உடல் நலம் முன்னேறி இருப்பது தெரிகிறது கீதாக்கா மிக்க மகிழ்ச்சி. கேத்தீட்டர் இல்லாமல் செல்வதும் மருந்துகள் குறைத்திருப்பதும்.
ReplyDeleteஉங்களுக்கும் நேரம் சரியா இருக்கும்
கீதா
நேரம் பத்தலை தி/கீதா. ஓடுகிறது. இதுக்கு நடுவில் என் சித்தி பெண்(தங்கை) கான்சரினால் மரணம், என் தாய்மாமா மரணம்னு செய்திகள். எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு போய்க் கொண்டிருக்கேன்.
Deleteநம்ம வீட்டிலும் முதலில் பெரிய க்ரைண்டதான் இருந்தது இப்ப சமீபகாலமாகச் சின்னதுதான் பயன்பாட்டில். பெரிசில் நிறைய போடணும் மாவு நிறைய வரும் செலவாச்சு ஆனா இப்ப ஸ்டோர் பண்ணனும் அதுக்குப் பதிலா இப்பலாம் ரெண்டு நாள் தான்ற மாதிரி பயன்பாட்டில்.
ReplyDeleteடிவி ரிப்பேர் பண்ணி மாமாவின் ரூமில் போட்டால் சீரியல் எதுவும் பார்க்கலைனாலும், சில பாட்டுகள், கச்சேரிகள், பக்தி சானல்கள் பார்க்கலைனாலும் காதில் விழுமே இல்லையா அக்கா?
கீதா
முகநூலிலேயே நிறைய வருதே! அதைப் போட்டுடுவேன். அதுவே போதும்னு தோணும்.
Deleteஓகே ஓகே நீங்களே முகநூலில் வரும் கச்சேரிகள் ஸ்லோகங்கள் உபன்யாசங்கள் போடறீங்களே அது போதும் அக்கா.
ReplyDeleteகண்டிப்பாக வரும் நாட்கள் நன்மை பயப்பனவாக இருக்கும் கீதாக்கா. பிரார்த்திப்போம்.
கீதா
yesso yessu
Deleteமாமா தேறி வருகிறார் என்பது அறிந்து மனதுக்கு ஆறுதலாக இருந்தது.
ReplyDeleteவழி தெரிந்து இப்பொழுது தான் இந்தப் பக்கம் வந்தேன். இனி அடிக்கடி வருவேன்.
நன்றி ஜீவி சார். அடிக்கடி வாருங்கள்.
Delete