எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, April 06, 2026

நோ சமையல் டே!

 போன மாசமே பவர் கட் எனச் சொல்லி இங்கே உள்ள குடியிருப்போர்  குழுமத்தில் பகிர்ந்திருந்தனர். ஆனால் மறுநாள் வழக்கம்போலத் தான் இருந்தது. இன்னிக்குக் காலம்பர காலைக் காஃபி முடிச்சுட்டுப் பின்னர் சமையல் பண்ணுவதற்காகக் காய்கறிகளை எடுத்து வைக்க ஆறரை மணிக்குக் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்தால், மின்சாரம் இல்லை. வீடு முழுக்கக் கவனிச்சுப் பார்த்தோம். மாடி, கீழே எங்கேயும் மின்சாரம் இல்லை. பின்னர் பையர் எலக்ட்ரீஷியனுக்குத் தொலைபேசிக் கேட்டார். ஒருவேளை நம்ம வீட்டில் மட்டும் ஏதேனும் ட்ரிப் ஆகி இருக்குமோனு. அவர் இல்லைனு சொல்லிட்டார். காலனி முழுக்க மின்சாரம் இல்லை. அதுக்குள்ளே மருமகளின் வாட்சப்பில் இந்தப் பகுதியில் இன்று பராமரிப்புப் பணிகளுக்காக மின்சாரம் காலை ஏழு மணியிலிருந்து மதியம் இரண்டு மணி வரை இருக்காதுனு சொல்லி இருக்காங்க.  மற்ற நாடுகளில் எப்படியோ தெரியலை. இங்கே கத்தாரில், தோஹாவில் நாங்க இருக்கும் பகுதியில் மின்சார அடுப்புத் தான். சீக்கிரமாக ஆயிடும். ஆனால் கைகளை மறந்து கூட அடுப்புப் பக்கம் வைச்சுடக் கூடாது. அபார்ட்மென்ட் குடியிருப்புக்களில் எரிவாயு போல நினைக்கிறேன். தக்குடுவைக் கேட்டால் தெரியும். போன மாதம் குடும்பத்தோடு வந்து என்னைப் பார்த்துட்டுப் போனார். பழைய நினைவுகளை மறுபடி புதுப்பித்துக் கொண்டோம். 

தினமும் ஆறரைக்கெல்லாம் குளிச்சுட்டு வந்துடுவேன். இன்னிக்கு அறையைக் கொஞ்சம் சுத்தம் செய்ததால் குளிக்க தாமதம். கடைசியில் குழாயைத் திறந்தால் தண்ணீர் மெலிதாக வந்து கொண்டிருந்தது. சமையலறைக்குழாய், குளியலறைக்குழாய்னு எல்லாத்தையும் திறந்து பார்த்துத் தண்ணீர் வரலை என்பதால் குளிக்க முடியலை.  ஒன்பதரை பத்துக்குள் வந்துடுமோனு காத்திருந்தேன். குளிச்சுட்டு சமைச்சுடலாம்னு. என்னோட அலைபேசியில் இணையம் வரவில்லை. மருமகள் ஹாட் ஸ்பாட் போட்டுத் தரேன்னு சொன்னாள். ஆனாலும் இணையம் பார்க்க முடியாது. சார்ஜ் ரொம்பக் கம்மியாக இருந்தது. மதியம் இரண்டு மணிக்குள்ளாகத் தீர்ந்தே போயிடும். ஆகவே போட்டுக்கலை. ஆனாலும் இணையம் இல்லாமல் வாட்சப்போ, மெசேஜ்களோ, அழைப்புக்களோ  வராது. சும்மாக் கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சேன்.

பின்னர் குளியலறைக்குழாயில் மெலிதாக வந்து கொண்டிருந்த குழாய் நீரை  வாளியில் நிரப்பிக் கொண்டு (அம்மாடியோவ், சில்லோ சில்) குளிக்க ஆரம்பித்தேன், சுமார் பதினொன்றரை இருக்கும். அதுக்குள்ளே பையர் தொலைபேசியின் மூலம் நிலைமையைத் தெரிந்து கொண்டு சப்பாத்தி, சப்ஜிக்கு ஆர்டர் பண்ணிட்டார். நான் குளிச்சுட்டு வந்ததும் பனிரண்டு மணிக்கே மின்சாரமும் வந்தாச்சு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். வேறே என்ன செய்வது? பனிரண்டே காலுக்குச் சாப்பாடு வந்தது. தந்தூரி ரொட்டி, தால், காலிஃப்ளவர் சப்ஜி, பனீர் சப்ஜி, சாலட், கொஞ்சம் போல் பாஸ்மதி அரிசி. நெய்யில் வறுத்து வேக வைத்துக் கொத்துமல்லி தூவினது. ஆக மொத்தம் இன்றைய தினம் சமையல் இல்லாத நாளாக ஆகி விட்டது.



Thanks to google for the picture. 




20 comments:

  1. என்னுடைய அனுபவம், நான் பஹ்ரைனில் இருந்த 22 வருடங்களில் ஒரே ஒரு நாள்தான் 3-4 மணி நேரம் கரண்ட் இல்லை. மற்றபடி இரண்டு தடவை அரை மணி நேரத்திற்கு மேல் கரண்ட் இல்லாமல் இருந்தது.

    தோஹாவில் வெறும் பராமரிப்பு காரணமா இல்லை வேறு காரணமா?

    ReplyDelete
    Replies
    1. பராமரிப்புத் தான் காரணம் நெல்லை. இதுக்கு முன்னரும் இரண்டு முறை அறிவித்துப் பின் செய்யலை. இந்த முறை அறிவிச்சிச்சிருக்காங்க. எங்களுக்கு தாமதமாய்த் தெரிய வந்தது.நான் இங்கே வந்தப்புறமா இதான் முதல் முறை. அதுவும் இந்தக் குறிப்பிட்ட காலனியில் மட்டும்னு நினைக்கிறேன்..

      Delete
  2. உங்களுக்கு வந்த உணவு படத்தைக் காணோமே

    தண்ணீர் பிரச்சனை மின்சாரத்தினாலா? புரியலை.

    ReplyDelete
    Replies
    1. உணவு படம் எடுக்கலை. பேச்சுவாக்கில் மறந்திருக்கேன். தண்ணீர்த் தொட்டி தினமும் காலையிலேயே நிரம்பிடும். நேத்திக்குக் காலையிலேயே மின்சாரம் இல்லாததால் தண்ணீரும் தொட்டியில் மிச்சம் இருந்த நீரே வந்தது. ஆனால் பனிரண்டு மணிக்கெல்லாம் மின்சாரம் வந்து விட்டது.

      Delete
  3. அங்கேயும் இது போல மெயின்டெனன்ஸ் பவர் கட் இருக்கிறது என்பது ஆச்சர்யம்.  முன்னரே தெரிந்தால் உஷாராக இருந்திருக்கலாம்.  தேவையான தண்ணீரை பிடித்து வைத்துக் கொண்டு (அதற்கான வாளிகள் குடங்கள் இன்ன பிற இருந்தால்!) முன்னரே சமைத்து வைத்து.. 

    அதுசரி, சேமிப்பு மின்சாரம் யு பி  எஸ் இல்லையா?  அங்கு அடிக்கும் வெயிலுக்கு சோலார் கூட போடலாமே...!

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே இப்போத் தான் தெரியும் ஸ்ரீராம். மற்றபடி பெரிய அளவில் எல்லாம் ஒண்ணும் பிரச்னைகள் இல்லை. இதுவும் குறிப்பிட்ட எங்க ஏரியாவில் மட்டுமே! சேமிப்பு மின்சாரம் பத்தி எல்லாம் ஒண்ணும் தெரியாது. சோலார் பவர் எடுப்பதாகத் தெரியலை.

      Delete
    2. மின்சார பிரச்சனை கல்ஃப்பில் எங்குமே கிடையாது. இதெல்லாம் வெகு அபூர்வமான விஷயம். பஹ்ரைனில் 22 வருடங்களில் 2-3 தடவை பவர் கட் (வீட்டுக்குத்தான். அதுவும் அரை மணி நேரம்கூட இருக்காது) இருந்திருந்தாலே ஆச்சர்யம். ஒரு நாள், அதை கறுப்பு தினம்னு சொன்னாங்க, 5 மணி நேரத்துக்கு மேல் கரண்ட் இல்லை. எல்லோரும் மாலைப் பார்த்துப் போயிட்டாங்க. தண்ணீர் பிரச்சனை கிடையாது. பெண்கள் தைரியமா இருக்கலாம். எல்லாமே கிடைக்கும்.

      Delete
  4. ஆர்டர் செய்து வாங்கியவற்றையே ஃபோட்டோ பிடித்திருக்கலாமே..  கூகுளாண்டவரிடம் சரணடையாமல்!

    ReplyDelete
    Replies
    1. அதான் மறந்துட்டேன் ஸ்ரீராம். பதிவை வெளியிடும் முன்னரே நினைவு வந்தது. அதான் கூகிளாரைப் போய்க் கேட்டுப் போட்டேன்.

      Delete
    2. மறந்துருக்க மாட்டாங்க. என்னத்தை ஆர்டர் பண்ணினாரோ பையன் என்று பயந்து எல்லாத்தையும் பார்த்திருப்பாங்க. இல்லைனா பசி வயித்தக் கிள்ளியிருக்கும். ஹா ஹா

      Delete
    3. எது வேணா சொல்லிக்கோங்க நெல்லை. மறந்தது தான் நிஜம். ஏன்னா அப்போ நல்ல ஜில் தண்ணியில் குளிரக் குளிரக் குளிச்சுட்டு வந்ததும் உடனே மின்சாரம் வந்ததா? அந்தக் கடுப்பில் இருந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(

      Delete
    4. கோச்சுக்காதீங்க கீசா மேடம். ஜில் தண்ணீல குளிக்க கொடுத்துவைத்திருக்க வேண்டாமா? இன்று பெங்களூரில் நான் ஜில் தண்ணீலதான் குளித்தேன். அது சரி... சாப்பாடு நல்லா இருந்ததா?

      Delete
  5. கைகளை மறந்து கூட அடுப்பு பக்கம் வச்சுடக்கூடாதா?  ஷாக் அடிக்குமா?  இங்கே இன்று இப்போது கூட நான் எலெக்ட்ரிக் ஸ்டவ்வில்தான் மில்க் குக்கர் வைத்து காஃபி குடித்தேன்.  இங்கே தொட்டால் கூட ஷாக் அடிக்காதே...

    ReplyDelete
    Replies
    1. சூடு தாங்காது. கொப்பளிச்சுடும். பக்கத்தில் ஒரு பாத்திரம் வைத்திருந்தாலே சூடு ஏறிக் கையால் பிடித்து எடுக்க முடியாது. ஏசி குளிருக்கு இதமாகவும் இருக்கும். மின்சாரக் கம்பிகளெல்லாம் உள்ள்ள்ள்ளே தான் இருக்கும். மேலே ஃப்ரேம் உண்டு. முழுவதும் நன்றாக நம்ம ஊர் ப்ரெஸ்டிஜ் எரிவாயு அடுப்பைப் போல க்ளாஸ் டாப் ஆக இருக்கும். துடைக்கிறதெல்லாம் சுலபம்.

      Delete
  6. ஃப்ரீ டே!
    முழுவதும் மின்சாரம் என்றாலும் கஷ்டம்தான். ஆனால் அங்கு அடிக்கடி பவர் கட் ஆகாது என்று நினைக்கிறேன், அக்கா

    அமெரிக்காவிலும், மின்சார அடுப்புதான்.

    இங்கு இப்ப சமையலுக்கு மின்சாரத்தைக் கொஞ்சமேனும் சார்ந்திருக்கும் நிலை பலருக்கும். கேஸ் பிரச்சனை ஆயிற்றே.

    நம் வீட்டில் ஏற்கனவே Steamer, Induction என்று சமைப்பதால் கேஸ் 3 மாதங்களுக்கு வரும் என்பதால் சமாளித்துவிடலாம் தான். ஆனால் மின்சாரம் சில சமயங்களில் அடிக்கடி போய்விடுகிறது. வந்துவிடும் என்றாலும்....நம்பி வருவது வரை காத்திருக்க முடியாதே.

    உங்களால் சாப்பிட முடிந்ததா? அந்த ரோட்டி, சாதம் எல்லாம்?

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா. அடிக்கடி எல்லாம் இல்லை. இது கூட எங்க ஏரியாவிலே மட்டும் தான். அம்பேரிக்காவில் மாநிலங்களுக்கு மாநிலம் வித்தியாசப்படும். எங்க பெண் மினியாபோலீஸிலே இருந்தப்போ, பாஸ்டன், பின்னர் ஃப்ளோரிடா, கலிஃப்போர்னியாவில் எல்லாம் மின் அடுப்புத் தான் என்றாள். பின்னர் டெனிசியிலும் மின்சார அடுப்பு. ஆனால் கம்பிகள் வெளியிலேயே தெரியும்படி அமைச்சிருந்தாங்க. ஃபுல்காவெல்லாம் சுட முடியாது. கம்பியில் போய் மாட்டிக்கும் ஆபத்து உண்டு. ஆனால் சூடு தாங்காது தான். இங்கே இப்போ டெக்ஸாஸ் வந்தப்புறமா இங்கே தான் எண்ணெய், எரிவாயு இரண்டும் உண்டே. ஆகவே பைப் லைன் எரிவாயு தான். ஹூஸ்டனில் பையர் வீட்டிலும் எரிவாயு தான். மிகச் சில இடங்களில் மின் அடுப்பும் இருக்கும். பெரும்பாலும் எரிவாயு. ஃபுல்கா பண்ண வசதியா இருக்கும்.

      Delete
  7. ரோட்டி பாக்க நல்லா இருக்கு. மைதாவா கோதுமையா? இங்கு பெரும்பாலான உணவகங்களில் மைதா

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சுத்தமான கோதுமை ரொட்டி. நல்ல ப்ரவுனாக இருந்தது. மிருதுவாகவும் இருந்தது. வீட்டிலும் கோதுமை மாவு வாங்கித் தான் பண்ணுகிறோம். ஆனால் சுட முடியாது. ஆகவே நான் எனக்கு மட்டும் தவாவிலேயே போட்டு சிந்திக்காரங்க மாதிரி ஃபுல்கா பண்ணிப்பேன், அவங்களுக்கு எல்லாம் நெய் விட்டு வாட்டி எடுத்துப்பாங்க. நான் மேலே கொஞ்சமாக நெய் தடவிப்பேன்.

      Delete
  8. பவர் கட் என்றால் சமைப்பது கஷ்டம். மகன் வீட்டில் முன் மின் அடுப்புதான் இருந்தது.
    இப்போது கேஸ் அடுப்புக்கு மாறி விட்டார்கள். பை லைன் கேஸ் வந்து விட்டது.
    உங்களுக்கு ஒரு நாள் சமையல் வேலையிலிருந்து ஓய்வு கொடுக்க பவர் கட் ஆனது போலும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, உங்க கருத்தை இப்போத் தான் பார்க்கிறேன். அம்பேரிக்காவில் மின் அடுப்பும், எரிவாயுவுமாக மாறி மாறி இருக்கும் போல. இங்கே எங்க பையர் வீட்டில் மின் அடுப்புத் தான். ஒருவேளை நகருக்குள்ளே எரிவாயு அடுப்பு இருக்குமோ என்னமோ தெரியலை. அம்பியின் தம்பி தக்குடு எரிவாயு அடுப்புனு சொன்ன நினைவு.

      Delete