எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, June 16, 2026

வருஷம் முடிஞ்சது நல்லபடியாக!

 


நேத்திக்கு ஹோமம் செய்யும் இடத்தில் மாமா படம் வைச்சு மாலை எல்லாம் போட்டிருந்தோம். அதைத் தான் இங்கே பகிர்ந்திருக்கேன். கீழே எங்க வீட்டு ராமர் இப்போதைய நிலையில்.




ஜூன் ஆறாம் தேதி இங்கே ஸ்ரீரங்கம் வீட்டுக்கு வந்தோம். வந்ததில் இருந்து ஒரே அலைச்சல். இன்னிக்கு இப்போத் தான் கொஞ்சம் உட்கார நேரம் கிடைச்சிருக்கு.  ஆறு, ஏழு தேதிகளில் வீட்டின் மின் சாதனங்களைச் சரி பண்ணவே நேரம் ஆகி விட்டது. திங்களன்று கண் பரிசோதனைக்கு இங்கே உள்ள ஜோசஃப் மருத்துவமனைக்குப் போனோம். கிட்டத்தட்ட நூறு வருடங்கள் ஆகப் போகிறதாம் இந்த மருத்துவமனைக்கு. எனக்கு மஹாத்மா காந்தி மருத்துவமனைக்குத் தான் போகவேண்டும் என்னும் எண்ணம். ஆனால் இப்போது அங்கே சேவை சரியில்லை எனச் சொல்லிட்டாங்க. நான் வலக்கண் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனையின் மருத்துவர் இப்போ பாதி நாட்கள் இங்கேயும், பாதி நாட்கள் வெளி நாட்டிலேயும் இருக்காங்களாம். அவங்க உதவி மருத்துவர் தான் இப்போச் சிகிச்சை செய்வதாகச் சொன்னாங்க. காலையிலேயே போயிட்டு வீட்டுக்கு வர ஒன்றரை மணி. வந்து தான் சாப்பிட்டோம். 

மறுநாள் பரிசோதனைகள். அதுக்கும் காலையிலேயே போயிட்டு நேரம் எடுத்து விட்டது. வீட்டுக்குப் பதினொன்றரை மணிக்குத் தான் வந்தோம். இதெல்லாம் முடிஞ்ச மறு நாளே வருடாந்திரக் காரியங்கள் ஆரம்பிச்சு ஆச்சு. நல்லவேளையாக இம்முறை சமையலுக்கு ஆளைப் போட்டு விட்டேன். மனிதர்கள் நிறைய என்பதால் கூட ஒரு ஆளையும் வைச்சுக்கச் சொன்னேன். அவங்க கணவரே வந்துட்டார் அதுக்கு. எல்லாக் காரியங்களும் நல்ல முறையில் நடந்தது. கடைசி நாளான நேற்று மனசுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. என் அண்ணா, மன்னி, தம்பி, தம்பி மனைவி, தம்பியின் மருமகள், அண்ணா பெண், மற்றும் நாத்தனார்கள், மைத்துனர் குடும்பம், சம்பதி குடும்பம் எல்லோரும் வந்திருந்தனர். நேற்றிரவு எல்லோரும் ஊருக்குப் போயாச்சு. 

இன்னிக்குத் தான் 3 நாட்கள் துணியைச் சேர்த்து வைச்சிருந்தேன். துவைச்சு உலர்த்தி எடுத்து வைச்சுட்டு மத்தியானம் கொஞ்சம் படுத்துக் கொண்டேன்.  .நாளை அறுவை சிகிச்சை என்பதால் இன்னிக்குக் கண்ணில் இரண்டு மணிக்கொரு தரம் மருந்து விட்டுக்கச் சொல்லி இருப்பதால் மருந்து விட்டுக் கொண்டிருக்கேன். அது என்னமோ மயக்க மருந்து கொடுத்துப் பண்ணப் போறாங்களாம். என்னனு புரியலை. :(   நடுவில் கணினியில் சிறிது நேரம் உடகாரலாம்னு வந்திருக்கேன். நாளைக் காலையிலேயே மருத்துவமனைக்குப் போகணும். நாளைக்குத் தான் கண்ணில் அறுவை சிகிச்சை. ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்த வலக்கண்ணில் லென்ஸைச் சுத்தி ஏதோ முளைச்சிருக்காம். என்ன விதை விதைச்சாங்களோ தெரியலை. அதையும் சுத்தம் செய்யணும். ஆனால் இப்போ இல்லை. பத்துநாட்கள் கழிச்சு. இப்போதைக்கு நாளைக்குக் கண் அறுவை சிகிச்சை என்பதால் மறுபடி சில நாட்கள் வருவது கஷ்டம் தான். பார்க்கலாம்


11 comments:

  1. ​நெருங்கிய உறவினர் அனைவரும் வருட நிறைவு அஞ்சலியில் பங்கேற்றது போற்றற்குரியது.

    Jayakumar

    ReplyDelete
  2. வருஷாப்தீகம் நல்லபடி நிறைவுற்றது மகிழ்ச்சி. நாற்காலியில் உயரமாக உட்காரும் மாமா சிறிதாக படத்தில்.. கஷ்டமாக இருந்தது.

    ReplyDelete
  3. உங்கள் கண் சிகிச்சை வேலைகள் நடக்கின்றனவா? நல்லது. நல்லபடி சரியாகட்டும்.

    ReplyDelete
  4. அதென்ன, ஏற்கனவே வைத்த லென்ஸைச் சுற்றிலும் புதிதாக ஏதோ?  ஏன் அப்படி? 

    ReplyDelete
  5. வருஷாப்தீகம் விக்னம் இல்லாமல் நல்லா நடந்தது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

    நான் சாம்பசிவம் சாரின் நல்ல படம் வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. இங்க வந்தபோதே சின்னச் சின்னப் பிரச்சனைகளைச் சரி செய்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரி

    நீங்கள் நல்லபடியாக ஊர் திரும்பி, மாமாவின் ஒருவருட காரியங்கள் உங்கள் உற்றம், சுற்றமுடன் நடந்தேறியது என்றாலும், அந்த தினத்தில் தங்களின் மனவலி மிகவும் கஸ்டமானதே..! எத்தனை வருடங்கள் ஆனாலும், உங்களின் நினைவு முழுக்க அவர்தான் வீற்றிருப்பார். மறக்கக் கூடிய பந்தமா? இந்த இடத்தில் இறைவனின் சோதனைகளுக்கு நாம் ஆட்ப்பட்டுதானே ஆக வேண்டி உள்ளது.

    பச்சைக்கலர் ராமர் படத்தில் ஸ்ரீராமரை தரிசித்துக் கொண்டேன். அவரும் உங்களைக் காண ஆவலோடு பூட்டிய வீட்டில் இத்தனை நாட்களாக காத்திருந்திருப்பார்.

    தங்களின் கண் சிகிச்சை நல்லபடியாக நடந்து பிரச்சனைகள் ஏதுமின்றி நீங்கள் நலமாக இருக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. நன்றி சகோதரி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. வருஷாப்தீகம் நல்ல படியாக நடந்தது மனதுக்கு திருப்தியாக இருந்திருக்கும்.

    கண்ணில் அறுவை சிகிச்சை முடித்து நலமாக வாருங்கள்.

    ReplyDelete
  9. ஹப்பா ஒரு வருடம் ஓடி விட்டது. எல்லாம் நல்லபடியாக முடிந்தது ..

    இப்பவும் ராமர் அழகாதான் இருக்கிறார்!

    கீதா

    ReplyDelete
  10. வலக்கண்ணில் லென்ஸைச் சுத்தி என்னவாம் அது?

    இப்ப கண் சிகிச்சை நல்லபடியாக முடியட்டும்...எல்லாம் நலல்தே நடக்கும் கீதாக்கா

    கீதா

    ReplyDelete
  11. ஜோசஃப் கண் ஆஸ்பத்திரி நல்ல ஆஸ்பத்திரி. நல்ல முறையில் சிகிச்சை அளிப்பார்கள். Take care.
    ராமர் படம் நன்றாக க்லேர் அடிக்காமல் வந்திருக்கிறது. இன்னும் எத்தனை நாட்கள் திருச்சியில் இருப்பீர்கள்?

    ReplyDelete