எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 27, 2006

145.மழையில் நாங்கள்

இன்னிக்கு நாங்கள் பம்பாய் போனோமா இல்லையானு தெரியலைன்னா வீட்டுக்கு ஆட்டோ வந்துடும் போல் இருக்கு. ஆனால் ஆட்டோ எதுவும் உள்ளே வர முடியாது. பேப்பர்காரன், பால்காரன் எல்லாம் நொந்து நூலாகிப் போயிட்டாங்க. பேப்பர் 10 மணிக்குத் தான் வருது. பால் வர 7-00 மணி ஆயிடுது. அவ்வளவு தண்ணீர், தண்ணீர், தண்ணீர். கொண்டு வராங்களே அதுவே பெரிசு. போன வருஷம் முதல் மழையில் இவ்வளவு தண்ணீர் வரலை. இந்த வருஷம் ஆரம்பிச்சதுமே எங்கும் தண்ணீர், எதிலும் தண்ணீர் தான். தண்ணீர் கொரட்டூர் ஏரிக்குப் போற வழியை வேறே அடைச்சுட்டாங்க. எங்க தெருவிலே போட் செர்வீஸ் ஆரம்பிக்கலாமான்னு யோசிக்கிறோம். போன வருஷம் மடிப்பாக்கத்திலே நிஜமாவே "போட் செர்வீஸ்" இருந்தது.போன வருஷம் மழையில் எங்க வீட்டிலே 2 ரூமைத் தவிர சமையல் அறை, ஹால், படுக்கை அறை எல்லாம் தண்ணீரால் நிரம்பி விட்டது. எல்லாம் தண்ணீர் போக வழி இல்லாத காரணத்தால் உள்ளே வந்தது தான். தண்ணீர் போகும் வாய்க்கால் அடைச்சாச்சு. அங்கே வீடுகள் வந்தாச்சு தண்ணீர் எங்கே போகும்? தெருவே மிதந்தது. இப்போவும் தோட்டம் எல்லாம் ரொம்பி வழியுது. வெளியே இப்போவே எங்க வாசல் வராந்தாவுக்கு வந்துட்டிருக்கு. . வெளியே தெருவில் தண்ணீர் ஓடினால் இங்கே உள்ள தண்ணீரை வெளியே விடமுடியும். ஆனால் இங்கே என்னடான்னா வெளியே ரோடில் உள்ள தண்ணீர் உள்ளே வந்துட்டு இருக்கு. எல்லாம் நம்ம head letter தான் வேறே என்ன? ச்யாம், இந்தப் பேரை அடிக்கடி உபயோகிக்கறதுக்கு no royalty.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பால்கரில் செளராஷ்ட்ரா மெயில் நின்று கொண்டு இருந்தது. நாங்களும் வண்டியில் உட்கார்ந்து கொண்டு எப்போது கிளம்பும்னு யோசித்துக் கொண்டிருந்தோம். பக்கத்துப் ப்ளாட்ஃபார்மில் ஒரு வண்டி பால்கரில் இருந்து தாதருக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தது. எங்கள் வண்டியில் இருந்து சிலர் அதில் ஏறினார்கள். என்னடா இதுன்னு யோசிக்கும் போதே வண்டி சட்டுனு கிளம்பிவிட்டது. சரி, ஏதோ அவசரமாப் போவாங்கனு நினைச்சோம். ஒரு 1/2 மணி நேரத்துக்கு எல்லாம் விரார் என்னும் ஸ்டேஷனில் இருந்து ஒரு வண்டி வந்தது. இது போரிவிலிக்கு முன்னாலே அதாவது பால்கருக்கும், போரிவிலிக்கும் நடுவில் வரும். அந்த வண்டியில் இருந்து வந்தவர்கள் எங்களைப் பார்த்து, அதாவது எங்களை மட்டும் இல்லை பொதுவாக எங்கள் வண்டியில் இருந்தவர்களைப் பார்த்து நீங்க இன்னிக்குப் போக முடியாது. இங்கே இருந்து போன வண்டியும் பாதி வழியிலே நிக்குது. என்று சொன்னார்கள். எங்களுக்குத் தூக்கி வாரிப் போட்டது. கீழே இறங்கி யாரையாவது கேட்கலாம்னு யோசிக்கும்போது ஒலிபெருக்கியில் அறிவிப்புச் செய்தார்கள். பலத்த மழை காரணமாக வண்டி இன்று பம்பாய் செல்லாது எனவும், அங்கிருந்து வண்டி வர அறிவிப்பு வந்ததும்தான் கிளம்பும் எனவும் சொன்னார்கள். "இப்போ என்ன செய்யறது?" எங்களுக்கு அதிர்ச்சி. இதுக்கு முன்னாலே எல்லாம் இம்மாதிரி நடந்திருக்கு. அதுவும் முதல்முறை என் பெண் பிறந்து மதுரையில் இருந்து சென்னை வரும்போது சனிக்கிழமை காலை கிளம்பி ஞாயிறு அன்று இரவு மதுரை வந்து சேர்ந்தோம். அப்போவும் இதே மழை, வெள்ளம்தான். அப்போ அப்பாவும், அம்மாவும் கூட இருந்தார்கள். அதனால் பயம் எல்லாம் இல்லை.

இதே மாதிரி ஒரு 2 வருஷத்துக்கு முன்னால் நசிராபாத்தில் இருந்து செகந்திராபாத் "காச்சிகுடா எக்ஸ்ப்ரஸ்ஸில்" போகும்போது (மீனாட்சி எக்ஸ்ப்ரஸ்னு பேர் மாறிடுச்சு) வண்டி தடம் புரண்டு விட்டது. அதே வண்டி இஞ்சின் எரிந்து போனது. ஆனால் அப்போ எல்லாம் என் கணவர் எங்களுடன் இருந்தார். ஆகவே முடிவு எடுக்கும் பொறுப்பு அவரிடம் இருந்தது. நாங்கள் உண்மையில் அந்தப் பிரயாணங்களை ரொம்பவே ரசித்தோம். ரெயில் நடுக்காட்டில் தடம் புரண்டு நின்றதும் பக்கத்து ஸ்டேஷன்களுக்கு எப்படித் தகவல் கொடுக்கிறார்கள் என்பதில் இருந்து மீட்பு வண்டி வந்து எப்படி மீட்கிறது என்பது வரை பார்த்தோம். அங்கேயே கூட வந்தவர்களில் சிலர் கல்லை அடுக்கி அடுப்பு மூட்டித் தேநீர் தயார் செய்து (பக்கத்துக் கிராமத்தில் இருந்து பால் வாங்கி வந்தார்கள்) எல்லாருக்கும் கொடுத்தார்கள். ஏதோ பிக்னிக் மாதிரி இருந்தது. தவிர அந்த வழியில் ரெயில் பிரயாணமே ரொம்ப ரசிக்கும்படியாய் இருக்கும்.

இப்போ என்ன செய்யறது? பம்பாய் எங்களுக்குப் புதிசு. போரிவிலி கருப்பா, சிவப்பா தெரியாது. மச்சினன் இருப்பது தத்தபாடா ரோடு என்று தெரியும். ஆனால் அது மேற்கு, கிழக்கு இரண்டு பகுதிகளையும் இணைக்கும் என்பதோ அவன் கிழக்குப் பகுதியில் இருந்தான் என்பதோ தெரியாது. அப்போ எங்க 2 பேர் கிட்டேயும் வீட்டில் தொலைபேசி இல்லை. ஃபோனிலும் தகவல் தெரிவிக்க முடியாது. கீழே இறங்கி ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டதற்கு வேறு ஏற்பாடு ஏதும் செய்யவில்லை. எங்களுக்கு அலுவலகம் மூலம் தகவல் வந்தால்தான் செய்ய முடியும் என்றும் வண்டி சீக்கிரம் கிளம்பும் என்பதால் செய்யவில்லையோ என்று தான் நினைப்பதாகவும் தெரிவித்தார். மணி 10, 12 என்று ஓடிக் கொண்டு இருந்தது. ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அங்கே ஸ்டேஷன் வாசலில் இருந்த ஆட்டோ, வாடகைக் கார் முதலியனவற்றில் போய்க் கொண்டிருந்தார்கள். எங்கள் பெட்டியிலும் உள்ளவர்கள் எல்லாம் இறங்கி நாங்களும், ராஜ்கோட்டில் ஏறியவர்களும்தான் பாக்கி. அவர்களும் போரிவிலிதான். ஆனால் அவர்கள் 7,8 பேர் இருந்தார்கள். மேலும் போரிவிலி மேற்கு என்றார்கள். நான் ரொம்பச் சமர்த்தாக நாங்கள் மேற்கா, கிழக்கா எனத்தெரியாது என்பதைச் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேன். வேறு வழியில்லாமல் 1 மணி போல் இருக்கும் நாங்களும் இறங்கினோம். மூட்டை, முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வெளியே வந்து ஒவ்வொருத்தராகக் கேட்டோம். அவர்கள் கேட்ட பணத்தில் நான் ஒரு ஆட்டோவே வாங்கலாம் போல் இருக்கே என்று நினைத்தேன். ஒன்றும் சரிவராமல் பேசாமல் உள்ளே போய் உட்காரலாம். வண்டி கிளம்பும்போது ஏறிக் கொள்ளலாம் என்று நினைத்தபோது ஒருத்தர் தான் ஆட்டோவை எடுத்துக் கொண்டு வருவதாகவும் 400ரூ கொடுத்தால் போதும் எனவும் சொன்னார். நாங்கள் 200ரூ தான் கொடுக்க முடியும் என்று சொல்ல அவர் கடைசியில் 250/க்கு ஒத்துக் கொண்டு எங்களை ஏற்றிக் கொண்டார். போரிவிலியில் எங்கே என்று கேட்க நான் ரொம்பத் தெரிந்த மாதிரித் "தத்தப்பாடா ரோடு," என்றேன். அவர், "பஹின் ஜி., தத்தபாடா ரோட் மே கஹான்? பூர்வ் யா பஸ்சிம்?" என்று கேட்க, நான், "ஆப் ஜாயியே, மை பதாதி ஹும்." என்று சொன்னேன். ஆட்டோ கிளம்பியது.

20 comments:

  1. ஆமாங்க, போன தடவை பெய்த பேய் மழையில் நானும் மாட்டிக் கொண்டேன். சும்மா சென்னையே மிதந்துக்கிட்டுல இருந்துச்சு. அப்ப கூட பாருங்க நீந்தியே வாரத்துக்கு ஒரு தடவை சென்னைக்கு வந்து போயிக்கிட்டு இருந்தேன். அதிலும் காசி தியேட்டர் அருகில் இருக்கும் பாலத்தை தொட்டு கொண்டுல தண்ணீர் ஒடியது.

    அது போல கொள்ளிடம் பாலத்தை தாண்டி தண்ணீர். மறக்க முடியாது நாட்கள் :)))))))0

    ReplyDelete
  2. //2 ரூமைத் தவிர சமையல் அறை, ஹால், படுக்கை அறை எல்லாம் தண்ணீரால் நிரம்பி விட்டது//

    ஆஹா..கண்ணு முன்னாடி அப்படியே அந்த காட்சி தெரியுது.. நீச்சல் எல்லாம் தெரியுமா மேடம்

    ReplyDelete
  3. //எல்லாம் நம்ம head letter தான் வேறே என்ன? //

    ஏரியெல்லாம் வீடாப் போச்சு, மண்ணுக்குள்ள போக வேண்டிய மழைநீர் கான்கிரீட் வழியா போயி கடலில் விழுது. எல்லாம் நொந்துக்க வேண்டியதுதான்.

    ஆனாலும் அட்ரஸ் கூட இல்லாம இந்த மாதிரி நான் சொல்லறேன்னு சொல்லி ஆட்டோ ஏறறது எல்லாம் கொஞ்சம் ஓவர் இல்ல?

    ReplyDelete
  4. //"ஆப் ஜாயியே, மை பதாதி ஹும்." என்று சொன்னேன். ஆட்டோ கிளம்பியது.//kadaisiyilae porv ponnengala ,illa,pooravum boreville suthuneengala.LOL!நல்ல பொருமைங்க உங்களுக்கு.மழை நீரில் மிதந்து கொண்டும்,மின்வெட்டை பொறுத்துக் கொண்டும் அழகான பதிவு போட்டு உங்கள் பயணங்களை பகிர்ந்து கொள்வதற்க்காக உங்களுக்கு ஒரு ஷபாஷ்.

    அதென்னங்க,என்னை ப்ளாக் பேர் மாத்துங்கன்னு ...ஒண்ணும் புரியலை.நீங்க சண்டை போடுங்க,ஆணால் இரண்டு கை தட்டினால் தானே பிரச்சனை.--SKM

    ReplyDelete
  5. தலை(வலி)வி வாழ்க...வாழ்க வாழ்க...இப்பிடியே எத்தனை நாளக்கு தான் பொழப்ப ஓட்டுறது...யே ஆண்டவா....எல்லோருக்கும் அஞ்சு வருசம் தான் பதவி...இவங்க நிறந்தர தலைவினு இப்படி நல்ல நல்ல பதிவா போடுறாங்களே...இத எல்லாம் நீ கேக்கமாட்டியா..... :-)

    ReplyDelete
  6. கதையிலும் மழை...நிஜத்திலயும் மழை. இது என்ன மழை வாரமா மேடம்?

    //போரிவிலியில் எங்கே என்று கேட்க நான் ரொம்பத் தெரிந்த மாதிரித் "தத்தப்பாடா ரோடு," என்றேன். அவர், "பஹின் ஜி., தத்தபாடா ரோட் மே கஹான்? பூர்வ் யா பஸ்சிம்?" என்று கேட்க, நான், "ஆப் ஜாயியே, மை பதாதி ஹும்." என்று சொன்னேன். ஆட்டோ கிளம்பியது.//

    ஹூம் அப்புறம். ஊரை எல்லாம் சுத்தி காட்டிட்டு "மீட்டருக்கு மேல எதுனா போட்டு குடுங்க"ன்னு கேட்டாரா?
    :)

    ReplyDelete
  7. சிவா, இந்த முறை மழை இப்போதான் ஆரம்பிச்சு இருக்கு. அதுக்குள்ளே சென்னை மிதக்குது. நெட்லே பேப்பர் பார்ப்பீங்க தானே? பாருங்க. ரொம்பவே மோசமா இருக்கு.

    ReplyDelete
  8. என்ன சார் இது, ஆஜர் மட்டும் கொடுத்துட்டுப் போயிட்டீங்க? வீட்டிலே சமையல் வேலையா? :D

    ReplyDelete
  9. கார்த்திக், நீச்சல் எனக்குத் தெரியாது. எங்க வீட்டிலே தண்ணீரைப் பிழிஞ்சு தான் எடுத்தோம். சிலர் வீட்டிலே மோட்டார் வைத்து இறைத்தார்கள். என்னத்தைச் சொல்றது? மழை தேவையாத் தான் இருக்கு. ஆனால் நீர் வடிய தகுந்த ஏற்பாடுகள் சென்னையில் எங்குமே இல்லை.

    ReplyDelete
  10. இ.கொ. நான் தான் சொன்னேனே?முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பில் நான் இருந்தேன். ஒரு 10,20 பேர் இருந்தாலும் ஸ்டேஷனிலேயே தங்கி விடலாம். ஊரும் சற்றுத் தள்ளி இருந்தது. வேறு வழியில்லாமல் எடுத்த முடிவு. அதே நேரம் எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு காட்டிக்கக் கூடாதுன்னு நாங்க முன்னாலேயே ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு விட்டோம். ஆகவே நடந்ததைத் தான் எழுதுகிறேன். தொடர்ந்து படிக்கிறீங்க இல்லை? வரவுக்கு நன்றி. உங்களை மாதிரி மூத்த பதிவாளர் (ஹிஹிஹி வயசைச் சொல்லலை, பதிவு எழுதறதைச் சொல்றேன்) வந்து பின்னூட்டம் எழுதறது எனக்கு ரொம்பப் பெருமை.

    ReplyDelete
  11. சண்டைக்கோழி அம்மா, நீங்க தமிழிலே எழுதறதாலே புதிசா வலைப்பக்கம் திறக்கச் சொன்னேன். பழைய வலைப்பக்கம் உங்க பெண்ணோடதுன்னு சொன்னீங்க அதனாலே, நான் சண்டை எல்லாம் ஒண்ணும் போடலை. அப்படி புதுசாத் திறந்தா எனக்கு விலாசம் கொடுங்கன்னு சொன்னேன். மேலும் உங்க வலைப்பக்கத்தில் நான் வந்து பார்த்தப்போ ஒரு பதிவின் பேர் மட்டும் தான்(poetic side) இருந்தது. சரி, நீங்க விலாசம் மாத்திட்டீங்கன்னு நானா நினைச்சேன். தவறுதலாக எழுதியதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  12. ச்யாம், என்ன இந்த மழையிலே கூட இப்படிப் புகை வருது? தீசல் வாசனை வாஷிங்டனிலே இருந்து இங்கே வருது, பார்த்து. நீங்க வாங்கற பின்னூட்டத்தைப் பார்த்து நான் புகை எல்லாம் விடறேனா என்ன? :D

    ReplyDelete
  13. கைப்புள்ள, நீங்க எல்லாரும் நினைக்கிறது எல்லாமே தப்பு. உண்மையில் நடந்தது ஒரு சினிமாவில் கூட நடக்காது. பாருங்க புரியும். அஹமதாபாத்திலே இப்போ கொஞ்சம் கொஞ்சம் குளிர ஆரம்பிச்சிருக்கும். இல்லையா?

    ReplyDelete
  14. இன்னிக்குப் பலமுறை முயற்சித்தும் பப்ளிஷ் செய்ய முடியவில்லை. There were errors என்றே வருகிறது. ஆகவே எழுத நினைத்த "ஓம் நமச்சிவாயாவும்" நாளைதான். அநேகமா நாளைக்குச் சோதனைமேல் சோதனைன்னு பதிவு போடலாமான்னு இருக்கேன்.

    ReplyDelete
  15. some error is coming and my new edition is not here. please try october 2006 to see it. I am sorry for the inconvenience. I will try to make it by tomorrow. Thank you for tolerance.

    ReplyDelete
  16. //இன்னிக்குப் பலமுறை முயற்சித்தும் பப்ளிஷ் செய்ய முடியவில்லை. There were errors என்றே வருகிறது. ஆகவே எழுத நினைத்த "ஓம் நமச்சிவாயாவும்" நாளைதான். அநேகமா நாளைக்குச் சோதனைமேல் சோதனைன்னு பதிவு போடலாமான்னு இருக்கேன். //

    தேவுடா! படிப்போர்க்குச் சோதனையான சோதனைப் பதிவு நாளைக்கு வரவச்சுடாதே!

    திருவிளையாடல்ல வர்ற "இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை..." பாட்டைப் பாடிட்டேன் சிவனே கீதாஜிக்கு ப்ளாக்கர்ல வர்ற There were errors போகக் கடவது. மேட்டர் பப்ளிஷ் ஆகட்டும்! :-)))

    ReplyDelete
  17. //அநேகமா நாளைக்குச் சோதனைமேல் சோதனைன்னு பதிவு போடலாமான்னு இருக்கேன்//

    எங்களுக்கு தான :-)

    ReplyDelete
  18. ஹரிஹரன், நேத்துப் பதிவு வந்து உங்களுக்குச் சோதனை ஆரம்பிச்சுடுச்சு. அநேகமா புலி சூடானிலே இருந்து ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இன்னும் மெயில் பார்க்கலை. பார்த்தால் தான் தெரியும்.
    அப்புறம் கைலாஷ், மானசரோவர், நேபாள் ஃபோட்டோ ஆல்பம் அழைப்புக் கடிதம் வந்ததா? வராட்டி சொல்லுங்க, மறுபடி அனுப்பறேன். தினமும் வந்து கேட்கணும்னு நினைப்பேன். எங்கே கணினியிலே சரியா உட்கார்ந்தே பத்து நாள் ஆகப் போகுது. இன்னிக்கு எப்படியோ? சோதனை இந்த மதுரைக்கோ அல்லது வலை உலகு வாசிகளுக்கோ? :D

    ReplyDelete
  19. ஹிஹிஹி, ச்யாம், சோதனைதான் உங்களுக்கு. நேத்துப் பதிவு வந்துடுச்சு, எல்லாம் உங்க பங்காளி வேலையாத்தான் இருக்கும். அதனாலே அவர் கிட்டேப் போய்ச் சொல்லுங்க. :D

    ReplyDelete