எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 28, 2006

146. மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்

துப்பார்க்குத் துப்பாய தூவும் மழை"

வள்ளுவரும் சொல்லிட்டுப் போயிட்டார். .இளங்கோவடிகளும் சொல்லிட்டார். ஆனால் அவங்க

காலத்திலே இந்த மாதிரி ஏரியிலே வீடுகள் எல்லாம் வரலை. அதனாலே அவங்களுக்கு என்ன

புரியும்? மழையும் வேணும், அதே சமயம் தண்ணீரும் தேங்கக் கூடாதுன்னா இந்த ஆக்கிரமிப்பை அகற்றினாலே போதும். என்ன செய்யப் போறாங்களோ தெரியாது.

நேத்திக்கு எங்க தெருவிலே தேங்கின தண்ணீரை ஓடச் செய்ய வேண்டி கவுன்சிலருக்கு

தொலைபேசியதில் அந்த அம்மா அவங்க கணவரை அனுப்பினாங்க. முதலில் போய்ப் பார்த்து விட்டு வந்த என் கணவர் திரும்ப வேகமாக வந்து மறுபடி போகணும் டீ போட்டுத் தா குடிச்சுட்டுப் போறேன்னு சொன்னார். சரின்னு டீ போட்டுக் கொடுத்துட்டு வீரத் திலகம் இட்டு வழி அனுப்பி வைத்தேன். அக்கம்பக்கம் வீட்டுக் காரங்க எல்லாம் சேர்ந்து ஒரு 10,20 பேர் போனாங்க. முழங்கால் தண்ணீர் இருக்கிறதை ஓடப் பண்ணினால் போதும்னு கேட்டதுக்கு இணங்க அங்கங்கே தெருவில் சில மேடான இடங்கள் உடைத்து விடப் பட்டது. இப்போ

மழை பெய்தாலும் ஓரளவு கட்டுக்குள் அடங்கியே தண்ணீர் இருக்கிறது. இன்னும் முழுசும்

ஓடவில்லை. தண்ணீர் போய்ச் சேரும் இடம் அடைப்பு. கொஞ்ச நாள் ஆகும் போவதற்கு. நேத்து மத்தியானம் 1-00 மணிக்குப் போனவங்க எல்லாம் நடுவில் ஒரு 10 நிமிஷம் வீட்டுக்கு வந்துட்டு எல்லாம் முடிந்து வரும்போது மணி 5-00 ஆகி விட்டது. வெற்றித் திலகம் இட்டு ஆரத்தி எடுக்காத குறைதான். வேறே என்ன சொல்றது? நிறைய வீட்டில் நேத்துச் சாயங்காலம் மழை பெய்யும் போது இடித்த இடியில் தொலைக்காட்சிப் பெட்டி, கணினி என்று சில மின் சாதனங்களும் வீணாகி விட்டது. நாங்க முன் ஜாக்கிரதை முத்தண்ணா & முத்தக்காவாச்சே! அதனாலே மின் இணைப்பையே நேத்திக்கு எடுத்துட்டோம். சாமி அலமாரியில் மட்டும் ஒரே ஒரு மின் விளக்கு எரிய விட்டுட்டு ட்யூப் லைட்டைக் கூட அணைச்சுட்டோம். ஆனால்

borewell மூலம் தண்ணீர்இறைக்கும் மோட்டார் foot volveஇறங்கிப் போய் நேற்றுக்

காலையில் இருந்தே தண்ணீர் எடுக்க முடியவில்லை. புது ஊற்று வரும்போது மண் சரிவு

ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். நல்லவேளையாகக் கிணற்றை மூடாததினால்

வீட்டுக்குத் தண்ணீர் இருக்கிறது. அதுவும் கையால் எடுக்கும் அளவு கிட்டத்தில் கிணற்றில் தண்ணீர் இருக்கிறது. கைப்புள்ள, மழை வாஆஆஆஆஆஆரம் கொண்டாட இது போதுமா? இன்னும் வேணுமா?
**********************

இப்போ இந்த வார ஆனந்த விகடனில் நான் ரசித்த ஒரு ஜோக்:படங்களுடன் வந்திருக்கிறது. ஒரு நபர் பாடுகிறார்.. மற்ற இரண்டு பேர் அது பற்றிப் பேசுகிறார்கள்.

"அதுக்குள்ளே பத்து மாசம் ஆயிடுச்சா?

எதைக் கேக்கறேன்னு புரியலியே?

அந்த ஆள் வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் சீமந்தம்னு பாடறாரே? "

நினைத்து நினைத்துச் சிரிக்க வைக்கிறது. பொதுவாக ஜோக் எல்லாம் நன்றாக இருந்தாலும் இது

மாதிரி எனக்குப் பிடித்தவைனு வரது சிலது தான். என் மனசுக்குள் கற்பனை பண்ணிப் பார்த்துப்பேன்.அப்போ தன்னை அறியாமல் சிரிப்பு வந்தால் அது என்னைப் பொறுத்த வரை நல்ல ஜோக். இது அப்படிப் பட்டது. இனிமேல் இது மாதிரி எனக்குப் பிடித்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவும்.

(ம.சா.: ஆரம்பிச்சுட்டியா? உன் தலைவி புத்தியை? ரொம்பவே பந்தா காட்டறியே? உன் பதிவுக்கு வரதே பெரிய விஷயம். இதிலே இது வேறேயா? பெரிய சுஜாதான்னு நினைப்பு. என்ன பரிசு கொடுக்கப் போறே? பின்னூட்டம் தானே?)

அது அப்படித் தான் பேசும். நீங்க வழக்கம் போல் கண்டுக்காதீங்க.

இப்போ நிஜமாவே சுஜாதா இந்த வார விகடனில் எழுதி இருக்கிற ஒரு விஷயத்தைப் பத்தி.

குஜராத்தில் இருந்து வெளிநாடு போன இந்திய மருத்துவர்கள் திரும்ப இந்தியா வரும்போது

அதுவும் குஜராத் வரும்போது சொந்தக் கிராமங்களுக்குச் சென்று பணி புரிகிறார்கள்

என்பதாக அவருக்கு மின்னஞ்சல் கணேசன் மஹாதேவன் என்பவர் கொடுத்திருப்பதாய் எழுதி

இருக்கிறார். மேலும் "medical tourism" "911 service about trauma care" துவங்கவும்

போவதாக எழுதி இருக்கிறார்.இது ஒண்ணும் புதிசு இல்லை. குஜராத்தில் எந்தக் கிராமத்துக்குப்

போனாலும் பள்ளிகள் மிகத் தரமான கட்டிடங்களுடன் இருக்கும். பள்ளியில் நுழையும்போதே சரஸ்வதியின் சிலை வீணையுடன் இருக்கும்படியாக எழுப்பி இருப்பார்கள். தினமும்

பிரார்த்தனை அங்கே தான் நடைபெறும். அவரவர் சொந்தக் கிராமங்களுக்குத் தரமான சாலை

வசதிகளுக்கு வேண்டிய பண உதவி, நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, மதம்

பார்க்காமல் பண உதவி போன்ற நல்ல விஷயங்களும் நடைபெறுகின்றன. அங்கங்கே

மருத்துவ ட்ரஸ்ட் ஏற்படுத்தி டாக்டர்களுக்குச் சம்பளம் கொடுத்து வாரம் இரு முறை,

மூன்று முறை என்று வரச் சொல்லி மருந்துகளைக் குறைந்த விலையில் கொடுத்து, அதாவது வெளியில் 50/-ரூ கொடுத்துத் தான்வாங்க வேண்டும் என்றால் இங்கே ஒரு ரூ. முதல் 5ரூ வரை மருந்தின் தரத்துக்குத் தகுந்த விலை இருக்கும். ஆயுர்வேத மருந்துகள் இன்னும் குறைவு. அரசும் பெண்களுக்கு எதுவரை படித்தாலும் இலவசம்தான். இது எல்லாம் நாங்க அங்கே

இருந்தப்போ அதுக்கு முன்னாலேயே இருந்திருக்கிறது. எங்க பையன் இஞ்சினீரிங் சேரும்போது அரசாங்கக் கல்லூரியில் மெரிட்டில் தான் சேர்ந்தான். நாங்க கட்டின ஃபீஸ் பல்கலைக் கழகத்துக்கும் கல்லூரிக்கும் சேர்த்து வெறும் 250/-ரூ. தான். ஹாஸ்டல், சாப்பாடு, ட்ரஸ் என்றுதான் எங்களுக்குக் கொஞ்சம் தொகை செலவு செய்ய நேர்ந்தது. மேலும் அரசுப் பேருந்துகளில் போனால் கோடை நாட்களில் ஜூஸ், ,பெப்ஸி, போன்றவையும் குளிர் நாளில் டீயும் கொடுப்பார்கள்.காங்கிரஸ் முதலமைச்சரோ அல்லது பிஜேபி முதலமைச்சரோ அவரிடம் நாம் சென்றால் தோழமையுடன் பேச முடியும். சாதாரண மனிதர்கள் போல நடந்து போய்க் கொண்டு இருப்பார்கள். நாம் போய் நம்மோட வேலையைச் சொல்லலாம். எந்தத் தடையும்

இருக்காது. இது ராஜஸ்தானிலும் இருந்தது. குஜராத்தில் இப்பவும் இப்படித்தான் என்று ஜாம்நகரில் இருந்து வந்த எங்கள் சிநேகிதர் கூறுகிறார்.
**********************
இனி நாம் பம்பாய் பயணத்தைத் தொடரலாம். ரொம்பப் பேருக்குச் சந்தேகம் வருது, நான் எப்படி அம்மாதிரியான நிலையில் ஆட்டோவில் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு ஏறினேன் என்று. பொதுவாக எங்க வீட்டில் முடிவு எடுப்பது என் கணவர்தான் என்றாலும் அப்போது அவர் இல்லை. நானே முடிவு எடுக்கணும். இங்கே உட்காருவதை விட போரிவிலி போனால் அங்கே போய்ப் பார்க்கலாம் அல்லது ஸ்டேஷனிலேயே வெயிட்டிங் ரூமில் தங்கிக் கொண்டால் மறுநாள் லோக்கல் வண்டியில் அலுவலகம் செல்ல என் மைத்துனரகள் இருவருமோ அல்லது என் ஓரகத்தியோ அல்லது மூவருமோ வருவார்கள். அங்கே வந்துதான் ஆகணும். லோக்கல் வண்டியில் போய்ப் பார்க்கலாம் என்பதும் ஒரு காரணம். ஆனால் இது எல்லாம் வெளியில் சொல்லிக்கலை.

ஆட்டோ டிரைவர் ரொம்பவே நல்லவராக அமைந்தது எங்கள் அதிர்ஷ்டம். பொதுவாய் அங்கே

எல்லாம் அவ்வளவு ஏமாற்ற மாட்டார்கள் என்றாலும் இவர் நன்கு படித்தவர். எம்.ஏ.

படித்துவிட்டு மேற்கொண்டு ஆராய்ச்சிப் படிப்புப் படித்துக் கொண்டு இருந்தார். வண்டி மலைப்

பாதையில் போவதால் என்பெண்ணை முதலில் கம்பிக்குப் பக்கத்திலும், நான் நடுவிலும்

பையனை ஓரத்திலும் உட்காரச் சொல்லிவிட்டுக் கயிறைக் கொடுத்து இறுக்கிப் பிடித்துக்

கொள்ளச் சொன்னார். கொண்டை ஊசி வளைவுகளில் ஆட்டோ சக்கரம் கார், வான், பஸ் மாதிரி மெதுவாய்ப் போகாது. கொஞ்சம் வழுக்கும் ஆகவே பிடித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்துக் கொண்டே வந்தார். வழி சரியான வழிதான் என்று எங்கள் கூட வந்தவர்களின் வண்டி முன்னால் போனதில் இருந்து தெரிந்தது. இருந்தாலும் நான் எனக்குத் தெரிந்த ராமநாமாவையும், கந்த சஷ்டி கவசத்தையும் மாறி மாறி சொல்லிக் கொண்டே வந்தேன்.

கொஞ்ச நேரத்தில் வந்து விடும் என்று நினைத்தால் டிரைவர் 21/2 மணி நேரம் ஆகும் என்றார்.
மலைப்பாதை முடியவே ஒரு மணி நேரம் ஆனது. பிறகும் பாதையில் ஏற்ற இறக்கங்கள். எல்லாம் முடிந்து போரிவிலி வருகிறது என்று டிரைவர் சொல்லும்போது அங்கே ஒரு ட்ராஃபிக்

போலீஸ்காரர் வந்து எங்கள் வண்டியையும் முன்னால் போன வண்டியையும் நிறுத்தினார்.

2 முறை பப்ளிஷிங்க் கொடுத்தும் error வந்து விட்டது. இப்போ 3-வது முறையாக் கொடுக்கிறேன். என்ன ஆகப் போகுதோ தெரியலை. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கணும்னு நினைக்கிறேன்.

11 comments:

  1. தொலைபேசியதில் அந்த அம்மா அவங்க கணவரை அனுப்பினாங்க. முதலில் போய்ப் பார்த்து விட்டு வந்த என் கணவர் திரும்ப வேகமாக வந்து மறுபடி போகணும் டீ போட்டுத் தா குடிச்சுட்டுப் போறேன்னு சொன்னார். சரின்னு டீ போட்டுக் கொடுத்துட்டு வீரத் திலகம் இட்டு வழி அனுப்பி வைத்தேன்

    அந்த மாயாபஜார் படத்துலே அபிமன்யு ,சண்டையின் போது கடோத்கஜன் மீது ஒரு அம்பு விடுவான்.அது அப்படியே நெருப்பைக் கக்கிக்கொண்டு போகும்.உடனே கடோத்கஜன் பதிலிக்கு ஒரு அம்பு விடுவான் .அது அப்படியே தண்ணிரைச் சொறிந்துகொண்டு போகும் . இரண்டும் ஒரு இடத்தில் சந்தித்து மோதி வீணாகி விழுந்து விடும்.அது மாதிரி நம்ப தலைவி பாருங்கோ கவுன்சிலர் மேடம் தான் வராது தன் கணவரை அனுப்பினால் உடனே பதிலுக்கு ப்ரோட்டோகால் பிரகாரம் தன் கணவரை அனுப்புகிறார்கள்.அதான் நிரந்தர தலைவியாக இருக்கிறார்கள்.அம்பி என்ன கேக்கிறே ?யாரு கடொத்கஜன் யாரு அபிமன்யுன்னா?சாமி என்னை விட்டுடு நான் இந்த விளையாட்டுக்கே வரலை.ஒரு தரம் பட்டதே போரும்.சக்கரைப் பொங்கல் உண்டா

    ReplyDelete
  2. @SKM என் கதையும் மேடம் கதை போல்தான் அதான் தவறிப்போய் மெயில் வந்துடுத்து.மன்னிச்சுங்க.

    ReplyDelete
  3. வணக்கம்.
    உங்களது பெயரை வலைத்தளங்களில் பார்த்தும் உங்களது பதிவுகளை படித்தும் உள்ளேன் பின்னுட்டம் இடாமலே... இன்று KG சாரின் வலைப் பக்கத்திலிருந்து உங்களின் வலைப் பக்கத்திற்கு வர மீண்டும் ஒரு வாய்ப்பு கிட்டியது. உங்களது பதிவின் தலைப்பை கண்டதும் சந்தோச மானேன்.. எனெனில் அப்போதுதான் மழை பற்றிய எனது பதிவை பதித்து விட்டு வந்தேன். ஆனால் மழை பற்றிய உங்களது எழுத்து எனது எழுத்தை என்னமோ செய்தது...

    ReplyDelete
  4. தி.ரா.ச. சார், மழையிலே நனைந்து வந்து சொல் மழையிலேயும் நனைய வச்சுட்டீங்க, இப்போ யாரு சர்க்கரைப் பொங்கல் தருவாங்க, எல்லாம் பொங்கலப்போ தான்.

    ReplyDelete
  5. மணி ப்ரகாஷ், மழை எனக்குப் பிடிக்காதுங்கிற அர்த்தத்திலே நான் எழுதியது உங்களுக்குப் புரிஞ்சதுன்னா தப்பு என் எழுத்திடம் தான். இன்னொரு முறை கூர்ந்து கவனித்துப் படியுங்கள், நான் சொல்ல வருவது புரியும். என்னாலே நனைய முடியாதே தவிர, மழையையும், அதன் ஆரவாரத்தையும் ரசிக்கிறவள்தான் நான். கொஞ்சம் புரியும்படி எழுதி இருக்கணும் நான்.

    ReplyDelete
  6. ஹிஹிஹி, ச்யாம், சோதனைதான் உங்களுக்கு. நேத்துப் பதிவு வந்துடுச்சு, எல்லாம் உங்க பங்காளி வேலையாத்தான் இருக்கும். அதனாலே அவர் கிட்டேப் போய்ச் சொல்லுங்க. :D

    ReplyDelete
  7. நல்லா எழுதிருக்கீங்க. ரசிக்கும் படியாவும் இருக்கு. ஆத்துக்காரருக்கு வீரத் திலகம், வாளை மீன் ஜோக், குஜராத் அமைச்சர்கள், உங்க வீட்டு மோட்டார், போரிவலி படையெடுப்பு எல்லாத்தப் பத்தியும் குறிப்பெடுத்துக்கிட்டாச்சு.

    //போலீஸ்காரர் வந்து எங்கள் வண்டியையும் முன்னால் போன வண்டியையும் நிறுத்தினார்.//
    ரொம்ப டிவி சீரியல் பாத்து கெட்டுப் போயிட்டீங்கன்னு நெனக்கிறேன். சரியான நேரத்துல தொடரும் போட்டுடறீங்க.
    :)

    ReplyDelete
  8. ஹிஹிஹி, கைப்புள்ள டி.வி. சீரியல் பார்க்கிறது நான் இல்லை. எங்க வீட்டுப் பிரதம மந்திரி, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் எல்லாம் ஆன என் கணவர் தான். ஆனால் எனக்குக் காதால் கேட்டுக் கேட்டே ஒருவேளை அது போல வந்திருக்கும் :D

    வாளை மீன் ஜோக் இன்னும் நல்லா இருக்கு. கொஞ்ச நாள் முன்னாடி தான் அதுங்க ரெண்டும் டைவோர்ஸ் செஞ்சுக்கிட்டதாப் படிச்சேன். இப்போ இப்படி. சிரிக்காம என்ன செய்யறது? :D

    ReplyDelete
  9. வேதா,
    உங்க பின்னூட்டத்தை நேத்திக்க்குக் கவனிக்கவே இல்லை. அதான் பதில் கொடுக்கலை. உங்க ஏரியாவிலே கூடத் தண்ணீர், தண்ணீர் தானா?

    ReplyDelete
  10. உமாகோபு, மழை இருக்கட்டும், அந்தக் காய் எல்லாம் என்ன செஞ்சீங்க? எனக்கு மண்டையே வெடிச்சுடும் போல் இருக்கே! :D புதுப் பதிவு போட்டாச்சா? வரேன் இன்னிக்கு முடிஞ்சா.

    ReplyDelete