எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, October 29, 2006

147.மீனாட்சி, உனக்கு என்ன ஆச்சு?

"சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே! சேயிழையே!
காராரும் மேனிக் கருங்குயிலே!-ஆராயும்
வேதமுதல் ஆகி நின்ற மெய்ப்பொருளே! மின் ஒளியே!
ஆதி பராபரையே! அம்பிகையே!- சோதியே!"

அண்டர் எல்லாம் போற்றும் அரும்பொருளே! ஆரணங்கே!
எண்திசைக்கும் தாயான, ஈஸ்வரியே!"

மேற்குறிப்பிட்ட பாடல் "சிதம்பரர்" என்பவரால் பாடப்பெற்ற "மீனாட்சி கலி வெண்பா"வில் உள்ளது. ஆரம்பம் இது. அன்னையைத் தன் அகத்தும் , புறத்தும் வைத்த அவர் தம் வாக்கில் அன்னை தன் நோக்கை வைக்க அன்னையின் மேல் இந்தத் துதி பிறந்தது. அம்பிகையின் அதி ரகஸ்ய சேவை நுட்பங்கள் அடங்கிய இந்த நூலைப் படிக்கும்போது , " என்ன இப்படி அம்மனை அம்படைச்சி, ஆண்டிச்சி, இடைச்சி, ஒட்டச்சி, சடைச்சி,செட்டிச்சி, சேணிச்சி, வலைச்சி, வேடிச்சி" என்று அழைக்கிறாரே என்று தோன்றும். இருபொருள் கொண்ட இந்தக் கலிவெண்பா அன்னையைப் புரிந்து அவள் அருள் பெற்றவர்களால் பெரிதும் கொண்டாடப் படுகிறது. ஆளும் அரசி ஆன அவள் தன்னை எல்லாரும் உணரும்படியாக உலகில் உள்ள எல்லாக் குலங்களிலும் உதயம் ஆகிறாள். ஊன்றிப் படித்தால் ஒழியப்புரியாத இந்த விஷயம் சிதம்பரருக்குப் புரிந்து அவர் தன் கனவிலும் நனவிலும் நடமாடிய அம்பிகையைப் போற்றித் துதிக்கிறார். பின் தன் குருவின் கட்டளைக்கு ஏற்ப அன்னையின் விருப்பமும் அது என்று உணர்ந்து திருப்போரூர் வந்து எந்தையாம் கந்தனைத் தொழுது அவனில் தேவியை உணர்ந்து கந்தனுக்குக் கோயில் எழுப்பி அங்கேயே சமாதி அடைந்தார்.



மூன்று நாளாகப் பேப்பர் படிக்கும் போதெல்லாம் மனசு ரொம்ப நொந்து போகிறது. உலகுக்கெல்லாம் தாயான, மதுரை மக்களின் அருமைக் கண்மணியான, அவர்களின் வீட்டுப் பெண்ணான எங்கள் அருமை மீனாட்சியின் வீட்டில் விரிசலாம். எல்லாரும் வந்து பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். மதுரையின் இதயமே அன்னையின் இருப்பிடம் தான். அது பழுதுபட்டுக் கிடக்கிறது என்ற செய்தி நெஞ்சில் ஊவாமுள் போல் உறுத்திக் கொண்டே இருக்கிறது. பொதுவாக மதுரையில் நாத்திகவாதம் அதிகம் பார்க்க முடியாது. ஏன் என்றால் ஆட்சி செய்வது அவள் அன்றோ? மதுரை மக்கள் எல்லாரும் தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைக்கும் அவள் திக்விஜயம் செய்து நாட்டையும், தன்னையும் அப்போதே காப்பாற்றிக் கொண்டது போல் இப்போதும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அவளருளாலே ஓரணுவும் அசையாது. இதுவும் அவளின் ஈசனின் ஒரு திருவிளையாடலோ என்னமோ? இந்தக் குழப்பத்தில் இருந்து தானும் மீண்டு, தன் மக்களையும் மீட்க அன்னை மீனாட்சியை வேண்டு கிறேன்.

"கொந்தளகப் பந்திக் குயிலே! சிவயோகத்து ஐந்தருவே! மூவருக்கும் அன்னையே!-எந்தம் இடர் அல்லல் வினை எலாம் அகற்றியே, அஞ்சல் என்று
நல்ல செளபாக்கியத்தை நல்கியே-வல்லபத்தின்
ஆக, மதுரம், சித்ர, வித்தாரம் என்று அறிஞர்
பேசுகின்ற உண்மைப் பெருவாக்கு-நேசமுடன்
தந்து என்னை ஆட்கொண்டு, சற்குருவாய் என் அகத்தில்
வந்து இருந்து, புத்தி, மதி கொடுத்துச்- சந்தமும்
நீயே துணையாகி நின்று இரட்சி!அம் கயல் கண்
தாயே! சரணம் சரண்!

20 comments:

  1. இது போன்ற பழமையான கோயில்களை புணரமைக்க வேண்டி இருக்கையில் மக்கள் புதுபுது கோயில்கள்
    கட்டி மொசைக் போட்டு கொண்டு இருக்கிரார்கள்.

    ReplyDelete
  2. மிகவும் சரியாகச் சொன்னீர்கள். மனம் பதறுகிறது.அரசாங்கத்தை அணுகுவதைவிட அவளிடமே முறையிடுவதுதான் முறை.நில அதிர்வின் விளைவா,காலத்தின் கோலமா யாம் அறியோம்.பிட்டுக்கு மண் சுமந்த பெம்மானின் மீது விழுந்த அடி தன் மேலும் வாங்கிக்கொண்டவளே அவளே. எனவே அவளிடமே முறையிடுவோம். அவளைப் பணிவோம்.

    பொடி பட்ட பிட்டுக்குத் தோள் கொண்டு கூடை மண் போட்டுப், பொங்கி
    வெடி பட்ட வையை அடைத்த அந் நாள், சொக்கர் மேனி சுற்றும்
    கொடி பட்ட போது முழு நீலக் கோமள மேனியிலும்
    அடி பட்டதோ? அணங்கே! மதுராபுரி அம்பிகையே

    ReplyDelete
  3. மதுரைத் தொழிலதிபர் ஒருவரின் முயற்சியால், முதல்வரின் பார்வைக்கு இச்செய்தி கொண்டு போகப்பட்டு, இப்போது பணிகள் நடக்கின்றன என்று செய்தியைப் படித்தேன்; சற்றே ஆறுதலாக இருந்தது.

    உள்ளாட்சித் துறையில் பாலங்கள் கண்காணிப்பு போல், அறநிலையத் துறையில் கண்காணிப்பு தேவை என்பதை அரசும் உணர வேண்டும்; இதே போல திருவரங்கம் கோபுரம் பற்றியும் சில் செய்திகள், சில ஆண்டுகளுக்கு முன் வந்தன.

    ReplyDelete
  4. பெரியார் படம் எடுக்க அரசாங்கம் காசு கொடுக்கும்.ஆனால் நம் புராண கோவில்களை காப்பாற்ற அவர்களிடம் பணம் இருக்கோ இல்லையோ ஆர்வம் சுத்தமாக இல்லை.கடவுள் தான் வழி காட்ட வேண்டும்.
    உங்கள் தினப்படி பிரச்சனைகளுக்கு நடுவிலும் பதிவு போடுகிறீர்களே.Hats off to you.--SKM

    ReplyDelete
  5. yeeh, read this news.

    //அறநிலையதுறையினர் இதையெல்லாம் கவனிப்பதிலையா? //

    @veda, They started their action.
    within a day la mudiyara velai illa athu. Analysis is in progress.

    ReplyDelete
  6. //சீராரும் பூங்கமலத் தெள்ளமுதே! சேயிழையே!
    காராரும் மேனிக் கருங்குயிலே!-ஆராயும்
    வேதமுதல் ஆகி நின்ற மெய்ப்பொருளே! மின் ஒளியே!
    ஆதி பராபரையே! அம்பிகையே!- சோதியே//

    ஒன்னும் புரியல...ஸ்பானிஷ் பிளாக்குக்கு வந்துட்டமோனு ஒரு டவுட்டு...ஏங்க நம்ம ஊர் பாஷைல சொல்லி இருக்கலாம்ல... :-)

    //மின் ஒளியே//

    இது புரிஞ்சுது...கரண்டு லைட்டு...

    //ஆதி பராபரையே//

    இத படிச்ச உடனே நம்ம கடல் கனேசன் நியாபகம் வருது...க க்கு தெரியுமா க வாசனைனு நீங்க கேக்கறது புரியுது :-)

    ReplyDelete
  7. வேதா, அறநிலையத் துறை கவனிச்சாலும், இது ஒரு நாளிலே முடியற விஷயமே இல்லை. நேத்திக்குப் பேப்பரிலே விரிவான செய்தி வந்தது. ஆகவே இது வெறும் இன்றைய பொறியாளர்களால் முடிகிற விஷயமாய்த் தெரியலை. அப்புறம் ஸ்ரீரங்கம் கோவில் மொட்டை கோபுரம் கதி ஆயிடுமோன்னு பயமா இருக்கு.

    ReplyDelete
  8. மதினி,
    புதுக்கோவில்களும் வேண்டும்தான். மீனாட்சியிடம் இல்லாத பணமா? அவளுக்குத் தேவை இப்போ கவனிப்புத் தான். சரியான ஆட்கள் கவனிக்க வேண்டும்..

    ReplyDelete
  9. இந்த வாரம் எங்கள் நம்பிக்கைக் குழுவின் கூட்டுப் பிரார்த்தனையில் இந்த வேண்டுகோளை வைக்கப் போகிறேன், தி.ரா.ச. சார். எல்லாம் அவள் செயல். அவள்தான் நடத்திக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  10. உமாகோபு, ரொம்ப நன்றி, உங்கள் வரவுக்கும், பின்னூட்டத்துக்கும்.

    ReplyDelete
  11. கண்ணபிரான், உங்கள் செய்தி சற்று ஆறுதல் அளித்தாலும், நிலைமை முற்றுவதற்கு முன் சரியாக வேண்டும். எல்லாம் அவள் செயல்.

    ReplyDelete
  12. SKM,
    எங்கே ஒரு வாரமாக ஒண்ணுமே எழுத முடியலை. எழுதறது கூட ஒரு போதை மாதிரித்தான்னு நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் நிதானமாவே எழுதணும்னு நினைக்கிறேன். அப்புறம் நம்மை நாம் கட்டுப் படுத்திக் கொள்ள உதவும் இல்லையா?

    ReplyDelete
  13. ambi,
    இது ஒரு நாளில் முடியாதுன்னு தெரியும். இருந்தாலும் விஷயம் தெரிஞ்சதிலே இருந்து மனசு கேட்கலியே!

    ReplyDelete
  14. ச்யாம்,
    உங்க வெளிப்படையான பேச்சே போதும், உங்களுக்கு அந்த அன்னை அருள் என்றும் இருக்கும். நான் முதலில் இந்தக் கலிவெண்பா பாடல் மட்டும் தான் எழுதி இருந்தேன். அப்புறம் தான் எழுதியது யார், என்னங்கிறதைச் சேர்த்தேன். அப்போ மறுபடி ப்ளாக்கர் சண்டித் தனம் செய்யவே பாட்டின் அர்த்தம் எங்கேயோ ஓடிப் போயிருக்கு. சரினு விட்டுட்டேன். எல்லாம் தமிழ் வார்த்தைகள் தான், இப்போது வழக்கத்தில் இல்லாததால் புதுசா இருக்கு. இனிமேல் அர்த்தம் கொடுத்தால் சரியா இருக்காதுன்னு விட்டுடறேன்.

    ReplyDelete
  15. ஓ..இதெல்லாம் நடக்குதா... நல்ல விஷயத்தை பார்வைக்கு கொண்டு வந்ததுக்கு நன்றிங்க தலவியே..

    அம்பி சொன்ன மாதிரி எதோ செய்ய ஆரம்பிச்சிருக்காங்க..நல்லது நடந்தா சரிதாங்கோ..

    ReplyDelete
  16. neenga vandha nanga onnun sollradhillaya? yenanga ?poetic side poittu varadhu ippodhan pathen.don't know how to fix it.But i'll do something.ungala madhiri azhagana tamil yellam namakku varadhunga.Thanks for coming.--SKM

    ReplyDelete
  17. unga prarthanai niraivera vaalthukkal thalaivi.

    namakkum syam maathiri greek and latin-aa thaan irundadu. kadasiya, 12thla seyyul padichadu :(

    pudusa oru padivu poturken.. inda thadave, thalaiviya gavanikkalanu vandu thittapadaadu.. solliten

    ReplyDelete
  18. கார்த்திக், உங்க வேண்டுகோள் நிறைவேறட்டும்னு அந்த மீனாட்சியைப் பிரார்த்திக்கிறேன்.

    @SKM, நான் நல்ல மழையிலே வந்து வந்து பார்த்துட்டுப் போறேன் இல்லையா? :D, அதான் சொன்னேன். இப்போ உங்க விலாசம் சரியாப் பதிவாயிடுச்சு, என் கிட்டே இருக்கு. வழி தவற மாட்டேன்.

    @அருண்குமார், இப்போவாவது தலைவி கிட்டே உங்க தொண்டர் விசுவாசத்தைக் காட்ட முடிஞ்சதே, அது வரைக்கும் போகுது போங்க, 12-வது வரை தமிழ் படிச்சுட்டு இது படிக்க முடியலைன்ன என்ன அர்த்தம்? புதரகத்திலேயே மறுபடி தமிழ் வகுப்புக்குப் போங்க, :D

    ReplyDelete
  19. மீனாட்சியைச் சுத்தி வியாபாரம் ப்ரமாதமாப் போயிடுத்து.

    அவளால் முன்னேறியவர்கள் அவள்
    வீட்டை சரி செய்வார்கள்.
    கவலைப் படாதீர்கள்.

    ReplyDelete
  20. மீனாட்சி கலி வெண்பாவைத் தேடிப்படிக்க வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கிவிட்டீர்கள். கோவிலில் விரிசல் என்ற செய்தியை இதுவரை படிக்கவில்லையே?! மேல் தகவல் ஏதாவது தெரியுமா?

    ReplyDelete