எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, March 31, 2012

Monday, March 26, 2012

டீ, டீ, டீ டீ டீ, டீ குடிக்க வாங்க! :D

இந்தியா வந்ததில் இருந்து டீ குடிப்பது என்றால் ஒரு தண்டனையாக இருக்கிறது.  பொதுவாய் மாலை வேளை, காபி, டீ குடிப்பதைத் தவிர்த்து விட்டேன்; என்றாலும் சில சமயம் அதிகம் வேலை இருக்கையில் ரங்க்ஸுக்குத் தயாரிக்கும் தேநீரில் கொஞ்சம் குடிக்கலாம் என்றால் அதன் சுவை!  கடவுளே!  உலகின் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடான இந்தியாவில் இப்படி ஒரு தேயிலையானு தோணுது!  வெறுத்தே போச்சு! ராகிமால்டே போதும்னு முடிவுக்கு வந்துட்டேன்.

ராமாயண காலத்திலே அனுமான் கொண்டு வந்த சஞ்சீவனி மூலிகைகளால் கொடுக்கப்பட்ட கஷாயம்/வடிநீர் தேநீராய் இருக்கலாம் எனச் சொல்லப் படுகிறது.  ஆகையால் இந்தியாவிலே தேநீர் ராமாயண காலம் தொட்டே இருக்குனு வைச்சுப்போம். :D  ஆனால் வடகிழக்குப் பிராந்தியங்களில் இந்தத் தேயிலை ஒரு காட்டுப் பயிராக வளர்ந்து இருந்ததாகவும் அந்தப் பகுதி மலைவாழ் மக்கள் இந்த இலையைக் கொதிக்க வைத்து வடிகட்டி அதன் நீரை அருந்தியதாகவும் சொல்கிறார்கள்.  இது தெரிய வந்தது 12-ஆம் நூற்றாண்டிலாம்.  ஆனாலும் அதன் பின்னரும் தேயிலையோ அதன் பயன்பாடோ இந்தியா முழுதும் பரவவில்லை.  அதற்கு பிரிட்டிஷ் காரர்கள் வர வேண்டி இருந்தது. :P

இந்தியாவிலே 1820-ஆம் ஆண்டிலேயே கிழக்கிந்தியக் கம்பெனிகள் வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள தேயிலையின் பயன்பாட்டை அறிந்து கொண்டு அந்தப் பகுதிகளை அங்கே ஆண்டு கொண்டிருந்த அரசர்களிடமிருந்து விலைக்கு வாங்கி விட்டனர்.  ஆனால் இங்கிலாந்திலோ ப்ரூக்பாண்ட் தேயிலை 1845 ஆம் வருஷம் தான் ஆரம்பித்ததாய்ச் சொல்லப்படுகிறது.  ப்ரூக் பாண்டின் முதல் டீக்கடை 1869-இல் துவங்கப் பட்டிருக்கிறது.  இவருக்குப் போட்டியான லிப்டனோ 1893-இல் ஆரம்பித்துள்ளார்.  இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஆரம்பித்த லிப்டன் டீ கம்பெனியின் தேயிலைக்கு நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது.  ப்ரூக் பாண்டை விடவும் இது அதிகம் ஸ்ட்ராங்க் எனவும் சொல்லப் பட்டிருக்கிறது.  இந்தப் போட்டி இந்தியாவிலே அப்போதெல்லாம் அதிகம் வரவில்லை.

இந்திய மக்கள் மெல்ல மெல்லவே தேநீருக்கு அடிமையாகி இருக்கின்றனர்.  அப்போதும் வட இந்தியா முழுதும் பரவிய தேநீர் மோகம் தென்னிந்தியாவுக்கு வரவில்லை.  ஹிஹி, எனக்குத் தெரிஞ்சு தேநீர் குடிக்க அப்போதெல்லாம் விளம்பரம் செய்வார்கள்.  நான் சின்ன வயசிலே மதுரை கழுதை அக்ரஹாரத்திலே (மேலப் பாண்டியன் அகழித் தெரு) இருந்தப்போ சில அக்காக்கள் கைகளில் டீப் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு வருவாங்க.  வீடு வீடாய்ப் போய்த் தேநீர் குடிக்கச் சொல்லி சாம்பிள் பாக்கெட்டுகளைத் தருவாங்க.  ஒருதரம் சாம்பிள் பாக்கெட்டில் தேநீர் போடுவதற்கும் சொல்லிக் கொடுத்தாங்க.  அப்போதெல்லாம் வெந்நீரைக் கொதிக்க வைத்துத் தேயிலையில் ஊற்றி ஊற வைத்துப் பின் பாலைக் காய்ச்சித் தேநீரை வடிகட்டிச் சேர்த்துச் சர்க்கரை சேர்க்கவேண்டும்.  தேயிலை ஊற ஊறத் தேநீரின் சுவையும், மணமும் அதிகமாய் இருக்கும்.

நாங்க (நானும், அண்ணாவும், தம்பி அப்போ கைக்குழந்தை) சுற்றி உட்கார்ந்து கொண்டு அவங்க கொடுக்கப் போகும் தேநீரைக் குடிக்க ஆவலுடன் காத்திருப்போம். குருவிப் படம் போட்ட ப்ரூக்பாண்ட் தேயிலைப் பொட்டலம் மிகவும் பிரபலம்.  அவங்க இந்தப் படங்களைக் குழந்தைகள் சேர்ப்பதற்கெனத் தேயிலைப் பாக்கெட்டுகளோடு கொடுப்பாங்க.  தீப்பெட்டிப் படங்கள் சேகரிப்பு மாதிரி இதுவும் சேகரிக்கப்படும்.  அதுக்கப்புறமா வந்தது தான் லிப்டன் தேயிலை.  ப்ரூக்பாண்டை விடவும் ஸ்ட்ராங்க் எனச் சொல்லப்பட்டது. ஆனால் எதுவாக இருந்தாலும் ஒரிஜினல் அஸ்ஸாம் தேயிலையில் ஒரு முறை தேநீர் குடித்தால் அதன் பின்னர் எந்தத் தேநீரும் பிடிக்காது.  இப்போ இந்த ப்ராண்ட் பெயர் எல்லாம் பெயரளவுக்குத் தான்னு நினைக்கிறேன்.  எல்லாமே யூனிலிவரின் கீழே இருக்கிறது என நம்புகிறேன்.  வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தேயிலையின் தரம் இந்தியாவில் கிடைக்கும் தேயிலையில் இல்லை.  நமக்குக் கிடைப்பது கடைசித் தரம் தான். :((((

படங்கள்: கூகிளார் தயவு.  எல்லாரும் இப்போ தேநீரோ, காஃபியோ குடிக்கும் நேரம். (இந்தியாவில்)


ஹா, ஹா, தலைப்பு எப்படியோ விடுபட்டிருக்கிறது. ::)))))

Wednesday, March 21, 2012

ரங்கா, ரங்கா, ரங்கா!

இன்னும் சில நாட்களுக்குக் கொஞ்சம் அப்படி இப்படித் தான் வந்தாக வேண்டும்.  தொடர்ந்து இணையத்தில் அமர முடியாது.  யு.எஸ்ஸில் இருந்து கிளம்பியதே சென்னையில் தொடர்ந்து வசிப்பது குறித்த முடிவை விரைவில் எடுக்க வேண்டித்தான்.  கடைசியில் முடிவு எடுத்தாச்சு. அது விஷயமாகத் தான் நான்கு நாட்களாக ஊரில் இல்லை. நேற்று மாலை தான் வந்தோம்.  அங்கே இங்கே சுத்தி ரங்கன் காலடியில் போய் விழ முடிவு. 

இந்தச் சாலை மேம்பாட்டுக்காகவும், மற்ற வசதிகளுக்காகவும் போராடிப் போராடி மனசும், உடலும் நைந்து போயாச்சு. ஒண்ணும் நடக்கிறாப்போல் தெரியலை.  இங்கே வெளியே இருந்து வரும் ஆட்டோக்காரங்களும், டாக்சி ஓட்டுநர்களும் எங்களைக் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியலை.  அவங்க என்னமோ எங்க கையிலே தான் முழு அதிகாரமும்னு நினைப்பாங்க போல!  :P :Pசொந்த வீட்டை மராமத்து செய்து தொடர்ந்து வசிப்பதில் சில பிரச்னைகள்.  இடித்துக்கட்டுவதையும் ஒத்திப் போட்டாச்சு.  இடித்துக்கட்ட ஆரம்பித்தால் சாலை போடா வந்தாங்கன்னா பிரச்னை அதிகம் ஆகும்.  ஆகவே இப்போதைக்கு அப்படியே விட்டுட்டு வேறிடம் போவது தான் சரி என முடிவு எடுத்திருக்கோம். அதற்கான ஏற்பாடுகளில்  இருப்பதால் கொஞ்சம் அப்படி, இப்படித் தான் இணையத்துக்கு வரணும்.  என்றாலும் தினம் ஒருமுறையானும் வரலாம்; வரமுடியும் என நம்புகிறேன்.  இன்னும் பல பதிவுகளைப் படிக்கவில்லை.  மத்தியானமா வரேன்.

Thursday, March 15, 2012

அம்பிக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்தாச்சு!

ஒரு வழியா அம்பிக்கு இருந்த நீண்டநாள் குறையைத் தீர்த்து வைச்சுட்டேன்.  யு.எஸ்ஸிலே இருந்து கிளம்பறச்சே அம்பி தொலைபேசியில் பேசினப்போ அவரோட கல்யாணத்திலே நான் மொய்யே கொடுக்காமல் தப்பிச்சுட்டேன்;  அதே போல் அவர் அருமைத் தம்பி(க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)தாக்குடுவின் கல்யாணத்துக்கும் மொய் வைக்காமல் அமெரிக்கா கிளம்பி வந்துட்டேனு குறைப்பட்டுண்டார். அதென்னமோ தெரியலை, கல்லிடைக்குறிச்சியில் அம்பியோட பெற்றோர் அவங்க பிள்ளைங்களுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ண வேண்டியதுதான்; நாங்க அமெரிக்கா கிளம்பிடறோம். ஹிஹிஹி, ரெண்டு தரமும் அப்படித் தான் ஆச்சு.

அம்பியாவது பொண்ணு பார்த்திருக்கேன்; நிச்சயம் மதுரையிலே வாங்கனு பேச்சுக்குச் சொன்னார்; நிஜமாவே பேச்சுக்கு;  கடைசியில் நிச்சியதார்த்தத்துக்குக் கூப்பிடவே இல்லை.  போனால் போகட்டும் போடானு பாடிட்டுக் கல்யாணச் சாப்பாடுக்கு உட்கார்ந்திருந்தா சரியா கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்னே யு.எஸ். கிளம்பிட்டேன்.  ஹிஹி; அதே போல் தான் தாக்குடுவும் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டுத் தொலைபேசினார்.  உடனே அமெரிக்கப் பயணம் உறுதினு தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்!!!


அமெரிக்காவிலே இருந்து நம்ம சொர்க்கத்துக்குக் கிளம்பறச்சே அம்பி ஒரு கவரை அவர் மாமனாருக்கு அனுப்பச் சொன்னாரா!  அதை அவருக்கு அனுப்பி வைச்சேனா!  அதுக்குக் கூரியர் பணத்தை அம்பி எனக்கு அனுப்பி வைக்கலை.  நானும் ரொம்பப் பெருந்தன்மையா(கவனிக்க வேண்டிய இடம்) கூரியருக்குப் பணம் நானே கொடுத்துட்டேன்.  அப்புறம் தான் தோணித்து.  ஆஹா, அம்பிக்கு மொய் வைக்கலைனு குறை இருந்ததே;  அதைத் தீர்த்து வைக்க வேண்டாமானு! உடனே அம்பிக்கு மெயிலிட்டேனே, அன்னிக்கே, கூரியருக்குப் பணம் அனுப்பலை;  அதனாலே மொய்ப் பணத்தில் வரவு வைச்சுக்கவும்னு எழுதிட்டேனேனு நினைப்பு வந்தது.  மனம் சமாதானம் ஆச்சு.


தாக்குடு, அடுத்து தோஹாவா, துபாயா தெரியலை;  தயாரா இருக்கவும்; உங்க மாமனாருக்கு அனுப்ப ஒரு கவரோடு. அதை இந்தியா வந்து நான் அனுப்பினேன்னா, உங்க மொய்க்கு ஒண்ணும் செய்யலைங்கற குறை தீர்ந்து போயிடும்.  வெயிட்டீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.




Sunday, March 11, 2012

?????கேள்விக்குறி!

படத்தோட பேரே அதான். ??க்வெஸ்டியன் மார்க். இது The Blair Witch Project என்ற ஆங்கிலப் படத்தின் காப்பி, பேஸ்ட் எனப் பையர் சொன்னார். கிட்டத்தட்ட அதே கதை தான் என்றும் சொன்னார். நான் அந்தப் படத்தைப் பற்றிக் கேள்விப் படலை. ஆகையால் இதைச் சுவாரசியத்துடன் பார்த்தேன். 3 பெண்களும், அவர்கள் நண்பர்களான நான்கு பையர்களும் அவர்களில் ஒருவருக்குச் சொந்த வீடு காட்டில் இருக்கிறது. அங்கே அவங்க ப்ராஜெக்டுக்காகப் படம் சுத்தி உள்ள காட்டில் எடுக்கப் போறாங்க.

 ஆரம்பத்தில் ஒவ்வொருவரும் அறிமுகம் செய்து கொள்வதும் அப்படியே செய்துக்கறாங்க. சொந்த வாழ்க்கையில் பேசிக்கிறாப் போல் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒருத்தருக்கொருத்தர் சண்டையும் போட்டுக்கிறாங்க. கொஞ்சம் போரடிக்க ஆரம்பிக்குது. ரொம்பவே லேட்டாத் திகில் கிளப்பறாங்க. திகில் கிளப்பியதும் படம் கொஞ்சம் ஆவலைத் தூண்டியது. ஆனால் கதைப்படி கடைசியில் எல்லாரும் செத்துப் போறதும், மர்மம் விடுவிக்கப்படாததும் கொஞ்சம் புதுமையான முடிவு. அதான் ??? அப்படினு படத்துக்குப் பேராம். பரவாயில்லை.


 இளைஞர்களின் இயல்பான நடிப்புக்காகவும் படத்தின் காட்சிகளை அதில் குறிப்பிட்டிருக்கும் நேரமே கஷ்டப்பட்டு எடுத்திருப்பதற்காகவும் பார்க்கலாம். நல்லாவே பயமுறுத்தி இருக்காங்க. அதிலும் பேய் பிடிச்ச சிம்ரனா வரும் பெண் பெயரெல்லாம் தெரியலை. நல்லாவே பேய் பிடிச்சு ஆடி இருக்காங்க. காமிராக்காரரா வரும் பையரும் நல்லாப் பயப்படறார். எல்லாருமே பயத்திலே அழறாங்க. எங்க பையர் இதைப் பார்த்துட்டு நீ பயப்படப் போறேம்மானு சொன்னார். அதெல்லாம் பேயும், பிசாசும் தான் பயப்படணும். நான் ஏன் பயப்படப்போறேன்னு சொல்லிட்டுப் படத்தைப் பார்த்தேன். ஒரு முறை பார்க்கலாம். ஓகே.

Saturday, March 10, 2012

நான் ஆணையிட்டால்!

ஹெஹெஹெ(எத்தனை நாளைக்கு ஹிஹினு சிரிக்கிறது! போரடிக்குது) தலைப்பைப் பார்த்துட்டு அசந்து போயிருப்பீங்களே! எங்க வீட்டுப் பிள்ளை: இப்போத் தான் இரண்டு நாளைக்கு முன்னாடி முதல் முறையாப் பார்த்தேன். நிஜம்மாங்க. நம்பியார் சாட்டையாலே அடி வாங்கறச்சே கையைத் தட்டிட்டு விசிலடிக்கலை! அவ்வளவு ரசிச்சுப் பார்த்தேன். இன்னும் பாலும் பழமும், பாசமலர், பாகப்பிரிவினை, பார்த்தால் பசி தீரும் இந்தப் படங்கள்ளாம் பாக்கி இருக்கு பார்க்கிறதுக்கு.


அதிலே பாருங்க, ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மண்டையை உடைச்சுட்டு இருந்தது. சரோஜா தேவி தான் பாலும் பழமும் படத்திலே செத்துப் போய்ச் சுடுகாட்டிலே போய் எரிச்சுட்டு, "போனால் போகட்டும் போடா!" வெல்லாம் சிவாஜி பாடினதுக்கப்புறம் எங்கேருந்து ஸ்விட்சர்லாந்திலே இருந்து வந்தாங்கனு! மண்டை உடைஞ்சு குழம்பியே போயிடும் போல இருந்தது. பலரையும் கேட்டேன். அல்பம்னு ஒரு பார்வை! பதிலே சொல்லலை!



கடைசியா திவா தான் என்னோட கஷ்டத்தைப் புரிஞ்சுட்டு, அந்த சரோஜாதேவி போன ட்ரெயின்லே ஆக்சிடென்ட்(அப்படித்தானே திவா?) ஆகும்னு சொல்லிட்டு, வேறே யாரையோ ஜரோஜா தேவினு ஜிவாஜி நினைச்சுட்டு அழுவார்னு சொல்லி சந்தேகத்தைத் தீர்த்து வைச்சார். அது கேட்டதுக்கு அப்புறமா படம் பார்க்கும் ஆசையே போயிடுச்சு! சே வழக்கமான மசாலாதானா! அப்புறமா 2-ஆம் கல்யாணம் பண்ணிட்டு இருக்கிற செளகார் என்ன ஆவாங்கனு கேட்டேன். தியாகினு சொன்னார்.


க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படத்தைப் பார்க்கவே வேண்டாம்னு ஏகமனதாக முடிவெடுத்துட்டேன்.


 தில்: ஹிஹி, தமிழ்ப் படம் தான். விக்ரம் நடிச்சது. வழக்கமான மசாலாப் படம். லாஜிகலாவே இல்லை. சிவப்பதிகாரம்: இதிலே வர ஹீரோ ஜீவானு நினைச்சேன். இல்லையாமே. யாரோ விஷால்னு சொன்னாங்க. அந்தப் பேரில் எல்லாம் ஹீரோ இருக்கிறது இப்போத் தான் தெரியும்னு சொன்னா, இல்லையே, "கோ" படத்திலே கூட நடிச்சிருக்காரே, நீங்க பார்த்தீங்களேனு மா.பெ. சொல்றா. அ.வ.சி. "கோ" என்ன படம்னு ம.உ.மி. புரியலை. விட்டுட்டேன்.


 வந்தாளே மகராசி: இது நம்ம மு.அ. நடிச்சது. இதுவும் இரட்டை வேடம். வெளுத்துக்கட்டிட்டாங்க. நடிப்பில் மட்டும் இல்லை; அதிலே வந்தவங்களையும் தான். எம்.என்.ராஜம் தான் வில்லி. எல்லாமே ஓகே ரகம். தனியா ஹாஸ்ய நடிப்பு இதிலே இல்லை. நம்ம மு.அ. நடிக்கிறதே ஹாஸ்யமாத் தான் இருக்கு. படமே ஹாஸ்யம் தான். பின்னே! சக்குபாய் காலத்துக்கதை. அது என்னங்க இந்த சினிமாவிலே மட்டும் ஹீரோயின் பாத்திரம் தேய்க்கனு இம்புட்டுப் பெரிய பாத்திரங்களாப் போடறாங்க! வீட்டிலே தினசரி புழங்கும் பாத்திரங்களாவே இருக்காது. அவ்வளவு பெரிய அண்டா, குண்டாவிலே (கல்யாணத்துக்குச் சமைக்கலாம்) தினமும் சமைப்பாங்களா என்ன? அப்புறமா 4 மூட்டை நெல்லை ஒரே ராத்திரியில் புழுக்கறாங்களாம். கடவுளே! பார்க்கிறதிலே குறைச்சல் இல்லை; இது வேறேயானு முணுமுணுக்கிறது யாரு? அதெல்லாம் சென்னை வந்துட்டாப் பார்க்க மாட்டேனாக்கும். வந்துடுவோமுல்ல!



அருஞ்சொற்பொருள்: இல்லையே, "கோ" படத்திலே கூட நடிச்சிருக்காரே, நீங்க பார்த்தீங்களேனு மா.பெ. சொல்றா. அ.வ.சி. "கோ" என்ன படம்னு ம.உ.மி. புரியலை. விட்டுட்டேன். மா.பெ.=மாட்டுப் பெண் ; அ.வ.சி.= அசடு வழியச் சிரித்தேன். ம.உ.மி.= மண்டை உடைஞ்சது தான் மிச்சம். 


 மு.அ. = முதல் அமைச்சர்

Monday, March 05, 2012

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நானு!

தில் தோ பாகல் ஹை படத்தைப் பத்தி ரொம்பச் சொன்னாங்களேனு பார்த்தேன். அறுவை; மகா இழுவை. என்னதான் டான்ஸ் ட்ராமாவா இருந்தாலும் கதை கொஞ்சம் வலுவானதா இருந்திருக்கலாம். இதுக்குப் போய் ஏகப்பட்ட அவார்டாமே! சகிக்கலை! :))))) ஆயிரத்தில் ஒருவன்: ஹிஹி, எம்ஜிஆரோடது இல்லைங்க. செல்வராகவனோடதாம். நேத்திக்குப் பையர் பார்த்துட்டு இருந்தார். கணினியிலே நம்ம ரங்க்ஸ் ஆக்கிரமிப்பு. ஆகவே சரினு உட்கார்ந்தேன். தலை சுத்தல். இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்ப்பாம்; விவாதங்களாம். திரு ராமச்சந்திரன் (சமூக வரலாற்று ஆய்வு நிறுவனர்) வசனங்களாம். சேர, சோழ, பாண்டியரில் சோழர்களைப் பழிவாங்க பாண்டிய நாட்டு இளவரசி (ரிமா சென்) கிளம்பிப் போறாங்களாம். பாண்டிய இளவரசிக்கு ஒரு பாண்டிய நாட்டுப் பெண் கிடைக்கலையா? இல்லை தமிழ்ப் பெண்ணே கிடைக்கலையா? அந்தக் காலத்துச் சோழ நாட்டு வசனங்களை எழுதினது திரு ராமச்சந்திரன்னு சொன்னாங்க. உதட்டசைவுக்குச் சில இடங்களில் வசனங்கள் பொருந்தவே இல்லை. என்றாலும் ராமச்சந்திரன் அவர்களின் உழைப்பைப் பாராட்டலாம். சோழர்களை இழிவு படுத்தியதாகச் சிலருக்கு வருத்தம் எனவும் கேள்விப் பட்டேன். வேடிக்கை என்னவென்றால் இத்தனை சர்ச்சைகளுக்கு இந்தப் படம் உள்ளாகி இருக்கிறது. ஆனால் எனக்கு இந்த மாதிரி ஒரு படம் வந்ததே தெரியாது. நேத்திக்குப் படத்தைப் பார்க்கிறச்சே தான் முதன்முதல் கேள்விப் பட்டேன். எம்ஜிஆர் படம்னு தான் நினைச்சேன். அப்புறம் தான் சூர்யா தம்பி கார்த்தி அல்லது கார்த்திக் நடிச்சதாம். ஆனால் அவரோட பங்கைத் தேடிப் பிடிக்க வேண்டி இருக்கு. பார்த்திபன் பாடும் பாட்டு, சொந்த ஊரை நினைச்சு கல்லாடிய இடம் எங்கேயோ என்னமோ அதன் ராகம் நல்லா இருக்கு. ஏற்கெனவே நடக்கப் போறதை முன் கூட்டி வரையப்பட்ட ஓவியங்கள் சொல்வதும் நல்லா இருக்கு. பாண்டியர் குலதெய்வம் அது இதுனு ஒரே சென்டிமென்டல்! :))))) மொத்தத்தில் காது நிறையப் பூ சுத்திவிட்டாங்க. வாசம் இருந்தாலாவது பொறுத்துக்கலாம். காகிதப் பூ.

Saturday, March 03, 2012

என்ன செய்யலாம்னு சொல்லுங்க! :)))))

தலைவலியை விலைக்கு வாங்கிண்டாச்சு! :)))) பின் தொடரும் ஆப்ஷன் வேலை செய்யாததால் தெரியாத்தனமாய் (தெரிந்தே) கூகிள்+ க்கு மாறினேன். எல்லாம் இருக்கு என்றாலும் கொஞ்சம் தேட வேண்டி இருக்கு. ஒண்ணும் புரியலை. அதோடு இது பிடிக்கவும் இல்லை. மறுபடியும் ப்ளாகருக்கு மாற முடியுமா? அதோடு இதிலும் பின் தொடரும் ஆப்ஷன் இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. யாராச்சும் என்ன செய்யலாம்னு சொல்லுங்கப்பா.

கங்கை வருகிறாள்! விருப்பமிருந்தால் பார்க்கலாம்!

Chinmaya Mission proudly presents the “First of its Kind” tele-serial “Upanishad Ganga”;
to be aired on Doordarshan's National network(DD1),
every Sunday between 10:00 - 10:30 am for 52 weeks, from 11th March 2012.

Upanishad Ganga is a mammoth effort covering the entire gamut on Indian Culture, Heritage, Philosophy and Wisdom spanning more than 5000 years. In this serial, the knowledge of ‘Upanishads’ is explained in a modern context through stories. It can transform our life, ennoble our vision, purify our hearts and inspire our efforts with selflessness. Its a great service to our culture, our country and humanity to spread the knowledge of the Upanishads. It is dedicated to revive the glorious cultural heritage and pride in the Spiritual Genius of Bharat.
Conceptualized by Swami Tejomayananda, Global Head - Chinmaya Mission, it is Directed by Dr.Chandraprakash Dwivedi (of Chankya fame), and acted by many renowned TV actors, this serial is produced by ‘Chinmaya Creations’.

Please pass on this message to many more. Let the knowledge of the Upanishads flow uninterrupted like the Ganga and touch the hearts of everyone.


Check for Upanishad Ganga updates on:
Upanishad Ganga Facebook page
Videos on Youtube
Daily Tweets on Twitter
For further details please contact: Sumedha +919768421971 / +91-22-28572367
Chinmaya Creations, CCMT, Sandeepany Sadhanalaya, Saki Vihar Road, Mumbai - 400072, India.

Friday, March 02, 2012

இங்கே வந்துட்டேன் "வேணு"வோடு

கோபாலன் வேணுவைத் தொலைத்து விட்டானோனு துளசி கேட்டிருக்காங்க. அவன் இதோ இங்கே வேணுவோடு வந்திருக்கான். ராதையிடம் இருந்து ஒளிந்து கொண்டிருக்கிறான். ராதைக்கு கர்வம் வந்துவிட்டது. கண்ணன் தன்னிடம் மட்டும் மிகவும் பிரியம் வைத்திருக்கிறான். தான் அவனுக்கு மிகவும் பிடித்தவள் என்று மற்ற கோபிகைகளிடம் அலட்சியம் காட்டுகிறாள்; அவர்களைக் கேலியும் செய்கிறாள். பார்த்தான் கண்ணன். அவனுக்கு யார் மனம் புண் ஆனாலும் பிடிக்காதே. ஆகவே ராதையின் கர்வத்தை ஒடுக்க வேண்டி அவள் கண்களிலிருந்து மறைந்தான். ராதை கண்ணனைத் தேடித் தேடிப் பாடுகிறாள். "ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே!"

மேற்கண்ட வேணுகோபாலன் கும்பகோணத்தில் இருந்து 22 கிமீ தூரத்தில் உள்ள (வட மட்டம் என்னும் ஊரில் இருந்து ஒன்றரை கிமீ) எங்கள் ஊரான பரவாக்கரை கிராமத்து ஶ்ரீவேங்கடநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. நாற்பது ஆண்டுகளாகக் கும்பாபிஷேஹமோ திருப்பணியோ நடவாமல் இருந்த கோயிலுக்குப் பெருமுயற்சியின் பேரில் சென்ற வருடம் கும்பாபிஷேஹம் செய்வித்துப் படங்களையும், நிகழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது வெகு சிலருக்கே நினைவிருக்கும். இந்தப் படங்களோடு வேறு சில படங்களை கூகிள்+ என்னைக் கேட்காமல் டெஸ்ட் என்று சில படங்களை எடுத்துப் போட்டுவிட்டது. அதுவும் பப்ளிக் ஷேரில். அதிர்ச்சியா இருந்தது. திரு கேஜி கெளதம் எந்த ஊருனு கேட்டிருந்தார். கூகிள் செய்த அக்கிரமத்தால் திகைத்த நான் அதுக்குப் பதிலே சொல்லாமல் விட்டுவிட்டேன். திரு கெளதம் மன்னிக்கவேண்டும்.

இப்போ துளசியின் பதிவைப் பார்த்ததும் வேணுகோபாலன் நினைவில் வந்தான். வேணு இங்கே இல்லையோ வைச்சிருக்கான். அவங்க அங்கே கேட்டால் அவன் என்ன பதில் சொல்ல முடியும்? வேணுவின் கானத்தைக் கேட்டால் ராதை அவன் இருக்குமிடம் கண்டு பிடிச்சுடுவாளே! அதான் ஒளிச்சு வைச்சிருக்கான்.


வேணு கானம் தென்றல் காற்றில் கலந்து வருகுது!