இன்னும் சில நாட்களுக்குக் கொஞ்சம் அப்படி இப்படித் தான் வந்தாக வேண்டும். தொடர்ந்து இணையத்தில் அமர முடியாது. யு.எஸ்ஸில் இருந்து கிளம்பியதே சென்னையில் தொடர்ந்து வசிப்பது குறித்த முடிவை விரைவில் எடுக்க வேண்டித்தான். கடைசியில் முடிவு எடுத்தாச்சு. அது விஷயமாகத் தான் நான்கு நாட்களாக ஊரில் இல்லை. நேற்று மாலை தான் வந்தோம். அங்கே இங்கே சுத்தி ரங்கன் காலடியில் போய் விழ முடிவு.
இந்தச் சாலை மேம்பாட்டுக்காகவும், மற்ற வசதிகளுக்காகவும் போராடிப் போராடி மனசும், உடலும் நைந்து போயாச்சு. ஒண்ணும் நடக்கிறாப்போல் தெரியலை. இங்கே வெளியே இருந்து வரும் ஆட்டோக்காரங்களும், டாக்சி ஓட்டுநர்களும் எங்களைக் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியலை. அவங்க என்னமோ எங்க கையிலே தான் முழு அதிகாரமும்னு நினைப்பாங்க போல! :P :Pசொந்த வீட்டை மராமத்து செய்து தொடர்ந்து வசிப்பதில் சில பிரச்னைகள். இடித்துக்கட்டுவதையும் ஒத்திப் போட்டாச்சு. இடித்துக்கட்ட ஆரம்பித்தால் சாலை போடா வந்தாங்கன்னா பிரச்னை அதிகம் ஆகும். ஆகவே இப்போதைக்கு அப்படியே விட்டுட்டு வேறிடம் போவது தான் சரி என முடிவு எடுத்திருக்கோம். அதற்கான ஏற்பாடுகளில் இருப்பதால் கொஞ்சம் அப்படி, இப்படித் தான் இணையத்துக்கு வரணும். என்றாலும் தினம் ஒருமுறையானும் வரலாம்; வரமுடியும் என நம்புகிறேன். இன்னும் பல பதிவுகளைப் படிக்கவில்லை. மத்தியானமா வரேன்.
இந்தச் சாலை மேம்பாட்டுக்காகவும், மற்ற வசதிகளுக்காகவும் போராடிப் போராடி மனசும், உடலும் நைந்து போயாச்சு. ஒண்ணும் நடக்கிறாப்போல் தெரியலை. இங்கே வெளியே இருந்து வரும் ஆட்டோக்காரங்களும், டாக்சி ஓட்டுநர்களும் எங்களைக் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியலை. அவங்க என்னமோ எங்க கையிலே தான் முழு அதிகாரமும்னு நினைப்பாங்க போல! :P :Pசொந்த வீட்டை மராமத்து செய்து தொடர்ந்து வசிப்பதில் சில பிரச்னைகள். இடித்துக்கட்டுவதையும் ஒத்திப் போட்டாச்சு. இடித்துக்கட்ட ஆரம்பித்தால் சாலை போடா வந்தாங்கன்னா பிரச்னை அதிகம் ஆகும். ஆகவே இப்போதைக்கு அப்படியே விட்டுட்டு வேறிடம் போவது தான் சரி என முடிவு எடுத்திருக்கோம். அதற்கான ஏற்பாடுகளில் இருப்பதால் கொஞ்சம் அப்படி, இப்படித் தான் இணையத்துக்கு வரணும். என்றாலும் தினம் ஒருமுறையானும் வரலாம்; வரமுடியும் என நம்புகிறேன். இன்னும் பல பதிவுகளைப் படிக்கவில்லை. மத்தியானமா வரேன்.
மார்ச் இருபத்துநான்கு அன்று சென்னையில் இருப்பீர்களா? எங்கள் ப்ளாக் ஆசிரியர் வல்லிமா வீட்டுக்கு வந்து, அவருக்குரிய பரிசுப் புத்தகத்தையும், உங்களுடைய பரிசுப் புத்தகத்தையும், அன்று அவரிடம் கொடுப்பார்.
ReplyDeleteஇண்டியாவிலேயே வந்து செட்டிலாகப்போரீங்களா?
ReplyDeleteTrichy or Srirangam??
ReplyDeleteவாங்க கெளதம் சார், மார்ச் 24 சென்னையில் தான் இருப்பேன். உங்கள் ப்ளாக் ஆசிரியர் எங்க அரண்மனைக்கு வரமுடியும்னா விலாசம் தரேன்; இல்லைனா ரேவதிட்டே கொடுத்தாலும் சரி. :))) ஒண்ணும் பிரச்னை இல்லை.
ReplyDeleteவாங்க லக்ஷ்மி, இந்தியாவிலேயே தான் எப்போதும் இருக்கோம். :))) ஆறு மாசத்துக்காக மட்டும் அமெரிக்கா போனோம்.
ReplyDeleteவாங்க ஜெயஸ்ரீ, ஸ்ரீரங்கம் தான். :))))
ReplyDeleteஅரண்மனை விலாசத்தை, engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். பக்கமாக இருந்தால் வருகிறோம். இல்லையேல் வல்லிமா அவர்களிடம் கொடுத்துவிடுகின்றோம்.
ReplyDeleteஸ்ரீரங்கமா! மே மாதத்தில் வரலாம் என்று இருக்கிறோம்...
ReplyDeleteசமீபகாலமாக மாவட்ட தலைநகர் களிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் வளர்ச்சியடைந்திருக்கிறது. ஸ்ரீரங்கம் அந்த விதத்தில் வேகமாக வளர்ச்சி- யடைந்த ஒன்று. ஸ்ரீரங்கநாதரும் இருக்கிறரா, கவலையில்லை.
ReplyDeletegood luck!
ReplyDeleteஹா, ஹா, கெளதம் சார், அரண்மனையைப் பார்த்துட்டுப் பயந்துடப் போறார். :))))) அனுப்பறேன்.
ReplyDeleteவாங்க, கோவை, அதுக்குள்ளே போயிட்டாச் சொல்றேன். வாங்க வீட்டுக்கு. :))))
ReplyDeleteவாங்க ஜீவி சார், ஆமாம், எங்கெங்கு காணினும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தான்! வேறே வழியே இல்லை! :(((((
ReplyDeleteநன்றி அப்பாதுரை. :))))
ReplyDeleteநல்ல விஷயம்... திருவரங்கத்தில் இனி வாசம்....
ReplyDeleteமே வருவோம் நானும் ஆதியும்... முடிந்தால் சந்திக்கலாம்....
ஸ்ரீரங்கம் நல்ல சாய்ஸ். ஆனால் சென்னையை விட்டு வெளியே போவதில் ஒரே ஒரு குறை. சென்னையில் இரண்டு மணி நேரம் (அறிவிக்கப்பட்ட) மின் வெட்டு. மற்ற ஊர்களில் எட்டு முதல் பத்து மணி நேரம் வரை! :)))
ReplyDeleteவாங்க வெங்கட், நிச்சயமாய் வரணும். அதுக்குள்ளே போயிடுவோம்னு தான் நினைக்கிறேன். நன்றிப்பா.
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், உண்மைதான், அங்கெல்லாம் அறிவிக்கப்பட்ட ஆறுமணி நேரத்தைத் தவிரவும், அறிவிக்கப்படாத மின்வெட்டும் அரைமணிக்கொரு முறை உள்ளது தான். ஆனால் இங்கே சொந்த வீட்டில், பல்லாண்டுகளாய்க் குடி இருந்த தெருவில் உள்ள நிலைமை சரியாக இல்லை. ஒரு விதத்தில் இதை எஸ்கேப்பிஸம்னு சொல்லலாம்! :((((((
ReplyDeleteமுக்கியமாய்ச் சாலை வசதி, எங்க வீட்டுக்கு இருபக்கமும், வீட்டுக்கு எதிரேயும் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்காரர்களின் கழிவு நீர் தெருவில் வெள்ளமாக ஓடுவது, கொசுத்தொல்லை இவற்றிலிருந்து தப்பிக்கத் தான். :((((((
ரங்கன் காலடி கிடைக்க கொடுத்து வத்திருக்கணும்.
ReplyDeleteரங்கா ரங்கானா எங்கா? ஸ்ரீரங்கம் தானா?
ReplyDeleteஎங்க ஊர்!!! :) yeayyyyyyyyy! :D :D
ReplyDeleteரங்கன விஜாரிச்சேன்னு சொல்லுங்கோ... எப்போவாவது ஒரு தடவ தான் என்ன பாக்க கடைக்கறது அவருக்கு, பாவம்!
வாங்க விச்சு, ரொம்ப நன்றி.
ReplyDeleteஅப்பாதுரை, ஆமாம், ஸ்ரீரங்கம் தான்.:))))
ReplyDeleteவாங்க மாதங்கி, உங்களை என் பதிவுக்கு வர வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு பாருங்க! :P ஹிஹிஹி, நன்றிங்க. ரங்கன் கிட்டே சொல்றேன்.
ReplyDeleteமின்வெட்டு பற்றிய என் பின்னூட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வைக்கிறது இன்றைய செய்தித் தாளில் வந்துள்ள 'மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம்' வெளியிட்டுள்ள யோசனை/கட்டளை ஆணை!!
ReplyDeleteஅடாடா!...பங்குனி உத்திரம் சேர்த்தி சேவை இன்னுமே உங்கள் இல்லத்தில் தங்கி தரிசிக்கலாம் போல இருக்கே!...(பெருமாளது சேர்த்தி சேவை + உங்கள் இல்லத்து சேர்த்தி சேவையும் சிறப்பு...இரண்டும் தரிசிக்க எங்களுக்கு வாய்ப்பு.... :-)
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், மீள் வரவுக்கு நன்றி. :)))) எங்கே ஆரம்பிக்கிறாங்களோ இல்லையோ அம்பத்தூருக்கு நினைச்சப்போ மின்வெட்டு இருக்கு! :)))) ஆகையால் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. சமாளிப்போம். :))))))
ReplyDeleteவாங்க மெளலி, உங்க வரவே அதிசயம்னா நீங்க எங்க வீட்டுக்கு வரேனு சொல்றது அதை விட அதிசயம் தான். வாங்க எப்போ வேணும்னாலும். நல்வரவு. :))))))
ReplyDeleteவெரி குட் வெரி குட்! ரெங்கனாதரை இந்த வருஷம் தரிசனம் பண்ண வந்தா உங்காத்து திண்ணைல தான் உக்காச்சுக்க போறேன்! வீடு முடிவு ஆன உடனே விலாசம் மெயில் பண்ணுங்கோ!
ReplyDeleteஅடாடா, விவிஐபிக்களெல்லாம் நம்ம பதிவுக்கு வர ஆரம்பிச்சுட்டங்கப்பா! :P
ReplyDeleteவாங்க தாக்குடு, நிச்சயமாச் சொல்றேன். :))))))
rightu.. trichy masam oru murai visit panren. so problem illai
ReplyDeleteதாக்குடு, வழக்கம் போல காவேரியை தாண்டி போக வேண்டி இருக்கு, கொள்ளிடத்தை தாண்டி போக வேண்டி இருக்குன்னு எச்சூஸ் சொல்லிக்கலாம்!
ReplyDeleteவாங்க எல்கே, இங்கே இருக்கிற அம்பத்தூருக்கு, அடிக்கடி வர அம்பத்தூருக்கே வர முடியலையாம்! :P:)P:P:P:P திருச்சிக்கு?? பார்க்கலாம்.:D
ReplyDelete@ வா.தி.
ReplyDeleteஹை, என்னடாப்பா திடீர்னு வெயில் குறைஞ்சிருக்கேனு பார்த்தேன்; வராதவங்க எல்லாம் வராங்கப்பா!
தாக்குடு,
நல்லதொரு நொ.சா. கிடைச்சிடுத்து. சேமிச்சு வைச்சுக்கலாம். :P:P
//ருச்சிக்கு?? பார்க்கலாம்.:D//
ReplyDeletetiruchi 3 masama poindu vandunthu iruken.... so kandippa varuven.....
கீதா,
ReplyDeleteநல்ல இடம் தேடித்தான் போகிறீர்கள்.
அகிலாண்டேஸ்வரி, உச்சிப் பிள்ளையார், சமயபுரத்தம்மா எல்லோரும் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்ளுவார்கள். நலமே வாழ என் பிரார்த்தனைகள்.
நல்ல இடம். வாழ்த்துக்கள்.
ReplyDelete