எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, March 02, 2012

இங்கே வந்துட்டேன் "வேணு"வோடு

கோபாலன் வேணுவைத் தொலைத்து விட்டானோனு துளசி கேட்டிருக்காங்க. அவன் இதோ இங்கே வேணுவோடு வந்திருக்கான். ராதையிடம் இருந்து ஒளிந்து கொண்டிருக்கிறான். ராதைக்கு கர்வம் வந்துவிட்டது. கண்ணன் தன்னிடம் மட்டும் மிகவும் பிரியம் வைத்திருக்கிறான். தான் அவனுக்கு மிகவும் பிடித்தவள் என்று மற்ற கோபிகைகளிடம் அலட்சியம் காட்டுகிறாள்; அவர்களைக் கேலியும் செய்கிறாள். பார்த்தான் கண்ணன். அவனுக்கு யார் மனம் புண் ஆனாலும் பிடிக்காதே. ஆகவே ராதையின் கர்வத்தை ஒடுக்க வேண்டி அவள் கண்களிலிருந்து மறைந்தான். ராதை கண்ணனைத் தேடித் தேடிப் பாடுகிறாள். "ராதையின் நெஞ்சமே கண்ணனுக்குச் சொந்தமே!"

மேற்கண்ட வேணுகோபாலன் கும்பகோணத்தில் இருந்து 22 கிமீ தூரத்தில் உள்ள (வட மட்டம் என்னும் ஊரில் இருந்து ஒன்றரை கிமீ) எங்கள் ஊரான பரவாக்கரை கிராமத்து ஶ்ரீவேங்கடநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. நாற்பது ஆண்டுகளாகக் கும்பாபிஷேஹமோ திருப்பணியோ நடவாமல் இருந்த கோயிலுக்குப் பெருமுயற்சியின் பேரில் சென்ற வருடம் கும்பாபிஷேஹம் செய்வித்துப் படங்களையும், நிகழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டது வெகு சிலருக்கே நினைவிருக்கும். இந்தப் படங்களோடு வேறு சில படங்களை கூகிள்+ என்னைக் கேட்காமல் டெஸ்ட் என்று சில படங்களை எடுத்துப் போட்டுவிட்டது. அதுவும் பப்ளிக் ஷேரில். அதிர்ச்சியா இருந்தது. திரு கேஜி கெளதம் எந்த ஊருனு கேட்டிருந்தார். கூகிள் செய்த அக்கிரமத்தால் திகைத்த நான் அதுக்குப் பதிலே சொல்லாமல் விட்டுவிட்டேன். திரு கெளதம் மன்னிக்கவேண்டும்.

இப்போ துளசியின் பதிவைப் பார்த்ததும் வேணுகோபாலன் நினைவில் வந்தான். வேணு இங்கே இல்லையோ வைச்சிருக்கான். அவங்க அங்கே கேட்டால் அவன் என்ன பதில் சொல்ல முடியும்? வேணுவின் கானத்தைக் கேட்டால் ராதை அவன் இருக்குமிடம் கண்டு பிடிச்சுடுவாளே! அதான் ஒளிச்சு வைச்சிருக்கான்.


வேணு கானம் தென்றல் காற்றில் கலந்து வருகுது!

10 comments:

  1. முன்பு இதைப் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்த நினைவு இருக்கிறது, பின்னூட்டமும் இட்டிருக்கிறேன். (என்று நினைக்கிறேன்!)

    பதிவின் ஆரம்பத்தில் உள்ள எச்சரிக்கை சமீப அனுபவத்துக்கு அப்புறம் புதிது என்று நினைக்கிறேன்! இப்போதான் பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. இப்போ சொல்லிட்டீங்களே! நானும் கூகிளின் அந்தப் பக்கத்தில், டெஸ்ட் என்று இருந்ததைப் பார்த்தேன். நீங்களே செய்த டெஸ்ட் என்றால், அந்த டெஸ்ட் பதிவை என்னால் படிக்க முடிந்தது என்பதை தெரிவிக்க, எந்த ஊர் என்று சும்மா கேட்டு வைத்தேன்!

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், முன்னே வேணுகோபாலர் வந்திருக்க மாட்டாரே! ம்ம்ம்ம்ம்? சரியா நினைப்பில்லை. :)))

    ஆமாம் எச்சரிக்கையை இரண்டு நாட்கள் முன்னாடி தான் சேர்த்தேன். கொஞ்சம் கொட்டை எழுத்தில் தான் போட்டேன். அது என்னமோ சரியா வரமாட்டேன்னு அடம்! :))))))

    ReplyDelete
  4. வாங்க கெளதம் சார், நான் எங்கே டெஸ்ட் செய்யறது? என்னைத் தான் கூகிள் டெஸ்ட் பண்ணிட்டு இருக்கு! நேரம்! :))))))

    இப்போக் கொஞ்ச நாட்களா எல்லா ஐடியிலே இருந்தும் மெயில்களைக் காட்டுவேன்னு பிடிவாதம் பிடிச்சுட்டு இருக்கு. வேண்டாம்னு சொல்லித் தினமும் துரத்திட்டு இருக்கேன். இன்னும் என்ன என்ன வருமோ! எக்ஸ்ப்ளோரரில் ப்ரவுஸ் பண்ணலாம்னா அது மூஞ்சியே சகிக்கலை! :)))))))))

    ReplyDelete
  5. என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல்லியே

    ReplyDelete
  6. //எங்கள் ஊரான பரவாக்கரை கிராமத்து//

    :)) புரிஞ்சது! புரிஞ்சது!

    //எக்ஸ்ப்ளோரரில் ப்ரவுஸ் பண்ணலாம்னா அது மூஞ்சியே சகிக்கலை! :))))))))) //

    இந்த நகைச்சுவை உணர்வு தான் உங்க கூடவே பிறந்தது போலிருக்கு!

    ReplyDelete
  7. வாங்க லக்ஷ்மி, ஒண்ணும் இல்லை, கூகிள் பின்னூட்டப் பெட்டியில் செய்திருக்கும் மாற்றங்களைக் குறித்துச் சொன்னேன். அதோடு என் பதிவு திருடு போவதால் எச்சரிக்கையும் சேர்த்திருக்கேன்.

    ReplyDelete
  8. வாங்க ஜீவி சார்,

    )) புரிஞ்சது! புரிஞ்சது!//

    பின்னே? இல்லையா? :)))))))


    இந்த நகைச்சுவை உணர்வு தான் உங்க கூடவே பிறந்தது போலிருக்கு!//

    கூடவே பிறந்தது தான் :))))))))))) சிலருக்குப் பிடிக்கலை; என்றாலும் பலருக்குப் பிடிச்சிருக்கு. உங்களுக்கும் பிடிச்சிருக்கிறது சந்தோஷம். இதுவே என்னை ஒரு மனுஷியாக இயல்பாக வைத்திருக்கிறது. நன்றி சார்.

    ReplyDelete
  9. கீதா முதல்ல ஒன்னுமெ புரியல்லே நீங்க விளக்கி சொன்னதும் ஓரளவு புரியுது

    ReplyDelete
  10. வாங்க லக்ஷ்மி, உங்களாலே என்னோட இந்தப் பதிவின் கமென்ட்ஸுக்கான பதிலைத் தொடர முடிகிறதா? நல்லது தான். எனக்குத் தான் தொடரமுடியலை யாரோட பதிவிலேயும். :((((((

    ReplyDelete