எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 23, 2012

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!

நேற்று மாலை அந்தக் கண்ணாடி அறை ஆண்டாளைப் பார்க்க வசதியான வாயில் எதுனு இங்கே குடியிருப்பில் இருக்கும் ஒரு மாமி சொன்னபடி வடக்கு வாசலுக்குப் போய் அங்கிருந்து நேரே தாயார் சந்நிதிக்குப் போனோம்.  ஏற்கெனவே ஒரு தரம் பெருமாளைப் பார்த்தா தாயாரைப் பார்க்க முடியறதில்லை.  தாயாரைப் பார்த்தால் பெருமாளைப் பார்க்க முடியறதில்லையேனு நினைச்சு முதல்லே தாயாரைப் பார்த்து எல்லாத்துக்கும் சேர்த்து உத்தரவு வாங்கலாம்னு தாயார் சந்நிதிக்கே போனோம்.  ஐம்பது ரூபாய்ச் சீட்டு வாங்கலாமா, வேண்டாமானு மனம் ஊசலாட, இன்னொரு பக்தர் பிரச்னையைத் தீர்த்து வைத்தார்.  இருபது, முப்பது பேர் கூட இல்லை.  எல்லாம் பெருமாள் சந்நிதியில் இருக்காங்க.  இப்போப் போங்க , சீட்டெல்லாம் எதுக்கு அநாவசியமானு சொல்லி எங்களை இலவச தரிசனத்துக்குத் தள்ளி விட்டார்.

ஆஹா, எத்தனை வருடங்கள் கழிச்சு இலவச தரிசனம் என மனம் ஆனந்தத்தோடு குதூகலிக்க நேரே அர்த்த மண்டபம் எனச் சொல்லப்படும் கருவறைக்கு முந்திய மண்டபத்துக்கே போயிட்டோம்.  எங்களுக்கு முன்னால் பத்துப் பதினைந்து பேரே நிற்க, வெகு விரைவில் கருவறைக்குப் போயிட்டோம்.  அதிகமாய் விரட்டவில்லை.  போங்க, போங்கனு சொன்னாங்களே தவிர, நின்னு தரிசனம் செய்த போது தொந்திரவு செய்யலை. பூ, மஞ்சள் பிரசாதம் பெற்றுக் கொண்டு மீண்டும் ஒரு முறை ரங்கநாயகியைப் பார்த்தால், முன்னால் உள்ள உற்சவருக்குப் பின்னால் இரண்டு நாச்சியார்கள். இது என்னடானு அதிசயமாப் பார்க்க, நம்ம ரங்க்ஸுக்கும் அதே சமயம் அதே சிந்தனை ஓட, (ஆஹா, என்ன ஒரு ஒருமித்த சிந்தனை!  நாங்க தான் மேட் ஃபார் ஈச் அதர்னு மனசிலே நினைச்சிட்டேன்) அவர் என்னைக் கேட்க, நானும் அதானேனு இழுக்க, அங்கு வந்திருந்த ஒரு பக்தை ஸ்ரீதேவி, பூதேவினு சொல்ல, அப்போ நீளா தேவினு நான் கேட்க, அவங்க முழிக்க, ரங்க்ஸ் போதும் உன் ஆராய்ச்சி, வானு என்னை இழுக்க, மனசில்லாமல் நான் திரும்ப, அந்த அம்மா விட்டால் போதும்னு ஓடிட்டார்.

கடைசியில் பார்த்தாக்க, (முதல்லே இருந்தே அதான், ஆனால் நாங்க தான் நினைவில் வைச்சுக்கலை)  முஸ்லீம்கள் படையெடுப்பில் ஸ்ரீரங்கம் வந்தப்போ ரங்கநாதரான நம்பெருமாளைத் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகப் போக, இங்கேயே இருந்த  மூலவருக்கு முன்னால் சுவரெழுப்பி மறைச்சிருக்காங்க.  அப்போ மூலவரான ரங்கநாயகியை அங்கிருந்த நந்தவனத்தில் புதைச்சு வைச்சிருந்திருக்காங்க.  மீண்டும் கோயில் நாற்பது வருடங்களுக்குப்பின்னர் திறந்தப்போ நாச்சியாரைத் தேடினால் கிடைக்கலை;  ஆகவே புதுசா ஒரு நாச்சியாரைப் பிரதிஷ்டை பண்ணிட்டாங்க.  ஆனால் நாச்சியாரா, கொக்கா!  திருமலையில் ஒளிச்சு வைச்சிருந்த நம்பெருமாள் வரவரைக்கும் காத்துட்டு இருந்துட்டு, சரியா நம்பெருமாள் திருமலையிலே ஒளிஞ்சுட்டு இருந்தவர் வந்ததும், அவங்களும் வெளியே வந்துட்டாங்க.  முழுசா அப்படியே அன்னிக்கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருந்த ஒரிஜினல் மூல நாச்சியாரைத் தூக்கிப் போட மனசு வருமா?  அவங்களையும் பிரதிஷ்டை பண்ணவே. ரங்கநாயகி மூலவரா இரு விக்ரஹங்களும், உற்சவர் ஒன்றுமாக மூன்று நாச்சியார்கள் இருக்காங்க. {அப்பாடா, மண்டைக் குடைச்சல் தீர்ந்தது. இதெல்லாம் ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பணிந்தோமில் இன்னும் விபரமாக வரும்.  அங்கேயும் வந்து படிங்க. இங்கே வலப்பக்கம் தெரியும் சுட்டிகளில் ஆன்மீகப் பயணம் க்ளிக்கினால் அங்கே வந்து சேரலாம்.  ஹிஹி, இடைவேளை விளம்பரம் இது! }

அதுக்கு அப்புறமா கோதண்டராமர் சந்நிதியைத் தேடினோம். அதுக்கருகே தானே ஆண்டாள் இருக்கா!  பட்டாபிராமரோனு பிரகாரத்திலே இருக்கும் அவரைத் தேடி நான் போக அங்கே ஆண்டாள் இல்லைனு புரிய மீண்டும் பரமபத வாயிலுக்கே வந்து ஒருத்தரிடம் கேட்க எதிரே பாருங்கனு சொல்ல, அசடு வழிஞ்சோம்.  கொட்டை எழுத்திலே கண்ணாடி அறை சேவை, கோதண்டராமர் சந்நிதிக்குச் செல்லும் வழி னு சந்திர புஷ்கரிணி பக்கத்திலே எழுதி இருக்க, நேரே சென்றோம்.  கோதண்டராமர் நிஜம்மா எதிரே கோதண்டத்தை வைத்துக்கொண்டு, உனக்கு எதிரி யார்னு சொல்லு அவங்களை என் வில்லால் ஒரு வழி பண்ணிடறேன்னு சொல்லி தைரியம் ஊட்டறார்.  வலப்பக்கம் சீதை சின்னஞ்சிறு பெண்போலே சித்தாடை இடை உடுத்தி நிற்க, இடப்பக்கம் தம்பியாழ்வார் லக்ஷ்மணன்பவ்யம் காட்டி நிற்கிறார் .  காலடியில் ராமபக்த ஹநுமன்.  வெளியேயே குலசேகராழ்வார் தினமும் ராமரைப் பார்த்துக்கொண்டு பாசுரங்கள் பாடிக் கொண்டு இருக்கிறார்.  அவரையும் பார்த்துக்கொண்டு, ராமன் வில்லை எடுக்கிறான்னு நீங்களும் துணைக்குக் கிளம்பிடாதீங்கனு குலசேகர ஆழ்வார் கிட்டே  சொல்லிட்டுக் கண்ணாடி அறை ஆண்டாளைப் பார்க்க அங்கேயே அருகே இருந்த நடைபாதையில் சென்றோம்.

நேரே பார்த்தால் பரமபத நாதர் நித்யசூரிகளோடு பரமபதத்தில் வீற்றிருக்கும் தெய்வீகக் காட்சி. அதைப் பார்த்துக்கொண்டு இடப்பக்கம் திரும்பும் முன்னே வலப்பக்கம் இருக்கும் கண்ணாடியில் பார்த்தால் அன்றைய அலங்காரம் நன்றாகத் தெரிகிறது.  மூலவர் வேங்கடநாதனாக நிற்க, உற்சவரோ, வராஹமூர்த்தியாக, ஆண்டாளாகிய பூமா தேவியை பூமிக்கடியிலிருந்து தூக்கித் தன் தொடையில் அமர்த்திய வண்ணம் காட்சி அளித்தார்.  வராஹமூர்த்தியைப் பார்த்தால் நிஜ வராஹம் போலவே இருந்தது.  ஆண்டாள் கண்ணைப் பறிக்கும் அழகோடும் முத்துக்கொண்டையோடும் கையில் கிளி இல்லாமல் காணப்பட்டாள்.  கிளி இல்லையேனு தான் கொஞ்சம் வருத்தம்.  நின்று, நிதானமாப் பார்த்துக்கொண்டோம்.  நவராத்திரியில் செய்யும் அலங்காரங்கள் போலவே தான் இதிலேயும்.  ஆனாலும் அற்புதமான அலங்காரம்.  நல்ல கற்பனா சக்தி, உழைப்பு. மன ஒருமைப்பாடு.  இறைவனோடு மனம் ஒன்றினால் தவிர இத்தகையதொரு அலங்காரங்களைச் செய்ய இயலாது.  அதை நேற்றே அன்ன காமாட்சி சந்நிதியில் உணர்ந்தேன்.  இன்று மீண்டும் ஒரு முறை உணர்ந்தேன்.  இன்று என்ன அலங்காரம்னு தெரியலை.  இன்னிக்கு வலை உலக நண்பர் ஒருத்தரை அவங்க வீட்டில் போய்ப் பார்த்தோம்.  கோயில் பற்றியும் அந்தக் காலத்தில் கோயில் எப்படி இருந்ததுனும் ஒரு மாதிரியான கருத்துப் பரிமாற்றம் நடந்தது. 

12 comments:

  1. விசாகா ஹரி உபன்யாசம் கேட்டா மாதிரி உணர்வு. கோவில் சென்று வந்த அனுபவத்தை அவர் சொன்னா இப்படித்தான் இருக்குமோ என்னமோ...!

    ReplyDelete
  2. நீங்க பரமபதநாதர் சன்னிதிக்குப் போய் அங்கேயும் ஆண்டாளைப் பார்த்தாச்சா? சரி தான். அதைப் படிக்காம முந்தைய இடுகைக்கு போட்ட பின்னூட்டத்துல அதைச் சொல்லியிருக்கேன். :-)

    ReplyDelete
  3. கூட்டமே இல்லாமல் தரிசனம்!
    ஆச்சரியமாய் இருக்கிறது.

    கோவில் சென்று வந்த அனுபவம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  4. எங்களையும் உங்க கூட அழைத்து சென்றதற்கு நன்றி

    ReplyDelete
  5. அங்கணெடு மதிள் புடைசூழ் அயோத்தி யென்னும்
    அணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி
    வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த்
    தோன்றி விண்முழுதும் உயக்கொன்ட வீரன் தன்னை
    செங்கணெடுங் கருமுகிலை இராமன் தன்னைத்
    தில்லைநகர்த் திருசித்ரகூடந் தன்னுள்
    எங்கள் தனி முதல்வனை யெம்பெருமான் தன்னை
    என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே




    ஆஹா கோதை நாச்சியார் தரிசனமா !! லக்கி யு !!
    ம்ம் .........
    அந்த ஆண்டாளே இப்ப காலத்துல நேர்ல வந்தா அவ என்ன சொல்லுவான்னு யோசிச்சேன்!!!



    இங்க நம்ப வீட்ல ரங்ஸ் பிறந்த நாள் திரு ஆடி பூரம்:)), இந்த தடவை முக்கியமான மைல் கல் :))

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், உங்க பின்னூட்டம் ஊக்கம் அளிக்கிறது. ஆனாலும் அவர் எங்கே! நான் எங்கே? :(

    ReplyDelete
  7. வாங்க குமரன், முதல் பதிவின் கடைசியிலேயே இரு இடுகைகளாக வரும்னு குறிப்பிட்டிருந்தேன்; நீங்க கவனிக்கலை போல. நன்றிப்பா

    ReplyDelete
  8. வாங்க கோமதி அரசு, கூட்டம் இல்லை தான். ஆனால் அது தாயார் சந்நிதியிலும், ஆண்டாள் சந்நிதியிலும். நேரமும் மாலை ஐந்து மணிக்குள்ளாக. ஆனால் அதே சமயம் ரங்கனாரைப் பார்க்க எக்கச்சக்கக் கூட்டம். அன்னிக்கு 50 ரூ டிக்கெட்டிலேயே ஐம்பது பேருக்கும் மேல் நின்றார்கள். சரினு டாட்டா சொல்லிட்டு வந்துட்டோம். அவரைத் தனியாகத் தான் போய்ப் பார்க்கணும்.

    ReplyDelete
  9. நன்றி லக்ஷ்மி.

    ReplyDelete
  10. வாங்க ஜெயஸ்ரீ, உங்கள் கணவருக்கு எங்களோட வாழ்த்துகள். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  11. ஒரு ரெண்டு நாள் விட்டு வந்தா 4 பதிவு போட்டாச்சா ? குமரன் சொன்ன ரங்கபன்கஜம் வெப்சைட் ல மார்கழி முழுவதும் தினம் உள்ள அலங்காரத்தை பதிவார் முரளி பட்டர் . அவர் பதிவில் பேசும் அரங்கன் படித்துப் பாருங்கள் கீதா . ஆடிப் பூரத்தில் ஆண்டாளையும் ரங்கநாயகியையும் தரிசித்து எங்களுக்கும் தரிசனம் செய்து வைத்ததற்கு நன்றி . காட்டழகிய சிங்கரையும் உங்கள் பதிவின் மூலம் சேவித்தேன் நன்றி.

    ReplyDelete
  12. தினம் தினம் எனக்கும் அலைபேசி மூலம் ஆண்டாள் தரிசனம் கிடைக்கிறது! :))

    பார்த்துவிட்டு அலைபேசியில் பேசும்போது இன்னிக்கு இந்த அலங்காரம், பார்க்கவே கண்கொள்ளாக் காட்சின்னு சொல்லும்போது ஒருவிதத்தில் மகிழ்ச்சி - நான் பாக்கலைன்னாலும் கேட்கக் கொடுத்து வைத்திருக்கே! :))

    ReplyDelete