எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, June 08, 2013

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!

ப்யூட்டி பார்லர் விஷயத்தில் பலரும் ஆமோதித்தாலும் பெண்ணும், பிள்ளையும் பேசிக் கொள்ளலாமா, வேண்டாமா என்பது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. பதிவில் பகிரவில்லை எனினும் குழுமங்களில் கருத்துப் பரிமாற்றங்கள் இருந்தன. கலாசார மாற்றங்கள் தேவையே என்றாலும் ஒட்டுமொத்தமாக நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் சரியல்ல.  இதில் சிலர் இப்போது லிவிங் டுகெதர் வந்திருக்கிறதையும் சுட்டிக் காட்டுகிறார்கள். எல்லாம்  தொலைக் காட்சி தயவு! ஆனால் சிலர் நான் சொல்வது சரியே என்றும் சொல்கின்றனர்.  பேச்சு வார்த்தையில் மனவேறுபாடு ஏற்பட்டு ஒரு பெண் தற்கொலையே செய்து கொண்டதாகச் சொல்கிறார் நண்பர் ஒருத்தர்.  பெண்கள் இத்தனை கோழைகளாகவும்  இருக்கக் கூடாது.  எதையும் எதிர் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். கல்யாணம் என்பதை இருவர் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் என்ற எண்ணமே இன்றைய  இளம் சமுதாயத்திடம் காணப்படுகிறது.  மேலும் கற்பனைகளும் பலவாறு உள்ளன.  அது எல்லாம் முடிந்து நிகழ்காலத்துக்கு மீண்டு வந்து உண்மையான வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கையில் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஆகிறது.

ஆகவே பெண், பிள்ளை இருவருமே தக்க அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. விருப்பு, வெறுப்புக்கள் நிச்சயமாக மாறுபடும்.  குறைகள் இருபக்கமும் இருக்கும்.  குறைகளைப் பாராட்டாமல் பொதுவான நிறைகளை மட்டுமே பார்க்க வேண்டும். ஒத்துப் போகும் விஷயங்களில் மகிழ்ச்சி அடைய வேண்டும். பொதுவாக மருத்துவர்களில் இருந்து அனுபவம் வாய்ந்த அனைவரும் கூறுவது என்னவெனில் எல்லாவற்றையும் முதலிலேயே பேசி முடித்துவிட்டால் அப்புறம்பேச ஒன்றும் இருக்காது என்பதோடு ஆர்வமும் குறைந்துவிடும் என்பதே. மேலும் பேசிப் பழகிய ஒருவர் சொல்வது என்னவென்றால், என்னதான் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிப் பழகினாலும் வாழ்க்கை என்று வாழப்போனபோது நிறைய வித்தியாசங்கள், மாறுபாடுகள் இருக்கத் தான் செய்தன என்பதே. என்னைப் பொறுத்த வரையில் இது எல்லாம் பெற்றோர் குழந்தைகளுக்குச் சிறு வயசில் இருந்தே கொண்டு வரும் பழக்க வழக்கங்களைப் பொறுத்தே அமைகின்றது. பல பெண்கள் இப்போது திருமணமே வேண்டாம் என்ற முடிவுடன் இருப்பதாகவும் சொல்கின்றனர்.  இதை எல்லாம் மீறி இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.  சரி, இதை இத்தோடு நிறுத்திக் கொண்டு அடுத்து நாம் செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.

*********************************************************************************

கல்யாணத்துக்கான சாமான்கள் தயார் செய்யணும்.  இவற்றில் வற்றல், வடாம், அப்பளம் போன்றவையும் அடங்கும்.  முன்னாட்களில் எல்லாம் இவற்றை வீடுகளில் போட்டுக் கொடுப்பார்கள்.  நிறையச் செய்ய வேண்டிய காலங்களில் அக்கம்பக்கத்து வீட்டினர் வந்து உதவுவார்கள்.  உடல் சிரமத்தை ஒரு பொருட்டாக நினைக்காத காலம் அது. அப்பளம் இடுகையில் பாடுவதற்கெனச் சில பாட்டுக்களும் உண்டு. அவற்றில் முக்கியமானது லலிதாம்பாள் சோபனம்.  சகோதரி சுப்புலக்ஷ்மியால் தொகுக்கப் பட்ட இதைப் பாடிக்கொண்டே அப்பளம், வடாம், வற்றல் போன்றவை செய்வார்களாம்.  இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் ஒரு காரியத்தைச் செய்கையில் நல்ல எண்ணங்களே இருக்க வேண்டும் என்பதே.  உணவு தயார் செய்பவர்களும் நல்லதையே நினைக்க வேண்டும். அப்பளம், வற்றல்கள், வடாம்கள் எல்லாம் போடுவது கல்யாணச் சீரில் வைக்க மட்டுமின்றி விருந்தினருக்குப் பரிமாறவும் தேவைப் படும் ஒன்றாகவும் இருக்கும்.

இப்போதெல்லாம் சமையல் கான்ட்ராக்டர்களே இந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு விடுகின்றனர். எல்லாருமே சரியாகக் கொடுப்பதாகச் சொல்ல முடியவில்லை.  ஆங்காங்கே இவர்களிலும் சிலர் கேட்டால் சரியாகக் கொடுப்பது என வைத்திருக்கின்றனர். சிலர் கேட்டாலும் இவ்வளவு தான் இந்த ரேட்டுக்கு எனச் சொல்வது என வைத்திருக்கின்றனர்.  மேலும் கல்யாணத்தில் பக்ஷணங்கள் செய்வது என்றொரு வழக்கம் உண்டு.  பெண் வீட்டிலேயே செய்யப்படும் இந்த பக்ஷணங்கள் பொதுவாக நல்ல நாள் பார்த்துச் செய்ய ஆரம்பிக்கப் படும்.  பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிக்கும் முன்னர் பிள்ளையாருக்குத் தேங்காய் உடைத்துக் கொழுக்கட்டை செய்து நிவேதனம் செய்து விநியோகம் செய்வார்கள்.  குல தெய்வப் பிரார்த்தனைகளும் உண்டு.  கல்யாணப் பத்திரிகை அடித்து வந்ததுமே பிள்ளையாருக்கு முதல் பத்திரிகை வைத்துவிட்டுப் பெண்ணை/பிள்ளையை அழைத்துக் கொண்டு குலதெய்வம் கோயிலில் சென்று பத்திரிகைகளை வைத்து வணங்கிப் பின்னர் விநியோகம் ஆரம்பிப்பார்கள். இது அவரவர் வீட்டு வழக்கப்படி செய்யப் படும்.

அதே போல் பக்ஷணங்கள் தயார் செய்யவும் நாள் பார்த்து அன்று  மர உரல், அல்லது கல் உரலை அலம்பிச் சந்தனம், குங்குமம் வைத்து, உலக்கைக்கும் சந்தனம், குங்குமம் வைத்து உரலில் முதலில் நல்ல காய்ந்த மஞ்சளைப் போட்டுப் பொடியாக இடிப்பார்கள்.  இதுக்கு மஞ்சள் இடிக்கிறது என்று சொல்வதுண்டு.  ஐந்து, ஏழு, ஒன்பது என எண்ணிக்கையில் அனுபவம் வாய்ந்த சுமங்கலிகளைக் கூப்பிட்டு இடிக்கச் சொல்வார்கள்.  அதன் பின்னரே பக்ஷணங்கள் செய்ய ஆரம்பிப்பார்கள்.  இப்போதெல்லாம் காடரிங் கான்ட்ராக்டர்களே செய்வதால் அவங்க என்னிக்கு, எப்படிச் செய்யறாங்கனு எல்லாம் சொல்ல முடிவதில்லை.  பல கல்யாணங்களையும் ஒத்துக் கொள்வதால் ஒரு தொழிற்சாலை போல் ஒரு பக்கம் முறுக்குகள் சுத்தியவண்ணமாகவும், லட்டுகள் பிடித்த வண்ணமாகவும் இருக்கும் என்கின்றனர்.  ஒருமுறையாவது நேரில் போய்ப் பார்க்கணும்னு வைச்சிருக்கேன்.  எப்போ முடியும்னு தெரியலை.

நம்ம வீட்டு பக்ஷணங்கள் தான்.  எல்லாரும் வந்து எடுத்துக்குங்க.

21 comments:

  1. அக்கா கல்யாணத்தின் போது பக்ஷணங்கள் செய்த ஞாபகங்கள் வந்தன... என் உதவி : டேஸ்ட் பார்க்க... ஹிஹி... (இனிப்பான நினைவுகள்...!) கூடவே அப்பாவின் பாடல்களும்...

    ReplyDelete
  2. //நம்ம வீட்டு பக்ஷணங்கள் தான். எல்லாரும் வந்து எடுத்துக்குங்க.//

    ஆஹா, பார்த்தாலே பசிக்கும் விதமாக அழகான பக்ஷணங்களைக்காட்டி நாக்கில் நீர் ஊற வைத்து அசத்தியுள்ளீர்கள். ;)

    ReplyDelete
  3. நிச்சயம் தொழிற்சாலை போல் இனிப்பு கார வகைகள் செய்வார்கள் - அப்பத்தான் அவங்களால் முடியும். அதனால தரம் குறையுமா, சீராகுமா?

    என்ன பேசிப் பழகினாலும் வாழத் தொடங்கியபின் எல்லாமே மாறும். ஒருவரைப் பற்றிப் புரிந்து கொள்ள அதிக வாய்ப்புகள் கிடைக்குது இல்லையா? அதற்காக பேசாமல் தலையசைத்துக் கல்யாணம் செய்து கொண்டால் ரொம்ப சிரமம். பேசினால் ஏதோ கொஞ்ச நஞ்சம் அபிப்பிராயம் ஏற்படுத்திக் கொள்ள முடியும். சில வரன்களை நிச்சயம் சில நிமிட பேச்சிலே கணிக்க முடியும்னும் நினைக்கிறேன். தோராயமா போற பாதை சரியாங்கற அளவுக்காவது கணிப்பதற்காக திருமணத்துக்கு முன் பேசிப் பழக வேண்டும்.

    ReplyDelete
  4. வளரும்போதே நேர்மறை எண்ணத்தோடு வளர்க்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்யாண விஷயங்களில் அதிக சிரமப் படுவதில்லை. குடும்ப சூழ்நிலை சரியாக இல்லாமல் வளர்க்கப்பட்ட பெண்ணோ ஆணோ சண்டைக் கோழிகளாக ஆகிவிடுகிறார்கள்.எதெற்கெடுத்தாலும் தர்க்கம்.

    பட்சணங்கள் பார்க்கவே நன்றாக இருக்கிறது.
    நம் திருமணங்களில் சீர் பட்சணங்கள் செய்வது அத்தைகளும் பெரியம்மாக்களும் தான்.
    அப்போது அன்பு.
    இப்போது பணம்.

    ReplyDelete
  5. நெருங்கிய சமீபத்தில் இது மாதிரி பட்சணங்கள் வீட்டில் செய்யவில்லை என்று நினைக்கிறேன். இது பற்றிய அறியாமைக்கு என் குறைந்த வயதும் காரணமாக இருக்கலாம். எல்லா வேலைகளும் வீட்டிலேயே என்பதை மாற்றிய பெருமை புதிய தொழிலாக இவற்றை சுவீகரித்துக் கொண்ட மக்களையே சாரும். இதில் நஷ்டம் ஏதும் உண்டா, பணம் தவிர? சிரத்தை குறைவாக இருக்கும் என்று சொல்லலாம், அம்மா சமையலில் அன்புதான் முதல் சுவை என்பது போல!! இல்லை?

    ReplyDelete
  6. வாங்க டிடி, என்ன பக்ஷணங்கள் செய்தாங்க??? அப்பாவின் பாடல்களையும் பகிர்ந்துக்கலாமே!

    ReplyDelete
  7. வாங்க வைகோ சார்,

    முறுக்கும், தட்டையும் ஒரு கோகுலாஷ்டமிக்குப் பண்ணினப்போப் படம் எடுத்துப் போட்டேன்.

    மைசூர்ப்பாகு 2012 தீபாவளிக்குப் பண்ணினது. நல்லா பொற பொறனு வரணும்னு நம்ம இன்னம்பூரார் சார் சொல்லுவார். அதே மாதிரியே வந்திருக்கு ஆனால் அவர் லண்டனில்! :))))

    ReplyDelete
  8. தரம் நிச்சயம் குறையும் அப்பாதுரை. சிலர் வாழ்க்கை வேண்டுமானல் வளம் பெறும். :)))))

    பேசாமல் தலையசைக்க வேண்டாம். ஆனால் சின்னச் சின்ன அபிப்பிராய பேதங்களை நாளாவட்டத்தில் களையலாமே என்பது தான். இது தனியாக இன்னொரு பதிவு எழுதி அதில் பேச வேண்டியது. ஆறு மாசம் பேசிப் பழகிக் கூடவே வெளியே எல்லாம் போயிட்டு வந்து அதுக்கப்புறமாச் சின்ன விஷயத்திற்காகச் சண்டை போட்டுப் பிரிந்த ஜோடிகளைத் தெரியும். வீட்டிலே பெரியவங்க எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், சின்ன அபிப்பிராய பேதத்துக்காகக் கல்யாணத்தையே நிறுத்திட்டாங்க. ஞாயிற்றுக்கிழமை யார் சமைப்பது என்பது போன்றவை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே பேசிக்கணுமா என்ன? :(((

    ReplyDelete
  9. வாங்க வல்லி, நீங்க சொல்வது சரியே என்றாலும் மன உறுதி படைத்த குழந்தைகள் எத்தகைய குடும்பச் சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு தங்கள் வாழ்க்கையைச் சீரமைக்கின்றனர். அம்மா சரியில்லாத இரு பெண்கள், அப்பாவும் உயிருடன் இல்லை. தங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டுத் தாங்களே அமைத்துக்கொண்டு இப்போது அம்மாவையும் மாறி மாறி இருவரும் வைத்துக்கொண்டு மகிழ்வோடு வாழ்கின்றனர். நிறையவே மன வேதனைப் பட்டாச்சு! :(((((

    ReplyDelete
  10. ஹாஹா பக்ஷணங்கள் நான் வீட்டில் செய்யறச்சே எடுத்த படங்கள்! :))))

    ReplyDelete
  11. வாங்க ஸ்ரீராம், இப்போதும் கல்யாண பக்ஷணங்களை வீட்டிலே செய்யும் வழக்கம் ஒரு சிலரிடம் மட்டும் இருந்து வருகிறது. இப்போல்லாம் பிள்ளையார் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, சரஸ்வதி பூஜைனு எல்லாத்துக்குமே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தானே கதி! செலவுக்குச் செலவும் வயிற்றுக்குக் கேடும்! :((((யாருக்கும் நேரமில்லை என்பதே பேச்சு! :((((

    ReplyDelete
  12. இதில் நஷ்டம் ஏதும் உண்டா, பணம் தவிர? சிரத்தை குறைவாக இருக்கும் என்று சொல்லலாம், அம்மா சமையலில் அன்புதான் முதல் சுவை என்பது போல!! இல்லை?//

    வயிறு ஒத்துக்கணுமே ஸ்ரீராம், ஆனால் இப்போதைய காலங்களில் இம்மாதிரியான முன் தயாரிப்பு உணவுப் பொருட்களையே எல்லாரும் சாப்பிட்டுப்பழகிடறாங்க. தொலைக்காட்சி விளம்பரத்திலே கூட ரெடிமிக்ஸ் இட்லி பவுடர், தோசை பவுடர், வடை பவுடர் வாங்கிச் சமைக்கும் அம்மா புத்திசாலியாகக் காட்டப் படுகிறாள். இப்படி மூளைச் சலவை செய்துவிட்டால் அப்புறமா வீட்டில் சமையல் என்பதையே இக்காலத்துக் குழந்தைகள் மறந்துவிட வேண்டியது தான். ஏற்கெனவே என் உறவினர் ஒருத்தர் மருமகள் வீட்டில் அவள் சமைப்பதில்லை. வெளியே தான் வாங்குகிறாள்.

    அம்மா சமையல் என்ற ருசி மாறி இனி கிருஷ்ணா ஸ்வீட்ஸா? சுபம் ஸ்வீட்ஸா? எந்த கேட்டரிங் ருசி என ஆகப் போகிறது.

    ReplyDelete
  13. வீட்டில் செய்த பக்ஷணங்களா? என்ன விசேஷம்.? கல்யாணத்துக்கு முன் பேசிப் பழகுதல் என்றால் என்ன.?காதலிக்கும்போது பேசிப் பழகவில்லையா. ? இல்லை இது பெரியவர்கள் நிச்சயம் செய்த பிறகு பேசிப் பழகுவதா.?எப்போது பெரியவர்கள் நிச்சயித்த திருமணத்துக்கு உடன் படுகிறார்களோ அப்போது இந்த பேசிப்பழகுவது ( கல்யாணத்துக்கு முன்) அர்த்த்மில்லாமல் போய்விடும்.பேசிப் பழகும்போது பிடிக்கவில்லை என்றால் அது நிச்சயம் செய்த வர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தும்.

    ReplyDelete
  14. சின்ன வயதில் அப்பளாம் வடம் திருமணத்திற்கென்று போடுவதைப் பார்த்திருக்கிறேன்.

    இப்போதெல்லாம் திருமணம் பேசியவுடனேயே (நிச்சயதார்த்தம் வரை கூடப் பொறுப்பதில்லை.) பெண்ணும் பிள்ளையும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அதுவும் இளம் பெண்கள் 'என்னாடா' என்று தான் ஆரம்பிக்கிறார்கள். நம்மைப்போல பழைய ஆசாமிகளுக்கு கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருக்கிறது.

    வெளிநாடுகளில் இருவரும் இருக்கும் பட்சத்தில் ஒருவர் இன்னொருவரின் இடத்திற்கு வந்து பார்த்து, பேசி அபிப்பிராயம் சொல்லுகிறார்கள்.

    திருமண நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடக்கும் வரை அடிவயிற்றில் புளிதான் பெற்றோர்களுக்கு.




    ReplyDelete
  15. பட்சணங்கள் எடுத்துக்கொண்டோம்.

    உறவுகள்,அக்கம் பக்கம் எல்லாரும் கூடி இருந்து பலகாரம் சுடுவார்கள். நாங்களும் ஒத்தாசை செய்வோம். இப்பொழுது ஆர்டர் பணியாரங்கள்.

    பேசி கருத்துக்கள் ஒத்துவந்தால்தான் கல்யாணம் என்ற காலம். அதுவும் சரிதான் ஒரளவு புரிந்துகொள்ள முடியும்.

    ReplyDelete
  16. வாங்க ஜிஎம்பி சார், தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். வீட்டில் செய்த பக்ஷணங்கள் தான். என்ன விசேஷத்துக்குச் செய்தது என்பதையும் வைகோ சாருக்குச் சொன்ன பதிலில் சொல்லி இருக்கேன்.

    நிச்சயம் பண்ணிட்டுப் பேசிப் பழகிப் பிரியறது மட்டுமில்லை. ஜாதகம் பார்க்க ஆரம்பிக்கையிலேயே அந்தப் பெண்ணோட பேசிப் பழகி ஒத்துவந்தால் தான் ஜாதகமே பார்க்கலாம் என்று சொல்லும் பிள்ளைகள், பெண்களும் உண்டு. காலம் மிக வேகமாய் மாறி வருகிறது. யு.எஸ். மாதிரியான டேட்டிங் இங்கே பணக்கார, உயர்மத்தியதரக் குடும்பங்களில் சர்வ சகஜமாகவும் காணப்படுகிறது.

    ReplyDelete
  17. வாங்க ரஞ்சனி, பெரியவங்க எல்லாம் அப்பளம் இடுகையில் சின்னவங்க நாங்க அப்பளத்துக்கு "வட்டு" இட்டுப் போடுவோம். அந்தச் சின்ன வட்டைக் குழவியால் பெரிது செய்வார்கள்.


    //வெளிநாடுகளில் இருவரும் இருக்கும் பட்சத்தில் ஒருவர் இன்னொருவரின் இடத்திற்கு வந்து பார்த்து, பேசி அபிப்பிராயம் சொல்லுகிறார்கள்.//

    ஆமாம், இப்போ இரண்டொரு கல்யாண நிச்சயதார்த்தங்கள் பெண்ணும், பிள்ளையும் வெளிநாட்டில் பார்த்துப் பேசிப் பழகிய பின்னர் இங்கே பெரியவங்க மட்டும் கூடி நிச்சயம் செய்தார்கள். இருவரும் கல்யாணத்துக்குத் தான் வருவாங்களாம். :))))

    //திருமண நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடக்கும் வரை அடிவயிற்றில் புளிதான் பெற்றோர்களுக்கு.//

    அதுக்கப்புறமா வேறே மாதிரிப் பிரச்னைகள். :((

    ReplyDelete
  18. வாங்க மாதேவி, ஓரளவு புரிந்து கொண்டாலும் பின்னர் மனவேறுபாடுகள் ஆழமாகப் போய்ப் பிரியும் கணவன், மனைவியரும் இருக்கின்றனர். இதுக்குத் தான் நான் சின்னச் சின்ன விஷயங்களில் விட்டுக்கொடுத்துப்போக வேண்டும் என்கிறேன். முக்கியமாய் ஈகோ பார்க்காமல், மூன்றாம் மனிதர் தலையீடு இல்லாமல், தங்கள் சண்டையின் காரணத்தை மற்றவரிடம் பகிராமல் இருவருமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  19. பெண்பார்க்கும் படலத்துக்கு முன்பே ஆன்லைனில் சாட் செய்யணும், ஸ்கைப்பில் வீடியோ சாட் செய்யணும்னு பெண் வீட்டுக்காரர்கள் கறாராய் சொன்னாங்க.

    அதெல்லாம் கூடாது , முதலில் பெண் பார்த்து சம்பந்தம் செய்து கொள்ளலாம் என்னும் நிலையில் தான் ஐடி தருவேன்னு தம்பி சொன்னதற்கு “அந்தக்காலமா இருக்கீங்களே!!!” அப்படின்னு சொல்லி சம்பந்தமேன்னு வேண்டாம்னு சொல்லிட்டாங்க.

    :((

    ReplyDelete
  20. என் அம்மாவின் கல்யாணத்திற்கு இப்படித்தான் வீட்டில் உள்ள பெண்களெல்லாம் சேர்ந்து வடாம், அப்பளம் எனச் செய்தது பற்றி சொல்வார்கள்....

    பட்சணங்கள் எடுத்துக் கொண்டேன்....... :)

    ReplyDelete
  21. பக்ஷணங்கள் எடுத்துக் கொண்டேன்.

    பெண்ணும் மாப்பிள்ளையும் திருமணத்திற்கு முன் பேசிக்கொண்டு அதனால் இருவர் விருப்பு, வெறுப்புகள் மாறுபடுவதால் ஒருவருக் ஒருவர் ஒத்து வராது என்று பிரிந்தவர்கள் உண்டு.
    அதனால் தான் திருமணத்திற்கு முன் பேசிக் கொள்ள வேண்டாம் என முன்னோர்கள் தடை செய்தார்கள் போலும்.

    ReplyDelete