மின்சாரம் இல்லாமல் இருந்ததால் சாப்பாடு ஆன கையோடு சுண்டல் தயாரிப்பை முடிச்சு நிவேதனமும் பண்ணி விட்டேன். யாராவது வந்தால் பேச்சுக் கச்சேரி வைச்சுக்கலாமே. தொண்டை தான் ஒத்துழைப்பதில்லை. :(
இன்னைக்குச் சிவப்புக் காராமணிச் சுண்டல். காராமணி நல்லாவே குழைந்து போச்சு. வெல்லம் போட்டுப் பண்ணறேன்னு ரங்க்ஸ் கிட்டேச் சொல்லிட்டு மறந்து போய் உப்பைப் போட்டுட்டேன். கொஞ்சம் போல் உப்புனா சமாளிக்கலாம். தேவையான உப்பைச் சேர்த்துட்டேன். அதனால் நோ வெல்லச் சுண்டல். காரச் சுண்டல் தான்.
ReplyDeleteசட்டுவம் கைப்பழக்கம் போல் இருக்கிறது.
சுண்டல் அடுப்பிலே இருந்தது ஜிஎம்பி சார். அடுப்பு மெலிதாக எரியும், படத்தைப் பெரிசு பண்ணிப் பாருங்க. அப்போக் கிளறிக் கொடுக்கலைனா அடியிலே பிடிக்குமே. அதுக்காகச் சட்டுவம் எடுக்கலை. அதோடு படம் எடுக்கும்போது இதெல்லாம் நினைவிலும் வரதில்லை என்பதும் உண்மை! :)))))
ReplyDelete//சாப்பாடு ஆன கையோடு சுண்டல் தயாரிப்பை முடிச்சு//
ReplyDeleteஆறு மணிக்கு ஆறிப் போயிருக்குமே.... :)))
//யாராவது வந்தால் பேச்சுக் கச்சேரி வைச்சுக்கலாமே.//
நவராத்திரின்னா சமர்த்தா பாட்டுப் பாட மாட்டாங்களோ! :)))
காராமணி சுண்டல் ரொம்பவே இன்வைட்டிங் கீதா மேடம்.
ReplyDeletechaaptaach TanQ
ReplyDeleteசட்டுவம் இல்லாத சமையலா..இரண்டும் கணவன் மனைவி மாதிரி ஒன்று அசைந்தால் இன்னோன்று இசைந்து கொடுக்கும். சுண்டல் அமிர்தமாக வெளியே வரும். கைநிறைய எடுத்துக் கொண்டேன் கீதா. நன்றாக இருக்கிறது.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், ஆறு மணி என்ன எட்டு மணிக்குக் கூட வருவாங்க தான். சுண்டல் அதுவரைக்கும் சூடாக இருக்காது. :))) சாப்பிட நல்லா இருந்தாப் போதுமே!
ReplyDeleteநேத்திக்கு நிஜம்மாவே பேச்சுக் கச்சேரி தான்! :)
வாங்க ராஜலக்ஷ்மி, சாப்பிட்டீங்களா, நல்லா இருந்ததா?
ReplyDeleteவாங்க காசிராஜலிங்கம், நன்றி.
ReplyDeleteவாங்க ஜெயஶ்ரீ, நன்றி.
ReplyDeleteவாங்க வல்லி, ஆமாம், சட்டுவம் கிளறினபடியே பாத்திரத்திலேயே வைச்சுடுவேன். எடுக்கவும் வசதியா இருக்குமே! கரண்டியைத் தேட வேண்டாம்.
ReplyDeleteகாராமணி சுண்டல் அருமை! நேத்து கரண்ட் இல்லை! பசங்களோட விளையாடி பொழுதை போக்கினதாலே பதிவை படிக்க முடியலை! நன்றி!
ReplyDelete