எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 02, 2014

சரஸ்வதி பூஜை ஆயிடுச்சா? வாழ்த்துகள்!

சுண்டல் சாப்பிடக் கூட்டம் வரும் அளவுக்குக் கருத்துச் சொல்லக் கூட்டம் வரதில்லை. :)))) எல்லோரும் சுண்டலைச் சாப்பிட்டுட்டு சத்தம் போடாமப் போயிடறாங்க போல!  இன்னைக்கு சரஸ்வதி பூஜை படங்கள் கீழே!




நிவேதனம், கரண்டிகளுடனேயே! :))))) நாமளே சொல்லிட்டால் அப்புறமா யாரும் சுட்டிக் காட்டமாட்டாங்க இல்லையா? :)  ரொம்ப சிம்பிள் தான். சாப்பிட யாரும் இல்லாமல் நிறையப் பண்ணி என்ன செய்ய முடியும்? :))))





அர்ச்சனை முடிந்து நெய் தீபம் சரஸ்வதிக்கு.




புத்தகங்கள், புடைவை, ரவிக்கைத் துணி போன்றவற்றோடு மலர் அலங்காரமும் செய்யப்பட்ட சரஸ்வதி படம். என் பிறந்த வீட்டில் சரஸ்வதி சிலை தான் வைப்போம். இங்கே வைக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்க. :)




கன்னத்திலே போட்டுக்குங்க.  தீபாராதனை நடக்குது.





எல்லாரும் எடுத்துக்க வசதியா தீபாராதனை கீழே வைச்சிருக்கு.  எடுத்துக்குங்க.  என்ன சாப்பாடா?  தேங்காய், அரிசி அரைச்சு விட்டுப் பாயசம், காய் ஒண்ணும் பண்ணலை, ஜவ்வரிசி வடாம் பொரிச்சேன்.  குடமிளகாய், வெண்டைக்காய் சாம்பார், தக்காளி ரசம், மோர், வடை, அப்பம் இதான் சமையலே. ஐந்து வடை, ஐந்து அதிரசம்.  அஷ்டே! :))))) சீக்கிரமா வந்து தீர்ந்து போகிறதுக்குள்ளே எடுத்துக்குங்க.

தேங்காய், வாழைப்பழம், மாதுளை, வெற்றிலை பாக்கு எல்லாமும் நிவேதனம். சுண்டலா?  சாயந்திரம் தான் வேக வைச்சுட்டேன்.  நாலு மணிக்குத் தாளிச்சுக் கலந்து நிவேதனம் பண்ணுவேன். :)))))

23 comments:

  1. //நிவேதனம், கரண்டிகளுடனேயே!//

    அப்பம், வடைகளில் கரண்டி இல்லை யுவர் ஹானர்!

    இங்கும் சிம்பிளா பூஜை ஆச்சு!

    ReplyDelete

  2. அதென்ன கணக்கு, ஐந்து வடை ஐந்து அதிரசம்.?எனக்குத் தேங்காய்ப் பால் அரைத்துவிட்டுச் செய்யும் பாயசம் பிடிக்கும் . ஆனால் செய்யக் கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருக்கும். சரஸ்வதி சிலை வைத்து வழிபடுவதை விட புத்தகங்கள் வைத்து வழிபடுவது தேவலாம் bank pass book வைத்தீர்கள் இல்லையா?

    ReplyDelete
  3. உங்களுக்கும் என் இனிய சரஸ்வதி பூஜை நல் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
  4. கரண்டிகள் ஓகே. ஆனால் இடுக்கியும் இருக்கிறதே! சாதம் சூடாக இருக்கிறது. இடிக்கியால் பாத்திரத்தைப் பிடித்துப் போட்டுக் கொள்ளவும் என்று இறைவனுக்கு சொல்லவா? (கோவிச்சுக்காதீங்க! ச்ச்சும்ம்மா தமாஷ்!

    நாளைக்குத்தானே எங்களுக்கு?
    இங்கும் வெகு சிம்பிள் தான்.
    இனிய நவராத்திரி தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. தங்களுக்கு எனது உளங்கனிந்த சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. லைவ்வா பூஜையை அழகாக பகிர்ந்தமை சிறப்பு! வாழ்த்துக்கள்! கரண்டியோட வைத்து நிவேதனம் பண்ணக் கூடாதுன்னு அப்பா சொல்வார் அதனாலதான் அன்னிக்கு சுட்டிக் காட்டினேன்! தினமும் நினைவுகூர்வதற்கு நன்றி! நேத்து கொஞ்சம் பிஸி! அதனால கருத்துக் கூற வர முடியலை! நன்றி!

    ReplyDelete
  7. வாங்க ஶ்ரீராம், கரண்டி இருக்கக் கூடாதாமே! இப்போத் தான் சுரேஷ் சொல்லித் தெரியும். இனி நினைவாக் கரண்டியை எடுத்துட்டு நிவேதனம் பண்ணணும். :))))) இத்தனை வருடங்களாக யாரும் சொன்னதில்லை. :(

    ReplyDelete
  8. வாங்க ஜிஎம்பி சார், அது என்னமோ நான் அரைச்ச மாவில் கணக்காக அவ்வளவு தான் வந்தது. அதுக்கு மேலே சாப்பிட யார் இருக்காங்க! :)

    ReplyDelete
  9. வாங்க அம்பாளடியாள், உங்களுக்கும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. வாங்க ரஞ்சனி, கரண்டிகள் ஓகே இல்லையாம். சாதம் சூடோ சூடு. திரும்ப எடுத்துப் போக வேணுமே! அதான் அங்கேயே! :))))

    இங்கே ஶ்ரீரங்கத்திலும் நாளைக்குத் தான் சரஸ்வதி பூஜை.

    ReplyDelete
  11. வாங்க தமிழ் இளங்கோ ஐயா, உங்களுக்கும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வாங்க தளிர் சுரேஷ், காரணத்தைச் சொன்னமைக்கு நன்றி. இதுநாள் வரை இந்த விஷயம் தெரியாது. தெரியப்படுத்தியமைக்கு நன்றி. இனி கரண்டியை நினைவாக எடுக்கணும். :))))

    ReplyDelete
  13. கரண்டி பற்றிய செய்திகளை அறிந்து கொண்டேன்.
    உங்களுக்கு எனது சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. என் அம்மாவும் கரண்டியுடன் வைக்க கூடாது என்பார்கள்.
    சரஸ்வதி பூஜை பார்த்து மகிழ்ந்தேன். விஜயதசமி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாங்க ராஜலக்ஷ்மி, கரண்டி விஷயம் எனக்கும் இப்போத் தான் தெரியும். :)

    ReplyDelete
  16. வரவுக்கு நன்றி காசிராஜலிங்கம்.

    ReplyDelete
  17. வாங்க கோமதி அரசு, எனக்கு இந்த விஷயம் தெரியாது! :)

    ReplyDelete
  18. இங்கேயும் இடுக்கி! :))

    ஸ்ரீராம் உணர்வில் பங்கு கொள்கிறேன். கரண்டி கூட பரவாயில்லை. அது எடுத்துச் சாப்பிட ஏதுவானது. ஆனால் இடுக்கி?.. அதுவும் குறுக்கே போட்டு? ஒரு தடை மாதிரி இல்லை?..

    இறைவன் சந்நிதானத்தில் இதெல்லாம் ஒன்றுமில்லை தான்;
    ஆனால் எல்லாவற்றையும் நுணுகிப் பார்த்து திருப்திபடுகிற மனசு ஒன்று இருக்கே!

    சொல்லப் போனால் நிவேதனமும் கூட மனசுக்காகத் தான்! நீயே கொடுத்து, நீயே என்னில் பரவி அதைப் பக்குவப்படுத்தி, நீயே நானாக என்னை பாவிக்க வைத்து...

    பூஜை புஸ்தகம் ரொம்ப பழசாய் போய் விட்ட மாதிரி இருக்கு.
    லிப்கோவின் 'பூஜா விதானம்'ன்னு பூஜை புஸ்தகம் இருக்கு. கிரி டிரேடிங் கூட போட்டிருக்காங்க. புதுசா ஒண்ணு வாங்கி வைச்சுக்கோங்கோ.


    ReplyDelete
  19. அழகான அமைதியான பூஜை. இங்க வந்ததால் கரண்டி சமாசாரம் தெரிந்தது.நன்றி சுரேஷ். சிம்பிளாச் செய்தாலும் செய்யத்தானே வேணும்மா. அதுக்குண்டான் உழைப்பும் இருக்கு இல்லையா. சரஸ்வதி பூஜை என்றாலே மலைப்பாக இருக்கும்.வயசும் கூடிண்டு வருது இல்லையா. என்னைச் சொன்னேன். கொலுவிலிருக்கும் சரஸ்வதிக்கு மாலி அலங்காரமும்,படத்தில் இருக்கும் சரஸ்வதிக்குப் பூஜையும் வழக்கம் எங்கள் வீட்டில்.அமோகமா இருக்கணும்கீதாமா.வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. வாங்க ஜீவி சார், அப்பம், வடைக்கெல்லாம் கரண்டியோட போடமுடியுமா? :)))))

    பூஜைலே புஸ்தகம்னு வைச்சது நான் எழுதிட்டிருக்கும் முன்ஷிஜியோட கிருஷ்ணாவதாரா புத்தகங்கள் தான். பலகையோட நிறம் ஒருவேளை பழைய புத்தகம் மாதிரித் தெரியுதோ என்னமோ!

    லிஃப்கோவின் விரதபூஜா விதானம் தான் பூஜைகள் செய்யப் பயன்படுகிறது பல வருடங்களாக! அதைச் சொல்றீங்களா பழசுனு! அது ரொம்பப் பழசுதான்! :))))

    ReplyDelete
  21. வாங்க வல்லி, பிரசாதங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அளவும் குறைந்து வருகிறது. ஒரு கிலோ சுண்டலுக்குப் போட்டும் போதாமல் போகும். இப்போக் கால்கிலோவுக்கு வந்திருக்கு! சரஸ்வதி பூஜை அன்னிக்கு யாரும் வரதில்லை என்பதால் அதையும் குறைச்சாச்சு! :))))

    ReplyDelete
  22. விரதபூஜா விதானம் தான் கிழிசல் தெரியுது. :))))

    ReplyDelete
  23. நவராத்ரி வாழ்த்துகள்.பிரசாதங்கள் எடுத்துக்கொண்டோம்.

    நமதுவீட்டிலும் சிம்பிளாக வைத்து வணங்கினோம்.

    ReplyDelete