நேத்திக்குச் சின்ன உ.கி.யில் கறி செய்தேன். உடனே நம்ம "எங்கள் ஶ்ரீராம்" அவங்க பாஸ் உ.கி. சமைப்பதில் தேர்ச்சி பெற்றவர்னு சொல்லிக் கொண்டே இருப்பது நினைவில் வந்தது. அது எப்படினு ஒரு முறை பார்க்கணும். இப்போதைக்கு இதைச் சாப்பிடுங்க. சூடாய் வதக்கும்போதே எடுத்தது.
அநேகமா இன்னிக்குப் பார்வையாளர்கள் நிறைய இருக்கும். :) எல்லோருமே என்னை மாதிரி சா.ரா.க்கள் மற்றும் தீ.தி.குழுவைச் சேர்ந்தவங்க தானே! :))))))வரேன் சமைக்கப் போகணும். இதை நேத்தே போட்டிருப்பேன். அப்புறமாப் பறவைகளுக்குப் பார்வையாளர்கள் இருக்கமாட்டாங்க. அதுங்க வருத்தப்படுமே! அதான் இதை இன்னிக்குப் போட்டேன்.
என்ன ஒரு கோ இன்சிடென்ஸ்...! என் மனைவியும் உருளைக் கிழங்கு கறி செய்திருந்தார். எங்கள் வீட்டில் உ.கி/யை வேகவைத்துத் தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொண்டு வெங்காயம் காய்ந்த மிளகாய் வதக்கி விழுதாக அரைத்து அதை உ.கி.யில் நன்றாக மிக்ஸ் செய்து சற்று தாராளமாவே எண்ணை விட்டு காயவைத்து அடுப்பை சிம்மில் வைத்து வதக்குவோம். மொறு மொறு வென்று உ.கி. பொறியல் தயார்.
ReplyDeleteஇந்த முறையில் செய்தது இல்லை ஐயா! பிடிக்குமானு தெரியலை. என்றாலும் கொஞ்சமாக முயன்று பார்க்கணும். :) நன்றி.
Deleteதிருநெல்வேலி எப்போதோ போனபோது இந்த வகை உகிக சாப்பிட்ட நினைவு.. இனிக்கிறது.
Deleteஅட? திருநெல்வேலிப்பக்கம் செய்வாங்க?????? ம்ம்ம்ம்ம்ம்? நான் சுவைத்தது இல்லை. ஒரு முறை முயற்சி செய்யணும்.
DeleteEllaam purikirathu. Intha saa .raa ennaa.Thee.thi enna. Potato yum yummyaa irukku. Enakkku Oththukkaathu. Ellorum saappittu makizhattum
ReplyDeleteஹாஹாஹா வல்லி, கீழே துளசி சொல்லி இருக்காங்க பாருங்க! எங்களைப் போன்ற சாப்பாட்டு ராமர்& ராமிகள் மற்றும் தீனி தின்னிக் குழுமத்தில் உள்ளவர்கள்! :))))
Deleteபடம் இழுக்கிறதே.... உ.கி அதுவும் சி.உ.கி பிடிக்காது என்றாலும், இப்படிக் கண்ணைப் பறிக்கற மாதிரி இருந்தால் நாலு கிழங்கை வாய்க்குள் அனுப்பும் பழக்கம் உண்டு!
ReplyDeleteஎனக்குப் பிடிச்சது சி.உ.கி. தான். ஒண்ணு போலப் பொறுக்கி வாங்கி நன்கு அலம்பி வேக வைத்துத் தோலுரித்து எண்ணெயில் மி.பொ.உப்பு, பெ.பொ, கடுகு போட்டு வதக்கிச்சாப்பிட்டால் மோர் சாதம் வரைக்கும் கொண்டா கொண்டானு கேட்கும் நாக்கு! :)
Deleteசி உ கி பிடிக்காதா? ஆ!
Deleteஹாஹாஹா, ஶ்ரீராம் தனி ருசி கொண்டவர்! :)
Deleteசாப்பாட்டு ராமர்ஸ் அண்ட் ராமீஸ் வல்லி.
ReplyDeleteஅதே, அதே, சபாபதே துளசி! :)
Deleteவல்லிசிம்ஹன் போல நானும் குழம்பினேன்.. விளக்கத்துக்கு ந.
Deleteஅட! கண்ணைப் பறிக்குது......நாக்கில் தண்ணீர் ஊறுகின்றது.....ம்ம்ம் இங்கயும் அவ்வப்போது உண்டு...சி உ கி நன்றாகக் கிடைக்கும் காலத்தில்...
ReplyDeleteவாங்க துளசிதரன், கீதா, சி.உ.கி. எப்போவும் கிடைத்தாலும் நவம்பருக்கு அப்புறமாக் கிடைப்பது தான் ருசி!
Deleteஜிஎம்பி சார் சொல்லி இருப்பது போல செய்வதுண்டு.....நன்றாக இருக்கும்....அது ஒரு சுவை..
ReplyDeleteசெய்து பார்க்கணும். ஒரு நாள் முயல்கிறேன்.
Deleteகீதா, மாப்ஸ் ப்ளீஸ்.
ReplyDeleteஇந்த சின்ன உருளைக்கிழங்கு பற்றி முந்தி எழுதுனதில் ஒரு பகுதி இங்கே போடறேன்.
உருளைக்கிழங்கு தோலுரிக்கன்னதும் எனக்கு எங்க பாட்டி மனசுலே வந்துருவாங்க. நம்ம வீட்டில் வெந்த உருளைக்கிழங்கை உரிச்சுத்தரச்சொல்லி சித்தி கெஞ்சறதும், பாட்டியோடு உக்கார்ந்து நாங்க ஒரு கை கொடுப்பதும் வழக்கம். நாங்க உரிக்கும் அழகுக்கு, அப்போ பாட்டி தவறாம ஒரு கதை சொல்வாங்க.
அந்தக் காலத்துலே பொண்ணு பார்க்கப் போகும்போது ஒரு வீசை உருளைக்கிழங்கை (வேகவச்சது) உரிச்சுக் காட்டச் சொல்வாங்களாம். 'தோலை மட்டும்' நிதானமா உரிச்சு, கிழங்கு நல்லா மொழுமொழுன்னு இருந்தால் பொண்ணு நல்ல சிக்கனமானவளா இருப்பாளாம். இந்தக் கணக்கில் பார்த்தால் எனக்குக் கல்யாணமே நடந்துருக்காது.
அதெல்லாம் உரிக்க வேண்டாம். நல்லாக் கழுவிட்டு அப்படியே தோலோடு ஒரு சாக்குப்பையில் வச்சுத் தேய்ச்சால் போதும். முக்காவாசி அப்படியே தோலெல்லாம் தனியா வந்துரும் அதை வேகவச்சு முழுசுமுழுசாவே கறி பண்ணிடலாம். இதுக்குப் பெயர் ball பால் கறின்னாள் தோழி. எல்லாத்துக்கும் என்னைப்போலவே அவளும் பெயர் வைப்பதில் கில்லாடி.
வாங்க துளசி, பதிவுக்கு ருசி கூட்டும் பின்னூட்டங்களுக்கு ஆதரவு இல்லாமலா போகும்? இதுக்கெல்லாம் மாப்ஸ் எதுக்கு? :)
Deleteநீங்க சொன்ன முறைப்படி நாங்க சிறுகிழங்கு, பெரு கிழங்குக் கறி செய்யும் போது தண்ணீரில் ஊற வைச்சுட்டுப் பண்ணுவோம். உ.கி. வேக வைக்கிறச்சே தோலோடு வேக வைச்சால் சத்துக் குறையாதுனு சொல்றாங்களே! அதனால் தோலோடேயே வேக வைக்கிறது பழக்கமாச்சு!
அப்புறமா நீங்க சொன்ன பெண் பார்க்கும் படலம், நிஜத்திலேயே பார்த்திருக்கேன். அப்புறமா விளக்கு ஏத்தவும் சொல்லுவாங்க. ஒரே குச்சியிலே விளக்கை ஏத்தணுமாமே! தண்ணீர் செலவு செய்யச் சொல்லியும் பார்ப்பாங்களாம். எங்க சித்தி வீட்டில் சின்னமனூரில் தேங்காய் துருவச் சொல்லுவாங்க. தேங்காயை எடுத்த எடுப்பில் உள்பக்கமாய்த் துருவக் கூடாது. அப்படித் துருவினால் ஏனோ தானோ எனக் குடும்பம் நடத்துவாளாம். நல்லவேளையா எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஓரத்திலிருந்து துருவ ஆரம்பித்து உள்ளே போகும் பழக்கம் தானாகவே வந்து விட்டது. வெண்கலப் பானையில் சாதம் எடுக்கும்போதும் நடுவில் குத்தி எடுக்கக் கூடாது. சாப்பிடும்போதும் எடுத்த எடுப்பில் நடுவில் உள்ள சாதத்தை எடுத்துச் சாப்பிடக் கூடாது. இப்படி நிறையவே உண்டு. உங்களால் நானும் இந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன். :))))
ஒரே குச்சியில் அஞ்சு முகம் ஏத்துவது பாலச்சந்தர் படம் ஒன்னில் பயன்படுத்தி இருப்பார்! அதுக்கு ப்ராக்டீஸ் பண்ண நாயகி ஒரு பெட்டி தீக்குச்சிகள் கொளுத்திப் பார்த்திருப்பாங்க:-))))
Deleteஆமாம், "அச்சமில்லை, அச்சமில்லை" படத்தில் சரிதானு நினைக்கிறேன். மாமனார் டெல்லி கணேஷ்? அதிலே தான் இந்த ஒரு செம்புத் தண்ணீரில் கால் கழுவிக் கொண்டு வரும்படியும் காட்சி அமைத்திருப்பார்கள். என் மாமியார் சொல்வாங்க, அந்தக் காலங்களில் யாருக்கானும் தலைப் பின்னல் நீளமாக இருந்தால் சவுரி வைச்சிருப்பாங்களோனு நினைச்சு திடீரென இழுத்தும் பார்ப்பாங்களாம்! :)
Deleteசாமான் அளவுகளோட கொஞ்சம் ரெசிபி தாங்கம்மா ப்ளீஸ்... மொறு மொறு ன்னு வர சிலர் ரவை சேர்த்து வறுப்பாங்களாம்...குக்கரில் இல்லாம தனியா வேக வைக்கணுமான்னும் சொல்லுங்க....
ReplyDeleteமீண்டும் பார்த்து / படித்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteஉங்கள் உ.கிழங்கு கறியும், அதன் பின்னூட்டங்களும் ரஸித்து மகிழ்ந்தேன்.பேபி பொடேடோ வதக்கல். பழங்கால பழக்க வழக்கங்கள் நினைத்தாலே அந்தக்கால தேர்வு முறைகள் எப்படி என்று எல்லோருக்கும் தெரிய ஒரு வாய்ப்பு. கறியில் சிறிது கடலைமாவு தூவி ஸரியானபடி வதக்கினால் கரகரப்பு வரும். பலவித ருசிகள் அன்புடன்
ReplyDelete