எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, June 08, 2015

நொந்து நூடுல்ஸ் ஆன கதை!

top ramen க்கான பட முடிவுஇப்போச் சுடச் சுட எல்லா சானல்கள் மற்றும் தினசரிகளிலும் அதிகமாக விற்பனை ஆவது நூடுல்ஸ் விவகாரம் தான். யாரானும் மனசு வருந்தினால் நொந்து நூடுல்ஸாகிட்டேன்னு சொல்லிட்டிருந்தாங்க எல்லோரும். இப்போ நூடுல்ஸே நொந்து நூலாயிடுச்சு பாருங்க. இந்தத் திடீர் உணவைக் கண்டு பிடித்தது மோமோஃபுகு ஆன்டோ என்னும் ஜப்பான் காரர் தான். நிஸ்ஸின் ஃபுட்ஸ் என்னும் கம்பெனிக்காகக் கண்டு பிடிச்சிருக்கார். 1958 ஆம் வருடம் சிகின் ரமென் என்னும் பிராண்ட் பெயரில் வெளி வந்திருக்கிறது. இந்தியாவில் அப்போதெல்லாம் நூடுல்ஸ் இருந்ததாகத் தெரியவில்லை. 1971 ஆம் ஆண்டு இதே நிஸ்ஸின் கம்பெனியே கப் நூடுல்ஸ் அறிமுகம் செய்திருக்கிறது. இதில் உள்ள முக்கியப்பொருட்கள் கோதுமை மாவு, பாம் எண்ணெய், உப்பு என்று சொல்லப்பட்டாலும் வாசனைக்கும் சுவை ஊட்டுவதற்காகவும், மோனோசோடியம் க்ளுடமேட், உப்போடு சேர்க்கிறார்கள். தாளிதம், சர்க்கரை போன்றவைகளும் இருக்கின்றன. ரமென் என்பது ஜப்பானில் கிடைக்கும் நூடுல்ஸ் சூப் என்கின்றனர். திடீர் உணவான நூடுல்ஸுக்குச் சுவை கூட்ட இது பயன்பட்டது. அமெரிக்காவின் அனைத்து நூடுல்ஸ் தயாரிப்புக்களுக்கும் இவை ஏற்றவையாக இருக்கின்றன/இருந்தன,.

ஆரம்பத்தில் இந்தியாவில் டாப் ரமென் நூடுல்ஸ் தான் விற்பனை ஆகிக் கொண்டிருந்தது. இதற்கான விளம்பரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்க்கலாம். அதிக விளம்பரம் இருந்தது இல்லை. மேல் தட்டு வர்க்கத்தினரே வாங்குவார்கள் என்பதாக ஒரு எண்ணம் அனைவரிடமும் இருந்தது. விலையும் அதிகமாக இருக்கவே இது ஓர் ஆடம்பர உணவாகவே கருதப்பட்டது. பின்னர் பிரமசாரிகள், கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகளின் அவசரத்  தேவைக்குப் பசியை ஆற்ற இது பயன்பட்டது. பின்னர் பெண்கள் அதிக அளவில் வேலைக்குப்போக ஆரம்பிக்கவும் இது குழந்தைகளின் அன்றாட அத்தியாவசிய உணவாக மாற விழித்துக் கொண்டன அனைத்துப் பெரிய கம்பெனிகளும்.

maggi noodles க்கான பட முடிவு


அவரவர் தயாரிப்பில் நூடுல்ஸை விதம் விதமாய்க் கொண்டு வந்தனர். இந்தியாவின் சுவைக்கு ஏற்ப மசாலாக்கள் சேர்த்து நூடுல்ஸ் வர ஆரம்பித்தது. அனைத்து நூடுல்ஸ்களிலும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான கொழுப்பு,உப்பு உள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவு  130 முதல் 600 மில்லி கிராம் என்றால் அதில் 821 மில்லி கிராம் முதல் 1943 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறதாகச் சொல்கின்றனர். கொழுப்பும் மிகுதி. நார்ச்சத்து, புரதம், கால்சியம் போன்றவை மிகக் குறைவு. ஆகவே இதைச் சாப்பிடுவதால் சுவை வேண்டுமானால் நன்றாக இருக்கலாமே தவிர, உடல் நலனுக்குக் கேடே விளைவிக்கும். நாங்க திருக்கயிலை யாத்திரை சென்ற போது ராயல் நேபால் ஏர்லைன்ஸில் காட்மாண்டுவில் இருந்து திரும்பி வரும் வழியில் மாலை உணவுக்கு இந்த நூடுல்ஸ் தான் கப் நூடுல்ஸ் கொடுத்தார்கள். நானும், ரங்க்ஸும் அப்படியே திருப்பிட்டோம்.

கோகா கோலா க்கான பட முடிவு

அதே போல கோகா கோலா, பெப்சி, தம்ஸ் அப், மிரிண்டா வகைகளும். எங்க வீட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் இந்த வகை ஜூஸெல்லாம் வைப்பதே இல்லை. இரண்டு நாட்கள் முன்னர் வந்திருந்த தம்பி மனைவி கூட குளிர்சாதனப் பெட்டியில் என்ன ஜூஸ் இருக்குனு கேட்டாள். எங்க வீட்டில் எதுவுமே வைப்பதில்லை. காலியாகவே இருக்கும்..

பெப்சி க்கான பட முடிவு    மிரிண்டா க்கான பட முடிவு

 முன்னாலெல்லாம் நானே வீட்டில் எலுமிச்சை காய்க்கும் நாட்களில் ஜூஸ் செய்து வைப்பேன். இப்போதெல்லாம் ஜூஸ் சாப்பிடக் கூடாது என ஆனபின்னர் சாப்பிடுவதே இல்லை. அல்லது இருந்தால் ரூஹ் அஃப்ஸா இருக்கும். இப்போது அதுவும் வாங்குவது இல்லை. தாகமாய் இருந்தால் மோர் அல்லது தண்ணீர் தான். வெளியே போனால் இளநீர் அல்லது கரும்புச் சாறு அல்லது நேரடியாகப் பழங்களில் இருந்து எடுக்கப்பட்ட சர்க்கரை சேர்க்காத பழச் சாறு. விலை அதிகம் ஆனாலும் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்காதே!

இப்போதும் நூடுல்ஸ் மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை. வட கிழக்கு மாகாணங்களில் சீனா தயாரிப்பான நூடுல்ஸுக்கு வரவேற்பு நிறைய இருப்பதால் மியான்மர் வழியாகக் கடத்திக் கொண்டு வருகின்றனர் என்று இப்போதைய தொலைக்காட்சிச் செய்தி கூறுகிறது.

படங்கள் நன்றி கூகிளார்

நூடுல்ஸ் குறித்த தகவல்கள் விக்கி பீடியாவில் இருந்து எடுக்கப்பட்டவை

இந்தியாவின் அதிலும் தமிழ்நாட்டின் சிறப்பான நூடுல்ஸ் தயாரிப்பையும் அதன் வகைகளையும் காண இங்கே செல்லவும்.

இங்கே

16 comments:

 1. உங்களுக்குத்தான் ஏதோ ஆச்சோன்னு பாத்தா ஒண்ணுமில்லையா? ஸோ ஸேட்!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, வா.தி. ஏமாந்தீங்களா? நல்லா வேணும், வேணுங்கட்டைக்கு வேணும்!

   Delete
 2. அண்மையில் முக நூலில் இப்படிக் கண்டேன் இடியாப்பத்தின் வாதுதனை நூடில்ஸ் கவ்வும் கடைசியில் இடியாப்பம் வெல்லும்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நானும் பார்த்தேன் ஐயா! இதை எப்போதோ செய்திருக்க வேண்டும். தாமதமாகவானும் செய்கிறார்களே என மகிழ வேண்டும்.

   Delete
 3. பெரிய ஆதரவாளன், ரசிகன் இல்லா விட்டாலும், நானும் அவ்வப்போது நூடுல்ஸ் சாப்பிடுவது உண்டு. எப்போதாவதுதானே சாப்பிடுகிறோம் என்று நினைத்துக் கொள்வேன். மாகியில் ஒரு குறிப்பிட்ட ஃப்ளேவர் மட்டும் பிடிக்கும். அதே போலத்தான் பெப்சி போன்றவைகளும். மிக அரிதாகக் குடிப்பேன். எனினும் பவண்டோ பிடிக்கும். கரும்புச்சாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அது சாப்பிடும் நாட்களில் பைல்ஸ் தொந்தரவு அதிகமாகத் தொடங்க என் பிரியத்துக்குரிய கரும்புச்சாறை நிறுத்தி விட்டேன். இளநீர் ரொம்பக் காஸ்ட்லிங்க! அவ்வளவு காசு கொடுத்தாலும் உள்ளே இளநீர் ஒரு டம்ளரும் இருக்கலாம், ஒரு சொம்பும் இருக்கலாம், மூன்று ஸ்பூனும் இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. எதுக்கோ இலவசமாகக் கொடுத்த நூடுல்ஸ் பாக்கெட், பாஸ்தா பாக்கெட் இன்னமும் குளிர்சாதனப் பெட்டியிலேயே இருக்கு! நாங்க ருசி கூடப் பார்த்தது இல்லை. மகள் வீட்டில் பேத்திகளுக்காகச் செய்வாங்க தான்! அதன் மணமே எனக்குக் குடலைப் பிரட்டும்! சின்னப் பேத்திக்கு இது ஒத்துக்காது; என்றாலும் ஆசையில் சாப்பிட்டுவிட்டுப் பின்னர் வயிற்று வலியில் அவஸ்தைப் படுவாள்.

   Delete
  2. இளநீர் சாப்பிட முடியாட்டி பழச் சாறு சாப்பிடலாம். முதல்லேயே ஐஸ் வேண்டாம், சர்க்கரை கலந்த கெமிகல் திரவம் ஒண்ணு சேர்ப்பாங்க; அதுவும் வேண்டாம். வெறும் பழச்சாறுதான் என்று சொல்லிடணும். குறைந்த பட்சமாகச் சென்னையில் 20 ரூயில் இருந்து 25 ரூ வரை இருக்கலாம். கண்டதைச் சாப்பிட்டுப் பின்னால் அவதிப் படுவதற்கு இந்தச் செலவு எவ்வளவோ பரவாயில்லை. வெளியிலே போனால் நான் தண்ணீர் வாங்கிக் குடிக்க மாட்டேன். கொண்டு போகும் தண்ணீர் செலவாகி விட்டால் அக்வா ஃபினா கிடைத்தால் மட்டுமே வாங்குவேன். :)

   Delete
  3. இளநீரைக் கையில் தூக்கிப் பார்க்க வேண்டும். கனமாக இருந்தால் தண்ணீர் நிறைய இருக்குனு அர்த்தம். 25 ரூ தான் இளநீரும் விற்குது! கிராமங்களிலேயே 15 ரூக்கு இளநீர் விற்கிறாங்க. செவ்விளநீரில் சில சமயம் தண்ணியும் கொஞ்சமாக இருக்கும். உப்பும் கரிக்கும். நல்ல பச்சையாக இருக்கும் இளநீரிலேயே தண்ணீர் நிறைய இருக்கும்.

   Delete
  4. சென்னையில் இளநீர் விலை 40 ரூபாய்!

   Delete
  5. ஹிஹிஹிஹி, மீ த எஸ்கேப்பு! :))))

   Delete
 4. வடக்கில் பல இடங்களில் இந்த நூடுல்ஸ் தான் உணவே. மலைப் பிரதேசங்களில் பயணிக்கும் போது நூடுல்ஸ் மட்டுமே கிடைக்கும்.

  ரொம்ப காலமாகவே இதைத் தடை செய்ய சிலர் வேண்டுகோள் விடுத்தாலும் அரசு செவி சாய்க்கவில்லை. இது போன்று பல பொருட்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பவையாக இருக்கின்றன. இதைத் தடை செய்வது ஒரு நல்ல தொடக்கமாக இருந்தால் சரி.

  ReplyDelete
  Replies
  1. மலைப் பிரதேசப்பயணங்களில் நாங்க பார்லே பிஸ்கட்டுகள், பழங்கள் தான் உணவாக வைச்சுப்போம். பழச்சாறு கிடைத்தால் சாப்பிடுவோம். இல்லைனா இருக்கவே இருக்கு பால்! எங்கேயும் கிடைக்கும். :)

   Delete
 5. விலை குறைவு... வேதனை மிக அதிகம்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் டிடி. வேதனையைப் பட்டால் தான் திருந்துவாங்க. :(

   Delete
 6. அன்புள்ள சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு வணக்கம்! உங்களது வலைத்தள பதிவுகளை வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

  நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (16.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
  நினைவில் நிற்போர் - 16ம் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/06/16.html

  ReplyDelete
 7. நானம் உங்களைப் போலத்தான். எப்போதுமே இந்த நூடுல்ஸ் பக்கம் போக மாட்டேன். மற்றவர்களுக்கு செய்து கொடுப்பதுடன் சரி. இனி அவர்களுக்கும் கொடுக்க மாட்டேன்.

  ReplyDelete